Thursday, November 6, 2008

பாட்டி சுட்ட வடையும், Dora வும்

பாட்டி வடை சுட்ட கதை நம்ம எல்லோருக்கும் தெரியும். அந்த கதையிலே வாற வடையும், காக்கவும்,நரியையும் வச்சு அமெரிக்கா காரன் மூளை எப்படி எல்லாம் வேலை செய்யுது பாருங்க என்னை மாதிரி ஆளுங்களை போண்டி ஆக்கி,ஓட்ட ஆண்டியாகி மஞ்ச கடிதம் கொடுக்க அளவுக்கு போய் விட்டது.

சரி கதைக்கு வருவோம், பாட்டி வடை சுட்ட கதையிலே வார காக்காவை மண்டச்சி யாக்கி(டோரா) , அந்த வடை பிடுங்க அலையுற நரியை அப்படியே நரியாவே(ச்வைப்பர்) வச்சு,ஒரு வீணா போன கதைய பண்ணி, அதை பொடுசுகளை பாக்க வச்சி, என்னை மாதிரி ஆளுங்களை பைத்தியம் ஆக்கி விடுறாங்க.

நரி மண்டச்சி கிட்ட இருந்து பொருளை பிடிங்கி எங்கயாவது போட்டு விடும், அதை மண்டச்சி கண்டுபிடிக்க அவளோட நண்பர்கள் குட்டி குரங்கு (பூட்ஸ்) ரெண்டு பெரும் சேர்ந்து அதை தேட போவாங்க வழியிலே அவங்களுக்கு உதவி செய்ய உருப்படாத ஒரு பன்னி, அணில் இவங்க எல்லாம் வருவாங்க, கடைசியிலே நரி பிடிங்கி போட்ட பொருளை தேடி கண்டு பிடிப்பாங்க. இது தான் கதை.

அடப்பாவி மக்க இந்த இத்துப்போன கதைக்கு மாசத்துல நாலு டிவிடி வெளியிட்டு, அதை ஒன்னு விடாம வாங்க வச்சுருடாங்க. இந்த கர்மம் எல்லாம் எனக்கு எப்படி தெரியுமுன்னு நினைக்காதீங்க, எங்க வீட்டுல இருபத்தி நாலு மணிநேரமும் இதுதான் ஓடுது

கதையோட முடிவுல "we did it" ன்னு மண்டச்சி சொல்லி ஒரு குத்தட்டாம் வேற வரும், அதை பாத்துட்டு எங்க வீட்ல அத மாதிரி ஆட்டம் வேற, இதுல கொடுமை என்னன்னா நானும் சேர்ந்து அந்த குத்தட்டாம் ஆடனும், ஆடலைனா எனக்கு அடி வேற

இப்ப நான் எப்படி ஓட்டை ஆண்டி ஆகுறேன்னு சொல்லுறன், டிவிடி யோட தொல்லை விட்டதுன்னு சோகமா சந்தைக்கு அதாவது ஷாப்பிங் மாலுக்கு போன, அந்த கையில,காலுல, தலையிலே,உடம்புல,கண்ணுல போடுற எல்லாத்திலேயும் மண்டச்சி பல்ல காட்டி கிட்டு இருப்பா, சனியன் டிவிடி யோட நில்லம்மா பனியன் வரைக்கும் வருதேன்ன்னு நினச்சு முடிக்கு முன்னாடி, ஒரு ௬டைக்கு துணி மணியை அள்ளி போட்டு வந்து

"அப்பா நான் எல்லா டோராவையும் வாங்கிட்டேன்ப்பா, பில் போட்டு வாங்கிட்டு வந்து காசு கொடுப்பா" ன்னு ஒரு குரல் வரும்.

