Friday, September 17, 2010

ஆணாதிக்கம்

பரபரப்பே இல்லாம பப்பரபான்னு முழிக்கும் அந்த மிகப்பெரிய மருத்துவ மனையின் ஓரத்திலே சுத்தம் கிலோ என்ன விலையென்று கேட்க நினைக்கும் மருத்துவரின் அறையிலே நோய் இல்லாம ஒருவர் மருத்துவரிடம் பேசுவதை ஒட்டு கேட்கும் கடமை நமக்கு இருப்பதால அங்க போகலாம் வாங்க.

மருத்துவ அறையிலே நோயாளிக்கு மருத்துவர் பாடம் எடுத்துக் கொண்டு இருந்தார்.அந்த பச்ச நிற எழுத்து என்னன்னு சொல்லுங்க "ந", அந்த கருப்பு நிற எழுத்து என்னன்னு சொல்லுங்க "ச", அவரின் பதிலைக்கேட்டு விட்டு மருத்துவர் அவரிடம் "எல்லா எழுத்தையும் சரியா தானே படிக்குறீங்க, அப்புறம் ஏன் கண்ணிலே குறைன்னு சொல்லுறீங்க"

நோயாளி பதில் சொல்லும் முன்னே செவிலி ஓடிவந்து மருத்துவரே உங்க கண் கண்ணாடியை மறந்து வச்சிட்டு வந்துடீங்க என்று சொல்லிவிட்டு கண்ணாடியை கொடுத்து விட்டு சென்றாள். அதை மாட்டி விட்டு, பலகையை மீண்டும் பார்த்துவிட்டு

"பலகையிலே ஒண்ணுமே இல்லையே, அப்புறம் எப்படி ந, ச எல்லாம் சொன்னீங்க"   

"மருத்துவரே எனக்கு எழுதப் படிக்க தெரியாது, நான் சும்மா குத்துமதிப்பா சொல்லிட்டு இருக்கேன்"

உங்களுக்கு கண்ணிலே கண்டிப்பா குறைதான், நான் எழுதிதருகிற சோதனை எல்லாம் எடுத்திட்டு நாளைக்கு வந்து பாருங்க, உடனே அவர்

"மருத்துவரே உங்க கண்ணாடியைப் பார்த்த உடனே என்னோட கண் சரியாப் போச்சி, உங்க உதவிக்கு ரெம்ப நன்றி" என்று சொல்லி ஓடியே விட்டார்.

அடுத்து ஐந்து நிமிடத்திலே மருத்துவரிடம் செவிலி வந்து "ஐயா ஒரு பெண் உங்களைப் பார்க்கணுமுன்னு இருக்குறாங்க"

"அவங்களுக்கு என்ன பிரச்சனை?"

"ஆட்டையைப் போடுற அளவுக்கு உடம்பிலே எல்லாம் ஒண்ணும் பிரச்சனை இல்லையாம், இருந்தாலும் பார்க்கணுமாம்"

"இன்னைக்கு கல்லா கட்ட விடமாட்டாங்க போல, வேற யாரும் நோயாளி இருக்காங்களா ?"

"நம்ம மருத்துவமனையிலே இருந்து ஒரு மெயில் துரத்துக்கு ஆள் நடமாட்டமே இல்லை"

"சரி வரச்சொல்"

உள்ளே வந்த அந்த பெண்மணி கொஞ்சம் நேரம் அறையை நோட்டம்விட்டாள், பொறுமை இழந்த மருத்துவர் என்ன தேடுறீங்கன்னு சொன்னா நானும் ௬ட சேர்ந்து தேடுவேன்.

"என்ன தேடுறேன்னு எனக்கே தெரியலை"   

"அப்ப நீங்க போக வேண்டிய இடம் வேற"

மருத்துவரே என் கதையை கேட்டுட்டு முடிவு பண்ணுங்கன்னு சொல்லிட்டு அவரு பதில் சொல்லும் முன்னாடியே

"ஐயா சமத்துக்கும், சரிசமத்துக்கும் என்ன வித்தியாசம்?"

