Sunday, December 13, 2009

இதயத்தை தந்தேன்

இன்று மாலை 3 மணி
*************************
டாக்டர் சீக்கிரம் வாங்க அந்த நோயாளிக்கு மூச்சி வாங்குது.

நான் உடனே வாறன்.(அடுத்த ஐந்து நிமிடத்திலே)

பல்ஸ் எப்படி இருக்கு, குறைந்து கொண்டு வருது


சரி சீக்கிரமா அறுவை சிகிச்சை அறைக்கு எடுத்திட்டு வாங்க


மூன்று மாதம் முன்பு
*************************
டாக்டர்   இதயத்திலே உங்களுக்கு ஒரு கோட்டையை கட்டி வச்சி இருக்கேன்.விட்டா வணிக வளாகம் கட்டி வாடைக்கு விடுவீங்க போல,மக்கள் எல்லாம் விவசாயம் செய்ய இடம் இல்லாம தவிக்கிறாங்க, மானாவாரியா இடம் இருந்தா சொல்லுங்க வரப்பு வெட்டி நாத்து நடலாம்.


நான் சொல்லுறது உங்களுக்கு புரியலைன்னு நினைக்கிறேன்.புரியுது, அவ்வளவு தெரியாம இவ்வளவு பெரிய படிப்பு எல்லாம் படிக்க முடியுமா?, எத்தனை நாளுக்கு இப்படி வசனம் பேசி காலம் தள்ளுவீங்க.


நீங்க யாராவது டாக்டரை காதலிக்கிறீங்களா?


உங்களுக்கு தேவை இல்லாத கேள்வி!!


கண்டிப்பா நீங்க யாரையும் காதலிக்கலைன்னு தெரியுது

எப்படி?காதலிச்சா சீக்கு வந்த கோழி மாதிரி தலையை மேசையிலே தொங்கபோட்டுகிட்டு இருப்பீங்க, எதாவது போன் வந்தா மருத்துமனையை இழுத்து மூடிட்டு முக்காடு போட்டு பேசிகிட்டு இருப்பீங்க.


காசையும், காலத்தையும் விரயம் பண்ணுறதுதான் காதலா?


நான் பார்த்த வரைக்கும் அப்படித்தான்.


இன்று மாலை 4 மணி

********************************
 
பல்ஸ் ரெம்ப குறைஞ்சி போச்சி,இப்ப என்ன செய்யலாம்?ஷாக் கொடுக்கலாமா?


எதாவது நம்பிக்கை இருக்கா?


எதுவுமே இல்லாத பட்சத்திலே செய்யுறதை நம்புறதை தவிர வேற வழியே இல்லையே. 

இரண்டு மாதங்களுக்கு முன்பு
***********************************
டாக்டர் இதயத்தை எப்படி இடம் மாத்துறது?ஒரு ஆறு மணி நேரம் ஆகும் இடம் மாத்த, ஏன் இந்த கேள்வி


இதயத்தை இடம் மாத்தினாத்தான் காதல் வருமாமே?


கண்டிப்பா பாடை தான் வரும், ஆனா காதல் வராது.


தானத்திலே சிறந்த தானம் எது டாக்டர்செய்யுறவங்களைப் பொறுத்தது, நீங்க என்ன நினைக்குறீங்க?


தனமாகிய உங்களுக்கு தானம் பண்ணுறது தான்.


ஒரு பத்து வருசத்துக்கு முன்னாடி சொல்லி இருந்தீங்கன்னா நம்பி இருப்பேன்.


காதல் வசனம் சொல்லி சந்தோஷ படுற அளவுக்கு நீங்களும் நானும் இன்னும் வாலிப புள்ளைங்க இல்லை?காதலுக்கு வயசு இல்லையே, கல்யாணம் ஆகாதவங்களை காதலிகிறது தப்பும் இல்லை.  


நாளை  இரவு பத்து மணி

**************************************
 
என்கிட்டே மருத்துவ பிரச்சனைக்கு வரும் போது எல்லாம் இதயம், மனசு ரெண்டையும் எடுக்குறது கொடுக்குறது பத்தி தான் பேசுவாரு, ஆனா இன்னைக்கு அவரோட இதயம், கல்லிரல், ஒரு கிட்னி, பெருங்குடல், ரெண்டு கண்ணு எல்லாத்தையும் நானே எடுக்க வேண்டிய நிலைமை.டாக்டர் கணக்கு ஒண்ணு குறையுது, ரெண்டு கிட்னி யல்லவா இருக்கணும்?


ஒண்ணு கொஞ்சம் அடி அதிகமா வாங்கி இருக்கு


அதனாலே எடுக்காம விட்டுடீங்களா?


எடுத்து மருத்துவ கல்லூரிக்கு ஆய்வு ௬டத்திற்கு அனுப்பி வைத்து இருக்கேன். (சொல்லிட்டு அவங்களுக்கு வந்த அழுகையை அடக்க முடியலை)அழாதீங்க டாக்டர், ஒரு கிட்னி வீணா போனதுக்காய், அடுத்த முறை வரும் போது கொஞ்சம் ௬டுதல் கவனம் செலுத்துங்க.

