Tuesday, December 29, 2009

தாமதமாய் வந்தேன்

அன்பே,


இனிமேலும் என்னால் தாமதிக்க முடியாது, உன்னை கண்ட நாள் முதலா உன்னோட தாமத எண்ணத்தாலே தடுமாறி உன் காதல் வலையிலே விழுந்தேன், காதலுக்கு வேகத்தடை அவசியம், அதற்காக தாறு மாறான தாமத தடைகளை என்னால் இனிமேலே சகித்து கொள்ள முடியாது, ஐந்து மணி என்பதை அதிகாலை ஐந்து என்று பொருள் கொண்டு ஒரு கள்வன் போல என் வீட்டு கதவை தட்டி நாயிடம் கடிபட்டு, அடிபட்டு ஓடிப்போன உனக்கு துண்டு போட்டு இருக்கிறேன் என்று வெளியே ௬ட சொல்ல முடியவில்லை.

உன்னோட தாமதங்களை வரிசைப் படித்ததினால் இந்த கடிதம் முடிவில்லாமல் போகும், ஒரு சிலவற்றை உன் பார்வைக்கு வைக்க விரும்புகிறேன். காதலியை தெரிந்தெடுக்க, காதலை சொல்ல, குறித்த நேரத்திலே காதலியை சந்திக்க, அலைபேசி ரீ சார்ஜ், காதல் படி உள்ளிட்ட பல விசயங்களில் பொறுத்து கொண்டேன், இனிமேலும் என்னால் காத்து இருக்கும் அளவுக்கு பொறுமைஇல்லை.

இப்பவும் உனக்காக ரெண்டு மணி நேரம் காத்து இருக்கேன், நீ தாமதமா வந்தாலும், இந்த கடிதம் உனக்கு சீக்கிரம் கிடைக்கும்    
 

முக்கிய குறிப்பு :

நீ ரெம்பா நாளா கேட்டது கடிதத்தின்  கீழே இருக்கு

***************************************************************************


"என்னங்க கடிதத்துக்கு கீழே என்ன இருந்தது, அதைப் பத்தி சொல்லவே இல்லை"

"அது ஒண்ணும்மில்லை"

"ஒண்ணுமில்லாத விஷயத்தை யாரவது முக்கிய குறிப்பிலே எழுதுவாங்களா?"

"நான்  எதையுமே  தாமதமா செய்வதாலே, எனக்கு கிடைக்க வேண்டிய காதல் முத்தம், கடைசி வரைக்கு கிடைக்கவே இல்லை, அதனாலே அதை கடிதத்திலே உதட்டு சாயம் தடவி கொடுத்து இருந்தா?"

"காதலனுக்கு கிடைக்க வேண்டிய ஓசி முத்தம் கிடைக்கவில்லையே.. எனக்கு ரெம்ப அழுகையா வருது"

"இதுகெல்லாம் அழலாமா, அந்த முத்தம் அவளோடது  இல்லை, பக்கத்திலே இருந்த கிழவிகிட்ட கடிதத்தை கொடுத்து, கடன் வாங்கிய முத்தம்"

"இப்படிப்பட்ட ஒரு தெய்வீக காதலை விட்டுட்டு என்னை கை பிடித்த உங்களை எப்படி பாரட்டுறதுன்னு தெரியலையே?"

"உன்னையை மாதிரி ஒரு தங்கமான மணிக்கு கரம் நீட்டத்தான், என்னோட தாமத காதல் ஜெயிச்சி இருந்தா உன்னோட தங்க மனசு எனக்கு கிடைத்து இருக்குமா?"

இப்படியே கதை முடிந்து இருந்தால் எவ்வளவு சந்தோசமா இருக்கும், அப்புறம் நடைபெற்ற சம்பவங்களை சொல்லலன்னா வரலாறு மன்னிக்காது இந்த மொக்கை எழுத்தாளனை.

மூன்று மதங்களுக்கு பிறகு :

என்னங்க 5 மணிக்கு வாரேன்னு 6 மணிக்கு  வந்து இருக்கீங்க?

ஹி.. ஹி .. ஹி

உங்க தாமத காதல் மாதிரி இதையும் நினைச்சி பிட்டீங்களா ?

ஆறு மதங்களுக்கு பிறகு :

"போன்ல யாரு இந்த நேரத்திலே?"

"என் நண்பன்"

"நண்பனா? இல்ல தாமத காதலியா ?"

"என்ன சொன்ன  ??"

"ஹும் .. சோத்துக்கு உப்பு இல்லைன்னு சொன்னேன், இந்த மாதிரி அர்த்த ராத்திரியிலே யாரு௬ட கள்ள கடலை போடுறீங்க"

"அடிப்பாவி இவன் என் ௬டப்படிச்சவன்"

"எங்கே நான் பேசுறேன் கொடுங்க"

"இல்லை கட் பண்ணிட்டான்"

"என்னைய கட் பண்ணிட்டு வா ன்னு சொன்னாங்களா?" 

"உன்கிட்ட தெரியாத்தனமா உண்மையை சொல்லிட்டேன்"

"அதனாலே தான் இப்ப எல்லாம் மறைமுகமா நடக்குதோ?"

ரெண்டு வருடம் கழித்து :

"என் வீட்டுகாரரு கல்யாணத்துக்கு ௬ப்பிட்ட எழவு  வீட்டுக்கு தான் வருவாரு,இப்ப ௬ட பார் 6 மணிக்கு அலுவலகம் விட்டா எழு மணிக்கு வாராரு, தாமதமா வாரத்திலே அவரு கில்லாடி"

"அடியே, உலகம் புரா என் புகழ் பாடி என்னை சந்தி சிரிக்க வைக்கனுமுன்னு கொலை வெறியோட இருக்கியே ஏன்?"

