Friday, September 11, 2009

ஒருங்கிணைந்த தகவல் மையம்

வணக்கம் சுடு நாய் கடை எண் ஏழு, நீங்க எப்படி இருக்கீங்க?

வயறு காயுது, சாப்பிட எதாவது கிடைக்குமா ?

உங்க பலநோக்கு எண் கொடுங்க ஐயா

1234567890

வணக்கம் இருளாண்டி, நீங்க சுடுகாட்டு சந்திலே இருந்து ௬ப்பிடுறீங்க, உங்க வீட்டு தொலைபேசி எண் 34567890, கைபேசி 123455678 நீங்க எந்த எண்ணில் இருந்து ௬ப்பிடுறீங்க?

எப்படி உங்களுக்கு எண் தொலைபேசி எண்கள் எல்லாம் தெரியுது?

நாங்க ஒருகிணைந்த தகவல் மையத்தோடு தொடர்பு வச்சி இருக்கோம்

என்னோட சாப்பாட்டு பட்டியலை கொடுக்கலாமா?
எனக்கு ஒரு கோழி பிரியாணி கொடு

உங்களுக்கு பிரியாணி சரிவராது

எப்படி ?

உங்களோட மருத்துவ குறிப்பு படி, உங்களுக்கு கொழுப்பு அதிகமா இருக்கு, அதனாலே கொழுப்பு குறைஞ்சதா சாப்பிடுங்க

எப்படி உங்களுக்கு தெரியும் ?

நீங்க போன வாரம் ஓசியிலே நூலகத்திலே எடுத்த புத்தகம் "வெட்டியா கொழுப்பை குறைப்பது எப்படி", அதை வச்சித்தான் சொல்லுறேன்

சரி சாமி, ஒரு ஆட்டுக்கால் பாயா கொடு.

அது உங்க உடம்புக்கு போதும், பாயா விலை 200

நான் வங்கி கடன் அட்டையிலே பணம் கொடுக்கலாமா?

அதற்கு நீங்க ஒரு பாது காப்பு கேள்விக்கு பதில் சொல்லணும்

"கேளுங்க"

நீங்க தெய்வம், எனக்கு ஒன்னுக்கு நாக்கு தள்ளுது, நீங்க 159 பேரை காதலிச்சி இருக்கீங்க,உங்க 159 வது காதலி பெயர் என்ன?

என்னது இந்த கணக்கு உங்களுக்கு எப்படி தெரியும்

ஒருகிணைந்த தகவல் மையம்

ஒரு மார்க்கமாத்தான் இருக்கு, அவ பேரு கல்யாணி

உங்க காதலியையே கல்யாணம் பண்ணி இருக்கீங்க, ரெம்ப சந்தோசம்

அந்த கல்யாணி வேற, இந்த கல்யாணி வேற

அப்ப ரெட்டை சதம் அடிச்சிட்டீங்களா?

ரெம்ப முக்கியம் இப்ப ?

மன்னிக்கணும் வாடிகையாளரிடம் ஜாலியா பேசலைனா என் ஜோலி போய்டும்.
உங்க கடன் வரலாறு சரியில்லை,அதனாலே நீங்க பணம் தான் கொடுக்கணும்.

சரி நான் பணம் எடுத்து வைக்கிறேன் நீங்க வரும் முன்னே

ஐயா அது முடியாது, இப்பத்தான் உங்க வங்கியிலே இருந்து பணம் கல்பனா என்கிற வங்க இருந்து 2000 ரூபாய் எடுத்துட்டு போறாங்க,அவங்க உங்க குடும்ப பட்டியல்லே வரலை

ஒருகிணைந்த மையம் உயிரை எடுக்குது

ஐயா உங்க வங்கியிலே இப்ப இருப்பது 20 பது ரூபாய், அதிலே பாயா வராது, ஒமியம் தான் வரும்

ஒமியமுனா என்ன?

மாட்டு கழிவு சூப்

புரியுது,பாயா எடுத்துட்டு வா, நான் எப்படியாவது பணம் எடுத்து வைக்கிறேன்.எவ்வளவு நேரம் ஆகும்

45 நிமிஷம், உங்களுக்கு ரெம்ப அவசரமுன்னா, நீங்க உங்க "படை வண்டி" யை எடுத்திட்டு வாங்க

என்னது?

வண்டி எண் "ஏறக்-௧௨௩"

வேற எதாவது வேணுமா?

