Tuesday, January 12, 2010

பெண்ணே நீயும் பெண்ணா

"விடுதிக்கு போயிட்டியா ?"

"ம்ம்ம்"

"பேசணும் போல இருந்தது அதான் போன் பண்ணினேன்."

"எங்க விடுதியிலே என்னை விட்டுட்டு போய் இன்னும் கால்மணி நேரம் முடியலை, அதுக்குள்ளையும் என் ஞாபகமா?உன் காதல் என்னைய பைத்தியம் ஆக்குது"

"நான் ஒரு காதல் பைத்தியம்"

"ம்ம்ம்.. என்ன விஷயம் சொல்லு?"

"ஒண்ணும் இல்லை?"

"இல்லாத ஒரு விசயத்துக்கு போன் பண்ணி ஏன் என் கழுத்தை அறுக்க?"

"ஹேய்.. உன்கிட்ட பிடிச்சதே இந்த குத்து பேச்சு தான்"

"ரெம்ப சொம்பு அடிக்காதே.. விஷயத்தை சொல்லு"


"நீ கொடுக்கிறேன்னு சொன்னியே அது"

"என்னது ?"

"போன்ல முத்தம்.."

"அது என்னடா பழக்கம் போன்ல எச்சி துப்பி விளையாடுறது.கைபேசி ஒரு மின்பொருள் சாதனம் அதிலே தண்ணி பட்டா கேட்டுப் போகுமுன்னு தெரியாது, அதிலே வாய் வச்சி உறிய, அது என்ன ஆப்பிள் ஜூஸா"

"நீ ரெம்ப கோவமா இருக்க எச்சி எல்லாம் துப்ப வேண்டாம், போன் விலை பத்தாயிரம், வழக்கமா சொல்லுவியே அதையாவது சொல்லு" 

"அடச்சீ போனை வை அப்படினா?"

"உன் வாயிலே இருந்து உதிக்கிற அந்த ஒத்த சொல்லுக்கு இந்த காது காத்து கிடக்குது."

"காதிலே ஈயத்தை காய்ச்சி ஊத்தட்டுமா?"

"ம்ஹும், என் தொண்டைக்குள்ளே சோறு தண்ணி இறங்கலை, அதை கேட்காம?"

"இப்பத்தானே ஒண்ணரை தட்டு பிரியாணி சாப்பிட்டே, ஐநூறு தண்டம் கட்டின நான் வயத்து எரிச்சலிலே இருக்கேன், இப்ப வந்தேன் குரல்வளைய கடிச்சி எடுத்து காக்கைக்கு போட்டுவேன்"

"சரி நீதான் சொல்லலை, நானே சொல்லுறேன், நான் உன்னை காதலிக்கிறேன்"

..............................

(மீண்டும் காதலனே)  "ஹலோ.. ஹெல்ல்லோ கேட்குதா"


"ம்ம்ம் .. கேட்டுகிட்டு தான் இருக்கேன்,நீ என்னைத்தான் காதலிக்கிறேன் என்கிற அத்தாட்சிக்காக பணமே  இல்லாத அந்த  பையிலே இருக்கிற என்னோட புகைப் படத்தை பார்த்து விட்டு நல்லா தூங்கு"

"சரி"

"இன்ப கனவுகள்"

"அது போதும், நாளைக்கு பேசலாம்"


(போனை வைத்து விட்டு திரும்பியவள், அறைத்தோழி நிற்பதைப் பார்த்து அவளிடம்)

"அடியே வளவளத்தா, நீ எப்ப வந்த?"

"உங்காளு உனக்கு சொம்பு  அடிக்கும் போதே வந்துட்டேன்,பாவம்பா அவன்,
உன்னைய நாய் குட்டி மாதிரி சுத்தி சுத்தி வாரான், ஒரு ரெண்டு வார்த்தை அன்பா பேசக்௬டாதா ?""அடியே  பசங்களை பத்தி உனக்கு தெரியாது, ஆள் கிடைக்கிற வரைக்கும் குட்டி போட்ட பூனை மாதிரி நம்மளையே சுத்தி சுத்தி வருவாங்க, கிடைத்த உடனே என்னவோ எவரஸ்ட் சிகரம்  தொட்டு காதல் கொடியை  நட்டின மாதிரி, நம்மளை அவங்க பின்னாடியே அலைய வைப்பாங்க, அதனாலே மாட்டுக்கு மூக்கனாங் கயறு போட்டு பிடிக்கிற மாதிரி பிடி எப்போதும் நம்ம கையிலே இருக்கணும்.நீ பிடியை விட்டுட்ட உனக்கு பாடை தான்"


"உன்னைய கழட்டி விட்டுட்டா ?"

