Thursday, July 16, 2009

புருஷன் v 1.0 மென்பொருள்

அன்புள்ள தொழில் நுட்பவல்லுநர்,

கடந்த வருடம் நான் காதலன் 10.0 விலே இருந்து தன்னிறைவு அடைந்து புருஷன் 1.0 க்கு மாறினேன்.நான் மென்பொருளை மாத்தின நாள் முதலா, அதன் நடவடிக்கைகளிலே எண்ணிலங்கா மாறுதல்கள் நடைபெறுகிறது, குதிரை மாதிரி இருந்த மென்பொருள் இப்ப ஆமை மாதிரி இருக்கு, குறிப்பா சொல்லனுமுனா நகைகடை,கைபேசி, வெளியே சுத்துதல் போன்ற பணிகளில் நன்கு செயல் பட்டது காதலன் 10.0 ல், புருஷன் 1.0 ல் அது எங்கே இருக்குனே தெரியலை.

கைபேசி 2.0 எப்ப அழுத்தினாலும் "நீங்கள் தொடர்பு கொண்ட எண் தற்போது உபயோகத்திலே இல்லை" என்று தவறான பதிலையே தருகிறது, எப்போதாவது ஒரு முறை வேலை செய்ததாலும் அது ஊமை 2.0 வை கொண்டு வருகிறது. நகைக்கடை 3.7 யை அழுத்தினால் கவரிங் 3.0 க்கு உள்ளே மட்டுமே போகுது.வெளியே சுத்துதலை 3.9 அழுத்தினா
கேள்விமேலகேள்வி 4.0 வந்து எனக்கு குடைச்சல் கொடுக்குது, ஆனா நான் புருஷன் 1.0 வாங்கின மூணு மாதம் வரைக்கும் எல்லாமே ஒழுங்கா வேலை செய்தது

புருஷன் 1.0 னுல,
காதல் விளையாட்டு 12.4, எனக்கு முன்னுரிமை 4.8 எல்லாம் தன்னாலே நீக்க பட்டு இருக்கு, அதற்கு பதிலா செய்தி 3.0,பதிவு எழுதுதல் பீட்டா,கிரிக்கெட் 3.0 ஆகிய நிகழ்ச்சிகள் எல்லாம் ஓசியிலே ஒட்டிகிட்டது.
சம்பாஷனை 10.0 இப்ப வேலையே செய்வது கிடையாது. வீடுசுத்தம் 2.2 எடுத்தா மொத்தமே உடைந்து விடுகிறது.

முக்கிய விஷயம் நீங்க அறிவுறித்திய குற்றம்கண்டுபிடித்தல் 3.7 லை தரவிறக்கம் செய்து பார்த்தேன், அதனாலே ஒண்ணுமே பிரயோசனம் இல்லை.
இடை இடையே மாமியார் 1.0௦ என்ற கிருமி வேற பின்புலத்திலே செயல்பட்டு குடைச்சல் கொடுக்குது

இப்ப என்ன செய்யன்னு எனக்கே தெரியலை, தயவு செய்து உதவி செய்யவும்.

இப்படிக்கு,
புருஷனை தரவிறக்கம் செய்து கொண்டு கொதிக்கும் சீமாட்டி

***********************************************************************************

அன்புள்ள சீமாட்டிக்கு,

நீங்க இதை மனசிலே வைக்க வேண்டும் காதலன் 10.0 ஒரு பொழுது போக்கு சாதனம், ஆனா புருஷன் 1.0 ஒரு வாழ்க்கை, நீங்க எங்க இணைய தளத்துக்கு வந்து "நீ என்னை காதலித்தாய் என நினைத்தேன்" என்று அங்கே இருக்கிற பெட்டியிலே தட்டி, அழுகை 6.0 யை தரவிறக்கம் செய்யவும், மறக்காம குற்றம் 3.5 யும் சேத்து கொள்ளுங்க, அழுகையோட சேத்து வருது.

புருஷன் 1.0 நீங்க ஒழுங்கா பயன் படுத்தினா, தன்னாலே நகைக்கடை 3.0, பூக்கடை 2.3, வெளியேசுத்துதல் 3.2 எல்லாம் சரியாக வேலை செய்யும், இன்னும் ஒன்று புருஷன் 1.0 வை தாறுமாறாக பயன் படுத்தினால் மவுனம் 3.0 அல்லது தண்ணிஅடி 2.7 தன்னாலே மாறிவிடும், முக்கிய குறிப்பு தண்ணிஅடி 2.7 ரெம்ப மோசம் அது குறட்டை 2.0,அடிதடி பீட்டா ரெண்டையும் ௬டவே ௬ட்டிட்டு நல்லா கும்மி அடிக்கும் உங்களோட.

