Thursday, January 14, 2010

அவமானம்

அவனுக்கு அவமானம், அவளுக்கு அவமானம், தெருவுக்கு அவமானம், வீட்டுக்கு அவமானம், நாட்டுக்கு அவமானம் இப்படி கேள்வி பட்டு இருக்கிறோம்.
என்னை போன்ற நல்ல உள்ளம் படைத்த, பால் போல,பனி போல வெண்மையான் மனசு, தெளிந்த நீரோடை தெரியுற கண்ணாடி முகம் மாதிரி கரை இல்லா கை இப்படி எந்த வகைகளுக்குமே தகுதில்லாத கட்டைக்கு(கருப்பு போடலை) ஏற்பட்ட
அவமானங்களை என்னனு சொல்ல, இதை எல்லாம் சொல்லாம விட்டுட்டா வரலாறு மன்னிக்காது இந்த மொக்கை எழுத்தாளனை,இங்கே சுத்துற கொசுவத்தி எங்க போய் முடியுமுன்னு தெரியலை, ஆனா கண்டிப்பா முடியும்.


பல வருடங்களுக்கு முன் :

அவன் காலை கழுவி குடி, அவனும் நீ திங்க சோத்தை தான் திங்கான், ஆனா அவன் வகுப்பிலே முதல் ரேங்க், நீயும் இருக்கியே எருமை மாடு மாதிரி அப்படின்னு எல்லோருக்கும் முன்னாலேயும் பாலர் பள்ளியிலே படிக்கும்(?) சொன்னதாலே அவமானம்.


எங்க அப்பா ராணுவவீரர் என்பதாலே கொஞ்ச நாள் கோல்கொண்டாவிலே இருந்தேன், அன்றைய ஆந்திரா, இன்றைக்கு ராயல் சீமாவா, தெலுங்கானாவான்னு தெரியலை, கொஞ்ச நாள் கழிச்சி ஊருக்கு வந்த உடனே எங்க பள்ளியிலே ஒன், டூ, த்ரீ தெரிஞ்ச ஒரே ஆள் என்று பெயர் எடுத்தவன், வர வர மாமனார் செம்மரியாடு போல மாதிரி 10 ம் வகுப்பிலே 40/100 ம், 12 ம் வகுப்பிலே 75/200 ம் எடுத்ததை பார்த்து ஆங்கில புலிக்கு ஆப்பு வச்சிட்டாங்களேன்னு சொன்னதை கேட்டு ஏற்பட்ட அவமானம்.

கல்லூரியிலே, ௬ட படிக்கிற எல்லோரும் முரட்டு காதல் பண்ணுகிட்டு இருக்கும் போது நானும் முண்டு கொடுத்து துண்டு,போர்வை எல்லாம் எடுத்துகிட்டு அலையும் போது கண்டுக்க ஆள் இல்லாத போது ஏற்பட்ட அவமானம், ஊருக்கு பக்கம் வரும் போது அத்தை மகள் கிட்ட என்னைய பிடிச்சி இருக்கான்னு கேட்ட உடனே என்கிட்டே பேசுறதையே நிப்பாட்டுன அவமானம்.

கல்லூரி முடிச்சி ரெண்டு வருமா எங்க ஊரையும் சென்னையையும் கோயில் மாடு மாதிரி சுத்தி கிட்டு இருந்த எனக்கு அத்தி பூத்த மாதிரி வந்த ஒரு
நேர்முகத்தேர்விலே தொழில் நுட்பத் தேர்விலே வெற்றி அடைத்தாலும், என்னைய கேள்வி கேட்டவங்க இவனை இங்கிலீஷ்ல அரை நிமிஷம் பேசச் சொல்லுங்கன்னு மனித வள மேம்பாட்டு துறையிலே இருந்த அர கை சட்டை போட்ட ஆங்கிலோ பாட்டிகிட்ட போட்டு கொடுத்து, அந்த பாட்டி என்கிட்டே ரெண்டு கேள்வி கேட்க, என்ன கேள்வி கேட்டாங்கன்னு புரியலை, அதை வெளிகாட்டாம பலமா மூளையை கசக்கி பிழிஞ்சி யோசித்து கிட்டு இருக்கிற மாதிரி நடிச்சிக்கிட்டு இருக்கும் போது, நாங்க அமெரிக்காவுக்கு ஆணி பிடுங்க ஆள் எடுக்கிறோம், அதனாலே இடிச்ச புளியா இருக்கிற நீ இங்கிலிசு புலியா மாறிட்டு  ஒரு மாசத்திலே வந்து பாருன்னு சொல்லும் போது ஏற்பட்ட அவமானம்.ஒரு மாசம் கழித்து போனா திண்ணையிலே இருந்தவன் தெருவுக்கு வந்த கதையா நிறுவன கடையை காலி பண்ணிட்டு ஓடிப்போனதை கேள்வி பட்டு ஏற்பட்ட அவமானம்.

