Tuesday, April 27, 2010

தொலைபேசாடல்

"அல்லோ அம்மா எப்படி இருக்கீங்க" 


"நான் நல்லா இருக்கேன், நீ எப்படி இருக்க"

"நல்லா இருக்கேன்"

"எப்ப ஊருக்கு வாரே?"

"கூடிய சீக்கிரம்"

"இதையேதான் நாலு வருசமா சொல்லிக்கிட்டு இருக்க, நீ வந்த பாடு இல்லை."

"ஊருக்கு நான் வாரது தெரிஞ்சி ஏதும் பிரச்சனை ஆகக் ௬டாதுன்னு இங்கேயே இருக்கேன், அருவா கம்போட என்னை அடிக்க சுத்திகிட்டு இருந்தவங்க இன்னும் அப்படியே தான் இருக்காங்களா?" 

"நீ மூணாம் வகுப்பு படிக்கும் போது கண்ணிலே ஸ்கேல் வச்சி அடிச்ச பொண்ணு எல்லாம் கல்யாணம் முடிந்து வெளியூருக்கு போய்ட்டா, அவ அண்ணன் தான் உன்னைய பாசமா அடிக்கடி விசாரிப்பான், நீ எப்ப வருவன்னு"

"உண்மையாவா?"

"ஆமா"

"அப்புறம் நம்ம மேல தெரு பொண்ணு"

"யாருடா அது?"

"அதுதாம்மா நம்ம வீட்டுக்கே வந்து மிரட்டுனாங்களே?" 

"நீ கல்லூரி படிக்கும் போது காதல் கடிதம் எழுதி, அந்த பெண்ணை கல்லூரியை விட்டு வீட்டுக்கு அனுப்பிட்டாங்களே அந்த பெண்ணா?"
"ஆமா.. ஆமா"

"அவளும் கல்யாணம் முடிஞ்சி ஊரை விட்டு போய்ட்டா?,அவங்க அண்ணன் தான் நம்ம வீட்டு பக்கம் வரும் போது எல்லாம் முறைச்சிகிட்டு போவான்,எனக்கு  தெரிஞ்சி நம்ம ஊரிலே நீ பண்ணின சேட்டைகள் இதுதான், எனக்கு தெரியாம என்னென்ன பண்ணினேன்னு தெரியலை.அதையெல்லாம் பத்தி நீ கவலைப் படாம கண்டிப்பா ஊருக்கு வா?"


"சரிம்மா,ஊரிலே  மழை எல்லாம் எப்படி இருக்கு"


"நீ ஊரை விட்டு போன இந்த நாலு வருசமா நல்ல மழை தான்,நீ திரும்பி வந்தா எப்படின்னு தெரியலை.மருமகளும், என் பேத்தியும் எப்படி இருக்காங்க?"

"நல்லா இருக்காங்க"

"மருமகள் என்ன பண்ணுறா?"

"அவ இப்பத்தான் துணி துவைக்க போனாள்"

"என்னய்யா, நான் எப்ப கேட்டாலும் துணி துவைக்க போய் இருக்கா, துணி துவைக்க போய் இருக்கா அப்படின்னு சொல்லிக்கிட்டு இருக்கியே, அங்கே எல்லாம் யாருமே துணி துவைக்க மாட்டாங்களாம், எல்லாத்துக்கும் மெசின் இருக்காமே?, நீ என்னவோ துணியை சோப்பு வைச்சி துவைக்கிற மாதிரி சொன்னே?"

"இதெல்லாம் யாரு சொன்னா?"

"கேள்விப் பட்டேன்,என் ௬ட பேச முடியாத அளவுக்கு அப்படி என்ன கொடுமைப்டுத்தினேன் உன் பொண்ட்டாட்டியை, உங்க கல்யாணம் முடிஞ்ச ஒரே வாரத்திலே  உன் கூடவே கிளம்பிட்டா,அதிகம் படிச்சதாலே இந்த படிக்காத பட்டிக்காட்டு மாமியார்ட்ட பேச விருப்பம் இல்லையோ"

"அப்படி எல்லாம் இல்லம்மா,அவளுக்கு தலை வலின்னு படுத்து இருக்கிறாள்"

"கொஞ்சம் சுக்கு காப்பி போட்டு கொடு சரியாப்போகும் ,சரி என் பேத்தி எப்படி இருக்கா"

"நல்லா இருக்கா?"

"அவ பிறந்து இந்த மூணு வருசத்திலே என்கிட்டே ஒரு வார்த்தை பேசலை, இந்த  தடவையாவது  அவ கிட்ட போன் கொடேன் , நான் ஒரு வார்த்தை பேசிக்கிறேன்" 

"அவ யார்ட்டமா பேசி இருக்கா?"

"அவ என்னைய தவிர எல்லாரிடமும் பேசுறா, உங்க மாமன், மாமியாரிடம் எல்லாம் நல்லா பேசுறாளாமே, அவங்க கிட்ட எல்லாம் பாட்டி எப்படி இருக்கீங்க, தாத்தா எப்படி இருக்கீங்கன்னு நல்லாவே பேசுறாளாம்"

"உங்களுக்கு எப்படிம்மா தெரியும்?"

