Friday, December 24, 2010

மன்மதன் அம்பு விமர்சனம்

ரஜினி படமா இருந்து இருந்தா இவ்வளவு ஆடம்பர செலவு செய்றதுக்கு பதிலா ௬வத்தை நைல் நதி ஆக்கி இருக்கலாம் என்று படம் வெளிவரும் ஒரு மாதத்துக்கு முன்னே எதிர் வினைகள் குற்றால அருவி மாதிரி வந்து இருக்கும்,அந்த படம் ஓடப்போற திரை அரங்கம் பக்கமே தலை வைத்து படுக்கவே மாட்டேன் என்று சபதம் ஏற்று இடுகைகள் வந்து இருக்கும். படத்துக்கும் நல்ல விளம்பரம் கிடைத்து இருக்கும், விளம்பர இடுகைகள் குறைவா இருந்ததாலே எந்த விட எதிர்பார்ப்பும் இல்லாம படத்துக்கு போனேன்.

எதிர்பார்ப்பு இல்லாம போனதாலே நான் ஏமாறலை கொடுத்த காசுக்கு வஞ்சகம் இல்லாம பொழுது போச்சி படம் முடியும் வரை, கமல் படங்களிலே வழக்கமா வரும் நடசத்திர பட்டாளங்களுடன் மீண்டும் ஒரு நகைச்சுவை கலந்த காதல் கதை, காதல் இல்லைனா தமிழ் படமே இல்லை என்ற தலையாய விதிக்கு உட்பட்டு மற்றுமொரு காதல் கதைக்களம்.பாகிஸ்தான் ஆளுங்களை அடித்து விரட்டி விட்டு கஷ்மீர்ல கொடியை நாட்டும் நம்மவர்கள், ஆலிவுட் படங்கள் மாதிரி வேற்று கிரக ஆள்களை அடிச்சி விரட்டி இந்திய கொடிய பறக்க விட இன்னும் பல காலம் இருக்கு. காதலுன்னு சொன்னதினாலே, காதலியை பறக்காவெட்டி மாதிரி ஒளிந்து ஒளிந்து பார்க்கிற காட்சிகள் நிறைய இருக்கு.

வயசான ஆளு  வாலிப புள்ள மாதிரி பண்ணக்௬டாதுக்கு என்பதற்காக நாப்பது வயசிலே ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியாயாக கமல் நடித்து இருக்கிறார், நடிகையாகவே திரிசா நடித்து இருக்கிறார், இம்புட்டு அழகா தமிழ் பேச தெரிஞ்சிகிட்டு, குரலை கடன் வாங்கி பேசுறது நல்லவா இருக்கு திரிசா அக்கா(சத்தியமா எனக்கு வாய்ப்பு கிடைக்காது என்று உறுதியானதும் தான் இந்த அக்கா புராணம்).

மாதவன் கிடைத்த பாத்திரத்தை நிறைவாக செய்து இருக்கிறார், காதலியை சந்தேகப்படுவதிலும், சரக்கு அடிப்பதிலும், சரக்கு அடித்த பின் பேசுவதிலும் கொடுத்த காசுக்கு மேல ௬வினதா சந்தேகம் வராது, படம் பார்க்க நீங்க சரக்கு அடித்துவிட்டு போய்
இருந்தால், அதற்கு நிர்வாகம் பொறுப்பு இல்லை என்பதை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

சங்கீத சங்கீதமான நடிப்பு, திரிசாவுக்கு தோழியாக வரும் கதாபாத்திரத்தை கன நிறைவாக செய்து இருக்கிறார், நாயகிக்கு இணையாக கதை முழுவதும் வந்து வெற்றி கொடி நாட்டுகிறார். மேலும் கதையில் வரும் மலையாள தயாரிப்பாளர் தம்பதிகள் , குழந்தை நட்சத்திரம், மற்றும் ஊர்வசி, ரமேஷ் அரவிந்த் உட்பட அனைவரும்  ஒளிவு மறைவு இல்லாத நிறைவு.

