Wednesday, June 2, 2010

அவளின்றி ஒரு நாள்
மாலை ஆறு மணி எப்ப ஆகுமுன்னு எதிர் பார்த்து பல்லை கடித்து காத்து கொண்டு இருந்தேன், என்னைக்கும் இல்லாம இன்றைய பொழுது ரெம்ப மெதுவாவே போச்சி, ஒரு வழியா மணி ஆறு ஆனதும், அலைபேசியை எடுத்து நண்பனை தொடர்பு கொண்டேன் இணைப்பு கிடைத்தும்

"மச்சான், எங்கடா வரணும்?"

"நியூயார்க் பங்கு வர்த்தக நிறுவன கட்டிடம் வந்து, அதிலே இருந்து மூனாவது கட்டு"

"சரி மச்சான், நான் கிளம்பிட்டேன்"

பொதுவா அலுவலகம் முடிந்து வீட்டுக்கு ரெம்ப மெதுவாவே போவேன், ஆனா அன்றைக்கு வேகமா நடத்து போனேன், ரெம்ப நாளைக்கு அப்புறம் பால்ய நண்பனை சந்திக்கிறோம் என்பதை விட சாதிக்க போறதை நினைத்து மகிழ்ச்சி

நண்பன் சொன்ன இடத்திக்கு சென்றேன், ரெண்டு பேரும் பாச மழையிலே கொஞ்ச நேரம் நனைந்து விட்டு, அருகிலே இருந்த ஒரு கடைக்கு சென்றோம், உள்ளே சென்றதும் கருப்பு நிற உடையிலே வெள்ளையம்மா குறுக்கும் நெடுக்கும் போய்கிட்டு இருந்தாங்க. ஒரு சந்தேகத்திலே 

"மச்சான், ஆடை குறைப்பு கொஞ்ச அதிகமா இருக்கு, நாம ஏதும் ஜென்டில்மேன் கடைக்கு வரலியே!!!"

"இல்லடா இது குடிமகன் கடைதான்"

"மச்சான் நீ ஏன்டா வீட்டுக்கு வரலை?"

"டேய் நீ வாங்கி கொடுத்து குடிச்ச என்னய, என்னவோ நான் தான் வாங்கி கொடுத்தது மாதிரி என்னையை வீட்டை விட்டு அடிச்சி விரட்டு விட்டுட்டா
உன் பொண்டாட்டி, அது கூட பரவா இல்லைடா, கள்ளு பேரு கூட தெரியாத என் வீட்டுக்காரருக்கு கண்டதை வாங்கி கொடுத்து கெடுக்குறீங்கன்னு பேசின வசனம் தான் என்னால தாங்க முடியலை, கல்லூரி வரும்போது பக்தி பழமா வந்த என்னை பாலான பழமா மாத்தினதே நீ தான் அவளுக்கு தெரியலையே"

"அவ என்னையும் தான் அடிச்சி விரட்டிடா?"


"குடும்பமே ஒரு மார்கமாத்தான் இருக்கீங்க"

"என்ன மச்சான் சொல்லுற?"

"கல்லூரியிலே படிக்கும் போதும் நீ புதுசா பீடி அடிக்க சொல்லி கொடுத்த பசங்க கிட்டேயே உங்க அம்மா வந்து, ஐயா என் புள்ளையைய கண்ட கண்ட பசங்க கூட சேர விடாதீங்க, கெட்டுப் போய்டுவான்னு சொன்னங்க, நீ ஒரு கேடுகட்ட பயன்னு தெரியாம, அதே வசனம் இப்ப உன் மனைவி கிட்ட இருந்து"

"எல்லாம் காலக் கொடுமை, விடு மச்சான்"

"கருப்பா உனக்கு ரெம்ப தைரியம் தான், இன்னைக்கு என்ன நடக்கப் போகுதோ?டேய் நீ என்னைய பார்க்க போறதா ஒண்ணும் சொல்லலையே "

"மச்சான், அவ கூடப் படிச்ச தோழியோட பையனுக்கு பிறந்த நாள், அதனாலே அவங்க வீட்டுக்கு போய்ட்டா?,போற அவசரத்திலே முக்கியமான விஷயத்தை மறந்துவிட்டாள்"

"நீ என்ன சொல்லிட்டு வந்த?"

"அலுவலத்திலே மிகப் பெரிய ரீலீஸ் இருக்கு, அதுக்கு ஆணி வேர் நான் தான், ஆணி பிடுங்க நான் இல்லைனா, அஸ்திவாரமே ஆட்டம் கண்டுடுமுன்னு பொய்யை சொல்லி வந்துட்டேன் மச்சான்"

பேசிகிட்டே மேசையை தேடித் பிடித்து அமர்ந்தோம், கொஞ்ச நேரத்திலே வெள்ளையம்மா வந்து 

"நீங்க என்ன சாப்பிடுறீங்க?"

நண்பன் தான் ஏதோ எனக்கு தெரியாத பெயர்களை எல்லாம் சொல்லி கொண்டு வரச்சொன்னான்.சொந்த கதைகளை பேச ஆரம்பித்தோம், இப்போது எனது அலைபேசி அழைத்தது, மறு முனை எண்ணைப் பார்த்து விட்டு நண்பனிடம் காட்டினேன்.

