Monday, December 28, 2009

அக்ரகாரத்து அழகு

மஹா கிட்ட பேசணுன்னு எல்லோரும் தவமா தவமிருக்கும் போது எனக்கு என்னவோ  அவளிடம் பேச வேண்டும் ஆர்வம் இல்லை, ஒருவேளை அவளிடம் பேசினால் நானும் மற்றவர்கள் மாதிரி அவள் அழகுக்கு அடிமை ஆகி விடுவேன் என்ற பயமாக இருக்கலாம், அப்படி இருந்ததாலோ என்னவோ என்னிடம் இந்த பொறுப்பை மகா ஒப்படைத்தாள்.


நான் சின்ன வயசிலே பாம்பு என்று பெயரை கேள்வி பட்டு ரெண்டு நாள் மயங்கி இருந்ததா சரித்திரம், அப்படி இருக்கும் போது என்னிடம் இந்த பொறுப்பை மஹா ஒப்படைத்ததாலே என்னவோ, இதை நானே தனியாளாக செய்யவேண்டும் என்று தீர்மானம் எடுத்தேன்.


 வேற யாரும் என்னோட ௬ட்டா இதை செய்தால், அவனுக்கும் அவளோட அன்பு கிடைக்குமே என்று நினைத்து, நானே இதை தனியாக செய்தேன். அவள் என்னிடம் கேட்டதை எடுத்துகொண்டு சைக்கிளை அழுத்தினேன், அவர்கள் வீடு இருக்கும் திசையை நோக்கி, போகும் வழியிலே என்னோட பெரியப்பா சொன்னது நினைவிலே வந்தது

"அவங்க வீட்டு பக்கம் எல்லாம் நான் சின்ன வயசிலே போய் இருக்கேன், அவங்க வீட்டு உள்ளே போனது கிடையாது,போகவும் முடியாது, அவங்களை எல்லாம் சாமி ன்னு தான் ௬ப்பிடுவோம், அவங்க முன்னாடி கையை  கட்டிக்கொண்டுதான் பேசுவோம்"

இப்ப நிலைமை எப்படின்னு தெரியலை, இருந்தாலும் அவளாக ௬ப்பிட்டதாலே எனக்கு கொஞ்சம் தைரியம் இருந்தது.இப்படியே நினைத்து கொண்டு மஹா வின் தெருவிற்கு வந்து விட்டேன். அந்த தெருவிலே ஆள் நடமாட்டம்  குறைவாக இருந்தது, பெரும்பாலான வீடுகள் பூட்டப் பட்டு இருந்தது, அங்கு மக்கள் வசிக்கும் அறிகுறியே தென்படலை.

வீடுகள்  எல்லாம் பாழடைந்து இருந்தது.என்னிடம் முன்றாம் வகுப்பிலே படித்த கிச்சா இதே தெருவிலே இருந்துதான் பள்ளிக்கு வந்தான், அதற்கு பின்னே ஊரை விட்டு போனவன் இன்றும் திரும்ப வில்லை.இந்த மாதிரி அக்கிரகார தெருவை விட்டு சென்றவர் எல்லாம் திரும்பி வராததாலே இந்த வீடுகள் இன்னும் பூட்டி கிடக்கிறது.எனக்கு பிடிச்ச மஹா இருக்கும் போது நான் ஏன் இவங்களை பத்தி கவலைப் படனும்

மஹா வீடு வந்தது, எப்படி அவளை ௬ப்பிடுவதுன்னு தெரியலை.. சைக்கிள் மணியை அடித்தேன்,  ஒரு பாட்டி வெளியே வந்து பார்த்தாங்க, என்கிட்டே எதுவுமே பேசலை, மறுபடி உள்ளேபோய்டாங்க.

கொஞ்ச நேரத்திலே மஹா வெளியே வந்தாள், என்னைப் பார்த்து கை யை காட்டிவிட்டு, என்னை இறங்கி வரச்சொன்னாள், நானும் அவள் பின்னால் போனேன், என்னை வீட்டிருக்கு பின் புறம் செல்லும் இடுக்கு வழியாக ௬ட்டி சென்றாள்.

"பிடிசிட்டியா?  எப்படி பிடிச்சே?"

"எங்க வீட்டிலே எலி இல்லாத இடமே கிடையாது, இதிலே உனக்கு ஒரு எலியை பிடிக்க கஷ்டமா?"

