Thursday, September 23, 2010

காமினி (சவாலில் வெற்றி பெற்ற கதை)

சென்னை பன்னாட்டு முனையம் பரபரப்பாக கோயம்பேடு தினசரி சந்தை போல இயங்கிக் கொண்டு இருக்கிறது, நிலம் இருந்தா இன்னும் சர்வதேச தரத்துக்கு வருமுன்னு நான் சொல்லுறதாலே உடனே கட்சிக்காரங்க எல்லாம் சொம்பை கீழே வைக்கப் போறதில்லை, அதனாலே நம்ம ஊரு விமான நிலையத்தை அது போக்கிலே விட்டு விட்டு நாம வந்த வேலையைப் பார்க்கலாம். இந்த பரபரப்புக்கு இடையே முதல் இரண்டு எழுத்து இல்லாமல் "சவத்துக்கு இலவசம்" என்று எழுதப் பட்ட ஆட்டோவிலே இருந்து கதையோட நாயகனோ, நாயகியோ இறங்கலை, அதனால அறிமுகப் பட்டு எல்லாம் கிடையாது.

இறங்கின மூணு பேரும் அமெரிக்காவுக்கு போகலை இருந்தாலும், அவர்களோட முழு கால் சட்டையை முட்டிக்கு மேல மடித்து விட்டு இருந்தார்கள், அவர்கள் அணிந்து இருந்த காலுறை வெவ்வேறு நிறங்களிலே இருந்தது. இறங்கியதும் இல்லாத ஆட்டோ மீட்டருக்கு பேரம் பேசி ஒருவழியாக ரூபாயை கொடுத்து விட்டு கிளம்பும் முன் ஆட்டோ ஓட்டுனர்

"ஏன் தம்பிகளா முழு பேன்டை மடிச்சி வச்சி இருக்குகீங்க, கால்ல என்ன சிரங்கா?"

"நாங்க முத முதல்ல பேன்ட் போடுறோம், லுங்கி கட்டுன பழக்கத்திலே மடிச்சி விட்டு இருக்கோம்"

"நீங்க கொண்டு வந்த அட்டையைப் பிடிங்க" என்று அட்டையைக் கொடுத்தார், அவரிடம்

"அண்ணே இந்த அட்டையிலே என்ன பேரு எழுதி இருக்குன்னு சொல்லுங்க."

சவத்து சட்டின்னு எழுதி இருக்கு, கேட்டவுடன் மூவரும் ஒரே நேரத்திலே அப்படி ஒரு பேரா!!!!

"ஆமா ஒருபக்கத்திலே அப்படி இருக்கு, இன்னொரு பக்கத்திலே காமினின்னு எழுதி இருக்கு"

"ஏன்ணா ரெண்டு பேரு வச்சி இருக்காங்க?"

"நாணயத்துக்கு ரெண்டுபக்கம், இந்த அட்டைக்கும் ரெண்டு பக்கம் நீங்க கொடுத்த காசுக்கு அவ்வளவு தான்னு" சொல்லிட்டு போயிட்டாரு.

"ஏல செவனு எத்தனை மணிக்கு இந்த சவம் வருது" ன்னு கேட்டதும் செவனு "ஏல என்னைய பொது இடத்திலே செவனு சொல்லாதே "சிவா" ன்னு சொல்லு அப்படித்தான் சொல்ல சொல்லி இருக்காங்க.

"சரி மாப்பு, வா போகலாம் ஜனங்கள் வருகிற இடம் போகலாம்"

அவர்கள் மூவரும் சென்ற சிறிது நேரத்துக்கெல்லாம் அவர்களை நோக்கி ஒரு அழகிய பெண் வந்தாள், அவள் அழகை ரசித்துக் கொண்டு இருக்கும் போதே அவர்களிடம் "நான் தான் சவத்து சட்டி" ன்னு சொன்னதும், எல்லோரும் விறைப்பாக வணக்கம் வைத்து "உள்ளேன் அம்மா" என்றனர், நீங்கதான் வில்லன்களா என்றதுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் மூவரும் தலையை சொரிந்து பேன் எடுத்துகொண்டு இருக்க, உடனே அவள்

"வந்து சேருங்க பக்கிகளா" என்று முன்னால் சென்றாள்.