"டேய் எடுக்காதே மாப்பள, நீ உலக பிஸி ன்னு நினைசிக்குவாங்க" 

"உனக்கு தெரியாது மச்சான், முத தடவையும், ரெண்டாவது தடவையும் எடுக்கலைனா, என்னோட டேமஜெருக்கு அழைப்பு போகும், அப்படியே உண்மையும் தெரிஞ்சி போச்சின்னா வீட்டில குடிக்க கஞ்சி கிடைக்காது"

"நீ ஒரு தொடை நடுக்குபய டா"

"இப்ப அஞ்சி வருசாமா அப்படித்தான்"

"அது என்னடா கணக்கு அஞ்சி வருஷம்?"

நண்பனுக்கு பதில் சொல்லும் முன்னே மீண்டும் அழைப்பு மணி, உடனே எடுத்து விட்டு 

"என்ன விஷயம், பிறந்த நாள் விழா எல்லாம் எப்படி இருக்கு?"

"ஆமா அங்கே என்ன சந்தக்கடை சத்தம்"

"எங்க மேனேஜர் டகிலாவும், நெப்போலியனும், என்கிட்டே ரீலீஸ் பத்தி பேசிகிட்டு இருக்காங்க"

"அப்படியா முடிச்சிட்டு சீக்கிரம் வீட்டுக்கு வாங்க, நான் இப்ப வீட்டிலே தான் இருக்கேன், போற அவசரத்திலே கல்யாண நாளை மறந்துவிட்டேன், ஞாபகம் வந்ததும் உடனே திரும்பி வந்துட்டேன்" 

அலைபேசியை வைத்த உடனே வெள்ளையம்மா வந்து தட்டிலே இருந்து பானங்களை எங்கள் மேசையிலே வைத்துக் கொண்டு இருந்தாள்.

"மச்சான் நான் அவசரமா வீட்டுக்கு போகணும், என் பொண்டாட்டி வீட்டுக்கு வந்து விட்டா?"

"டேய் இந்த பீரை யார் குடிக்க?"

"நீயே குடிச்சிக்கோ"

"என்னடா அவசரம், ஒரு பாட்டில் குடிச்சிட்டு போ"

"எங்க கல்யாண நாள் ஞாபகம் வந்து பிறந்த நாள் விழாவுக்கு போயிட்டு உடனே வீட்டுக்கு வந்துட்டா?"

"உனக்கெல்லாம் இது கல்யாண நாள் இல்லை கருப்பு தினம் டா"

உண்மையா இருக்குமோ என்ற யோசனையிலே பாட்டிலே இருந்து வழிந்த பீரை பார்த்து கொண்டு வீட்டுக்கு கிளம்பினேன்.17 கருத்துக்கள்:

பழமைபேசி said...

//"நீ ஒரு தொடை நடுக்குபயடா"//

இது யாரைச் சொல்றீங்க தளபதி??

ஹேமா said...

//கல்லூரி வரும்போது பக்தி பழமா வந்த என்னை பாலான பழமா மாத்தினதே நீ தான் //

ஐயோ....பாவம்!

நல்லா மாட்டிக்கிட்டிங்களா.
இதில வேற தைரியம்.

இது உங்க கதைதானே நசர் !

பழமைபேசி said...

வெள்ளோட்டம் இராசா!!

நசரேயன் said...

///"நீ ஒரு தொடை நடுக்குபயடா"//

இது யாரைச் சொல்றீங்க தளபதி??

//
நான் யாரையும் சொல்லலை, ஆமா அது என்னாண்ணே வெள்ளோட்டம்

நசரேயன் said...

//ஐயோ....பாவம்!

நல்லா மாட்டிக்கிட்டிங்களா.
இதில வேற தைரியம்.

இது உங்க கதைதானே நசர் ///


ஹேமா,

சபையிலே இப்படி எல்லாம் கேட்டா உண்மைய சொல்ல முடியுமா

goma said...

என்னடா இது ஒரு பீரைக் கூட ஒழுங்கா குடிக்க விடமாட்டேங்றாங்களே.....

vasu balaji said...

தொட நடுங்குனா அடுத்த படி வெள்ளோட்டம் வரத்தான செய்யும்.

/யோசனையிலே பாட்டிலே இருந்து வழிந்த பீரை பார்த்து கொண்டு வீட்டுக்கு கிளம்பினேன்./

கொஞ்ச நாளா எங்கையும் பின்னூட்டம் போடாம டச்சு விட்டுபோச்சு.(அட நீங்க தமிழ்ல சொல்லுறேன்னு தொடுப்பு விட்டுபோச்சுன்னு சொல்லாதீங்க அண்ணாச்சி. வெரசமாயிரும்). இல்லீன்னா ஆஹா! பீர்...போச்சேன்னு பின்னூட்டிட்டு வந்திருப்பாரு:))

அப்துல்மாலிக் said...

வட போச்சா :))

எல் கே said...

nalla irukku
//இது யாரைச் சொல்றீங்க தளபதி??
/

avaraye sollikirar

Thenammai Lakshmanan said...

இது ஒரு உண்மைக் கதையா நசர்..:))

அப்பாவி தங்கமணி said...

ஹா ஹா ஹா.. சூப்பர்... நீங்க இந்த போஸ்ட் போட்டது உங்க தங்கமணிக்கு தெரியுமா? ஒண்ணும் இல்ல... சும்மா கேட்டேன்..

Unknown said...

கலக்கல் :-).

கே. பி. ஜனா... said...

நல்ல ஜாலி கதை!

கே. பி. ஜனா... said...

நல்ல ஜாலி கதை!

கே. பி. ஜனா... said...

நல்ல ஜாலி கதை!

கே. பி. ஜனா... said...

நல்ல ஜாலி கதை!

Anonymous said...

ஹி...ஹி...ஹி... நல்லாயிருக்கு