"எப்படி, பசுமாட்டுக்கு புல்லை காட்டிகிட்டே ௬ட்டிகிட்டு   போற மாதிரி அடிக்கடி, ஐ லவ் யு, ஐ மிஸ் யு சோ மச் ன்னு குறுஞ்செய்தி அனுப்பி, ஆளை அசையவிடாம வைக்கணும், இதெல்லாம் காதல்ல ஒரு தனிப்பட்டகலை.

"நொங்கும் திங்க விடாம ௬ந்தலையும் எடுக்கவிடாம வைக்கனுமுன்னு சொல்லுற?

"ஆமா.. ஆமா" 

"சூச்..சூச்..சூச்..சூச்..சூச்..சூச்.."

"நீ ஏண்டி இப்ப உச்சு கொட்டுற?"

"எனக்கும் ஒரு நாய்க்குட்டி உசார் ஆகிடுச்சி.இந்த குறுஞ்செய்தியை  பாரேன்."

கொலைவெறியோடு 
காதலிக்க 
உன்னை தவிர 
எனக்கு யாரு இருக்கா?

வலை வீசி இருக்கான், உடனே சரின்னு சொல்லாதே.. ரெண்டு மூணு நாள் அலைய விடு, அப்பத்தான் காதல் எவ்வளவு கஷ்டமுன்னு புரியும்.. சரி வா சந்தோசத்தை கொண்டாட  மூணு முட்டாள்கள்னு இந்தி படம் பார்க்க போகலாமா?

"புரியாத மொழி படம் பார்த்து என்னடி செய்ய?"

"இங்கிலீஷ் படமும் புரியலை, அதற்காக பார்க்காமலா இருக்கிறோம்"


32 கருத்துக்கள்:

கலகலப்ரியா said...

அச்சோ அச்சோ... நல்லா இருக்குங்க கடி... =)

வில்லன் said...

ஐயா நான்தான் செகண்டு....

வில்லன் said...

/"ஹேய்.. உன்கிட்ட பிடிச்சதே இந்த குத்து பேச்சு தான்"//

எனக்கு குத்து பாட்டு தான் தெரியும்.... உம்ம ப்ளாக் படிக்க ஆரம்பிச்சப்புறம் "உள்குத்து" "வெளிகுத்து" தெரியும்..... அதென்ன குத்து பேச்சு...... விளக்கம் தேவை.....

Chitra said...

"நொங்கும் திங்க விடாம ௬ந்தலையும் எடுக்கவிடாம வைக்கனுமுன்னு சொல்லுற? ................ha,ha,ha,ha......

வில்லன் said...

//"எங்க விடுதியிலே என்னை விட்டுட்டு போய் இன்னும் கால்மணி நேரம் முடியலை, அதுக்குள்ளையும் என் ஞாபகமா?உன் காதல் என்னைய பைத்தியம் ஆக்குது"//

ஹும்!!!!!!!!! காதலிக்கும் போது இப்படிதான்....அஞ்சி நிமிசத்துக்கு ஒரு போன்.... கல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆனப்புறம்ல தெரியும் உண்மையான லச்சணம்....

வில்லன் said...

//"போன்ல முத்தம்.."
"அது என்னடா பழக்கம் போன்ல எச்சி துப்பி விளையாடுறது.//

யோவ் வெண்ண..... அதென்ன நீங்கல்லாம் முத்தம் கொடுக்க சொன்னா எச்சி துப்பி தான் வேலையாடுவியலோ... எத்தன நேரம் பாக்கீறு PATH Trainல அத பாத்து படிக்க தெரியாதா??? கருமம் கருமம்.....

வில்லன் said...

