Friday, February 13, 2009

கலாச்சாரக் காவலர்களுக்கு அமெரிக்கா அழைப்பு

ஒரு நாள் வீட்டுல எனக்கும் தங்கமணிக்கும், பேச்சு வார்த்தை ஆரம்பித்து, வாய்த்தகராறு வரைக்கும் போய், அது திடிர்ன்னு கைகலப்பு ஆகிப்போச்சு, ஒரு பத்து நிமிஷம் கழிச்சு பார்த்தால் உடம்பிலே திட்டு திட்டாய் வர ஆரம்பித்தது, எனக்கும் அப்பத்தான் தெரிய ஆரம்பித்தது தங்கமணி உருட்டுக்கட்டையால என் உடம்பிலே சாகசம் நடத்தி இருக்கிறாள் என்று, சண்டை காட்சி முடிஞ்ச உடனே பயத்திலே எனக்கு காய்ச்சல் வந்து விட்டது

மறுநாள் தங்கமணிதான் என்னை ஆஸ்பத்தரிக்கு ௬ட்டிக்கொண்டு சென்றாள், அடிக்கிற கைதான் அணைக்கும் ன்னு எனக்கு அப்பத்தான் தெரிந்தது.
ஆஸ்பத்தரிக்கு போனே உடனே ஒரு பாரம் கொடுத்து பூர்த்தி செய்ய சொன்னாங்க.

நாங்களும் வாங்கி ரெண்டு மணி நேரமா எழுதியும் இன்னும் எழுதி முடிக்கலை, வரவேற்ப்பு அறையிலே இருக்கிற கருப்பம்மா வேற நான் எழுதுற வேகத்தை பார்த்து

"ரெண்டு பெரும் பாரத்திலே பரிச்சை எழுதுரீங்கலான்னு கேட்டாங்க"

இதுக்கு மேல தாமதித்தோம் வீட்டுக்கு போக சொல்லி வீடுவார்களோன்னு பரிச்சை நேரம் முடியும் போது அவசர அவசரமா எழுதுற மாதிரி பாரத்தை பூர்த்தி செய்து கொடுத்தேன்..


கொஞ்சம் நேரம் கழிச்சு வரவேற்ப்பு அறை பெண்மணி என்னை ௬ப்பிட்டாள், நானும் போனேன்.பாரத்தை பார்த்தாள், என்னை பார்த்தாள். பார்த்து விட்டு உங்க பார்ட்னெர் எங்கே? ன்னு கேட்டாள்.என் மனைவியை காட்டி இவங்க தான் என் பாட்னர் ன்னு சொன்னேன்.

அவள் உங்க டொமஸ்டிக் பாட்னரா?

நான் என் மனசுல, நாம இப்ப வெளிநாட்டுக்கு அல்லவா வந்து இருக்கிறோம்,

"டொமஸ்டிக் பார்ட்னர், அப்ராடு பார்ட்னர் ரெண்டும் இவங்க தான்" ன்னு சொன்னேன்.

உடனே அந்த பெண் ஒரு சிரிப்பு, என் தங்க்ஸ் பக்கத்திலே நின்னு கிட்டு
இந்த மக்குக் காமெடிக்கெல்லாம் சிரிக்கிறாளே, இதுக்கு முன்னாடி ஜோக் கேட்டதே கிடையாது போலே தெரியுது.

அவங்க "நீங்க ரெண்டு பெரும் யாரு?"

நான் "இப்பவரைக்கும் புருஷன், பெண்ட்டாட்டி ன்னு சொன்னேன்"

அவங்க "அப்படின்னா நீ ச்பௌஸ் ன்னு சொல்லணும்"

"நானும் பார்த்தேன், அதை விட இது நல்ல கவர்ச்சியா இருந்தது. அதான் இதை எழுதினேன்" ன்னு சொன்னேன்.

அவங்க "உன் சட்டையைப் பார்த்தாலே தெரியுது" , பார்த்ததால் அது பிங்க் சட்டை.

எல்லாம் முடிந்து வீட்டுக்கு வந்து நண்பர்களிடம் விசாரித்தால், ஆண்பிள்ளையும் ஆண்பிள்ளையும் மோ, இல்ல பெண் பிள்ளையும் பெண் பிள்ளையும் கல்யாணம்(இங்க அப்படித்தான் சொல்லுறாங்க) முடிச்சால் அவங்க ரெண்டு பெரும் டொமஸ்டிக் பார்ட்னர் ஆகிவிடுவார்களாம்.

