Sunday, February 27, 2011

மனநோயாளியின் வாக்குமூலம்

"அப்ப எனக்கு எத்தனை வயசுன்னு தெரியலை, இப்ப எனக்கு எத்தனை வயசுன்னு தெரியலை, ஆனா ஏழு கழுதை வயசாகி இருக்கும்னு  நினைக்கிறேன்,என்னோட அஞ்சு வயசிலே அஞ்சுவைப் பார்த்தேன், அதுக்கு அப்புறம் அவளை பார்க்கவே முடியலை"

"ஏன் நீங்க முயற்சி செய்யலை, அவங்களை கண்டு பிடிக்க ஏன் முயற்சி செய்யலை, சொல்லுங்க .. சொல்லுங்க."

"யோவ், அவங்க அப்பனுக்கு வேலை மாற்றுதலாகி ஊருக்கு போய்ட்டான், அவரு அரசாங்க வேலை பார்த்தவர், எங்க அப்பா அரசாங்கம் உருவாக வேலை பார்த்தவர்(குடி மகன்), அதுவும் டவுசர் ௬ட போட தெரியாத வயசிலே   யாரைத்தேடி எங்க எப்படி அலைய முடியும்?"

"உன்னோட நிலையிலே இருக்கிறவங்க, ஐஞ்சு வயசிலே அம்பது வயசு ஆள் மாதிரி இன்னொரு ஆள் உள்ளே இருந்து உள்குத்து வேலை செய்வாரு"

"வேலைக்கு அரை கிழவன்களை எல்லாம் எதுக்கு வைக்கிறேன், ஒரு நல்ல பெண்ணை பார்த்து வைத்து இருப்பேனே?"


"உங்க உள்ளேண்ணத்திலே கலந்த உப்பு கொஞ்சம் கொஞ்சமா வெளியே வருது, சொல்லுங்க நீங்க யாரு?"

"அடி செருப்பால, எத்தனை வாட்டி இந்த கேள்விய கேப்ப?"

"நீங்க சொல்லுற வாட்டி வடக்கூர்ல நிறைய பயன்படுத்துவாங்க, உங்க கிட்ட ஒளிந்து இருக்கிற ஐ.ஐ.டி யிலே படிக்க போய், அறிவு அதிகமாகி கஞ்சா அடிச்ச அந்த ஆசாமிய வெளியே கொண்டு வாங்க, அவனை இன்னைன்னு நான் பார்க்கணும்"

"ஏன் நீ அவன்கிட்ட கடன் வாங்கி கஞ்சா குடிக்கப் போறியா, அறிவு அதிகமா இருக்கிறவங்க எல்லாம் கஞ்சா குடிப்பாங்கன்னா,மருத்துவப் படிப்புக்கு தான் அதிக மதிப்பெண்ணும் அறிவும்  தேவைப்படுது(?), அப்ப நீங்க எல்லாம் கஞ்சா குடிக்கிறவங்களா?"

"உங்களுக்கு எப்பவாது உங்களுக்குள்ளே, வேற யாரும் இருக்கிற மாதிரி உணர்ந்து இருக்கீங்களா?"

"வேற யாரு மாதிரினா, பேய் பிடிச்ச மாதிரியா"

"அப்படியும் சொல்லலாம்"

"எனக்கு தெரிஞ்சு அப்படீல்லாம் தோணலை, எங்க தத்தா சாமியாடி, அவரு அடிக்கடி சொல்லுவாரு, பேய் எல்லாம் உன்னையப்பார்த்து பத்து மீட்டர் விலகியே நிக்குன்னு ,ஆனா நான் தண்ணியப் போட்டா பல பேர் சாமியாடுவாங்க என் மேல"

"அப்ப உங்க கிட்ட எதோ ஒரு சக்தி இருக்கு" 

"இந்த சக்திய வச்சி ஊரிலே பேய் ஓட்டுற கடை போட்டா யாவாரம் நல்லா நடக்குமா? எங்க தாத்தா சொன்னது நானே பேய் நிறத்திலே இருக்கேன், அதனாலே என்னைய பேய் பார்த்தா, அவங்க ஆள்கன்னு ஒதுங்கிபோகுமாம்"

அடுத்த நிமிடத்திலே பன்னி சில்லிப்பதுபோல சிலித்து, வயத்தை பிடித்துகொண்டு, பல தும்மல்களைபோட்டு, தலையிலே வைத்து இருந்த செயற்கை முடி விழுந்து, வழுக்கையுடன் இருந்தவரைப் பார்த்த மனநல மருத்துவர், 

"வி காட் ஹிம், ஹி இஸ் ஹியர்.. ஆபீசர்ஸ் யு மைட் வான்ட் டு செக் திஸ்" 

எல்லா அதிகாரிகளும், மருத்துவரை சுத்தி நிற்கிறார்கள்.

"பன்னி மாதிரி சிலிப்பை எதிர்பார்த்து காத்து இருந்தேன், அப்படி வந்தாதான்   தான் பிள மனிதனின் வரவு,இப்ப உள்ள இருக்கிறது யாருன்னு நீங்களே 
கேளுங்க"

௬டி இருந்த அதிகாரிகளில் ஒருவர், "நீங்க யாரு?" 

"யோவ் எத்தனை தடவை இந்த கேள்விய கேட்பீங்க, நல்ல மாட்டுக்கு ஒரு சூடு, இனிமேல இப்படி கேள்வி கேட்டா, நான் எழுந்து போய்டுவேன், விசாரணை ன்னு  சொல்லி சோறு தண்ணி கொடுக்கலை, அதான் வயத்த வலி வந்து விட்டது"

"அந்த தும்மலுக்கும், பன்னி சிலிப்புக்கும் என்ன அர்த்தம்?"

