Wednesday, June 23, 2010

வட அமெரிக்க பதிவர் சந்திப்பு

சந்திப்பு அப்படின்னு ஒண்ணு நடத்தி பல வருஷம் ஆனதாலே சந்திக்கலை, வட அமெரிக்க வலைப் பதிவர்கள் எல்லாம்(?) Fetna விலே வந்து குமியப் போறதாகவும், சென்னையிலே இருந்து அண்ணன் அப்துல்லா அவர்கள் சிறப்பு விருந்தினரா கலந்து கொள்வதின் நிமித்தமாகவும் இந்த சந்திப்பை நடத்தலாம் என்று சங்கம் இல்லாவிட்டாலும் பொது குழு ௬டி முடிவு எடுத்த படியாலே சந்திப்பு நடை பெறுகிறது.

ஜூலை 3, வாட்டர்பெரி, கனெக்டிகெட்டிலே பதிவர் சந்திப்பு நடைபெறும் என்பதை தாழ்மையோட தெரிவித்து கொள்கிறேன். சந்திப்பு நிகழ்ச்சி நிரல் எல்லாம் தயார் செய்யலை. ௬ட்டம் ௬டுவதைப் பொறுத்து முடிவு செய்தது கொள்ளலாம்.

ஆட்டோ அனுப்ப விலாசம் தெரியாம இருந்தவங்களுக்கு எல்லாம் நற்செய்தி, நல்ல வாய்ப்பு வரும் போது தவற விடக்௬டாது, அதனாலே பதிவர்கள் மட்டுமில்லாமல், வாசகர்களும் கலந்து கொள்ளலாம், எனக்கு எல்லாம் வாசகர்கள் கிடையாது என்பது நல்லாவே தெரியும், ஆனா பதிவர் மனிஷ் அதாங்க பழமைபேசி, பதிவுலகிலே பல வருடங்கள் நின்று கொடி ஆட்டிக்கொண்டு இருக்கும் இளா,மேலும் அஞ்சா நெஞ்சன்  அண்ணன் ச்சின்ன பையன், பாஸ்டன் ஸ்ரீராம்மற்றும் பெருசு அவர்கள் எல்லாம் வருகை தர இருக்கிறார்கள் 



சிறப்பு விருந்தினரா குடுகுடுப்பையாரும்,முகிலனும் நேரத்திலே கலந்து கொள்ள வாய்ப்பு மிகக்குறைவாக இருப்பதால் சந்திப்பு வருகிற எல்லோருமே சிறப்பு விருத்தினர் தான். இந்த பதிவர் சந்திப்பு மாநாடு(?) பற்றி தொடர்பு
கொள்ள வேண்டியவர்கள்.

சிறப்பு விருந்தினர் 


pazamaipesi@gmail.காம்(com)



வருகை பதிவேட்டை பதிவு செய்ய விரும்புபவர்கள், மற்றும் ஆசி வழங்குபவர்கள் பின்னூட்ட பெட்டியிலும் தொடர்பு கொள்ளலாம்.

கனெக்டிகெட்டிலே நடக்கும் பதிவர் சந்திப்பை எப்படி வட அமெரிக்கா என்று சொல்லலாம் என்று கேட்பவர்கள் எல்லாம் கண்டிப்பாக பதிவர் சந்திப்புக்கு வரவும்.


42 கருத்துக்கள்:

பழமைபேசி said...

வர்றவிங்களுக்கு எல்லாம் வட அமெரிக்க வலைஞர் தளபதி வடை வாங்கித் தருவார்னு ரொம்பவே எதிர்பாக்குறேன்!!

நசரேயன் said...

கடை காலியாகம இருந்தா சரிதான்

ஹேமா said...

நசர்...நீங்க உண்மை சொன்னாலும் நம்ப முடியாம இருக்கு.
உண்மைன்னா வாழ்த்துகள் !

எப்பிடி 3 - 4 பேர்ல
ஒரு பதிவர் சந்திப்பு !

Chitra said...

கனெக்டிகெட்டிலே நடக்கும் பதிவர் சந்திப்பை எப்படி வட அமெரிக்கா என்று சொல்லலாம் என்று கேட்பவர்கள் எல்லாம் கண்டிப்பாக பதிவர் சந்திப்புக்கு வரவும்.


..... டிக்கெட் எங்கே? ஏதோ பக்கத்து ஊருக்கு வழி சொல்ற மாதிரி கூப்பிடுறீங்க...... அவ்வ்வ்வ்...... பத்து நாட்களில் டிக்கெட்ஸ் - அதுவும் அமெரிக்க சுதந்திர தின நாள் கொண்டாட்ட லீவுல - எப்படிங்க? நல்லா இருங்க, மக்கா!

நசரேயன் said...

//ஹேமா said...
நசர்...நீங்க உண்மை சொன்னாலும் நம்ப முடியாம இருக்கு.
உண்மைன்னா வாழ்த்துகள் !

