Tuesday, January 5, 2010

யார் இலக்கியவாதி?

இலக்கியவாதிகள் ௬ட்டம், இலக்கிய இன்பம் பருக வருக, இலக்கிய ரசம் இப்படி பல சொல்வாடைகளையும் கேட்டு இருக்கிறேன்.அங்கே எல்லாம் போனா இரும்பு அடிக்கிற இடத்திலே ஈ நின்ற மாதிரி இருக்கும்முன்னு  போகவே மாட்டேன்.

யாரை இலக்கியவாதி என சொல்ல வேண்டும், அப்படி சொல்லும் படி நடக்க என்ன என்ன தகுதிகள் வேண்டும் இருக்குன்னு இல்லாத மூளை கசக்கி பிழிந்தேன்.தங்கமணி வீட்டிலே வைத்த ரசத்தை குடித்து யோசித்து பார்த்தேன், அடுத்த ரெண்டு நாளைக்கு யோசிக்கவே முடியலையே, ஏன்னா அது ரசமுன்னு கண்டு பிடிக்க ரெண்டு நாள் ஆகிவிட்டது.இருக்கவே இருக்காரு கூகிள் ஆண்டவர், அவரை நம்பினால் கைவிட மாட்டார்ன்னு கேட்டேன், அள்ளிக் கொடுத்தார்.

எதாவது ஒரு கருத்தை கொண்டு எழுதிய அனைத்துமே இலக்கிய வகையிலே சேருவதாக சொல்லுகிறார் கூகிள் ஆண்டவர்.அதாவது சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை அனைத்தும் எதாவது ஒரு கருத்து, உணர்வு எண்ணம் சார்ந்து வெளிப்படும்,அதை படித்த பின் என்ன எண்ணம் ஏற்படும் என்பது இலக்கியவாதிக்கு அப்பாற்பட்ட விஷயம்,அதனாலேவோ என்னவோ நான் எல்லாம் என்னை எழுத்தாளர்ன்னு சொல்லுறதில்லை, வீட்டுக்குள்ளே அடி வாங்கி பழக்கப் பட்டாலும், சபையிலே அடி வாங்குற அளவுக்கு நான் இன்னும் வளலரலை.எழுத்திலே இலக்கணம் அமைந்தால் யாருக்கு பெருமைன்னு தெரியலை, ஆனா இங்கே இலக்கணம் சொல்லவேண்டிய நிலைமை எனக்கு.இலக்கியத்தை கொஞ்சம் இறக்கி வைத்து விட்டு இலக்கணம் பார்க்கலாம்.


இலக்கணம் என்பது ஒரு மொழி சார்ந்த விஷயம், எல்லா மொழி களிலுமே இலக்கணம் இருக்கிறது, ஆங்கில இலக்கணத்தை கடம் அடித்து மனப் பாடமாய் ஏத்தினது இன்னும் மனசுக்குள்ளே அப்படியே  இருக்கு, ஆனா வெளியே  சொல்ல முடியலை.

இலக்கணம் ஒரு சொல்லையோ, ஒரு எழுத்தையோ குறிக்கலாம், அந்த வகையிலே மொழி பேசுற எல்லோருமே இலக்கணவாதிகள் என்பது உண்மை(?).

ஒரு இலக்கியவாதி(நான் இல்ல சாமிகளா) எழுதும் போது ஒரு சொல்லையே, எழுத்தையோ குறித்து எழுதுகிறார், அவரை அறியாமலே அதிலே அணியும் கலந்து கொள்கிறது, தனது கற்பனைகளை விவரிக்கும் போது தற்குறியாக எழுதினாலும் அங்கே அது தற்குறிப்பு ஏற்ற அணியாக மாறுகிறது. ஆக ஒருவரது படைப்பிலே இலக்கணம் இருக்கிறது என்பதும் உண்மையே(?). இலக்கணமும், இலக்கியமும் ஒரு படைப்பிலே நகமும் சதையும் போல இருக்கிறது.ஆக ஒரு இலக்கியவாதிகுள்ளே இலக்கணமும் ஒளிந்து கிடக்குது.

