நெல்லைமாவட்டமும், அரிவாளும்
பொறுப்பு அறிவித்தல் :
புகைபிடிப்பதும்,குடிப்பதும் உடல் நலத்திற்கு கேடு என்று நினைப்பவர்கள் கொஞ்சம் பார்த்து பத்திரமா போங்க.தலைப்பிலே அருவா இருப்பதினாலே, இது வன்முறை நிறைந்த இடுகை என நினைக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.நான் என்னவோ அருவாளை காட்டி பின்னூட்டம் வாங்க முயற்சி செய்து இருப்பேன் என்றும் யாரும் நினைக்க வேண்டாம்.
அதாகப்பட்டதவது நான் பள்ளிப் படிப்பு எல்லாம் தென் இந்தியாவின் குட்டி ஆக்ஸ்போர்ட் எங்க சொந்த ஊரிலே படிச்சேன், படிக்கும் போது நெல்லை மாவட்டம் என்று தபாலில் எழுதிப் போட்டது வரைக்குமே தெரியும், எங்க மாவட்டத்தைப் பத்தி அடுத்த மாவட்ட மக்கள் என்ன நினைக்கிறாங்கன்னு தெரியாமலே போச்சி, இந்த விசயங்கள் எதுவுமே தெரியாம ஊரிலே இருந்து பெட்டியோட ஒரு பண்டல் பீடி கட்டையும் எடுத்துகிட்டு திருச்சி கல்லூரியிலே படிக்க போனேன்.
உள்ளுரிலே வளந்த பையன் வெளியூர் போன உடனே உள்ளுர்ல பேசுனமாதிரியே பேசினேன், யாருக்குமே புரியலை, அப்பத்தான் அவங்க விவரம் கேட்டாங்க, நீங்க எந்த ஊருன்னு, அது எங்க இருக்குன்னு,எங்க ஊரு பெயர் பாதிப் பேரு வாயிலே நுழையலை,உடனே நான் நெல்லை மாவட்டமுன்னு சொல்லிவச்சேன். அப்படி கனிவா விசாரிச்சவங்கள்ல ஒருத்தன் சென்னைக்காரன் ரெம்ப தங்கமான பய, அடுத்த ரெண்டு நாள்ல கொண்டு போன பீடி கட்டிலே இருந்து ரெண்டு பீடி இலவசமா எடுத்துக் கொடுத்து சும்மா சுவச்சி பாரு ரெம்ப நால்லா இருக்குமுன்னு சொன்னேன். அடுத்த வாரத்திலே புகையை வட்டமா, சதுரமா எப்படி விடுறதுன்னு சொல்லிக் கொடுத்து, ஒரு மாசத்திலே துண்டு பீடி அடிக்கிற அளவுக்கு தேத்திவிட்டேன்.
"மாப்பள பீடியிலே தன்னிறைவு அடைந்து விட்டேன், வேற எதாவது புதுசா சொல்லிக்கொடுன்னு" என்னோட பிஞ்சி முகத்தைப் பார்த்துகேட்டான்.
"கொஞ்ச நாள் போகட்டுமே" என்றேன்.
"கல்லூரியில வாத்தியார் புதுசா எதுவுமே சொல்லிக் கொடுக்கலை, நீயுமாடா" என்று கேட்ட கேள்விக்கு கலங்கிப் போனது என் நெஞ்சம், அடுத்த நிமிசமே அவன்கிட்ட இருந்து நூறு ரூபாய ஆட்டையப் போட்டு ரெண்டு பீர் வாங்கி வந்தேன். பீடி அடிச்சா புகைவரும், பீர் அடிச்சா போதை வரும் ன்னு குத்துவசனம் சொன்னேன்.ஆளுக்கு அரை மூடி குடித்து விட்டு விட்ட சலம்பலிலே வாங்கிட்டு வந்த பாட்டிலே உடைந்து, பக்கத்து அறை மாணவர்கள் எல்லாம் வந்து ரணகளம் ஆகிவிட்டது. மட்டையாகி நாங்களும் மடை சாய்ந்தோம்.
