Thursday, December 16, 2010

மனதை சலவை செய்த மெக்ஸிகோ அழகி

துவைக்கிறக்கு சோப்பு வச்சி தேய்த்து, கை வலியை தாங்காம துணியை அடிக்கிற அடியிலே துணி கிழிஞ்சி அதைப் போட்டு போகும் போது ரெண்டு பாரு பாத்து அவங்களும் துணிய கிழிக்க, அதுவே நவ நாகரிகம் ஆகிப் போச்சின்னு கேள்விப்பட்டு இருக்கேன்.

சோப்பு வச்சி துணி துவைக்கிற காலம் எல்லாம் மலையேறிப் போன அமெரிக்க மண்ணிலே, துணியை அள்ளிப் பையிலே போட்டு, சோப்பை உருக்கி புட்டியிலே அடைச்சி வச்சதை எடுத்துகிட்டு இயந்திரங்களை வைத்து துணி துவைக்கும் கடைக்கு போனேன். துணிகளை அள்ளிப் இயந்திரத்திலே போடும் போது, எதிர் வரிசையிலே இருந்த அழகி சோப்பை உருக்கி வச்ச புட்டியிலே இருந்து இயந்திரத்திற்குள் சோப்பு தண்ணியியை ஊத்தும் அழகைப் பார்க்கும் போது நான் அந்த இயந்திரமா இருந்து என் வாயிலே சோப்பு தண்ணியை ஊத்தினா எப்படி இருக்குமுன்னு யோசித்தாலும், சின்ன வயசிலே இனிமா கொடுத்தது ஞாபகம் வரவே, அப்படியே நினைவுக்கு வந்தேன். எவ்வளவோ இடங்களில் எப்படி எல்லாம் துண்டை போட்டு உசார் பண்ணி இருந்தாலும், துவைக்கிற இடத்திலே உசார் பண்ணலை,அதனாலையே உலகமஹா உசார் நாயகன் விருது கிடைக்காமல் போனது என்ற வடு இன்னும் மனதை விட்டு அகலவில்லை,எப்படியும் இந்த முறை உசார் பட்டம் கிடைக்க வைக்க வேண்டும் என மனதிலே நினைத்து கொண்டேன்.      

துணி துவைத்து முடிந்தது, துவைத்து முடிந்த உடனே, நம்ம ஊரு மாதிரி வீட்டுக்கு வெளியே துணியை காயப் போட்டா,துணி எல்லாம் பனிகட்டியா மாறிடும். அங்கேயே துணியை காய வைக்கிற இயந்திரமும் இருக்கும், துவைச்சி முடிச்ச உடனே, அதிலே அள்ளிப் போடணும், துணியை வேகமா அள்ளிப் போட்டேன், துவைக்க எடுத்திட்டு வந்ததே ரெண்டு சட்டை, ரெண்டு பேன்ட், இதிலே இருந்து தெரிஞ்சிக்கணும் நான் எதுக்கு இந்த கடைப் பக்கம் வந்தேன்னு. அள்ளிப் போட்டுட்டு பக்கத்திலே பார்த்தேன், மெக்ஸிகோ அழகி அவளோட துணிகளை காய வைக்கும் யந்திரத்திலே போட்டு விட்டு கதவை மூட முடியாமல் தடுமாறிக் கொண்டு இருந்தாள். 

அடுத்த வினாடியே அவள் பக்கம் சென்று "நான் உதவி செய்யலாமா உங்களுக்கு" கேள்விய கேட்டு, அவள் பதில் சொல்லும் முன்னே கதவை மூடி விட்டேன். ஒரு கதவை முடினா, மற்றொரு கதவு திறக்கும் என்ற "நியு" உசார் டன் விதிப்படி, என்னோட மனதின் கதவை திறந்து இதயத்தையும், கிட்னியையும் கொடுக்கத்தான் ஆசை, வாங்கிட்டு இதய பொரியலும், கிட்னி குழம்பும் வைத்து சாப்பிட்டு விட்டா என்ன பண்ணன்னு விட்டுட்டேன். இயந்திரம் துணிய காய வைக்கிற நேரத்திலே கொஞ்சம் கடலையை காய வைக்கலாம் என்ற நினைப்போடு அவளிடம் சென்றேன்.

"கதவு ௬ட சண்டை போட்டதிலே அடி ஏதும் இல்ல"

"யாருக்கு?"

