ஜோசியமும், சுசியமும்
நான் பன்னிகுட்டியா இருந்து எருமைமாடா ஆகும் போது எனக்கு சோசியம் பத்தி தெரிய வந்தது, அந்த கதைய கேட்டீங்கன்னா உங்களுக்கே கோவம் வரும்.என் வாழ்க்கையிலே கருப்பு தினம் அன்றைக்கு, வாத்தியாரு இங்கிலிஷு பாடம் நடத்தும் போது வந்த எரிச்சலிலே முன்னாடி இருந்த பெண்ணோட சடைய பிடிச்சிபிட்டேன். அவ என்னைய பார்த்து
"ஏய் கருப்பா, கையையும் காலையும் ஓடிச்சி அடுப்பிலே போட்டுடுவேன்னு" ன்னு சொன்னா
வெள்ளரி பிஞ்சி போல இருந்த மனசிலே மிளகாய் பொடியை அள்ளிப் போட்டுட்டா, அம்புட்டு நாளும் ரெம்ப சிகப்பா இருக்கேன்னு நினச்சி கண்ணாடியே பார்க்கலை, அவ சொன்னதுக்கு முத தடவையா கண்ணாடியிலே பார்த்தா கொஞ்சம் இல்லை ரெம்பவே கருப்பா இருக்கேன்.கோபத்திலே என் அம்மாகிட்ட கேட்டேன்
"ஏன் அம்மா நான் கருப்பா இருக்கேன்.. ?"
"ஜோசியக்காரன் நீ ரெம்ப கருப்பா இருப்பன்னு சொன்னான், அதனாலே நீ வயத்திலே இருக்கும் போது குங்கும பூவை பாலிலே கலக்கி சாப்பிட்டேன்.பத்து கிலே சாப்பிட்டேன்."
"அப்புறம் எம்மா, நான் இவ்வளவு அட்டு கருப்பு?"
"குங்கும பூ சாப்பிட்டதாலே தான்ட்டா இவ்வளவு கருப்பு, இல்லையனா உன் நிறம் எப்படி இருக்கும்முனு எனக்கே தெரியாது."
அன்றையிலே இருந்து எனக்கு ஜோசியத்திலே ஆர்வம் வந்தது.நான் பதினொன்னாம் வகுப்பு படிக்கும் போது நானும் அடம் பிடிச்சி அம்மாவோட ஜோசியம் பார்க்க போனேன், எனக்கு ஜோசியம் பார்த்திட்டு உங்க புள்ள கன்னிராசிகாரன் இன்னும் ரெண்டு வருசத்திலே அவனை சுத்தி ஈ மொய்க்கிற மாதிரி எல்லா கன்னி பெண்களும் சுத்தி வருவாங்க.
அதற்கு அப்புறமா எடுக்கணுமுன்னு நினைச்ச துண்டை எல்லாம் மூட்டை கட்டி ஓரமா வச்சிட்டு, ரெண்டு வருஷம் அமைதியாகிட்டேன், இந்த இடைப்பட்ட காலத்திலேயே ௬ட படிக்கிற புள்ளைங்க ௬ட பேசுவதையே விட்டேன், நான் பாட்டுக்கு பேசி என் அழகிலே மயங்கி எனக்கு துண்டு போட்டுட்டா ஜோசியகாரர் சொன்ன ஈ மொய்க்கிற ௬ட்டதிற்கு வழி இல்லாம போயிடுமேன்னு
ரெண்டு வருஷம் ஓடி ஒரு வழியா கல்லூரிக்கு வந்தேன்.என்னைய சுத்தி ஈ மொய்க்குமுன்னு பார்த்தா, நான் ஈ யா எல்லோருடைய பின்னாலையும் சுத்தி கிட்டு இருந்தேன்.ஜோசியரு சொன்ன ரெண்டு வருஷ கெடு முடிஞ்சதாலே நான் யாரையும் ஒதுக்கி வைக்கலை, அவங்களா என்னை ஒதுக்கு வச்சிட்டாங்க.