எல்லா மாமியார் 1.0 வும் கிருமி இல்லீங்க... சரியா புருஷன் 1.0 னை பயன் படுத்தினால், புருஷன் 1.0 தரமாக உழைக்க உதவி செய்யும், இல்லாட்டி உங்களை சாவடிச்சுடும்.. (வசனம் உதவி ராகவன் அண்ணன்)

இதனுடன் சேர்த்து இன்னும் ஒரு வேண்டுகோள், நீங்க மறுபடியும் காதலன் 10.0 தரவிறக்கம் செய்ய வேண்டாம், புருஷன் 1.0 க்கும் அதுக்கும் ஏழாம் பொருத்தம், புருஷன் 1.0 உடைந்து போகும்.


சுருக்கமா சொல்லப்போன புருஷன் 1.0 ஒரு மகத்தான மென்பொருள், நினைவு கொஞ்சம் குறைவு, புது பழக்க வழக்கங்களை உடனே கற்றுக்கொள்ள முடியாது,அதன் செயல் திட்டம் அப்படிப்பட்டது.


நீங்க எங்களோட புது மென்பொருட்களாகிய சமைப்பதுஎப்படி 2.5, தலையணைமந்திரம் 3.7 னை தரவிறக்கம் செய்து அதன் நினைவை அதிகப்படுத்தவும்,அதன் செயல் படும் திறனை அதிகப்படுத்த முயற்சி செய்யலாம்.

இதயெல்லாம் விட்டு விட்டு நீங்க விவாகரத்து 6.7 ஓசியிலே கிடைக்குமா என்று கேட்க்க௬டாது, அதற்கு நீங்கள் கொடுக்கும் விலைக்கு புருஷன் 1.0 ஆயிரம் மடங்கு சால சிறந்தது என்பது எங்களது சிபாரிசு.

பொறுப்பு அறிவித்தல் : சொந்த சரக்கு அல்ல,இரவல் சரக்கு


53 கருத்துக்கள்:

சின்ன அம்மிணி said...

:)

Anonymous said...

சூப்பர் , எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறாங்களோ ? சில புருசன் 1.0 வோட இலவச இணைப்பாய் தண்ணிஅடி 5.0 ம் வந்து விடுகிறது. இந்த தண்ணிஅடி 5.0 வை அகற்ற எதாவது வழி இல்லையா?

புருசன் 2.0 க்கும் போகமுடியாது புருசன் 1.0 வை அழிக்கவும் முடியாது என்ன செய்யலாம்?

சிலர் சொன்னார்கள் மலிவு விலையில் புருசன் 1.0 வாங்கியதால் தான் எனக்கு தண்ணிஅடியும் இலவசமாய் வந்ததாய். இது புருசன் 1.0 இன் விஷம பிரச்சாரம் என்றே நான் நினைகிறேன்.

குடுகுடுப்பை said...

கணவனே கண்கெட்ட தெயவம்.

நட்புடன் ஜமால் said...

அது ஒரு கிருமி, அது மென்பொருளுக்கு பின்பக்கமா செயல்படும்,முடிவிலே புருஷன் 1.0 க்கு உங்களை அனானி ஆக்கிவிடும்.

சுருக்கமா சொல்லப்போன புருஷன் 1.0 ஒரு மகத்தான மென்பொருள், நினைவு கொஞ்சம் குறைவு, புது பழக்க வழக்கங்களை உடனே கற்றுக்கொள்ள முடியாது,அதன் செயல் திட்டம் அப்படிப்பட்டது]]


சூப்பர் ...

T.V.Radhakrishnan said...

:-))

goma said...

காதலன் என்ற மென் பொருள், காதலி கழுத்தில், தாலியைக் கட்டிவிட்டால், வன் பொருள் ஆகிவிடுகிறார்.

தாலியை ஏற்றுகொண்டவள் அடங்கிப் போகணும், கட்டிவிட்டவன் ஆட்டிப் படைக்கணும்.
இதுதான் இந்தியத் தாலிக்குள் நுழைந்திருக்கும் வைரஸ்.

goma said...