நாங்க முந்தின நாள் பண்ணின சலம்பலை எல்லாம் ஒரு அறிவு ஜீவி வத்தி வச்சிட்டாரு கல்லூரி முதல்வரிடம், கொண்டு போன பீடிக்கும், அடிச்ச பீருக்கும் ஆப்பு அடிச்சிட்டாங்க,வத்தி வச்சவன் அணுகுண்டு போட்ட மாதிரி வத்தி வச்சி இருக்கான் "ஐயா என்னால படிக்கவே முடியலை இவங்களால, என் வாழ்கையே பாழாப் போச்சின்னு" ஆனா உண்மையான நிலவரம் என்னனா பாடமே நடத்த ஆரம்பிக்கலை, அவன் வாழ்க்கை போச்சின்னு சொல்லிட்டானு, என்னையும், சென்னைக்காரனையும் ரெண்டு வாரம் தற்காலிகமா கல்லூரிக்கு வர வேண்டாம் என விடுப்பு கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வச்சிட்டாங்க, அதாவது சஸ்பென்ட் பண்ணிட்டாங்க.நானும் வீட்டுக்கு
வந்து பரிச்சைக்கு விடுமுறை கொடுத்திட்டாங்கன்னு சொல்லி சமாளிச்சேன்.(எனக்கு தெரிஞ்ச வரையிலே எங்களைப் போட்டுக்கொடுத்த அந்த நண்பருக்கு நாங்க கல்லூரி முடித்து ஐந்து வருடம் கழித்தும் 15 அரியர் இருந்தது)
நான் இப்படி தற்காலிக விடுமுறையிலே ஊரிலே இருக்கும் போது கல்லூரி முழுவதும் எனது புகழ் பரவி, நெல்லை மாவட்டுத்துக்காரன் ஒருத்தன் இருக்கான், அவன் குவாட்டர் அடிக்கலைனா தூங்க மாட்டான், கையிலே வெட்டு பட்ட கட்டும்,வாயிலே பீடியோட தான் இருப்பான்.நெருப்பு எல்லாம் அவனை நெருங்கவே முடியாது, அவனே நெருப்பிலே வெந்தது மாதிரி இருப்பான்.எதிர்த்து கேள்வி கேட்டா பாட்டிலை உடைச்சி அடிப்பான், அவன்கிட்ட அடிபட்டவங்க நிறைப் பேரு, இப்படி எல்லாம் புதுசா வாரவங்க கிட்ட சொல்லி ஒரு என்னை கலவரக்காரன் என்று முத்திரை குத்தி விட்டுட்டாங்க.
இந்த நேரத்திலே தண்ணியில்லா காடு என்று என்று எல்லாராலேயும் அன்போட அழைக்கப் படும் ராம் நாட்டிலே இருந்து ஒருவர் வந்து சேர்ந்தார், அவரு ஊருக்குள்ளே பெரிய சண்டியர் தனம் பண்ணிட்டு கல்லூரிக்கு வந்தவரு, அவரு வந்த உடனே என்னைப் பத்திக் கேள்விப் பட்டு, அவனை விட பெரிய ரவுடியாகிய என்னை பார்க்க ரெம்ப ஆவலா இருந்து இருக்காரு, தினமும் வந்த உடனே நெல்லைக்காரன் வந்துட்டானான்னு விசாரிகிறதே முதலாவது வேலை, ராமநாதபுர ரவுடிக்கு திருநெல்வேலி ரவுடியைப் பார்க்காம ரெண்டு நாள் சோறு தண்ணி இறங்கலையாம். ரெண்டு வாரம் கழிச்சி நானும் வந்து சேர்ந்தேன், நான் படிப்பிலே மாப்பிள்ளை விசுபலகையை சேர்ந்தவனா இருந்தாலும், முதல் வரிசையிலே தான் உட்காருவேன், ராம்நாடு ரவுடிக்கு என்னோட முதுகு தரிசனம் தான் கிடைச்சி இருக்கு, முகதரிசனம் கிடைக்கலை. மனுஷன் கொதிச்சி போய்ட்டான், எனக்கு இப்படி ஒரு விஷயம் நடக்கிறதே தெரியலை.
முதல் பாடம் எடுக்க வந்த ஆசிரியர் வருகை பதிவேட்டில் பதியும் போது என்னோட பெயர் சொன்ன உடனே நான் எழுந்து வழக்கம் போல "உள்ளேன் ஐயா" ன்னு சொன்னேன். அப்பத்தான் என்னோட கோலத்தைப் பார்த்திட்டு அரண்டே போய்ட்டான். முப்பத்தி அஞ்சி கிலோவிலே ஒரு கருப்பு துணியை போத்தின மாதிரி இருந்த என்னைப் பார்த்தும், அதிர்சியிலே சிலையாய் ஆகிட்டாரு. கொஞ்ச நாள் கழிச்சி என்னோட ரவுடித்தத்தை சோதனை செய்து பார்க்கணும் என்று தன்னார்வமா எங்க துண்டு பீடி குழுவிலே அவரும் இணைந்துவிட்டார், ஒரு நாள் அவரு காசிலே சரக்கு அடிக்கும் போது என்கிட்டே
"டேய் நான் கல்லூரி சேர்ந்த போது உன்னையப் பத்தி என்கிட்டே சொன்னவன் மட்டும் இருந்தான், அவனை கொலைபன்னிட்டு சிறைக்கு செல்வேன்"
"அப்படி என்ன மாப்பள சொன்னாங்க?"