அவர்கள் நால்வரும் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்ததும், சுமோ ஒன்று அவர்கள் பக்கத்திலே வந்து அதன் கண்ணாடி இறங்கி அதிலே இருந்த ஒரு பெரியவர் "டேய் சீக்கிரம் வண்டியிலே இருங்க", நால்வரும் ஏறிக்கொள்ள வண்டி புயல் வேகத்திலே பறக்க நினைத்தாலும் இருந்த போக்குவரத்து நெரிசலிலே ஆமையாய் ஊர்ந்து வண்டி சிறு சேரியை அடைந்தது,நால்வரும் பெரியவருடன் ஒரு வீட்டு உள்ளே சென்றனர்.

"போகும் வழியிலே எங்க அந்த பரந்த ஆமை ஆளை காணும்" இந்த கேள்வியைக் கேட்டு திரும்பிய பெரியவர் தன்னோட தலையிலே இருந்த ஒட்டு முடியை எடுக்க, மூவரும்

"ஏய் மாப்ள நம்ம தொந்தி மாமா, முடிய எடுத்தும் பத்து வயசு குறைஞ்சி போச்சி"

"கட்டையிலே போற வயசுல உமக்கு இது தேவையா?" என்று காமினியும் சேர்ந்து கொண்டாள். வீட்டுக்குள்ளே சென்றதும் பரந்த ஆமை என்று அன்போடு அழைக்கப்பட்ட பரந்தாமன், காமினியிடம்

"டைமைன்ட் எங்க?"

"என்னது டைய மண்டனுமா?, என்கிட்டே வெளிநாட்டு சரக்குதான் இருக்கு, அதை வேண்ணா மண்டுங்க" ன்னு சொல்லி முடிக்கும் முன்னே மூவரும் பாட்டிலை வாங்கி கவுத்து விட்டார்கள். காலியான சரக்கு பாட்டிலை பரந்தாமனிடம் கொடுத்தார்கள்.

"எப்படி காமினி இது நடந்தது?"

சொல்லுறேன் என்று விமானத்திலே நடந்ததை நினைவு ௬ர்ந்தாள், விமானம் பத்தாயிரம் அடி உயரத்திலே பறக்கும் போது,தான் அருகிலே வந்த பணிப் பெண்ணிடம் "வெளி நாட்டு சரக்கு இருக்கா?", அந்த கேள்வியை காமினியிடம் இருந்து எதிர் பார்க்காத பணிப்பெண் பார்த்த பார்வைக்கு பதிலா "

"சரக்கு ஆம்புளைங்க மட்டும் தான் அடிக்கணுமுன்னு எழுதியா வச்சி இருக்கு, என்னையப் பார்க்கம சரக்கை எடுத்திட்டு வாங்க" என்றதும் சரக்கு வந்தது, வந்து பத்து நிமிசத்துக்கு அப்புறம் மறுபடியும் கேட்டாள், பணிப்பெண் மீண்டும் எடுத்து வர, அவளிடம்

"உங்க கிட்ட என்ன காவிரி தண்ணியையா கேட்டேன், சொட்டு மருந்து மாதிரி கொடுக்குறீங்க, நூறு மில்லி கொடு" என்றாள் காமினி, கேட்டது வரவும், அடுத்த அரை மணி நேரத்திலே மீண்டும் கேட்டு வாங்கினாள். வாங்கிய அனைத்தையும் பெப்சி கலந்த பாட்டிலே அடைத்து கொண்டாள், கடைசியாக வாங்கியதை மட்டும் விமான கழிவறைக்கு சென்று ஊத்திவிட்டாள். இப்படித்தான் சரக்கை ஆட்டைப் போட்டேன்.

"பக்கி நீ சரக்கை ஆட்டையப் போட்ட கதையைக் கேட்கலை டிமைன்ட் ஆட்டயப் போட்ட கதையச்சொல்லு."

"யோவ் அது என்ன மண்டு, தமிழ்ல சொல்லு"

கோபத்திலே "வைரம்டி வைரம்"

"வைரமா.........." அதிர்ச்சியிலே விழுந்தாள் காமினி.