நசரேயன் யாரோட சரக்கா இருந்தாலும் பாராட்டுக்கள்
அருமையான கற்பனை .

இராகவன் நைஜிரியா said...

// நீங்க என்ன செய்தாலும் மாமியார் 1.0 உள்ளே வர விடக்௬டாது, அது ஒரு கிருமி, அது மென்பொருளுக்கு பின்பக்கமா செயல்படும்,முடிவிலே புருஷன் 1.0 க்கு உங்களை அனானி ஆக்கிவிடும்.//

எல்லா மாமியார் 1.0 வும் கிருமி இல்லீங்க... சரியா ஸ்கேன் பண்ணி உள்ள விட்டா, பயங்கர யூசர் ப்ரண்ட்லியா இருக்குங்க. இந்த சாப்ட்வேரை நீங்க நீங்க ஒழுங்கா ஹாண்டில் பண்ணா அது ஒழுங்கா இருக்கும், இல்லாட்டி உங்களை சாவடிச்சுடும்..

கோவி.கண்ணன் said...

:)

மென்பொருளை மாற்றாதவரை ஓகே !

SUREஷ் (பழனியிலிருந்து) said...

இதெல்லாம் தங்க எழுத்துக்களில் பொறிக்க வேண்டிய இடுகை

SUREஷ் (பழனியிலிருந்து) said...

இந்த இடத்தில் நீங்கள் வம்புக்கு இழுக்கப் பட்டிருக்குறீர்கள்

சந்தனமுல்லை said...

ROTFL!!

சந்தனமுல்லை said...

நல்ல தமிழாக்கம்!!

ஜெகநாதன் said...
This comment has been removed by the author.
ஜெகநாதன் said...

அருமை! இந்த ​மேட்டரை இங்கிலீஷ்ல படிச்ச ஞாபகம். அற்புதமா தமிழ்படுத்தியிருக்கீங்க! வாழ்த்துக்கள்!

எம்.எம்.அப்துல்லா said...

யோவ் அண்ணே, இனிமே உங்க இடுகையெல்லாம் வீட்டுக்குப்போய்தான் படிக்கணும். அலுவலகம் என்பதை மறந்து சத்தம் போட்டு சிரித்துவிட்டேன்.

Vidhoosh said...

:))). மொழி பெயர்ப்பு அபாரம்.

சிரிப்புக்கு ஒரிஜினலை விட கியாரண்டி அதிகம்...

குடந்தை அன்புமணி said...

ராகவன் அண்ணே சரியா சொல்லியிருக்கார்.சிரிக்கக்கூடிய இடுகையாக இருந்தாலும் பயன்படுத்துபவர்களுக்கு அருமையான யோசனையாகத்தான் உள்ளது.

ramalingam said...

இதுக்கே சலிச்சுக்கிட்டா. இன்னும் குழந்தை பிறந்து அப்பா1.0க்கு அப்டேட் ஆயிட்டா, மென்பொருள் இன்னும் ஸ்லோவாயிடும்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ரொம்ப நல்லா இருந்தது :)

வால்பையன் said...

அதான பார்த்தேன்!
ஏற்கனவே படிச்ச மாதிரி இருக்கேன்னு பார்த்தேன்!

அ.மு.செய்யது said...

இரவல் சரக்காக இருந்தாலும்,கிக் குறையாமல் மொழிபெயர்த்திருக்கிறீர்கள்.

வெர்ஷன் கன்ட்ரோல் !!!

அமிர்தவர்ஷினி அம்மா said...

:)))

raj said...

super.

கார்த்திகைப் பாண்டியன் said...

எப்படி நண்பா இதெல்லாம் சிந்திக்கிறீங்க? கலக்கல்..

அபுஅஃப்ஸர் said...

//குதிரை மாதிரி இருந்த மென்பொருள் இப்ப ஆமை மாதிரி இருக்கு,//

புருஷன் 1.0 க்கு குழந்தை 2.7 அப்டேட் ஆயிட்டா முழுதும் ஹேங் ஆகிடும்...

ஹேமா said...

நசரேயன்,கொஞ்சம் புரியுது.கொஞ்சம் புரியல.1.0,5.0,2.0 இதெல்லாம் என்ன?