அனுப்பும் போது, ஓசி சோடவைவும் கொடுத்துவிடுங்க

கொடுக்கலாம், ஆனா உங்க மருத்துவ குறிப்பு படி, உங்களுக்கு சர்க்கரை நோய், அதனாலே கொடுக்க முடியாது

யோவ்.. எளவு எடுத்தவனே கேட்டதை கொடுன்னா, தர்க்கம் பண்ணி, தாலியை அறுக்க, மவனே நேரிலே வந்தேன் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது.

தெரியும், உங்க பல்லை கடிச்சிகிட்டு என் சட்டையை பிடிப்பீங்க, உங்க கையை மடிச்சி என் பல்லை உடைப்பீங்க, இந்த சம்பவம் முன்னவே நடந்து இருக்கு, உங்களுக்கு நீதி மன்றத்திலே ஆறு மாசம் தண்டனை கிடைத்து இருக்கு, சம்பவம் நடந்த இடம், இப்ப நீங்க நிற்கிற இடம் தான்.

அட போங்கடா நீங்களும் உங்க அமைப்பும், நான் இங்கே இருக்கிற குழியிலே படுத்துகிறேன்.

பொறுப்பு அறிவித்தல் : சொந்த சரக்கு அல்ல, இரவல் சரக்கு


26 கருத்துக்கள்:

Anonymous said...

தளபதி, இருக்கீங்களா, எங்காச்சும் மார்ஸ் , வீனஸ்னு சுத்திப்பாக்கப்போயிட்டீங்களா!!

Vidhoosh/விதூஷ் said...

:)) நல்லா இருக்கீங்களா நசரேயன்.
========
சின்ன அம்மிணி:
அதான் எங்க இருக்காருன்னு அவரே சொல்லிடாருள்ள...
:))
----வித்யா

நட்புடன் ஜமால் said...

ஜூலை மாசம் போய்ட்டு செப்டம்பரில் தான் வந்து இருக்கீக

அனைத்தும் நலம் தானே

--------------------

இரவல் சரக்கு - அடுத்த ஊட்டு மாங்கா.

Anonymous said...

என்ன தல எங்க போனீங்க.... ரொம்ப நாளா ஆளே காணும். நடந்தது என்ன?

வானம்பாடிகள் said...

வாங்க சார். நலமா?

ஷண்முகப்ரியன் said...

இரவல் சரக்காக இருந்தாலும் இண்ட்ரஸிங்காக இருந்தது,நச்ரேயன்.

வால்பையன் said...

இருக்கட்டும் இருக்கட்டும்!

இதெல்லாம் நாங்க சிவாஜி காலத்துலயே பார்த்துட்டோம்!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

எங்க போயிருக்ந்தீக...

ஓபாமாவின் தனி செயலாளராக பதவி ஏற்றுக்கொண்டதாக ஊரெங்கும் ஒரே பேச்சு!
:)

எம்.எம்.அப்துல்லா said...

என்னண்ணே வந்தாச்சா?? நலமா?? எப்பவும் சொல்லிட்டு போறதுதான் நல்ல புள்ளைக்கு அழகு :)

ஹேமா said...

நசரேயன் வந்திட்டீங்களா.சுகம்தானே !பதிவு படிக்கல.உங்க பதிவு பார்த்ததுமே சந்தோஷம் வந்திட்டீங்கன்னு.

Anonymous said...

//Vidhoosh/விதூஷ் said...

:)) நல்லா இருக்கீங்களா நசரேயன்.
========
சின்ன அம்மிணி:
அதான் எங்க இருக்காருன்னு அவரே சொல்லிடாருள்ள...
:))
----வித்யா
//

பாருங்க வித்யா, மறுபடியும் காணீம். பின்னூட்டத்துக்கு பதில் சொல்லணுமா இல்லியா :)

சந்தனமுல்லை said...

வாங்க நசரேயன்...ரொம்ப நாளா காணோமே!!

இந்த தகவல் மையத்தை நினைச்சா அவ்வ்வ்வ்! :))

ஷ‌ஃபிக்ஸ் said...

எப்பவோ படிச்சது, கொஞ்சம் ஜிகினா வேலைப்பாடு செஞ்சு தந்திருக்கிங்க, நல்லா இருக்கு

நசரேயன் said...

//தளபதி, இருக்கீங்களா, எங்காச்சும் மார்ஸ் , வீனஸ்னு சுத்திப்பாக்கப்போயிட்டீங்களா!!//

எங்கயும் போகலை, அளவு கடந்த ஆணி, அதான் கடைப்பக்கம் வர முடியலை, இனிமேல்தான் எல்லா கடைக்கும் போகணும்

நசரேயன் said...

