சிலையா? அது சேலையா?
இந்திய மக்கள் தொகைக்கு ஏறக்குறைய சமமா இருக்கிறது நம்ம ஊருல இருக்கிற அரசியல் வாதிகளின் சிலைகள். இந்த காலசாரத்தை நாமளா கண்டு பிடிச்சோமா இல்ல வழக்கம் போல வெளி நட்டுகாரன்கிட்ட கடன் வாங்கிட்டு வந்தோம்னு தெரியலை.ஒரு ஒய்வு பெற்ற நிதிபதி தலைமையிலே விசாரணை கமிசன் வச்சாலும் விடை கிடைப்பது ரெம்ப கஷ்டம்.
ஏற்கனேவே இருக்கிற சாமி சிலைகளை பறக்கும் படை, அதிரடி படை இப்படி பல படைகளை வைத்து காப்பாத்த கடுமையா கஷ்டப்பட்டு கிட்டு இருக்கோம்.அரசியல் தலைவர்களின் சிலையை வைத்து அவர்களுக்கு அரசியல் சாயமும் சாதி சாயமும் பூசி வைத்து விடுகிறோம்.ஆள் பற்ற குறையால, இருக்கிற சிலைகளை பாது காக்க ஐக்கிய நாடுகளிடம் இருந்து பன்னாட்டு படைகளை வரவச்சாலும் ஆச்சரிய படுறதுக்கு இல்லை
இந்திய மக்கள் மதம்,இனம்,மொழி இதெல்லாம் தவிர்த்து அதிகமாக குரல் கொடுக்கிற ஒரு விஷயம் சாதி.வீட்டிலே அடுத்த வேலை சாப்பாடுக்கு வழி இல்லை என்றாலும் சாதி என்று வந்துவிட்டால் மார்தட்டி கொண்டு சண்டைக்கு போகதும், சேறு தண்ணி இல்லாம சாதியை பற்றி பேசுவதும், தாய் தந்தை பாசத்தை விட சாதி பாசத்தையே பெரிதாக நினைகிரவங்க நிறைய பேர். இப்பேர்பட்ட ஆளுங்களின் தலைவர்களின் சிலைகளை அவமரியாதை செய்தால் விட்டுடுவாங்களா ?
கடை அடைப்பு, பஸ் கொளுத்துதல்,கல் எரி, மண்டை உடைப்பு இப்படி பல திரு விழாக்களை நடத்தி விடமாட்டோம்
வெளியூர் கார ஆளுங்களுக்கு அரசியல் சாயம் கலந்த சிலை, உள்ளூர் கார ஆளுங்களுக்கு அரசியலும், சாதியும் கலந்த சிலை.சிலைகளை வச்சதோட விடுறோமா, அதுக்கு மலை மரியாதையை, கெட வெட்டி பொங்கல்,படையல் எல்லாம் பண்ணுறோம்.
இது எல்லாம் பிடிக்காமால, இல்ல மாலை வாங்க காசு இல்லாம செருப்பு மலை போடுறாங்களா என்னன்னு தெரியலை. இங்க ஆரமிச்ச பிரச்சனை தமிழ் நாட்டுல மூலை முடுக்கெல்லாம் பரவி நாட்டுல எல்லா சிலையிலேயும் போகி பண்டிகை கொண்டாடுறோம்.
தமிழ் நாட்டு காவல் துறை பொது மக்களை பாது காக்கும் வேலைகளை விட்டு விட்டு சிலைகளை பாதுகாக்க கிளம்ப வேண்டிய இருக்கு, சட்டம் ஒழுங்கை காப்பாற்றுகிற காவல் உயிர் அற்ற சிலைகளை காபாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டால் உயிர்லுள்ள மக்களை எப்படி காப்பாத்து வாங்க?
நாட்டுல சட்டம் ஒழுங்கு கெட்டு போச்சுன்னு எதை வச்சு கொடி பிடிக்கமுடியும்?
ஒரு மனிதன் இறந்த பின்பும் அவர்களை நிம்மதியாக தூங்க விடாமல் அவர்களை சிலையாய் எழுப்பி அவங்களை அவமானப்படுத்திற ஒரே ஊர் நம்ம ஊரா தான் இருக்கும் ன்னு நினைக்கிறேன்
தொண்டர்களாகிய நாம் தலைவர்களுக்கு மனதில் சிலை வைத்தால் நாட்டில் நடக்கும் பாதி பிரச்சனை தீர்ந்து விடும், மீதி பிரச்சனை அதுவாவே தீர்ந்திடும், காவிரி, ஒகேனகல்,தமிழ் ஈழம் தவிர
(மேற் கூறிய அனைத்து கருத்துகளும் எனக்கும் பொருத்தும் என்பதை மிக தாழ்மையுடன் சொல்லி கொள்கிறேன்.)
30 கருத்துக்கள்:
எனக்கு யாரும் சிலை வைக்க வேண்டாம் என்றுதான் இது வரை என் தலையை வெளியில் காண்பிக்கவில்லை.