"எங்கே காட்டு?"

௬ண்டில் அடைபட்டு கிடந்த எலியை ரெம்ப ஆர்வமா பார்த்தாள், நான் அவளைப் பார்த்தேன்,இந்த பொறியிலே இருக்கும் எலியை வைத்து அவளோட மனசுக்கு பொறிவைக்க ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்ததை நினைத்து எனக்கு சந்தோசம்.

"எலிக்கு என்ன சாப்பாடு கொடுக்கணும்?"

"ஒன்னும் தேவையில்லை நான் ஒரு தேங்காய் துண்டு போட்டு இருக்கும், நாளைக்கு நீ உயிரியல் ஆய்வு ௬டத்திற்கு எடுத்து வரும் வரை அதையே சாப்பிடும் " 


"சரி.. சரி அதை அப்படியே ஓரமா வச்சிடு, என்னோட வீட்டுக்குள்ளே எடுத்திட்டு போக முடியாது, நீ நாம வந்த வழிய முன் வாசல் பக்கம் வா, நான் பின் வாசல் வழியா வந்து முன்னாலே வாரேன்"

முன் வாசல் வந்தேன்,வீட்டு உள்ளே பேசும் குரல்கள் கேட்டது, என்னோட பெயரும் அடிபட்டமாதிரி இருந்தது, ஒருவேளை என்னை தீவிரமா காதலிக்கிறதா மஹா சொல்லிட்டு இருக்காளோ என்று நினைத்து நானும் கேட்டேன்.

"யாரு,எந்த ஆத்து பையனோ, அவனை வீட்டு வரைக்கும் ௬ட்டிட்டு வந்து இருக்கே?,கண்ட ஆத்து பசங்க நம்ம வீட்டுக்கு வர௬டாதுன்னு தெரியாதா ?"

"நம்ம ஆத்திலே எலி பேரை சொன்னாலே எரிஞ்சு விழுறேள், உயிரியல் ஆய்வு௬டதிற்கு இல்லாம போன வாத்தியார் திட்டுவார்"

"அவா மாதிரி ஆட்களையெல்லாம் ௬ட்டிட்டு வாறது இது கடைசியா இருக்கணும்?"

அதற்கு மேலே அங்கே நிற்க  மனம்   இல்லமாமல் வேகமாக வெளியே வந்து சைக்கிளை அழுத்தினேன் என் வீட்டை நோக்கி,நான் போகும் போது அவள் வீட்டு கதவு திறக்கும் சத்தம் கேட்டாலும், என்னால் திரும்பி பார்க்க மனம் இல்லை.


வரும் வழியிலே  பெரியப்பா சொன்ன சாமி ஞாபகம் வந்தது, மஹா இருந்த மனசிலே எங்க குலதெய்வம் சாமியை நினைத்தேன், இப்ப எல்லாம் மஹா கிட்ட  பேச பயமே இல்லை. மனசிலே கனம் இருந்தாதானே பேசுவதற்கு பயம் இருக்கும்.


24 கருத்துக்கள்:

குடுகுடுப்பை said...

தலைப்ப வெச்சே ஒரு மதச்சண்டையை என்னால் உருவாக்கமுடியும். இது மதம் சார்ந்த பதிவு என்று புரிந்துகொள்ளும் நபர்களும் நம்மிடம் இருக்கிறார்கள்.

நசரேயன் said...

//தலைப்ப வெச்சே ஒரு மதச்சண்டையை என்னால் உருவாக்கமுடியும். இது மதம் சார்ந்த பதிவு என்று புரிந்துகொள்ளும் நபர்களும் நம்மிடம் இருக்கிறார்கள். //

அப்ப ஒரு கடை அடைப்பு போராட்டம் இருக்குன்னு சொல்லுறீங்க

ஹேமா said...

நசர்,அன்பு காதல் உண்மையா ரெண்டு மனசிலயும் இருந்தா அக்ரகாரம் என்ன பண்ண முடியும் ?எலி பிடிக்க மட்டுமே உங்கமேல அன்பு வச்சிருந்தா இப்பிடித்தான் !

Unknown said...

வேற யாராவது வந்து வேற எதாவது எழுதிரப்போறாங்க.. பாத்து.

