Monday, December 27, 2010

எனது குப்பைகள் - நூல் வெளியீட்டு விழா

ஒரு அழகிய தருணத்தை எதிர்பார்த்து வழி மேல் கல்லை வைத்து காத்து இருக்கும் என்னுடைய  பலகோடி(?) ரசிகப் பெருமக்களுக்கு விருந்தாக வருகிறது "எனது குப்பைகள்" நூல்.  குப்பை என்று பெயர் வைத்தால்,ஒருமையை கொடுத்து நான் ஒரு சுயநலவாதி என்ற பிம்பம் தந்து கம்பத்திலே கட்டி வைத்து அடிக்க வாய்ப்பு இருப்பதாலே, "குப்பைகள்" என்று பன்மை சேர்த்து நானும் ஒரு பொதுநலவாதி என்பதை அடிக்கோடிட்டு சுட்டி காட்டவே "கள்" சேர்த்து இருக்கிறேன்.

கல்லூரி சாலையிலே "கள்" குடித்துவிட்டு கட்டை மாட்டு வண்டியிலே சென்றாலும், கார வீட்டு கார் பிடித்து அமெரிக்கா சென்று, என்ன வேலை செய்கிறோம் என்று தெரியாமல் இருந்தாலும், தமிழுக்கு அறிய பல தொண்டுகள் செய்து "கொண்டியாரங்கள்ளி" என்ற வரலாற்று காவியம் படைத்த குடுகுடுப்பையார்,எனது குப்பைகள் நூலின் அறிமுக ஏற்புரை எடுப்பதாக கட்சி கொடியின் மேல் சபதம் செய்து இருக்கிறார்.அவரின் அறிமுக உரையின் முன்னோட்டம் இதோ

"ஒரு புத்தகம் எப்படி இருக்கக்௬டாது என்பதற்கான இலக்கணமே இந்த எனது
குப்பைகள்,குப்பை என்பது களையப்பட வேண்டிய ஒன்று இந்த புத்தகத்தைப் போல".

வாழ்க்கையிலே தான் சந்தித்த கதாபாத்திரங்களை வெளியிட்டு கலைத்தாயின் தீராப் பசியை மணிமேகலை வைத்து இருந்த அமுதசுரபியை கந்து வட்டிக்கு கடன் வாங்கி தீர்த்துக்கொண்டு இருக்கும் பதிவுலக மன்னன் எங்கள் அண்ணன், இல்லாத கட்சிக்கு பொல்லாத மாணவர் அணித்தலைவர், இருண்டு விடாதே என்று வானத்தைப் பார்த்து பாடிய கவுஜையாலே வானம் மயங்கி, வனம் போல  மப்பும், மந்தாரமுமாக, கொப்பும் கிளையுமாக இருக்கிறது, பாலகன்(?) போல இருப்பதாலே அவரை பாலா அண்ணன் என்று அழைக்கிறோம்(?).இவ்வளவு புகழுக்கு சொந்தக்காராக இருந்தாலும், எனது குப்பைகளுக்கு ஏற்புரை வழங்குவதாக காசு வாங்காம வாக்கு கொடுத்து இருக்கிறார்.அவரின் ஏற்புரையின் முன்னோட்டம் இதோ உங்கள் பார்வைக்கு

"தொல்காப்பியத்துக்கு பிறகு தமிழிலே சிறந்த இலக்கண நூல் வெளிவரவில்லை என்பது உலகறிந்த உண்மை, அப்பேற்பட்ட பெருமை கொண்ட தொல்காப்பியர் இந்த குப்பையைப்   படித்தால் நிச்சயம் அவருக்கு ஆயுள் தண்டனை கிடைக்கும், ஆமா கொலை பண்ணினா ஆயுள் தண்டனை தானே கொடுப்பாங்க(?)".

இவரை தெரியும் என்பதிலே எனக்கும், டமிழ் மம்மிக்கும் பெருமை, சொல்லின் செல்வர், தமிழை வில்லாக்கி, வார்த்தைகளை அம்பாக்கி, படிப்பவர்களை கவரும் தமிழ் அம்பு. வட்டார சொல், வழக்குச்சொல் மற்றும் வழக்கு ஒழிந்த சொல் ஒவ்வொன்றையும் நேர் வரிசையாகவும், குறுக்கு வரிசையாகவும் அடுக்கி கட்டம் கட்டி சொடக்கு போட்டு சொடுக்கு விளையாடுவார். ஊர்ப்பழமை பேசுவதிலே பெருசுகளுக்கு இணையானவர்.

