Thursday, October 28, 2010

பாட்டு படும் பாடு

இசைஅமைப்பாளர் பாடல் ஆசிரியருக்கும், இயக்குனருக்கும் காத்து கொண்டு இருந்த நேரத்திலே பக்கத்து தெருவிலே இருந்து வந்த காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடின்னு பாட்டு இசை அமைப்பாளரை கொஞ்சம் இம்சை படுத்தியது, இந்த இம்சைகளுக்கிடையே வெளியே அழைப்புமணியும் ஒலித்தது, வெளியே சென்று கதவைத் திறந்ததும், தயாரிப்பாளர் நின்று கொண்டு இருந்தார்.

என்னதான் படி அளக்குற பகவானா இருந்தாலும், இந்த நேரத்திலே இவர் எப்படி வந்தாருன்னு யோசிக்கும் போதே அவரை தாண்டி உள்ளே போய் விட்டார். அடுத்த ஐந்து நிமிசத்திலே இயக்குனரும், பாடல் ஆசிரியரும் வர எல்லோரும் தரையிலே உட்கார்ந்து தீவிர சிந்தனையிலே ஆழ்ந்தனர். அரை மணி நேர மயான அமைதிக்கு பிறகு, 

இசை அமைப்பாளர் "ஐயா படம் மண்ணை கவ்விரிச்சா, நீங்க யோசிக்கிறதைப் பார்த்தா ஆட்டையை கலைக்கலாமா?"

"உடனே இயக்குனர் பாடல் சூழ்நிலைய சொல்லமுடியாத சோகம்,அதை எப்படி சொல்லன்னு தெரியலை"

"சொல்லாம எப்படி பாட்டு எழுத?" என்றார் பாடல் ஆசிரியர்.

"மனசை கல்லாக்கிட்டு சொல்லுங்க இயக்குனரே" என்று தயாரிப்பாளர் சொன்னதும்.

"நாயகன் நாயகிக்கு அலைப்பேசி, கைப்பேசி இப்படி பல பேசிகளை வைத்து பேச முயற்சி செய்யுறாரு, ஆனா முடியலை, அவ வீட்டுக்கு போய் பார்த்தாலும் வீடு பூட்டி இருக்கு, அவனுக்கு உலகமே இருண்ட மாதிரி ஒரு உணர்வு, உட்கார முடியலை, ஒவ்வொரு நொடியும், இடி மாதிரி மனசிலே விழுது"

"இந்த பொழைப்புக்கு நாலு பன்னி வாங்கி மேய்க்கலாம்" என்ற தயாரிப்பாளரிடம், படம் வெளி வந்த உடனே நிச்சயம் நடக்கும் உங்களுக்கு என்று சொன்னதும் அமைதியானார்.

பேனாவை எடுத்துகொண்டு ஓரமா போய் உட்கார்ந்த பாடல் ஆசிரியர் அரை மணி நேரம் மண்டையிலே அடிச்சி,முடியப் பிடிச்சி ஒரு ரெண்டு வரி எழுதி படிச்சாரு 

ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ
௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ௦ஓஒ

"ஒ விலே ரெண்டு வரியா,அதும் வரி வரியா, அருமை,அற்புதம், பிரமாதம், கலக்கல்" 
என்று அள்ளிப் போடுறாரு துண்டு போடப் போகும் தயாரிப்பாளர்.

"நாயகன் முதல்ல ஒப்பாரி வைக்குறாரு, அடுத்த ரெண்டு வரியிலே கடப்பாரைய  வைக்குறாரு" என்று பாடல் ஆசிரியர் பதில் சொல்லுறாரு.

அலைபேசியிலே உன் எண்ணை 
அழைத்து அழைத்து
எண்கள் அழிஞ்சி போச்சி,
அதை பார்த்து பார்த்து 
என் கண்கள் அவிஞ்சி போச்சி

"அவிஞ்சி போச்சி...அவிஞ்சி போச்சி.. ன்னு நாலு தரம் ஓட விடாலாம், அப்பத்தான் ரசிகர்கள் மனசிலே நிக்கும்" என்று இசை அமைப்பாளரும் ஒத்து ஊத

"இன்னும் கொஞ்சம் கனமா இருந்தா நல்லா இருக்கும் என்று இயக்குனர் சொன்னதும், அடுத்த ஒரு மணி நேரம் கழித்து

துருப்பிடிச்ச உன் இதயத்துக்கு
இன்னும் வண்ணம் அடிக்கலையா
உன் தங்க மனசு செம்பு சேர்க்காம
கட்டியா இருக்கா

அருமை, அட்டகாசம், பின்னீட்டீங்க, கலக்கல்னு மறுபடியும் தயாரிப்பாளர் சொன்னதும், அனைவரும் வேற வழி இல்லாம ஆமோத்தித்தனர்.