"உங்க கைக்குனு நீங்க நினைச்சா கைக்கு, கதவுக்கு நினைச்சா கதவுக்கு"

"ரெண்டுக்குமே இல்லைனா?" 

"நீங்களே சொல்லுங்க?"

"சொல்ல ஏதும் இல்லையே?"

"துணி காய்ந்து முடிக்கிற வரைக்கும் ஊமையாவா இருப்பீங்க?"

"நான் எப்படி இருந்தா உனக்கென்ன?"

"நீங்க எப்படி இருந்தாலும் என்ன மாதிரி அழகா இருந்தா சரிதான்" இதை சொன்னதும் அப்படி ஒரு சிரிப்பு.

"நீங்க சிரிக்கிறதைப் பார்த்தா, நான் பேரழகன்னு நினைக்கிற மாதிரி இருக்கு"

"நானே கடும் வேலைப்பளுகளுக்கிடையே துவைக்க வந்து இருக்கேன், நீங்க என்னை கொஞ்சம் தனியா இருக்க விடுறீங்களா?"

"நானும் வேலைபளுவிலே தான் இருக்கேன், கொஞ்சம் வெளியே வந்து பேசி வேலையை மறக்கலாமுன்னு நினைச்சேன், ம்ம்.. என்ன செய்ய நான் பேசுறது  உங்களுக்கு பிடிக்கலை, சரி நீங்க தனியா இருங்க" 

"நான் அப்படி சொல்லலை, வாரம் ஆறு நாளும் வேலை,சமைக்க, சாப்பிட நேரம் இல்லை"

"அதான் உங்க பலத்தை நேரிலே பார்த்தேனே, எனக்கு தெரிஞ்ச நிறைய நல்ல சாப்பாடு கடை இருக்கு, நீங்களும்,நானும் ஒரு நாள் போகலாமே"

"ஒ.. போகலாமே தனியா.. நீங்க மட்டும்"

"நான் தினமும் தனியாத்தான் போறேன், துணைக்கு ஆள் இல்லாம, நான் உங்களை ௬ப்பிடுறேன்"  

"உங்க தொல்லை தாங்கமுடியலை" 

"இந்த தொல்லையோட ஒரு காப்பியுமா குடிக்க முடியாது, நாம இப்ப பேசின இவ்வளவு நேரம் தான் செலவாகும்"

"துணி காய்ந்த உடனே நான் வீட்டுக்கு போய்டுவேன்"

"உங்க அலைபேசியையும் உங்க ௬ட வீட்டுக்கு எடுத்திட்டு தானே போவீங்க, உங்க வீட்டு எண் தெரிய வேண்டிய அவசியம் இல்லை" 

"நீங்க நினைக்கிறது கண்டிப்பா கிடைக்காது"

"நடக்கும் .. நடக்கும்"

"வாய்ப்பே இல்லை, என்னோட துணி காய்ந்து முடிஞ்சி போச்சி, நான் எடுத்திட்டு வீட்டுக்கு கிளம்புறேன்" அடுத்த ஐந்து நிமிடத்தில் அவளும் போய் விட்டாள், என்னோட துணியை மெதுவா எடுத்து வைத்து மடித்திக் கொண்டு இருந்தேன். பின்னால் இருந்து ஒரு குரல் "உங்க அலைபேசி எண்ணை
கொடுக்க முடியுமா?" அது யாருன்னு சொல்லி தெரியவேண்டியதில்லை.

கண்டிப்பாக என்று சொல்லி எண்ணை கொடுத்தேன், கொடுத்து விட்டு அவளிடம் ஒரு குறிஞ்செய்தி அனுப்ப சொன்னேன்.

"கவலை வேண்டாம் நானே தொடர்பு கொள்கிறேன்"

"உங்களுக்கு வேலைப்பளு அதிகமா இருக்கும், மறந்தாலும் மறந்து போவீங்க, அதனாலே ஒரு சோதனை செய்தி அனுப்புங்க". 

அவளுடைய அலைபேசி எடுத்து பலமுறை முயற்சி செய்தும் பலன் இல்லை, நானே அவள் அலைபேசியை வாங்கினேன், இங்க ஒரு கவுஜ வருது 

உன் கை விரல்களை 
மீட்ட விடாத உன்னை 
தீண்டாமை ஒழிப்பு சட்டத்திலே 
கைது செய்ய ஆசை 
ஆனால் உன் விரல்கள் பட்ட 
அலைபேசியால் அந்த 
வாழ்க்கை வாபஸ் வாங்குகிறேன்.

