Thursday, September 9, 2010

முதல் முத்தம்
பெரியோர்களே தாய்மார்களே முதன்னு சொன்னதும் எல்லோருக்கும் முதல்ல பள்ளி௬டம் போனதும், முத்த பிறந்த நாள், முதல் சம்பாத்தியம் எல்லாம் ஞாபகம் வரும், ஆனா எனக்கு என்னோவோ அதெல்லாம் நினைக்க முடியலை, நடந்து பல வருஷம் ஆனதினாலே என்னவோ எல்லாம் அழிஞ்சி போச்சி, ஆனாலும் இன்னும் ஒரு சில ஆணிகள், பச்சமரத்திலே அடித்த மாதிரி நெஞ்சுக்குள்ளே இருக்கு, அதனால இதயத்திலே எல்லாம் கோளாறு இல்லை, இன்னைய வரைக்கும் நல்லாத்தான் இருக்கு. இன்றைக்கு காதலர்கள் பூங்கா, கடற்கரை என்று சுத்திகொண்டு இருந்தாலும், அந்த காலத்திலேயே இந்த வித புரட்சிகளைப் பண்ணி முன்னோடியாக இருந்து இருக்கிறேன்.

பச்சமரத்தாணி நடந்த காலத்திலேயே நான் வேலை இல்லாம சென்னையை சுத்தி நடந்து வந்தேன்,காலையிலே எழுந்து வேலை இல்லைனாலும் கையிலே ஒரு பையை எடுத்துகொண்டு அலுவலகங்களுக்கு ஏறி இறங்குவதே வேலை, நான் உலகமகா கெட்டிக்காரன் என்ற நம்பிக்கை இருந்தாலும், நான் வேலை வேண்டி விண்ணப்பம் அனுப்பும் அலுவலர்களுக்கு என்னோவோ என் மேல கொஞ்சம் ௬ட நம்பிக்கை இருந்த மாதிரி தெரியலை. இருந்தாலும் பையை வைத்து கொண்டு தெரு நாய் மாதிரி சுத்தினேன். ஒரு நாள் இப்படித்தான் வழக்கம் போல ஒரு அலுவலகத்துக்கு சென்று வேலைக்கு தயார் செய்த கடிதத்தை எடுத்து கொண்டு சென்றேன்.

செல்லும் போது திரும்பி வந்து கொண்டு இருந்த அழகிய பெண்ணைப் பார்த்து வேலை கேட்டேன், அவங்க பதிலுக்கு நானே வேலைதேடித்தான் வந்தேன், ஆனா இல்லைன்னு சொல்லிட்டாங்க, நானும் திரும்பிட்டேன், அவங்க நீங்க ரெசுயும் கொடுக்கலையா ன்னு கேட்டதுக்கு 

"உங்களைமாதிரி அழகான பெண்ணுக்கு கிடைக்காத வேலை எனக்கு கிடைக்குமா?"

"அழகுக்கும் திறமைக்கும் சம்பந்தம் இல்லை, நம்பிக்கை இருந்தா, மேகத்திலே ஏறி சந்திரமண்டலம் போகலாமுன்னு சொன்னாங்க", அந்த குத்துவசனத்தை இன்னைய வரைக்கும் பின் பற்றுகிறேன். 

அந்த குத்துவசனம் என் மனத்தைக் குத்திபோட்டாலும்,  அவளைப்பார்த்ததும் காதல் அலை எல்லாம் மனசிலே அடிக்கலை, இதயத்துடிப்பு அதிகமாகி இதயம் நட்டு கழண்டு தொண்டை வரைக்கும் வரலை, இருந்தாலும் அவள் அழகு என்னை குதறிப்போட்டது, கொஞ்சம் சப்ப பிகரா இருந்த அங்கிட்டு விட்டுட்டு ஓடிப்போய் இருப்பேன். வேலைதான் கிடைக்கலை, கடைலையாவது போடலாமேன்னு நானும் அவ கூடவே பேருந்து நிறுத்தம் வரை சென்றேன். 

விதி மனுசங்களை எப்படி சேர்த்து வைக்குது பாருங்க, அடுத்த நாளும் நான் அவளை வேறொரு இடத்திலே சந்தித்தேன். இப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த கடவுளுக்கு நன்றின்னு சொல்லி புளுகுணி மூட்டையா இருக்க விரும்பலை, நேத்து அவளை பேருந்திலே அனுப்பிவிட்டு அவள் பின்னால் அடுத்த பேருந்திலே தொடர்ந்து சென்று அவள் இருப்பிடம் கண்டுபிடித்து, இன்று அதிகாலையிலே அவள் தெருப்பக்கம் சென்று காத்து இருந்து கண்டுபிடித்து எதோ எதிர்பாராத வித சந்திப்பு என்று படம் போட்டேன் அவளிடம், நோகாம எப்படி நொங்கு திங்க முடியும் என்ற பழமொழியையும் ஞாபகப் படுத்த விரும்புகிறேன்.அன்றிலிருந்து எங்கள் சந்திப்புகள் தொடர்ந்தது.