என்னால விக்கவும் முடியாம விழுங்கவும் முடியாம பாக்கா வேண்டியது வரும், அதெல்லாம் வாங்க முடியாதுன்னு சொன்ன, என் மகள் வைக்கிற ஒப்பாரியை அடக்க ரெண்டு நாளாவது ஆகும், நம்ம ஊருல சின்ன புள்ளைகளை எங்க வச்சி வேணாலும் நாலு சாத்து சாத்தலாம், ஆனா இங்க கைய வச்சா, நம்மளை கைமா பண்ணி, குறைஞ்சது ஒரு பத்து வருசமாவது உள்ளே தள்ளிடுவாங்க.

தலை விதியை நினைச்சுகிட்டு பில் போட போன, நீங்க 600 டாலர் க்கு வாங்கி இருகீங்க, உங்களுக்கு தள்ளுபடி போக 500 டாலர்னு சிரிச்சுகிட்டே சொல்லுவாங்க. நானும் பதில்லு வேண்டா வெருப்ப்பா பல்லை காட்டிகிட்டு வருவேன்.இது ஒரு தொடர்கதையா இன்னும் போய்கிட்டு இருக்கு

என் குடிய கெடுத்தவங்க படத்தையும் பாருங்க

மண்டச்சி
குட்டி குரங்கு
குள்ள நரி

38 கருத்துக்கள்:

குடுகுடுப்பை said...

இந்த விளம்பரம் போட எவ்வளவு காசு வாங்கினீங்க. இங்க சொல்லாட்டி தனியா மெயில்ல சொல்லுங்க

குடுகுடுப்பை said...

//தலை விதியை நினைச்சுகிட்டு பில் போட போன, நீங்க 600 டாலர் க்கு வாங்கி இருகீங்க, உங்களுக்கு தள்ளுபடி போக 500 டாலர்னு சிரிச்சுகிட்டே சொல்லுவாங்க. //

500 டாலர் தள்ளுபடி இல்லயா?

T.V.ராதாகிருஷ்ணன் said...

உங்க வீட்ல டோரா மட்டும்தானா...எனக்கு தெரிஞ்சவங்க வீட்ல..டோரா..காயு..பார்னி,ஸ்டுபிடு ன்னு டாலர் கரையுதாம்.

பழமைபேசி said...

//என் குடிய கேடுத்தவங்க படத்தையும் பாருங்க
//

எங்க உங்க வீட்டு தொலைபேசி எண்ணைச் சொல்லுங்க.... உங்க மகளோடக் கொஞ்சம் பேச வேண்டி இருக்கு.

// இங்க கைய வச்சா, நம்மளை கைமா பண்ணி, குறைஞ்சது ஒரு பத்து வருசமாவது உள்ளே தள்ளிடுவாங்க.//

அய் அப்புறம் நாங்க உங்களை தொலைக் காட்சியில பாப்பமே?

நசரேயன் said...

/*
இந்த விளம்பரம் போட எவ்வளவு காசு வாங்கினீங்க. இங்க சொல்லாட்டி தனியா மெயில்ல சொல்லுங்க
*/

இதை போட்டதுக்கு என்ன கம்பி என்ன வைக்காம இருந்தா சரிதான்

நசரேயன் said...

/*
நினைச்சுகிட்டு பில் போட போன, நீங்க 600 டாலர் க்கு வாங்கி இருகீங்க, உங்களுக்கு தள்ளுபடி போக 500 டாலர்னு சிரிச்சுகிட்டே சொல்லுவாங்க. //

500 டாலர் தள்ளுபடி இல்லயா?
*/
அப்படிதான் நினைச்சுகிட்டு பில் போட போனேன், ஆனா நடந்தது வேற

நசரேயன் said...

/*
உங்க வீட்ல டோரா மட்டும்தானா...எனக்கு தெரிஞ்சவங்க வீட்ல..டோரா..காயு..பார்னி,ஸ்டுபிடு ன்னு டாலர் கரையுதாம்.
*/

விரைவில் எங்க வீட்டுலையும் முழங்கும்னு நினைக்கிறேன்

நசரேயன் said...

