புருஷன் v 1.0 மென்பொருள்
அன்புள்ள தொழில் நுட்பவல்லுநர்,
கடந்த வருடம் நான் காதலன் 10.0 விலே இருந்து தன்னிறைவு அடைந்து புருஷன் 1.0 க்கு மாறினேன்.நான் மென்பொருளை மாத்தின நாள் முதலா, அதன் நடவடிக்கைகளிலே எண்ணிலங்கா மாறுதல்கள் நடைபெறுகிறது, குதிரை மாதிரி இருந்த மென்பொருள் இப்ப ஆமை மாதிரி இருக்கு, குறிப்பா சொல்லனுமுனா நகைகடை,கைபேசி, வெளியே சுத்துதல் போன்ற பணிகளில் நன்கு செயல் பட்டது காதலன் 10.0 ல், புருஷன் 1.0 ல் அது எங்கே இருக்குனே தெரியலை.
கைபேசி 2.0 எப்ப அழுத்தினாலும் "நீங்கள் தொடர்பு கொண்ட எண் தற்போது உபயோகத்திலே இல்லை" என்று தவறான பதிலையே தருகிறது, எப்போதாவது ஒரு முறை வேலை செய்ததாலும் அது ஊமை 2.0 வை கொண்டு வருகிறது. நகைக்கடை 3.7 யை அழுத்தினால் கவரிங் 3.0 க்கு உள்ளே மட்டுமே போகுது.வெளியே சுத்துதலை 3.9 அழுத்தினா கேள்விமேலகேள்வி 4.0 வந்து எனக்கு குடைச்சல் கொடுக்குது, ஆனா நான் புருஷன் 1.0 வாங்கின மூணு மாதம் வரைக்கும் எல்லாமே ஒழுங்கா வேலை செய்தது
புருஷன் 1.0 னுல, காதல் விளையாட்டு 12.4, எனக்கு முன்னுரிமை 4.8 எல்லாம் தன்னாலே நீக்க பட்டு இருக்கு, அதற்கு பதிலா செய்தி 3.0,பதிவு எழுதுதல் பீட்டா,கிரிக்கெட் 3.0 ஆகிய நிகழ்ச்சிகள் எல்லாம் ஓசியிலே ஒட்டிகிட்டது.
சம்பாஷனை 10.0 இப்ப வேலையே செய்வது கிடையாது. வீடுசுத்தம் 2.2 எடுத்தா மொத்தமே உடைந்து விடுகிறது.
முக்கிய விஷயம் நீங்க அறிவுறித்திய குற்றம்கண்டுபிடித்தல் 3.7 லை தரவிறக்கம் செய்து பார்த்தேன், அதனாலே ஒண்ணுமே பிரயோசனம் இல்லை.இடை இடையே மாமியார் 1.0௦ என்ற கிருமி வேற பின்புலத்திலே செயல்பட்டு குடைச்சல் கொடுக்குது
இப்ப என்ன செய்யன்னு எனக்கே தெரியலை, தயவு செய்து உதவி செய்யவும்.
இப்படிக்கு,
புருஷனை தரவிறக்கம் செய்து கொண்டு கொதிக்கும் சீமாட்டி
***********************************************************************************
அன்புள்ள சீமாட்டிக்கு,
நீங்க இதை மனசிலே வைக்க வேண்டும் காதலன் 10.0 ஒரு பொழுது போக்கு சாதனம், ஆனா புருஷன் 1.0 ஒரு வாழ்க்கை, நீங்க எங்க இணைய தளத்துக்கு வந்து "நீ என்னை காதலித்தாய் என நினைத்தேன்" என்று அங்கே இருக்கிற பெட்டியிலே தட்டி, அழுகை 6.0 யை தரவிறக்கம் செய்யவும், மறக்காம குற்றம் 3.5 யும் சேத்து கொள்ளுங்க, அழுகையோட சேத்து வருது.
புருஷன் 1.0 நீங்க ஒழுங்கா பயன் படுத்தினா, தன்னாலே நகைக்கடை 3.0, பூக்கடை 2.3, வெளியேசுத்துதல் 3.2 எல்லாம் சரியாக வேலை செய்யும், இன்னும் ஒன்று புருஷன் 1.0 வை தாறுமாறாக பயன் படுத்தினால் மவுனம் 3.0 அல்லது தண்ணிஅடி 2.7 தன்னாலே மாறிவிடும், முக்கிய குறிப்பு தண்ணிஅடி 2.7 ரெம்ப மோசம் அது குறட்டை 2.0,அடிதடி பீட்டா ரெண்டையும் ௬டவே ௬ட்டிட்டு நல்லா கும்மி அடிக்கும் உங்களோட.
எல்லா மாமியார் 1.0 வும் கிருமி இல்லீங்க... சரியா புருஷன் 1.0 னை பயன் படுத்தினால், புருஷன் 1.0 தரமாக உழைக்க உதவி செய்யும், இல்லாட்டி உங்களை சாவடிச்சுடும்.. (வசனம் உதவி ராகவன் அண்ணன்)
இதனுடன் சேர்த்து இன்னும் ஒரு வேண்டுகோள், நீங்க மறுபடியும் காதலன் 10.0 தரவிறக்கம் செய்ய வேண்டாம், புருஷன் 1.0 க்கும் அதுக்கும் ஏழாம் பொருத்தம், புருஷன் 1.0 உடைந்து போகும்.
சுருக்கமா சொல்லப்போன புருஷன் 1.0 ஒரு மகத்தான மென்பொருள், நினைவு கொஞ்சம் குறைவு, புது பழக்க வழக்கங்களை உடனே கற்றுக்கொள்ள முடியாது,அதன் செயல் திட்டம் அப்படிப்பட்டது.
நீங்க எங்களோட புது மென்பொருட்களாகிய சமைப்பதுஎப்படி 2.5, தலையணைமந்திரம் 3.7 னை தரவிறக்கம் செய்து அதன் நினைவை அதிகப்படுத்தவும்,அதன் செயல் படும் திறனை அதிகப்படுத்த முயற்சி செய்யலாம்.
இதயெல்லாம் விட்டு விட்டு நீங்க விவாகரத்து 6.7 ஓசியிலே கிடைக்குமா என்று கேட்க்க௬டாது, அதற்கு நீங்கள் கொடுக்கும் விலைக்கு புருஷன் 1.0 ஆயிரம் மடங்கு சால சிறந்தது என்பது எங்களது சிபாரிசு.
பொறுப்பு அறிவித்தல் : சொந்த சரக்கு அல்ல,இரவல் சரக்கு