Wednesday, December 30, 2009

விமானத்திலே வெள்ளை அழகியுடன்

அலுவலகத்திலே இருந்து பணி நிமித்தமாக கனடா சொல்ல வேண்டியது இருந்தது, விமானம் எங்க ஊருக்கு மேல போகும் போது அதையே கொட்டாவி விட்டு பார்த்ததோட சரி,விமான நிலையம் குறித்து நண்பர்கள் முலமாக அறிந்து கொண்டதாலே அங்கே ஏதும் குழப்பமே இல்லை.

விமானம் வழக்கம் போல தாமதம் எனக்கு ஒரு பயம் எங்க அலுவலலகத்திலே இருந்து போன் பண்ணி என்னை வீட்டுக்கு வரச் சொல்லுவாங்களோன்னு, நல்லவேளை அப்படி ஏதும் நடக்கலை,தாமத விமானம் தட தட ன்னு  புறப்பட்டது,   என் இருக்கைக்கு  பக்கத்திலே யாருமே இல்லை


விமானம் கிளம்பி ஒரு மணி நேரம் கழித்து பக்கத்திலே ஒரு வெள்ளையம்மா பொட்டிய மேல வைக்க முடியாமல் தடுமாறி கொண்டு இருந்தார்கள்,உடனே அவங்களுக்கு உதவிக்கரம்  நீட்டி  இனாமா ஒரு நன்றியை வாங்கிகிட்டேன்.



என் பக்கத்திலே இருந்த வெள்ளையம்மா கொஞ்ச நேரத்திலே வந்த பணிப்பெண்னிடம் என்னோவோ சொன்னாங்க ஆங்கிலத்திலே, அவங்களும் ஒரு கிளாஸ்ல கொண்டு வந்து கொடுத்தார்கள், தண்ணியிலே எழிமிச்சம் பழம் ஓரமா ஓட்டிகிட்டு இருந்தது, அதை  சாறு பிழிந்து போட்டுட்டு தண்ணியை மண்ட ஆரம்பித்தாள். குடிக்கிற தண்ணியிலே எலுமிச்சம் பழமா? யோசித்திகிட்டே இருந்தேன். வெள்ளையம்மா ஒரு நாலு ரவுண்டு போட்டாங்க,அது வரைக்கும் அமைதியா இருந்த வங்க என்கிட்ட பேச்சி கொடுத்தாங்க. 


அவங்க பேச ஆரம்பித்த அப்புறம் தான் தெரிந்தது மருந்து(உபயம் வால்பையன்)  குடிச்சி இருக்காகங்ன்னு, என்னையே உத்து பார்த்தாங்க, நான் பார்த்த இங்கிலிபிசு   படங்களிலே வசனம் பேசும் முன்னே உதட்டிலே உதட்டை வச்சி உள்நாக்கு வெளிநாக்கை எல்லாம் கடிப்பாங்க, அப்படி ஒரு வாய்ப்பு எனக்கும்  மருந்து மூலமா கிடைக்குதேன்னு நானும் பல்லை காட்டிட்டு இருந்தேன்.ஆனா அவங்க



"உங்க பல் ரெம்ப அழகா இருக்கு" ன்னு சொன்னாங்க.


வெளிநாட்டு போற ஆர்வத்திலே புது பற்பசையிலே பல் விளக்கினது ரெம்ப உதவியா இருக்கு, வெள்ளையம்மாவுக்கு பிடிச்ச சோப்பு போட்டு குளிச்சி இருந்தா என்னையும் பிடிச்சி இருக்குமேன்னு நினைச்சேன்.


"பல்லு மட்டும் தானா?"


"உங்க பால் வடியுற முகத்திலே பால் போல இருக்க பல்லு தான் பிடிச்சி இருக்கு."