"யே... கிறுக்கச்சி இப்படி விழக்௬டாது"

"எப்படி?"

வசனத்தை நல்லா கவனி

" டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்"

"முக முடியை எடுக்கலை, டாக்டர் இல்லை, சும்மா விழுந்தா விதியிலே வராது, ஆட்டைக்கு சேர்க்கமுடியாது"

ஒ அப்படியா என்று யோசித்த காமினி

"யு டாக் யு டர்?"

"என்ன என்ன ?"

செவனு நீ பேசு, கருப்பு நீ அவன் பேண்டை டர்.. டர்.. ன்னு கிழி. அதுதான் டாக்டர்.

"பேன்ட் கிழிஞ்சி போச்சினா?"

கோவணமா கட்டிக்கோ, இப்ப சொன்னதை செய், அவர்கள் இருவரும் பேசிக்கொண்டே பேண்டை கிழித்ததும், காமினி முகத்திலே இருந்த முகமுடியை கழட்டி விட்டு, இழைகளை பிடுங்கினாள்.அவள் கழட்டுவதை நால்வரும் கண் அசராமல் பார்த்துக் கொண்டு இருந்தனர். கழட்டி ஒரு நிமிடம் வரை எதுவும் அசையாமல் இருந்த நிலையிலே நால்வருக்கும் தான் வைத்து இருந்த பட்டை சரக்கை வாயிலே ஊற்றினாள். அனைவரும் மீண்டும் நினைவுக்கு வர செவனு மட்டும்

"யோவ் பரந்தாமா நல்லா பாத்தியா வசனத்திலே முகமுடியை மட்டும் தான் கழட்ட சொல்லி இருக்கா, இன்னும் வேற எதையும் கழட்ட சொல்லலையா?" உடனே காமினி

"யோவ் இங்க எங்க பிட்டு படமா எடுக்காங்க, இது குடும்ப படம், இருந்தாலும் ஆசைப் படுறீங்க, என்னோட மேலாடையும் கழட்டுறேன், ஒரே நேரத்திலே எல்லோரும் வேண்டாம் ... வேண்டாம் என அலறி கண்ணை முட, அதற்குள் காமினி கண்ணாடி சன்னலை தாண்டி வெளியே குதித்தாள்(கடமை ஆத்த) . மேலாடையை தவற விட்டாலும் அவள் வெட்கப் படாமல் நடந்து வெளியே சென்றாள், இதுவரை பெண்ணாக உடை அணிந்து நடித்த மதன். அறையின் உள்ளே மதன் விட்டு சென்ற மேலாடையை எடுத்து வைத்து கொண்டு மதன் என்ற காமினியைத் தேடிக் கொண்டு இருந்தார்கள். அதற்குள் காவல் துறையும் அவர்களைத் தேடி வந்து சுற்றி வளைத்து கைது செய்தது.

காவல் நிலையத்திலே உடைந்து அடுக்கிய குச்சிகளை காவல் நிலைய அதிகாரி வீட்டுக்கு அடுப்பு எரிக்க, நிலைய காவல் தொழிலாளி எடுத்துக்கொண்டு சென்று கொண்டு இருந்தார், அலுவலக அறையிலே

"ஐம்பது கம்பு உடைஞ்சி போச்சி, ஆனா இன்னும் ஒரு தகவலும் இல்லை.அவங்க கிட்ட பேசினது ஒரு பெண், ௬ட இருந்தது ஒரு பெண், அதைத்தவிர வேற ஒண்ணும் தெரியலை, இவங்களுக்கு கொடுக்கிறதா சொன்ன பத்தாயிரமும் இன்னும் வரலையாம், அவளை கண்டு பிடிச்சா வாங்கி கொடுங்கன்னு சொல்லுறாங்க" என்று காவல் அதிகாரி புலம்பினார்.

இதே நேரத்திலே மதன் விமானப் பணிப்பெண் தங்கும் விடுதியின் வெளியே காத்து கொண்டு இருந்தான்,அடுத்த ஐந்து நிமிடத்திலே நிஜ காமினி வெளியே வந்தாள்

"யாரும் சந்தேகப் படலையே!!!!!"

