குத்து பாட்டு
பாடல் ஆசிரியர் : நாம இன்னைக்கு போடுற மெட்டு அடுத்த 10 வருசத்துக்கு வேற பட்டை யாருமே கோக்கபுடாது
இசை அமைப்பாளர் :பாட்டை சொல்லுங்க,பட்டி தொட்டி எல்லாம் கலக்கிபுடலாம்
பாடல் ஆசிரியர் : படிகவன் வயத்த கலக்காம இருந்தா சரி.யப்பா சொந்தமா ராகம் போடு, வழக்கம் போல காளவான்ட்டு வந்த ராகத்தை போடாத.பாட்டு ஒழுங்கா வரல உனக்கு பாடை தான்
பா.அ :இசை பனிக்கட்டியா உறைஞ்சு கிடக்கு, நீங்க பாட்ட சொல்லுங்க அது உருகி வெள்ளமா ஓடும்
பா.ஆ : வாரதை கொஞ்சம் காவிரி பக்கம்s திருப்பி விடுஅப்பு.கொஞ்ச நாளகைக்கு தண்ணி சண்டை வராம இருக்கும்.பாட்டுக்கு பல்லவி சொல்லுறன் கேட்டுக்கோ
"வல வலைய வாயில போடு"
"பல பலைய பையிலே போடு "
இ.அ : ஆகா!!நவீன தெரு குறள்!! வல.. பலனு.. எதுகை மோனை தூள்.இந்த ஆண்டோட சிறந்த பாடல் ஆசிரியர் விருது உங்களுத்தான் (சனியன் பல் விளகுரதை பாட்டா படிக்கு)
பா.ஆ : லோட லொடன்னு பேசாம பாட்டுக்கு மெட்டு போடு சாமி.
இல்ல அட்டிய கழட்டிடுவேன்.
இ.அ : இதையே பாட்டோட அடுத்த ரெண்டு வரியா வைக்கலாம் போல
(அப்போது இ.௮ வெட்டு வேலைக்காரன் காப்பி எடுத்துக்கொண்டு வருகிறான், அதை பார்த்தும் பா.ஆ கோபமாக)
பா.ஆ : ஐயயோ!! என் பாட்டை திருட்டிடான்.. என் பாட்டை திருட்டிடான்
இ.அ : எங்க வீட்டு வேலைகாரங்க நீங்க களைப்பா இருபீங்கன்னு குடிக்க காபி கொண்டு வாரான்
பா.ஆ : காபி கொண்டு வார சாக்குல பாட்டை காப்பி அடிச்சுடுவான்.நோகாம நொங்கு திங்க எவ்வவோ பேர் நாக்க தொங்க போட்டு அலையு ராங்க .இவனை அனுப்புங்க இல்ல நான் வீட்டுக்கு போறேன்.எனக்கு டென்ஷன் ஆகிடுச்சி நான் ஒரு தம் போடனும் ..(சிகரட் எடுத்து பூ....பூ ... உதுகிறார், இதற்குள் இ.அ வேலைகாரனோடு அவரு பொன்ட்டாடியையும் சேத்து அனுப்பி விட்டுடுறார்)
பா.ஆ : அப்பாட.. என் பாட்டு தப்பிசுரிச்சி..
இ.அ : சரி பாட்டுக்கு வருவோம். ரெண்டு வரி ஆச்சு.
பா.ஆ : இடை..இடையிலே கு..கு..குத்து பட்டு கு..கு..குத்து பட்டு பாட்டு அப்படின்னு வரணும் சரியா
இ.அ : பண்ணிட்ட போச்சு
பா.ஆ : ஹும்ம்ம் .. அடுத்து ஒரு ஐடியா வந்து விட்டது.. இதுக்கு டான்ஸ் உரல்ல அரிசி குத்துற மாதிரி வைக்கணும் ..
இ.௮ : சார்:உங்களோட சேர்ந்து எனக்கும் ஒரு யோசனை வந்தது. இந்த பாட்டை உதித் நாராயணன், மதுஸ்ரீ யை வைச்சு படிக்க வைக்கலாம்.
பா.ஆ :மூக்குவாயனும் நாக்கு மூக்கியுமா?
இ.௮ :அவங்க எல்லாம் மெட்டு கெட்டி பாடினால் ஊரே சேறு தண்ணி சாப்புடாம நின்னு கேக்கும். அவங்களை இப்படி பேசக்குடாது
பா.ஆ :அவங்க வென வடக்கூர்ல பெரிய பாட்டுக்காரரா இருக்கலாம், ஆனா தெக்கூருக்கு வந்த ஒழுங்கா படிக்கவேண்டாமா? அவங்க படிக்கிறதை விளக்கம் சொல்லுரதுக்குனு ஒரு பட்டி மன்றம் வைக்கணும்
இ.௮ :அப்படி என்ன குறையை கண்டுடீங்க
பா.ஆ :"சகானா சாரல் தூவுதோ" எழுதினா இந்தாளு "சகானா சாறல் தவ்வுதோ".இவரு வீட்டுக்கு கட்டடம் கட்ட சாறல் அடிச்சா மாதிரி படிக்காரு. அந்த அம்மா "அன்பால் ஆணை இடு அழகை சாகவிடு" அப்படின்னு எழுதினதை "அன்பாய் வாளி எடு அதிலே சாணியை எடு" என்னய்யா இது வாளியை எடு சாணியை அள்ளுன்னு.இவங்களை பத்தி பேசி டென்ஷன் ஆகிடுச்சு சிகரெட் வேணும் (ப்பூ...ப்பூ...ப்பூ)
இ.௮ :குறை இல்லாம யாரு இருக்கா,குறையை விட்டுட்டு நிறையை பாருங்க.
