அதாகப்பட்டதாவது அந்த காலத்திலேயே எனக்கு கல்யாணம் முடிக்க பெண் தேடி, பஸ், ரயில் ன்னு இந்திய அரசாங்கத்துக்கும், மாநில அரசாங்கத்துக்கும் இருந்த சொத்திலே பாதியை கரைத்து விட்ட என் பெற்றோர், நீயாப் பாத்து எதாவது சொல்லுப்பா, எங்களால முடியலைன்னு கையை விரித்து விட, என்னோட தன் நம்பிக்கை நாலு கிலே மீட்டர் நீளம் இருக்கும், அதனாலே தான் இன்னைய வரைக்கும் ஆணியே பிடுங்கலைனாலும், இமயமலைய இப்பத்தான் ரெண்டு இஞ்சி நகர்த்தி வச்சேன்னு, என்௬ட வேலை செய்யுற சிறுசு, பெருசுன்னு பார்க்காம, தினமும் ரெண்டு மின் அஞ்சல் அனுப்பி பொழைப்பை ஓட்டிகிட்டு இருக்கேன், நான் இமயமலையை நகர்த்த ஆரம்பித்த காலத்திலேயே இருந்து அது நகர்ந்து இருந்தால், அது இன்றைக்கு எங்க ஊரு புளியங்குடி பக்கம் வந்து இருக்கும்.
இப்படி ஒரு தன்னம்பிக்கை புலி, சிங்கம், கரடி எல்லாம் கலந்த கலவையாகிய என்கிட்டே சொன்ன உடனே, நானே களத்திலே இறங்கினேன். எப்படி தேடனும், எங்க தேடனுமுன்னு தெரியலை, இருந்தாலும் வாழ்க்கைப் பயணத்திலே கால்கட்டு போட இந்த கரிகட்டை புயலா கிளம்பியது. தேடுதல் வேட்டையிலே முதலிலே அகப்பட்டது ஒரு இணைய தளம், ஊருக்குள்ளே சாதியை ஒழிக்கனுமுன்னு ஒரு கும்பல் கொலைவெறியா இருக்கும் போது இணையத்திலே சாதியை கொண்டு வந்துட்டாங்களேன்னு யோசித்துகிட்டே உள்ளே போய் பார்த்தா, உள்ளே பெண்கள், ஆண்கள் படங்களைப் போட்டு ஆள் தேடிகிட்டு இருந்தாங்க.
விவரம் புரியாம நண்பனை தொடர்பு கொண்டு, மாப்பள சாதின்னு பேரு வச்ச இணையத்திலே எல்லோரும் என்னடா தேடுறாங்க, அவங்க சொந்தக்காரங்களையான்னு கேட்டேன். அவன் அதற்கு
"கிறுக்கு பயலே, அது இணைய தள திருமண சேவை செய்யும் நிறுவனம், இந்தியிலே சாதின்னா கல்யாணம்"
அடுத்த அரை நொடியிலே என்னோட விவரத்தை சாதியிலே ஏத்திவிட்டேன், ஏத்துன அன்னைக்கே அந்த இணையத்தை குறைந்த பட்சம் பத்தாயிரம் தடவை பார்த்து இருப்பேன், அப்ப எல்லாம் அலேச்ஷா ரேட்டிங் இருந்து இருந்தா, என்னாலே அவங்களுக்கு முதல் இடம் கிடைத்து இருக்கும்.முதல்ல என்னைய தேடி யாரும் வாராங்களான்னு ரெண்டு மாதம் காத்து இருந்தேன். என்னோட விவரத்தை யாரும் பார்த்த மாதிரியே தெரியலை. அதை அடுத்து நான் புகைப்படம் இருக்கிற அழகுப் பெண்களாப் பார்த்து, உங்க விவரம் பார்த்தேன் எனக்கு பிடிச்சி இருக்கு, உங்களுக்கு விருப்பமுன்னா, என்னை தொடர்பு கொள்ளுங்கன்னு சொல்லிட்டு வந்தேன்.
