Monday, September 6, 2010

பாட்டி சுட்ட வடை - முப்பரிமாண பார்வைபொறுப்பு அறிவித்தல் :
நீங்கள் யாரவது உங்களை எலக்கியவாதி என்றோ, புரட்சியாளர் என்றோ நினைத்தால், இந்த இடுகையை தவிர்ப்பது நலம், தலைப்புக்கு உதவிய பாலா அண்ணனுக்கு நன்றி.இப்படிக்கு கடையிலே சரக்கு இல்லைன்னாலும், பொறுப்பா பொழைப்பை ஓட்டுவோர் சங்கம்  

முப்பரிமாணம், முக்கோணம் எல்லாம் கணக்கிலே படித்து இருப்போம்,நான் ஒரு கணக்கு சீத்தலை சாத்தனார் என்பதாலே, எதை படிச்சாலும் வாழ்கையிலே நடைமுறை படுத்த முடியுமான்னு யோசிப்பேன், அதனாலே தான் மின்னணு பொறியியல் படிச்சிட்டு, கணிப்பொறியிலே எலிப்பொறியை வச்சி வேலை பார்க்கிறேன்.இந்த முப்பரிமாணத்தை ஆராய்ச்சி செய்து முத்தாய் கடையிலே ஏத்தனுமுனு  ரெம்பநாளா ஆசை, அவா, கொலைவெறி. இதுக்காக முப்பரிமாணம் கண்ட முதறிஞர் பட்டம் எல்லாம் வேண்டாம் என தாழ்மையோட(நான் ரெம்ப அடக்க ஒடுக்கமானவன்) கேட்டுக்கொள்கிறேன். 

சின்ன வயசிலே எல்லோரும் பாட்டி வடை சுட்ட கதையை கேள்விப்பட்டு இருப்போம், வடை, காக்கா,நரின்னு பெருசுகள் சொல்லிக்கொடுத்ததை கேட்டுக் கொண்டே வீட்டிலே வடை சாப்பிட்டு இருந்திருப்போம், கதையின் கரு ஆப்பாயில் போடும் போது உடையாம இருக்கிற நான் பரிச்சையிலே வாங்கின  முட்டை மாதிரி மனசிலே பதிந்து இருக்கும், இந்த கதையை புரட்சியாளர், இலக்கியவாதி, யதார்த்தவாதி மூவரும் கொலைவெறியோட சிந்திக்கும் போது நடப்பதுவே இந்த ஆராய்ச்சி மணி.  உங்க அனுமதியோட இங்கிட்டு ஒரு குத்துவசனம் சொல்லிகிறேன் 

மணி அடிச்சா சோறு வீட்டிலே 
மணி அடிச்சா ஆராய்ச்சி, கடையிலே 

பாட்டி வடை நிறைய சுட்டு விற்பாள், அதிலே ஒரு வடையை ஆட்டையப் போட்டாலும், பாட்டியின் தொழிலைப் பாதிக்காது, ஆனா பாவம் பசியோட இருந்த காக்கா ஒண்ணை கொத்திகிட்டு போக, அதை ஒரு கடி ௬ட கடிக்க விடாம, நரி உசார் பண்ணிட்டு போய்டுச்சி, நல்லா கவனிங்க காக்கா உருவத்திலே சின்னது, நரி பெருசு, சிருசுகிட்ட இருந்து பெருசு பிடிங்கி தின்னால், புரட்சியாளன் சும்மா இருப்பானா, சும்மா மெல்லுகிற வாய்க்கு அவல் கிடைத்த கதைதான், ஒலிபெருக்கியே இல்லாம நாலு ஊருக்கு கேட்கிற மாதிரி நரிக்கு நாப்பது திட்டு, இல்லாதவன்கிட்ட பிடிங்கி தின்கிற நரியே, உனக்கு பேரு ஒரு கேடா, இனிமேல சேட்டை பண்ணின உன் வாலை வெட்டி காக்கைக்கு போட்டுடுவேன்.நீ நேரப் போனா, உன்னைய குறுக்கால மறிப்பேன், நீ குறுக்கால போனா உன்னை நேரிலே மறிப்பேன். ஊசிப்போன வடையை தின்ன உனக்கு பேதி வந்து பாதியிலே போவாய் அப்படின்னு வசவு கிடைக்கும்.

