Thursday, January 21, 2010

இதயம் கசக்குது

"என்னடா கோலம் இது, ஒரு காதலியை சந்திக்கிற மாதிரியா வார?
ஒரு பூ கொண்டு வரலாம், நல்ல ஒரு துவைச்ச துணிய போட்டுக்கிட்டு வரலாம், எதோ குழியிலே இருந்து எழுந்து வந்தவன் மாதிரி இருக்க."

"சாமியே சைக்கிள போகும் போது, பூசாரி புல்லட் கேட்ட கதையா இருக்கு, நானே சோத்துக்கு சிங்கி அடிச்சி கிட்டு இருக்கேன், நீ வேற பூ எடுத்துட்டு வரலை, கோட் சூட் போட்டுட்டு வரலைன்னுபுலம்புற."


"உன் முஞ்சை கண்ணாடியிலே பாரு, சாக்கடையிலே இருந்து  எழுந்து வந்த  பன்னி மாதிரி இருக்கு."


"அன்றைக்கு நான் எதோ மன்மதன் மாதிரி இருக்கேன், உன் காதல் அம்புகளை என் மீது விசவே காத்து இருக்கு இந்த புள்ளி மான்.இன்றைக்கு என்னவோ  கெட்ட வாடை அடிக்கிற மாதிரி மூக்கைப் பொத்துற"

"அன்றைக்கு நீ அழகா இருந்த.."

 "ஹும் .. என்ன செய்ய உன் அழகு ஏறிகிட்டே போகுது, என் அழகு இறங்கிட்டே போகுது.நான் உன்னை நினைத்து உருகுறேன், நீ என்னைய நினைத்து பெருகுற"


"கட்ட பீடி அடிச்சிகிட்டு கைய காட்டுற, உன்னை என் காதலன் ன்னு சொல்ல வெட்கமா இருக்கு."


"வெட்கத்தை மொத்தமா குத்தைக்கு எடுத்த என் இன்ப காதலியே, உன்னோட பிரச்சனை காதல்லையா ? என்னை காதலிக்கிறதிலையா ?"


"உனக்கு வேலைப் பிரச்சனை, வீட்டிலே என்னோட கல்யாண பிரச்சனை, எனக்கு காதல் பிரச்சனை."

"எல்லாத்துக்கும் வழி இருக்கு, நான் ஓடிப் போய் கல்யாணம் பண்ணிக்கலாம்."


"அடி செருப்பாலே, இதையேதான் காதலிக்க ஆரம்பித்த நாள் இருந்து சொல்லி கிட்டு இருக்க, உருப்பட  வழி சொல்லுனா, உண்டாக வழி சொல்லுற."

"ஏன் உங்க அப்பன் அமெரிக்கா மாப்பிளையை கொண்டு வந்துட்டானோ உனக்கு,உள்ளூர்ல மாடு மேய்கவனுக்கு கொடுக்காம வெளி நாட்டிலே வெள்ளை மாடு மேய்க்கவனுக்கு கட்டி கொடுக்க முடிவு பண்ணிட்டானோ ?"

"அப்படி எல்லாம் நல்லது நடந்தா, நான் ஏன் உன் பின்னாடி சுத்துறேன்."

"ரெம்ப வளவளன்னு சொம்பு அடிக்காதே, இப்ப என்ன செய்யணுமுன்னு சொல்லு,எப்ப பார்த்தாலும் காய்கரிகாரன்கிட்ட  சண்டை போடுற மாதிரியே பேசுற,என்னோட மானத்துக்கும், சுய மரியாதைக்கு பங்கம் வந்துவிட்டது.."


"சோத்துக்கு சிங்கி அடிச்சாலும் மானத்துக்கு நல்லாவே சொம்பு அடிக்கிற ,ஸ்டுபிட்.. இடியட் .. நான்சென்ஸ்"

"இப்ப எல்லாம் கொஞ்ச நாளா, நீ தமிழ்ல திட்டினவனைப் பார்த்து முறைக்கிறதும்,அதே திட்டை ஆங்கிலத்திலே  திட்டினா "வாவ்.. வொன்டர்புல்" கை தட்டுற,உண்மையச் சொல்லு உங்க அப்பன் பார்த்து இருக்கிற மாப்பிள்ளை யாரு?"