"சமமுன்னா, உயரம் எடையிலே சமமா இருக்கிறது, சரி சமமுன்னா நடை, உடை பாவனைகளிலே இருந்து பழக்க வழக்க வேலை எல்லாத்திலையும் சமம், நீங்க செய்யுற எல்லா வேலையையும்  சரி சமமா செய்யுறது"

"ஆக நான் ஒரு நாள் துணி துவைச்சா"

"சரிசமம் அடுத்த நாள் துவைக்கணும்"

"நான் ஒரு நாள் சோறு பொங்கினா?"

"சரிசமம் அடுத்த நாள் சோறு பொங்கணும்"

என்னோட பிரச்சனையே இதுதான்னு அழ ஆரம்பித்தவள் நிப்பாட்டவே இல்லை, மருத்துவனை கண்ணீர்ல மூழ்கி விடக்௬டாது என்ற கவலையிலே மருத்துவர்

"இப்ப ஏன் நீ உன் மாமியார் செத்த மாதிரியே அழுவுறியே"

"என் மாமியா செத்த அன்னைக்கு நான் அழவே இல்லை"

"சரி விட்டத்தை பிடிக்கலாம், இப்ப வரைக்கும் என்ன பிரச்சனைன்னு தெரியலை"

"ஐயா ஒரு மனுஷன் ஊரிலே இருக்கிற பொம்பளைகிட்ட எல்லாம் போய், பெண் அப்படி சொம்பு அடிக்கணும், இப்படி சொம்பு அடிக்கணுமுன்னு சொல்லுறவங்க, தான் வீட்டு பெண்ணையும் அதே சொம்பை கொடுத்து அடிக்க சொல்லனுமா வேண்டாமா?"

"இருந்த சொம்பைஎல்லாம் ஊருக்குள்ளே கொடுத்து இருப்பாரு,அதும் இல்லாம ஊரு சொம்புக்கு பால் ஊத்தினா, உன் வீட்டு சொம்பு தானே வளருமுன்னு நினைச்சி இருக்கலாம்"

"ஆக உபதேசம் ஊருக்கு தான், வீட்டிக்கு வந்தா, டீ போட்டியாடி, சட்டைய துவச்சியாடி, துணிய மடிச்சியாடி ன்னு பல டி போட்டு டீ குடிப்பாங்க"

"இருக்கலாம்.. இல்லாமலும் இருக்கலாம், அதுக்கும் உன்னோட பிரச்சனைக்கும் என்ன சம்பந்தம்"

"மருத்துவரே நான் இன்னும் சொம்பு அடிச்சி முடிக்கலை, அதுக்குள்ளேயும் நீங்க எதிர் சொம்பு அடிச்சா எப்படி?"

"யம்மா தாயே நீ சொம்பு அடிக்கும் முன்னே நான் ஒரு குத்துவசனம் சொல்லிக்கிறேன், அடுத்தவங்களுக்கு யோசனை சொல்லுறவங்க, அவங்க பேச்சை அவங்களே கேட்ட மாட்டாங்க, ஊருக்குள்ளே வெள்ளையும் சொள்ளையுமா திரியுற மனுஷங்களுக்கு, துண்டு எடுத்துகொடுக்கவும், சொம்பு எடுத்து கொடுக்கவும் ஆள் தேவை, அந்த ஆள் மனைவியா இருந்தா என்ன தப்பு? "

"அவரே அம்புட்டு வேஷம் போட்டா, அவரோட வாரிசுகள் எம்புட்டு வேஷம் போடுவாங்க"

"இது என்ன புதுசாவா நடக்கு, கால காலமா அப்படித்தானே நடக்கு, சூரியன் கிழக்கே உதிச்சி, மேக்கால மறையுற மாதிரி இதும் ஒரு விதி, அதுவே உனக்கு தலைவிதியா வந்து இருக்கு"

"விதியை மதியால வெல்லுவேன்னு இந்த சொம்பு மேல ஆணை"

"படம் இடைவேளை விடும் போது பேசுற மாதிரியே சொல்லுறியே"

"அந்த விதி என் கையிலே இருக்கு, அதனால் கலைக்கப் போறேன்"

"ஆமா ஆட்டையை கலைச்சிட்டு பொழைப்பைப் பார்க்கலாம்"