ஒண்ணு மட்டும் புரியுது.நீங்களும் ராகவன் அண்ணாவும் ரொம்பவே கஸ்டமான சூழ்நிலைல இருக்கீங்கன்னு.காப்பாத்த யாராச்சும் வரணுமா இல்லாட்டி சமாளிக்கலாம்ன்னு நினைக்கிறீங்களா நசரேயன்.

செந்தழல் ரவி said...

ஓட்டு போட்டாச்சு

mohanpuduvai said...

Super

Mahesh said...

மொழிபெயர்ப்பு 1.1 நல்லா இருக்கு... ஆனா பின்னூட்டம் 2.5ல ஒரு பக் இருக்கு.... அதனால நான் அப்பறமா பின்னூட்டம் போடறேன்...

Mahesh said...

மொழிபெயர்ப்பு 1.1 நல்லா இருக்கு... ஆனா பின்னூட்டம் 2.5ல ஒரு பக் இருக்கு.... அதனால நான் அப்பறமா பின்னூட்டம் போடறேன்...

வில்லன் said...

அன்புள்ள தொழில் நுட்பவல்லுநர்

நீங்கள் இந்த பதிவை போட்டதால் பின்கண்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன

1. படுக்கை இடம் - மாற்றப்பட்டுள்ளது.. வெளியில்
2. உணவுக்கூடம் - மூடப்பட்டுள்ளது. கடையில்
3. ஹவுஸ் கீபிங் - எப்பவும் போல்...வீட்டு வேலை - எப்பவும் போல் செய்ய வேண்டும்
4.மது அருந்தினால் - அடிதடி.
5. புகை பிடித்தால் - சிகரட் பாக்கெட் விலை சொந்த செலவுக்கு கொடுக்க வேண்டும் (un account money - no question).

வில்லன் said...

//பொறுப்பு அறிவித்தல் : சொந்த சரக்கு அல்ல,இரவல் சரக்கு //

என்னது சொந்த சரக்கு இல்லையா... சரக்கு தீந்து போச்சா.... "சுட்டு" போட்டுருகிங்க. ஆனா சரக்க பாத்தா சுட்டது மாதிரி தெரியலையே....... சொந்த சரக்க தங்கமணி அடிக்கு தப்ப சுட்டு போட்டதுன்னு சொல்லி மளுப்புற மாதிரி இருக்கு.... சரிதான.......

வில்லன் said...

//எல்லா மாமியார் 1.0 வும் கிருமி இல்லீங்க... சரியா புருஷன் 1.0 னை பயன் படுத்தினால், புருஷன் 1.0 தரமாக உழைக்க உதவி செய்யும், //
தவறு. புருஷன் 1.0 ஒழுங்காக தரமாக உழைத்தால் (அதன் வேலையை செய்தால் ...) மாமியார் 1.0 என்ற கிருமியை செயல்இழக்க செய்ய முடியும்.

வில்லன் said...

//சுருக்கமா சொல்லப்போன புருஷன் 1.0 ஒரு மகத்தான மென்பொருள், நினைவு கொஞ்சம் குறைவு, புது பழக்க வழக்கங்களை உடனே கற்றுக்கொள்ள முடியாது,அதன் செயல் திட்டம் அப்படிப்பட்டது.//

தவறு. புருஷன் ஒரு அம்மாஞ்சி...... அது ஒழுங்காக முன்பு போல் (காதலன் 10.௦ போல) வேலை செய்தால் வீணாக தலையணைமந்திரம் 3.7 மற்றும் விவாகரத்து 6.௭ னை பயன் படுத்த தேவை இல்லை.

பழக பழக பாலும் புளிப்பதுதான் வினையே.....

வில்லன் said...

ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்..... மொத்தத்தில் இந்த புருஷன் மென்பொருள் தொண்ணூறு நாள் மட்டும்தான் (warranty period) சொன்ன மாதிரி வேலை செய்யும்.

வில்லன் said...

//நீங்கள் கொடுக்கும் விலைக்கு புருஷன் 1.0 ஆயிரம் மடங்கு சால சிறந்தது என்பது எங்களது சிபாரிசு.//

உங்க சிபாரிச குப்பைல போடுங்க... எங்களுக்கு தெரியும் எப்படி வாங்குன மென்பொருள ஒழுங்கா வேலை செய்ய வைக்கணுன்னு.... அப்பப்ப கோளாறு பண்ணும். அடிக்குற மாட்ட அடிச்சி கறக்கணும் ஆடுற மாட்ட ஆடி கறக்கணும், பாடுற மாட்ட பாடி கறக்கணும்.... இதெல்லாம் சீமாட்டிகளுக்கு கை வந்த கலை.... கவலையவிடுங்க.....