ஜோசியத்தின் பெருமையும் ஈ மொய்க்கிறதையும் நண்பர்களிடம் சொன்னேன் எல்லோரும் தெரிச்சி ஓடிட்டாங்க, மருந்து வாங்கி கொடுத்து சொன்னேன் மட்டையாகிட்டாங்க.எடுத்த துண்டை எடுக்கவும் ஆள் இல்லை, இறக்கி வைக்கவும் முடியலை.ஜோசியத்துக்கு நல்லாவே சொம்பு அடிக்கிறேன்னு என்னைய பார்த்தா சொம்பு தண்ணிய எடுத்துகிட்டு வந்துவிடுவார்கள், இப்படி ஒரு இக்கட்டனானா நிலையிலே எனக்கு ஒரு அழைப்பு வந்தது எதிபாராத இடத்திலே இருந்து,ஆனந்தமா அழைப்பை சந்திக்க போய்கொண்டு இருந்த என்னைப் பார்த்து நண்பன்
"ஜோசிய சொம்பு இங்கே வா" நானும் போனேன்
"உன் கையை பார்த்து உன்னோட எதிர் காலத்தை கணிச்சி சொல்லுறவரு, அவரு கைய ஒரு தடவை பார்த்து கணிச்சி இருந்தா, அவரு ஏன்டா குளத்து மேட்டிலும், மரத்தடியிலும் குடிசையைப் போட்டு உட்கார்ந்து இருக்கணும், அவரு அவ்வளவு பொதுநலவாதியா இருந்த இன்றைக்கு ரூபா நோட்டுல நீ காந்திய பார்க்க முடியாது, சோசியக்காரங்க தான் இருப்பாங்க.உனக்கு இந்த வயசிலே துண்டை எடுத்திகிட்டு பெண்கள் எல்லாம் வருவாங்கன்னு சொன்னவரு, அவரு உன் வயசிலே என்ன பண்ணாரு, உன் கன்னிராசிக்கு கன்னிகள் எல்லாம் காத்து கிடப்பாங்கன்னு சொன்னவருக்கு என்ன கவுந்த ராசியா?"
"தெரியலையே மச்சான்"
"ஜோசியரு சொன்னாருன்னு தானா வந்த துண்டை எல்லாம் தள்ளி விட்டுட்டு, இப்ப துண்டை எடுத்துகிட்டு மாநிறம் பின்னால தெருநாயா அலையுற"
"என்ன மாப்ள சரக்கு அடிச்ச?, நீ எதிர் சொம்பு அடிக்கிற"
"உன்னையை சொம்பு வச்சே அடிப்பேன்"
"விவரம் தெரியாம பேசுற என்னைய யாரு ௬ப்பிட்டு இருக்கா தெரியுமா, நம்ம வகுப்பழகிடா? ஜோசியம் சும்மா இல்லைன்னு நிருபிக்கத்தான் இது நடக்குது, இப்ப பாரு தனியா போயிட்டு துணையோட வாரேன்."
அதை சொல்லிட்டு வேகமா ஓடிட்டேன் வகுப்பழகியை பார்க்க,அவளைப் பார்த்தும் கன்னிராசி ஞாபகம் வந்ததாலே நான் கால் விரலை வைத்து கோலம் போட ஆரம்பித்தேன்.என்னோட வெட்கத்தைப் பார்த்து அவளோட வெட்கம் ரெக்கை முளைச்சி பறந்து போச்சி
"ரெம்ப நாளா உங்க கிட்ட சொல்லமுன்னு நினைச்சிகிட்டு இருந்தேன், சந்தர்ப்பமே கிடைக்கலை"
"சொல்ல வந்ததை ௬சாம சொல்லு"
"ஒண்ணும் இல்லை, எனக்கு ரெண்டு சுசியம் வாங்கிட்டு வர முடியுமா?"
"இவ்வளவு தானா, உனக்காக சொர்கத்தையே விலைக்கு வாங்கிட்டு வருவேன்"ன்னு சொல்லிட்டு திரும்பின நான் கால் தவறி விழுந்திட்டேன்.
"பார்த்து அண்ணா"
இந்த வார்த்தையை கேட்டதும், "எதையும் தாங்கும் இதயம் வேண்டும்" அண்ணா சொன்ன வசனம் ஞாபகம் வந்தது, என் இதயம் அந்த சொல்லை தாங்குற அளவுக்கு கல்லா இருந்ததாலே தப்பிச்சேன்.
"உங்க மாப்பிளைக்கு கொடுக்கணும் அண்ணா, நல்ல கடையிலே வாங்கிட்டு வாங்க"
"என்னது என் மாப்பிள்ளையா?"
"ஆமா, நீங்க எனக்கு அண்ணன்னா, அவரு உங்க மாப்பிளைதானே?"