வடை தின்ன நரிக்கு மட்டுமல்ல, வலியது வாழும் என்ற டார்வின் கொள்கைக்கும் நாலு வசவு வைது அவருக்கும் எதிர் சொம்பு அடிப்பாங்க  அவரு இடஒதுக்கீடு கொடுக்கலைன்னு.

இவங்க பேசுறதை கேட்ட நரி ஒரு வடைக்கே ஒன்பதாயிரம் திட்டு விழுதே, ௬ட ரெண்டு வடைய ஆட்டையப் போட்டு இருந்தால், எனக்கு ௬டு கட்டி இருப்பாங்களோன்னு யோசித்திகிட்டு இருக்கும், பறிகொடுத்த காக்காவோ, நல்லவேளை அது ஊசிப்போன வடை, போன வாரம் சாப்பிட்ட வடைக்கு ரெண்டு நாள் பேதி போச்சி.இவ்வளவு கலவரத்திலும் கிழவி வடை போச்சேன்னு வருத்தப் பட்டுக்கொண்டு இருக்கும்.இங்கிட்டு புரட்சியை விட்டுட்டு இலக்கியத்துக்கு போவோமா?   

இலக்கியவாதின்னு சொல்லும் போதே எல்லோரும் தெரிச்சி ஓடிப்போவாங்க, அம்புட்டுபயம் அவங்க மேல, என்னத்த சொல்ல அப்படி கெடுத்து வச்சி இருக்காங்க, நான் அந்த காலத்திலேயே யார் இலக்கியவாதின்னு ஆராய்ச்சி மணி அடிச்சி வச்சி இருக்கேன், அதகாப்பட்டதாவது இலக்கியவாதி வரும் போதே காக்கைபாடினியார் காகத்தை பத்தி என்ன பாடி இருக்கிறார் தெரியுமா என்று ஆரம்பிப்பார், இலக்கியம் பேசும் போது சும்மா சொம்பு அடிச்சிகிட்டே இருக்கக்௬டாது, அதாவது சங்ககாலம், சங்குகாலம்,முதல் சங்கம், கடைசி சங்கம், பதிவர் சங்கம் போன்ற சங்ககால பாடல்களிலே இருந்து குறிப்பு எடுத்து சொம்பு அடிக்கணும்,  காக்கா ஏன் கருப்பா இருக்கு, நரி ஏன் சிகப்பா இருக்கு என்ற கதைகளை அள்ளிப்போட வேண்டும், இப்படி அள்ளிபோடும்போது உள்ளூர் கதையை எல்லாம் விட வெளிநாட்டு இலக்கியங்களிலே குறிப்பு எடுத்துச் சொல்ல வேண்டும்.  

உதாரணம் சொல்லும் போது அமெரிக்க துரைமாரையோ, பிரித்தானிய துரைமாரையோ பத்திப் பேசினா, இவரும் வெள்ளைக்கார துரைமாருக்குத்தான் சொம்பு அடிக்கிறாரு, ஒண்ணும் புதுசா தெரியலைன்னு வாசகர் வட்டம் எல்லாம் வளைச்சி வளைச்சி கட்டம் கட்டுவாங்க,இதுவரைக்கும் யாருமே சொல்லாத நாட்டின் இலக்கியத்தைப் பேசினா, எல்லோரும் மூக்கு மேல வச்ச விரலை நாக்கு மேல வச்சி விசில் அடிப்பாங்க, அதாவது  உகண்டா இலக்கியவாதி சிகாண்டா காகத்தைப் பத்தி ஒரு பாட்டு படித்து இருக்கிறார்

காகத்தைப் பார்த்து 
கா.. கா என்றேன் 
அது என்னைப் பார்த்து 
க்கா .. க்கா என்று 
கக்கா போய் விட்டது 