கல்யாணத்துக்கு எனக்கு பெண் பார்க்க ஆரம்பித்ததும் கல்யாண வயசு பெண்களை எல்லாம் எங்கள் ஊரிலே வீட்டிலே பூட்டி வச்சதிலே அவமானம்.என்னைப்பற்றி சரியா விசாரிக்காமல் எனக்கு பெண் கொடுத்தவர்,என்னைய பார்த்து ஒரு பச்ச புள்ளை வாழ்க்கைய பாழாக்கிட்டேனே என்று சொல்லும் போது ஏற்பட்ட அவமானம், கல்யாணத்திற்கு ஆறுமாசம் கழிச்சி அவரு பச்ச புள்ளைன்னு என்னையைத்தான் சொல்லி இருக்காருன்னு தெரிந்த உடனே ஏற்பட்ட அவமானம்.


மொக்கை எழுத்தாளனோட எழுத்து பிழைகளை சுட்டி காட்டி வரும் பின்னூட்டங்களை படித்து அவமானம்,குடுகுடுப்பை பாணியிலே சொன்னா கல்யாணம் ஆனா காலத்திலேயே இருந்து என்னோட இருக்கும் டமில் பேசும் பெண் இதையெல்லாம் பார்த்து விட்டு இன்னும் அவமானம் பத்தலை ன்னு சொல்லும்போதும் ஏற்பட்ட அவமானம்,அதனாலே இனிமேல பிழை விட்டா எழுதலை.. எழுதலை..எழுதலை..(மூணு தடவை சொல்லி இருக்கேன் பிழை இல்லாம).

இன்னும் இது போல நிறைய இருந்தாலும் பதிவுலக நல்ல உள்ளங்களை மனதிலே கொண்டு இத்தோட நிப்பாட்டிகிறேன்.

இப்படிஅவமானத்துக்கு அவமானம் ஏற்படுற அளவுல அவமான அணுகுண்டுகள் பட்டும் இந்த கட்டை கரி கட்டையா இன்னும் உலா வருதுனா, அதுக்கு என்ன காரணம், வாழ்க்கை ஒரு வட்டம், ஆரம்பிச்ச இடத்துக்கே வருவோமுனா, இல்லை, நம்பிக்கை அதாவது தன்னை நம்புற நம்பிக்கை,அந்த நம்பிக்கை இருந்தா குவாட்டர் இல்லாம கும்மி அடிக்கலாம்.

முட்டிலே பசி இருகிறவன் தானே அவமானத்தை பத்தி கவலைப் படனும், வயத்திலே பசி இருக்கிறவன் அடுத்த வேளை சாப்பாட்டு கிடைக்க வழி செய்ய வேண்டாமா?


28 கருத்துக்கள்:

Chitra said...

இந்த பதிவு நல்லா இல்லைன்னு சொன்னா, எங்களுக்கு அவமானம். சூப்பரா இருக்கு!

நட்புடன் ஜமால் said...

கல்யாணத்திற்கு ஆறுமாசம் கழிச்சி அவரு பச்ச புள்ளைன்னு என்னையைத்தான் சொல்லி இருக்காருன்னு தெரிந்த உடனே ஏற்பட்ட அவமானம்.]]


ஹா ஹா ஹா

வீட்ல படிக்க மாட்டங்கன்ற தகிரியமா

T.V.Radhakrishnan said...

:-)))

Anonymous said...

//அவரு பச்ச புள்ளைன்னு என்னையைத்தான் சொல்லி இருக்காருன்னு தெரிந்த உடனே ஏற்பட்ட அவமானம்.//

சிரிச்சு சிரிச்சு :)


//மொக்கை எழுத்தாளனோட எழுத்து பிழைகளை சுட்டி காட்டி வரும் பின்னூட்டங்களை படித்து அவமானம்,//

இந்த பதிவுலயும் எழுத்துப்பிழை இருக்கு. பச்சப்புள்ளை பொழைச்சு போவட்டும் :)

ச்சின்னப் பையன் said...

:-))))

amaithicchaaral said...

//வாழ்க்கை ஒரு வட்டம், ஆரம்பிச்ச இடத்துக்கே வருவோமு//

பிழை இல்லாம எழுதறதை இந்த ஒரு பதிவோட நிப்பாட்டிக்கபோறீங்களா.!!!.

பிரபாகர் said...

பாஸ்...