ஐயா சாமிகளா, கலாச்சரத்தை கட்டிக்காக்கும் உங்கள் சேவை இங்கு நிறைய தேவைப்படுகிறது,ஆணும் பெண்ணும் பேசினாலே தப்புன்னு சொல்லுற நீங்க ஓரின சேர்க்கை சட்ட பூர்வமாக செயல் படுகிற இங்கே,சட்டு புட்டுன்னு பிங்க் ஜட்டிய வாங்கிகிட்டு ஓடியாங்க, உங்களுக்கு நிறைய வேலைகள் காத்துகிட்டு இருக்கு, இங்க நீங்க சேலை கொடுக்க முடியாது,இவங்க சேலை உடுத்த மாட்டாங்க, உங்க கோவணம் அளவுலதான் உடைகள் இருக்கும். அதே மாதிரி இவங்க எல்லாம் பிங்க் ஜட்டியை அஞ்சலில் அனுப்ப மாட்டாங்க, நேரிலே வந்து வாயிலே தினிச்சுட்டுத்தான் போவாங்க.

கலாச்சாரத்துக்கு கொடி பிடிக்கும் காவலர்களே, மழை வரலைன்னு மனுசனுக்கும்,கழுதைக்கும் கல்யாணம், காக்கவுக்கும் குருவிக்கும் கல்யாணம் பண்ணி வைக்கும் சடங்குகள் என்ன இந்திய கலாச்சார எண்ணையிலே ஊறிப்போன உளுந்த வடையா? ஆமை வடையா?இதையெல்லாம் செய்தி தாள்களில் போட்டு பெருமை அடிக்கும் போது, ஆணும் பெண்ணும், போற போக்கில் புருசனும் பெண்டாட்டியும் வீதியிலே நின்னு பேசினால் கலாச்சார கேடுன்னு எப்படி சாமி சொல்லுறீங்க.

கடைசியா ஒரு கேள்வி பிங்க் ஜட்டிக்கு சேலை, பிங்க் சட்டைக்கு என்ன கொடுப்பீங்க?


37 கருத்துக்கள்:

இராகவன் நைஜிரியா said...

Me the First...

இராகவன் நைஜிரியா said...

Yes I am the First

இராகவன் நைஜிரியா said...

படிச்சுட்டு வந்து மீதி பின்னூட்டம்

இராகவன் நைஜிரியா said...

// பிங்க் ஜட்டிக்கு சேலை, பிங்க் சட்டைக்கு என்ன கொடுப்பீங்க? //

பிங்க் வேட்டியா இருக்குமோ?

பழமைபேசி said...

நீர் இரயிலடில நடத்துற கூத்தைக் கண்டிச்சதுக்கு, இப்பிடி பதிவு போடுறீர் போல இருக்கு?!

இராகவன் நைஜிரியா said...

//ஒரு நாள் வீட்டுல எனக்கும் தங்கமணிக்கும், பேச்சு வார்த்தை ஆரம்பித்து, வாய்த்தகராறு வரைக்கும் போய், அது திடிர்ன்னு கைகலப்பு ஆகிப்போச்சு,//

பேச்சு, பேச்சாத்தான் இருக்கனும் அப்படின்னு நீங்க சொல்லவில்லையா...

அவ்.. இப்படியா அடிவாங்குவது... வெட்கம்... வெட்கம்... ரங்ஸ் குலத்திற்க்கே வெட்கம்

இராகவன் நைஜிரியா said...

//பழமைபேசி said...
நீர் இரயிலடில நடத்துற கூத்தைக் கண்டிச்சதுக்கு, இப்பிடி பதிவு போடுறீர் போல இருக்கு?! //

இது என்ன புது கூத்தாயிருக்கு?

இராகவன் நைஜிரியா said...

என் பின்னூட்டங்களை சட்டை செய்யாத நசரேயன் அவர்களை கண்டித்து நான் வெளி நடப்பு செய்கிறேன்

கிரி said...

:-))))))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-)))

எம்.எம்.அப்துல்லா said...

//அடிக்கிற கைதான் அணைக்கும் ன்னு எனக்கு அப்பத்தான் தெரிந்தது.
//

ஆமா!ஆமா!உணமை!உண்மை1

:)))

இராகவன் நைஜிரியா said...

//ஆஸ்பத்தரிக்கு போனே உடனே ஒரு பாரம் கொடுத்து பூர்த்தி செய்ய சொன்னாங்க. //

What a bad habit. நம்கிட்ட பாரம் கொடுத்து பூர்த்தி செய்ய சொன்னாங்களா?