/*
எங்க உங்க வீட்டு தொலைபேசி எண்ணைச் சொல்லுங்க.... உங்க மகளோடக் கொஞ்சம் பேச வேண்டி இருக்கு.
*/

யாரு போன் பண்ணினாலும் அவங்க கிட்ட ஒரு லிஸ்ட் சொல்லுவா

/*
அய் அப்புறம் நாங்க உங்களை தொலைக் காட்சியில பாப்பமே?
*/

உங்களுக்கு எவ்வளவு பாசம் என் மேல

முரளிகண்ணன் said...

same blood

பழமைபேசி said...

//நசரேயன் said...
யாரு போன் பண்ணினாலும் அவங்க கிட்ட ஒரு லிஸ்ட் சொல்லுவா!
//

ச்சே, பட்டியல் போட்டுச் சொல்லுற அளவுக்கா நீங்க் தப்புத் தண்டா பண்றது?!

நசரேயன் said...

/*
same blood
*/
என்ன ஒரு ஒற்றுமை பாருங்க

நசரேயன் said...

/*
//நசரேயன் said...
யாரு போன் பண்ணினாலும் அவங்க கிட்ட ஒரு லிஸ்ட் சொல்லுவா!
//

ச்சே, பட்டியல் போட்டுச் சொல்லுற அளவுக்கா நீங்க் தப்புத் தண்டா பண்றது?!
*/
ஒன்னும் பண்ணுறதுக்கு இல்லைங்கோ.
வளப்பு அப்படி .. வேற என்ன சொல்ல

கோவி.கண்ணன் said...

சூப்பர் !
எங்களுக்கும் எங்கள் மகள் மூலமாக டோரா 5 ஆண்டு பழக்கம் !

S.R.Rajasekaran said...

அண்ணாபோச்சே என் மவங்க ரெண்டு பேரோட ஹிட் லிஸ்ட்-ல நீஉம் வந்திடியே மாப்ள

நசரேயன் said...

/*
சூப்பர் !
எங்களுக்கும் எங்கள் மகள் மூலமாக டோரா 5 ஆண்டு பழக்கம் !
*/

வாங்க கோவி அண்ணா,
எங்க வீட்டுல ஒரு வருசம்தான் இந்த ௬த்து நடக்குது

நசரேயன் said...

/*
அண்ணாபோச்சே என் மவங்க ரெண்டு பேரோட ஹிட் லிஸ்ட்-ல நீஉம் வந்திடியே மாப்ள
*/
நம்ம ஊரையும் விட்டு வைக்கலையா?

Anonymous said...

எங்க வீட்லயும் இந்த டோரா இம்ச தாங்க முடியலப்பா. இவளாலையே என் புள்ளங்கள கடை பக்கம் கூட்டீட்டு போறாத நிறுத்திட்டேன் .

ILA (a) இளா said...

//எங்க வீட்லயும் இந்த டோரா இம்ச தாங்க முடியலப்பா. இவளாலையே என் புள்ளங்கள கடை பக்கம் கூட்டீட்டு போறாத நிறுத்திட்டேன் //
யாராவது இதைப் பத்தி என் வூட்டுல சொன்னீங்க உங்க வீட்டுல கொலை விழும்...

நசரேயன் said...

/*
எங்க வீட்லயும் இந்த டோரா இம்ச தாங்க முடியலப்பா. இவளாலையே என் புள்ளங்கள கடை பக்கம் கூட்டீட்டு போறாத நிறுத்திட்டேன் .
*/

வங்க ராஜு பெரியசாமி
நானும் நிறுத்தி ரெம்ப நாள் ஆச்சு

நசரேயன் said...

/*
//எங்க வீட்லயும் இந்த டோரா இம்ச தாங்க முடியலப்பா. இவளாலையே என் புள்ளங்கள கடை பக்கம் கூட்டீட்டு போறாத நிறுத்திட்டேன் //
யாராவது இதைப் பத்தி என் வூட்டுல சொன்னீங்க உங்க வீட்டுல கொலை விழும்...