நான் விண்ணப்பம் போட்ட பெண்கள் எல்லாம் ஒரு வாரத்திலே அந்த இணையத்திலே இருந்து காணமப் போய்ட்டாங்க, என்னன்னு விவரம் புரியலை, வாடிக்கையாளர் சேவைக்கு மின் அஞ்சல் அனுப்பி விவரம் கேட்டேன், அவங்களுக்கு எல்லாம் கல்யாணம் ஆகிவிட்டது என்று சொல்லி விட்டார்கள், உங்க ராசி ரெம்ப நல்ல ராசின்னு பதில் அணிப்பி விட்டார்கள், நல்லராசி இருக்கிறதாலே இன்னும் பெண் கிடைக்கலைன்னு மனசிலே நினைத்துக் கொண்டு, வழக்கம் போல புது பெண்களைப் பார்த்து விண்ணப்பம் அனுப்ப ஆரம்பித்தேன்.
இந்த நேரத்திலே நண்பன் ஒருவனிடம், இரவு தேநீர் குடிக்கும் போது புலம்பி கொண்டு இருந்தேன், அவனுக்கு என் மேல அபார நம்பிக்கை, அவன் சொன்னான் மாப்ள உன்னோட புகைப்படத்தை மேல ஏத்துடான்னு சொன்னான். அடுத்தநாளே அரை இஞ்சிக்கு முகச்சாயம் பூசி புகைப்படம் எடுத்து மேல போட்டாச்சி, அடுத்த ஒரு வாரத்திலே, அந்த இணையத்திலே இருந்த எல்லா பெண்களும் காணமப் போய்ட்டாங்க, இந்த தடவை அவங்களே எனக்கு மின்அஞ்சல் அனுப்பி உங்க புகைப் படத்தை தயவு செய்து எடுத்திடுங்க, இல்லைனா நாங்க உங்களை கழட்டி விட்டுடுவோம்னு சொல்லிட்டாங்க.
அதே நண்பனிடம் என்ன மச்சான் இப்படி சொல்லுறாங்கன்னு கேட்டேன், அது ஒண்ணும் இல்லைடா உன் அழகைப் பார்த்து பொறாமையிலே ஓடி இருப்பாங்கன்னு சொல்லிப்புட்டான்.
புகைப்படத்தை எடுத்து விட்டேன், மறுபடியும் தேடுதல் வேட்டையை ஆரம்பித்தேன், அந்த இணைய தளம் விளம்பரம் செய்யும் இடங்களிலே ஒரு நாலு அழகுப் பெண்கள் மட்டும் எப்பவுமே இருப்பாங்க, இவங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குறாங்களே ரெம்ப நல்லவங்களா இருப்பாங்களோன்னு, அவங்களுக்கு குறி வச்சேன், விளம்பரத்திலே இருந்து தொடுப்பை சொடுகி உள்ளே போனால், அவங்க படம் இருக்காது. நானும் பல தடைவை முயற்சி செய்து பார்த்தேன் பலன் இல்லை. வழக்கம் போல வாடிக்கையாளர் சேவைக்கு மின் அஞ்சல் அனுப்பி கேட்டேன், ரெண்டு வாரம் கழித்து எனக்கு மின்னஞ்சல் வருது, உங்களை தடை செய்து இருக்கிறோம் என்று, அதற்கு பின் வேற மின் அஞ்சல் முகவரி கொடுத்து பதிவு பண்ண முயன்றேன், அவங்க ரெம்ப திறமை சாலிகளா செயல் பட்டு என் பேரு மட்டும் அல்ல, என் பேரு மாதிரி வந்த எல்லாத்துக்கும் கல்தா கொடுத்து இருக்காங்க.
மறுபடியும் இருக்கவே இருக்கான்னு என்னைய கோத்து விட்ட நண்பன் கிட்டே கேட்டேன், என்ன மச்சான் ஒரு நாலு பெண்களை பற்றி விசாரிக்கும் போது எனக்கே கல்தா கொடுத்துட்டாங்கடான்னு சொன்னேன்.