ஊரிலே படிக்காம பல் மருத்துவர்ன்னு சொல்லிக்கிட்டு திரிந்தவன்  கிட்ட பல் கட்டினதை கண்டு பிடிசிட்டாங்களோ எனக்கே சந்தேகமா போச்சி, என்னை இப்படி எல்லாம் இது நாள் வரைக்கும் யாரும் பாராட்டியது இல்லை.


நீங்க சிரிச்சா முத்தா இருக்குக்கு சொல்லிட்டு என் முகத்து கிட்டே வந்த வெள்ளையம்மா, என்னை முத்தம் கொடுக்க தான் வாராங்கன்னு நினைத்து நான் கண்ணை மூடினேன்,ஒண்ணும் கொடுத்த மாதிரி தெரியலை,கொஞ்ச நேரத்திலே கண்ணை திறந்து பார்த்தா ஆளையும் காணும்


நானும் தேடித் பார்த்தேன் கண்டு பிடிக்க முடியலை, அப்படியே எழுத்து நடைப் பயிற்சி செய்யுற மாதிரி தேடினேன், விமானத்தோட பின் இருக்கையிலே மட்டை ஆகி படுத்து கிடந்தாங்க, சரக்கின் சதியை நினைத்து மனசு பத்தி எரிந்தாலும் வேற வழி இல்லாம நான் இருக்கைக்கு வந்தேன்.


வந்தவன் நல்லா தூங்கிட்டேன்,முணு மணி  நேரம் கழித்து பக்கத்திலே ஆள் இருப்பதை உணர்ந்து எழுந்தேன். வெள்ளையம்மா பக்கத்திலே இருந்து உதட்டு சாயம் போட்டுக்கிட்டு இருந்தாங்க. விட்டதை பிடிக்கணுமுன்னு நானே பேச்சை ஆரம்பித்தேன்.

"எப்படி இருக்கீங்க?"

அவங்க என்னைய பார்த்து "யாரு நீ?"

இப்படி ஒரு கேள்வியை தாங்குற அளவுக்கு இதயம் ரெம்ப கடினமா இருந்தாலே தப்பிச்சேன்.


"நான் அதே பல் அழகன் தான்"

"பல்லை உடைச்சி புடுவேன், யாரு பல் அழகன்?, பக்கி மாதிரி இருக்க?"


இதோட விடலை.. இன்னும் நல்லா நாலு திட்டு திட்டிபிட்டு அவங்க பொட்டிய  எடுத்துகிட்டு, அந்த மட்டை இருக்கைக்குபோய்ட்டாங்க.ஒரு காதலனை காதலி பிரிஞ்சி போற மாதிரி துக்கம் தொண்டையை அடைத்து விட்டது


வெள்ளையம்மா போறதைப் பார்த்த பெருசு ஒண்ணு என்ன பிரச்சனை ன்னு கட்டப் பஞ்சாயத்து பேச வந்தது, அவர்ட்ட ஒண்ணும் இல்லைன்னு சொல்லிட்டு உட்கார்ந்தேன். இப்படி ஒரு அவமானத்தை சந்தித்த பின்னே சும்மா இருக்க முடியலை. அந்த பக்கமா வந்த விமான பணிப்பெண் கிட்ட என் பக்கத்திலே இருந்த வெள்ளையம்மாவுக்கு  என்ன கொடுத்தீங்கன்னு கேட்டேன்.


அவங்க எதோ புரியாத பெயரைச் சொன்னங்க, நான் எனக்கு அதையே கொடுங்கன்னு சொன்னேன் 


எப்பேர்பட்ட ஒரு நல்ல உள்ளத்தை சரக்கை வைத்து கல் எறிஞ்சிட்டு கலவரப் படுத்திட்டு  போன வெள்ளையம்மாவை நினைத்து  நானும் மண்ட ஆரம்பித்தேன், வாங்கி வாங்கி குடித்தேன், ஆறு ரவுண்டு போச்சி ஒண்ணுமே புரியலை, சரக்கு அடிச்ச ஒரு அருகதையே இல்லை, சந்தேகத்திலே பணிப்பெண்னிடம்

"எனக்கு மட்டும் ஏன் எலுமிச்சை சாறு கொடுத்தீங்க?"