"என்னால முடியலை.. இப்படி சோகத்தை நெஞ்சிலே சுமந்து, ஒரு சந்தோசத்தை வெளியே நிக்க விடுறது"

"என்ன இலக்கியவாதி மாதிரி பேசுற, ஒண்ணுமே புரியலை"


"என்னதான் புரிஞ்சு இருக்கு உன் மரமண்டைக்கு,
"எதோ வெளிநாட்டு மாப்பிள்ளையாம், எப்பவோ உன் ௬ட சுத்தும் போது பார்த்து இருக்கிறான், அவன் எங்க வீட்டிலே வந்து என் அப்பாட்ட துண்டு போட்டு சொல்லி இருக்கான், எனக்கு தான் துண்டு போடுவானாம்?"


"நீயும்,நானும் காதலிக்கிறோமுனு தெரிஞ்சுமா அப்படி சொன்னான்? "

"நீயும், நானும் அக்காவும், தம்பியும்னு நினைச்சிட்டான்,இப்ப நான் என்ன செய்ய " 

"உலகத்திலே காதலிகிட்ட இன்னொருத்தனை கட்டிக்க சம்மதம் கெட்ட முத தமிழ் பொண்ணு நீ தான்"

"இதிலேயாவது எனக்கு முதல் பரிசு கிடைச்சி இருக்கேன்னு சந்தோசப்படு, ஒரு பொண்ணு ஒருத்தனை நினைச்சிட்டா மறக்கவே மாட்டான்னு எவனோ சொல்லி வச்ச வார்த்தைய  காப்பாத்த இந்த கட்டை என்ன பாடு படுத்து தெரியுமா?"

"சரி போ கட்டிக்கோ"

"என்னடா இந்த சோகம் தாங்காம நெஞ்சை பிளந்து அழுவன்னு நினைச்சேன், நீ குத்துக்கல் மாதிரி நிற்கிற" 

"நம்ம காதல் அத்தியாயம் முடிந்தது, நீ போகலாம"

(ஐந்து நிமிட மவுன அஞ்சலி காதலுக்கு செலுத்தி விட்டு காதலி போகிறாள், அடுத்த ஐந்து நிமிடத்திலே மீண்டும் திரும்பி வருகிறாள்)

"திருப்பி வந்துட்டாயா இல்லை திருந்தி வந்துட்டாயா, காதல் பொய் இல்லை என்பது உண்மைன்னு இப்பவாது புரிஞ்சதே உனக்கு, எனக்கு நல்லா உன்னால என்னை பிரிந்து இருக்க முடியாதுன்னு, காதலுக்கு வெற்றி..வெற்றி..வெற்றி..வெற்றி..""அல்லோ(வசனம் உதவி பாலா அண்ணன்) அலோ.. அலோ , என்னோட கார் சாவியை ஆட்டைய போட்டு வச்சி இருக்கியே, முதல்ல அதை கொடு உனக்கு ஒரு கும்பிடு போட்டுட்டுபோறேன்,உன்னையை எல்லாம் இந்த வாய் மட்டும் இல்லைன்னா நாய் ௬ட மதிக்காது."

(மீண்டும் மவுனம், மீண்டும் பிரிவு,அடுத்த அரை மணி நேரத்திலே மீண்டும் காதலி திரும்பி வருகிறாள்)

"இப்ப என்னத்தை விட்டுட்டன்னு திரும்பி வந்த?"

"என்னவோ தெரியலை உன்னை விட்டு பிரிந்து போனதிலே இருந்து நெஞ்சு கரிக்குது"

"சோடா வாங்கி குடி சரியாப் போகும்"

"எருவ மாடு.. உன்னை விட்டுட்டு போக முடிலைன்னு சொல்லுறேன்"


"சரி போகாதே"

"அப்படியா"

"ம்ம்"

"ஐ லவ் யு.."

"ஐ டு லவ் யு.."


28 கருத்துக்கள்:

Chitra said...

Love today........!

வில்லன் said...

நான் தான் செகண்டு

வில்லன் said...

//"என்னடா கோலம் இது, ஒரு காதலியை சந்திக்கிற மாதிரியா வார?

ஒரு பூ கொண்டு வரலாம், நல்ல ஒரு துவைச்ச துணிய போட்டுக்கிட்டு வரலாம், எதோ குழியிலே இருந்து எழுந்து வந்தவன் மாதிரி இருக்க."//

வான் என்ன காதலிய பாக்கபோரான இல்ல வேற எதாவது பண்ண\போரான.... குளிக்கல தொவைக்கலன்னு சொல்ல.....

காதலிக்கணும்னா பைய்ல காசு இல்லாம முடியாதோ..... நாய் காதல் பண்ண ஒன்னும் தேவையில்லையே தலைவா!!!!!

வில்லன் said...

//உருப்பட வழி சொல்லுனா, உண்டாக வழி சொல்லுற//

நல்லாருக்கே அடுக்கு மொழி!!!!!!!!!!!