டேய் உன்னைய மாதிரி கருவாலிகளை இழுக்க அவங்க பயன் படுத்துற ஆய்தம் தான் இந்த அழகுப் பெண்கள், அவங்க இருக்காங்களோ இல்லையே,ஆனா நீ போய் நிக்குற பாரு, அதிலே தான் அவங்க வெற்றி இருக்கு, தேடிபோனதுதான் கிடைக்கலை, இருக்கிற ஒண்ணை பார்த்து தேத்தலாமுன்னு உன்னைய ஒரு மனநிலைக்கு கொண்டு வருவதுதான் அவங்க நோக்கம்.
அவன் சொன்னதிலேயும் உண்மை இருக்கத்தான் செய்யுது இரண்டு சக்கர வாகனம் விளம்பரம் பாருங்க, ஒரு அழகான பெண்ணோட கையிலே, காலிலே விழுந்து உசார் பண்ணி டீ குடிக்க தள்ளிட்டு வந்தா, புதுசா ஒரு வண்டியைக் கொண்டு வந்து கொத்திட்டு போயிடுறான், நொங்கு திங்க வந்தவன் டீ நக்கி குடிக்கான், வண்டி வச்சி இருக்கவன் நோகாம நொங்கு திங்கான். .இவ்வளவு ஏன் ஆம்புளை உள்ளாடைக்கு, பக்கத்திலே ஒரு பெண் டவுசர், பனியன் போட்டுட்டு நிக்க வேண்டிய இருக்கு, இப்படி விளம்பரம் போட்டு உசுப்பு ஏத்துறதே வேலையைப் போச்சி, கல்வித்துறை, கலைத்துறை,கணனித்துறை இப்படி பல துறைகளிலே பெண்கள் முன்னேறி இருந்தாலும், விளம்பர துறையிலே ஆண்களை விட ஒரு படி மேலதான் என்று கையிலே வைத்து இருக்கும் சொம்பு தண்ணியில் ரெண்டு முடக்கு குடிச்சிட்டு தீர்ப்பு சொல்லிக்கிறேன், வாய்பளித்த அனைவருக்கும் நன்றி, வணக்கம்.
போறதுக்கு முன்னாடி அந்த நாலு பேரு யாருன்னு சொல்லிட்டு போறேன், இந்தா கீழே இருக்காங்களே இவங்க தான் அவங்க, அந்த காலத்திலேயே இருந்து இன்னும் வயசும் ஏறலை, அழகும் குறையலை, அதிலே ஒருத்தர் டீச்சர் 24 மணி நேரமும் பேசலாம், ஈவன்ட் மேனேஜர் 24 மணி நேரமும் உரையாடலாம், இங்கே சொம்பு அடிச்சா அவங்க வேலையை யாரு பாப்பாங்கன்னு தெரியலை, இப்படியும் ஒரு வேலை இருந்தா எனக்கும் சொல்லுங்க நானும் வாரேன். இந்த புகைப்படத்திலே இருப்பவங்க எல்லாம் இன்னும் 40 வருஷம் கழிச்சினாலும் அப்படியே தான் இருப்பாங்க, நல்லாப் பாத்துகோங்க சாமியோ
38 கருத்துக்கள்:
அஃகஃகா... இதில இருந்து என்னா தெரியுது? நீர் தினமும் நோட்டம் உட்டுகினே.......
என்ன கொடுமை சார் இது
கெக்கே பிக்கே.. வலை வீசிப் பிடிக்கிறாங்கப்பா.. :)
அருமையான பதிவு.இந்த அனுபவம் பலருக்கும் இருக்கிறது.நகைச்சுவையாக இருந்தாலும் சிந்திக்க வைத்தது
ரொம்ப அழகா எழுதுறீங்க.. :-)))
நானும் அஞ்சாறு வருஷமா பார்த்துக்கிட்டிருக்கேன்.. இதே பொண்ணுகதான் லைன்ல நிக்குதுக..! இவுங்களுக்கெல்லாம் இன்னுமா கல்யாணம் ஆகலை..?