"ஒரு புத்தகம் எப்படி இருக்கோனுமுன்னு தெரிஞ்சிக்கோனுமுன்னா என்ற  ஊர்ப்பழமையைப் படிங்(க), ஒரு புத்தகம் எப்படி இருக்கக்௬டாதுன்னு தெரிஞ்சிக்கோனுமுன்னா இந்த குப்பைப் படிங்(க) ன்னு எங்க அப்பச்சி கனவிலே கவி காளமேகம் வந்து சொல்லி இருக்".

ரஜினி படம் போல புத்தகம் வெளிவரும் முன்னே, உலகெங்கிலும் உள்ள ரசிகர் பெருமக்கள் புத்தகம் வாங்க அலை அலையாய் இணையத்திலேயும், வலையிலேயும்  ஆர்வமாக இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை அறிவித்து உள்ளது. இப்படி ஒரு புத்தக அலையைப் பார்த்ததில்லை என மன்னார் பதிப்பகம் தெரிவித்து உள்ளது. குறிப்பாக முகிலன் புத்தகத்தின் பிரதிகளை சாக்குமுட்டையிலே வைத்து இலங்கைக்கு கடத்த இருப்பதாக இந்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்து இருக்கிறது.விளக்கம் கேட்டு மத்திய அரசு, மாநில அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.

இந்தியாவிலே கலவரம் மிகுந்த பகுதியாகிய மைலாப்பூரிலே பொது மக்களிடம்    மிகவும் பிரசித்தி பெற்ற விதூஷ் பக்கோடாவை விட புத்தக எண்ணிக்கை அதிகமாக விற்கும் என தகவல் கிடைத்ததாலே,முன் எச்சரிக்கை நடவடிக்கையாக விதூஷ் ஐயாயிரம் பிரதிகளுக்கு முன் பதிவு செய்து, தோட்டாக்கள் போன்ற பக்கோடாவை புத்தகத்தாள்களை கிழித்து சுத்தி கொடுக்க யோசனை செய்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பப்புவிடம் வாங்கிய பல்புகள் பளிச்சென மின்னுவதாலே, அந்த ஒளியை குறைக்க ரெண்டாயிரம் பிரதிகளுக்கு சந்தனமுல்லை முன் பதிவு செய்து இருப்பதாக பப்பு ரசிகர்மன்ற அமெரிக்க கிளை தெரிவித்து உள்ளது .

இந்தியா மட்டுமல்லாது வெளி நாடுகளிலும் புத்தக அலை புயல் அலையாக இருப்பதாக  தகவல் கசிந்து இருக்கிறது, குறிப்பாக அவுஸ்திரேலியாவிலே முன் அறிவிப்பு ஏதுமின்றி தமிழகத்தின் மின் அறிவிப்பு போல கடைய ஆட்டயப் போட்ட கூகிள் ஆண்டவரிடம் பல தெருமுனை போராட்டங்களை நடத்தி,கடை திரும்ப கிடைக்க போராடி வரும் தங்க மங்கை, வைர மங்கை இப்படி பல பட்டப்பெயர்கள் இருந்தும், தங்கமும், வைரமும் வெங்காய விலைபோல இருப்பதாலே, அதை எல்லாம் உதறித்தள்ளிவிட்டு  அவுஸ்திரேலியா கும்மி கழக தலைவி என்ற ஒரு பட்டத்தை மட்டும் வைத்து இருந்த/இருக்கும் சின்ன அம்மிணி, ஒரு லட்சம் பிரதிகளுக்கு முன் பதிவு செய்து இருப்பதாக ஏஜென்சி செய்திகள் கூறுகிறது.

தில்லி தமிழ் சங்கத்தின் சார்பாக கோடை வெப்பம் தணிக்க புத்தகம் இலவசமாக வழங்க ஏற்பாடு நடைபெறுகிறது. இப்படிப்பட்ட மாபெரும் நூல் வெளியீட்டு திருவிழாவை நேரடி ஒலி,ஒளி(ழி)   பரப்பு செய்ய முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்கள் போட்டா போட்டி  போடுகின்றனர். விழாவிலே ௬ட்ட நெரிசல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாலே தமிழக மற்றும்  இந்திய காவல்துறைகளுக்கு  கிரகம் சரியில்லாததாலே அனுமதி வழங்கவில்லை, அதனால் விழா செவ்வாய் கிரகத்திலே நிகழும் 23345 வருடம், தை 30 ம் தேதி நடைபெறுகிறது. அனைவரும் கல்லோடு வந்து விழா(லா) வை சிறப்பிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.