"அஸ்திவாரத்தையே கலைக்க சொல்லுறேன்"

"நகராட்சியிலே அனுமதி வாங்கிட்டு வீட்டை இடி, இப்போதைக்கு நீ  போகலாம்"

"மருத்துவரே இன்னும் படமே முடியலை,அதுக்குள்ளே வணக்கம் போட்டா எப்படி?, நான் சொம்பை மூக்கை சுத்தி அடிக்கிறது உங்களுக்கு புரியலையா, நான் சொல்கிறது என்னோட கருவை கலைக்க "

"என்னவோ ஆப்பாயில் கரு மாதிரி சொல்லுறியே"

"பெண் உரிமை காவலர் என்று பேசும் ஆணாதிக்கவாதிக்கு பிறக்கும் ஆண் வாரிசும், இப்படி ஒரு போலியா இந்த ஊருக்குள்ள நடமாட எனக்கு விருப்பம் இல்லை, அதனாலே என் வயத்திலே இருக்கிற ஆண் குழந்தையை கலைச்சிடுங்க"

"உலகத்திலே ஆண் பிள்ளைய கலைக்க சொன்ன முத பெண் நீதான், உனக்கு அமெரிக்காவிலே பாராட்டு விழா எடுக்கணும், இருந்தாலும் ஆணாதிக்கம், பன்னிகுட்டி, புண்ணாக்குன்னு என்னவோ சொல்லுற, ஆனா எனக்கு ஒண்ணுமே புரியலை,உன் கதையைக் கேட்ட என்னை ஊரிலே இருக்கிற சொம்புகளை வச்சி எல்லாம் நல்லா அடிக்கணும்"

"இந்த உலகத்திலே ஆண் இல்லாம பெண் இல்ல, பெண் இல்லாம ஆண் இல்ல"

"நீங்க ஆணாதிக்கவாதியா, ஆண்ன்னு முதல்ல சொல்லுறீங்க"

"நான் ஆட்டையப்போடுறவாதி"

"அப்ப மீட்டரை வாங்கிட்டு, ஆட்டைய கலைங்க"

"இப்படி ஒரு மன உறுதியோட இருக்கிற பெண்ணை இப்பத்தான் பார்க்கிறேன், சரி உனக்கு ஆண் பிள்ளைதான்ன்னு எப்படி தெரியும்"

"என்னோட பரிசோதனை சான்று இந்தாங்க, பத்து இடத்திலே கட்டி சரி பார்த்துக்கிட்டேன், எனக்கு பெண் குழைந்தை தான் வேண்டுமுன்னு, கோவில்ல வாங்கின கயறு, ஆலயத்திலே வாங்கின சிலுவை, தர்காவிலே வாங்கின தாயத்து, எல்லாம் இருந்தும், நான் வேண்டினது நடக்கலை"

"மருத்துவர் ஆய்வு சான்றை வாங்கி விட்டு, ஈஸ்ட்ரோஜென், வேட்ரோஜென், பக்கிரோஜன்"

"என்ன மருத்துவர் நீங்க சொல்லுறது எனக்கு புரியவே இல்லையே" 

"நாங்க எழுதி கொடுக்குற மருந்தும், ஆய்வு சான்றிதழும் ஒண்ணுதான், உனக்கு புள்ளைய மாத்த மாத்திரை என்கிட்டே இருக்கு,நான் கொடுக்கிற மாத்திரையை ஒரு மாசம் சாப்பிடு எல்லாம் சரியாப் போகும்"

"புள்ளை வேண்டாமுன்னு நினைச்சி வந்த எனக்கு ஒரு நல்ல பதில் சொன்ன நீங்க தெய்வம்"

"அதுக்காக அலுவலகத்திலே இருக்கிற எதையும் ஆட்டையப் போட்டுட்டு கையிலே சுத்திகிட்டு அலையாதே"

மருந்து சீட்டு எழுதி கொடுத்துவிட்டு அவள் சென்றதும் வந்த செவிலி

"என்ன மருத்துவரே வைட்டமின் மாத்திரை எழுதிகொடுத்துவிட்டு, என்னவோ மலைய நகர்த்தி வச்ச சந்தோசமா இருக்கீங்க"

"சிலதை படிக்க நல்லா இருக்கும், ஆனா நடைமுறை படுத்த முடியாது, சிலது நடைமுறைக்கு வந்தா பார்க்க முடியாது"

"மருத்துவ பின்நவீனத்துவம் மாதிரி தெரியுது"

"ஆமா.. ஆமா" 


12 கருத்துக்கள்:

பழமைபேசி said...

