மன்னிக்க வேண்டுகிறேன்
காலம் கடந்த மன்னிப்பு கேட்கிறேன்னு கொஞ்சம் மனசு நெருடலா இருந்தாலும், பண்ணின தப்புக்கு ஒரு மன்னிப்பை கேட்டு வச்சா மனசு நிம்மதி அடையும் என்ற நம்பிக்கையிலே தான் அலுவலகம் சென்றேன், போகும் போதே பல சிந்தனைகள் மனசுக்குள்ளே இருந்தாலும், மன்னிப்பை ஏத்துக்காவிட்டாலும் கேட்டே ஆக வேண்டும் என்ற முடிவில் உறுதியா இருந்தேன்.
மேல உள்ள பாராவையும்,தலைப்பையும் படிச்ச உடனே நான் என்னவோ நோகாம மறைந்து நொங்கு தின்னுட்டு கடையிலே புலம்பி கிட்டு இருக்கேன்னு கற்பனை குதிரைகள் பறக்க வாய்ப்பு இருக்கு, ஆனாலும் எதிர்பார்ப்புகளை எப்போதுமே குறைவாக வைத்துகொள்வது மனதுக்கும், உடலுக்கும் நல்லதுன்னு ஒரு குத்து வசனம் சொல்லிட்டு பொழப்பை பார்க்க போவோம்.
முதல்ல நேரிலே மன்னிப்பு கேட்கலாம் என்று முடிவு எடுத்தேன், பின்னர் மனசு மாறி கடிதம் எழுதி வைத்துவிட்டேன்,காரணம் நினைப்புக்கும், நடப்புக்கும் பாலம் அமைக்க போராடி கொண்டு இருக்கும் ஒரு சாதாரண மனுஷன் தானே(குத்து வசனம் இம்சை தாங்கலை).ஒரு காலத்திலேயே காதல் விசேச கடிதவாதி என்று பட்டம் வாங்கி இருந்தாலும், பழைய அனுபவத்தை வச்சி மன்னிப்பு கடிதம் எழுதிட்டேன். எழுதிய கடிதத்தை எடுத்துக் கொண்டு அலுவலக மேலாளர் அறையை நோக்கி அடைந்தேன். மேலாளர் ஆண்பாலாக இருந்தாலும்,அறையிலே இருப்பது பெண் தான்.
அறையிலே இருக்கும் பெண் மிகவும் பரிச்சயப் பட்ட முகம், அந்த காலத்திலேயே நாங்க சந்திக்காம இருந்த நாட்களை விரல் விட்டு எண்ணிவிடாலம்.கல்யாணம் முடிந்த உடனே, எதோ காணாததை கண்டது போல, கிடைத்தை எல்லாம் சாப்பிட்டு, சாப்பிட்டு ஆணழகனா இருந்த நான்,தொந்தியும், தொப்பையுமா அரை கிழவனா ஆகிட்டேன், ஆனால் அவள்(ங்க) வயசிலேயும்,அழகிலேயும் பெரிய வித்தியாசம் தெரிந்ததா தெரியலை.
அறை முன்னே சென்று கதைவை தட்ட முயன்று கையை வைத்த உடனே கதவு லேசாக திறந்தது, பின்னால் திரும்பி யாருடனோ பேசிக்கொண்டு இருந்தாள்(ங்க). பிறகு வரலாம் என்று நினைத்து திருப்பிய போது
"எப்படி ஹன்(ஹனி தான் இந்தப்பாடுபடுது) முடியும், அவனும் இங்கே இருக்கிறான், நான் அவனுக்கு மேலாளர்(லி) , திஸ் இஸ் நாட் கோயிங் டு வொர்க் அவுட்" என்று பேசியதை கேட்டதும், ரெம்ப நாளா விட்டு வைத்து இருந்த ஒட்டு கேட்பு கலையை மறுபடி தட்டி எழுப்பி கதவு முன் நின்றேன். அந்த காலத்திலேயே இங்கிலிபிசு கிலோ என்ன விலைன்னு கேட்டவங்க, இப்ப சோ இல்லைனா சோறு தண்ணி இறங்காது போல தெரியுது, இவ்வளவு திறமை இல்லாட்டி நான் வேலை பார்க்கிற அலுவலகத்துக்கு மேலாளர் வேலைக்கு வர முடியாது என்ற குறு நினைவுவை முடித்து கொண்டு மீண்டும் கலையை தொடர்தேன் .
"எனக்கு ரெம்ப நெருடலா இருக்கு, அவனுக்காக நான் மருந்தை குடிச்சி தற்கொலை வரைக்கு போய் இருக்கேன், அந்த பைத்தியக்காரத்தனத்தை இப்ப நினைச்சாலே அவனை கொலை பண்ணலாமுன்னு தோணுது, இந்த ஒரு அபத்தமான சூழ்நிலையை எப்படி கையாளப் போறேன்னு தெரியலை." என்ற பேச்சை கேட்டதும்,நான் அந்த இடத்தை விட்டு வந்துட்டேன், அன்றைய வேலை எல்லாம் வேக வேகமா முடித்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டேன்.