ஜோசியம் என்னை சுசியத்திலே கொண்டு வந்து விட்டதேன்னு நினைச்சாலும், வேற ஒரு நல்ல ஜோசியரை பார்க்கன்னு நினைச்சிகிட்டு சுசியம் வாங்க போனேன்.
41 கருத்துக்கள்:
//வெள்ளரி பிஞ்சி போல இருந்த மனசிலே மிளகாய் பொடியை அள்ளிப் போட்டுட்டா//
நல்லதுதானே, நல்ல காம்பினேஷன்...
//"குங்கும பூ சாப்பிட்டதாலே தான்ட்டா இவ்வளவு கருப்பு, இல்லையனா உன் நிறம் எப்படி இருக்கும்முனு எனக்கே தெரியாது."
//
நல்ல விளக்கம்தான்...
//வேற ஒரு நல்ல ஜோசியரை பார்க்கன்னு நினைச்சிகிட்டு சுசியம் வாங்க போனேன்//
சுசியம்னா என்னங்க? கேள்விப்பட்டதில்ல!
மெலிதாய், அதிர்வாய், அதிவெடியாய் காமெடிகளை இடுகை முழுதும் தூவியிருக்கிறீர்கள்... மிக அருமை.
பிரபாகர்.
வடக்கத்திப் பொண்ணுங்க கைலே ராக்கியைக் கட்டி அண்ணான்னு சொல்லி அலறவைக்கும் ...நம்ம ஊர் ஸ்டைல் ,சுசியம் வாங்கிட்டு வரச்சொல்லி அழவைப்பார்களோ.
//"குங்கும பூ சாப்பிட்டதாலே தான்ட்டா இவ்வளவு கருப்பு, இல்லையனா உன் நிறம் எப்படி இருக்கும்முனு எனக்கே தெரியாது."
//
வருத்தத்தையும் வேடிக்கையாக்கி விழுங்கியிருக்கிறீர்கள்
10 குங்குமப்பூ சாப்பிட்டே இப்பிடினா....நல்ல வேளை தப்பிச்சீங்க.அம்மாவுக்கு நன்றி சொல்லுங்க.இல்லாட்டி நாலு பக்கமும் டியூப் லைட் போட்டுத்தான் உங்களை தேடிப்பிடிக்க வேண்டியிருந்திருக்கும்.
ஆனாலும் கருப்பழகனோ !
நசர்,ஈ உங்களை சுத்தணும்னா உடம்பில கொஞ்சம் தேன் தடவிக்கிட்டு இருந்திருக்கலாமே !
எப்படிங்க "பல்பு" (சுசியம்) வாங்கினதை கூட இப்படி சிரிக்கிற மாதிரி சொல்ல முடியுது? நல்லா எழுதுறீங்க.
எப்படிங்க "பல்பு" (சுசியம்) வாங்கினதை கூட இப்படி சிரிக்கிற மாதிரி சொல்ல முடியுது? நல்லா எழுதுறீங்க.
அப்ப இலக்கியவாதிகளுக்குள்ள நடந்த சண்டை முடிஞ்ச்சுபோச்சா!!! என்னமோ போங்க. இவ்வளவு சீக்கிரம் முடியும்னு நான் நினைக்கவேயில்லை. :)
எத்தனை, கருப்பு, துண்டு இந்தப்பதிவில் உள்ளது கண்டுபிடிப்பவர்களுக்கு பின்நவீனத்துவ பின்னூட்டம் இலவசம்.
//அவனை சுத்தி ஈ மொய்க்கிற மாதிரி எல்லா கன்னி பெண்களும் சுத்தி வருவாங்க. //
ஹய்யோ..ஹய்யோ...
//நான் பாட்டுக்கு பேசி என் அழகிலே மயங்கி எனக்கு துண்டு போட்டுட்டா//
ஓ.. இதான் அழகுல மயங்குறதா?
//என்னோட வெட்கத்தைப் பார்த்து அவளோட வெட்கம் ரெக்கை முளைச்சி பறந்து போச்சி//
ரெக்கை இருக்கோண்ணோ,அதான் பறந்துடுத்து.
//அவரு கைய ஒரு தடவை பார்த்து கணிச்சி இருந்தா, அவரு ஏன்டா குளத்து மேட்டிலும், மரத்தடியிலும் குடிசையைப் போட்டு உட்கார்ந்து இருக்கணும்/
மெஸ்ஸேஜ். அண்ணே, நீ ரொம்ப தைரியசாலிதான் கருத்தும் சொல்லுறதுனால கந்தசாமிண்ணே.
