மர்ம கடிதம்
இன்னைக்கு கூகிள் ஆண்டவரிடம் தேடி அங்கேயும் இங்கேயுமா சுட்டு, என் வேலையை காத்து கொள்ள பொழப்பை ஓடினாலும், எனக்கு ஞாபகம் தெரிஞ்ச நாளிலே மூணாம் வகுப்பு படிக்கும் போது நான் முதல் மாணவன் படிப்பிலும், இட வரிசையிலும்,ஆனா கொஞ்ச காலத்திலேயே கடைகோடி மாணவனுமாகவும், மாப்பிள்ளை பெஞ்சு என்று அன்போடு அழைக்கப்படும் கடைசி பெஞ்சுக்கும் தள்ளப்பட்டேன்.அதை கொசு வத்தி போட்டு விளக்கபோறேன்.அதனாலே கொஞ்சம் பொறுமையா இருங்க, தலை தெறிச்சு ஓடவேண்டாம்.
1984 வருஷம் அப்பத்தான் எங்க வகுப்புக்கு கமலா டீச்சர் வந்தாங்க.அந்த காலத்திலே எங்க ஊரிலே மிஸ் புளியங்குடி எல்லாம் நடத்தி இருந்தா குறைந்த பட்சம் ஒரு பத்து வருசமாவது அவங்களுக்கே பட்டம் கிடைத்து இருக்கும்., நான் ஆள் கருவாப்பய மாதிரி இருந்தாலும் படிப்பிலே கருந்சிறுத்தை மாதிரி, ரெம்ப நல்லா படிக்கிற மாணவன் என்பதாலே அவங்களுக்கு என்னை ரெம்ப பிடிக்கும், அவங்க வகுப்புக்கு பாடம் நடத்த வரும் போது என்னிடம் தான் புத்தகம் வாங்கி பாடம் எடுப்பாங்க.ஒருநாள் பாடம் எடுத்து முடிச்ச உடனே என்னிடம்
"நீ நல்லா படம் வரையுற" அப்படின்னு சொன்னாங்க.
எனக்கு அவங்க என்ன சொல்லுறாங்கனு புரியலைனாலும் சும்மா தலை ஆட்டி வச்சேன். அடுத்த வாரத்திலே ஒருநாள் பாடம் நடித்தி முடித்து விட்டு என்னை தனியே ஆசிரியர் ஓய்வு எடுக்கும் அறைக்கு வரச்சொன்னார்கள். நானும் போனேன், ஒருவட்டம் போட்டு நிக்கச்சொன்னங்க நான் நின்ன உடனே ஒருகம்பை எடுத்து விட்டு வந்து அடி வெளுத்து எடுத்தாங்க.
இப்படி எதிர்பாராத அடி விழுந்தாலே "ஐயோ அம்மா..வலிக்குது" சொன்னாலும் என்னை விட வில்லை.அவங்களுக்கு கை வலிக்க ஆரம்பித்த உடனே நிறுத்தி
"நாளைக்கு வரும் போது உங்க அம்மா அப்பா ரெண்டு பேரையும் ௬ட்டிட்டு வா"
நானும் அழுது கிட்டே வீட்டுக்கு வந்து விசயத்தை சொன்னேன்.என் வீட்டிலே என்னை சமாதானப் படுத்தி நாளைக்கு பள்ளிக்கு வர சம்மத்தித்தார்கள்.
மறு நாள் காலை பள்ளி தலைமை ஆசிரியர் அலுவலகத்திலே என் தந்தையிடம்
உங்க பையன் இந்த வயசிலே காதல் கடிதம் எல்லாம் எழுதுறான், நல்லா படிக்கிற பையன் தான் அதுக்காக சும்மா விட முடியுமா?
"௬ட படிக்கிற புள்ளைக்கா?"
"இல்ல இந்த டீச்சர்க்கு"
"இல்ல இந்த டீச்சர்க்கு"
"எங்க காட்டுங்க?"