மேல சொன்னவர்களை விட படம் முழுவதும் கமல் தான் ஆக்கிரமித்து இருக்கிறார், பிரெஞ்சுகாரிக்கு கணவன், ராணுவ அதிகாரி,உளவாளி மற்றும் காதல் மன்னன் இப்படி பல பாத்திரங்களை ஏற்று நடந்தாலும், ரசிகர்கள் பயப்படும் படியாக, முகத்தை அறுவை சிகிச்சை செய்து மாற்றலை, காலை ஓடிச்சி கட்டையா நடந்து எல்லாம் கலவரப் படுத்தலை என்பதுவே மிகப்பெரிய நல்ல விஷயம். கமல் வராத காட்சிகளை விரல் விடாம எண்ணிடலாம்.

முதல் பாதியிலே மெதுவா சென்றாலும் அலுப்பு மருந்து போடுகிற அளவுக்கு சலிப்பு
தட்டலை, இடையிடையிலே நிறைய இங்கிலிபிசு வசனங்கள் வந்தாலும், பக்கத்திலே நல்ல ஆங்கிலம் தெரிஞ்சவங்க கிட்டு கேட்டு தெரிஞ்சிக்கிற மாதிரி இருக்கு, கடைசி இருபது நிமிஷம் கலவர ஓட்டம்.வாய்விட்டு சிரிக்க கூடிய வாய்ப்புகள் படத்திலே நிறைய இருக்கும்,நீங்க இலக்கியவாதியா இருந்தா நிர்வாகம் பொறுப்பு ஏற்காது.ஆள் மாறாட்ட யோசனையை சினிமா உலகத்துக்கு அறிமுகப் படித்தினவரை விட அதிகமாவே கமல் ஆள் மாறாட்ட படங்களை எடுத்துவிட்டார், ஆனா மன்மதன் அம்புல அதைபத்தி பேசிட்டு விட்டுறாரு.

ஒளிப்பதிவு படத்துக்கு நல்ல பலம் என்று எனக்கு தோணுது,படம் முடிந்து வெளியே வரும்போது ௬ட ஒரு பாட்டும் புலப்படலை,இன்னும் படத்திலே பாடல் இருந்ததா என்று யோசித்து கொண்டு இருக்கேன், இவ்வளவு நேரமும் பேசிட்டு கதைய சொல்லவே இல்லையேன்னு நீங்க யோசிக்குறீங்களா, வெள்ளி திரையிலே போய் பார்த்தா உங்களுக்கே நல்லா தெரியும்.கமல் படிச்ச கவுஜையை எல்லாம் வெட்டாம போட்டுட்டாங்களே, நம்ம ஊரு பெருசுங்க இம்புட்டு தூரம் வரமாட்டாங்கன்னு நினைச்சிட்டாங்களோ?

முடிவா ஒரு குத்து வசனத்தோட முடிக்கிறேன்.மன்மதன் அம்பு, பூக்களை வைத்தே எய்கிறார், படம் பார்க்கப் போறவங்களை காயப் படுத்தாது என்னோட தாழ்மையான
எண்ணம்.அதனாலே எதிர்பார்ப்பு இல்லாம போங்க, ஏமாற்றம் இல்லாம திரும்பி வாங்க.

திரை அரங்கிலே போட்ட பின்னூட்டம் "திரிசாவுக்கும், சங்கீதாவுக்கும் கொஞ்சம் பவுடர் பூசி விடுங்கப்பு"


16 கருத்துக்கள்:

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

இதமான நகைச்சுவை கலந்த காதல் படம் தான் மன்மதன் அம்பு.

எதிர்பார்ப்பு இல்லாமல் போகிறவர்கள் கண்டிப்பாக ரசிப்பார்கள். கமல் ரசிகர்களுக்குச் சரவெடி தான்.