//:)) நல்லா இருக்கீங்களா நசரேயன்.
========
சின்ன அம்மிணி:
அதான் எங்க இருக்காருன்னு அவரே சொல்லிடாருள்ள...
:))
----வித்யா//

உங்களை மாதிரி பெரியவங்க ஆசிர்வாதத்தாலே நல்லா இருக்கேன்

நசரேயன் said...

//நட்புடன் ஜமால் said...
ஜூலை மாசம் போய்ட்டு செப்டம்பரில் தான் வந்து இருக்கீக

அனைத்தும் நலம் தானே

--------------------

இரவல் சரக்கு - அடுத்த ஊட்டு மாங்கா.
//

ஆமா அண்ணே கோடை கால விடுமுறை, நீங்க எப்படி இருக்கீங்க?

நசரேயன் said...

// கடையம் ஆனந்த் said...
என்ன தல எங்க போனீங்க.... ரொம்ப நாளா ஆளே காணும். நடந்தது என்ன?
//

அதிகமா இடுகை எழுதுறேன்னு, வேலை அதிகமா கொடுத்துட்டாங்க, நீங்க எப்படி இருக்கீங்க?

நசரேயன் said...

//வானம்பாடிகள் said...
வாங்க சார். நலமா?
//

நல்ல சுகம், ஆமா பேரை மாத்தினதுக்கு விருந்து இன்னும் கொடுக்கவே இல்லை

நசரேயன் said...

//
ஷண்முகப்ரியன் said...
இரவல் சரக்காக இருந்தாலும் இண்ட்ரஸிங்காக இருந்தது,நச்ரேயன்.
//

நன்றி ஐயா

நசரேயன் said...

//அத்திவெட்டி ஜோதிபாரதி said...
எங்க போயிருக்ந்தீக...

ஓபாமாவின் தனி செயலாளராக பதவி ஏற்றுக்கொண்டதாக ஊரெங்கும் ஒரே பேச்சு!
:)
//

௬ப்பிட்டாங்க நான் ஒபமா பதவி கேட்டதாலே எனக்கு தரலை, நீங்க எப்படி இருக்கீங்க ?

நசரேயன் said...

//
எம்.எம்.அப்துல்லா said...
என்னண்ணே வந்தாச்சா?? நலமா?? எப்பவும் சொல்லிட்டு போறதுதான் நல்ல புள்ளைக்கு அழகு :)
//

இனிமேல கண்டிப்பா சொல்லிட்டு போறேன், நீங்க எப்படி இருக்கீங்க ?

நசரேயன் said...

//
ஹேமா said...
நசரேயன் வந்திட்டீங்களா.சுகம்தானே !பதிவு படிக்கல.உங்க பதிவு பார்த்ததுமே சந்தோஷம் வந்திட்டீங்கன்னு.
//

நல்ல சுகம், நீங்க, நிலா மற்றும் உங்க சரி பாதி எப்படி இருக்கிறார்கள், என்னோட வாழ்த்துக்கள் சொல்லுங்க

நசரேயன் said...

//
வாங்க நசரேயன்...ரொம்ப நாளா காணோமே!!

இந்த தகவல் மையத்தை நினைச்சா அவ்வ்வ்வ்! :))//

நல்லா இருக்கேன் ஆச்சி,
உங்க கடைப்பக்கம் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறேன், ஆனா பின்னூட்டம் போட முடியாத அளவுக்கு கடந்த ஆணி.

நசரேயன் said...

//Vidhoosh/விதூஷ் said...

:)) நல்லா இருக்கீங்களா நசரேயன்.
========
சின்ன அம்மிணி:
அதான் எங்க இருக்காருன்னு அவரே சொல்லிடாருள்ள...
:))
----வித்யா
//

பாருங்க வித்யா, மறுபடியும் காணீம். பின்னூட்டத்துக்கு பதில் சொல்லணுமா இல்லியா :)//

வழக்கம் போல இடுகையை வெளியிட்டு தூங்கி விட்டேன்.. எனக்கு விருது எல்லாம் கொடுத்தீங்க பண முடிப்பு கிடையாதா விருதுக்கு!!!!

நசரேயன் said...

//
ஷ‌ஃபிக்ஸ் said...
எப்பவோ படிச்சது, கொஞ்சம் ஜிகினா வேலைப்பாடு செஞ்சு தந்திருக்கிங்க, நல்லா இருக்கு
//

கடை காத்து வாங்க ௬டாதுன்னு வாடகையிலே பொழைப்பை ஓட்டுறேன், சீக்கிரம் சொந்த சரக்கு வெளியிடுகிறேன்

Mahesh said...

புரிஞ்சுடுச்சு...... என்னது? எதோ ஒண்ணு.