  எனக்கு விவரம் தெரிஞ்ச வயசிலே நான் கேட்ட கலை வசனம் ரத்தக் கண்ணீர் தான்.ஆடலையும் ஒரு கலைன்னு சொல்லலாம், எழுதுவதையும் ஒரு கலைன்னு சொல்லலாம்.கண்ணால் பார்த்து உள்ளம் உணர்வதும் ஒரு கலையே, எழுத்தாளன் எங்கே கலைஞன் ஆகிறான் என்றால் எழுத ஆரம்பிக்கும் போதே,அப்படின்னு பார்த்தா மனபாடம் பண்ணி பரிச்சை எழுதுவதும் கலையே(?).படிச்சவங்க எல்லோருமே கலைஞர் தான்(?)


ஒவ்வொரு எழுத்தாளருக்கு உள்ளேயும் இலக்கியம், இலக்கணம் மற்றும் கலை  இயல்பாவே இருக்கு, அப்படி இருக்கும் போது அவரு இலக்கியவாதி என்று சொல்லும் முன்னே, நாமும் இலக்கிய வாதிதான் என்ற உண்மையை ஒப்புக்கொள்ளவேண்டும்.நமக்கு நாமே உதவி திட்டத்தின் கீழே இந்த பட்டம் கொடுக்கப் படுகிறது.


எழுத்தாளர் மட்டுமல்ல வாசகருக்கும் இந்த பட்டம் பொருந்தும், ஒருவரின்  கருத்தை படித்து விட்டு இன்னும் மிகைப் படுத்தி எழுதி இருக்கலாம் என நினைக்கும் போது இலக்கியவாதியாகிறார், (இதை) எழுதியவன் மட்டும் கையிலே கிடைத்தா கண்டம் துண்டமா வெட்டி போடுவேன் என்று நினைக்கும் போது கலைஞன் ஆகிறார், எழுத்துகளை வசிக்கும் போதே அவர் இலக்கணவாதியாகிறார்.படிக்கிறவங்க, எழுதுறவங்க  எல்லோருமே இலக்கியவாதிகள்(?).


ஒவ்வொரு மனிதனுக்குள்ளே இந்த முன்று மட்டுமல்ல ஓராயிரம் திறமை இருக்கிறது, அதிலே அதிகம் வெளிப்படும் திறமை அவனுடைய அடையாளமாகிறது. (ரெம்ப முக்கியம் இந்த குத்து வசனம்).

இப்படி ஒரு அடையாளமாக வாழும் மனிதர் குடுகுடுப்பையார் 

இங்கே  அடையாளங்களை  காணலாம்.


28 கருத்துக்கள்:

நட்புடன் ஜமால் said...

வீட்டுக்குள்ளே அடி வாங்கி பழக்கப் பட்டாலும், சபையிலே அடி வாங்குற அளவுக்கு நான் இன்னும் வளலரலை]]

உங்க நேர்மை நெம்ப டாப்புங்கோ

நட்புடன் ஜமால் said...

நீங்க எம்பூட்டு படிச்சிருந்தா இந்த ஆய்வு செய்து இருப்பீக

நீங்களும் ஒரு இலக்கியவாதி தாண்ணே!

அரங்கப்பெருமாள் said...

//.படிச்சவங்க எல்லோருமே கலைஞர் தான்(?)//

அப்ப நானும் கலைஞரா? இது தெரியாம நாலு அஞ்சு தடவ அடிவாங்கிட்டேனே!!

அரங்கப்பெருமாள் said...

//எல்லோருமே இலக்கியவாதிகள்(?)//

நல்லாப் பார்த்துங்க. நானும் இலக்கியவாதி தான்..இலக்கியவாதி தான்..


//ஒவ்வொரு மனிதனுக்குள்ளே இந்த முன்று மட்டுமல்ல ஓராயிரம் திறமை இருக்கிறது, அதிலே அதிகம் வெளிப்படும் திறமை அவனுடைய அடையாளமாகிறது.//

இவ்ளோ விவரம் சொல்லுறியே யாருண்ணே நீ.(என்ன மாதிரியே இலக்கியவாதியா)

நட்புடன் ஜமால் said...

கலக்கிய வியாதி மாதிரியாண்ணே இது

இலக்கிய வியாதி

ச்சே ச்சே

இலக்கியவாதி ...

T.V.ராதாகிருஷ்ணன் said...

நீங்க ,நான் இலக்கியவாதி

சினிமா புலவன் said...

நானுந்தான் போல..அட அட அட என்ன ஒரு ஆய்வு..

கோவி.கண்ணன் said...