என்று சொல்ல வேண்டும், இந்த பாட்டுக்கு உங்களை நோக்கி காகிதம் வரலாம், இல்ல கல்லு வரலாம், ஆனா கிடைச்ச ஒலிபெருக்கியை மட்டும் விடக்௬டாது.ஏன்னா இலக்கியவாதிகள் இழவு வீட்டு விழாவா இருந்தாலும், கல்யாண வீட்டு விழாவா இருந்தாலும் ஒரே மாதிரி தான் இருப்பாங்க. இலக்கியவாதி பேசி முடிக்கும் முன்னே பாட்டி குறட்டை விட்டு தூங்கிடும், நரி இவங்க பேசுறதை கேட்கிறதுக்கு பதிலா, நான் அந்த காக்காவை அடிச்சி சாப்பிட்டு இருக்கலாமுன்னு யோசித்துகிட்டு இருக்கும், காக்கா கடல் கடந்து ஓடியே போய்டும். இலக்கயவாதிக்கு போதுமான அளவுக்கு சொம்பு அடிச்சாச்சி, அடுத்து யதார்த்தவாதியைப் பார்ப்போம்.      

யதார்த்தவாதி வந்த உடனே "ஏ....கிழவி வடை தானே போச்சி, கடையா போச்சி, காக்கா தூக்கிட்டு போன வடையிலே உன் உசுரையா வச்சி இருந்த,பசி உசுரு போகுது ரெண்டு வடை கொடுன்னு சொல்லிட்டு ஒரு வடையை ஆட்டையப் போட்டுட்டுட்டு, தின்ன வடையிலே பாதிக்கு காசை கொடுத்திட்டு, மீதியை 
கணக்கிலே ஏத்த சொல்லிட்டு போய்டுவாங்க.இவருக்கு எலக்கியமும் தெரியாது, வரலாறும் தெரியாது, அந்த அந்த சமயத்திலே என்ன தோணுதோ அதைப் பேசிட்டு போய்டுவாங்க, ஆள் கருப்பா இருந்தாலும், சிகப்பா 
இருந்தாலும் மனசு வெள்ளையாத்தான் இருக்கும்.

இன்றைய ஆராய்ச்சி யோட முடிவுக்கு வந்திட்டோம், இன்னைக்கு நாட்டாமை சொம்பை வீட்டில் வச்சிட்டு வந்ததாலே ரெண்டு மொடக்கு தண்ணியை குடிச்சிட்டு தீர்ப்பு சொல்லமுடியலை, புரட்சி, இலக்கியம், எதார்த்தம் இதிலே எது சிறந்ததுன்னு படிக்கிற ஒண்ணு ரெண்டு பேரோட முடிவுக்கு விட்டுட்டுறேன், வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி சொல்லி விடைபெறுகிறேன் வடையுடன் நன்றி வணக்கம்.
41 கருத்துக்கள்:

ராமலக்ஷ்மி said...

//ரெண்டு வடை கொடுன்னு சொல்லிட்டு ஒரு வடையை ஆட்டையப் போட்டுட்டுட்டு, தின்ன வடையிலே பாதிக்கு காசை கொடுத்திட்டு, மீதியை
கணக்கிலே ஏத்த சொல்லிட்டு//

சூப்பர்:))!

//எது சிறந்ததுன்னு //

எதார்த்தமே:)!

//விடைபெறுகிறேன் வடையுடன் //

போயிட்டு வாங்க!!!

பழமைபேசி said...

//மணி அடிச்சா சோறு வீட்டிலே//

நான் எதுக்கு ஒருத்தரை அடிக்கணும்??

ராமலக்ஷ்மி said...

//அந்த அந்த சமயத்திலே என்ன தோணுதோ அதைப் பேசிட்டு போய்டுவாங்க, ஆள் கருப்பா இருந்தாலும், சிகப்பா இருந்தாலும் மனசு வெள்ளையாத்தான் இருக்கும்.//

அழகு, அந்த மனசும் இந்த எழுத்தும்:)!

துளசி கோபால் said...

ஹைய்யோ ஹைய்யோ.....
நல்லாத்தான் உக்காந்து யோசிக்கிறீங்க:-))))))

Anonymous said...