ச்சே, தலைப்பைப் பாத்த ஒடனே சிலைக்கு யாரோ சேலை தானம் பண்ணிட்டாங்களோன்னு ஓடோடி வந்தேன்.... :-o(
//(மேற் கூறிய அனைத்து கருத்துகளும் எனக்கும் பொருத்தும் என்பதை மிக தாழ்மையுடன் சொல்லி கொள்கிறேன்.)//
எனக்கும் !!! எனக்கும் !!!
செத்துப் போனவங்க சிலையால, உயிரோடு இருக்கிறவர்கள் செத்துப் போறாங்க, எவனாவது கைகாலை உடைத்துவிடுவான், அப்பறம் அப்பாவிகளை கூட்டமாக சேர்ந்து கொன்று போட்டுவிடுவார்கள்.
எல்லா சிலைகளையுமே அகற்றுவதே ஒரே வழி
மேற் கூறிய அனைத்து கருத்துகளும் எனக்கும் பொருத்தும் என்பதை மிக தாழ்மையுடன் சொல்லி கொள்கிறேன்.
இதுல நல்ல விசயமும் இருக்கு கேட்ட விசயமும் இருக்கு
/*
எனக்கு யாரும் சிலை வைக்க வேண்டாம் என்றுதான் இது வரை என் தலையை வெளியில் காண்பிக்கவில்லை.
*/
உங்களுக்கு நம்ம ஊரிலே வேண்டாம், அமெரிக்காவிலே வைக்கலாம்
/*
ச்சே, தலைப்பைப் பாத்த ஒடனே சிலைக்கு யாரோ சேலை தானம் பண்ணிட்டாங்களோன்னு ஓடோடி வந்தேன்.... :-o(
*/
இலவச வேஷ்டி சேலையா?
/*//(மேற் கூறிய அனைத்து கருத்துகளும் எனக்கும் பொருத்தும் என்பதை மிக தாழ்மையுடன் சொல்லி கொள்கிறேன்.)//
எனக்கும் !!! எனக்கும் !!!
*/
நன்றி ச்சின்னப் பையன்
/*
செத்துப் போனவங்க சிலையால, உயிரோடு இருக்கிறவர்கள் செத்துப் போறாங்க, எவனாவது கைகாலை உடைத்துவிடுவான், அப்பறம் அப்பாவிகளை கூட்டமாக சேர்ந்து கொன்று போட்டுவிடுவார்கள்.
எல்லா சிலைகளையுமே அகற்றுவதே ஒரே வழி
*/
வழி மொழிகிறேன் கோவி அண்ணா
/*
மேற் கூறிய அனைத்து கருத்துகளும் எனக்கும் பொருத்தும் என்பதை மிக தாழ்மையுடன் சொல்லி கொள்கிறேன்.
இதுல நல்ல விசயமும் இருக்கு கேட்ட விசயமும் இருக்கு
*/
உண்மை, நல்லதை வச்சுக்கிட்டு
கெட்டதை விட்டொழித்தல் நல்லதே நடக்கும்
மேற் கூறிய அனைத்து கருத்துகளும் எனக்கும் பொருத்தும் என்பதை மிக தாழ்மையுடன் சொல்லி கொள்கிறேன்.
எனக்கும் !!! எனக்கும் !!!
பழமைபேசி has left a new comment on your post "சிலையா? அது சேலையா?":
சிலை வடிப்போர் சங்கத்துகாரங்ககிட்ட உங்களுக்கு இருக்குது பூசை.... ஆமா, நீங்க எப்ப ஊருக்கு போறீங்க.... போட்டுக் குடுக்க மாட்டேன், ச்சும்மா சொல்லுங்க....
//
நசரேயன் said...
பழமைபேசி has left a new comment on your post "சிலையா? அது சேலையா?":
//
ஆகா!
அதெல்லாம் முடியாது.. எனக்கு சிலை வெச்சே தீரனும்...
இல்ல நாடு "தழுவிய" ஆர்ப்பாட்டம் நடக்கும் ..
( "தழுவிய" அர்த்தம் என்ன???)
போன பின்னூட்டம் சும்மா மொக்கைக்காக போட்டது...
இப்பொழுது சீரியஸ் பின்னூட்டம்:
நீங்கள் சொன்னதை அப்படியே வலி கிழி மொழிகிறேன் ..
அப்படா எஸ்கேப்பு
/*
மேற் கூறிய அனைத்து கருத்துகளும் எனக்கும் பொருத்தும் என்பதை மிக தாழ்மையுடன் சொல்லி கொள்கிறேன்.
எனக்கும் !!! எனக்கும் !!!
*/
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா
/*
//
நசரேயன் said...
பழமைபேசி has left a new comment on your post "சிலையா? அது சேலையா?":
//
ஆகா!
*/
எப்படி புடிச்சேன் பாத்தியாளா?
/*
அதெல்லாம் முடியாது.. எனக்கு சிலை வெச்சே தீரனும்...
இல்ல நாடு "தழுவிய" ஆர்ப்பாட்டம் நடக்கும் ..