இசைஅமைப்பாளர் உடனே "பாட்டு மரபுக் கவிதை மாதிரி இருக்கு,மேல் தட்டு மக்களுக்கு மட்டுமே புரியும்,கொஞ்சம் விளக்கம் கொடுத்தா கும்மி அடிக்க நல்லா இருக்கும்.உடனே எழுதின வரிக்கு பாடல் ஆசிரியர் விளக்கம் கொடுக்குறாரு

"நல்லதண்ணி குழாயிலே இருந்து இரும்பு துரு பிடிச்சு உடைஞ்ச மாதிரி, காதலி மனசும் உடைஞ்சி போச்சா, அவ தங்கமா இருந்தாலும், செம்பு கிடைக்காம உருகாம இருக்கியோன்னு கேள்வி கேட்காரு"

இப்பத்தான் கொஞ்சம் புரியுது, நீங்க அடுத்த வரியை சொல்லுங்க.உடனே தயாரிப்பாளர் ஒரு சீட்டை கொடுத்து இந்த ரெண்டு வரி இலவச இணைப்பா சேருமான்னு சொல்லுங்க, 
படிச்சிட்டு எல்லோரும் இப்ப சேராது, இன்னும் கொஞ்சம் போகட்டும்.

என்ன வரி எழுத 
எப்படி எழுத 

சூப்பர் ..சூப்பர் இந்த முறையும் தயாரிப்பாளர் தான், உடனே பாடல் ஆசிரியர் ஐயா நான் பாடல் வரியை சொல்லவே இல்லை

மன்னிக்கணும் பழக்க தோஷத்திலே சொல்லிட்டேன்.

இப்ப சொல்லுறேன் கேட்டுகோங்க 

உன் அலைபேசி
வேலை செய்யலைன்னு 
அலைபேசி செஞ்ச 
அலுவலத்துக்கே போய் விசாரித்தேன்
உன் வீடு பூட்டி இருக்குன்னு 
பூட்டு செஞ்ச 
அலுவலத்துக்கே போய் விசாரித்தேன்
நீ வைச்சிருக்க எல்லாத்தையும் விசாரிக்கேன் 
ஆனா உன்னைய மட்டும் விசாரிக்க முடியலை 

அருமை ... அருமை .. பூட்டு அலுவலகம் ஜப்பான், அலைபேசி அலுவலகம் அமெரிக்கா, அங்க போய் விசாரிக்கிற மாதிரி படம் பிடிக்கலாம், நான் நாளைக்கே போய் கடவுச் சீட்டு விண்ணப்பிச்சிட்டு வந்திடுறேன் என்றார் இயக்குனர்.மறுபடியும் தயாரிப்பாளர் அவரோட ரெண்டு வரியைக் காட்டி இதை சேக்க முடியுமா என்று கேட்க, இன்னும் கொஞ்சம் போகட்டும் என்று அனைவரும் சொல்லிவிட்டார்கள்.

உன் தெருவிலே இருக்கிற நாய் 
என்னை கருணை கண்ணுல பாக்குது
ஆனா உன் கண்ணிலே 
கருணையும் இல்லை
காதலுமில்லை  

இங்க "இல்ல .. இல்ல" ன்னு நாலு தடவை சொல்லணும் என்று இசை அமைப்பாளர் சொன்னதும்,"அப்பத்தான் பார்க்கிறவங்க நான் இல்ல ... நான் இல்ல" ன்னு திரைஅரங்கை விட்டு 
ஓடுவாங்க என்றார் தயாரிப்பாளர்.

"இப்பவாது இந்த வரியை சேர்ப்பீங்களா?" 

கொஞ்சம் வாசித்து காட்டுங்க 

வாதியா .. வாதியா நீ 
பெண்ணாதிக்கவாதியா 

ரெண்டு வரியையும் கேட்டதும் எல்லாரும் பேய் அறைஞ்ச மாதிரி அரை மணி நேரம் அமைதியாகிட்டாங்க, அப்புறமா இயக்குனர், ரெம்ப நாளா சந்தேகப் பட்டேன், நீங்க ஒரு பதிவருன்னு,இப்ப உண்மை தெரிஞ்சி போச்சி, இப்படி எல்லாம் எழுதினா தாய்குலங்கள் ஆதரவு கிடைக்காது.