"நெல்லை மாவட்டம் என்ற ஒரே காரணத்துக்கு உன்னைய ரவுடி ஆக்கிட்டங்களே, உன்கிட்ட பழகினப் பிறகுதானே தெரியுது, நீ ஒரு தாள் ரவுடின்னு,உன்னைய ரவுடின்னு நினச்ச காரணத்துக்கே கண்ணாடி முன்னாடி நின்னு தினமும் நாலு திட்டு திட்டிக்குவேன்"
"ஏன்டா நெல்லை மாவட்டத்து ஆளுக எல்லாம் ரவுடின்னு நீங்களே முடிவு பண்ணிட்டா எப்படி?கொண்டு வந்த பீடி காலி ஆகணுமுன்னு ஓசியிலே ரெண்டு பீடி கொடுத்தேன், அவன் அதுக்கு எனக்கு ஓசியிலே ரெண்டு பீர் கொடுத்தான்.பீடியும், பீரும் குடிச்சா ரவுடியா, மாப்ள எங்க ஊரு கலவர பூமின்னு நீங்க சொல்லித்தான்டா எனக்கே தெரியும், அரிவாளை அருனா கயறிலே கட்டிக்கிட்டு சுத்துவோமுன்னு நீங்களே முடிவு பண்ணிட்டு நெல்லையிலே இருந்து யாரு வந்தாலும் ரவுடின்னு சொன்னா, நாங்க என்ன செய்யன்னு?,எங்க மாவட்டத்திலே எங்காவது ஒரு இடத்திலே நடந்த கலவரத்தை வைத்து நெல்லை மாவட்ட மக்களே அப்படித்தான் இருப்பாங்கன்னு,ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதமுன்னு மக்களே முடிவு பண்ணிட்டு, நெல்லை மாவட்ட மக்கள் எல்லாம் அரிவாளோட சுத்துவாங்கன்னு நினைச்சா நாங்க என்ன பண்ணமுடியும்" கேள்வி கேட்டுட்டு திரும்பி பார்த்தா எனக்கு வாங்கி கொடுத்த பீரையும் அவன் குடிச்சிட்டு ஓடியே போய்ட்டான்.
கேட்ட கேள்விக்கு பதில் சொல்லமுடியலையா, என் கேள்வி பிடிக்கலையான்னு இன்று வரை அவரிடம் கேட்க முடியலை.கொசுறு தகவல் ராம்நாடு ரவுடி இப்ப சிங்கையிலும்,சென்னைக்காரன் அமெரிக்காவிலும் வசித்து வருவதாக செவி வழியா வந்த செய்தி.
29 கருத்துக்கள்:
வீரபாண்டியன் பொறந்த பூமிலே அது... மொசலுக்குக் கூட வீரம் இருக்கும்லே.... இப்பிடிச் சொல்லலாமாலே??
“புளியங்குடி, நெல்லை மாவட்டத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு, எதோ, ஒரு எழவு மாவட்டத்தில் சேர்க்கப்பட்டது!”
பத்திரிககாரங்க வந்து இதையொரு செய்தியா கவ்வுங்கலே வந்து....
//"ஐயா என்னால படிக்கவே முடியலை இவங்களால, என் வாழ்கையே பாழாப் போச்சின்னு" ஆனா உண்மையான நிலவரம் என்னனா பாடமே நடத்த ஆரம்பிக்கலை, //
ahhhh!!!!
ஏலே மக்கா..... அசத்திப்புட்டீகளே! நான் சும்மா பதிவுலகம் பக்கம் லாந்திக்கிட்டு இருந்தேன். இத படிச்சதும், ரொம்ப சந்தோஷம்ல. நல்லா சிரிச்சிப்புட்டேன்.