இப்ப ஒரு நல்ல இதயம் உள்ள மனுசனை எங்கே தேடுவேன்?வழி இருக்கு, எடுத்த இதயத்தை ஒரு நல்ல வாட்ட சாட்டமான ஆளுக்கிட்டே வைக்க சொல்லலாம்.


அவரோட மனசு இருக்குமான்னு தெரியலை, அதனாலே எடுத்த இதயத்தை திருப்பி கொடுத்து விட்டேன்.என்ன சொல்லுறீங்க?


ஆமா அவரோட இதயத்தை எடுத்திட்டு என் இதயத்தை கொடுத்து விட்டேன்.


என்ன டாக்டர் கடையிலே அரிசியை கொடுத்து விட்டு பருப்பு வாங்குற மாதிரி சொல்லுறீங்க?


அவரா கொடுக்கும் போது எடுக்கிற நிலைமையிலே நான் இல்லை, ஆனா இருக்கும் போது எடுக்காமலும் இருக்க முடியலை.


இதயம் மட்டும் தான் இடம் மாறுச்சா,இல்லை கிட்னி சிறுகுடல், பெருங்குடல் எல்லாம் இடம் மாறிடுச்சா?

அவரோட இதயம் மட்டுமே போதும். இப்படி ஒரு காதல் காவியம் இன்னும் உலக சினிமா வரலாற்றிலே யாரும் இன்னும் எடுக்கலை, என்னோட கதையும் எதிர் காலத்திலேயே எல்லோரும் பாடமா படிப்பாங்க என்கிற நம்பிக்கை இருக்கு.

இதை கேட்டு என்னால அழாம இருக்க முடியலை, நான் கொஞ்ச நேரம் அழுதிட்டு வாரேன்.உங்களை இப்படி எல்லாம் யோசித்து செய்ய வச்சவன் மட்டும் கையிலே கிடைச்சா கைமா பண்ணிடுவேன்.அதனாலே படிக்கிற ஒண்ணு ரெண்டு பேருக்கும் என்னோட விலாசம் தெரிஞ்சா ௬ட வெளியே சொல்ல வேண்டாம். 


25 கருத்துக்கள்:

SUREஷ் (பழனியிலிருந்து) said...

//என்ன டாக்டர் கடையிலே அரிசியை கொடுத்து விட்டு பருப்பு வாங்குற மாதிரி சொல்லுறீங்க?//

நீங்க லிவிங்ஸ்டன், கௌஸல்யா நடிச்ச படத்தை இன்னும் பார்க்கலன்னு நினைக்கிறேன்

SUREஷ் (பழனியிலிருந்து) said...

//இதயத்தை இடம் மாத்தினாத்தான் காதல் வருமாமே?


கண்டிப்பா பாடை தான் வரும், ஆனா காதல் வராது.
//


????

லெமூரியன்... said...

\\டாக்டர் இதயத்தை எப்படி இடம் மாத்துறது?ஒரு ஆறு மணி நேரம் ஆகும் இடம் மாத்த, ஏன் இந்த கேள்வி


இதயத்தை இடம் மாத்தினாத்தான் காதல் வருமாமே?


கண்டிப்பா பாடை தான் வரும், ஆனா காதல் வராது.


தானத்திலே சிறந்த தானம் எது டாக்டர்செய்யுறவங்களைப் பொறுத்தது, நீங்க என்ன நினைக்குறீங்க?


\\தனமாகிய உங்களுக்கு தானம் பண்ணுறது தான்.......//

குறும்பு...! :-) :-)

T.V.Radhakrishnan said...

:-)))

pappu said...

உங்களுக்கு எல்லாத்தையுமே எப்படி இப்படி கோக்குமாக்கா எழுத வருது!

வானம்பாடிகள் said...

மயக்கமே குடுக்காம இப்புடி அறுக்கறது நல்லாவா இருக்கு. இப்போ நான் நினைவில இருக்கேனா கோமாவான்னு எந்த டாக்டர கேக்க=))

தியாவின் பேனா said...

அப்பாடா ...
அருமை

RAMYA said...

//
தனமாகிய உங்களுக்கு தானம் பண்ணுறது தான்.......
//

ம்ம்ம்... ஒன்னும் சொல்லிக்கற மாதிரி இல்லை:)

RAMYA said...

//
இதயத்தை இடம் மாத்தினாத்தான் காதல் வருமாமே?
//

நல்லா கேள்வி இப்படி எல்லாம் கேக்க உங்களுக்கு யாரு சொல்லி தராங்க!!

//
கண்டிப்பா பாடை தான் வரும், ஆனா காதல் வராது.
//

வேற இதயத்தை போருத்தினா கூட ஒன்னும் வேலையாகாது போல இருக்கே :)

RAMYA said...

//
பல்ஸ் எப்படி இருக்கு, குறைந்து கொண்டு வருது
சரி சீக்கிரமா அறுவை சிகிச்சை அறைக்கு எடுத்திட்டு வாங்க
//

எதுக்கு இழுத்திகிட்டு இருக்கறதை ஒரேயடியா நிருத்தரதுக்கா:)

RAMYA said...