நைஸ் ரிவிய்வ்.

சே.குமார் said...

அண்ணா...
உண்மையில் அருமையான விமர்சனம்... கதையை சொல்லாமல் பட விமர்சனம் எழுதுவது சிறந்தது. அதை நீங்கள் சிறப்பாக சொல்லியிருக்கிறீர்கள்.

வானம்பாடிகள் said...

என்னமோ உங்க பஞ்ச் இல்லை.
/எந்த விட எதிர்பார்ப்பும் /
/சங்கீத சங்கீதமான நடிப்பு/
இது மட்டும் இல்லீன்னா வேற யாரோ எழுதினதுன்னு நினைச்சு இருப்பேன்.

அமைதிச்சாரல் said...

நல்லது..

அப்பாவி தங்கமணி said...

ஓ ...பாடம் வந்தாச்சா? இப்ப தான் ஆடியோ ரிலீஸ்னு ஏதோ கேட்ட மாதிரி இருந்ததே... ஒகே...நன்றி தகவலுக்கு...

கே.ஆர்.பி.செந்தில் said...

பார்க்கலாமா? வேண்டாமா?

சத்ரியன் said...

நான் இண்டர்நெட்ல பாத்தே தீருவேன்.

அமுதா கிருஷ்ணா said...

கமல் படம் எப்படி இருந்தாலும் தியேட்டரில் போய் தான் பார்க்கணும் என்கிற கட்சி நான்..பார்க்கணும்

Mohan said...

உங்கள் விமர்சனம் மிகவும் நன்றாக இருந்தது!

Sethu said...

தளபதி பஞ்ச்.

/ஒளிவு மறைவு இல்லாத நிறைவு/
/விரல் விடாம எண்ணிடலாம்/

நசரேயன் said...

// கே.ஆர்.பி.செந்தில் said...
பார்க்கலாமா? வேண்டாமா?
//

கண்டிப்பா பார்க்கலாம் செந்தில்

Pachai Tamizhan said...

Mr.K.R.Senthil: parpadhum parkadhadhum unga eshtam...

வருண் said...

கமல் ரசிகர்கள் உங்களைப் பாராட்டும் வகையில் எழுதி இருக்கீங்க! எத்தனை ரஜினி ரசிகர்களால் இது முடியும்?

காவி & இந்து மத க்ரிடிசிஸம் உங்களை பாதிக்காதது ஒரு பெரிய ப்ளஸ் உங்களுக்கு!

ஆனால் எனக்குப் பிடிச்சது முதல் பாராதான். எந்திரன் கமர்சியல் வரும்போது வயித்தவலி வந்த மேதாவிகள் எல்லாம் கப் சு னு மூடிக்கிட்டு இருக்கார்கள். ஆமா ம்ம மார்க்கட்டிங் பத்தி பேச அந்த ஞானியையும் சாதங்கனையும் எங்கே காணோம்?

பா.ராஜாராம் said...

ஆக, பாலாண்ணா சொன்னது போல் நீரே எழுதியதுதான் என தைக்கிறது அம்பு. :-)

T.V.ராதாகிருஷ்ணன் said...

விமர்சனம் மிகவும் நன்றாக இருந்தது

R.Gopi said...

தல...

படம் மரண மொக்கைன்னாங்களே!!

மாயாஜால் உள்ளிட்ட அனைத்து திரையரங்குகளிலும் ரிலீஸ் வீக் எண்ட் கூட ஹவுஸ்ஃபுல் ஆகலியாம்...

படம் நல்லா இல்லைன்னு சொல்லல.. ஆனா, நல்லா இருந்திருந்தா நல்லா இருக்கும்னு சொல்ல வந்தேன்..

இது அவரோட டயலாக் தான்.. அடுத்த படத்துக்கு யூஸ் ஆகும்னு முன்னாடியே சொல்லி வச்சுட்டார் போல...