Monday, April 26, 2010

அமெரிக்க பேய்கள்

ரெம்ப நாளா கலை, இலக்கிய துறையிலே(?) ஆராய்சி பண்ணி சலித்து போனதாதாலே இப்படி கொலை வெறி ஆராய்ச்சி, இந்த ஆராய்ச்சிக்கேல்லாம் மருத்துவர் பட்டம் கொடுக்கும் போது  சொல்லுங்க துண்டு போட்டு வாங்கிக்கிறேன்.


ஐயா நம்ம ஊரு பேயா இருந்தா மல்லிகை பூ, சுருட்டு, பத்தி, பட்டை சாராயம் அப்படின்னு கொடுத்து மயக்கிப்பிடலாம், அதுக பாட்டுக்கு வந்தோமா பூ சுத்தினோமா, சரக்கை அடிச்சோமான்னு முருங்கை மரத்திலே போய் தொங்கிக்கும். நம்ம ஊரு பேய்கள் எல்லாம் ஒரு நாய் குட்டி மாதிரி வா ன்னா வரும் போ ன்னா போய்டும்.நான் ஒரு நாளும் ஊரு பேய்களை பார்த்ததில்லை  பேய் நல்லவங்க கண்ணுக்கு தெரியாதாமே !!!.


பேய்க்கும் பிஞ்ச செருப்புக்கும்,பிஞ்ச விளக்குமாறுக்கும்  என்ன சம்பந்தமுன்னு தெரியலை. செருப்புக்கும் பேய்க்கும் பங்காளி தகறாரா என்னனு தெரியலை. நம்ம ஊரிலே பெண்களை கிண்டல் பண்ணுறவங்க தான் சில சமயம் செருப்படி, விளக்கு மாத்து அடி வாங்குவாங்க,அது எப்படி  பேய் விரட்ட உதவுமுனு தெரியலை, இல்லை, ஆம்பளைங்க தான் பேயா அலைவாங்களான்னும் தெரியலை. இப்படி இல்லாத பேய்களுக்கு பொல்லாத கற்பனைகள் கட்டி, அதையும் காரணம் காட்டி கல்லாக் கட்ட ௬ட்டமும் இருக்கு.


நம்ம ஊரிலே யாவது பரவா இல்லை, பேய்ன்னா காத்து கருப்பு சொல்லி விட்டுறோம், ஆனா அமெரிக்காவிலே பேய்க்கு திருவிழா எல்லாம் இருக்காம்.அமெரிக்காவிலே இருக்கிறது எல்லாம் நவ நாகரிக பேய்கள்.அப்படி என்ன தனித்தன்மை இருக்குன்னு பார்க்கலாமா(?) 

ரெண்டு நாளா பல்லு விளக்ககாம, குளிக்காம இருந்தாலே பக்கத்திலே போக முடியாது, அமெரிக்காவிலே  இருக்கிற பேய்கள் எல்லாம் முன்னூரு நானுறு வருசமா குளிக்காம, பல்லு விளக்காம இருப்பாங்க, இதுக எல்லாம் எழுந்து வந்தாலே அந்த பக்கத்திலே இருந்து வர்ற நாத்தத்திலே பாதி பேர் செத்துப் போவாங்க.இந்த லட்சணத்திலே இந்த துரைமார்கள் எல்லாம் கழுத்தை தான் கடிப்பாங்களாம்.


