Wednesday, September 16, 2009

மணமகன் தேவை

கணணி துறையிலே கை நிறைய சம்பளத்தை வாங்குது பத்தாமல் குட்டி சாக்கை எடுத்து கொண்டு வரும் பெண்ணுக்கு மாப்பிள்ளை தேவை படுகிறது.குறைந்த பட்சம் ஐ.ஐ.டி, ஆர்.இ.சி அல்லது அண்ணா பல்கலை கழகத்திலே படித்த மணமகன் தேவை படுகிறது, உடல் தகுதியிலே ஆறு முத்த எட்டு பாக் அப்ஸ் வைத்திருக்கு வேண்டும்.நல்ல நகைச்சுவை உணர்வு வேண்டும், சிந்தனையிலே சிரிப்பு இருக்க வேண்டும்.அது கீழ்பாக்கம் சிரிப்பாக இருக்க ௬டாது. என்னை நன்றாக புரிந்து நடக்க வேண்டும், என் குடுபத்திலே உள்ளே எல்லோரையும் மரியாதையிலே மனதிலே மட்டுமல்லாமல் செயலிலும் காட்டவேண்டும்.குடி, புகைப்பது பற்றி கவலை இல்லை, குடித்து விட்டு தெருவிலே விழாமல் வீட்டு திண்ணையிலே விழுந்தால் நல்லது.கல்யாணதிற்கு முந்திய வாழ்க்கை பாத்திரம் ரெம்ப அடி வாங்கி இருந்தாலும், திருமணத்திருக்கு அப்புறம் நெழிசல் எடுத்து சரி செய்யப் படும், என்னை தவிர வேற யாரும் கண்ணால மட்டுமல்ல மனசாலேயும் பார்க்க ௬டாது.என்னைய பேரிளவரசி மாதிரி தாங்கனும், என் குடும்பத்து ஆளுங்களுக்கு கூஜா தூக்கி சேவை செய்யணும். சண்டைனு வந்தா அடிக்கிற முதல் அடியும், கடை அடியும் என்னோடத்தாதன் இருக்கணும்.நான் இல்லாத நேரங்களில் பல வீட்டு வேலைகளை பார்த்து கொண்டு ஓய்வு இல்லாமல் இருந்தாலும், நான் வந்த உடனே என்னை கவனமான அக்கறையோட எதிர்கொள்ளணும். நான் என்ன சொல்லுவேன்னு கேட்க கொலை ஆர்வத்திலே இருக்கணும். நான் எதுவுமே சொல்லனைனாலும் ஊமை பாசையிலே யாவது என்கிட்டே பேசணும்.


என் கோபத்திற்கான காரணம் தெரிய முயற்சிக்கணும்.இந்த மாதிரி சமயத்திலே முகம் பார்த்து அகம் சொல்லுவது ஒரு நல்ல ரங்கமணிக்கு அழகு.நான் கோபப் பட்டால் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது, கோபக்கனல் பார்வை வீசும் போது வாய்க்கு குரங்கு பூட்டு போடணும், என்னோட அதிவேக கோபம் பார்த்தல் மயங்கி விழணும் இல்ல மந்திரிச்சி விட்ட கோழி மாதிரி ஆகிடனும்.


நகைகடை, துணிகடை இப்படி கடைகள் எல்லா கடைகளுக்கும் வாரம் தவறாமல் அழைத்து செல்லவதே பொழுதுபோக்காக மாறவேண்டும். வாங்கிய பெருட்களை சேதாரம் செய் கூலி இல்லாமல் வீடு வரை பத்திரமாக கொண்டு சேர்ப்பதிலே கண்ணிய புருசனாக இருக்க வேண்டும்.இவை தவிர முகத்திற்கு, கை கால் நகங்களுக்கு மை அடிக்கும் இடங்களுக்கு அழைத்து செல்வது சிறப்பு பொழுது போக்காக அமைய வேண்டும்.இன்ப சுற்றுல செல்வது ரெம்ப பிடிக்கும், மலை வாழ் இடங்கள் அதிகம் பிடித்தவை, அதற்காக கொல்லி மலை, கொடை மலை எல்லாம் போக ௬டாது, கடல் கடந்த மலைகளாகிய இமயமலை, ஆல்ப்ஸ் மலை ஆகிய இடங்களுக்கு ௬ட்டி செல்லவேணும்.


நான் எங்கே போகிறேன், எப்ப வருவேன் என்ற கேள்வியே இருக்க ௬டாது, அதே மாதிரி நீங்க வெளியே போக வேண்டுமானால் எங்க குடும்ப மென்பொருளிலே அனுமதி பெற வேண்டி விண்ணப்பம் செய்ய வேண்டும், அதை முதலில் எங்க வீட்டிலே உள்ள அனைவரும் சரி பார்த்து காரணங்கள் நியாயமானவைகளா என்று நியாய தராசிலே நிறுத்தி அலசி ஆராய்ந்து முடிவு எடுத்து இறுதியிலே எனக்கு பரிந்துரை செய்வார்கள், அவர்கள் அனுமதித்த எந்த முடிவையும் மறு ஆய்வு செய்ய எனக்கு முழு அதிகாரம் உண்டு, ஏன்னா நான் தான் சிஸ்டம் அட்மின்.


மேற்கூறிய அனைத்து காரங்களும் அனைத்தும் மேலோட்டமானவைகள் விரிவான காரங்களுக்கு எனது சொந்த இணைய தளத்திலே உள்ள 500௦ பக்ககங்கள் கொண்ட புத்தகத்தை தரவிறக்கம் செய்யவும்.


முக்கிய அறிவிப்பு : அமெரிக்க பச்சை அட்டை வைத்ரிப்பவர்களுக்கு சிறப்பு சலுகை உண்டு, அவர்களுக்கு முன்னுரிமை, முக்காடு உரிமை உட்பட பல உரிமைகள் உண்டு.


