காதலுக்கு கண் இல்லைன்னு பல இடங்களிலே கேள்விப்பட்டு இருக்கேன், ஆனா இப்பத்தான் நேரிலே பார்க்கிறேன், எங்க வகுப்பிலே அழகிலே வளவளத்தா கொஞ்சமல்ல ரெம்ப சுமார் தான், இருந்தாலும் எங்க வகுப்பு ஆணழகன் எப்படியோ அவ வலையிலே விழுந்திட்டான், என்ன சொக்குப் பொடி போட்டு மயக்கினாளோ, அவனும் இவ கிட்ட அட்டப் பூச்சி மாதிரி ஒட்டிகிட்டான், சும்மா ஒரு மூலையிலே அட்டு பிகரு மாதிரி உட்கார்ந்தோமா, போனமான்னு இருந்த வளவளத்தா மேல இவன்நொள்ள கண்ணு விழுந்ததும் சும்மா இருந்தவளை உசுப்பு ஏத்தி உச்சாணிக்கு கொண்டு போய் விட்டுவிட்டது. இப்ப எல்லாம் அரை இஞ்சிக்கு முகத்திலே பவுடர் போட்டு, வித விதமா நகச்சாயம், உதட்டு சாயம் போட்டுக்கிட்டு வருகிறது போறதைப் பார்த்தா, எனக்கு வயறு எரியும், அதை அணைக்க பக்கத்திலே இருக்கிற கள்ளு கடையிலே ரெண்டு பட்டை கள்ளு வாங்கி குடிப்பேன்.
முன்னாடி எல்லாம் என்னைப் பார்த்தா கொஞ்சமாவது பல்லைகாட்டுவா, இப்ப எல்லாம் என்னை தெருநாயை பார்க்கிற மாதிரியே பார்க்கிறா, அவ சிலுப்புற சிலுப்பிலே உலக அழகி பட்டத்தை ஒட்டு மொத்தமா குத்தகைக்கு எடுத்த மாதிரி தெரியும், உனக்கு ஏண்டா இந்த பொறமை, பல் இருக்கவன் பக்கடா திங்கான்னு நீங்க சொல்லலாம். வகுப்பிலே இருந்ததே வத்தலும், தொத்தலுமா வளவளத்தா ஒண்ணுதான், அவளை உசுப்பேத்தி விட்ட அவனை ஒன்னும் செய்ய முடியாதுன்னு தெரியும், அவன் உடற்பயிற்சி செய்து கல் காளை மாதிரி இருப்பான், நான் முப்பது கிலே எலும்பும், ரெண்டு கிலோ தோலும் சுத்தி வச்ச செக்கு மாடு மாதிரி இருப்பேன்.
வளவளத்தாவின் காதலைப் பார்த்து வானமே கதிகலங்கிப் போய், மேகத்தை எல்லாம் எங்க ஊரை விட்ட அடிச்சி விரட்டி விட்டுடுது, எனக்கு மட்டுமல்ல இயற்கைக்கே இவ பண்ணுறது பொறுக்காம சோலைவானமா இருந்த எங்க ஊரை பாலைவானமா மாத்தி விட்டது. இந்த பிரச்சினையை எப்படி கையாளுவதுன்னு தெரியாம ஊரே ஓம குண்டம், அசனம் இப்படி பல பரிகாரங்களை தேடிக்கொண்டு அலைய, நானோ விடை தெரிஞ்சும் வடை கிடைக்காமல் அலைந்தேன். வானிலை செய்தி கேட்டா மழை வரும் என்கிற செய்தியை தவிர எல்லா செய்தியையும் சொல்லுறாங்க.வளவளத்தாவை பழைய நிலைக்கு கொண்டு வந்து ஊர் மீண்டும் சோலைவனமாக மாற வேண்டும் என்று பொறுப்பு என்கிற பருப்பு என்மீது விழுந்து இருப்பதை கண்டுபிடிக்கவே எனக்கு இடைவேளை ஆகிவிட்டது.