கழுத்து என்ன நகராட்சி தண்ணி தொட்டியா, நல்லியை திறந்து குடிக்க,பக்கத்திலே வருகிற வரைக்கும் பொக்கை வாயோட வருவாங்க, கழுத்தை பார்த்த உடனே அவங்க பல் எல்லாம் புலிப் பல் மாதிரி ஆகி,கழுத்திலே கடுவாப் பல்லை வைத்து ரத்தக் குழாயிலே  இருந்து உறிவாங்க,அதனாலே இவங்களுக்கு பேரு ரத்தக்காட்டேரி,  பேரை பார்த்து கொஞ்சம் பயமாத்தான் இருக்கு, இவுகளுக்கு சொல்லிக்கிற மாதிரி ஒன்னும் வேலை இல்லை, ரத்தம் குடிக்க ஓய்வு எடுக்க, பகல்ல பன்னிகுட்டி மாதிரி படுத்து தூங்கிட்டு, இரவிலே என்றுமே  துவைக்காத ஆளுக்கு சட்டையை போட்டுக்கிட்டு கிளம்பிடுவாங்க ரத்தம் குடிக்க. இவங்க இப்படி நகர் வலம் வரும்போது ரத்த வாடை அடித்து விட்டால் ஆள் சிக்கி விட்டது என்று அர்த்தம்.வேகமா ஓடிபோய் அந்த ஆளைப் பிடித்து கொண்டு கழுத்தைக் கடிக்க ஆரம்பித்து விடுவார்கள்.


இவங்க ரத்தம் குடிக்கிற ஆளுங்க சீக்கு வந்த கோழி மாதிரி முதல்ல தலை ஆட்டிகிட்டு இருப்பாங்க,ரத்தம் போகுதேன்னு கவலையிலே இல்லை முண்ணூறு வருசமா குளிக்காம பல் விளக்காம இருந்த ஒரு ஆளு கழுத்து கிட்ட வந்து மூச்சி விட்டா அந்த நாத்ததிலே அவன் மண்டையைப் போட்டுடுவாங்க, இருந்தாலும் குடிக்கிறவரு ரெம்ப நல்ல மனுசனாம், குழாயிலே இருந்து எவ்வளவு நல்ல ரத்தம் எடுத்தாரோ அதே அளவு கெட்ட ரத்தத்தை கடிச்சவரிடமே திருப்பி கொடுத்திடுவாரு. இவங்களுக்கு எல்லாம் நம்ம ஊரிலே சிலை இல்லைன்னு வருத்தமாத்தான் இருக்கு. 


இந்த ரத்தக் கொடுக்கல் வாங்கல் முடிஞ்ச கொஞ்ச நேரத்திலே கடி வாங்கின ஆளு எழுந்திரிச்சி அவரும் ரத்தம் குடிக்க தயார் ஆகிடுவாரு, அதாவது நாய் கடிச்சி வைத்தியம் பார்க்காம விட்டுட்டா கொஞ்ச நாள்ல நாய் மாதிரி குலைக்கிற மாதிரி கடிபட்ட ஆளு இன்னொருத்தர் கழுத்தை கடிக்க கிளம்பி போய்டுவாரு.


இரவிலே ஆயிரம் வாட்ஸ் பலப் வெளிச்சத்திலேயும் பொக்கை  பல்லை காட்டிக்கிட்டு அவங்க ௬ட்டத்துக்கு இலவச ரத்த தானம் முகாம்  இல்லாம ஆள் சேர்கிற இவங்க, இரவிலே பறந்து பறந்து ஆள் பிடிக்கிற காட்டேரி கருவாலி துரைமார், அவங்க வேகம் ஒளியின் வேகத்தை விட அதிகம், ரெண்டு நொடியிலே சந்திர மண்டலம் போய்டுவாங்க, ஐந்து நிமிசத்திலே செவ்வாய்க்கு போய்டுவாங்க,அங்கே கடை வைத்து இருக்கும் நாயர் கடையிலே ரத்தப் பொரியலும், ரத்த டீ யும் வாங்கி குடிச்சிட்டு வருவாங்க.


 இனிமேல எல்லாம் நாசா கிட்ட சொல்லி பீனிக்ஸ் மாதிரி யந்திரம் தயாரிக்கதுக்கு பதிலா ரெண்டு காட்டேரியை நரி மாதிரி அனுப்பி வையுன்னு சொல்லணும்,அமெரிக்காவுக்கு  செலவு மிச்சம் ஆகும், இப்படி ஒரு யோசனையை சொன்ன எனக்கு ஆஸ்கார், நோபல் எதாவது ஒண்ணு கிடைக்குமா?. இவ்வளவு இமாலய திறமை வைத்து இருக்கும் யோக்கியரு, நாணயஸ்தரு பகலிகே லேசா சூரியனை பார்த்து விட்டா சாம்பல் ஆகி அஸ்தி ஆகிவிடுவாரு, நாம ஒரு மண் சட்டியிலே அவங்க அஸ்தியை எடுத்து கிட்டு போய் கடலிலே கரைத்து விடலாம்.