இதோ பாருங்க, அவன் வரைந்த ரோசா பூ வும், எழுதிய கடிதமும்
என்று தலைமை ஆசிரியர் என் அப்பாவிடன் சொன்னார், அவருக்கு வந்த கோபத்திலே அங்கே என்னை நாய் அடி அடி அடித்தார், அந்த அடியை பார்த்து தலைமை ஆசிரியர் என் மேல பரிதாப பட்டு, என் அப்பாவை சமாதானப் படுத்தி இனிமேல இப்படி செய்யாம பாத்து கொள்ளுங்க என்று அறிவுரை ௬றி அனுபிட்டாங்க.
என்று தலைமை ஆசிரியர் என் அப்பாவிடன் சொன்னார், அவருக்கு வந்த கோபத்திலே அங்கே என்னை நாய் அடி அடி அடித்தார், அந்த அடியை பார்த்து தலைமை ஆசிரியர் என் மேல பரிதாப பட்டு, என் அப்பாவை சமாதானப் படுத்தி இனிமேல இப்படி செய்யாம பாத்து கொள்ளுங்க என்று அறிவுரை ௬றி அனுபிட்டாங்க.
என்னை அடிச்சதிலே கை வீங்கி ஒரு வாரம் விடுமுறை எடுத்தாங்க,அதற்கு அப்புறமா வந்த அவங்க என் பக்கம் ௬ட திரும்பி பார்க்கிறது இல்லை, என்னை அவங்களே கடைசி பெஞ்ச்க்கு மாத்தி விட்டார்கள். அதுவரைக்கும் எங்க தெரு வரைக்கும் இருந்த எனது புகழ் எங்க பள்ளி மட்டுமல்லாமல் எங்க ஊரில் அனைவரையும் சென்று அடைந்தது.
கொஞ்ச நாள் கழித்து டீச்சர்க்கு திருமணதிற்க்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார்கள், அவங்க வீட்டிலே என்ன பிரச்சனையோ அவங்க பூச்சி மருந்தை குடித்து விட்டார்கள், நல்லவேளையாக பிழைத்து கொண்டார்கள், அவங்க மட்டும் அன்றைக்கு மேலே போய் இருந்தா இவ்வளவு தூரம் நீங்க கஷ்ட படவேண்டிய அவசியம் இருந்து இருக்காது.அதற்கும் நானே காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டேன்.
டீச்சர்க்கு லவ் லெட்டர் கொடுத்தவன் பிஞ்சிலே பழுத்தவன் அப்படின்னு பல பட்டபெயர்களை கொடுத்து ஒரு பிஞ்சு மனசுலே நஞ்சை விதைத்து விட்டாங்க.அது வரைக்கும் படிப்பிலே முதல் இடம் வரணுமுன்னு நினச்ச என்னை முதல் துண்டு போடுறதை பத்தி யோசிக்க ஆரம்பித்தேன்.
எடுத்தேன் துண்டை மறந்தேன் படிப்பை, வீசினேன் வலையை, காலங்கள் கடந்தது வயசு மட்டும் நகர்ந்து கொண்டே போச்சி, நான் எடுத்த துண்டும் வலையும் நகரவே இல்லை. எனது வலையும் துண்டையும் பார்த்து தலை தெறிக்க ஓடியவர்களை எண்ணினால் இன்னைக்கு வீட்டிலே கஞ்சி கிடைக்காது.போட்ட துண்டை எடுக்க ஆள் இல்லை, போகிற இடம் எல்லாம் வசை பாட்டு, இப்படி ஒரு தீராத மன உளைச்சலுக்கு ஆள் ஆன நான் படிப்பிலே 40௦/100 எடுத்தவன் 10/100 எடுத்தேன்.
படிப்பிலே பல பட்டங்கள் கிடைக்கா விட்டாலும் ஒரு தலையா துண்டு போடுறதிலே பலஆயிரம் பட்டங்கள் கிடைத்தது. அன்றைக்கு வாழ்கையிலே பின்னாலே போனவன் இன்று வரை முன்னால வரவே முடியலை.டீச்சர்க்கு எனது புத்தகத்திலே வைத்து காதல் கடிதம் கொடுத்த மர்ம நபர் இன்றளவும் கிடைக்கவில்லை.