//
காதலிச்சா சீக்கு வந்த கோழி மாதிரி தலையை மேசையிலே தொங்கபோட்டுகிட்டு இருப்பீங்க, எதாவது போன் வந்தா மருத்துமனையை இழுத்து மூடிட்டு முக்காடு போட்டு பேசிகிட்டு இருப்பீங்க.
//

அப்படியா புது மாதிரி இருக்கே:)

இது வரை கேள்வி படவே இல்லை இப்படி நடக்குதுன்னு:)

RAMYA said...

//
ஷாக் கொடுக்கலாமா?
//

அது எதுக்கு ஏற்கனவே எக்கச்சக்க பவர் கட் இருக்கு:-)

RAMYA said...

//
இதை கேட்டு என்னால அழாம இருக்க முடியலை, நான் கொஞ்ச நேரம் அழுதிட்டு வாரேன்.
//

நானும் கொஞ்ச நேரம் அழுதேன் நசரேயன். அதுவும் விக்கி விக்கி அழுதேன்:)


//
உங்களை இப்படி எல்லாம் யோசித்து செய்ய வச்சவன் மட்டும் கையிலே கிடைச்சா
//

கிடைச்சா என்னா கிடைச்சாச்சுன்னு வச்சிக்குவோம்:)//
கைமா பண்ணிடுவேன்
//

அப்படீன்னா என்னா??

//
அதனாலே படிக்கிற ஒண்ணு ரெண்டு பேருக்கும் என்னோட விலாசம் தெரிஞ்சா ௬ட வெளியே சொல்ல வேண்டாம்.
//

விலாசம் எனக்கு தெரியும் எல்லாருக்கும் நாளைக்கு பதிவு போட்டு சொல்லிடறேன். எதுலே வந்து உங்களை கவனிக்கணுமோ அதுலே வந்து கச்சிதமா கவனிக்கட்டும் :)

ஹேமா said...

இதைப் படிச்சிட்டு சத்தியமா என்னால அழாம இருக்க முடியலை !

cheena (சீனா) said...

அன்பின் நசரேயன்

நல்லாருக்கு - ரசிச்சேன்

நல்வாழ்த்துகள்

புலவன் புலிகேசி said...

நல்லா இருக்கு நண்பரே...ஒரு சோகமான காதலை நகைச்சுவை கலந்து சொல்லிருக்கீங்க...

Chitra said...

காதல் கதை எப்படியெல்லாம் நடக்குது.....

விக்னேஷ்வரி said...

கொஞ்சம் இல்ல, நிறையவே குழப்பமா இருக்கு.

Anonymous said...

தேனுடன் சேர்ந்து ரசிக்க வைத்து இருக்கிறீர்கள் எப்போதும் போல.

அத்திரி said...

//இதயத்தை இடம் மாத்தினாத்தான் காதல் வருமாமே?கண்டிப்பா பாடை தான் வரும், ஆனா காதல் வராது./


அண்ணே சிரிச்சி முடியல

aazhimazhai said...

புரிஞ்ச மாதரியும் இருக்கு புரியாத மாதரியும் இருக்கு... கொஞ்சம் தெளிவாவே குழப்பிடீங்க என்னை !!!!

நட்புடன் ஜமால் said...

தயவுசெய்து இதை யாரும் விஜய்க்கு சொல்லிடாதீங்க

வேட்டைக்காரன் படு தோல்விக்கு பிறகு காதல் கதையாக எடுத்திட போறாங்க

வில்லன் said...

யோவ் இதென்ன கள்ள காதலா!!! நல்லா காதலா!!!! இல்ல பிங்க் ஜட்டி காதலா என்பதை தெளிவாக சொல்லவும்...... எனக்கு என்னமோ படிக்கும் போது பிங்க் ஜட்டி காதல் மாதிரி தெரியுது வர வர உம்மோட எண்ண ஓட்டம் சரியில்ல????? எங்க பாத்தாலும் ஒரே பிங்க் (சட்டை பிங்க், பண்ட் பிங்க், ஜட்டி பிங்க் ஏன் செல் போன் கூட பிங்க்!!!!!!!!!! என்னமோ ஒன்னும் சரியாய் தெரில எனக்கு......

வில்லன் said...

//தானத்திலே சிறந்த தானம் எது டாக்டர்
செய்யுறவங்களைப் பொறுத்தது, நீங்க என்ன நினைக்குறீங்க?
தனமாகிய உங்களுக்கு தானம் பண்ணுறது தான்.//

அந்த தனத்த எனக்கு கொஞ்சம் தானம் பண்ணுரிங்களா தல.....
நானும் அந்த தனத்த (அட நீங்க கொடுக்குற தானத்த) அனுபவிச்சு பாத்துட்டு சொல்லுறேன் ...

வில்லன் said...

//இதயம் மட்டும் தான் இடம் மாறுச்சா,இல்லை கிட்னி சிறுகுடல், பெருங்குடல் எல்லாம் இடம் மாறிடுச்சா?//

எல்லாம் இடம் மாறிடுச்சு காசுக்கு........வித்து காசாகிருவோம்ல......காசேதான் கடவுளப்பா...