எனது எண்ணுக்கு செய்தி அணிப்பி விட்டு திருப்பிக்கொடுத்தேன்,திரும்பி பார்த்துக்கொண்டே சென்றாள். செய்கையிலே அழைப்பாயா என்றேன், இன்றைக்கு அல்ல என்று கண் காட்டிவிட்டு போனாள். எனது அலைபேசியை எடுத்து அவள் எண்ணை சேமிக்கும் முன்னே, அவள் பெயரை கேட்க மறந்து விட்டேன் என்பதை நினைத்தேன், அவளின் பெயரை மெக்ஸிகோ அழகி என்று குறித்து வைத்தேன்.



17 கருத்துக்கள்:

Anonymous said...

உலகமஹா உசார் நாயகன் வாழ்க....(பட்டம் குடுத்துட்டேன்... பைசாவ என்னோட accountkku அனுப்பிடுங்க..)

எங்க போனாலும் துண்டு போடுறத விட மாட்டீங்களா. .. எப்படியோ மெக்ஸிகோ அழகி கிட்ட அடி வாங்காம தப்பிச்சு வந்ததே பெரிய விஷயம்....

vasu balaji said...

என் இனிய தமிழ்மக்களே,

ஊர்க்குட்டையில் துணி துவைத்தபோது துண்டைப் போடப்பார்த்து துணிக்குபதில் துவைபட்ட சோகத்தை, அமெரிக்காவுக்கு அலேக் செய்து அழகான காதல் காவியமாக்கி காத்திருக்கிறான் நாயகன். அவளோ கண்ணால் அடுத்த முறை கைபேசாது கழுதை பேசும் என்று சொல்லிச் செல்கிறாள்..அசராமல் அடுத்த ஆளுக்குத் துண்டு வீசக் காத்திருக்கும் நாயகன் துண்டு போடுவாரோ துண்டு துண்டாவாரோ..காலம் பதில் சொல்லும்.

சந்தனமுல்லை said...

ஆனாலும் ரொம்ப தன்னம்பிக்கைதான்....பின்ன.பேரழகன்னெல்லாம் நினைப்பாங்கன்னெல்லாம் நினைச்சிருக்கீங்களே!! :-))

Chitra said...

Amigo, நல்லா இருங்க!

ஹேமா said...

பிச்சைக்காரி தொடக்கம் மெக்ஸிக்கோகாரிவரை !

T.V.ராதாகிருஷ்ணன் said...

:))

சாந்தி மாரியப்பன் said...

:-)))))))

இனியா said...

Nasareyan... Kalakkals....

பழமைபேசி said...

நீர் இரயிலடி இரங்கநாயகிய விட்டுட்டீராவே?!

க.பாலாசி said...

அட..அட.. ஆமா இது உங்க வீட்டுக்காரம்மாவுக்கு தெரியுமா?

வருண் said...

***உன் கை விரல்களை
மீட்ட விடாத உன்னை
தீண்டாமை ஒழிப்பு சட்டத்திலே
கைது செய்ய ஆசை ***

இப்போத்தான் தெரியுது தீண்டாமை எப்படி உருவானதுனு. :)))

VELU.G said...

//க.பாலாசி said...

அட..அட.. ஆமா இது உங்க வீட்டுக்காரம்மாவுக்கு தெரியுமா?
//

repeat.......

க ரா said...

தளபதி எப்ப காதல் இளவரசனா மாறுநீங்க ....

அரசூரான் said...

கதவை மூட உதவினீர்களே, திறக்க உதவினீர்களா? சலவை செய்தாங்களா? இல்லை சலனம் செய்தாங்களா?

'பரிவை' சே.குமார் said...

nadakkattum... nadakkattum...
Shhhh..... appa eppadiyellam yosikkirangappa...

ஆ.ஞானசேகரன் said...

ம்ம்ம்ம் அசத்தல்.....

வாழ்த்துகள் நண்பா

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ம்ஹும்... ஒண்ணும் சரி இல்ல... கேட்டா கற்பனை / புனைவுனு சொல்வீங்க... சரி சரி... நடத்துங்க