41 கருத்துக்கள்:
//டீச்சர்க்கு எனது புத்தகத்திலே வைத்து காதல் கடிதம் கொடுத்த மர்ம நபர் இன்றளவும் கிடைக்கவில்லை. //
அப்பாவிகள் மாட்டிக்கொள்வது சகஜம் தளபதி. உங்களை நாங்கள் நம்புகிறோம்.
//நான் படிப்பிலே 40௦/100 எடுத்தவன் 10/100 எடுத்தேன். //
இது என்ன புது வகை மதிப்பெண்களா இருக்கு? எந்த ஊர்ல இப்படியெல்லாம் நடக்குது?
//.அதற்கும் நானே காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டேன்.
//
அது எப்படி தல!
பாவம் நீங்கள்:(!
நீங்க அப்பாவி? அடப்பாவி?
நாந்தான் அந்த லெட்டர வெச்சேன்னு சொன்னா யாருமே நம்ப மாட்டாங்க.
அன்னியன் மாதிரியா?:))
:)) ஒரு லவ் லெட்டர் எழுதக் கூட வக்கில்லை என்று இப்படியா பப்ளிக்ல ஒத்துகிறது..
கம்பெனி என்னாத்துக்கு ஆகுறது..
--வித்யா
அவ்ளோ நல்லவரா நீங்க!! கமலா டீச்சர் எங்கிருந்தாலும் கொஞ்சம் புரிஞ்சுக்குங்களேன் ப்ளீஸ்!!
டீச்சர்க்கு எனது புத்தகத்திலே வைத்து காதல் கடிதம் கொடுத்த மர்ம நபர் இன்றளவும் கிடைக்கவில்லை.
******************************
பழைய நினைவுகளை இவ்வளவு விளக்கமா எழுதும்போது நீங்க எழுதியதை மறக்க (மறக்காமல் மறந்திருந்தால்!!!) வாய்ப்பில்லை. சரி நம்பிட்டோம் தல
கவலப் படாதீங்க பாஸ், ஆயிரக்காண ஆட்களிடம் துண்டு போட்டவர்னு கின்னஸ்ல சேத்துருவோம்!
கொசுவத்தியிலே உண்மையையும் முழுசா சொல்லியிருக்கலாமே!! ;-))))
//இப்படி ஒரு தீராத மன உளைச்சலுக்கு ஆள் ஆன நான் படிப்பிலே 40௦/100 எடுத்தவன் 10/100 எடுத்தேன். //
அவ்வ்வ்வ்!!
அட அட
இப்படியும் மாட்டிக்குவீங்களா, எத்தனபேரு எஸ்கேப்பாகிருக்கிறாங்க தெரியுமா?
சரி நம்பிட்டோம் தல
எல்லாம் சரி ஆனா?
//காதல் கடிதம் கொடுத்த மர்ம நபர் இன்றளவும் கிடைக்கவில்லை//
இது உண்மை மாதிரி தெரியலையே, அட சும்மா சொல்லுங்க பாஸ் :-)),
தங்கமணி..
இந்தாள் பொய் சொல்றார்... கடிதம் இவர்தான் எழுதினது
\\சந்தனமுல்லை said...
//இப்படி ஒரு தீராத மன உளைச்சலுக்கு ஆள் ஆன நான் படிப்பிலே 40௦/100 எடுத்தவன் 10/100 எடுத்தேன். //
அவ்வ்வ்வ்!!//
இன்னோருக்கா நானும் அவ்விக்கிறேன்ப்பா
அவ்வ்வ்வ்.. :))
//
இன்னைக்கு கூகிள் ஆண்டவரிடம் தேடி அங்கேயும் இங்கேயுமா சுட்டு, என் வேலையை காத்து கொள்ள பொழப்பை ஓடினாலும்,
//
இதெல்லாம் வேறே நடக்குதா :((
//
நான் படிப்பிலே 40௦/100 எடுத்தவன் 10/100 எடுத்தேன்.
