Sunday, September 21, 2008

தமிழை கொல்லும் கிந்திக்காரர்கள்

எதோ வழக்கம் போல நம்ம பால்/மோர்/தயிர் தாக்கரே மும்பையில இருக்க தமிழ் ஆளுங்களை அடிச்சி விரட்ட ஆரமிச்சுடாரோனு நினைக்க வேண்டாம் .அவரு உ.பி காரங்களையும் பீகார் காரங்களையும் அடிச்சு விரட்டுரதுகே நேரம் சரியா இருக்கு


நாம் ஊரு இசை அமைப்பாளர்கள் ஒரு நல்ல தமிழ் பாட்டை எப்படி கொலை பண்ணுறாங்க என்பதை தான் நான் இங்க சொல்லபோறேன்.சொன்னதுல தப்பு இருந்த வீடு தேடி வந்து அடிச்சுட்டு போங்கோபாடல் ஆசிரியர் பாட்டு எழுதி கொடுத்த உடனே பெட்டியை கட்டி மும்பை ஓடி நேரா நம்ம மூக்கு வாயன் உதித் நாராயணன் வீட்டுலயும்,இல்ல நாக்கு மூக்கி மதுஸ்ரீ வீ ட்டுல இறங்க வேண்டியது.பாடல் ஆசிரியர் அர்த்தமே இல்லனாலும் அழகா தமிழ்ல எழுதுனதை அரை குறை கிந்தியில மாத்தி அவங்களை வச்சி பாட சொல்லுறது.

அவங்க அர்த்தத்தோட பாடுறாங்களா, வாய்க்கு வந்தபடி பாடுறாங்களா எதையும் பாக்கது கிடையாது.எதோ படிச்சா போதும் அவங்க பேரை சொல்லி விளம்பர படுத்தி நாலு காசு கூட சம்பாதிக்கலாம்னு நினப்புல படிச்சதை வாங்கிட்டு வரவேண்டியது.நாமும் பெரிய இசை அமைப்பாளர் போட்ட மெட்டுன்னு வாங்கி கேட்டா

"சகானா சாரல் தூவுதோ"
எழுதினா இந்தாளு
"சகானா சாறல் தவ்வுதோ"

எதோ இவரு வீட்டுக்கு கட்டடம் கட்ட சாறல் அடிச்சா மாதிரி படிக்காரு.
அந்த அம்மா
"அன்பால் ஆணை இடு அழகை சாகவிடு"

அப்படின்னு எழுதினதை
"அன்பாய் வாளி எடு அதிலே சாணியை எடு"


என்னய்யா இது
வாளியை எடு சாணியை அள்ளுன்னு.


மொழி தெரியாதவங்க கிட்ட பாட்டை கொடுத்து என்னயா ஏற்கனவே குத்துயிரும் குலயுயிருமா இருக்க தமிழ்ல வெந்த புண்னுல வேல பாய்ச்சுகிற மாதி பண்ணுறது என்ன நியாயம்.
இவங்க படிச்சா தான் பாட்டு கோட்போம்னு யாராவது உங்க காலுல விழுந்து அழுதாங்களா,உங்க வீட்டு முன்னாடி ஆர்பாட்டம் பண்ணினோமா,உண்ணா விரதம், கடை அடைப்பு உண்டா?


பாட்டு நல்லா இருந்தா "பரவை" முனியம்மா பாடினாலும் புகழின் உச்சிக்கே கூட்டிடு போறோம்.
ஏற்கனவே "பிரியமானவளை ரசிக்கலாம்" அப்படின்னு வைரமுத்து ஐயா எழுதனதை
"பெரியம்மா மகளை ரசிக்கலாம்" ன்னு
படிக்கிறாங்கன்னு மேடையிலே சொன்னதுக்கு அப்புறமும் திருந்த வேண்டாமா?
தயாரிப்பாளர் உங்க சுதந்திரத்துல கை வைக்க விரும்ப வில்லை என்பதற்காக தமிழோட சுதந்திரத்துல நீங்க எப்படி கை வைக்கலாம்.
உங்களை மாதிரி கலைஞர்களுக்கு வேணா மொழி இல்லாம இருக்கலாம், ஆனால் எங்களுக்கு நடப்பதற்கும்,பார்ப்பதற்கும், கேட்பதற்கும் மொழி இருக்கு என்பதை புரிஞ்சுகோங்க சாமி.
அரசாங்கம் நல்ல தமிழ் உச்சரிப்போட படிச்சா பாட்டுக்கு ஐந்து ஆயிரமுனு அறிவிச்சா உடனே குத்து சிங்கர், மெலடி சிங்கர், டூயட் சிங்கர் இப்படி பல போட்டிகளை தொலை காட்சியில நடத்திஇருப்பிங்க.
வட நாட்டுல இருந்து நடிகைகளை இறக்குமதி பண்ணுறீங்க. அவங்களுக்கு தமிழ் தெரியலைனாலும் வாயை கோணல் மானலா அசைக்க சொல்லி பின்னணி குரல் வச்சு சமாளிக்குரீங்க. பின்னணி பாடகர்களுக்கு எப்படி பின்னணி குரல் கொடுக்க முடியும்?
உங்களை பத்தி குறை சொல்லுற அளவுக்கு நான் ஒன்னும் நக்கீரன் இல்ல(நம்ம கடா மீசை நக்கீரன் கோபால் இல்ல). தமிழை தரமில்லாமல் உச்சரிக்கும் உங்களை சீத்தலை சாத்தனார் உயிரோடு இருந்தால் அவரிடம் இருந்த எழுத்தாணியை வச்சி உங்க தலையிலே கும்மாங் குத்து குத்துவாரு என்பது மட்டும் நிச்சயம்.


4 கருத்துக்கள்:

குடுகுடுப்பை said...

நாலு எலி திங்கறீங்க.

(நல்லா எழுதி இருக்கீங்க)

நசரேயன் said...

:)
எதோ என்னால முடிஞ்சந்து (முடிஞ்சது)

கோவி.கண்ணன் said...

//உங்களை பத்தி குறை சொல்லுற அளவுக்கு நான் ஒன்னும் நக்கீரன் இல்ல(நம்ம கடா மீசை நக்கீரன் கோபால் இல்ல). தமிழை தரமில்லாமல் உச்சரிக்கும் உங்களை சீத்தலை சாத்தனார் உயிரோடு இருந்தால் அவரிடம் இருந்த எழுத்தாணியை வச்சி உங்க தலையிலே கும்மாங் குத்து குத்துவாரு என்பது மட்டும் நிச்சயம்.//

சூப்பரு

நசரேயன் said...

வருகைக்கும் உங்கள் கருத்துக்கும் நன்றி கோவி.கண்ணன்