38 கருத்துக்கள்:

R. Gopi said...

சூப்பர்

Unknown said...

தளபதி! எங்கப் பழமையார தாக்கலையே!

நசரேயன் said...

//தளபதி! எங்கப் பழமையார
தாக்கலையே!//

மேல இருக்கே சேது ..

//சூப்பர்//

நன்றி கோபி ..

குடுகுடுப்பை said...

டாலஸ் தமிழ்ச்சங்கத்தில் பொங்கல் விழாவிற்கு 1000 பிரதிகள் தேவைப்படுகிறது

நசரேயன் said...

கண்டிப்பாக அனுப்பி வைக்கப்படும் குடுகுடு

Unknown said...

தளபதி, படிக்கவே பயமா இருக்கு.. எல்லோரையும் தாக்கறீங்க.

எனக்குப் புரியுது. ஈரோடு காரங்க தலைவாழை இல்லை போட்டு சாப்பாடு போட்டதினால அவங்கள விட்டுட்டீங்கன்னு பழமை கோவிச்சுக்கிறாரு. சாக்கரத்தை.

நசரேயன் said...

//தளபதி, படிக்கவே பயமா இருக்கு..
எல்லோரையும் தாக்கறீங்க.//

இப்படி உசுப்பேத்தியே ஆளை காலி பண்ணிடுவீங்களே

பழமைபேசி said...

ஆறு மாசங் கழிச்சாலே போட்டிக்கு வாறது?! நெம்பத் தாமதம்!

Unknown said...

"இப்படி உசுப்பேத்தியே ஆளை காலி பண்ணிடுவீங்களே"

அடடா! தளபதி இப்பிடி நினைக்கலாமா. சரி நான் எட்ட நின்னு வேடிக்கைப் பார்க்கிறேன்.

நசரேயன் said...

//ஆறு மாசங் கழிச்சாலே போட்டிக்கு
வாறது?! நெம்பத் தாமதம்! //

ஆறு மாசம் கழிச்சி இப்பத்தான் முழிச்சேன் அண்ணாச்சி

Unknown said...

நூல் வெளியீட்டு விழாவுக்கு வந்தா, நூல் இலவசமா கிடைக்குமா?

நான் கேட்பது புத்தகம். நெய்யற நூல் இல்லை.

நசரேயன் said...

//
நூல் வெளியீட்டு விழாவுக்கு வந்தா, நூல் இலவசமா கிடைக்குமா?

//

இலவசமா கிடைக்கிறது எல்லாத்தையும் வாங்கிகோங்க

Anonymous said...

பட்டைய கிளப்புறீங்க போங்க....

நாங்கூட,நிஜமா புத்தகம்தான் வெளியிடப்போரீங்கன்னு பயந்து போயிட்டேன்....

நசரேயன் said...

//நாங்கூட,நிஜமா புத்தகம்தான் வெளியிடப்போரீங்கன்னு பயந்து போயிட்டேன்.//

இப்படி ஒரு சந்தேகம் என்னைக்குமே வரக்௬டாது

Anonymous said...

அண்ணே, உங்க மேல எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கு..... தொடரட்டும் உங்கள் பொன்னான பணி...

Unknown said...

ரோச்சஸ்டர் தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் விழாவுக்கு 100 புத்தகங்கள் தேவை.

#டிஷ்யூ பேப்பர் வாங்கற செலவு மிச்சம்.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

உங்க இடுகைய படிக்க வரும் போதே சிரிக்க ஆரம்பிச்சுடறேன் :)

எனக்கு ஒரு பொஸ்தகம் கூட வேண்டாம்.. :) ஏற்கனவே இங்க நெறைய குப்பை கிடக்கு..

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

//டிஷ்யூ பேப்பர் வாங்கற செலவு மிச்சம்//

இது இடுகைக்கு மேல சிரிக்க வைக்குது :))))

சின்ன அம்மிணி said...

தளபதி, நாலு நாள் லீவுல இவ்வளவு நடந்திருக்கா? புக் மட்டும் வரலை - பெரிய போராட்டமே இருக்கு:)

Anonymous said...

Aha annoy option erukku. ....

Paraparappu news please read sibi pakkangal or nallaneram sathish.

Mani annan intha rendu padhiva pathi enna solar !?!?!?!

'பரிவை' சே.குமார் said...