"உன் ஒருத்தனாலே தான் முடியும்", "மிகப்பெரிய சக்தி, மிகப்பெரிய பருப்புகளை மன்னிக்கணும் பொறுப்புடனே வரும்", "உன்னைவிட்டா உலகத்தை காக்க யாரு இருக்கா" போன்ற குத்து வசனங்கள் என் காதிலே விழுந்து கலவரம் பண்ணிக்கொண்டு இருந்தது. இந்த இமாலயப் பொறுப்புடன், நான் கல்லூரி மாணவன் என்பதையே மறந்து இரவு பகலாக உலக மக்களைப்பற்றி சிந்தித்துக் கொண்டு இருக்கும் எனக்கு உலக யோக்கியன் பட்டம் கொடுப்பார்களா என்ற எண்ணம் வேறு உள் மனதிலே குற்றால அருவி போல ஓடிக்கொண்டு இருந்தது. அலைந்து திரிந்து கடைசியிலே ஒரு கடைந்து எடுத்த யோசனையுடன் வளவளத்தாவை சந்திக்க நீண்ட நாளைக்கு பின் கல்லூரி சென்றேன். எனக்கு எப்போதும் சிங்கத்தை அதன் குகையிலே சந்தித்துதான் பழக்கம்.கல்லூரி முடியும் நேரம் வளவள அவள் காதலனை சந்திக்க போய் கொண்டு இருந்தாள். அவளுக்கு முன்னால வேகமா சென்று அவளை நோக்கி திரும்பும் முன்
"பக்கி..பக்கி,பாத்து நட, கீழ விழுந்து குறை காலையும் ஓடிச்சிகாதேடா,ஏற்கனவே தேய்ந்து போன ரெகார்டு மாதிரி நடக்குற"
"வளவள உன்னையப் பார்க்கத்தான், ஓடோடி வந்தேன்"
"நீ இப்படி கால்கடுக்க ஓடிவந்து என்னையப் பார்க்க வந்தேன்னு என் கனி டவுசர் பாண்டிக்கு தெரியுமா?"
"அது யாரு வளவள கனி?"
"நாங்க புதுசா இங்கலிபிசு படம் பார்க்க ஆரம்பிச்சி இருக்கோம், அவங்க கனி, ஸ்வீட் ஹாட் ன்னு சொல்லமா ௬ப்பிடுறாங்கன்னு, நானும் என் ஆளை கனி ன்னு ௬ப்பிடுறேன்"
கொய்யால சனின்னு ௬ப்பிடலாமுன்னு மனசுக்குள்ளே நினைச்சாலும், வெளியே சொல்ல முடியலை, இருந்தாலும் டவுசர் கனி ன்னு ௬ப்பிடுன்னு சொன்னேன்.
"காக்கா நல்ல பேரு தான்டா சொல்லிகொடுத்து இருக்க, இப்ப என்ன விசயமா என்னைப் பார்க்க வந்த சீக்கிரம் சொல்லு, நாங்க இன்ஜெக்சன் பார்க்கப் போறோம்"
"அது இன்செப்சன் வளவளத்தா"
"என்ன எளவு சன்னோ, நீ வந்த விஷயத்தை சொல்லு"
"ஊரிலே மழை இல்லை, மக்கள் எல்லாம் ரெம்ப கஷ்டப் படுறாங்க"
"டேய், நான் என்னவோ காவிரியை அடைச்சி வச்சி இருக்கிற மாதிரி பேசுற, அதும் நம்ம ஊரிலே காவிரி ஓடலை, மரத்தை வையுங்கன்னு அரசாங்கம் சொல்லுது, நீங்க கருவேல மரத்திலே இருக்குற பட்டையை எடுத்து சட்டியிலே போட்டு காய்ச்சி குடிச்சா எப்படி மழை வரும்"
"வளவள வசனத்தை குறைச்சி பேசு, எல்லோரும் குறிப்பு எடுத்துகிட்டு இருக்காங்க"
"நான் என்ன விசா வாங்கி நாசாவிலையா பாடம் எடுக்கிறேன், அது தன்னாலே தண்ணி மாதிரி வருது என்ன செய்ய?"