இதெல்லாம் சகஜம்... ஜுஜுபி... நமக்கும் நடந்தது, நடக்கிறது, நடக்கப்போறது தான்...

நம்மை கூர்மைப் படுத்திக்க யூஸ் பண்ணிக்க வேண்டியது தான்...

ரொம்ப நல்லா இருக்கு.

பிரபாகர்.

முகிலன் said...

இப்பிடி ஒரு இடுகையப் போட்டு எங்க எல்லோரையும் நீங்க அவமானப் படுத்தியிருக்க வேண்டாம். :)))

goma said...

நசரேயன்
அத்தனை அவமானங்களையும், அவமானமாகக் கருதாமல் ,
பதிவில் இட்டதில் ,
அத்தனை அவமானங்களும் ,
உங்கள் வெற்றிக்கு,
அடுக்குப் படிகளாயின.
வாழ்த்துக்கள்.

குடுகுடுப்பை said...

அவமானமா இருக்கு, இந்த மாதிரி அவமானமெல்லாம் எனக்கு ஏற்பட்டதில்லையேன்னு

வானம்பாடிகள் said...

இது எண்ட்டர் கட்டுரையா பாஸ்:)).

/ சின்ன அம்மிணி said...
இந்த பதிவுலயும் எழுத்துப்பிழை இருக்கு. பச்சப்புள்ளை பொழைச்சு போவட்டும் :)//

இதையும் சேர்த்துக்கிடுங்க:))

/மாதிரி 10 ம் வகுப்பிலே 40/100 ம், 12 ம் வகுப்பிலே 75/200 ம் எடுத்ததை//

துண்டு போட ஆரம்பிச்ச வரலாறு தெரியுது:))

மொக்கைக்கு சக்கரவர்த்தி நீர்தாம்யா:))

Anonymous said...

பிரிச்சி மேய்ச்சிட்டீங்க

அமிர்தவர்ஷினி அம்மா said...

கல்யாணத்திற்கு ஆறுமாசம் கழிச்சி அவரு பச்ச புள்ளைன்னு என்னையைத்தான் சொல்லி இருக்காருன்னு தெரிந்த உடனே ஏற்பட்ட அவமானம். //

இதுக்கு சந்தோஷம் தானே படனும், ஆனா நீங்க ஏன் ஃபீல் பண்றீங்க :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஓ உங்க மாமனாராவது உங்களை சரியா புரிஞ்சுகிட்டாரே அது வாழ்க்கையின் வெற்றி தானே..இதுபோல அப்பப்ப நிகழ்கிற சின்ன சின்ன சந்தோசத்துல தானே வாழ்க்கை ஓடுது.. be happy :)))

வெ.இராதாகிருஷ்ணன் said...

கடைசி வரிகள் மிகவும் கலக்கலாக இருந்தது.

மிகவும் சுவாரஸ்யமாக சொல்லி இருக்கீங்க.

இத்தனை அவமானங்களும் வெகுமானங்கள் கிடைக்க வழி செய்தது பாராட்டுக்குரியது.

ஹேமா said...

ஹாய் நசர்....என்னாச்சு !
உணர்வுகளின் வெளிப்பாடா.
பொங்கல் சாப்பிட்ட அப்புறம் ஒரு மயக்கமா சின்னத் தூக்கம் வரும்.அப்போ வந்த உண்மைகளா ...இல்ல கற்பனையா.

நீங்க கும்மியடிங்க.
அப்போதான் அது நீங்க !

வில்லன் said...

/அவன் காலை கழுவி குடி, அவனும் நீ திங்க சோத்தை தான் திங்கான், ஆனா அவன் வகுப்பிலே முதல் ரேங்க், நீயும் இருக்கியே எருமை மாடு //

காலை கழுவி குடிச்சா எருமை மாடு முதல் ரேங்க் எடுதுருமா????

வில்லன் said...

////மொக்கை எழுத்தாளனோட எழுத்து பிழைகளை சுட்டி காட்டி வரும் பின்னூட்டங்களை படித்து அவமானம்,//
இது நல்லால்ல!!!!!!!!!!!! எங்க இலக்கியவாதி, "அஞ்சா நெஞ்சன்", நவீன காலத்து "நக்கீரன்", அண்ணன் பழமைபேசியை இப்படி நேரடிய தாக்குறது கொஞ்சம் கூட நல்லா இல்ல.... வன்மையாக கண்டிக்கிறோம்.......... நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே!!!!!!!!!!!!!!!!!!!!!

வில்லன் said...