எப்பிடி 3 - 4 பேர்ல
ஒரு பதிவர் சந்திப்பு !//

சத்தியமா உண்மைதான் .. நான் அடிக்கிற கும்மி மேல சத்தியம்

நசரேயன் said...

//..... டிக்கெட் எங்கே? ஏதோ பக்கத்து ஊருக்கு வழி சொல்ற மாதிரி கூப்பிடுறீங்க...... அவ்வ்வ்வ்...... பத்து நாட்களில் டிக்கெட்ஸ் - அதுவும் அமெரிக்க சுதந்திர தின நாள் கொண்டாட்ட லீவுல - எப்படிங்க? நல்லா
இருங்க, மக்கா!//

நீங்க வருகிற மாதிரி இருந்தால் ஒரு தனி விமானம் சாலமன் அண்ணாச்சி செலவிலே ஏற்ப்பாடு பண்ணலாம்

தமிழ் மதுரம் said...

பழமைபேசி said...
வர்றவிங்களுக்கு எல்லாம் வட அமெரிக்க வலைஞர் தளபதி வடை வாங்கித் தருவார்னு ரொம்பவே எதிர்பாக்குறேன்!!//


ஆஹா.. பழமையாரின் எதிர்ப்பார்ப்பு நிறைவேற வாழ்த்துக்கள். பிறகென்ன ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான். கலக்குங்கோ நண்பர்களே!

sriram said...

என்னைப் போன்ற பின்னூட்டப் பதிவர்களுக்கு அனுமதி உண்டா நசரேயன்??
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

http://rkguru.blogspot.com/ said...

அருமையான பதிவு வாழ்த்துகள்..!

உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு..
தமிளிஷில் என் பதிவும் வந்திருக்கிறது அதற்கும் ஒரு ஓட்டு போடுங்கள்....
http://rkguru.blogspot.com/2010/06/blog-post_23.html

பெருசு said...

போண்டா வாங்கித்தந்தால் நானும் கலந்து கொள்கிறேன்

சாந்தி மாரியப்பன் said...

பதிவர் சந்திப்பு நல்லா நடக்க வாழ்த்துக்கள்.

நசரேயன் said...

// sriram said...
என்னைப் போன்ற பின்னூட்டப் பதிவர்களுக்கு அனுமதி உண்டா நசரேயன்??
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்//

இதெல்லாம் ஒரு கேள்வியா, அரியணையிலே எத்தியாச்சி

நசரேயன் said...

///பெருசு said...
போண்டா வாங்கித்தந்தால் நானும் கலந்து கொள்கிறேன்
//

கண்டிப்பா உண்டு

Vidhoosh said...

எலேய். வடையைச் சுடாதேன்னு சொன்னால் கேட்டாத்தானே.
அன்புள்ள பேராண்டிக்கு :))

வால்பையன் said...

போட்டோவை ஆவலுடன் எதிர்பார்த்து!

எம்.எம்.அப்துல்லா said...

அண்ணே, விதூஷ் அக்கா உங்களுக்கு ஒரு பேனா வாங்கித் தர்றாங்களாமாம். நான் கொண்டு போகணுமாம். எதுக்கு திடீர் பரிசுன்னு கேட்டேன். நீங்க பிழையே இல்லாம எழுதுறத பாராட்டியாம் :))))

vasu balaji said...

எங்கண்ணாச்சி இந்த ‘வாட்டர் பரின்னா’ பழைய சோத்த புதைச்சி வச்சி ஒரு சரக்கு செய்வாங்களே சொண்டிசோறு அதா?

ராஜ நடராஜன் said...

செம்மொழி காலத்தில் எம்மொழி மாநாடு நடத்த வாழ்த்துக்கள்.

ரவி said...

இந்தா புடி ஓட்டு !!! ஜெய் பழமைபேசி !

ரவி said...

நான் ஒரு ஓட்டு போட்டேன். அப்படியே இதன் தமிழ்மண சுட்டியை நாலு எடத்துல கொடுத்துவிட்டேன்பா. மன்னிச்சுக்க

கலகலப்ரியா said...

||எனக்கு எல்லாம் வாசகர்கள் கிடையாது என்பது நல்லாவே தெரியும்||

உங்க நேர்மை எனக்குப் பிடிச்சிருக்கு... :o)

RAMYA said...

ம்ம்ம்ம் நாங்களும் வாரோம்:)

இனிதே நடைபெற வாழ்த்துக்கள்!!

Anonymous said...

நேரடி ஒளிபரப்பு உண்டா :)

உண்மைத்தமிழன் said...

நானும் வந்தர்றேன்..

கரெக்ட்டா டிக்கெட் எடுத்து அனுப்பி வைங்க..!

Anonymous said...

தளபதி, யாரிந்த வெள்ளையம்மா? உங்க வீட்டுல வந்து வைரஸ் பரப்பறாங்க. கவனிக்கறதில்லையா

மாதேவி said...

