Sunday, September 19, 2010

இல்லாத தொலைக்காட்சிக்கு பொல்லாத பேட்டி


தொகுப்பாளர் :இன்றைக்கு நம்ம மார்னிங் ப்ளோவர் ல சந்திக்கப் போறது சிறந்த சிறுகதை எழுத்தாளர், சீரிய ஆராய்ச்சியாளர், முற்போக்கு சிந்தனையாளர் என இப்படி எந்த ஒரு தகுதியும் இல்லாத சுயமோகப் பதிவர் நசரேயன்,அவரை  நமக்காக கருத்தாளமிக்க பதில்களை தர தயாராக உள்ளார், அவரை நாம் பேட்டி காண்பதிலே மட்டற்ற மகிழ்ச்சி.    

கேள்வி: கடந்த பத்துவருசமா அமெரிக்காவிலே இருக்குறீங்க, அங்க இருக்கிற கலாச்சாரம் பத்தி கொஞ்சம் சொல்லமுடியுமா? 

பதில்: நம்ம ஊரு படத்திலே வருகிற குத்துப் பாட்டுக்கு போடுகிற உடைகள் எல்லாம், அவங்களோட சாதாரண உடை, முத்தம் பார்க்க திரை அரங்கம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை, நடுத்தெருவிலே கொடுப்பாங்க, நாம நேரிலே பார்த்து கண்ணுக்கு விருந்து கொடுக்கலாம்

கேள்வி:  அமெரிக்க வாழ்க்கையை எப்படி தேர்ந்து எடுத்தீங்க?

பதில்: அமெரிக்க வரை படத்தை தலையிலே வச்சி தினமும் படுப்பேன், அவங்க பேசுற மாதிரி நாக்கை சுழட்டி சுழட்டி பேசுவேன், ரெம்ப கஷ்டப்பட்டேன், இங்கிலிபிசு சரியாப் படிக்கணுமுன்னு டுடோரியல் கல்லூரி எல்லாம் போய் படிச்சேன், என்னோட கடின உழைப்புக்கு பலன் இன்றைக்கு அமெரிக்க மண்ணை சட்டை பையிலே வச்சி சுத்திகிட்டு இருக்கேன்.அமெரிக்க மண்ணை எடுத்து சட்டையிலே போட்ட நேரம், சிங்கப்பூர், மலேசிய, பிரித்தானியா மண் எல்லாம் சட்டியிலே தன்னாலே வந்துவிட்டது.

கேள்வி :அமெரிக்காவிலே நீங்க என்ன வேலை பார்க்குறீங்க?

பதில் :சொல்லிக்கிற அளவுக்கு ஒண்ணும் பெரிய வேலை இல்லைங்க, காலையிலே பஸ்ல கும்மி, அலுவலத்திலே கடைகளிலே கும்மி, வீட்டு வந்து மறுபடியும் பஸ்ல கும்மி, கூகுளே ஆண்டவர் சரியா வேலை செய்யுறாரான்னு கண்காணிப்பதுதான் என்னோட முக்கிய வேலை.இந்த இடைவிடாத அடைமழை பணிகளுக்கிடையே சில மணித்துளிகள் அலுவலகவேலையும் செய்வேன். 

கேள்வி :பத்து வருடமா நீங்க அமெரிக்காவிலே இருக்கிறதாலே, உங்களுக்கு அங்கே இருக்கிற தமிழர்களின் வாழ்க்கை முறை எப்படி இருக்கு?

பதில் : வீட்டிலே தமிழ் மருத்துக்கு ௬ட பேசமாட்டோம், ஆனா தமிழ் பேசுகிறவர்களிடம் என் பையனுக்கு/பெண்ணுக்கு தமிழே தெரியாதுன்னு பெருமையா சொல்லுவோம், தப்பித்தவறி யாரவது வீட்டிலே தமிழ் பேசினா என்ன,ஆங்கிலம் தான் வீட்டை விட்டு வெளியே வந்தாலே கிடைக்கிறதே என்ற கேள்விகள்  கேட்டா, அவங்க வீட்டு பக்கமே தலை வச்சி படுக்கிறதே இல்லை. 