////மொக்கை எழுத்தாளனோட எழுத்து பிழைகளை சுட்டி காட்டி வரும் பின்னூட்டங்களை படித்து அவமானம்,//
இப்படி அண்ணன் பழமைபேசியை நேரடியா போட்டு தாக்குறது மொக்கை எழுத்தாளர் உமக்கு "அவமானம்".... படித்து பின்னுட்டம் போடுற எங்களுக்கு "அவமானம்"...

வில்லன் said...

//எங்க அப்பா ராணுவவீரர் என்பதாலே கொஞ்ச நாள் கோல்கொண்டாவிலே இருந்தேன், அன்றைய ஆந்திரா, இன்றைக்கு ராயல் சீமாவா, தெலுங்கானாவான்னு தெரியலை//

சொல்லவே இல்லையே தல.... அப்ப தெலுங்கு தெரியுமா????? ஒரு பதிவ தெலுங்குல போடலாம்ல.... இல்ல ஒரு வலை தெலுங்குல ஆரம்பிக்கலாம்ல!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

வில்லன் said...

//வர வர மாமனார் செம்மரியாடு போல மாதிரி //

யோவ் அது "வர வர மாமியா கழுத போல ஆனாளாம்"" யா..... பழமொழிய உம்ம பாட்டுக்கு கவுஜ பண்ணாதீரும்.....

வில்லன் said...

//குடுகுடுப்பை பாணியிலே சொன்னா கல்யாணம் ஆனா காலத்திலேயே இருந்து என்னோட இருக்கும் டமில் பேசும் பெண் இதையெல்லாம் பார்த்து விட்டு இன்னும் அவமானம் பத்தலை ன்னு சொல்லும்போதும் ஏற்பட்ட அவமானம்,அதனாலே இனிமேல பிழை விட்டா எழுதலை.. எழுதலை..எழுதலை..(மூணு தடவை சொல்லி இருக்கேன் பிழை இல்லாம).//

ஹா ஹா ஹா!!!!! கண்டிப்பா "பெரிய அவமானம்"...... ஏன்னா "கல்யாணம் ஆனா காலத்திலேயே " இல்ல "கல்யாணம் ஆன காலத்திலேயே"..... பட்டதுலேயே பெரிய அவமானம் இதுதான்..... ஏன்னா ஒரு தவற சுட்டிக்காட்டி அத திருதிகிறேன்னு சொன்னதுல அந்த தவறு.... ஒரு தடவைக்கு ரெண்டு தடவ படியும்......எழுத்து பிழைய (தவற) திருத்தும்...

//எழுதலை.. எழுதலை..எழுதலை..(மூணு தடவை சொல்லி இருக்கேன் பிழை இல்லாம).///

அது எழுதலை யா?????? நான் தருதலைன்னு தப்பா வாசிச்சுட்டேன்!!!!!!!!!!!!!!!!!!!!!!!! ஒரே கொழப்பம் மண்டைல "ஏன் "தல" மூணு நேரம் தன்னையே தறுதலை தருதலைன்னு சொல்லுதுன்னு....சாரி..... ஹி ஹி ஹி .....

வில்லன் said...

//முட்டிலே பசி இருகிறவன் தானே அவமானத்தை பத்தி கவலைப் படனும், வயத்திலே பசி இருக்கிறவன் அடுத்த வேளை சாப்பாட்டு கிடைக்க வழி செய்ய வேண்டாமா?//

வாஸ்தவமான பேச்சு தல...... சரியாய் சொனிங்க.........வாழ்த்துக்கள்.......

Vidhoosh said...

அதான்னே... :))

சிங்கக்குட்டி said...

நம்ம அப்பாக்கள் இருவரும் நண்பர்கள் என்று நீங்கள் சொல்லவே இல்லையே?

//பல வருடங்களுக்கு முன்// வார்த்தைகள் எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது.

எங்க அப்பாவும் ராணுவ அதிகாரி.ஒரு வேளை இதுவும் மிலிட்டெரி ட்ரைனிங்ல ஒரு பார்ட்டா இருக்குமோ?

இதுல எனக்கு இன்னொரு சந்தோசம் கூட, ஒரு வேளை நான் மட்டும் தான் இந்த திட்டு எல்லாம் வாங்கி இருப்பனோ என்று இது வரை நினைத்துக்கொண்டு இருந்தேன், அப்பாடி நீங்க ஒரு ஆளு இருக்கீங்க :-)

மோகன் குமார் said...

விடுங்க.. பொது வாழ்க்கையில் இதெல்லாம் சாதாரணம்

அமுதா கிருஷ்ணா said...

இதை இத்தனை நாட்களாக படிக்கத எனக்கு அவமானம்...

John said...

Dear Nasareyan,
Superb...I really enjoyed reading your post.. Thanks.
Could you please tell me how to type in Tamil?