//அந்த அந்த சமயத்திலே என்ன தோணுதோ அதைப் பேசிட்டு போய்டுவாங்க, ஆள் கருப்பா இருந்தாலும், சிகப்பா
இருந்தாலும் மனசு வெள்ளையாத்தான் இருக்கும்.//

என்னுடைய வாக்கு யதார்த்தவாதிக்கு தான்.... (அண்ணே வோட்டு போட்டாச்சு.. ஒரு 5000USD அனுப்பிச்சிருங்க.....)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\ராமலக்ஷ்மி said...
எதார்த்தமே:)!//

பாருங்க எதார்த்த வாதி எதார்த்தமா ஒரு வரியில் தீர்ப்பு சொல்லியாச்சு.. மற்றவங்க வந்து எதும் சொல்றதுக்குள்ள ஓடிருவோம்.. :)

Unknown said...

super... :)))

sakthi said...

கக்கா ஏன் கருப்பா இருக்கு, நரி ஏன் சிகப்பா இருக்கு என்ற கதைகளை அள்ளிப்போட வேண்டும்,

முதல்ல காக்கான்னு திருத்துங்க இல்லன்னா அர்த்தமே மாறிடும் நசர் அண்ணா

sakthi said...

இதுவரைக்கும் யாருமே சொல்லாத நாட்டின் இலக்கியத்தைப் பேசினா, எல்லோரும் மூக்கு மேல வச்ச விரலை நாக்கு மேல வச்சி விசில் அடிப்பாங்க, அதாவது உகண்டா இலக்கியவாதி சிகாண்டா காகத்தைப் பத்தி ஒரு பாட்டு படித்து இருக்கிறார்
காகத்தைப் பார்த்து கா.. கா என்றேன் அது என்னைப் பார்த்து க்கா .. க்கா என்று கக்கா போய் விட்டது

அண்ணே சூப்பர்

vasu balaji said...

தெய்வமேஏஏஏஏஏ....நீங்க எங்கயோ போய்ட்டீங்க:))
/நீ நேரப் போனா, உன்னைய குறுக்கால மறிப்பேன், நீ குறுக்கால போனா உன்னை நேரிலே மறிப்பேன். /
பொன்னெழுத்தால் பொறிக்கப்பட வேண்டிய வாசகங்கள்.

/காக்க உருவத்திலே சின்னது/
காக்கா காலையும் உடைச்சாச்சா:))
/கக்கா ஏன் கருப்பா இருக்கு,/
காலை மாத்தி மாத்தி உடைச்சு ஆராய்ச்சியா.அல்சரா இருக்கும்:))

/சங்ககாலம், சங்குகாலம்,முதல் சங்கம், கடைசி சங்கம், பதிவர் சங்கம் போன்ற சங்ககால பாடல்களிலே இருந்து குறிப்பு எடுத்து சொம்பு அடிக்கணும்/

அட அட ஒரு ஃப்ளோவா வருதே:))

/காகத்தைப் பார்த்து கா.. கா என்றேன் அது என்னைப் பார்த்து க்கா .. க்கா என்று கக்கா//

விரட்டறதுக்கு துண்டு வீசியிருப்பாரோ. அதுதான் தப்பா புரிஞ்சி வச்சிருக்கோ:))

/புரட்சி, இலக்கியம், எதார்த்தம் இதிலே எது சிறந்ததுன்னு படிக்கிற ஒண்ணு ரெண்டு பேரோட முடிவுக்கு விட்டுட்டுறேன், //

இலக்கிய நயத்தோட எதார்த்தத்துக்கு ஏத்தா மாதிரி புர்ச்சி பண்றதே சிறந்தது என்று ஒரு சொம்பு தண்ணியில பாதிய கொப்புளிச்சி துப்பிட்டு, பாதிய குடிச்சிட்டு தீர்ப்பு சொல்றேன்.
(டிஸ்கி: நாட்டாம தீர்ப்ப மாத்திச் சொல்லு என்ற புரட்சிக்கு செவி சாய்க்கப்படமாட்டாது.

அந்த வாய்ப்பளிச்சவன் சிக்காமலா போய்ருவான். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

Chitra said...

///கதையின் கரு ஆப்பாயில் போடும் போது உடையாம இருக்கிற நான் பரிச்சையிலே வாங்கின முட்டை மாதிரி மனசிலே பதிந்து இருக்கும், இந்த கதையை புரட்சியாளர், இலக்கியவாதி, யதார்த்தவாதி மூவரும் கொலைவெறியோட சிந்திக்கும் போது நடப்பதுவே இந்த ஆராய்ச்சி மணி. ////


....டாக்டர் நசரேயன், வால்க! சாரி, எழுத்து பிழை ஆகி போச்சு... வாழ்க!

a said...