"நான் என்ன உங்க பழைய கதையையா சொன்னேன்?"

"ஒரு உண்மைய சொல்லுறேன் கேளு, என்னோட முன்னாள் காதலி பையன் ஸ்கூல் க்கு போய்கிட்டு இருக்கான்"

"இம்புட்டு விவரம் தெரிஞ்சு இருக்கா?, இன்னும் நிறையை சொல்லுங்க கேட்க ரெம்ப ஆவலா இருக்கேன்"


"அவளை எங்கே பார்த்தீங்க? எப்படி பார்த்தீங்க?"

..........................................

.........................................

25 ஆண்டுகள் கழித்து :

"எங்கே உங்க வீட்டுகாரர் ?"

"அவரு கொஞ்சம் தாமதமாத்தான் வருவாரு?"

"டாக்டர், இவ பல்லை மட்டுமல்ல, நாக்கையும் பிடிங்கி போடுங்க" 

"உங்களுக்கு எத்தனை குழந்தைகள்? ....ஒன்னும் பதிலே இல்லை ...ரெண்டு பேரும் அமைதியா இருக்கீங்க"

"அவரு கொஞ்சம் தாமதமாத்தான் கணக்கு பண்ணுவார், நான் சொல்லுறேன்"   

"எட்டு,ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ"

பல்லை பிடிங்கியாச்சி, நீங்க போகலாம்

எட்டு டாக்டர்.. எட்டு

நான் சொல்லலை அவரு தாமதமாத்தான் பதில் சொல்லுவார்ன்னு


16 கருத்துக்கள்:

ILA (a) இளா said...

:))

vasu balaji said...

:)). /அந்த முத்தம் அவளோடது இல்லை, பக்கத்திலே இருந்த கிழவிகிட்ட கடிதத்தை கொடுத்து, கடன் வாங்கிய முத்தம்"/

அவ்வளவு லேட்டாவா போனீங்க

ஹேமா said...

நசர்,என்ன உலக அதிசயம்.நேத்து ஒரு பதிவு.இண்ணைக்கும் ஒண்ணு.

தாமதங்கள் எப்போதும் எங்களுக்காகத் தாமதிக்காது.நகைச்சுவைதான் என்றாலும் கதையொன்று சொல்லுது.

Anonymous said...

:))

புலவன் புலிகேசி said...

ஹா ஹா ஹா வாழ்வியல் நகைச்சுவையாய்....நல்லா இருக்குங்க.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//"அவரு கொஞ்சம் தாமதமாத்தான் கணக்கு பண்ணுவார், நான் சொல்லுறேன்" //


உள்குத்து??

நட்புடன் ஜமால் said...

ஹா ஹா ஹா

நசர் ரிட்டர்ன்ஸ்

இன்னும் இன்னும் எதிர்ப்பார்க்கிறோம்

Unknown said...

நான் கொஞ்சம் தாமதமா வந்துட்டேன், மன்னிச்சிக்குங்கோ

கத சூப்பரு

வால்பையன் said...

நானும் போயிட்டு தாமதமாய் வர்றேன்!

கண்மணி/kanmani said...

:))))

நசரேயன் said...

நன்றி இளா

நன்றி பாலண்ணே

நன்றி ஹேமா :- என்னது உலக அதிசயமா!!.. சில சமயம் அப்படித்தான் நடக்கும்

நன்றி சின்ன அம்மிணி

நன்றி புலவரே

நன்றி SUREஷ் (பழனியிலிருந்து) : - சத்தியமா இல்லை நான் எழுதும்போது

நன்றி நட்புடன் ஜமால் :- இப்படி உசுப்புஏத்தியே உடம்பு புண்ணாகுது

நன்றி முகிலன்

நன்றி வால்பையன்

நன்றி கண்மணி

கார்த்திகைப் பாண்டியன் said...

சிரிக்க வைக்கணும்னு முடிவு பண்ணிக்கிட்டு களம் இறங்கி கலக்குறீங்க தலைவரே..

ராமலக்ஷ்மி said...

:))!

நசரேயன் said...

நன்றி வாத்தியாரே
நன்றி ராமலக்ஷ்மி அக்கா

வில்லன் said...

"உங்களுக்கு எத்தனை குழந்தைகள்? ....ஒன்னும் பதிலே இல்லை ...ரெண்டு பேரும் அமைதியா இருக்கீங்க"
"அவரு கொஞ்சம் தாமதமாத்தான் கணக்கு பண்ணுவார், நான் சொல்லுறேன்"
புள்ளையாவது சரியான நேரத்துல (பத்து மாசத்துல) போரந்துச்சா இல்ல அதுவும் தாமதமா வந்துச்சா.........

வில்லன் said...

//"உன்னையை மாதிரி ஒரு தங்கமான மணிக்கு கரம் நீட்டத்தான், என்னோட தாமத காதல் ஜெயிச்சி இருந்தா உன்னோட தங்க மனசு எனக்கு கிடைத்து இருக்குமா?" //

அழகான மனைவி அன்பான துணைவி அமைந்தாலே பேரின்பமே......

துக்கம் சில நேரம் பொங்கி வரும் போது மக்கள் மனம் போல மொக்கை எழுதுவேன் கண்ணே

என் சோகம் என்னோடு தான்.............