:-))
ஐயா! ராசா - நீங்க மென்பொருள் எழுத்தாலர் தானே
அல்லது நவீன என்.எஸ் கிருஷ்னனா
காமெடி கலந்து மெஸேஜ் - சூப்பர் சூப்பர்.
உங்க கான்ஃபிடன்ஸ் தாண்ணே உங்கள்ட்ட நெம்ப பிடிச்சது ...
உங்க பதிவுகள் நல்ல நோய் நிவாரணி அல்லது வரும் முன் காப்போம்.
சிரிச்சி சிரிச்சி ...
தளபதி செம்ம காமடி. சிரிச்சி சிரிச்சி வயிறு புண்ணாகிடுச்சி.
இதுலயும் சில பொறாம புடிச்சவங்க எத்தன கருப்பு எத்தன துண்டுன்னு போட்டி வக்கிறாங்க பாருங்க ;-)
நல்ல நகைச்சுவை நடை பாஸ்.
காலையில சிரிக்கவைச்சதுக்கு நன்றி :)
இப்போ புதுசா லிப்பாலாஜின்னு ஒண்ணு வந்துருக்காம், ட்ரை பண்ணி பாருங்களேன்!
நடுநடுவே கருத்துக்கள் வேறு. குடுகுடுன்னு ஒருத்தர் போட்டி வேற அறிவிச்சிருக்கார். :))
பாத்து எலக்கிய வியாதியாகி எளச்சுட போறீங்க..
:))
///பன்னிகுட்டியா இருந்து எருமைமாடா ஆகும் போது///
பரிணாம வளர்ச்சியை இதைவிடத் தெளிவா யாராலும் விளக்கவே முடியாதுங்க. :))
/என் வாழ்க்கையிலே கருப்பு தினம் அன்றைக்கு/
என்றைக்குமே தானே.
எனக்கென்னமோ துண்டு போடும்போது கூட ஸ்பெல்லிங் மிஸ்டேக் வந்துதான் எல்லா கிளியும் ஓரம் கட்டிடிச்சின்னு தோணுது.
கிளிக்கு மொழி முக்கியம் அண்ணாச்சி:))
முகிலன் said...
// தளபதி செம்ம காமடி. சிரிச்சி சிரிச்சி வயிறு புண்ணாகிடுச்சி.
இதுலயும் சில பொறாம புடிச்சவங்க எத்தன கருப்பு எத்தன துண்டுன்னு போட்டி வக்கிறாங்க பாருங்க ;-)
நல்ல நகைச்சுவை நடை பாஸ்.//
முகிலன் அரசியலுக்கும் துண்டு போட தெரியணுமே. தளபதின்னு பேரு மட்டும் இருந்தா அரசியல் வ்யாதி ஆக முடியுமா? :))
//குங்கும பூ சாப்பிட்டதாலே தான்ட்டா இவ்வளவு கருப்பு, இல்லையனா உன் நிறம் எப்படி இருக்கும்முனு எனக்கே தெரியாது.//
:-))))))))
ஜோதிடம் என்பது ஆன்மீக பயணத்தின் முதல் படி. கர்த்தருக்கு பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம். கிரகங்களும் கர்த்தாவின் படைப்புகளே.
உங்களுக்கு உண்மையிலேயே உங்கள் எதிர்காலத்தை தெரிந்து கொள்ள விருப்பமிருந்தால் உங்கள் பிறந்த தேதி இத்யாதி எனக்கு மெயில் செய்யவும் . முற்றிலும் இலவசமாக நாலு விசயம் சொல்கிறேன்
காதல் கரெக்ட் காதலர்கள் தான் தப்பு பண்றாங்க
ஜோசியம் கரெக்டு. ஜோசியர்கள் தான் தப்பு பண்றாங்க
ஜோசியர்கள் பண்ண தப்புக்கு ஜோசியத்தையே வாரினா எப்டி தலைவா?
:)))))))))))))))))))))
அது இன்னாது சுசியம்??
/
"குங்கும பூ சாப்பிட்டதாலே தான்ட்டா இவ்வளவு கருப்பு, இல்லையனா உன் நிறம் எப்படி இருக்கும்முனு எனக்கே தெரியாது."/
அவ்வ்வ்! இன்னும் அடங்கலியா நீங்க..வருங்கால முதல்வர் உடனே மேடைக்கு வரவும்! :-)))
தல பின்னுறிங்க..சூப்பர்..:)
எப்பவும் போல் கலக்கல் நடை
ரொம்ப சூப்பர் , நல்ல நகைச்சுவை
//இந்த வார்த்தையை கேட்டதும், "எதையும் தாங்கும் இதயம் வேண்டும்" அண்ணா சொன்ன வசனம் ஞாபகம் வந்தது,//
அண்ணனுக்கு அண்ணாவின் வார்த்தை உதவியிருக்கிறது....ஹா ஹா ஹா
நல்லாயிருந்தது, எழுத்து நடையைச் சொன்னேங்க:))!