*/
அங்கேயும் அப்படித்தான் இருக்கா ?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

என் பெண்ணும் டோரா பார்ப்பாள் ஆனா அவ இப்படி படுத்தலை..ஆனா என் பையன் தான் .. பவர் ரேஞ்சர் மாஸ்க் பவர் ரேஞ்சர் டீசர்ட் .. கார்ஸ் காரு கார்ஸ் டீசர்ட் ன்னு படம் கார்டூனுன்னு எதையும் விடறதில்ல..:(

பழமைபேசி said...

ஏன் எல்லாருமா இந்தப் புலம்பல்? நம்ம பக்கத்துல நிறைய, தாப்பூ தாமரைப்பூ, காடு காடு, கொழக்கட்ட கொழக்கட்டன்னு நிறைய பாட்டு பதிஞ்சு வெச்சுருக்கேன். அதுகளச் சொல்லி, நீங்களும் சிறுசுகளோட வெளையாடுங்க. சரி, நான் போயி எங்க சின்ன அம்மினிகோட கொல கொலயா முந்திரிக்கா வெளையாடனும்.

வருக்கைக்கும் கருத்துக்கும் நன்றி
முத்துலெட்சுமி-கயல்விழி

டோரா வாலே நான் ஓட்ட ஆண்டி ஆகிட்டேன், நீங்க சொன்ன எல்லாம் வந்தா மஞ்ச நோட்டீஸ் கொடுக்க வேண்டிய வரும் :)

நசரேயன் said...

/*
ஏன் எல்லாருமா இந்தப் புலம்பல்? நம்ம பக்கத்துல நிறைய, தாப்பூ தாமரைப்பூ, காடு காடு, கொழக்கட்ட கொழக்கட்டன்னு நிறைய பாட்டு பதிஞ்சு வெச்சுருக்கேன். அதுகளச் சொல்லி, நீங்களும் சிறுசுகளோட வெளையாடுங்க. சரி, நான் போயி எங்க சின்ன அம்மினிகோட கொல கொலயா முந்திரிக்கா வெளையாடனும்.
*/
எங்க ஊரு பக்கம் வந்து, எங்க சின்ன அம்மணிக்கும் சொல்லி கொடுத்திட்டு போங்க

Anonymous said...

உங்கள் பதிவை டோரா விசிறியான நான், கன்னாபின்னாவென எதிர்க்கின்றேன். என்ன தகிரியம் இருந்தால் இப்படி பதிவெல்லாம் போடுவிங்க...உங்க குட்டி செல்லத்தின் நம்பரை உடனே தரவும்...

[எங்க வீட்டு செல்லங்களுக்கெல்லாம் டோராவை அறிமுகப்படுத்துவதே நான் தானாக்கும்.]

[பின்னர் அக்கா, அண்ணனிடம் திட்டு வாங்குவதை இங்கு குறிப்பிட்டு சொல்ல விரும்பவில்லை]

//
கதையோட முடிவுல "we did it" ன்னு மண்டச்சி சொல்லி ஒரு குத்தட்டாம் வேற வரும், அதை பாத்துட்டு எங்க வீட்ல அத மாதிரி ஆட்டம் வேற, இதுல கொடுமை என்னன்னா நானும் சேர்ந்து அந்த குத்தட்டாம் ஆடனும், ஆடலைனா எனக்கு அடி வேற
//
ஓஓஓஒ சோஓஓஓஓ ஸ்வீட்..

நசரேயன் said...

/*உங்கள் பதிவை டோரா விசிறியான நான், கன்னாபின்னாவென எதிர்க்கின்றேன். என்ன தகிரியம் இருந்தால் இப்படி பதிவெல்லாம் போடுவிங்க...உங்க குட்டி செல்லத்தின் நம்பரை உடனே தரவும்...
*/
உங்க கிட்ட பெரிய லிஸ்ட் சொல்லுவா, அதை வாங்கி கொடுத்திட்டா நீங்க திவால் ஆகிடுவீங்க
/*ஓஓஓஒ சோஓஓஓஓ ஸ்வீட்..*/

இடுப்பு ஒடிஞ்ச என்க்குல்லா வலி தெரியும்

Aero said...