உங்கள் கட்டுரை இலக்கிய வகையைச் சேர்ந்தது !
:)

ஆனால் பின்னவினத்துவத்தில் வராது, ஏனெனில் பின்னவினத்துவம் வரையறுத்தலில் கட்டுப்படாது. :)

குடுகுடுப்பை said...

கோவி.கண்ணன் said...
உங்கள் கட்டுரை இலக்கிய வகையைச் சேர்ந்தது !
:)

ஆனால் பின்னவினத்துவத்தில் வராது, ஏனெனில் பின்னவினத்துவம் வரையறுத்தலில் கட்டுப்படாது. :)

//

நான் ஒரு பின்னவீனத்துவாதி இல்லைன்னு சொல்ல இவ்வளவோ பெரிய பதிவா? என்ன ஒரு பொறாமை

Anonymous said...

ஏன் இலக்கியவாதிகள்னாலே அடிச்சுக்கறீங்க :)

Unknown said...

வருங்கால முதல்வர் இலக்கியவாதி அண்ணன் குடுகுடுப்பை வாழ்க வாழ்க..

தளபதி நசரேயன் வாழ்க..

(ரெண்டு வரி பின்னூட்டம் போட்டுட்டேனே, இதை பதிவா வெளியிடலாமா?)

:))

ராமலக்ஷ்மி said...

நல்லா இருக்குதுங்க ஆய்வு:)!

சந்தனமுல்லை said...

:-))) ரெண்டு பேரும் பேசி வச்சிக்கிட்டு இலக்கியவாதியாக பார்க்கறீங்களா..நல்லாருக்கு ஐடியா..வாழ்த்துகள் இலக்கியவாதிஸ்!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\சந்தனமுல்லை said...
:-))) ரெண்டு பேரும் பேசி வச்சிக்கிட்டு இலக்கியவாதியாக பார்க்கறீங்களா..நல்லாருக்கு ஐடியா..வாழ்த்துகள் இலக்கியவாதிஸ்!

//
ஓ இதான் விசயமா :)

vasu balaji said...

வருங்கால முதல்வர்ல எலக்‌ஷன் வருதா என்ன? நேத்து குடுகுடுப்பை பழமைய கோத்து வாங்கினாரு. இன்னைக்கு நீங்க அவரை கோத்து வாங்கறீங்க. முகிலன் சுயேச்சயா நிக்கிறாரு.:)).என்னமோ பண்ணுங்ண்ணாச்சி. நான் கடமைய நிறைவேத்திட்டேன்.

அப்புறமண்ணாச்சி பல்லு தேய்க்காம சொல்லுறது சொல்வாடை. பழமொழிக்கு சொல்லுறது சொலவடை. கி.ரா.கு மட்டும் தெரிஞ்சதோ நீங்க இப்படி எழுதினது எங்களுக்கு ஒரு நல்ல இலக்கியம் கிடைக்கும்.

vasu balaji said...

அண்ணாச்சி குடுகுடுப்பையார் வச்சிட்டாரு ஆப்பு எங்களுக்கு. நேத்து பழமை கிட்ட கேட்ட புகைப்படம் அவருடைய மீள் இடுகையில இருக்கு. அதனால உங்க புகைப்படம் போட்டாக வேண்டிய சூழல். எதுக்கும் குசும்புல ஆயில்யன் புகைப்படம் பத்தின குறிப்புகள் இருக்கு. பயன் படுத்திக்கோங்க. 2010 ஜனவரிதான் இப்ப. டிசம்பர் வரைக்கும் போடாதீங்க. வரலாறு முக்கியம் (முதல்)அமைச்சரே

ஹேமா said...

நசர் உங்ககிட்டப் பிடிச்சது எனக்கு என்னன்னா...... உங்க நேர்மைதான்.பின்னூட்டம் போட்டாலும் கதை எழுதினாலும் அப்பிடியே உண்மையை சொல்லிடுறீங்க !

சிங்கக்குட்டி said...

சத்தியமா நான் இல்லீங்கோ :-)

ஆ இங்கயும் "இலக்கணமா" (நான் கொஞ்சம் இதுல வீக்).....நன்றி அடுத்த இடுகையில் சந்திப்போம் :-)

சிங்கக்குட்டி said...

//படிச்சவங்க எல்லோருமே கலைஞர் தான்//

அப்புறம் எப்படி அவரு?

அத்திரி said...