வாழ்த்துகள்.

அப்துல்மாலிக் said...

எனக்கு ஒரு விசா அனுப்புங்களேன் நானும் கலந்துக்கொள்கிறேன்,

வாழ்த்துக்கள்

க.பாலாசி said...

நடத்துங்க... போட்டோ போஸ்ட் ஒண்ணு போடுங்க...

நசரேயன் said...

//எலேய். வடையைச் சுடாதேன்னு
சொன்னால் கேட்டாத்தானே//

நீங்க சுட்ட பக்கோடாவா வடையோ இல்லைன்னு கேள்விப்பட்டுதான் சுட்டேன்

நசரேயன் said...

// வால்பையன் said...
போட்டோவை ஆவலுடன் எதிர்பார்த்து!
//

பதிவுலகம் தாங்குமா என் புகைப் படத்துக்கு ?

நசரேயன் said...

//எம்.எம்.அப்துல்லா said...
அண்ணே, விதூஷ் அக்கா உங்களுக்கு ஒரு பேனா வாங்கித் தர்றாங்களாமாம். நான் கொண்டு போகணுமாம். எதுக்கு திடீர் பரிசுன்னு கேட்டேன். நீங்க பிழையே இல்லாம எழுதுறத பாராட்டியாம் :))))
//

அண்ணே தங்கப் பேனான்னு கேள்விப் பட்டேன்

நசரேயன் said...

//எங்கண்ணாச்சி இந்த ‘வாட்டர் பரின்னா’ பழைய சோத்த புதைச்சி வச்சி ஒரு சரக்கு செய்வாங்களே சொண்டிசோறு அதா?
//

அண்ணே சுண்டக் கஞ்சி இங்க நிறைய கிடைக்குமாம்

நசரேயன் said...

//செம்மொழி காலத்தில் எம்மொழி

மாநாடு நடத்த வாழ்த்துக்கள்.//

வாழ்க எம்மொழி

நசரேயன் said...

//நான் ஒரு ஓட்டு போட்டேன். அப்படியே இதன் தமிழ்மண சுட்டியை நாலு எடத்துல கொடுத்துவிட்டேன்பா. மன்னிச்சுக்க
//

ரவி அண்ணே உங்க பேராதரவுக்கு நன்றி

நசரேயன் said...

//உங்க நேர்மை எனக்குப்
பிடிச்சிருக்கு... :o)//

நன்றி தாயே

நசரேயன் said...

//நேரடி ஒளிபரப்பு உண்டா :)

June 24, 2010 5:04:00 AM EDT//

இருக்கு

//
தளபதி, யாரிந்த வெள்ளையம்மா? உங்க வீட்டுல வந்து வைரஸ் பரப்பறாங்க. கவனிக்கறதில்லையா

June 24, 2010 5:57:00 AM EDT//

அம்மிணி நான் ௬ட வெள்ளையம்மா சந்திப்புக்கு வாரங்க போலன்னு நினைச்சேன்,அவங்க வியாபாரத்தை என் கடையிலே விக்குறாங்க

நசரேயன் said...

//நானும் வந்தர்றேன்..

கரெக்ட்டா டிக்கெட் எடுத்து அனுப்பி
வைங்க.//

ரயில் டிக்கெட் இருக்கு என்கிட்டே போதுமா ?

நசரேயன் said...

//வாழ்த்துகள்.//

நன்றி

நசரேயன் said...

//எனக்கு ஒரு விசா அனுப்புங்களேன் நானும் கலந்துக்கொள்கிறேன்,
//

என் பேரை சொல்லுங்க விசா இல்லாம தருவாங்க

நசரேயன் said...

//நடத்துங்க... போட்டோ போஸ்ட்

ஒண்ணு போடுங்க..//

கண்டிப்பா

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

// sriram said...
என்னைப் போன்ற பின்னூட்டப் பதிவர்களுக்கு அனுமதி உண்டா நசரேயன்??
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்//

என்னை மாதிரி அப்பாவிகளுக்கு இடம் உண்டா... ?

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

அடப்பாவமே... இதெல்லாம் வட அமெரிக்க இல்ல.... நயாகரா பக்கம் வெச்சா தான் வட அமெரிக்க மாதிரி கணக்கு பாஸ்... (நமக்கு பக்கம் அதானுங்க...)
ஒம்பது மணி நேரம் டிரைவ் பண்ண சொன்னா எப்படிங்க பாஸ்... அதுவும் ரெண்டு பக்கமும் லாங் வீகென்ட்... பார்டர்லையே ஒரு நாள் ஆகுமே.... கொஞ்சம் பாத்து செயுங்க... இல்லைனா ஒரு ரெண்டு air டிக்கெட் அனுப்பினாலும் சரி தானுங்க...(rangskkum sethu...) ஹி ஹி ஹி