பா.ஆ : என்ன குறை நிறைனு நாய் மாதிரி குரைசுகிட்டு இருக்க
இ.௮ : உஸ்ஸ்..ரெம்ப சத்தமா பேச புடாது உங்க பேச்சுக்கு கண்டனம்,ஆர்பாட்டம்,கடை அடைப்பு வரும்.தமிழ் நாட்டுல யாரு சார் தமிழா பேசுறா,படிக்கா எல்லாம் இங்கிலீஷ் பேசி படிகிறதையே பெருமையை நினைக்காங்க.
பா.ஆ : என்னைவே யோசிக்க வச்சுவிட்டியே. விஜய் டி.வி யிலே சொல்லி குத்து சிங்கர் ஒரு போட்டி வச்சி தமிழ் படிக்கவங்களை புடிக்கலாம்.சரி பாட்டுக்கு வருவோம்.
இ.௮ :ஐயா சாக்கடகை கவிஞ்சரே நீ ஒரு மண்ணும் சொல்லவேண்டாம்.பொழுது விடிஞ்சு பொழுது போனா கதை எழுதுறன் கவிதை எழுதறனு கண்ட கண்ட கருமாந்துரத்தை எழுத வேண்டியது.போய் உருப்படியா வேற வேலைய பாரு.மிச்சத்தை நானே எழுதிக்கிறேன்.
பா.ஆ : பஞ்சத்துக்கு பாட்டுக்கு மெட்டு நீ பரம்பரையா பாட்டு எழுதுற என்னை?
இ.௮ : உன் பரம்பரை எல்லாம் தேவயானி மாமியா மாதிரி இட்லி கடை வச்சு இருக்காங்கனு எனக்கு தெரியும்டி.பச்ச புள்ளைக பேசுறத பாட்டா எழுதி பவுசா பண்ணுற
வள வலய வாயில் போடு
பல பலய பையிலே போடு
கொல கொலையை கொல்லையில் போடு
அட அடையை அடுப்புல போடு
மல மலைய மடியில போடு
தல தலைய தலைல போடு
சல சலய சாக்குல போடு
கரு கருவ கண்ணுல போடு
துரு துருவ தூக்கி போடு
இதை எழுதுணவனை எண்ணைல போடு
படிச்சவனை(இதை படித்தவர்களை அல்ல) படையில போடு
மல மலனு மண்டைய போடு
இப்படி ஒரு கேவலமான பாட்டுக்கு வைரமுத்து மாதிரி குறை அடிக்கிற. குறை சொன்ன இந்த வாயை (வாயிலே குத்து கையிலே பாட்டு இதுதான் குத்து பாட்டு)
10 கருத்துக்கள்:
சும்மா குத்து கும்னு இருக்குங்கோ
வடக்கூர்,தெக்கூர் நீங்க எந்த ஊரு
உங்களுக்கு பக்கத்து ஊருதான் குடுகுடுபையரே
engada irunthu ithellam yosippa....
mudiyala....
/*
engada irunthu ithellam yosippa....
mudiyala....
*/
எல்லாம் தன்னால வருது :)
Super song story. People should realize the importance of lyrics and the singers should know the importance of pronounce correctly.
வருகைக்கு தினகரன் ஐயா
தமிழ் என்றால் என்ன என்று கேட்கும் வட நாட்டு பாடகர்களை வைத்து தமிழ் பாட்டை கொல்வது இன்றைய கலாசாரமாக இருக்கிறது, இந்நிலை மாறவேண்டும் தமிழ் தெரிந்தவர்களே பாடவேண்டும் என்ற நிலை வர வேண்டும்
நான் கூட சுப்பெரா கவிதை எழுதுவேன்.தம்பி நீ கேளேன்,மாப்ள நீ கேளேன்,மொக்கை நீ கேளேன்,நசரேயா நீ கேளேன்,
T.V.ராதாகிருஷ்ணன் ஐயா உங்கள் வருகைக்கு மிக்க நன்றி
/*
நான் கூட சுப்பெரா கவிதை எழுதுவேன்.தம்பி நீ கேளேன்,மாப்ள நீ கேளேன்,மொக்கை நீ கேளேன்,நசரேயா நீ கேளேன்,
*/
சீக்கிரமா சொல்லி அனுபுறேன்
Post a Comment