"நீ தானே சொன்னே அவங்க குடிச்சது  வேண்டுமென?,
இருந்த எலுமிச்சம் பழத்தை எல்லாம் காலி பண்ணிட்டியே"


இருக்கையிலே அமர்ந்து  மனசிலே எழுந்த பல கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கலை  


  • வெள்ளையம்மா ஏன் தண்ணியிலே எலுமிச்சை பழம் கலந்து குடிச்சாங்க 

  • என்னைய பல் அழகன்னு சொல்லிட்டு, அப்புறமா பக்கின்னு சொன்னங்கன்னு

  • ஏன் அவங்க என் பக்கத்திலே வந்தாங்க, பின்னாலே என்னை ஏன் திட்டிட்டுபோனாங்கன்னு 
 
கிடைத்த கேள்விகளுக்கு என்னோட யூகமான பதில், வெள்ளையம்மாவோட விமான  இருக்கை என் பக்கத்திலே இருந்து இருக்காது, அவங்க மட்டையாகி கிடந்த இடமே அவங்களோட உண்மையான இடமா இருந்து இருக்கும், அங்கே இருந்து நல்லா சரக்கு அடித்து விட்டு,தெரியாத்தனமா என்னோட பக்கத்திலே வந்து போதையிலே என்னோட பல் அழகிலே மயங்கி இருக்கலாம்.போதை தெளிந்ததும் என்னோட உண்மையான கருப்பழகிலே மயங்கி மறுபடியும் அவங்க இடத்திற்கே திரும்பி போய் இருக்கலாம்.


25 கருத்துக்கள்:

vasu balaji said...

/நீங்க சிரிச்சா முத்தா இருக்குக்கு சொல்லிட்டு என் முகத்து கிட்டே வந்த வெள்ளையம்மா, என்னை முத்தம் கொடுக்க தான் வாராங்கன்னு நினைத்து நான் கண்ணை மூடினேன்,/

இதெல்லாம் ஓவரா தெரியல:))

/பின்னாலே என்னை ஏன் திட்டிட்டுபோனாங்கன்னு
கிடைத்த கேள்விகளுக்கு என்னோட யூகமான பதில், /

எதுக்கு வீண் வேலை. முகிலன் கிட்ட கேசை குடுத்தா விடை கிடைச்சுடும்.

அய்யா சாமி. முடியலய்யா:))

மக்கள் தளபதி/Navanithan/ナパニ said...

//எங்க அலுவலலகத்திலே இருந்து போன் பண்ணி என்னை வீட்டுக்கு வரச் சொல்லுவாங்களோன்னு,//
ஹா ஹா.. சொன்னாலும் சொல்லுவாய்ங்க.

Unknown said...

சிரிச்சி சிரிச்சி வயத்த வலிக்குது.. டாக்டர்க்கிட்ட போக வேண்டியிருந்தா பில் அனுப்புறேன்..

ஹேமா said...

//வெளிநாட்டு போற ஆர்வத்திலே புது பற்பசையிலே பல் விளக்கினது ரெம்ப உதவியா இருக்கு, வெள்ளையம்மாவுக்கு பிடிச்ச சோப்பு போட்டு குளிச்சி இருந்தா என்னையும் பிடிச்சி இருக்குமேன்னு நினைச்சேன்.//

நசரேயா,நத்தார் புதுவருஷம்ன்னு லீவு எடுத்து வச்சுக்கிட்டு மொக்கையை அவுத்து விடுறீங்களோ !இதுக்கெல்லாம் வால்பையனுமா ஒத்து ஊதுறார்.சரி...சரி.

புலவன் புலிகேசி said...