இவங்களுக்குள்ளேயும் பங்காளி சண்டைகள் இருக்கு, ஒருத்தர் கழுத்திலே நல்லியை திறந்து ரத்தம் குடிச்சிக்கிட்டு இருக்கும், பசியோட இருக்கிற இன்னொருத்தர் வந்து விட்டா, ரெண்டு பேரும் குட்டி போட்ட பன்னி மாதிரி உறுமுவாங்க, கோர்.. ஆ.. பூ ன்னு சின்ன புள்ளைங்க பேசுற மாதிரி பேசிக்குவாங்க, இவங்க பேசுற மொழி எதுன்னு இன்னும் ஆராட்சி நடந்து கிட்டு இருக்கு. சில சமயம் துண்டு போட்டு உசார் பண்ணிய ரெண்டு காட்டேரி களும் ஒண்ணா போகும், யாரவது ஒருத்தர் சிக்கிட்டா, காதலன் நீ முதல்ல குடி, உடனே காதிலி நீ முதல்ல குடி ன்னு காதல் ரசம் உருக உருக பேசுவாங்க, கொய்யால நீங்க ஆணியே பிடிங்க வேண்டாமுன்னு கீழே படுத்து இருந்தவரு எழுந்து வீட்டுக்கு போய்டுவாரு, சில சமயம் யாரவது ஒருத்தர் அதிகமா குடிச்சிடாடா, இன்னொரு காட்டேரி கோவத்திலே ஒரு ஓரமா போய் உட்கார்ந்து விடுவாரு, அதை சமாதானப் படுத்த, ஒரு காட்டேரி வாயிலே இருந்து ரத்தத்தை இன்னொரு காட்டேரி வாய் வழியா குடிச்ச ரத்தத்தை  இடம் மாத்திடுவாங்க.இந்த காட்டேரி துரைமார்கள் எல்லாம் டாக்டர் ஆகிட்டு காட்டேரி ஆனாங்களா இல்லை காட்டேரி ஆக்கிட்டு டாக்டர் ஆனாங்களா ன்னு தெரியலை.


ரத்தம் குடிச்சி முடிந்த உடனே இவங்க வாயைப் பார்த்தா சாக்கடையிலே உருண்டு பிரண்ட பன்னி மாதிரியே இருக்கும். இவங்களுக்கு ரத்த வங்கி அப்படின்னு ஒண்ணு இருக்குன்னு தெரியாது, சுடு சோறு மாதிரி, சுடச் சுட ரத்தம் தான் குடிப்பாங்களாம்.எந்த வகை ரத்தத்தையும் ஏத்துகிற இவங்க இரும்பு இதயத்தை ஆணியால அடிச்சா மண்டைப் போட்டுவான்களாம்.


அமெரிக்க துரைமார்கள்ட கேட்டா இந்தியாவிலே தான் முட நம்பிக்கை அதிகமா இருக்குன்னு சொல்லுறவங்க, இதெல்லாம் முற்போக்கு சிந்தனையா, இல்லை பினவீனத்துவமா ன்னு தெரியலை. இப்படி இல்லாத பொல்லாத காட்டேரிகளை காட்டி படம் எடுத்துவிட்டு கல்லா கட்டிட்டு போய்டுறாங்க, நாமும் அமெரிக்காவிலே பனை மரத்தைப் பார்த்துவிட்டு "wow, never seen palm tree in my life" ன்னு சொல்லிட்டு போயிடுறோம்.


26 கருத்துக்கள்:

T.V.ராதாகிருஷ்ணன் said...

Present Nasareyan

ராஜ நடராஜன் said...

ராதாகிருஷ்ணன் முந்திகிட்டாரே:)

ராஜ நடராஜன் said...