//உன்னைய நாய் குட்டி மாதிரி சுத்தி சுத்தி வாரான், ஒரு ரெண்டு வார்த்தை அன்பா பேசக்௬டாதா ?"//

ரெண்டு நாய் பிஸ்கட் போடலாம்ல அதுபாட்டுக்கு பின்னாலே வரும்.... கல்யாணம் ஆன பிறகு பிரயோஜனமா இருக்கும்ல... எப்படியும் கல்யாணம் ஆன பிறகு டிரைவர் கம் லேபர்..... NOTHING ELSE....

வில்லன் said...

//"நொங்கும் திங்க விடாம ௬ந்தலையும் எடுக்கவிடாம வைக்கனுமுன்னு சொல்லுற?//

ஆமா!!!!!!!!!!!! நோக்காட்டுகாரன் செத்தா வியாதி ஒளிஞ்சிரும்ல........ சாகவும் விடக்கூடாது நோயும் ஒழிய கூடாது அப்பத்தான் நாம பணம் பண்ண முடியும்....சனியன் கைல பணம் இல்லன்ன ஒரேயடியா ரெண்டையும் ஒழிசிரனும்.... புது நோக்காட்டு காரன் கேடைப்பான் புது நோயோட.... என்ன நான் சொல்லுறது... இது வைத்தியனுக்கும் பொறந்தும் காதலிக்கும் பொருந்தும். நம்ம மாதிரி இப்படி நாக்க தொங்க போட்டுட்டு தெரு நாயா அலைஞ்சா (தூங்கவும் விடாம குளிக்கவும் விடாம) இப்படி பண்ணாம என்ன பண்ணுவாங்க காதலிங்க......

வில்லன் said...

//"புரியாத மொழி படம் பார்த்து என்னடி செய்ய? "இங்கிலீஷ் படமும் புரியலை, அதற்காக பார்க்காமலா இருக்கிறோம்"//

நமக்குதான் தமிழா தவிர எதுவும் தெரியாதே..... வேற மொழி பத்திரிக்கை இல்ல படம் பாதா எதாவது "பலான" படம் இருக்கானு பாக்க மட்டும் தான் தெரியும்.... அத மறைக்க சும்மா ஒரு அடுக்கு மொழிவேற "தமிழுக்காக தடி எடுப்பதை விட்டு விட்டு தமிழில் தட்டு, நீ எடுத்த தடி மரமாகி விண்ணை முட்டும் மட்டும் உயரும்"..... இத மொதல்ல மாத்தல கொலை விழும்..........

நம்ம குடுகுடுப்பை அண்ணாச்சி "நாய்ப் பத்திர ஊழல் செய்ததும், அந்த ஊழலை மறைக்க முதலை கண்ணீர் வடித்து பதிவு போட்டதும் உலகறிஞ்ச விஷயம்......நாங்க ஒன்னும் ஏமாளிங்க இல்லப்பா....

குடுகுடுப்பை said...

அருமையா இருக்கு.

உங்க உளவாளி உங்களை ரொம்ப எகிறுகிறார்.

வில்லன் said...

//


குடுகுடுப்பை said...

அருமையா இருக்கு.

உங்க உளவாளி உங்களை ரொம்ப எகிறுகிறார்.//
என்ன குடுகுடுப்பை!!!!!!!!!!!! என்னை உளவாளின்னே முடிவு பண்ணிட்டீரா...... இரும்வே வச்சுகிறேன் உம்ம........நேருல பாத்தேன் போட்டு தள்ளிருவேன்........

Anonymous said...

//அடியே வளவளத்தா?"//

இது நல்லா இருக்கே


//"உங்காளு உனக்கு சோம்பு அடிக்கும் போதே வந்துட்டேன்,பாவம்பா அவன், //

சோம்புங்கறது சீரகம் மாதிரி இருக்குமே அதுவா :)

கனககோபி said...

அட....
நல்லாயிருக்கே..... :)

ஹேமா said...

நசர்....சொம்புவா இல்ல சோம்புவா சொல்லுங்க முதல்ல.

நான் அழுவாச்சியா காதல் கவிதை எழுதிட்டு தமிழ்மணம் வந்தா அடிச்சுக் கலக்குறிங்கப்பா.பொங்கல் வாழ்த்துங்கோ உங்களுக்கு.

நசர் எச்சில் படாம போன்ல கொஞ்சலாம்.அதுக்கெல்லாம் மூளை வேணும்.ரொம்பச் செலவாகும்.