//
புளியங்குடியிலேயா இப்படி நடக்குது??
கொசுவத்தி முடிஞ்சி போச்சா ??
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :-)
//
1984 வருஷம் அப்பத்தான் எங்க வகுப்புக்கு கமலா டீச்சர் வந்தாங்க
//
ஐயோ! பாவம் அவங்களுக்கு நேரம் சரி இல்லே :-)
அதனால்தான் புளியங்குடிக்கு வந்திருக்காங்க :)
//
"நீ நல்லா படம் வரையுற" அப்படின்னு சொன்னாங்க.
//
அட அப்படியா சொல்லவே இல்லே:)
//
எனக்கு அவங்க என்ன சொல்லுறாங்கனு புரியலைனாலும் சும்மா தலை ஆட்டி வச்சேன்.
//
இல்லேன்னா அப்பவே பின்னியிருப்பாங்கல்லே :-)
//
இப்படி எதிர்பாராத அடி விழுந்தாலே "ஐயோ அம்மா..வலிக்குது" சொன்னாலும் என்னை விட வில்லை.அவங்களுக்கு கை வலிக்க ஆரம்பித்த உடனே நிறுத்தி
//
இது அவங்க பண்ணின தப்பு. வெவரம் கேக்காமலா அடிப்பாங்க
ஆனா புத்தகம் உங்களது இல்லே அதான்............ சுளுக்கு எடுத்துட்டாங்க.
//
எடுத்தேன் துண்டை மறந்தேன் படிப்பை, வீசினேன் வலையை, காலங்கள் கடந்தது வயசு மட்டும் நகர்ந்து கொண்டே போச்சி, நான் எடுத்த துண்டும் வலையும் நகரவே இல்லை. எனது வலையும் துண்டையும் பார்த்து தலை தெறிக்க ஓடியவர்களை எண்ணினால் இன்னைக்கு வீட்டிலே கஞ்சி கிடைக்காது.போட்ட துண்டை எடுக்க ஆள் இல்லை,
//
நல்லாத்தான்யா வீசறாங்க துண்டை:)
//
டீச்சர்க்கு எனது புத்தகத்திலே வைத்து காதல் கடிதம் கொடுத்த மர்ம நபர் இன்றளவும் கிடைக்கவில்லை
//
நாங்க நம்பிட்டோமில்லே :-)
முயற்சி திருவினையாக்கும் இந்த குரலை நினைச்சி துண்டு வீசினீங்களாக்கும் :)
ஆமா இந்த வெவரம் தங்கமணிக்கு தெரியுமா??
இல்லே வத்தி வைக்கணுமா :))
அப்பாடா வந்த வேலே முடிஞ்சி போச்சு அப்போ நான் வர்ட்டா
லேட்டுதான் என்ன செய்ய?
அளவுகடந்த ஆணிதான்...........
டீச்சர் இவ்ளோ மக்காவா இருப்பாங்க?? குறைந்த பட்சம் கையெழுத்து வச்சிக்கூடவா கண்டு பிடிக்க முடியாது???
அது என்ன எந்த விசாரணையும் இல்லாம, காரணம் கூட சொல்லாம அடிக்கிறது?? இந்த மாதிரி டீச்சரையெல்லாம் டிஸ்மிஸ் செய்யணும்!
//
குடுகுடுப்பை said...
நீங்க அப்பாவி? அடப்பாவி?
நாந்தான் அந்த லெட்டர வெச்சேன்னு சொன்னா யாருமே நம்ப மாட்டாங்க.
//
தல, நீங்க வச்சதை இப்ப ஒத்துக்கிட்டு என்ன புண்ணியம்?? இதை அப்பவே சொல்லியிருக்கணும்...