( "தழுவிய" அர்த்தம் என்ன???)
*/
வங்க அணிமா
ஒருவேளை பழமைபேசி கிட்ட கேட்டா தெரியும்
/*
போன பின்னூட்டம் சும்மா மொக்கைக்காக போட்டது...
இப்பொழுது சீரியஸ் பின்னூட்டம்:
நீங்கள் சொன்னதை அப்படியே வலி கிழி மொழிகிறேன் ..
அப்படா எஸ்கேப்பு
*/
நீங்கள் சொன்னதை அப்படியே வலி கிழி மொழிகிறேன்
சிலைகளைப் பற்றி என் மனசுலே இருந்ததை அப்படியே சொல்லி இருக்கீங்க.
அபூர்வமா எதாவது ஒரு சிலை இருந்தாப் போதாதா? ஒவ்வொரு முச்சந்தி, நாற்சந்தின்னு சந்திசிரிக்க வச்சுருக்காங்க.
ஒட்டுமொத்தமா எல்லாத்தையும் எடுத்துறணும்.
இதே எண்ணம்தான் இந்த மணி மண்டபம் கட்டுறேன்னு ஆரம்பிக்கறாங்களே அதுக்கும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி துளசி டீச்சர்.
கண்டிப்பாக ஒட்டுமொத்தமா எல்லாத்தையும் எடுக்கவேண்டும் என்பதே எனது ஆசையும்
//எனக்கு யாரும் சிலை வைக்க வேண்டாம் என்றுதான் இது வரை என் தலையை வெளியில் காண்பிக்கவில்லை//
//ச்சே, தலைப்பைப் பாத்த ஒடனே சிலைக்கு யாரோ சேலை தானம் பண்ணிட்டாங்களோன்னு ஓடோடி வந்தேன்//
//
//(மேற் கூறிய அனைத்து கருத்துகளும் எனக்கும் பொருத்தும் என்பதை மிக தாழ்மையுடன் சொல்லி கொள்கிறேன்.)//
எனக்கும் !!! எனக்கும் !!!//
super comments:):):)
me the 25th:):):)

வாங்க ராப், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
பாத்து காத்து வைக்க வேண்டிய கருத்துகள்
நானும் ரசித்தேன்..சிரித்தேன்
//சிலைகளைப் பற்றி என் மனசுலே இருந்ததை அப்படியே சொல்லி இருக்கீங்க.
அபூர்வமா எதாவது ஒரு சிலை இருந்தாப் போதாதா? ஒவ்வொரு முச்சந்தி, நாற்சந்தின்னு சந்திசிரிக்க வச்சுருக்காங்க.
ஒட்டுமொத்தமா எல்லாத்தையும் எடுத்துறணும்.
இதே எண்ணம்தான் இந்த மணி மண்டபம் கட்டுறேன்னு ஆரம்பிக்கறாங்களே அதுக்கும்.
//
என் கருத்தும் இதுவே. மாவட்டங்களும், பேருந்து கார்ப்பரேஷன்களிருந்தும் அதிரடியாக தலைவர்களின்(?) பெயர் நீக்கியதை போல பாலங்கள், கட்டிடங்கள் போன்ற பொது/அரசு சொத்துகளுக்கு பெயர் நீக்கம் செய்வதே சாலச் சிறந்தது.
/*என் கருத்தும் இதுவே. மாவட்டங்களும், பேருந்து கார்ப்பரேஷன்களிருந்தும் அதிரடியாக தலைவர்களின்(?) பெயர் நீக்கியதை போல பாலங்கள், கட்டிடங்கள் போன்ற பொது/அரசு சொத்துகளுக்கு பெயர் நீக்கம் செய்வதே சாலச் சிறந்தது.
*/
வாங்க மன்மதக்குஞ்சு வருகைக்கு நன்றி
நீங்க சொன்ன அனைத்தும் அப்படியே நிறைவேற்ற வேண்டிய கருத்துக்கள்
////எல்லா சிலைகளையுமே அகற்றுவதே ஒரே வழி///
வெட்டு குத்து இல்லாமல் இந்த முடிவுக்கு ஏகமனதாக வரமாட்டார்கள். ஆகவே, இனிமேல் புதிதாக சிலை கூடாது என்று முடிவேடுக்கலாமோ!
/*
////எல்லா சிலைகளையுமே அகற்றுவதே ஒரே வழி///
வெட்டு குத்து இல்லாமல் இந்த முடிவுக்கு ஏகமனதாக வரமாட்டார்கள். ஆகவே, இனிமேல் புதிதாக சிலை கூடாது என்று முடிவேடுக்கலாமோ!
*/
நாம முடிவு பண்ணி என்ன செய்ய முடியும், முடிவு பண்ண வேண்டியவங்க முடிவு பண்ணனும்
ஒரு ஐடியா சொல்லவா. எல்லா சிலையையும் பாத்து காக்க. Better collect all in one place and outsource to Wipro :). Since already you are doing that as parttime ;)
Post a Comment