தள : மூணு நாளு லீவு உங்கள இப்படி மாத்திடுச்சே..........

T.V.ராதாகிருஷ்ணன் said...

:)))

சந்தனமுல்லை said...

:-)))) எப்படி நசரேயன்...யப்பா!!

கலகலப்ரியா said...

:)).. செம...

||நல்லா கவனிங்க காக்க உருவத்திலே சின்னது, நரி பெருசு, சிருசுகிட்ட இருந்து பெருசு பிடிங்கி தின்னால், புரட்சியாளன் சும்மா இருப்பானா, சும்மா மெல்லுகிற வாய்க்கு அவல் கிடைத்த கதைதான், ஒலிபெருக்கியே இல்லாம நாலு ஊருக்கு கேட்கிற மாதிரி நரிக்கு நாப்பது திட்டு, இல்லாதவன்கிட்ட பிடிங்கி தின்கிற நரியே, உனக்கு பேரு ஒரு கேடா, இனிமேல சேட்டை பண்ணின உன் வாலை வெட்டி காக்கைக்கு போட்டுடுவேன்.நீ நேரப் போனா, உன்னைய குறுக்கால மறிப்பேன், நீ குறுக்கால போனா உன்னை நேரிலே மறிப்பேன். ||

:o)... நீங்க இலக்கியவாதிதான்... இ.தி.தான்... இ.தி.தான்...

சந்தனமுல்லை said...

முப்பரிமாண மூதறிஞர் என்ற பட்டத்தை நசரேயன் அவர்களுக்கு வழங்குவதில்....பெருமகிழ்ச்சியடைந்து வடைபெறுகிறோம்...ஹிஹி...

பவள சங்கரி said...

சூப்ப்ர்...சூப்பர்.....சான்சே இல்லீங்க...... எப்படிங்க தம்பி இப்படியெல்லாம் திங்க் பண்ண முடியுது உங்களால..........அப்பப்பா.....கிரேட்.......

பவள சங்கரி said...

இவருக்கு எலக்கியமும் தெரியாது, வரலாறும் தெரியாது, அந்த அந்த சமயத்திலே என்ன தோணுதோ அதைப் பேசிட்டு போய்டுவாங்க, ஆள் கருப்பா இருந்தாலும், சிகப்பா இருந்தாலும் மனசு வெள்ளையாத்தான் இருக்கும்............என்னோட ஓட்டு யதார்த்தவாதிக்குத் தாங்க.....ஒரு ஓட்டுக்கு எம்புட்டு தருவீக....ஹி...ஹி...ஹி.....

எல் கே said...

oru ottuku kaasu evvalavu nasaru

அஹமது இர்ஷாத் said...

ரைட்டுங்க..

சாந்தி மாரியப்பன் said...

//இலக்கியவாதி பேசி முடிக்கும் முன்னே பாட்டி குறட்டை விட்டு தூங்கிடும், நரி இவங்க பேசுறதை கேட்கிறதுக்கு பதிலா, நான் அந்த காக்காவை அடிச்சி சாப்பிட்டு இருக்கலாமுன்னு யோசித்துகிட்டு இருக்கும், காக்கா கடல் கடந்து ஓடியே போய்டும்.//

ஜூப்பரேய்ய் :-))))

vasu balaji said...

லேபிள்ள சொம்படித்தல் என்று போடாததை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

'பரிவை' சே.குமார் said...

எழுத்து அழகு...

சூப்பர் அண்ணே.

Unknown said...

தலைப்புக்கே நீங்க இலக்கியவாதி தான்னு முடிசு செய்தாச்சு (வா.பா.)


எதையும் ஒரு இலக்கிய நயத்தோட அனுகனுமுன்னு உங்களுக்கு முதன் முதலா எப்போ தோனிச்சி ...

பெசொவி said...

சூப்பர்! இதே கதையை சொல்லி ஒரு புது நீதியும் சொல்லியிருக்கேன், படியுங்க! http://ulagamahauthamar.blogspot.com/2010/05/blog-post_13.html

இராகவன் நைஜிரியா said...