கேள்வி :புலம் பெயர்ந்த தமிழர் களின் அரசியல் ஆர்வம் எப்படி இருக்கு ?

பதில் : கொஞ்சம் கொஞ்சமா களம் இறங்கிக்கிட்டு இருக்காங்க, அரசியல் கோனார் உரை எல்லாம் படிக்கிறாங்க, இன்னும் முழு விச்சிலே செயல் பட ஆரம்பிக்கலை, ஆனா வருங்கால சந்ததிகள் களத்திலே இறங்கி, தாய் நாட்டுக்கும், மாற்றான் தாய் நாட்டுக்கும் நிறையை சேவைகள் செய்வார்கள் என்ற அளவு கடந்த நம்பிக்கை இருக்கு. 

கேள்வி : வடை அமெரிக்காவிலே சங்கம் வச்சி தமிழ் வளர்க்கிறதாக கேள்விப்பட்டோம், அதை பற்றி கொஞ்சம் புளி போட்டு விளக்க முடியுமா?

பதில் : புளின்னதும் எங்க ஊரு ஞாபகம் வந்து விட்டது கண்ணுல தூசி விழுந்து விட்டது, அதன் கண் கலங்கி போச்சி, சரி .. நான் கேள்விக்கு வாறன், பஸ்,கடை இப்படி போற வார இடமெல்லாம் நிறைய கும்மி அடிப்போம், புது ஆள் வந்தா உள்ளேன் அம்மா/ஐயா சொல்லி வணக்கம் வைப்போம், அதுக்கு பதில் வணக்கம் வைக்க அவங்க வருவாங்க, அப்புறமா ஓட்டு போடுவோம், பதில் ஓட்டு போடுவாங்க, ஒரு ஏழு பேரு வந்த உடனே பிரபலம் ஆகி தமிழ் நல்லா வளர்ப்போம்.அதுமட்டுமில்லாம தெரிஞ்சவங்க, போற வாரவங்களிடம் மின் அஞ்சல் அனுப்பி வைப்போம், நிறைய பேரை திரும்பி பார்க்க வைத்து தமிழ் வளர்க்கிறோம். இதையெல்லாம் செய்ததினாலே எனக்கு கடந்த ஆண்டு கும்மி செயல் வீரர் என்ற பட்டம் கொடுத்தாங்க    

 கேள்வி : சங்கம் தான் தமிழ் வளர்ப்பின் அங்கம், நிறைய தமிழர்களை சந்திக்கலாம்,இங்க இருந்து போன தமிழர்களுக்கும், அங்கேயே பிறந்து வளர்ந்த தமிழர்களுக்கும் கலாச்சார மற்றம் என்ன?

பதில் : ரெம்ப சுலபமா பதில் சொல்லணுமுன்னா, நம்ம ஊரிலே பண்ணுற எல்லாத்தையும் தப்பு தப்பா பண்ணினா, அமெரிக்காவிலே அது சரியா இருக்கும், உதாரணமா நம்ம ஊரிலே இடதுபக்கம் ஓடுற வண்டி, அங்கே வலது பக்கம் ஓடும், கிலோ மீட்டரை மைல்னு சொல்லணும், சொல்சியசை,பாரன்ஹிட்னு சொல்லணும் அவ்வளவுதான். இங்க இட்லி சாப்பிடுறவங்க,அங்க பிஸா சாப்பிடுவாங்க,இங்க சட்டியிலே வைக்கிற கோழி கறி, அங்க வாளியிலே தருவாங்க. நம்ம ஊரிலே குத்துபாட்டு, தொடை ஆட்டம் எல்லாம் படத்திலே வரும், அங்க நீங்க சல்ஷா நடனம் ஆடிக்கிட்டு தொடை ஆட்டம் நேரிலே பார்க்கலாம்.  


கேள்வி:அமெரிக்கா போக வேண்டிய வழி முறைகள் என்ன ?