தேடித் தேடி நீங்க ஒரு வழி ஆனீர்களோ இல்லையோ, மேட்ரிமோனி சர்வீஸை ஒரு வழி செய்து விட்டீர்கள்:))! பதிவு அருமை.
இதுதான் கற்பனை அறிவு கொட்டின நீர்வீழ்ச்சியா:))
அடக் கஷ்ட காலமே இன்னுமா நசருக்கு கல்யாணம் ஆகாம இருக்கு.. அச்சோ பாவம்.. இஃகி இஃகி
பழிக்குப் பழி..
வந்து என்னோட சிவகாமி சபதத்துல என்ன சொன்னிங்க.. தத்துவம் மூப்பத்தி மூணாயிரத்து ஒன்னா..:))
ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... கல்யாண கலாட்டா வைபோகமே!
வேற மேட்ரி மோனியல் சைட் ட்ரை பண்ணலாமே, [பொழுதாவது போகும்ல..]
என் நண்பனுக்கும் இப்படிதான் பொழுது போகுது
//நான் இமயமலையை நகர்த்த ஆரம்பித்த காலத்திலேயே இருந்து அது நகர்ந்து இருந்தால், அது இன்றைக்கு எங்க ஊரு புளியங்குடி பக்கம் வந்து இருக்கும்.//
இல்லைனா விடுங்க, புளியங்குடிய தூக்கிட்டு போய் அங்க வச்சிரலாம்!
இப்படிதான்யா ஒரு குரூப்பே அலையுதுங்க...
வேற சாதிக்கு போங்க சார்..
ஜாயின் ஃபிரின்னு போட்டிருக்காங்களே அப்டின்னா என்னாங்க...
//அந்த இணையத்திலே இருந்த எல்லா பெண்களும் காணமப் போய்ட்டாங்க//
சிரிச்சி முடியலைங்க... சொந்தக்காசுல சூனியம் வச்சிக்கறது இதுதானுங்களா?
அந்த தளத்தில எல்லாம் மேயறீங்கன்னு உங்க வூட்டம்மாக்கு தெரியுமா :)
:))
என்ன ஒரு அவதானிப்பு.
அடப்பாவமே, என்ன கொடுமை சார் இது. ஷீக்ர திருமண ப்ராப்தி ரக்ஷ!
என்ன கொடுமை சார் இது???????
இப்படி ஒரு தன்னம்பிக்கை புலி, சிங்கம், கரடி எல்லாம் கலந்த கலவையாகிய என்கிட்டே சொன்ன உடனே, நானே களத்திலே இறங்கினேன்.
வெரிகுட்
நான் விண்ணப்பம் போட்ட பெண்கள் எல்லாம் ஒரு வாரத்திலே அந்த இணையத்திலே இருந்து காணமப் போய்ட்டாங்க,
ரொம்ப நல்லவுக நீங்க
//
ஒரு நாலு பேருக்கு கல்யாணம் ஆகலைனா, தயவு செய்து என்னிடம் தெரிவியுங்க
//
இருங்க நாற்பது பேரு லிஸ்டை அனுப்பறேன்:)
//
என் சொந்த செலவிலே பத்து கோடி செலவு பண்ணி, நான் தெருக்கோடிக்கு வந்தாலும் பரவா இல்லை
//
அவ்வளவு நல்லவரா நீங்க? சொல்லவே இல்லே :)
//
என் கிட்னியையும் வித்து கல்யாண செலவு செய்யுறேன்
//
இது செம டீலா இருக்கே:)
முயற்சி செய்துகிட்டே இருந்த உங்களை பாராட்டாம இருக்க முடியாது. ஆனாலும் ரொம்பத்தான் முயற்சி பண்ணி இருக்கீங்க :)
//
இப்படி ஒரு தன்னம்பிக்கை புலி, சிங்கம், கரடி எல்லாம் கலந்த கலவையாகிய என்கிட்டே சொன்ன உடனே, நானே களத்திலே இறங்கினேன்.