நல்ல வேல நேர்முகத்தேர்வில் பதில் சொன்னமாதிரி, இதுல ஒன்னும் செய்யலயே?

இராகவன் நைஜிரியா said...

//இதுக்கு மேல தாமதித்தோம் வீட்டுக்கு போக சொல்லி வீடுவார்களோன்னு பரிச்சை நேரம் முடியும் போது அவசர அவசரமா எழுதுற மாதிரி பாரத்தை பூர்த்தி செய்து கொடுத்தேன்.. //

அப்படி யாரவது மிரட்டினாத்தான் வழிக்கு வருவீங்க போலிருக்கு

இராகவன் நைஜிரியா said...

//"டொமஸ்டிக் பார்ட்னர், அப்ராடு பார்ட்னர் ரெண்டும் இவங்க தான்" ன்னு சொன்னேன். //

அது சரி அவங்க ஊரில அப்படி இருக்குமோ அப்படின்னு நீங்க நினைச்சது சரிதான்.

பி.கு. :
ஒன்று இருக்கும் போதே அடிவாங்கி இங்க வந்திருக்கோம்.. இவங்க டொமஸ்டிக், இண்டெர்னேஷனல் அப்படின்னு பேசராங்கன்னு நினைச்சீங்களா?

இராகவன் நைஜிரியா said...

//அவங்க "அப்படின்னா நீ ச்பௌஸ் ன்னு சொல்லணும்" //

நான் எப்படி படிச்சேன் தெரியுமா

நீச்
பெ

ஸ்....
ஒன்னுமே புரியல...

அப்புறம்தான் Spouse ஓ இதைத்தான் இப்படி சொல்லியிருகாரா அப்படின்னு நினைச்சேன்

அ.மு.செய்யது said...

உள்ளேன் ஐயா !!!!!

அ.மு.செய்யது said...

//கடைசியா ஒரு கேள்வி பிங்க் ஜட்டிக்கு சேலை, பிங்க் சட்டைக்கு என்ன கொடுப்பீங்க? //

குருவி ரொட்டியும் குச்சி முட்டாயும்.

அ.மு.செய்யது said...

//எல்லாம் முடிந்து வீட்டுக்கு வந்து நண்பர்களிடம் விசாரித்தால், ஆண்பிள்ளையும் ஆண்பிள்ளையும் மோ, இல்ல பெண் பிள்ளையும் பெண் பிள்ளையும் கல்யாணம்(இங்க அப்படித்தான் சொல்லுறாங்க) முடிச்சால் அவங்க ரெண்டு பெரும் டொமஸ்டிக் பார்ட்னர் ஆகிவிடுவார்களாம்.
//

ந‌ல்ல‌ பார்ட்ன‌ர்ஷிப்...

S.R.Rajasekaran said...

இன்னும் பழசே முடியல .அத முடிச்சிட்டு வாரேன்

அ.மு.செய்யது said...

//இதையெல்லாம் செய்தி தாள்களில் போட்டு பெருமை அடிக்கும் போது, ஆணும் பெண்ணும், போற போக்கில் புருசனும் பெண்டாட்டியும் வீதியிலே நின்னு பேசினால் கலாச்சார கேடுன்னு எப்படி சாமி சொல்லுறீங்க.
//

இத‌யெல்லாம் ப‌டிக்கும் போது ந‌ம்ம ஊர்ல‌ ந‌ட‌க்குற‌ கூத்தெல்லாம் எவ்ளோவே
ப‌ர‌வாயில்ல‌னு தோணுது.

சந்தனமுல்லை said...

அய்யோ அய்யோ உங்க காமெடிக்கு அளவே இல்லாம இருக்கு!!

//அடிக்கிற கைதான் அணைக்கும் ன்னு எனக்கு அப்பத்தான் தெரிந்தது.
//

:-) அது!!


//ஆண்பிள்ளையும் ஆண்பிள்ளையும் மோ, இல்ல பெண் பிள்ளையும் பெண் பிள்ளையும் கல்யாணம்(இங்க அப்படித்தான் சொல்லுறாங்க) முடிச்சால் அவங்க ரெண்டு பெரும் டொமஸ்டிக் பார்ட்னர் ஆகிவிடுவார்களாம்.
//

ஆகா!!

சந்தனமுல்லை said...