//நசர்,அன்பு காதல் உண்மையா ரெண்டு மனசிலயும் இருந்தா அக்ரகாரம் என்ன பண்ண முடியும் ?எலி பிடிக்க மட்டுமே உங்கமேல அன்பு வச்சிருந்தா இப்பிடித்தான் !
//
பெரும்பாலும் எலிக்கு மட்டும் தான் அன்பு காட்டுவாங்க.

Starjan (ஸ்டார்ஜன்) said...

எலி எப்படி இருக்கு

என்னோட எலியை பாக்க வாங்க

vasu balaji said...

/மஹா கிட்ட பேசணுன்னு எல்லோரும் தவமா தவமிருக்கும் போது எனக்கு என்னவோ அவளிடம் பேச வேண்டும் ஆர்வம் இல்லை, ஒருவேளை அவளிடம் பேசினால் நானும் மற்றவர்கள் மாதிரி அவள் அழகுக்கு அடிமை ஆகி விடுவேன் என்ற பயமாக இருக்கலாம்,/

:)). நம்பீட்டம்.

/மஹா இருந்த மனசிலே எங்க குலதெய்வம் சாமியை நினைத்தேன், இப்ப எல்லாம் மஹா கிட்ட பேச பயமே இல்லை. மனசிலே கணம் இருந்தாதானே பேசுவதற்கு பயம் இருக்கும். //

அது அது. அசத்தல் அண்ணாச்சி.

கலகலப்ரியா said...

சுண்டெலி சமாச்சாரம்... விட்டுத் தள்ளியாச்சில்ல..

//என்னால் திரும்பி பார்க்க மனம் இல்லை.//

புரிகிறது..

(முகிலன்.. குடுகுடுப்பை... என்னா வில்லத்தனம்..)

Anonymous said...

தளபதி, அருமையா இருக்கு பீலிங்ஸ்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கணம்//

???!!!!

புலவன் புலிகேசி said...

நண்பரே..இது பொன்றவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்...திருந்தாமல்

goma said...

நோ கமெண்ட்ஸ்.

ஆனாலும் மனசு கேட்கவில்லை.
கதை, அருமை.

நட்புடன் ஜமால் said...

ஆஹா! என்னாச்சு நசரேயருக்கு

காமெடி பதிவுன்னு நினைச்சேன்

பாம்புன்னு பில்டப்பு கொடுக்கும்போது கரப்பான் பூச்சின்னு முடிப்பீங்கன்னு பார்த்தேன் ...

Vidhoosh said...

இப்பையும் கூடத்தான் ஹமாம் சோப் விளம்பரத்த்துல "ஆட்டோல கண்ட பசங்களோட ஒட்டிண்டு போரால்ல" என்று வருது. மதத்தை வைத்து வியாபாரம் நடத்துவது எளிதாக இருக்கிறது. தீயும் எளிதில் பற்றிக் கொள்கிறது. என்ன செய்ய?

btw, புனைவு நல்லாருக்கு நசரேயன். 'அந்த வேலை' 'அந்த வேலை'ன்னு கதையில் கூட்டிச் சென்று ... தொடர்ந்து எழுதுங்கள்.
:)

வித்யா

கோவி.கண்ணன் said...

ஐயர் ஆத்துல இன்னும் இப்படித்தான் இருப்பான்னு நினைக்க வைக்கிறேள்.

நேக்கு தெரிஞ்சவா ஆத்துல சமயக்கட்டு, பூஜை அறை, படுக்கை அறை எல்லா அறையும் புழங்கி வருவேன். அவா ஆத்து தட்டுல கூட சாதம் போடுவா. ஒண்ணா ஒரே தட்டுல கூட சாப்பிட்டு இருக்கோம்.

உங்களுக்கு தெரிஞ்சவா இன்னும் அப்படியே இருக்காளோ என்னவோ !

********

ஐயோ என்னா ஆச்சு நேக்கு சாரி எனக்கு, :)

எல்லோரும் அப்படி இல்லை. ஆனால் ஒரு கதைன்னு சொல்லும் போது எல்லோரும் அப்படின்னும் ஒரு பிம்பம் ஏற்பட்டுவிடும். இதையே தான் சுஜாதா அயோத்தியா மண்டபம் கதை வழியாக செய்தார்.

ராஜ நடராஜன் said...

உங்களுக்கு எலியா!எனக்கு ஹோமியம் புடிச்சுத் தரச் சொல்லியெல்லாம் சந்தர்ப்பம் கிடைச்சது.மாடு முட்டுமங்கிற பயத்துல வடை போச்சு.