//ஐயா நம்ம ஊரு பேயா இருந்தா மல்லிகை பூ, சுருட்டு, பத்தி, பட்டை சாராயம் அப்படின்னு கொடுத்து மயக்கிப்பிடலாம், அதுக பாட்டுக்கு வந்தோமா பூ சுத்தினோமா, சரக்கை அடிச்சோமான்னு முருங்கை மரத்திலே போய் தொங்கிக்கும். நம்ம ஊரு பேய்கள் எல்லாம் ஒரு நாய் குட்டி மாதிரி வா ன்னா வரும் போ ன்னா போய்டும்.நான் ஒரு நாளும் ஊரு பேய்களை பார்த்ததில்லை பேய் நல்லவங்க கண்ணுக்கு தெரியாதாமே !!!.//

நான் நிறைய பேய்கள பார்த்திருக்கேன்:)

ராஜ நடராஜன் said...

//பேய்க்கும் பிஞ்ச செருப்புக்கும்,பிஞ்ச விளக்குமாறுக்கும் என்ன சம்பந்தமுன்னு தெரியலை. செருப்புக்கும் பேய்க்கும் பங்காளி தகறாரா என்னனு தெரியலை.//

அடுத்த வெடி:)

ராஜ நடராஜன் said...

பதிவு முழுவதும் படிச்சா பேய் நல்லவங்க கண்ணுக்கு தெரியற மாதிரியில்ல இருக்குது:)

உங்களுக்கு எந்த பேய் பிடிக்கும்?ட்ராகுலாவா?எக்ஸாஸிட்டா?ஓமனா?

நசரேயன் said...

//பதிவு முழுவதும் படிச்சா பேய் நல்லவங்க கண்ணுக்கு தெரியற மாதிரியில்ல இருக்குது:)

உங்களுக்கு எந்த பேய் பிடிக்கும்?ட்ராகுலாவா?எக்ஸாஸிட்டா?ஓமனா?
April 26, 2010 12:59:00 PM EDT //

நம்ம கண்ணுக்கு எல்லாம் தெரியாது, நாம எல்லாம் ரெம்ப நல்லவங்க

கபீஷ் said...

//பேய் நல்லவங்க கண்ணுக்கு தெரியாதாமே !!!.//
உண்மையாத்தான் இருக்கணும். உங்க ஃபோட்டோ கூட என் கண்ணுக்குத் தெரிய மாட்டேங்குது.

Chitra said...

நீங்க யூத் னு சொன்னீங்க. ஒத்துக்கிட்டோம். அதுக்காக டீன் ஏஜ் குரூப் audience காக எடுத்து விடுற படங்களை பத்தி பேசிட்டு அந்த அளவுக்கு யூத் னா? ஹா,ஹா,ஹா,ஹா...

தங்க முகுந்தன் said...

யாழ்தேவியின் இவ்வார நட்சத்திரப் பதிவரானமைக்கு எமது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்!

ராஜ நடராஜன் said...

////பேய் நல்லவங்க கண்ணுக்கு தெரியாதாமே !!!.//
உண்மையாத்தான் இருக்கணும். உங்க ஃபோட்டோ கூட என் கண்ணுக்குத் தெரிய மாட்டேங்குது.//

கபீஷ்!நடு நெத்தி ஆணி:)

vasu balaji said...

அவ்வ்வ்வ். நேத்துதான் பழமை ரயிலடில இச்சு குடுத்துட்டு அலயுதுன்னாரு. இது ரத்தமில்லா குடிச்சிட்டு ஆராய்ச்சி பண்ணுறாரு:))

/நம்ம கண்ணுக்கு எல்லாம் தெரியாது, நாம எல்லாம் ரெம்ப நல்லவங்க/
ங்கொய்யால. பயத்துல கண்ண இருக்க மூடிக்கிட்டு கெடந்தா எப்புடி தெரியும்ணேன். அலம்பல பாருடா ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸாமீய்.

ஹேமா said...

அப்பாடி....பே...ய்.

பேயே வந்து தன்னோட சரித்திரம் சொன்னமாதிரி இருக்கு.

நசர்...உண்மை சொல்லுங்க.நீங்க யாரு ?இதெல்லாம் நேரில பாக்காம இல்லாட்டி அனுபவிக்காம எழுதமுடியாது.