//
இது சூப்பர்...:)
//
நான் விண்ணப்பம் போட்ட பெண்கள் எல்லாம் ஒரு வாரத்திலே அந்த இணையத்திலே இருந்து காணமப் போய்ட்டாங்க,
//
ச்சேச்சே! நீங்க எவ்வளவு நல்லவருன்னு அவங்களுக்கு தெரியாம போயிடுச்சு:(
என் முதல் மென்பொருள் ப்ராஜக்ட் மேட்ரிமோனியல் தான், மங்களகரமாக! ஹிட்ஸ்-ஐ அதிகரிக்க மாடல்களின் போட்டோக்களை வைப்போமே என்று யோசனை சொன்னோம்.
’ஏன் ஆபிஸ்-லேயே நிறைய பேச்சுலர், ஸ்பின்ஸ்டர் எல்லாம் இருக்கீங்களே! உங்க படத்தையே போடுங்களேன்’ என்க, ஆண்கள் மட்டும் கொடுத்திருந்தோம்.
பாவம் வருகை தந்தவர்கள் !
:)
அன்புடன்
கார்த்திகேயன்
காரணம் ஆயிரம்
http://kaaranam1000.blogspot.com
இமயமலைய நகத்தி நகத்தி வெக்கறது நீங்கதானா?
என்னடா... நாமளும் பழமைபேசியாரும் ஒழுங்கா நகத்தி வெச்சா மறுபடி யார் நகத்தறதுன்னு மண்டையை ஒடச்சுக்கிட்டோம்...
எம்மாம்பெரிய பதிவு...
எனக்கும் இந்த அனுபவம் உண்டு நண்பரே...
ஹா ஹா ஹா ஹா...அருமையான இடுகை.
அது சரி கல்யாண இணையதள பக்கம் உங்களுக்கு என்ன வேலை? கல்யாணம் யாருக்கு உங்க பையனுக்கா இல்லை பொண்ணுக்கா?
நான் விண்ணப்பம் போட்ட பெண்கள் எல்லாம் ஒரு வாரத்திலே அந்த இணையத்திலே இருந்து காணமப் போய்ட்டாங்க,
------
HAYYO HAYOO
பாவமுங்க நீங்க .......
ரெம்ப நொந்துடீங்க போல இருக்கே சார்... ஹும்... ஆனாலும் விதி யார விட்டது... அம்மணி வந்து சிக்கிடாங்கல்ல... ஹி ஹி ஹி... ஒகே ஒகே நோ டென்ஷன்
//விவரம் புரியாம நண்பனை தொடர்பு கொண்டு, மாப்பள சாதின்னு பேரு வச்ச இணையத்திலே எல்லோரும் என்னடா தேடுறாங்க, அவங்க சொந்தக்காரங்களையான்னு கேட்டேன். அவன் அதற்கு
"கிறுக்கு பயலே, அது இணைய தள திருமண சேவை செய்யும் நிறுவனம், இந்தியிலே சாதின்னா கல்யாணம்" //
ஹா..ஹா..ஹா
இரும் வர்றேன்.
//அவன் சொன்னதிலேயும் உண்மை இருக்கத்தான் செய்யுது இரண்டு சக்கர வாகனம் விளம்பரம் பாருங்க, ஒரு அழகான பெண்ணோட கையிலே, காலிலே விழுந்து உசார் பண்ணி டீ குடிக்க தள்ளிட்டு வந்தா, புதுசா ஒரு வண்டியைக் கொண்டு வந்து கொத்திட்டு போயிடுறான், நொங்கு திங்க வந்தவன் டீ நக்கி குடிக்கான், வண்டி வச்சி இருக்கவன் நோகாம நொங்கு திங்கான்//
:-))
நிறைய பதிவு போட்டுட்டீர் போல. பொறவு வந்து வாசிக்கணும். காலரை தூக்கி விட்டு காத்து வாங்குறது மாதிரி.
tight sheduled. but, thanks nasar. :-)
Post a Comment