//சித்தூர்.எஸ்.முருகேசன் has left a new comment on your post "ஜோசியமும், சுசியமும்":
ஜோதிடம் என்பது ஆன்மீக பயணத்தின் முதல் படி. கர்த்தருக்கு பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம். கிரகங்களும் கர்த்தாவின் படைப்புகளே.
உங்களுக்கு உண்மையிலேயே உங்கள் எதிர்காலத்தை தெரிந்து கொள்ள விருப்பமிருந்தால் உங்கள் பிறந்த தேதி இத்யாதி எனக்கு மெயில் செய்யவும் . முற்றிலும் இலவசமாக நாலு விசயம் சொல்கிறேன்
காதல் கரெக்ட் காதலர்கள் தான் தப்பு பண்றாங்க
ஜோசியம் கரெக்டு. ஜோசியர்கள் தான் தப்பு பண்றாங்க
ஜோசியர்கள் பண்ண தப்புக்கு ஜோசியத்தையே வாரினா எப்டி தலைவா?
//
உங்க தகவலுக்கு நன்றி சித்தூர்.எஸ்.முருகேசன் அண்ணே..தேவைப் படும் போது கண்டிப்பா தொடர்பு கொள்கிறேன்
//உண்மையிலேயே உங்கள் எதிர்காலத்தை தெரிந்து கொள்ள விருப்பமிருந்தால் உங்கள் பிறந்த தேதி இத்யாதி எனக்கு மெயில் செய்யவும் . முற்றிலும் இலவசமாக நாலு விசயம் சொல்கிறேன்//
என் எதிர் வீட்டில் சரியாக மாலை நான்கு மணீக்கு ஒரு பூனை நான்கு குட்டிகள் போட்டது!? அதனுடய எதிர்காலம் பற்றி நான்கு வரிகள் சொல்ல முடியுமா?
அதில் யாருக்காவது வெளிநாடு செல்லும் யோகமுண்டா?, எந்த ஊர் பெண் அமையும், அரசியல் எதிர்காலம் உண்டா?
//நான் கால் விரலை வைத்து கோலம் போட ஆரம்பித்தேன்.//
என்னாச்சு!!, வீட்டுல கோலமாவு தீர்ந்து
போச்சா...
//இன்னும் ரெண்டு வருசத்திலே அவனை சுத்தி ஈ மொய்க்கிற மாதிரி எல்லா கன்னி பெண்களும் சுத்தி வருவாங்க.//
பின்னாடி மியூசிகோட ஒரு டூயட் பாட்டு ஒன்னு ஓடியிருக்குமே?
//ரெண்டு வருஷம் அமைதியாகிட்டேன்//
இது ஒரு சாக்கா
//அவரு கைய ஒரு தடவை பார்த்து கணிச்சி இருந்தா, அவரு ஏன்டா குளத்து மேட்டிலும், மரத்தடியிலும் குடிசையைப் போட்டு உட்கார்ந்து இருக்கணும்//
முற்றிலும் உண்மை
//"பார்த்து அண்ணா"//
சே..கதை இப்படியா டிவிஸ்ட் ஆவணும்.
இந்த வார்த்தையை கேட்டதும், "எதையும் தாங்கும் இதயம் வேண்டும்" அண்ணா சொன்ன வசனம் ஞாபகம் வந்தது, என் இதயம் அந்த சொல்லை தாங்குற அளவுக்கு கல்லா இருந்ததாலே தப்பிச்சேன்.//
தப்பிச்சிட்டீங்களா!!வாங்க நம்ம எல்லாம் ஒரே குரூப்புதான்!
//ஜோசியம் என்னை சுசியத்திலே கொண்டு வந்து விட்டதேன்னு நினைச்சாலும், வேற ஒரு நல்ல ஜோசியரை பார்க்கன்னு நினைச்சிகிட்டு சுசியம் வாங்க போனேன். //
எதுக்கு சுசியம் வாங்கி குடுக்குறது சந்தில சிந்துபாடவாவே!!!!!! எங்களுக்கு தெரியும்வே நீறு பிஞ்சிலே பழுத்த ஆளுன்னு....ரெண்டாம் வகுப்பிலேயே டீசெருக்கு டிக்கெட் போட்ட ஆளாச்சே நீறு சும்மாவா...