பதில்:ஒரு பெரிய விசயமே இல்லை, இந்தியப் பெருங்கடல் இருந்து கள்ளத்தோணி எடுத்து அட்லான்டிக் கடல் வழிய மெக்ஸிகோ வந்துட்டீங்கன்னா, அங்க இருந்து சுவர் ஏறி குதிச்சா அமெரிக்கா தான், அப்படியும் இல்லைனா யாரைவது பிடிச்சி சுற்றுலா விசா எடுத்து அமெரிக்கா வந்து இறங்கனும், வந்த உடனே கடவுச்சீட்டை கிழிச்சி போட்டுடீன்கன்னா திருட்டுத்தனமா தங்கலாம், இதையும் விட்டா மின் அஞ்சல், உரையாடி வழியா யாராவது வெள்ளையம்மாக்கு துண்டு போட்டு உசார் பண்ணிட்டீங்கன்னா, நிரந்தர குடியுரிமை வாங்கலாம்.

இவ்வளவு நேரமா உங்களுடைய பொன்னான நேரத்தை ஒதுக்கி  இந்த பேட்டியை ரசித்த(?) உங்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி.


16 கருத்துக்கள்:

Unknown said...

கலக்கல் பேட்டி.. டிவியையே இழுத்து மூடிட்டதா கேள்விப்பட்டேன்.

vasu balaji said...

பேட்டி எடுத்தவன் மட்டும் சிக்கினான்...ஆஃபிஸ்ல வந்து வச்சிக்கறேன் மிச்சக் கச்சேரி.

Anonymous said...

அதானே . பேட்டி எடுத்தது யாருன்னு முதல்ல சொல்லுங்க

Chitra said...

இதையும் விட்டா மின் அஞ்சல், உரையாடி வழியா யாராவது வெள்ளையம்மாக்கு துண்டு போட்டு உசார் பண்ணிட்டீங்கன்னா, நிரந்தர குடியுரிமை வாங்கலாம்.


.....இதுக்கு முன்னால எதும் consultant கம்பனில HR வேலை பாத்தீங்களா? இந்த கலக்கு கலக்கி இருக்கீங்க..... ஹா,ஹா,ஹா,ஹா....

thiyaa said...

கலக்கல் பேட்டி..

சாந்தி மாரியப்பன் said...

பேட்டிக்கு நடுவுல வெளம்பரமெல்லாம் ஒண்ணும் வரதில்லையா :-)))))

Anonymous said...

//வீட்டிலே தமிழ் மருத்துக்கு ௬ட பேசமாட்டோம், ஆனா தமிழ் பேசுகிறவர்களிடம் என் பையனுக்கு/பெண்ணுக்கு தமிழே தெரியாதுன்னு பெருமையா சொல்லுவோம், தப்பித்தவறி யாரவது வீட்டிலே தமிழ் பேசினா என்ன,ஆங்கிலம் தான் வீட்டை விட்டு வெளியே வந்தாலே கிடைக்கிறதே என்ற கேள்விகள் கேட்டா, அவங்க வீட்டு பக்கமே தலை வச்சி படுக்கிறதே இல்லை. //

சரியா சொன்னீங்க.... புலம் பெயர் மண்ணில் தமிழ் வளர பாடு படும் அண்ணன் தளபதி புளியங்குடியார் வாழ்க.....

அஹமது இர்ஷாத் said...

ஆமா கொல்லாமல் கொல்றது இதானா சும்மா கேட்டேன்..

Anonymous said...

முடியலடா சாமி... கலக்கல் தோழரே...

பழமைபேசி said...

ஆகா... வி.வி.சி... இஃகி

Unknown said...

கும்மியோ கும்மி ....

க.பாலாசி said...

எல்லாமே லொல்லு....

T.V.ராதாகிருஷ்ணன் said...

கலக்கல் பேட்டி

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

சூப்பர் பேட்டி... வாழ்க தமிழ் வளர்க தமிழ்... மீ எஸ்கேப்... (where is "பறவை முனியம்மா" பேட்டி?)

நசரேயன் said...

// (where is "பறவை முனியம்மா" பேட்டி?)//

நீங்க மறந்துடீங்கன்னு நினைச்சேன்

Vijiskitchencreations said...

எப்படிங்க நசரேயன் பேட்டிக்கு பதில் சூப்பரா எடுத்து விடறிங்க. நிங்க ஏதாவது க்ராஷ் கோர்ஸ் எடுக்கறிங்களா.