ரெண்டு பெரும் வேலை தேடி முடிச்ச உடனே நேராக மெரீனா கடற்கரைக்கு செல்வோம், வேலைக்கு துண்டு போட அலைந்த நான் அவளுக்கு துண்டு போட்டேன், ஆனா எப்படியோ துண்டு சிக்கிருச்சி, வேலை தேடுதல் வேலை குறைந்து, ரெண்டு பேரும் ஊர் சுத்த ஆரம்பித்தோம், ஒரு நாள் இப்படித்தான் கடற்கரை மண்ணை அள்ளிபோட்டு எண்ணிகிட்டு இருக்கும் போது அவளோட தலை முடியை கவனித்தேன். அடுத்த நாளே பல கடைகளிலே தேடி அவளுக்கு ஒரு பரிசு வாங்கி வைத்து கொண்டு அவளிடம் கொடுத்தேன்.

அதை ஆர்வமா வாங்கி பார்த்துவிட்டு என்னை கொலைவெறியா பார்த்தாள். 
உலகத்திலே ஈறுவலியை காதலிக்கு பரிசா கொடுத்த முதல் காதலன் நீதான்ன்னு சொன்னா
உன் அழகுக்கு களங்கம் விளைவிக்க நினைக்கும், பேனுக்கும், ஈறுக்கும் நான் தான் முதல் எதிரின்னு சொல்லிட்டு, அவளை தலை முடியை கலைத்து ஈறு எடுக்க ஆரம்பித்தேன், ஊரிலே பாட்டிமார்கள் ஈறு எடுத்துவிட்டு குத்தும் போது, ஒரு விதமான சத்தம் கொடுத்து விட்டு ஈறுகளை கொல்வார்கள், நானும் அப்படியே செய்தேன். சில சமயங்களிலே அவளோட தலைமுடிக்கும் ஒளிந்து கிடக்கும் பேன்களை தேடும்போது நானே தொலைத்து போவேன். ஒரு மாதமா ஈறும், பேனுமா பிடுங்கி தலையை சுத்தம் பண்ணிவிட்டேன். 
    
       அடுத்த நாளிலே என் தலைமுடியை கவனித்த அவள் எனக்கும் ஈறு இருக்குன்னு சொன்னா,  எப்படி உனக்குன்னு கேட்டவள், நான் சொன்ன பதிலே தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள், ஒவ்வொரு தடவையும் பேன் கடிச்சி, உன் இரத்தைத்தை குடிக்கும் போது என் இதயத்திலே ரத்தமே இருக்காது, மனசாலே இணைச்ச நம்மளை இந்த பேன் பிரிக்க௬டாதுன்னு,   உன் கிட்ட இருந்து ரெண்டு பேனை ஆட்டையைபோட்டு என் தலையிலே போட்டேன், இந்த பேன் நல்ல வளரனுமுன்னு குளிச்சி ரெண்டு வாரம் ஆச்சி.

இதுக்குமேலையும் குளிக்காம இருந்தீன்னா உன் மேல பேன் நாத்தம் இல்லை, பிண நாத்தாம் அடிக்கும்ன்னு சொல்லி என்னையை மெரீனா கடற்கரையிலே குளிக்கசொன்னாள். காதலி சொன்னானு சயனைடு சாப்பிடுற வயசுல, நீச்சலே தெரியாம கடல்ல குதிச்சி முங்கி எழுந்தேன். 
  
குளிச்சி முடிச்சிட்டு வந்த உடனே இவ்வளு நாளும் எனக்கு பேன் எடுத்த உனக்கு இன்னைக்கு பேன் எடுக்கிறேன்னு சொல்லி எனக்கு பேன் எடுக்க ஆரம்பித்தாள். புல் பிடிங்க போட வேண்டிய நாங்க பேன் பிடுங்கி போட்டோம். அவளும் என்னைய மாதிரி சத்தம் போட்டா ஈறுகளை கொல்லும் போது, ஆனா அது எனக்கு என்னவோ முத்தம் கொடுன்னு கேட்கிற மாதிரியே இருந்தது, பேன் பிடுங்குற சாக்கை வச்சி ஒரு முத்தத்தை ஆட்டைப் போடலாமுன்னு நான் வாயை பன்னி மாதிரி வச்சிக்கிட்டு அவ கண்னத்துகிட்ட கொண்டு போனா, பின்னாடி இருந்து மகளிர் காவல் அதிகாரிகள் ரெண்டு பேரு எங்களை தட்டி எழுப்பி ௬ப்பிட்டாங்க, அதிலே இருந்த ஒரு பெண் அதிகாரி 

"என்னடா பண்ணிட்டு இருக்கீங்க?"

