Wednesday, January 13, 2010

பிரித்தலும் கோர்த்தலும் -குடுகுடுப்பைக்கு போட்டியாக

தள தளன்னு வேண்டுமாம் பொண்ணு
சொல்கிறாள் அம்மா.
வயிறு வரை நீள வேண்டாம் வாய்
காதுவரை போதும்  என்கிறான் இவன்
மூணு மாசம்தான் அப்புறம் கால்கட்டு போடலாம்
இம்முறையும் அம்மாதான்.
வாசலில் யாரிடமோ கையாட்டியபடி
பேசி சிரித்துக்கொண்டிருக்கும்
அவளை பார்க்கிறேன்
மணிக்கட்டில் பளபளத்தது புதுச்சங்கிலி.
இனிமே வேட்டி சட்டைதானே, அண்ணி
திசைதிருப்பியது மூத்த நாத்தனாரின் குரல்.
நாட்டாமை வளையல் போடாம இருக்கக்கூடாது
மாமனாரின்  கவலை கையொடித்தது.
தாலி கட்டியவனை அலுவலகம் அனுப்பி
எனை நையப்புடைத்த 
நல்லதொருநாளில்
பிரித்துக் கோர்க்கப்பட்டது புத்தூர் கட்டு
சொம்புடன்
வைபவத்திற்கு வந்தவர்களை
வழியனுப்பித் திரும்புகையில்
அவளது
கண்களின் திசை அறிந்து மௌனமாய்
கேட்டுக்கொள்கிறேன்
அவளது பார்வையை பிரித்துக் கோர்ப்பது
யார்?? 
*******************************************************************************

அசல் இங்கே


17 கருத்துக்கள்:

Chitra said...

அவளது
கண்களின் திசை அறிந்து மௌனமாய்
கேட்டுக்கொள்கிறேன்
அவளது பார்வையை பிரித்துக் கோர்ப்பது
யார்?? ...............கலக்குங்க.

Anonymous said...

எதிர்கவுஜ நம்பர் 1.
அடுத்தது யாரு

Mahesh said...

கிழிஞ்சது கிருஷ்ணகிரி...

நட்புடன் ஜமால் said...

இதுவும் துவங்கியாச்சா ;)

சந்தனமுல்லை said...

அவ்வ்வ்வ்....என்னா வில்லத்தனம்!! :-))

பிரபாகர் said...

//வழியனுப்பித் திரும்புகையில்
அவளது
கண்களின் திசை அறிந்து மௌனமாய்
கேட்டுக்கொள்கிறேன்
அவளது பார்வையை பிரித்துக் கோர்ப்பது
யார்?? //

நல்ல கேள்வி. ரொம்ப நல்லா இருக்குங்க!

பிரபாகர்.

Unknown said...

குடுகுடுப்பை ரேஞ்சுக்கு இல்லைன்னாலும் ஃபர்ஸ்ட் டைமுக்கு ஓக்கே.. :)))

goma said...

கலக்கோ கலக்கல்

குடுகுடுப்பை said...

அய்யா இலக்கிய வியாதி எனக்கு நீயெல்லாம் போட்டியா? நாலு வரி எழுதினா கவுஜ ஆயிடுமா?

என்னத்த சொல்றது.. வயிறு எரியுது எதிர்கவுஜ போடறதயே வாழ்க்கையா வாழும் நான் சில கத்துக்குட்டிகளுடனும் மோதவேண்டிய சூழ்நிலை.

vasu balaji said...

குடுகுடுப்பை said...

அய்யா இலக்கிய வியாதி எனக்கு நீயெல்லாம் போட்டியா? நாலு வரி எழுதினா கவுஜ ஆயிடுமா?

என்னத்த சொல்றது.. வயிறு எரியுது எதிர்கவுஜ போடறதயே வாழ்க்கையா வாழும் நான் சில கத்துக்குட்டிகளுடனும் மோதவேண்டிய சூழ்நிலை.//

அதான:)). எனக்கென்னமோ ஒரு பிழை கூட இல்லாம இருக்கறதால ப்ராக்சி கவுஜயோன்னு தோணுது. ஜக்கம்மாவ கேளுங்க பாஸ்

Unknown said...

ப்ளாக் ரோலுக்கு மேல் “மொக்க போடுற ஆளுங்க” என்று இருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

“மொக்க மட்டுமே போடுற ஆளுங்க” என்று மாற்றவேண்டும் என எச்சரிக்கை விடுக்கிறேன்.

ராஜ நடராஜன் said...

மாறுதலா ஒரு நாள் பொங்கல் சாப்பிட்டாத்தான் சுவையா இருக்குது:)

Jerry Eshananda said...

லாவகமான வார்த்தைகள்,வாசிப்பை இலகுவாக்குகிறது.தமிழர் திருநாள் வாழ்த்து..

ஹேமா said...

அட....இது வேற நடக்குதா !சரிதான் !

Unknown said...

இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்..

பா.ராஜாராம் said...

:-)))

இனிய பொங்கள் வாழ்த்துக்கள்!

வில்லன் said...

கவுஜ எழுதுறாங்களாம் கவுஜ.......... நசறேயனுக்கு கள்ள காதல் அது இதுன்னு பொண்ணுங்கள வாருரத விட்டா வேற மொக்க இல்ல கவுஜ எழுத தெரியாது..... அண்ணாச்சி குடுகுடுப்பை ஒரு சோத்துமாடு....சோத்த தவிர வேற எண்ணத்தையும் பத்தி எழுதவே மாட்டாரு....என்னமோ போங்க...எதாவது வித்தியாசமா பண்ணுங்கப்பா தமிழ் புதாண்டுலயாவது ....