தளபதி... வழக்கம் போல கிளப்புறீங்க.... நடுவுல கொஞ்சம், வெட்டி சீரமைச்சீங்கன்னா...இன்னும் சிறப்பா இருக்கும்!!!

பவள சங்கரி said...

"ஐயா ஒரு மனுஷன் ஊரிலே இருக்கிற பொம்பளைகிட்ட எல்லாம் போய், பெண் அப்படி சொம்பு அடிக்கணும், இப்படி சொம்பு அடிக்கணுமுன்னு சொல்லுறவங்க, தான் வீட்டு பெண்ணையும் அதே சொம்பை கொடுத்து அடிக்க சொல்லனுமா வேண்டாமா?" எப்படீங்க........இவ்ளோ நல்லவரா இருக்கீங்க..........நியாயமாத்தான் எழுதியிருக்கீங்க.......எங்கள் பெண்கள் சங்க மகாசபையிலருந்து ஒரு பூங்கொத்து உங்களுக்கு. வாழ்த்துக்கள்.

Unknown said...

அசத்தல்.. ஒரு ஆணாதிக்கவாதியாக வெட்கப்படுகிறேன்.

velji said...

வித்தியாசமான தாக்குதல்!

vasu balaji said...

//ஊரு சொம்புக்கு பால் ஊத்தினா, உன் வீட்டு சொம்பு தானே வளரும். அடுத்தவங்களுக்கு யோசனை சொல்லுறவங்க, அவங்க பேச்சை அவங்களே கேட்ட மாட்டாங்க, ஊருக்குள்ளே வெள்ளையும் சொள்ளையுமா திரியுற மனுஷங்களுக்கு, துண்டு எடுத்துகொடுக்கவும், சொம்பு எடுத்து கொடுக்கவும் ஆள் தேவை//

தத்துவத் தளபதி நசரேயன் வாழ்க. இந்த குத்து வசனம் ரஜனி பேசிக்கிட்டே ஒரு செம்ப சொழட்டி விடுறாரு. அது ஆணாதிக்கவாதி மண்டையெல்லாம் அடிச்சி நசுங்கிப்போய் அவரு கிட்ட வருது. அப்புடியே ஒரு விரல்ல வாங்கி அந்த தண்ணிய குடிச்சிட்டு ஆகாசத்துல வீசுறாரு. அது தரையில வந்து ணங்னு உக்காரவும் விஷ்க் விஷ்க்னு விரல நீட்டி தீர்ப்பு சொல்றாரு. எக்கோ எஃபக்டு. :))

Unknown said...

நானும் ஒரு ஆணாதிக்கவாதியாக முகிலனைப்போல் வெட்கப்படுகிறேன். நல்லவேளை முகிலன் பொண்டாட்டி பெயர் ஜான்ஸி இல்லை.

Unknown said...

வானம்பாடிகள். அரசு ஊழியராக நீங்கள் தேச்சு ஓட்டையான மர பெஞ்சு சொல்லும், நீங்கள் எத்தனை தத்துவும் உதிர்த்திருக்கிறீர்கள் என்று.

எல் கே said...

avvvv

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஊரு சொம்புக்கு பால் ஊத்தினா, உன் வீட்டு சொம்பு தானே வளரும்.//

:)))))

'பரிவை' சே.குமார் said...

வித்தியாசமான தாக்குதல்!

ராஜ நடராஜன் said...

உங்களுக்கும் ஆணாதிக்கத்திற்கும் என்ன சம்பந்தம்:)

அப்பாவி தங்கமணி said...

காப்பாத்துங்க... காப்பாத்துங்க... இந்த டாக்டர்கிட்ட இருந்து காப்பாத்துங்க...