"பேன் பிடுங்குறோம்"  ன்னு நான் சொன்னேன். சொன்ன உடனே செவுட்ட்ல ஒரு அடி, கடுவாப் பல்லு உடைஞ்சி போச்சி.

"நானும் உங்களை பல நாளா கவனிக்கிறேன், அவ முடியை மறைச்சி, நீ முத்தம் கொடுக்கிறது எனக்கு தெரியாதா, இனிமேல உங்களை இங்கே பார்த்தேன் உள்ளே தூக்கி போட்டுடுவேன், ஓடிப்போங்கன்னு சொல்லிட்டாங்க"  அதோடு ஓடியோ போயிட்டோம், நான் ஒரு திசைக்கு, அவ ஒரு திசைக்கு, இப்படி திசை மாறிய பறவைகள் மீண்டும் சந்திக்கவே இல்லை. ஆனா இன்றைக்கும் நான் கறி சாப்பிடும் போது அவளை நினைக்காத நாள் இல்லை.


14 கருத்துக்கள்:

மதுரை சரவணன் said...

சூப்பர் பேன் பிடுங்கும் கதை...அருமை.. முதல் முத்தம் கொடுக்காமலே ... பிரிந்து போன உங்களுக்கு வாழ்த்துக்கள்.

Unknown said...

கிஸ் இப்பிடி புஸ் ஆயிருச்சே?

Chitra said...

இதுக்குமேலையும் குளிக்காம இருந்தீன்னா உன் மேல பேன் நாத்தம் இல்லை, பிண நாத்தாம் அடிக்கும்ன்னு சொல்லி என்னையை மெரீனா கடற்கரையிலே குளிக்கசொன்னாள். காதலி சொன்னானு சயனைடு சாப்பிடுற வயசுல, நீச்சலே தெரியாம கடல்ல குதிச்சி முங்கி எழுந்தேன்..........யம்மா...... சிரிச்சு சிரிச்சு ........... யம்மா..... ஹா,ஹா,ஹா,ஹா....

vasu balaji said...

என்னடா தளபதி துண்டக்கூட ஒருத்தி எடுத்துட்டாளான்னு அதிர்ச்சியாயிட்டேன். அப்புறம்தான் தெரிஞ்சது பேன் வார விரிச்சி போடன்னு.


முகிலன் said...

/கிஸ் இப்பிடி புஸ் ஆயிருச்சே?/

இல்ல! வாங்கின அறைல வடிவேலு மாதிரி வேற ஆயிருச்சின்னு உளவுத்துறையில இருந்து தகவல் வந்திருச்சி.

மறக்காம தலைவர்கிட்ட போட்டுக் கொடுத்து க.கா. அணித் தலைவர் பதவிக்கு வேட்டு வைக்கணும். :))

ஹேமா said...

ஓ...நசர் முத்தம் கொடுக்கிறதை பேன் பிடுங்கிறதுன்னும் சொல்லலாமா !

தனியா இருந்து சிரிச்சு என்னை நானே பைத்தியம்ன்னு திட்டிக்கிட்டேன் !

Anonymous said...

தளபதி, கடைசில பேன் நசுக்கற நிலைமைக்கு வந்திட்டீங்க :)

'பரிவை' சே.குமார் said...

பேன் பிடுங்கும் கதை...அருமை..

சிங்கக்குட்டி said...

ஹாஹாஹா...இத இத இதத்தான் எதிர் பார்த்தோம் கலக்குங்க மக்கா கலக்குங்க :-)

Unknown said...

இதத்தான் எதிர் பார்த்தோம் கலக்குங்க மக்கா கலக்குங்க :-)--

yen enta kola veri...

but nice to read your blog anna,

Unknown said...

பிரிந்து போன உங்களுக்கு வாழ்த்துக்கள்.--hahaha

Unknown said...

சூப்பர் பேன் பிடுங்கும் கதை...அருமை.. --

ethila yaaru nadicha supera erukkum..neengaley cholidunga anna.

nama P.T...,L.S. ELLA..VEERA yaru....

yARUKUM set aagathu.pesama neengaley nadichirunga..

dont worry producer nama singakutti..

Riyas said...

ஆஹா அருமை..

http://riyasdreams.blogspot.com/2010/09/blog-post_12.html

manikandan said...

itha padikum pothu nan kis pannathu than napakam varuthu.

கார்த்திகேயன் said...

அருமையா போய்கிட்டு இருக்கேன்னு பார்த்த புஸ்வானமா போய்டுச்சே ஒரு முத்தம் ...http://makaran123.blogspot.com வந்தாச்சும் முத்தம் கொடுப்பது இல்ல இல்ல எடுப்பது இல்லல்ல வாங்குவது...எதுக்கு இந்த குழப்பம் நீங்களே போய் பாருங்க.