இவர் ஒரு அமெரிக்கப் "பேயர்"தான் !

பழமைபேசி said...

ஊர் விட்டு ஊர் போய் வாறோம்... பயமா கீது!

பழமைபேசி said...

ஓட்டுப்பட்டைய கீழ வெக்கப்படாதா?

Mahesh said...

அதானே !!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்லா இருக்கே :)

அட
அவங்களும் ஆணி அடிக்கிறாங்க போல பேய் க்கு ..

Aba said...

சார், நாம நம்மளோட மூஞ்சியயே தெனமும் கண்ணாடில பாத்து பயபுடற பயபுள்ளைங்க... நீங்க நம்மகிட்டேயே வந்து அமெரிக்க காட்டேரிய பத்தி சொல்லி பயமுறுத்துறீங்க!

Jackiesekar said...

அமெரிக்க துரைமார்கள்ட கேட்டா இந்தியாவிலே தான் முட நம்பிக்கை அதிகமா இருக்குன்னு சொல்லுறவங்க, இதெல்லாம் முற்போக்கு சிந்தனையா, இல்லை பினவீனத்துவமா ன்னு தெரியலை. இப்படி இல்லாத பொல்லாத காட்டேரிகளை காட்டி படம் எடுத்துவிட்டு கல்லா கட்டிட்டு போய்டுறாங்க, நாமும் அமெரிக்காவிலே பனை மரத்தைப் பார்த்துவிட்டு "wow, never seen palm tree in my life" ன்னு சொல்லிட்டு போயிடுறோம்.///

அப்படி அல்லடனாதான் நம்மளுக்கு தூக்கம் வரும்...
ஆனா அமெரிக்காவை விட நம்மூர்ல மட நம்பிக்கை ஜாஸ்தியா இல்லையா? நீங்களே சொல்லுங்க..

Paleo God said...

:))

--

இருந்தாலும் உங்க கும்மி லெவலுக்கு இது கம்மிதான்!! :))

ஜெய்லானி said...

//கொய்யால நீங்க ஆணியே பிடிங்க வேண்டாமுன்னு கீழே படுத்து இருந்தவரு எழுந்து வீட்டுக்கு போய்டுவாரு,//

அப்படி போடுங்க செம நக்கல்.

சிநேகிதன் அக்பர் said...

ரசனையான பகிர்வு.

Anonymous said...

சூப்பர் பதிவு.

Anonymous said...

என்னைப்பாத்து எல்லாப்பேயும் ஓடி ஒளிஞ்சுக்குது. ஒண்ணும் கண்ல பட மாட்டேங்குது.

அதெல்லாம் இருக்கட்டும். தொடர்பதிவுக்கு கூப்பிட்டிருக்கேன். மரியாதையா போடாட்டி ஆஸிப்பேயை அனுப்பிடுவேன்.ஸ்மைலியெல்லாம் போடலை பாருங்க. நிஜமாவே அனுப்புவேன்.

நட்புடன் ஜமால் said...

சமீபத்தில் எதுனா ட்ராகுலா படம் பார்த்தியளா ...

(அதுலையும் பல்லு விளக்காமா - எப்படித்தான் தாங்குவதோ ...)

Vidhoosh said...

///தமிழினி said...

உங்கள் வலைதளத்தை மேலும் பிரபலப்படுத்த , மற்றும் அதிக வாசகர்களைப் பெற உங்கள் பதிவுகளை தமிழ்10 .காம் தளத்துடன் இணைத்துக் கொள்ளுங்கள் .

பதிவுகளை இணைக்க இங்கு செல்லவும்

ஓட்டளிப்புப் பட்டை பெற இங்கு செல்லவும்

நன்றி
தமிழ்10.காம் குழுவினர்
April 26, 2010 1:21:00 PM EDT /////


எழுத்துக்கு எழுத்து ரிபீட்டிக்கிறேன்.

Radhakrishnan said...

ஊரு ஊருக்கு பேய் இருக்கத்தான் செய்யும், நல்லா எழுதி இருக்கீங்க. பேய் படம் அருமை.