"நான் போட்டு இருக்கும் உடையையும், முகச்சாயத்தையும் பார்த்து உண்மையான விமான பணிப்பெண் என்று காவலாளி நினைத்து விட்டான், உள்ளே போனதும் பத்து நிமிசத்திலே வேலை முடிந்தது" என்று சொல்லி மதுகோப்பையை வெளியே எடுத்தாள்.

"என்ன காம்ஸ் சரக்கு அடிக்கப் போறியா?"

"இந்த பாட்டிலை வச்சி நாலுகோடிக்கு சரக்கு வாங்கலாம், இப்ப சொல்லு என்னோட திறமை எப்படி?"

“ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் மதன் என்ற சிவா.

"என்னடா சிவா திடிர்னு இப்படி, இப்ப நான் என்ன செய்ய?"

"கடமை ஆத்தணும் காமினி, அதான் இப்படி, நீ இந்த துப்பாக்கியை கடிச்சி சாப்பிடு, இது சாக்லேட் துப்பாக்கி" அவள் சாப்பிட்டு முடித்ததும் சிவா

"நீ ரெம்ப திறமை சாலிதான், விமானத்திலே சரக்கை ஆட்டையப் போட்டு, அவங்க கொடுக்கிற கிண்ணத்திலே வைரத்தை மறைத்து வைத்து, அதிலே ஒரு கருவியும் இணைத்து வைத்து விட்டு அதை விமானப் பணிபெண்ணின் கைப் பையிலே வைத்து விட்டு விமான நிலைய சோதனை அதிகாரிகளிடம் இருந்து தப்பி விட்டாய்"

"ம்ம்ம்ம் .. நீ என்ன பண்ணின"

"உன்னைய மாதிரி வேஷம் போட்டு காவல்துறையையும், தற்காலிகமா சேர்த்த ஆளுங்களையும் ஏமாத்தினேன்"

"நீயும் புத்திசாலிதான்"

"காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் சிவா என்ற பரந்தாமன்."

"மறுபடியும் கடமை ஆத்துற வசனமா ?"

"ம்ம்"

"இன்னும் ஏதும் இருக்கா?"

"இல்ல இதுதான் கடைசி, இனிமேல வீட்டுக்கு போய் டீ ஆத்தலாம்"

"கடைசி வரைக்கும் என்னோட் கடமை இன்னும் முடியலை, அதை நீ ஆத்தவும் இல்லை" என்னவென்று கேட்டவனின் காதிலே சொன்னாள்.

"ஆணுக்கு, பெண் என்றைக்கும் சளைத்தவள் அல்ல"

"ம்ம்ம்ம்... உண்மை" என்று இருவரும் சிரிப்புடன் சென்று கொண்டு இருந்தனர்.


25 கருத்துக்கள்:

நசரேயன் said...

போட்டியிலே தான் ஜெயிக்காது, தலைப்பிலேயாவது ஜெயிக்கட்டும் என்ற நல்ல எண்ணம் வேற ஒண்ணும் இல்லை

சாந்தி மாரியப்பன் said...

உங்க நல்லெண்ணத்துக்கு வாழ்த்துக்கள். கதைன்னா க்ரைமாத்தான் இருக்கணுமா என்ன.. வித்தியாசமான நகைச்சுவையான முயற்சி :-)))))

vasu balaji said...

அண்ணாச்சி!!நீரே இலக்கியவாதி! இதுவே கதை! இதுக்குதான் சீக்கிரமே காணாம போயிட்டீரா? நிச்சயமா காமினி உருவான விதம்னு அடுத்த இடுகை தேத்தலாம். என்ன ஒரு கவுஜ சேர்த்து விட்டிருந்தா இன்னும் தூக்கலா இருந்திருக்கும். அந்த செவனு இருக்கே செவனு:))

Vidhoosh said...

சூப்பர் ...


பார் புகழும் நசரே... நீங்க "மன்னன் கதைபேசி"... என்று இன்று முதல் அறியப் படுவீர்கள்...

Chitra said...