ராஜ நடராஜன் said...

//கடந்த வருடம் நான் காதலன் 10.0 விலே இருந்து தன்னிறைவு அடைந்து புருஷன் 1.0 க்கு மாறினேன்.//

இன்னும் படிக்க ஆரம்பிக்கவேயில்லை:))))))))))))))))))

ஆப்பு said...

சொறிபவர்களுக்கு.. சொருகுவேன்!!

sakthi said...

:)))))))

யாழினி said...

என்ன தான் நீங்கள் நகைச்சுவையாக சொன்னாலும் அருமையான கருத்தொன்றை அல்லவா சொல்லிச் சென்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள் நசரேயன்!

கடையம் ஆனந்த் said...

:-))

gayathri said...

hi pa ungaluku en blogla oru avrod koduthu iruken vanthu parunga pa

gayathri said...

ama ithula enna naduvula naduvula numbers ellam varuthu onnum puriyala pa 1.0 5.0 2.0 ??????

RAMYA said...

ஐயோ ஐயோ படிச்சவுடனே கண்ணை கட்டுதே :)

இதுலே எத்தனை version ?

படிச்சேன் ஆனா ஒண்ணுமே படிக்காத மாதிரி இருக்கு :))

RAMYA said...

//
முக்கிய விஷயம் நீங்க அறிவுறித்திய குற்றம்கண்டுபிடித்தல் 3.7 லை தரவிறக்கம் செய்து பார்த்தேன், அதனாலே ஒண்ணுமே பிரயோசனம் இல்லை.இடை இடையே மாமியார் 1.0௦ என்ற கிருமி வேற பின்புலத்திலே செயல்பட்டு குடைச்சல் கொடுக்குது
//

ஹையோ ஹையோ மொதல்லே இதே கவனிங்க

//
இப்ப என்ன செய்யன்னு எனக்கே தெரியலை, தயவு செய்து உதவி செய்யவும்.
//

குடைச்சலுக்கே குடைச்சல் கொடுங்க சரியாப் போய்டும் :))

//
இப்படிக்கு,
புருஷனை தரவிறக்கம் செய்து கொண்டு கொதிக்கும் சீமாட்டி
//

கொதிக்கும் சீம்மாட்டி ஹையோ ஹையோ :))

RAMYA said...

//
நீங்க இதை மனசிலே வைக்க வேண்டும் காதலன் 10.0 ஒரு பொழுது போக்கு சாதனம், ஆனா புருஷன் 1.0 ஒரு வாழ்க்கை, நீங்க எங்க இணைய தளத்துக்கு வந்து "நீ என்னை காதலித்தாய் என நினைத்தேன்" என்று அங்கே இருக்கிற பெட்டியிலே தட்டி, அழுகை 6.0 யை தரவிறக்கம் செய்யவும், மறக்காம குற்றம் 3.5 யும் சேத்து கொள்ளுங்க, அழுகையோட சேத்து வருது.
//

என் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுது
இப்போ என்ன செய்ய ??

RAMYA said...

//
பொறுப்பு அறிவித்தல் : சொந்த சரக்கு அல்ல,இரவல் சரக்கு
//

அப்பா தப்பிச்சீங்க இல்லேன்னா ஆட்டோ வந்திருக்கும் :)

RAMYA said...

சிரிப்பதோடு அல்லாமல் கொஞ்சம் சிந்திக்க வேண்டும் என்று என் மனம் சொல்கிறது சரிதானே ??

RAMYA said...

தாமதமா வந்து பின்னூட்டம் போட்டதுக்கு மன்னிக்கவும் :))

SUREஷ் (பழனியிலிருந்து) said...

உங்கள் பெயர் இங்கு அடிபடுகிறது நண்பரே

Information said...

மிகவும் அருமை

சிங்கக்குட்டி said...

ரொம்ப பிரரச்சனைன்னு கண்ட வைரஸ் மென்பொருளை முயற்சி பண்ணாத வரை நல்லது...(சும்மா :-)) அருமையான பதிவு.