"எல்லோருக்கும் தண்ணிப் பிரச்சனை"
"டாஸ்மாக்ல இல்ல, அங்க போய் குடிக்க வேண்டியதானே"
"அங்கேயும் இல்லை"
"இன்றைக்கு காந்தி ஜெயந்தியும் இல்லையே, காக்கா ஊரு பிரச்சனை, உலகப் பிரச்சனையைப் பத்தி யோசிக்க நேரமில்லை, இன்னைக்கு பார்க்கப் போற படத்திலே கனவிலே வட்டிக்கு காசு கொடுக்கிறானாம், அதை ஆராய்ச்சி மணி அடிச்சி பார்க்க போறோம் "
"வளவள என் பொறுமையை ரெம்ப சோதிக்கிற"
"நீயே ஒரு எருவமாடு, உன் மேல மழை பெய்தா எப்படி இருக்கும்"
"அதே மழை உன் மேல பெஞ்சா, இந்த உலகத்தையே மாத்தி காட்டுவேன்"
"உன்னைய உலக்கையாலே ரெண்டு சாத்து சாத்துவேன்"
இனிமேலும் பொறுமை காத்துபயன் இல்லைன்னு தெரிஞ்சதுக்கு அப்புறமா கைவசம் இருந்து குத்து வசனங்களை அள்ளி என்னை சட்டியிலே போட்டு பொரிக்கிற மாதிரி வறுத்து எடுத்தேன், ஒன்னும் பிரயோசனம் இல்லை,உச்சியிலே இருந்த ரெண்டு கருத்த மேகமும் போன திசை தெரியலை. கடைசியா வளவளத்தா கையை பிடித்து
பூமி தாயே எங்களை காப்பாத்துன்னு சொன்னதும், என் உடம்பிலே இருந்து 1000 வாட்ஸ், வளவளத்தா கிட்ட இருந்து 500 வாட்ஸ் கிளம்பி அலைந்து கொண்டு இருந்த மேகத்தை எல்லாம் ஒன்று திரட்டி மழை வெளுத்து வாங்கியது, மழை நின்னதும், வளவளத்தாவின் முகத்தைப் பார்த்த அவள் காதலன், இருளடைந்த இருளாண்டி போல மயங்கி விழுந்து விட்டான், ஆனா எனக்கு என்னவோ, அவள் முகம் இன்றைக்கு தான் ரெம்ப அழகா இருந்தது.
24 கருத்துக்கள்:
வெல்கம் வளவளத்தா..
உலகம் காத்த உத்தமன், எங்கள் தளபதி, கறுப்புத் தங்கம், சின்ன விஜயகாந்த் நசரேயன் வாழ்க வாழ்க.
வள வளன்னு இருக்கு தல...... வளவளத்தா கிட்ட கேட்டதா சொல்லுங்க ...
Thala : ethum udampu sari illaya...
குடுகுடுப்பையார் இடுகை படிச்சப்புறம் இத எழுதியிருக்கீரு. இன்செப்ஷன் படம் பார்த்துட்டீரு போல. அப்புடியே ஆஃப்கானிஸ்தான்ல மழை வர வேண்டி வளவளத்தாவ பின்லேடன் கடத்திட்டு போய்ட்டான், காப்பாத்த நீங்க வந்தா கரண்ட வர வச்சு மழையத் தேத்தலாம்னு திட்டம் போட்டான்னு அடுத்த பார்ட்டுக்கு மேட்டரும் ரெடி. ஆனாலும்
/நான் முப்பது கிலே எலும்பும்/ இதுலையே ஒரு கால் குறைன்னு டைரக்டோரியல் டச்ல சொல்லிட்டு எதுக்கு தனியா /கீழ விழுந்து குறை காலையும் ஓடிச்சிகாதேடா/ இப்படி வேற சொல்லணும்?
இப்பல்லாம் தினத்தந்திலயே ஹெலிகாப்டர்னு போட ஆரம்பிச்சிட்டான் இவரு இன்னமும் ’கனி’ யாம்ல.