வில்லன் said...

//"அன்றைக்கு நான் எதோ மன்மதன் மாதிரி இருக்கேன், உன் காதல் அம்புகளை என் மீது விசவே காத்து இருக்கு இந்த புள்ளி மான்.இன்றைக்கு என்னவோ கெட்ட வாடை அடிக்கிற மாதிரி மூக்கைப் பொத்துற"//

பருக பருக பாலும் புளிக்கும்....

வில்லன் said...

//"என்னவோ தெரியலை உன்னை விட்டு பிரிந்து போனதிலே இருந்து நெஞ்சு கரிக்குது"
"சோடா வாங்கி குடி சரியாப் போகும்"
"எருவ மாடு.. உன்னை விட்டுட்டு போக முடிலைன்னு சொல்லுறேன்"
"சரி போகாதே"
"அப்படியா"
"ம்ம்"
"ஐ லவ் யு.."
"ஐ டு லவ் யு.."//

அட பரதேசிங்க...அதுங்களுக்கு தான் வேற வேல வெட்டி இல்லாம படுத்துதுங்கன்னா..... வெட்டியா எங்களையும் படிக்க வச்சு நோகடிசுடின்களே...... சரியான சப்ப மேட்டர்.

ஹேமா said...

என்னாலயும் முடியலை.. இப்படி சோகத்தை நெஞ்சிலே சுமந்து ஒரு சந்தோசத்தை வெளியே நிக்க விடுறது.நானும் மௌன அஞ்சலி செலுத்திக்கிறேன்.

சின்ன அம்மிணி said...

:)

முகிலன் said...

முதல் தடவை தான் தற்கொலைக்கி முயற்சி செஞ்சி யாரோ ஒருத்தன் அமெரிக்காவுல இருந்து வந்து துண்டு போட்டு காப்பாத்திட்டான்ல, அப்பிடி இருந்துமா ரெண்டாவது தடவ?

பழமைபேசி said...

இஃகி

cheena (சீனா) said...

நகைச்சுவை - நல்லாவே இருக்கு -

ஆரூரன் விசுவநாதன் said...

ம்ம்ம்ம்......இதயம் இனிக்குது.....

T.V.Radhakrishnan said...

Present Nasareyan

ஆ.ஞானசேகரன் said...

ம்ம்ம் நல்லாயிருக்கு

ராமலக்ஷ்மி said...

//இதயம் கசக்குது//

நல்லாயிருக்குது நசரேயன்:))!

நட்புடன் ஜமால் said...

இனிப்புல துவங்கி

கசக்க வந்து

இனிப்பாகவே


மிக்க நன்று

சிரிப்புக்கு பஞ்சமில்லை.

Sangkavi said...

நல்லாயிருக்கு....

பிரியமுடன்...வசந்த் said...

அண்ணே அமெரிக்காலமட்டுமா வெள்ளையா மாடு இருக்கு இந்தியாலயும் இருக்குல்ல....!

வானம்பாடிகள் said...

:)). வித்தியாசமான காதல். பிரமாதம்.:))))))

பிரபாகர் said...

கொஞ்சம் வித்தியாசமாத்தான் இருக்கு!

பிரபாகர்.

எறும்பு said...

good..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்லா இருக்கு..
இதுக்கு ஏன் கசக்குதுன்னு தலைப்பு வச்சிருக்கீங்க.. காதல் திரும்ப கிடைச்சது கசக்குதா ? :)))

அமைதிச்சாரல் said...

அவுங்களுக்கு மீண்டும் ஒரு காதல் கதை ஆரம்பம்.

அடுத்து எப்போ இதயம் கசக்கப்போவுதோ.!!!

அண்ணாமலையான் said...

ஹா ஹா ஹா ஹா பட்டய கெளப்பறீங்க ... வாழ்த்துக்கள்..

S.R.Rajasekaran said...

"இதயம் கசக்குது"

அடடே 'பீர்'ம் கசக்குதே ?

S.R.Rajasekaran said...

வெரி நைஸ் ஸ்டோரி ???...

கமலேஷ் said...

ரொம்ப அழகா எழுதறீங்க...திரைகதை ஸ்கிரிப்ட் மாதிரி...ஒவ்வொரு எழுத்துக்களும் ஒவ்வொரு அசைவு...சில காட்சிகள் கண்முன் அப்படியே விரிகிறது....தொடருங்கள்.... வாழ்த்துக்கள்

சிங்கக்குட்டி said...

ஒன்னும் கவலை வேண்டாம் நசரேயன் "சோடா வாங்கி குடிங்க எல்லாம் சரியாப் போகும்" :-)