முதல்ல இந்த கடைக்கு வந்ததற்கு ஒரு ப்ரசண்ட் போட்டுகிறேன்..

இராகவன் நைஜிரியா said...

முப்பரிமாண பார்வை.. ரொம்ப நல்லா இருந்துச்சு...

இது மாதிரி நிறைய கதைகளை முப்பரிமாணம பார்க்காமல்... கூடுதல் பரிமாணங்களில் பார்க்கவும், ஏன் என்றால் நம் அறிவு பரந்து விரிந்தது இல்லையா?

இராகவன் நைஜிரியா said...

// பொறுப்பு அறிவித்தல் :நீங்கள் யாரவது உங்களை எலக்கியவாதி என்றோ, புரட்சியாளர் என்றோ நினைத்தால், இந்த இடுகையை தவிர்ப்பது நலம் //

அப்பாடா நாமெல்லாம் மொக்கைவியாதி.. ச்... சே... மொக்கைவாதிகள்... அதனால் படிக்கலாம்

இராகவன் நைஜிரியா said...

// தலைப்புக்கு உதவிய பாலா அண்ணனுக்கு நன்றி. //

அண்ணே இப்படியெல்லாம் வேற கல்லா கட்டறீங்களா நீங்க... நடக்கட்டும்... நடக்கட்டும்

இராகவன் நைஜிரியா said...

// இப்படிக்கு கடையிலே சரக்கு இல்லைன்னாலும், பொறுப்பா பொழைப்பை ஓட்டுவோர் சங்கம் //

”வடை அமெரிக்கா கிளை” விட்டுப் போச்சே...

இராகவன் நைஜிரியா said...

// முப்பரிமாணம், முக்கோணம் எல்லாம் கணக்கிலே படித்து இருப்போம்,//

அப்படியா.. நான் வரலாறு என நினைச்சு கிட்டு இருந்தேன்.. தகவலுக்கு நன்றி..

ஹேமா said...
This comment has been removed by the author.
ஹேமா said...

நசர்.....சுகம்தானே !உங்களுக்கென்ன வடை சுடத் தெரிஞ்சிருக்கு.இதுதான் யதார்த்தம்.
புரட்சியும்,இலக்கியமும் பேசவோ எழுதவோ நிறையக் கவனமும் உலக அரசியலும் வேணும்.முப்பரிமான அலசல் அசத்தல்.

பழமைபேசி said...

வயிறு வலிக்குது!!!

அப்பாவி தங்கமணி said...

அய்யா ஆராய்ச்சியாளரே உங்க ஆராய்ச்சிக்கு ஒரு எல்லையே இல்லையா... அடுத்த தலைமுறைக்கு பாட்டி கதை போய் சேரனும் அதை உட்டு போடுங்க சாரே... அவ்வ்வ்வவ்... மீ எஸ்கேப்..

பா.ராஜாராம் said...

//காகத்தைப் பார்த்து
கா.. கா என்றேன்
அது என்னைப் பார்த்து
க்கா .. க்கா என்று
கக்கா போய் விட்டது //

:-)))

tottaly, branded boss.

Unknown said...

சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது..

மணிநரேன் said...

இடுகையையும், பின்னூட்டங்களையும் படித்து சிரிச்சிக்கிட்டே இருக்கேன்...:)

கலக்கலா இருக்கு.

ஆட்டையாம்பட்டி அம்பி said...

எந்த புளியங்குடி? திருநெல்வேலி புளியங்குடியா?

அதனால் என்ன..நான் கலாசாராத்தை வைத்துன ஒரு பதிவு போட்டுள்ளேன். உங்கள் கருத்துக்களை சொன்னால் நன்றாக இருக்கும்.

http://tamilkadu.blogspot.com

சிங்கக்குட்டி said...

நாங்க எல்லாம் பெரிய "எலக்கியவாதி " ஆனாலும் விடாம படிச்சுட்டோம்ல :-)

Vijiskitchencreations said...

எப்படிங்க இப்படி எல்லாம் யோசிச்சு எழுதறிங்க. வாழ்க தமிழ்& நசரேயன்.

நல்லா எழுதிட்டிங்க.