லெமூரியன்... said...

நல்லா எழுதியிருக்கீங்க...! பதினைந்து வருஷத்துக்கு முன்ன வரைக்கும் அவாளாம் அப்டிதான் இருந்தா......இப்போவும் அப்டிதான்...ஆனா அந்த சதவிகிதம் மட்டுமே கொஞ்சம் மாறிடிச்சு...!

SUFFIX said...

டாம் & ஜெர்ரி கதையா, நீங்க நடத்துங்க பாஸ்.

நசரேயன் said...

நன்றி ஹேமா :- அடுத்த தடவை மனசை மாத்தி ஒரு இடுகை எழுதுறேன்

நன்றி முகிலன்

நன்றி Starjan ( ஸ்டார்ஜன் )

நன்றி பாலா அண்ணே

நன்றி கலகலப்ரியா :- அப்படி கேளுங்க

நன்றி சின்ன அம்மிணி :- ரெம்ப பீல் பண்ணிட்டனோ

நன்றி டி.வி.ஆர் ஐயா :- திருத்திட்டேன்

நன்றி புலவன் புலிகேசி :- இது ஒரு கற்பனை தான்

நன்றி கோமா அக்கா

நன்றி நட்புடன் ஜமால் :- அப்ப இது காமெடி பதிவு இல்லையா

நன்றி விதூஷ்/வித்யா :- உங்க ரெண்டாவது பார நீங்க எழுதுற கவுஜ மாதிரி இருக்கு, ஒண்ணுமே புரியலை

நன்றி கோவி.கண்ணன்

நன்றி ராஜ நடராஜன் :- அடுத்த கதைக்கு கரு தயார் எனக்கு

நன்றி லெமூரியன்

நன்றி SUFFIX

RAMYA said...

கற்பனை கதை நல்லா இருந்திச்சு நசரேயன்!

வழக்காமாக உள்ள நகைச்சுவை கொஞ்சம் மிஸ்ஸிங் :(

ஆரம்பிக்கும் போதே முடிவையும் யூகிக்க முடியுது :)

RAMYA said...

//

குடுகுடுப்பை said...
தலைப்ப வெச்சே ஒரு மதச்சண்டையை என்னால் உருவாக்கமுடியும். இது மதம் சார்ந்த பதிவு என்று புரிந்துகொள்ளும் நபர்களும் நம்மிடம் இருக்கிறார்கள்.
//

ஐயோ! இதென்னா நடக்கட்டும் நடக்கட்டும்!

நசரேயன் said...

நன்றி RAMYA :-அடுத்த இடுகையிலே மொக்கையை அதிமாக்கிடலாம்

வில்லன் said...

தலைப்பை பாத்துட்டு வந்துட்டார்யா வந்துட்டார் கள்ளகாதல் மொக்கை மன்னன்...... அப்படின்னு நெனச்சா இப்படி ஒரு touching கதைய சொல்லி எங்கள நெகில வசுடிங்க தல...வாழ்த்துக்கள் நல்லதோர் (கள்ளகாதல் அல்லாத) மொக்கை தந்ததுக்கு..........

வில்லன் said...

//இந்த பொறியிலே இருக்கும் எலியை வைத்து அவளோட மனசுக்கு பொறிவைக்க ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்ததை நினைத்து எனக்கு சந்தோசம்.//

சின்ன மீன போட்டு பெரிய மீன புடிக்கலாம்.... நீறு என்னன்னா எலிய கொடுத்து மாமிய மடக்கலாம்னா முடியுமா தல.....

வில்லன் said...

//அவர்கள் வீடு இருக்கும் திசையை நோக்கி, போகும் வழியிலே என்னோட பெரியப்பா சொன்னது நினைவிலே வந்தது "அவங்க வீட்டு பக்கம் எல்லாம் நான் சின்ன வயசிலே போய் இருக்கேன், அவங்க வீட்டு உள்ளே போனது கிடையாது,//

எதுக்கு நீங்க இப்படி மாங்கு மாங்குன்னு மூட்ர்சய மகாவுக்காக போடுரின்களோ அதேமாதிரி அவங்க அம்மாவுக்கோ இல்ல அத்தைக்கோ லைன் போடவ பெரியப்பா சின்ன வயசுல அளஞ்சாறு.......