/தலைப்பிலே அருவா இருப்பதினாலே,/
உள்ளையும் பொதிஞ்சில்லா வச்சிருப்பீரு:))
/அடுத்த வாரத்திலே புகையை வட்டமா, சதுரமா எப்படி விடுறதுன்னு /
எஞ்சினீயராமா. டைரட்டக்கடரியல் டச்சு
/எங்க ஊரு பெயர் பாதிப் பேரு வாயிலே நுழையலை/
எப்புடி! நுனி நாக்குல பட்டாலே கூசும்ல.சிலிர்த்துப் போய் மண்டை தவில் வித்துவான் மாதிரில்லா ஆடும் பக்கத்துக்கு பக்கம்.
/இருந்து நூறு ரூபாய ஆட்டையப் போட்டு ரெண்டு பீர் வாங்கி வந்தேன்./
அடப்பாவி மனுசா. மிச்சகாசு ஆட்டைய போட்டாச்சா
/நெருப்பிலே வெந்தது மாதிரி இருப்பான்./
தப்பு தப்பு தீஞ்சா மாதிரி
/முப்பத்தி அஞ்சி கிலோவிலே ஒரு கருப்பு துணியை போத்தின மாதிரி /
ம்கும். இவரு ஆம்பள முக்கால் தாஜ்மகாலு. அவரு எனக்கே எனக்கான்னு அள்ளிக்கிட்டாரு. இரும் வந்து வச்சிக்கிறேன் மிச்சம்.
ஹஹ்ஹா அசத்தல் போங்க..
தன் சொந்த ஊரான நெல்லை ஊரைவிட்டு வெளியேவே
வாழ்ந்து
இதே மாதிரி கேள்விபட்ட விசயத்தை வச்சே
எனக்கு நெல்லைப்பொண்ணு
மட்டும் வேண்டாம்ன்னு ..சொன்னதால் தான்
என்கிட்டமாட்டிக்கிட்டாங்க எங்க வீட்டுக்காரங்க..
நாங்கூட என்னமோன்னு நினைச்சேன்........அதானா சேதி.....நல்லாத்தான் சொல்லியிருக்கீக.....ஊருக்காராள்லாம் ஒன்னா சேந்துட்டீக ......வாழ்த்துக்கள்
thala : NEENGA PACHA MANUNNUNNU AVINGALUKKU LETATHAN TEHRINCHIRUKKU...
அருமையான கேள்வி...நானும் மற்றவர்களிடம் கேட்க நினைத்த ஒரு கேள்வி..ஏன் நம்ம ஊர்க்காரர்களுக்கு இப்படி ஒரு அவப்பெயர்..
நான் சமயத்தில் எந்த மாவட்டம் வாயிலே வருதோ அதை சொல்லிடுவேன் . தூத்துக்குடி மாவட்டம் ஆனால் நிறைய முறை திருநெல்வேலிதான் வாயில் வரும் . காலேஜ் நான்கு வருடம் அங்கே சுத்தின பாசமோ என்னவோ தெரியல .இப்போதும் ஊருக்கு போறது திருநெல்வேலி வழிதான் .தூத்துகுடியோ,திருநெல்வேலியோ கேட்குரவங்க குடுக்குற reaction ஒண்ணுதான் .
உங்க பெயர் பார்த்து ரொம்ப நாளா ஒரு சந்தேகம் .
நாசரேத் என்று ஒரு ஊர் அங்கு உண்டு .நசரேயன் பார்த்து நாசரேத் தான் அடிக்கடி நியாபகம் வருது .
//
முத்துலெட்சுமி/muthuletchumi said...
ஹஹ்ஹா அசத்தல் போங்க..
தன் சொந்த ஊரான நெல்லை ஊரைவிட்டு வெளியேவே
வாழ்ந்து
இதே மாதிரி கேள்விபட்ட விசயத்தை வச்சே
எனக்கு நெல்லைப்பொண்ணு
மட்டும் வேண்டாம்ன்னு ..சொன்னதால் தான்
என்கிட்டமாட்டிக்கிட்டாங்க எங்க வீட்டுக்காரங்க..//
அப்புறம் எப்பவாவது பீல் பண்ணினாரா மேடம் ?
நீங்க சொன்னது சரிதான் அருவா பாக்காமகூட நம்ம மக்கள் எத்தனையோ பேருண்டு .
அரிவாளை அருனா கயறிலே கட்டிக்கிட்டு சுத்துவோமுன்னு நீங்களே முடிவு பண்ணிட்டு நெல்லையிலே இருந்து யாரு வந்தாலும் ரவுடின்னு சொன்னா, நாங்க என்ன செய்யன்னு
அதானே என்னவோ நம்மை பார்த்தாவே பய புள்ளைங்க பயப்படறாங்க
ஊரிலே இருந்து பெட்டியோட ஒரு பண்டல் பீடி கட்டையும் எடுத்துகிட்டு திருச்சி கல்லூரியிலே படிக்க போனேன்.