வெள்ளையம்மா வடிவேல கடிச்சா மாதிரி கடிப்பாங்களான்னு பாத்துருக்கீங்க..நடக்கல...

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-)))
மீள் பதிவு?

Jerry Eshananda said...

இப்படி கோட்ட விடலாமா?

வில்லன் said...

//"பல்லை உடைச்சி புடுவேன், யாரு பல் அழகன்?, பக்கி மாதிரி இருக்க?"//

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் சாமி. அவ பேசின இங்கிலிஷு எப்படி புரிஞ்சது உங்களுக்கு. அதான் நீங்க அந்த மயக்கத்துல இருந்திங்களே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!.......

அது சரி......எல்லாம் நல்லாத்தான் இருக்கு "பல் இருக்குறவன் பக்கடா திம்பான்.... அதான் உங்க பல்ல பத்தி நல்லா சொல்லிட்டாலே.... பின்ன ஏன் பக்கடா திங்காம வந்திங்க தலைவா..... பல்லுவலியா உங்களுக்கு...... நொங்கு தின்னாம கூந்தளையவது நக்கிருக்கலாம்ல.... பதினெட்டு மணிநேர பயணத வீனடிசுடின்களே தல.

வில்லன் said...

என் உயிர் நீதானே... உன் உயிர் நான் தானே ... நீயாரோ இங்கு நான் யாரோ வந்து சேர்ந்தோமே இன்பம் காண்போமே........ அப்படின்னு பாடி அசதிருக்க்கலாம்ல......

வில்லன் said...

//"உங்க பல் ரெம்ப அழகா இருக்கு" ன்னு சொன்னாங்க.//

மப்புல அவங்களுக்கு உங்க பல்லு மட்டும் தான் தெரிஞ்சிருக்கும் அதான் அப்படி சொலிருப்பாங்க தல அத நனைச்சி தலைகால் புரியாம ஆடபுடது பா..... நம்மதான் ரொம்ப நல்லா கலேராசே.... பாத்தவுடனே பளிச்சுன்னு தெரிய......

வில்லன் said...

வழக்கமா ஆம்பள பொம்பளைக்கு அல்வா கொடுப்பாங்க......இங்க அது தலைகீழா நடந்துருக்கு..... கேக்கவே பரிதாபமா இருக்கு தல....

Rajasurian said...

கலக்கல்

தாரணி பிரியா said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :))))

அத்திரி said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

கண்மணி/kanmani said...

Happy new year to you

Enjoyed post :))

கலகலப்ரியா said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

Anonymous said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பா

சூர்யா ௧ண்ணன் said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

- இரவீ - said...

இனிய ஆங்கில புதுவருட வாழ்த்துக்கள்..

நினைவுகளுடன் -நிகே- said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

Starjan (ஸ்டார்ஜன்) said...

சிரிப்பாலே எங்கும் நகர முடியல ...

புத்தாண்டு வாழ்த்துக்கள்

SUFFIX said...

ஹா ஹா, நல்லாவே சுத்த விட்டுருச்சு வெள்ளையம்மா, நல்லாவே பறந்திருக்கிங்க தல!!

ராமலக்ஷ்மி said...

:))!

இனிய புத்தாண்டு வாழ்த்துகக்ள் நசரேயன்!

அன்புடன் மலிக்கா said...

அம்மாடியோ சிரிச்சு தாங்கல சூப்பர்.
நல்ல எழுத்து நடை வாழ்த்துக்கள்..

http://niroodai.blogspot.com/

அரங்கப்பெருமாள் said...

அய்யோ முடியலைங்க... சூப்பர்.
உங்களுக்கு உண்மை தெரிஞ்சிடுச்சி.

விடுங்க.. அடுத்த விமானத்திலே என்ன நடக்குதுன்னு பார்த்திடுவோம்.

சும்மா..வாங்க பாஸூ. இதெல்லாம் பார்த்தா முடியுமா?