//அதே மாதிரி இவங்க எல்லாம் பிங்க் ஜட்டியை அஞ்சலில் அனுப்ப மாட்டாங்க, நேரிலே வந்து வாயிலே தினிச்சுட்டுத்தான் போவாங்க//

:-)))

S.R.Rajasekaran said...

\\அது பிங்க் சட்டை\\


பிங்க் சட்டை இன் ரகசிகம் என்ன என்பதை விளக்குமாறு பழமை பேசியையை அன்போடு கேட்டுக்கிறேன் .

S.R.Rajasekaran said...

\\ஒரு பத்து நிமிஷம் கழிச்சு பார்த்தால் உடம்பிலே திட்டு திட்டாய் வர ஆரம்பித்தது,\\


வாயகுடுத்து வாங்கிகட்டிகிட்ட

S.R.Rajasekaran said...

\\சண்டை காட்சி முடிஞ்ச உடனே பயத்திலே எனக்கு காய்ச்சல் வந்து விட்டது\\படம் ரெம்ப வல்கராதான் இருக்கு .எனக்கே காய்ச்சல் வந்திருச்சி

S.R.Rajasekaran said...

\\நாங்களும் வாங்கி ரெண்டு மணி நேரமா எழுதியும் இன்னும் எழுதி முடிக்கலை, வரவேற்ப்பு அறையிலே இருக்கிற கருப்பம்மா வேற நான் எழுதுற வேகத்தை பார்த்து\\

பயந்து ஓடிருப்பா

வில்லன் said...

//கடைசியா ஒரு கேள்வி பிங்க் ஜட்டிக்கு சேலை, பிங்க் சட்டைக்கு என்ன கொடுப்பீங்க//

பிங்க் சட்டைக்கு பிங்க் கோவணம். Simple.

குடுகுடுப்பை said...

நல்லா இருக்குண்ணேன்.

குடுகுடுப்பை said...

நாங்களும் பதிவு போட்டிருக்கோம் இன்னைக்கு

ஹேமா said...

நசரேயன் சுகமாயிட்டீங்களா?
உங்க தங்க்ஸ் ரொம்பவே காயப்படுத்திட்டாங்களா.சரி...சரி...
மன்னிச்சிடுங்க அவங்கள.
வாழ்க்கைன்னா அப்பிடி இப்பிடித்தான்.

ஹேமா said...

நகைச்சுவையோடு ஒரு கலாசார ஆதங்கம்.நல்லாயிருக்கு.

சின்னப் பையன் said...

//ஒரு நாள் வீட்டுல எனக்கும் தங்கமணிக்கும், பேச்சு வார்த்தை ஆரம்பித்து, வாய்த்தகராறு வரைக்கும் போய், அது திடிர்ன்னு கைகலப்பு ஆகிப்போச்சு, ஒரு பத்து நிமிஷம் கழிச்சு பார்த்தால் உடம்பிலே திட்டு திட்டாய் வர ஆரம்பித்தது, எனக்கும் அப்பத்தான் தெரிய ஆரம்பித்தது தங்கமணி உருட்டுக்கட்டையால என் உடம்பிலே சாகசம் நடத்தி இருக்கிறாள் என்று, சண்டை காட்சி முடிஞ்ச உடனே பயத்திலே எனக்கு காய்ச்சல் வந்து விட்டது
//

என்னய்யா இங்கே ஒருத்தரு நம்ம கதைய எழுதியிருக்காரேன்னு படிக்க ஆரம்பிச்சேன்.....

:-)))

அத்திரி said...

நீங்க உண்மையிலே ரொம்ப நல்லவரு அண்ணாச்சி... பின்ன அடிவாங்கின மேட்டரையெல்லாம் சொல்றீங்களே........உண்மையிலே ரொம்ப நல்லவரு ..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

முரளிகண்ணன் said...

பிங் படாத பாடு படுத்துது

Anonymous said...

i am dheena

ippitiyellam natakuma

Vijay said...

ஓரினச் சேர்க்கை கலாசாரமா இல்லையா என்ற கேள்வி இருக்கட்டும். அது ஒரு மனிதனுக்கே நல்லதா இல்லையா? இதெல்லாம் அவரவர் விருப்பம் என்று விட்டுவிட முடியுமா? நெசமாவுமே எனக்குத் தெரியலை. அதான் கேக்கறேன்.
இது இயற்கையின் நியதிக்கு எதிரான போக்கா இல்லையா? யாராவது தெரிந்தால் பதில் சொல்லுங்க :-)