அடுத்த நாள் அலுவலகம் பரபரப்பா ஒண்ணும் இயங்கலை, இருந்தாலும் என்னோட அலுவலக நண்பர்களிடையே என்னைப் பத்தி பேச்சு வந்தது, நம்ம சி.என் இப்படி பண்ணிட்டாரே, அலுவலகம் வந்து உலக மொக்கைப் போட்டு, அந்த காலத்திலேயே அப்படி துண்டு போட்டேன், இப்படி சொம்பு அடிச்சேன்னு சொல்லிக்கிட்டு இருப்பாரு, நகைச்சுவை என்கிற பேரிலே உலக கடி கடிச்சி கும்மி அடிப்பாரு, இப்படி ஒரே அடியா போயிட்டாரே
அடுத்த நண்பர் "இந்த வேலையை நம்பி கட்டில், மெத்தை, பஞ்சு இருக்கை, குளிர் சாதனப் பெட்டி, தொலைக் காட்சி பெட்டி இப்படி பலதரப் பட்ட முதலிடுகளை தவணை முறையிலே போட்டு இருந்தாரு, இனி எப்படி பொழைப்பு ஓடுமோ"
இதே நேரம் வீட்டிலே தான் கொடுத்த வேலை ராஜினமாக் கடிதம் ஒரு மன்னிப்பு கடிதமாகவே இருக்கும் என்ற நம்பிக்கையிலே, ஓசியிலே வாங்கி வந்த முப்பது நாளில் விவசாயம் பண்ணுவது எப்படி என்ற புத்தகத்தை பரிச்சைக்கு படிப்பதைப் போல படித்து கொண்டு இருந்தார் சி.என், யாருக்கு தெரியும் பிற்காலத்திலேயே சிறந்த உலக விவசாயி என்ற பட்டம் கிடைத்தாலும் கிடைக்கலாம், நீங்களும் உங்களுக்கு தெரிந்த விவசாய ஆலோசனைகளை சொல்லலாமே இந்த நவீன விவசாயிக்கு
15 கருத்துக்கள்:
/நீங்களும் உங்களுக்கு தெரிந்த விவசாய ஆலோசனைகளை சொல்லலாமே இந்த நவீன விவசாயிக்கு /
ம்கும். எங்கள பார்த்தா எப்புடி தெரியுது. என்ன பயிர் பண்ண போறிங்கன்னு கேப்போம். நூலை விதைச்சா துண்டா விளையணும்னு கேப்பீரு. ஆளப்பாரு.
சரியா போச்சு! :-)
என்னத்த சொல்ல
//நீங்களும் உங்களுக்கு தெரிந்த விவசாய ஆலோசனைகளை சொல்லலாமே இந்த நவீன விவசாயிக்கு//
'ஒட்டு'ரக கடலைவிவசாயம் பண்ணுங்க :-)))
முதல்ல விவசாயி ஆகுங்க அப்பறம் பார்க்கலாம் உலகத்தில முதல் விவசாயியா இல்லையான்னு..ஹைய்யோ ஹைய்யோ...
வாங்க......வாங்க......அதெல்லாம் நிறைய கொட்டிக் கெடக்கு.....ஆலோசனைக்கா பஞ்சம்.....
கதைன்னு போட்டிருக்கீங்க ஆனா ஆலோசனை எல்லாம் சூப்பரா சொல்றாங்க்ளே..
:) அப்ப விவசாயம் தானா ..கூட்டுப்பண்ணை யா
எந்த ஊருல ஆரம்பிக்ககறீங்க :))
//எப்படி ஹன்//
அங்கேயும் இந்த ஹன் இருக்குதா!ஒரு வேளை அங்கிருந்துதான் இங்கேயெல்லாம் ஹான் ன்னு பரவிடுச்சோ!
கனவுகள் எங்கேயிருந்தெல்லாம் பொறக்குதுன்னு இந்த இடுகையில கொஞ்சம் புரியற மாதிரி இருக்கு!ஆனா புரியல.
farmvilleவுக்கு வாங்க
enna achchu?
athu sari...
vivasayam pannap poringala? nalla mazhiyilla athan...
///நூலை விதைச்சா துண்டா விளையணும்னு கேப்பீரு. ஆளப்பாரு.////
பெரிய்ய ரிபீட்டு...
புத்தகம் படித்து விவசாயமா!:-)
/farmvilleவுக்கு வாங்க/
அதே !அதே!
சொந்த சோக கதையோன்னு ரெம்ப ஆர்வமா படிச்சேன்... இதுவும் கற்பனையா? யாரு கண்டா? சரி உடுங்க... நல்லாவே இருக்கு...
Post a Comment