:)))
உலகம் காத்த உத்தமன், எங்கள் தளபதி, கறுப்புத் தங்கம், சின்ன விஜயகாந்த் நசரேயன் வாழ்க வாழ்க.]]
வாழ்க வாழ்க ...
எங்கள் ‘காக்கா’ வாழ்க வாழ்க
ஹா....ஹ....ஹா....ஹ....ஹா...
ஹ....ஹ......))))
அண்ணே ,, தல சுத்துது....(மதிய சாப்பாட முடிச்சிட்டு உங்க பதிவ படிச்சதுக்கு அப்புறம்)
உலக மகா மொக்கைன்னு இந்த பதிவுக்கு தலைப்பு வச்சுருக்கலாம்...
ஆனாலும் மொக்கை கொஞ்சம் இடிக்குதே.... inception படம் இப்ப தான் ரிலீஸ் ஆகிருக்கு....நீங்க எப்படி காலேஜ் studnet 'a இருக்க முடியும்.....
கற்பனைன்னு லேபில் பார்த்தேன்,அதி பயங்கர கற்பனை தான்.
KarthigaVasudevan said...
கற்பனைன்னு லேபில் பார்த்தேன்,அதி பயங்கர கற்பனை தான்.//
:)))
ஹா....ஹ....ஹா...
முகிலன் said...
உலகம் காத்த உத்தமன், எங்கள் தளபதி, கறுப்புத் தங்கம், சின்ன விஜயகாந்த் நசரேயன் வாழ்க வாழ்க
ரிப்பீட்டேய்
தளபதி, தலையெல்லாம் சுத்துது
நல்ல பெயர்! :)
:-)))
வளவளத்தா ரிட்டர்ன்ஸ் நல்லாருக்கு :-))))
@முகிலன் :- நானா காசு கொடுத்து சொல்ல சொல்லலை
@கே.ஆர்.பி.செந்தில் : கண்டிப்பா சொல்லுறேன்
@ வழிப்போக்கன் - யோகேஷ் : நல்லாத்தா இருக்கு யோகேஷ்
@வானம்பாடிகள் : - பாலா அண்ணே அடுத்த இடுகைய ஆப்கான்ல நடக்கிற மாதிரி வச்சிக்கலாம்
@T.V.ராதாகிருஷ்ணன் :- நன்றி ஐயா
@நட்புடன் ஜமால் :- பட்டம் எல்லாம் கொடுக்குறீங்க பாராட்டு விழா இல்லையா ?
@Thomas Ruban : நன்றி ரூபன்
@நல்லவன் கருப்பு... :- கருப்பு கதை இப்ப நடந்ததா நினச்சிகோங்க, ஆனலும் என் கதைக்கு லாஜிக் பார்த்த உங்களுக்கு சிலை வைக்கணும்
@KarthigaVasudevan :- அதி பயங்கர கொலை வெறி கற்பனை போதுமா ?
@ முத்துலெட்சுமி/muthuletchumi :- நன்றி முத்தக்கா
@ சே.குமார் :- நன்றி குமார்
@ அப்துல்மாலிக் :- நன்றி மாலிக்
@சின்ன அம்மிணி :- அம்மணி இதுக்கே அசந்திட்டா எப்படி
@வால்பையன் :௦- வால் வேற யாரும் சொல்ல மாட்டாங்க, அதான் நானே சொல்லிகிறேன்
@ பா.ராஜாராம் :- நன்றி பா.ரா
@அமைதிச்சாரல் :- நன்றி டீச்சர்
ஹா....ஹ....ஹா...
||கே.ஆர்.பி.செந்தில் said...
வள வளன்னு இருக்கு தல.......||
இத ரிப்பீட்டிக்கறேன்...
tamilmanam kitta neenga kochchukkitteengala... illa avanga unga kitta kochukkittaangalaa... kanave kanom..
அளவே இல்லாமல் போச்சு
ஹி ஹி எப்படி இப்படி ஹி ஹி ஹி ஹி :-)
ஹி ஹி எப்படி இப்படி ஹி ஹி ஹி ஹி :-)
Post a Comment