//"உன் கையை பார்த்து உன்னோட எதிர் காலத்தை கணிச்சி சொல்லுறவரு, அவரு கைய ஒரு தடவை பார்த்து கணிச்சி இருந்தா, அவரு ஏன்டா குளத்து மேட்டிலும், மரத்தடியிலும் குடிசையைப் போட்டு உட்கார்ந்து இருக்கணும், அவரு அவ்வளவு பொதுநலவாதியா இருந்த இன்றைக்கு ரூபா நோட்டுல நீ காந்திய பார்க்க முடியாது, சோசியக்காரங்க தான் இருப்பாங்க.உனக்கு இந்த வயசிலே துண்டை எடுத்திகிட்டு பெண்கள் எல்லாம் வருவாங்கன்னு சொன்னவரு, அவரு உன் வயசிலே என்ன பண்ணாரு, உன் கன்னிராசிக்கு கன்னிகள் எல்லாம் காத்து கிடப்பாங்கன்னு சொன்னவருக்கு என்ன கவுந்த ராசியா?"//
நெத்தியடி தல.....அமைதிப்படை சத்யராஜ் ஸ்டைல்ல...... I LIKE IT.......
//"ஜோசியக்காரன் நீ ரெம்ப கருப்பா இருப்பன்னு சொன்னான், அதனாலே நீ வயத்திலே இருக்கும் போது குங்கும பூவை பாலிலே கலக்கி சாப்பிட்டேன்.பத்து கிலே சாப்பிட்டேன்." //
அட பாவிங்களா அதான் எங்க அம்மாவுக்கு குங்கும பூ கெடைக்கல நான் வைத்துல இருக்கும்போது .... இல்லன்னா நானும் "சிவாஜி படம்" வெள்ளை ரஜினி மாதிரி ரொம்ப கலரா பொறந்திருப்பேன்..... என் பொளப்புல மண்ணள்ளி போட்டுடிங்களேப்பா.....
//குடுகுடுப்பை said...
எத்தனை, கருப்பு, துண்டு இந்தப்பதிவில் உள்ளது கண்டுபிடிப்பவர்களுக்கு பின்நவீனத்துவ பின்னூட்டம் இலவசம்.//
இல்ல இல்ல குடுகுடுப்பை அண்ணாச்சி... சரியாய் சொன்னா ஒரு சுசியம் (ஊசிப்போன சுசியம்) என் சொந்த செலவுல
போஸ்ட்ல அனுப்பி வைக்கப்படும்....... சுசியம்னா என்னன்னு தெரியாதவங்க உடனடியாக கண்டுபிடித்து எழுதவும்.....
ஐயா நீறு நக்கல் பண்ணுறதுல நீர் ஒரு கவுண்டமணி
மெஸ்ஸேஜ் சொல்லுறதுல நீர் ஒரு கருப்பண்ணசாமி
//எனக்கு ஜோசியம் பார்த்திட்டு உங்க புள்ள கன்னிராசிகாரன் இன்னும் ரெண்டு வருசத்திலே அவனை சுத்தி ஈ மொய்க்கிற மாதிரி எல்லா கன்னி பெண்களும் சுத்தி வருவாங்க.//
என்ன ஜோசியக்காரன் பொண்ணுக்கு துண்டு போட்டீரா..... அது தெரிஞ்சி ஜோசியக்காரன் ஐடியாவா உம்ம கலட்டி விட்டுட்டாரே தல....அது தெரியாம நீரும் சொரிநாயா ரோடுரோடா அளஞ்சிருக்கீரே துண்டு போட....
சரி அத விடும் ஜோசியக்காரன் பொண்ணு எப்படி???????
அட என்ன மச்சான் நீங்க! எல்லாம் சொல்லிட்டு கடைசிவரை உங்க தங்கச்சி வாங்கிவர சொன்ன "சுசியம்"-ன்னா என்னான்னு சொல்லவே இல்லை :-)
"ஆமா, நீங்க அவளுக்கு அண்ணன்னா, எனக்கு நீங்க கலைஞர்...ஓ சாரி.., மச்சான் தானே?"
கலக்கல் இடுகை :-)
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
Post a Comment