எலக்கியவாதிக்கும் விளக்கமா? ஆங்.........

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

ஒரு இலக்கியவாதி(நான் இல்ல சாமிகளா) எழுதும் போது ஒரு சொல்லையே, எழுத்தையோ குறித்து எழுதுகிறார், அவரை அறியாமலே அதிலே அணியும் கலந்து கொள்கிறது, தந்து கற்பனைகளை விவரிக்கும் போது தற்குறியாக எழுதினாலும் அங்கே அது தற்குறிப்பு ஏற்ற அணியாக மாறுகிறது. ஆக ஒருவரது படைப்பிலே இலக்கணம் இருக்கிறது என்பதும் உண்மையே(?). இலக்கணமும், இலக்கியமும் ஒரு படைப்பிலே நகமும் சதையும் போல இருக்கிறது.ஆக ஒரு இலக்கியவாதிகுள்ளே இலக்கணமும் ஒளிந்து கிடக்குது.//

உங்களிடம் த(இ)லக்கணம் இல்லை என்பதை உங்களின் சொல்லாடல் எடுத்துக்காட்டுகிறது.

கவலை வேண்டாம்!

மற்றவர்களை வாசிக்கச் சொல்லுங்கள்!
உடனே நீங்கள் இலக்கியவாதியாக பரி நாமம்! பெறலாம்.

கண்டிப்பாக உங்கள் எழுத்துகளில் பொதுபுத்தி,பிரக்ஞை(உணர்வு என்று பயன்படுத்தினால் நீங்கள் இலக்கிய வாதி இல்லை என்பதை மனதில் நிறுத்துங்கள்),உரத்து, உரத்த சிந்தனை, நவீனம்,பின் நவீனத்துவம்,கட்டுடைப்பு,விழுமம்/விழுமியம்,குமுகம்/குமுகாயம் போன்ற சொற்களை அடிக்கடி பயன்படுத்துங்கள்(உபயோகப்படுத்தாதீர்கள்).அடி வாங்கினாலும் அப்படியே எழுதுங்கள்.

வட்டார வழக்குகளில் எழுதி நாட்டுப்புர இலக்கியத்தை வளர்க்கவும் செய்யலாம்!

இன்னும் டிப்ச் தேவைப்பட்டால் சிங்கை இலக்கிய குமுகத்தைத் தொடர்பு கொள்ளவும்.

- இரவீ - said...

//வீட்டுக்குள்ளே அடி வாங்கி பழக்கப் பட்டாலும், சபையிலே அடி வாங்குற அளவுக்கு நான் இன்னும் வளலரலை//

Any help???

புளியங்குடி said...

கலக்கறீங்கண்ணா

கலகலப்ரியா said...

இன்னா நடக்குது... இன்னா நடக்குது....

goma said...

ஆய்வாளர் நசரேயனுக்கு வாழ்த்துக்கள்.

Henry J said...

தினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. http://simplygetit.blogspot.com/2009/12/make-money-online-100-orginal-ptc-site.html

வில்லன் said...

என்ன தான் மல்லாக்க கெடந்து போறன்டாலும் உங்கள, குடுகுடுப்பை மாதிரி கள்ளகாதல், அண்ணாச்சி குடுகுடுப்பை மாதிரி களவாண்ட பதிவு (அடுத்தவன் கருத்த திருடி நக்கல் பதிவு போடுறது) எல்லாம் இலக்கியவாதியா ஒதுக்க முடியாது.....

என்ன தான் ரெக்கைய விரிச்சு ஆடினாலும் வான்கோழி மயில் ஆகா முடியாது மாமு.....

நீங்கல்லாம் வெறும் மொக்கை சொக்கை எழுதாலங்க தலைகீழ நின்னாலும் இலக்கியவாதியா ஒதுக்க முடியாது புரியுதா... எனிமா எவனாவது நான் இலக்கியவாதி அது இதுன்னு புருடா விடுங்க கால ஓடிச்சி படுக்க போட்டுருவேன் ஜாக்கிரதை....

வில்லன் said...

//"யார் இலக்கியவாதி?"///

அத படிக்குற நாங்க சொல்லணும் .... பட்டம் குடுக்கணும் ... சும்மா அரசியல்வாதி மாதிரி நீங்களா சொல்லிக்கிட்டு பீத்திக்க புடாது.... உங்களுக்கே நீங்க பட்டம் குடுத்துக்க புடாது....