போட்டியில் பங்கு கொள்ள வந்தவரே - நடுவராகவும் அறிவிக்கப்பட்டார். எந்த வித பாராபட்சமுமின்றி அவர் சிறந்த கதையை தேர்ந்து எடுத்தார்..... தேர்ந்து எடுத்த பின் தான் அது - தான் எழுதிய கதை என்றே அவருக்கு தெரிந்தது. ஆஹா......

Paleo God said...

நான் மட்டும் ஜட்ஜா இருந்தா மூணு பரிசுமே இந்தக் கதைக்குத்தாங்க!



உங்க ஆழ்ந்த எழுத்தனுபவம் பிரமிப்பைத் தருகிறது.

அவ்வ்வ்வ்...:)))

கார்த்திகைப் பாண்டியன் said...

பரிசல்.. உங்கள என்ன பண்ணினாத் தகும்?

thiyaa said...

ஆஹா......ஆஹா......புரளியைக் கிளப்புறாங்கையா

பவள சங்கரி said...

அட அந்த கதையை இப்படிக்கூட எழுத முடியுமா....சூப்பருங்க......அது சஸ்பென்ஸ்ன்னா, இது காமெடி.....வெற்றிக் கோப்பை சமமாக வெட்டி கொடுக்கப் படுகிறது.....ஹ...ஹா.........

Unknown said...

அண்ணாச்சிக்குதான் பரிசு கொடுக்கனும் ...

Unknown said...

அண்ணாச்சிக்குதான் பரிசு கொடுக்கனும் ...

க.பாலாசி said...

யப்பா... சாமீ... ஆளவிடுங்க...

கலக்கல்ஸ்....

*இயற்கை ராஜி* said...

:-))

T.V.ராதாகிருஷ்ணன் said...

நசர்..என்ன சொல்றதுன்னு தெரியலை...
இந்த அளவு ஆழமா யோசிச்சு..இவ்வளவு அருமையான நடையிலே
உங்களால கதை எழுத முடியுமா?
மக்கள் யாவரும் இனி கதை எழுத வேண்டாம்.போட்டியின் முடிவு தெரிந்துவிட்டதால், உங்களுக்கு எல்லால் வட போச்சு ;))

பழமைபேசி said...

நான் இன்னும் படிக்கலை... ஆனா ஏன் -1??

பழமைபேசி said...

யே... நீர் எப்பிடிவே இப்பிடியெல்லாம் எழுதுறீரு?....பரிசு உமக்குத்தான்லே....

ஹேமா said...

ஐயா....நசரேயா....உமக்கே வெற்றி.வென்று வருக !

smart said...

ஐயா, இது எங்கே நடந்த போட்டி? உண்மையில் வெற்றிப் பெற்ற கதை தானா?

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

கடமைய நல்லாவே ஆத்திருக்கீங்க!! சூப்பர்!!

அஹமது இர்ஷாத் said...

பரிசு எப்பண்ணே வாங்கி போறீங்க..

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ஆஆஆஆஆஆஅஹ்.....என்னவா? அதற்குள் அப்பாவி தங்கமணி கண்ணாடி சன்னலை தாண்டி வெளியே குதித்தாள்... (இப்ப சந்தோசமா?) கடவுளே என்னை காப்பாத்து... இப்படி ஒரு கதைய நான் படிச்சதே இல்ல... இதுக்கு என் "அதே கண்களே" பெட்டர் ...

ஆனா இப்படி எழுதவும் ஒரு திறம வேணும்... ஒத்துகறனுங்கோ... மீ எஸ்கேப்

Starjan (ஸ்டார்ஜன்) said...

Best Wishes...

Abhi said...

கதை ரொம்ப நல்லாயிருக்கு. பளாட் பிடிச்சிருந்தது. நானும் எழுதியிருக்கேன்.. படிச்சுப் பாருங்க

http://moonramkonam.blogspot.com/2010/10/tamil-short-story-saval-sirukathai.html

R. Gopi said...

\\"காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் சிவா என்ற பரந்தாமன்."\\

இங்கதான் மிஸ் பண்ணிட்டீங்க. மத்தபடி சூப்பர்.

Anonymous said...

சுவிசில் நடக்கும் ஊழல்களை தட்டிக்கேட்க வருகிறான் தம்பி!
www.thambi.tk