"நான் உன் அம்மாடா, என் புள்ளையப் பத்தி எனக்கு தெரியாதா, ஆமா நீ உங்க மாமா ஊரிலே ஒரு வீடு வாங்கி இருக்கியாமே"


"அது நான் வாங்கலை, என் மாமா தான் வாங்கி இருக்காரு"


"உன் பேருல வீடு வாங்க உங்க மாமனாருக்கு என்ன கிறுக்கா பிடிச்சி இருக்கு, அவன்கிட்ட காசு இருந்தா அவன் பேரிலே வாங்கி இருப்பானே, அவனுக்கு இன்னும் மூணு பிள்ளைகள் இருக்கும் போது, அவன் ஏன் உன் பெயரிலே வீடு வாங்கணும்"

...................................

"என்னய்யா பேச்சையே காணும், அம்மா உண்மையை சொல்லிட்டேன்னு வருத்தமா இருக்கா, உன்னோட முன்னேற்றதிற்கு குறுக்கே நிக்கிற அளவுக்கு கொடுமை காரி ஆகிட்டனோ என்கிற வருத்ததிலே மனசிலே இருந்த கேள்விகளையெல்லாம் கேட்டுபுட்டேன்."

"அம்மா நீங்க கேட்ட ஐந்தாயிரம் இன்னும் ரெண்டு நாளிலே அனுப்பி வைக்கிறேன்"


"நான் ரெண்டு மாசத்துக்கு முன்னாடி கேட்டேன், அப்ப சொன்னதையே இப்பவும் சொல்லுற, கடவுள் புண்ணியத்திலே உங்க அம்மாவுக்கு கையும், காலும் இன்னும் கெதியாத்தான் இருக்கு, இனிமேல நீ எனக்கு காசு அனுப்ப வேண்டாம், உனக்கு ஏகப்பட்ட செலவுகள் இருக்கும்,சொல்ல மறந்துட்டேன் போகையிலே வரும்போது கவனமாப் போயிட்டு பத்திரமா வா"


20 கருத்துக்கள்:

தமிழ் மதுரம் said...

உரையாடல் ஜனரஞ்சகமாகவும், எமது சமூகத்தின் சராசரி வாழ்வினையும் கலந்தும் பயணிக்கிறது. நல்ல தொரு பதிவு. பகிர்வுக்கு நன்றிகள் நண்பா.

Mahesh said...

என்னவோ போங்க... சொந்தக் கதையா இல்லாம இருந்தா சரி :(

சாந்தி மாரியப்பன் said...

வருங்காலக்கதையா!!!!

Vidhoosh said...

:(

மாத்தி மாத்தி கிழிக்கறதே வேலையாப் போச்சு...

Unknown said...

புனைவா?

Chitra said...

ஹலோ, என்ன திடீர்னு சீரியஸா? இல்ல, நாந்தான் பதிவு மாத்தி வந்திட்டேனா?
....really, a very touching story.

எல் கே said...

nalla irukunga.. ippave pala idatula nadakuthu ithu

malar said...

வெளி நாட்டு வாழ்கையை படம் பிடித்து காட்டி விட்டீர்கள்....

SUFFIX said...

உண்மைதானோ? டச்சிங் Story.

ஹேமா said...

கொஞ்சம் பொறுப்பா மாறிட்டு வாறிங்க நசர் நசர்.பேய் அடிச்சுக் கிடிச்சு மாத்திடிச்சா என்ன !உங்க எழுத்து நடை உங்க பாணி நல்லாவேயிருக்கு.

T.V.ராதாகிருஷ்ணன் said...

:(((

ராஜ நடராஜன் said...

போன வருசத்து தொலைபேசாடல் சிரிப்பு.இந்த தொலைபேசாடல் சோகம்.

நட்புடன் ஜமால் said...

அந்த அண்ணன் உங்களை பாசமாக கேட்ப்பது ஏன்னு தெரியும் தானே ;)

"உழவன்" "Uzhavan" said...

அம்மா.....

Unknown said...

//"நான் ரெண்டு மாசத்துக்கு முன்னாடி கேட்டேன், அப்ப சொன்னதையே இப்பவும் சொல்லுற,//

ம்.. என்னத்தச்சொல்ல.

சந்தனமுல்லை said...

துண்டுபோட்ட கதையெல்லாம் ஒன்னொன்னா வெளிலே வருதேன்னு ஜாலியா படிச்சுக்கிட்டு வந்தேன்..கடைசிலே சோகமாய்டுச்சு..:-(

இந்த ஸ்டைலும் நல்லா இருக்கு...

பனித்துளி சங்கர் said...

மிகவும் ரசிக்கும் வகையில் எழுதி இருக்கீங்க .

goma said...

யதார்த்தம் பொங்கி வழிகிறது

sriram said...

நல்ல செண்டி கதை நசரேயன்..

// goma said...
யதார்த்தம் பொங்கி வழிகிறது//

இல்லீங்க கோமா, இது யதார்த்தத்தை விட்டு ரொம்ப தள்ளி இருக்குது. எனக்குத் தெரிந்த பல நண்பர்களின் வீடுகளில் பசங்க வெளிநாடு போன பின்னர்தான் சுபிட்சமே.
என் வீட்டிலும் என் நண்பர்களின் வீட்டிலும் ஆணின் பெற்றோர் அமெரிக்கா வந்து போன பின்னர்தான் பெண்ணின் பெற்றோர் வருகின்றனர் (பிரசவத்துக்கு முதலில் வருவது மனைவியின் அம்மா மட்டும் அல்லது பெற்றோர் இருவரும், பின்னர்தான் கணவனின் பெற்றோர்)

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

சிநேகிதன் அக்பர் said...

எல்லா பிள்ளைங்களும் இப்படித்தானா. அல்லது பிள்ளைங்க எல்லாமே இப்படித்தானா. ( ஏதாவது தப்பா கேட்டுட்டேனா? )