போதுமா???
utturu makka..veliyur kaara payavullellu nammala patthi appudiye nenaichikittu irukkaatum..namma choliya namma parthutte povendiyadhaan ve...enna makka..??
This fear is created by British as
they are seeing more and more freedom fighters from old t-veli dist, Kattabomman . VOC , Bharatiyar ,Pulithevan, Vanjinathan . have you never heard of "I am Maniyatchi ' in trains ... TTR never check tickets if you could said "I am Maniyatchi '.. Because of British fear about people from south made this bad name
//ஒரு மாசத்திலே துண்டு பீடி அடிக்கிற அளவுக்கு தேத்திவிட்டேன் //
ஒ... இதுக்கு தான அந்த சமூக சேவகர் பட்டம் கெடச்சது... சூப்பர்... வாழ்த்துக்கள்
நசர்....என்னா...ஒரு நல்ல மனசுக்காரன் நீங்க !
//பீடி அடிச்சா புகைவரும், பீர் அடிச்சா போதை வரும் ன்னு குத்துவசனம் சொன்னேன்.//
அட.....அட ரஜனி இனி உங்ககிட்டத்தான் வசனம்கேட்டுப் பேசணும் !
அருவாள் கதையைச் சொல்லி அறுத்துத்தானே ஓட்டுக் கேக்குறீங்க.இதில வேற....!
நம்ம ஊரு பெருமைய பூராவும் அள்ளித் தெளிச்சிருக்கீக. ஆமா அது என்ன நெல்லைக்காரவுகன்னா ரவுடின்னு கற்பனை பண்ணிக்கிறாங்க..
நல்ல காமெடியா சுவாரசியமா எழுதியிருக்கீங்க நசரேயன். எல்லோரும் கேக்குறாகல்ல உங்க உண்மையான பேர சொல்றது?..
நல்ல பகிர்வு.
அண்ணாச்சி!
இப்படித்தானா உங்க தளபதி பட்டமும்???
என் கண்ணில் தென்பட்டது.
ஊருப் பேர காப்பாத்தீட்டீக!
நம்ம ஊரு பயக அனுபவம் எல்லாம் ஒரே மாதிரியில்லவே இருக்கு
ஏ...ஏலே அவனா நீ? ஊரு பேர கெடுத்து போட்டு பேச்சை பாரு பேச்சை...!
ஆனா மக்கா இங்கையும் நமக்கு ஒரு ஒத்துமைய பாத்தியா?
//கல்லூரிக்கு வர வேண்டாம் என விடுப்பு கொடுத்து அனுப்பி வச்சிட்டாங்க, அதாவது சஸ்பென்ட் பண்ணிட்டாங்க//
எனக்கு எப்பவுமே இதால நடக்கும் :-)
அந்த ஏரியா காராங்களுக்கு ஒழுங்கா தமிழே பேச வராது....(கேட்டா 'ல..'லே ன்னுகிட்டு.....) ..
தமிழே சரியா பேச தெரியாதவங்கள ரவுடியா நினைச்ச அந்த ராமநாதபுர ரவுடிய நினைச்சா சிப்பு சிப்பா வருது......
யோவ்...யாருய்யா அது..... அருவான்னா அதுக்கு நாங்க தான்...இனிமே யாராவது பேசுனா ... அருவாவ அனுப்புவோம்.....
அண்ணே எல்லாம் நக்கலுக்குத்தான் :) .... (கோபபட்டு எதுவும் அருவாள தூக்கிராதீங்க)
சூப்பர் :-)
அசத்திப்புட்டீயளே!
ரகமதுல்லா, ஆயிஷா எல்லாம் உங்க ஜோட்டு பசங்களா???
தரணி மெட்ரிகுலேசன் பள்ளியா நீங்க???
இல்ல கண்ணா மேல்நிலை பள்ளியா ????
அடுத்து??
அந்த ராம்நாடு ரவுடி இப்ப சிங்கையில நம்ம கஸ்டடி-ல தான் இருக்காரு... வெள்ளைத் தோலு மக்களை மிரட்ட இப்ப வெள்ளை பீடிக்கு மாறிட்டாரு... :-)
Yesu,
appadiye nee antha chennaikaran (thalainagarathaan), ramnadu rowdy,arivu jeevi perai potruntha nalla irunthirukkum.. :)
-Muthuselvan
Post a Comment