Kalaynam pannina intha kodumai vera iruka....

kalyanam panrathuku summave irukalam pola thonuthe....

CA Venkatesh Krishnan said...

இங்க தமிழ் நாட்ல, டோரா, பூட்ஸ் பேரு புஜ்ஜி.

இது தானே இன்னிக்கி பிரபலமா இருக்கு.

எங்க வீட்லயும் இதே கதைதான்.

கூட பென்டென் வேறயாம். என்னத்த சொல்ல?

நசரேயன் said...

/*
Kalaynam pannina intha kodumai vera iruka....

kalyanam panrathuku summave irukalam pola thonuthe....
*/
உனக்கு இது ஒரு எச்சரிக்கை

நசரேயன் said...

/*
இங்க தமிழ் நாட்ல, டோரா, பூட்ஸ் பேரு புஜ்ஜி.

இது தானே இன்னிக்கி பிரபலமா இருக்கு.

எங்க வீட்லயும் இதே கதைதான்.

கூட பென்டென் வேறயாம். என்னத்த சொல்ல?
*/
வாங்க இளைய பல்லவன்

அமெரிக்கா புயல் அங்கேயும் வந்து கரைய கடக்குதா?

மோகன் கந்தசாமி said...

/////இடுப்பு ஒடிஞ்ச என்க்குல்லா வலி தெரியும்////

நெனச்சு பார்த்தா சிரிப்பு சிரிப்பா வருதுங்ன்னா!

நசரேயன் said...

/*
/////இடுப்பு ஒடிஞ்ச என்க்குல்லா வலி தெரியும்////

நெனச்சு பார்த்தா சிரிப்பு சிரிப்பா வருதுங்ன்னா!
*/
சீக்கிரம் நீங்களும் என் கஷ்டம் அனுபவிபீங்க

Anonymous said...

annan, dora pattuku daily kuthadama :-):-) antha kuthadathula yethana step iruku...

துளசி கோபால் said...

வீட்டுவீட்டுக்கு வாசப்படி:-))))))

Anonymous said...

தலை விதியை நினைச்சுகிட்டு பில் போட போன, நீங்க 600 டாலர் க்கு வாங்கி இருகீங்க, உங்களுக்கு தள்ளுபடி போக 500 டாலர்னு சிரிச்சுகிட்டே சொல்லுவாங்க. நானும் பதில்லு வேண்டா வெருப்ப்பா பல்லை காட்டிகிட்டு வருவேன்.இது ஒரு தொடர்கதையா இன்னும் போய்கிட்டு இருக்கு

காரணம்

ஏன்னா, பில் போடுறவ கொஞ்சம் மப்பும் மந்தாரமுமா இருப்பா, பாத்து பல்ல இலுசிட்டு பில்ல கட்டிட்டு வர வேண்டியதுதான். என்னபண்ண ;)

Anonymous said...

//
கதையோட முடிவுல "we did it" ன்னு மண்டச்சி சொல்லி ஒரு குத்தட்டாம் வேற வரும், அதை பாத்துட்டு எங்க வீட்ல அத மாதிரி ஆட்டம் வேற, இதுல கொடுமை என்னன்னா நானும் சேர்ந்து அந்த குத்தட்டாம் ஆடனும், ஆடலைனா எனக்கு அடி வேற
//

அந்த அற்புத கட்சிய ஒரு வீடியோ எடுத்து அட்டச் பண்ணின எவளவு நல்ல இருக்கும். நாங்களும் உங்க குத்தட்டாம் பாத்து ரசிச்சு கமெண்ட் பன்னுவோமே.

Anonymous said...

Same problem is in Abu Dhabi & Dubai as well. My Daughter is only 2 yr old and she is already addicted to Dora stuff

நசரேயன் said...

/*Same problem is in Abu Dhabi & Dubai as well. My Daughter is only 2 yr old and she is already addicted to Dora stuff*/
எல்லா ஊரிலேயும் இதே பிரச்சனைதானா