அண்ணா அபுதாபிக்கு கப்பல் நிறைய குப்பை (புத்தகத்தைச் சொன்னேன்) அனுப்புங்க... வெயிலுக்கு தலைக்கு வச்சிக்க ஆகுமில்ல.
ஆஹா என்ன ஒரு கொலவெறி... அண்ண புத்தகம் போட்டிருக்காருன்னு வந்தா குப்பைக்குள்ள கும்மி அடிச்சிட்டாரே....

நல்லா இருக்கு...

Vidhoosh said...

இந்த மாதிரி நூல்கள் துண்டு போட உதவுமா என்பதையும் பர்பிள் அழகியிடம் கேட்டு சொல்லவும்... # கொண்டியாரங்கள்ளி ரசிகர் மன்றம் - மயிலாப்பூர் கிளை

பா.ராஜாராம் said...

ஹா..ஹா..

season feaver! கலக்கல், நசர்!

பழமைபேசி said...

//சின்ன அம்மிணி s//

வலையில இருக்கீங்களா?

Thenammai Lakshmanan said...

எந்த பதிப்பகம்னு சொல்லுங்க நசர்.. டிஸ்கவரி வேடியப்பன் கிட்ட சொல்லி வாங்கி ரிவியூ போடணும்..:))

ஹேமா said...

நசர்...உங்க ஊரில சுவிஸ்ல மாதிரி குப்பைக்கு பணம் கட்டினாத்தான் குப்பை எடுத்திட்டுப் போவாங்களோ.
அதுதான் மெல்லமா குப்பைகளை மத்தவங்க கைக்கு அனுப்பிட்டு இருக்க இப்பிடி ஒரு யோசனையோ !

ILA (a) இளா said...

வவாசங்கத்துல வர வேண்டிய பதிவு. :))

பழமைபேசி said...

//Anonymous said...
Aha annoy option erukku. ....

Paraparappu news please read sibi pakkangal or nallaneram sathish.

Mani annan intha rendu padhiva pathi enna solar !?!?!?!//

வருண், நீங்களுமா??

கபீஷ் said...

//எனது குப்பைகள்// ஏன் ஒரே பொருள் தரும் இரு வார்த்தைகள், கண்டனங்கள்:))

ஜோதிஜி said...

இலவசமா கிடைக்கிறது எல்லாத்தையும் வாங்கிகோங்க

இந்த சிரிப்போடு தூங்கப்போறேனுங்க............

a said...

ஹா ஹா..........

வருண் said...

***குப்பை என்று பெயர் வைத்தால்,ஒருமையை கொடுத்து நான் ஒரு சுயநலவாதி என்ற பிம்பம் தந்து கம்பத்திலே கட்டி வைத்து அடிக்க வாய்ப்பு இருப்பதாலே, "குப்பைகள்" என்று பன்மை சேர்த்து நானும் ஒரு பொதுநலவாதி என்பதை அடிக்கோடிட்டு சுட்டி காட்டவே "கள்" சேர்த்து இருக்கிறேன்.***

தமிழ்ல எப்படினு தெரியலை, garbages னு ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை இல்லை! அதனாலென்ன? புதுசா சேர்த்துடுவோம் உங்க புத்தகம் வெளிவந்த உடனே! :)))

Anonymous said...

Ennathu Varuna!?!?!?

Yow athu naan ya... Palamaiyare... Erode Kadhirin... Mudhalalithuvam... nnu oru padiva podunga....

vasu balaji said...

பெங்களூரு தண்ணி பண்ற வேலை.:))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கோடை வெப்பத்தை தணிக்க.. உங்க புக்கா.. நல்லா விசிற வசதியா இருக்குமா.. நாங்களும் வாங்கிபோடறோம்..ஃப்ரீதானே..:)

சின்ன அம்மிணி said...

////சின்ன அம்மிணி s//

வலையில இருக்கீங்களா?//

புது வலைப்பதிவு துவங்கியிருக்கிறேன் மணியண்ணே. பணிச்சுமை அதிகம் தமிழ்மணம் பக்கம் வர முடியலை.

நசரேயன் said...

//புது வலைப்பதிவு துவங்கியிருக்கிறேன் //

அம்மணி பழைய இடுகைகளை சேமித்து வைத்து இருந்தா, அதையும் ஏத்துங்க கடையிலே

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

எனக்கு ஒண்ணும் புரியல... சரி விடுங்க... என் சிற்றறிவுக்கு எட்டியது அவ்வுளவே...