"வரிய சேக்கலைன்னா, உங்களுக்கு பேட்டா கிடைக்காது"

இசை அமைப்பாளர், இயக்குனரிடம் பாட்டை இந்திகாரங்களை வச்சி பாட  சொன்னா 

வாத்தியா.. வாத்தியா.. நீ
புண்ணாக்கு வாத்தியான்னு படிப்பாங்க யாருக்குமே புரியாது 

"ம்ம்ம்" என்ற இயக்குனருக்கு பதிலாக 

"நானும் உண்மைய தெரிஞ்சிகிட்டேன்"

"என்னன்னு" 

"நீங்களும் ஒரு பதிவர்னு"

"ம்ம்ம்" 
 


17 கருத்துக்கள்:

க ரா said...

கற்பனையோ.. காவியமோ.. பின்றீங்க.. உங்கள் தமிழதொண்டு மெச்ச கூடியது :)

பழமைபேசி said...

ம்ம்ம்

வருண் said...

*** நீ வைச்சிருக்க எல்லாத்தையும் விசாரிக்கேன்
ஆனா உன்னைய மட்டும் விசாரிக்க முடியலை***

பச்சை பொய்!

கவிஞர் எல்லாம் பொய்யர்கள்! அதான் என்னால கவிதை எழுத முடியல போல.

அவட்ட எனென்ன இருக்கு தெரியுமா?
அன்பு, பாசம், அழகான கண்கள். அழகான உதடுகள்>>>

priyamudanprabu said...

நானும் உண்மைய தெரிஞ்சிகிட்டேன்"


"என்னன்னு"


"நீங்களும் ஒரு பதிவர்னு"


"ம்ம்ம்"


//////////


ha haa
nice

பழமைபேசி said...

தளபதி... நீர் இன்னும் இப்பிடியே இருக்காதீரும்... உம்மைப்பத்தி, ச்சீ... நம்மளப்பத்தி எனக்கு அடுத்துப் பின்னூட்டம் போட்டவங்க எதோ சொல்லி இருக்காங்க.. போய்ப்பாரும்யா.... படிக்காமலே பின்னூட்டம் போட்டுட்டு வந்துடாதீங்க அங்கயும்...

ஜோதிஜி said...

நண்பா திருப்பூருக்கு ஒரு நடை எட்டிப் பார்த்து விட்டு போங்களேன்.

இங்கு ஒரு தமிழ் இலக்கிய விழா உங்களை வைத்து நடத்தலாம்ன்னு ஆசையாயிருக்கு.

பவள சங்கரி said...

நான் நாலாவது வரியிலேயே கண்டுபிடிச்சிட்டேன்........பதிவர் நையாண்டின்னு.......எப்பிடியோ எதையாச்சும் பண்ணி சிரிக்க வைக்கிறதுன்னு முடுவா இருக்கீக.....நடத்துங்க.......

vasu balaji said...

இப்பதாம்யா புரியுது. நியூயார்க்ல மூட்டைப் பூச்சித் தொல்லை அதிகமாயிட்டு. மக்கள் அவதின்னு படிச்சேன். அதுக்குதான் இப்புடி எங்களை புடுங்குறீரு. கொலையா கொலை யப்பா.

Chitra said...

One of your best posts!!!

Anonymous said...

முடியலை ரவுசு...

T.V.ராதாகிருஷ்ணன் said...

ம்ம்ம் ))

Radhakrishnan said...

ஹா ஹா! மிகவும் ரசித்து சிரித்தேன். பாட்டு எழுத போயிரலாம் :)

கபீஷ் said...

கவிஞ்சர் நசரேயன் ஒழிக

'பரிவை' சே.குமார் said...

ரவுசு தாங்கலைண்ணே...

போட்டுத்தாக்குங்க.

வருண் said...
This comment has been removed by the author.
வருண் said...

வருண் said...

***பழமைபேசி said...

தளபதி..
படிக்காமலே பின்னூட்டம் போட்டுட்டு வந்துடாதீங்க அங்கயும்...***

:)))))

நானெல்லாம் படிச்சுத்தான் பின்னூட்டமிடுறது. ஆனால் ஒவ்வொரு சமயம் மேட்டர் என் மரமண்டையிலே சரியா ஏறாததாலே, நான் இடுற பின்னூட்டமும் "புரியாத மாதிரி" இருக்கும்.

October 29, 2010 10:15:00 AM EDT

Anonymous said...

romba cute ah pesringa