பிரபாகர் said...

என்னாங்க, அனுபவத்த அப்படியே புழிஞ்சி விட்டிருக்கீங்க?

பிரபாகர்.

புலவன் புலிகேசி said...

ஹா ஹா ஹா...இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

T.V.Radhakrishnan said...

:-))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

திறமையான பொண்ணு மாதிரி தான் தெரியுது ஆனா பாவம் காசு தான் செல்வாகுதுகொஞ்சம் :)

நட்புடன் ஜமால் said...

எட்டாத பழம் புளிக்கும் ...


ஹீ ஹீ ஹீ

ஷீ ஷீ ஷீ

சந்தனமுல்லை said...

அட...அட..அட..தமிழ் சினிமா எடுக்க அத்தனை தகுதியும் கொட்டி கிடக்கு உங்க கிட்டே!! :-))
/கொலைவெறியோடு
காதலிக்க
உன்னை தவிர
எனக்கு யாரு இருக்கா? /

ஸ்ப்பா...ரூம் போட்டு யோசிப்பீங்களோ!! :-)

amaithicchaaral said...

//அடியே வளவளத்தா//

ஏ.....!!. அந்தப்புள்ளையும் நெல்லைதானா!!!!..விடுதியில உட்டுட்டு வந்து காமணி நேரத்துல, பதிவு... ம்..முத்தீல்லா போயிட்டு...

அரங்கப்பெருமாள் said...

//எனக்கும் ஒரு நாய்க்குட்டி உசார் ஆகிடுச்சி//

ஆத்தா ஆடு வளர்த்தா...கோழி வளர்த்தா..

வானம்பாடிகள் said...

விட்டா தீஸிஸ் எழுதுவீரு போலியே:)). இம்புட்டு சைக்காலஜி தெரிஞ்சதாலதான் பெட்ஷீட் போட்டாலும் சிக்கலையோ;))

Vidhoosh said...

வளவளத்தா-வுக்கு ரசிகை ஆகிட்டேன் நான். நல்ல பெயருங்க.

டைட்டில் வெகு பொருத்தமாக இருக்கு.

சூப்பர் காவியம் ... ஐ மீன் இலக்கிய நடை. அங்கங்கே பெல்லிங் மிஸ்டேக்கு.. பரவால்லை. கருத்து தான் முக்கியம் தளபதி.

குடுகுடுப்பைக்கும், வில்லனுக்கும் அந்த சப்ஸ்கிரிப்ஷன் பகிர்ந்து கொடுக்கலையா? உட்கட்சி பூசல் வளர்ந்து கிட்டே இருக்கே.. :))

Sangkavi said...

//"நொங்கும் திங்க விடாம ௬ந்தலையும் எடுக்கவிடாம வைக்கனுமுன்னு சொல்லுற?//

இப்படித்தான் நடக்குதா....?

என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

S.A. நவாஸுதீன் said...

நீங்க உண்மைய சொல்றீங்களா, இல்லே ஐடியா கொடுக்குறீங்களா?

பாஸ், நீங்க நல்லவரா கெட்டவரா?

பட்டிக்காட்டான்.. said...

:-))))

இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்..

SUFFIX said...

தலைவருக்கு கொஞ்ச நெஞ்ச அணுபவம் இல்லைங்கோ!!

ராஜ நடராஜன் said...

//"புரியாத மொழி படம் பார்த்து என்னடி செய்ய?"

"இங்கிலீஷ் படமும் புரியலை, அதற்காக பார்க்காமலா இருக்கிறோம்"//

பஞ்ச் டயலாக்:)

ராஜ நடராஜன் said...

போன வருசம் காதலனும் காதலியும் பேசிகிட்டது:) தான் ஒட்டுக்கேட்ட மாதிரி இருக்குது.

ராஜ நடராஜன் said...

//நொங்கும் திங்க விடாம ௬ந்தலையும் எடுக்கவிடாம வைக்கனுமுன்னு சொல்லுற? //

நவீன சிலேடை:)

ஹேமா said...

அன்பு நசரேயருக்கு இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.இன்னும் கும்மியில் ஜொலிக்கவும் வாழ்த்துக்கள்.