பொறுப்பு அறிவித்தல் : விதிகள் மாறுதலுக்கு உட்பட்டது.


ஐந்து வருடங்களுக்கு பின் :

அம்மா தாயே பிள்ளையை பெத்த மகராசிகளே ஒரு பையன் கொடுங்க தாயே, உங்க காலுக்கு செருப்பாவும், என்னை கட்டிக்க போறவருக்கு ஒரு பக்தையா இருப்பேன். படிப்பு,அழகு, அறிவு எதுவுமே வேண்டாம் ஆண் பிள்ளையா இருந்தா போதும்.சீக்கிராம ஏதாவது பாத்து செய்யுங்க, ஒரு பிஞ்சை பிச்சு ஆக்கிடாதீங்க.முக்கிய குறிப்பு, பொறுப்பு எல்லாம் அறிவிக்கல சம்மதம் சொல்லுங்க சரணம் அடைஞ்சுடுறேன்.


21 கருத்துக்கள்:

குடுகுடுப்பை said...

மணமகன் குடுகுடுப்பை ரெடி.

Unknown said...

5 அல்ல 50 வருடங்கள் ஆனாலும் நடக்கவே நடக்காது

ஓஹ்! சாரி சாரி

உங்க கனவில் தென்பட்டதா

அப்ப - இருக்கலாம் ...

சந்தனமுல்லை said...

ஆகா!

ராமலக்ஷ்மி said...

:))!

பார்த்துட்டே இருங்க, அடுத்து “மணமகள் தேவை”ன்னு ஒரு எதிர்பதிவு எங்கிருந்தாவது வந்தே தீரும்:)!

சுரேகா.. said...

:)

கலக்கிட்டீங்க தலைவா!

:))

இன்னும் அஞ்சு வருஷம் ஆனா...?

:)))

கிட்டத்தட்ட அப்படித்தான் நடந்திக்கிட்டுருக்கு!
பொண்ணுங்களை விட , பெற்றோர்கள் செய்யற அளும்பு தாங்கமுடியலை!

vasu balaji said...

அப்புடி கேட்டு யாரும் மாட்டலைன்னு இப்புடியா. யப்பா. எப்புடியெல்லாம் யோசிக்கிறாங்கடா சாமி.

Unknown said...

:)) நடந்து கொண்டுதான் இருக்கு. ஆமாம், மாப்பிள்ளை ஆகும் கனவு எல்லாம் வரதில்லையா??

--வித்யா

Unknown said...

http://bangalore.click.in/tamil/classified/brides/825869.html

இங்க போயி பாருங்கப்பா.. :))

வித்யா

Robin said...

இப்படிப்பட்ட விளம்பரங்கள் உண்மையிலேயே வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

குடந்தை அன்புமணி said...

//Robin said...
இப்படிப்பட்ட விளம்பரங்கள் உண்மையிலேயே வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.//

ரிப்பீட்டேடேடேடஏஏஏஏஏஏஏஏஏஏஏ

தாரணி பிரியா said...

ஆகா ஏன் இப்படி

ஹேமா said...

ஐயா....எப்பிடி ஐயா....நசரேயா ?

யாரோ ஒருவர் said...

பொம்பளைங்கள பார்த்தா பயமா இருக்கா. கண்டிப்பா இது இந்தியப்பொண்ணே இல்ல!

Prabhu said...

ஏன் உங்க பதிவெல்லாம் இப்படியே இருக்கு!
பொண்ணு பாக்குறாங்களா?
இல்ல ஆல்ரெடி செட்டில் ஆகி கஷ்ட படுறீங்களா? ஆனாலும் உங்களுக்கு 5 வருடங்களுக்கு பின்னடி விஷயத்துல ரொம்ப மூட நம்பிக்கை!

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-)))

தமிழ் நாடன் said...

முன்பாதியை படிப்பவர்கள் அபத்தம் என்று நினைக்கலாம். ஆனால் இது போன்ற பெண்கள் இருக்கவே இருக்கிறார்கள்.

சிங்கக்குட்டி said...

ஏன்? இதுவரை நல்லாதான போய்கிட்டு இருந்துச்சு :-))

RAMYA said...

ரொம்ப தாமதமா வந்திருக்கேன்
மன்னிக்க நண்பா
ஊரிலே இல்லே அதான்....

அதுசரி!! என்ன தினம் ஒரு பதிவு
இல்லேன்னா ஒரே அமைதிதானா??:-)

மணமகன் தேவை பதிவு சூப்பர்
நல்ல நககச்சுவை உணர்வு!
இடுகை முழுவதும் இழையோடுகிறது.

இந்த சட்ட திட்டங்களுக்கு உடன் பட்டு
வரும் மணமகன் பாவம்... :))

RAMYA said...

//
குடுகுடுப்பை said...
மணமகன் குடுகுடுப்பை ரெடி
//

இவரு ரெடியாமா உடனே பிடிச்சி கட்டி வச்சிடுங்க வேடிக்கை பார்க்கலாம் :-)

அப்படியே ஒரு போன் போட்டு குடுகுடுப்பையோட
ரங்கமணிக்கும் அழைப்பு கொடித்திடுங்க!

RAMYA said...

//
ராமலக்ஷ்மி said...
:))!

பார்த்துட்டே இருங்க, அடுத்து “மணமகள் தேவை”ன்னு ஒரு எதிர்பதிவு எங்கிருந்தாவது வந்தே தீரும்:)!
//

சகோதரி சொல்றதும் நடக்கும் வெகு விரைவில் :-)

பாருங்க பாருங்க பாத்துகிட்டே இருங்க!!

Anonymous said...

:)