ஆமா, தளபதியும் நீங்களும் ஒரே ஸ்கூலா?? கட்சிக்கு இந்த வரலாறு தெரியவே தெரியாதே :0)))
//
நான் ஆள் கருவாப்பய மாதிரி இருந்தாலும் படிப்பிலே கருந்சிறுத்தை மாதிரி, ரெம்ப நல்லா படிக்கிற மாணவன்
//
இந்த கதைல இது மட்டும் நம்புற மாதிரி இல்ல! :))
ஹலோ எச்...சுஸ்...மீ- நான் இன்னும் ஊருலதான் இருக்கேன் அத மறந்து வாய கொடுத்து மாட்டிகிட்டியே மாப்புள
\\\அந்த காலத்திலே எங்க ஊரிலே மிஸ் புளியங்குடி எல்லாம் நடத்தி இருந்தா குறைந்த பட்சம் ஒரு பத்து வருசமாவது அவங்களுக்கே பட்டம் கிடைத்து இருக்கும்\\\
பள்ளிகூடத்துக்கு படிக்க அனுப்புனா அத விட்டுட்டு ஆராய்ச்சிய பாரு அதுவும் மூணாவது படிக்கும் பொது
-அவங்க வகுப்புக்கு பாடம் நடத்த வரும் போது என்னிடம் தான் புத்தகம் வாங்கி பாடம் எடுப்பாங்க-
ஏன்னா நம்ம புக்குல முன்னாடியும் பின்னாடியும் அட்டை இருக்காது .இத போயி தப்பா புரிஞ்சிக்கிட்டியே
-எனக்கு அவங்க என்ன சொல்லுறாங்கனு புரியலைனாலும் சும்மா தலை ஆட்டி வச்சேன்-
அப்ப இருந்து இப்ப வரைக்கும் அதானே பண்ணிக்கிட்டு இருக்கோம்
-உங்க பையன் இந்த வயசிலே காதல் கடிதம் எல்லாம் எழுதுறான்-
அடடா கருந்சிறுத்தை 'கருங்குரங்கா' மாறிடுச்சா
-"௬ட படிக்கிற புள்ளைக்கா?"
"இல்ல இந்த டீச்சர்க்கு"-
ஒண்ணாம் வகுப்பில இருந்தே இதே பிரச்சனை .என்னையா இது ஒரு பையன் ஒரு பொண்ணுக்கு லவ் லெட்டர் குடுத்தா தப்பா ,என்ன பொண்ணுக்கு வயசு 5வருசமோ 10வருசமோ கூட இருக்கும் இதுக்குஎல்லாம் போயி பஞ்சாயத்து வச்சிகிட்டு ...
-அவன் வரைந்த ரோசா பூ வும், எழுதிய கடிதமும்-
நீ வரைஞ்ச படத்தையும் எழுதிய லெட்டரையும் படிக்கிறதுக்கு ஒரு வாரம் ஆயிருக்கு அந்த டீச்சருக்கு
-ஒரு பிஞ்சு மனசுலே நஞ்சை விதைத்து விட்டாங்க-
கதையில பயங்கரமான திருப்புமுனை!!!
-போட்ட துண்டை எடுக்க ஆள் இல்லை-
துண்டை கொஞ்சம் துவச்சி போட்டிருந்தா ஏதாவது பலன்கிட்டிஇருக்கும்
பிஞ்சை பழுக்க வைத்த மர்ம கடிதம் -அப்படின்னு தலைப்பு வச்சிருக்கலாம்
இன்னைக்குப் பதிவில நம்ம நசர் ரொம்ப பாவம்.இப்பிடி நல்ல பிள்ளைன்னு சொல்லணும்னு கஸ்டப்பட்டு எழுதியிருக்கீங்க.
சொல்லிட்டேன்.
//டீச்சர்க்கு எனது புத்தகத்திலே வைத்து காதல் கடிதம் கொடுத்த மர்ம நபர் இன்றளவும் கிடைக்கவில்லை//
ஐயா!!!!!! இப்படி ஒரு எஸ்கேப்ஆ எப்படியெல்லாம் யோசிகரிங்க அப்பா.
Post a Comment