"ஜலதோஷம் பிடிச்சி இருக்கு, அதான் அப்படி"

"மருத்துவரே என்ன நடக்கு இங்க, அவரு சொல்லுறதை பார்த்தா இவனுக்குள்ளே யாரும் உள்ள இருக்கிற மாதிரி தெரியலையே, உண்மையிலே இவருக்கு மனநிலை பாதிப்பு, பிள மனித தாக்கம் இருக்கா?" 

"நீங்க எல்லோரும் கொஞ்சம் வெளியே போங்க, நான் அந்த ஆளை வெளியே கொண்டு வாரேன், இன்னொரு சிகிச்சை இருக்கு"

"என்னவேனாலும் சிகிச்சை கொடுங்க, அதுக்கு முன்னாடி திங்க ஏதாவது கொடுங்க" 

அனைவரும் வெளியே சென்றதும்

"விசாரணை முடிஞ்சதும் கோழி பிரியாணி வாங்கி தாரேன், மயிலே மயிலே இறகு போடுன்னா போடாது,அது காலை ஒடிக்கனும்,நானே மனநல மருத்துவர் என் மண்டையையே குடையுற நீ, என்னோட விசாரணையோட உண்மையான முகம் உனக்கு தெரியலை, இப்ப நீ உண்மைய சொல்லலை, உன்னையப் போட்டு தள்ளிட்டு,உனக்கு உள்ளே இருக்கிற பிள ஆட்கள் சண்டை போட்டு உன்னையே கொன்று விட்டதுன்னு உன் கதைய முடிச்சுருவேன், என்னை யாருன்னு நினைச்சே, ஒரு காலத்திலேயே போளி வித்த போலி, உன் பருப்பை என்கிட்டே வித்த, உன்னைய போளிக்கு  தொலி ஆகிடுவேன்"

"இப்ப உங்க உள்ள இருக்கிறது யாரு?"

"ம்ம்.. அமெரிக்க ஜனாதிபதி முனியம்மா"

"முனியம்மாவா?"

"போளி விக்கிறவன் மனநல மருத்துவர் ஆகும் போது முனியம்மா அமெரிக்க ஜனாதிபதியாக முடியாதா"

"அப்படினா நானும் ஒரு உண்மைய சொல்லுறேன், நான் மன நோயாளி இல்லை, உன்கிட்ட இருக்கிற போளி வித்த போலிய வெளியே கொண்டு வர கடமைப்பட்ட இந்திய உளவுத்துறை அதிகாரி, நாங்க உங்களை கைது செய்யுறோம்"

"என்னடா சொல்லுற"

மற்ற அதிகாரிகள் வர

"அவரு உண்மையத்தான் சொல்லுறாரு, நீங்க ஒரு போலின்னு உங்க வாயாலே சொல்ல நாங்க போட்ட நாடகம், எல்லோரும் நடிச்சோம், ஆனா நீங்க நடிக்கவே இல்ல, வாங்க சிறையிலே போளி சாப்பிடலாம்" 

"யோவ் .. கோடி .. கோடியா அடிக்கிறவங்களைஎல்லாம் விட்டுட்டு என்னையமாதிரி அஞ்சுக்கும், பத்துக்கும் சிங்கு அடிக்கிறவங்களை நொங்குறீங்களே  ஏன்?" 

"நோகாம நொங்கு திங்கத்தான், இப்ப நீங்க குற்றவாளி, அதனாலே சிறைக்கு ஒரு வாளிய எடுத்துகிட்டு போங்க"

அடுத்த நாள் செய்தி தாள்களிலே "பிரபல மனநல மருத்துவர் ஒரு போளி வியாபாரி" என்ற தலைப்பிலே சுவாரஸ்ய தகவல்களுடன் ....


37 கருத்துக்கள்:

Chitra said...

"யோவ் .. கோடி .. கோடியா அடிக்கிறவங்களைஎல்லாம் விட்டுட்டு என்னையமாதிரி அஞ்சுக்கும், பத்துக்கும் சிங்கு அடிக்கிறவங்களை நொங்குறீங்களே ஏன்?"


.....ஏன்? ஏன்? ஏன்? நியாயமான கேள்விதானே! :-)

சே.குமார் said...

Sirikka vaiththalum kadaisiyil niyayamana kelvithaan kettu irukkinnga...

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

சிரிக்கவும் வெச்சு, சிந்திக்கவும் வெச்சுப்புடீங்களே அப்பு...........ரொம்ப.......நல்லவீங்க.....நீங்க.

வானம்பாடிகள் said...

நாசமாப் போச்சு. ஸ்பிளிட் பெர்ஸனாலிடிக்கு மொழி பெயர்ப்பு பிள மனிதனா:)). தமிழ் இனி மெல்ல இல்ல தற்கொலை பண்ணிக்கிட்டு சாவும்.

raja said...

// போளி விக்கிறவன் மனநல மருத்துவர் ஆகும் போது முனியம்மா அமெரிக்க ஜனாதிபதியாக முடியாதா// :-)

//ஸ்பிளிட் பெர்ஸனாலிடிக்கு மொழி பெயர்ப்பு பிள மனிதனா?//

பாலாண்ணா, நன்றி!

பிளவு பட்டவனாகவே போக தெரிஞ்சேன். :-)

பா.ராஜாராம் said...

// போளி விக்கிறவன் மனநல மருத்துவர் ஆகும் போது முனியம்மா அமெரிக்க ஜனாதிபதியாக முடியாதா// :-)

//ஸ்பிளிட் பெர்ஸனாலிடிக்கு மொழி பெயர்ப்பு பிள மனிதனா?//

பாலாண்ணா, நன்றி!

பிளவு பட்டவனாகவே போக தெரிஞ்சேன். :-)

பா.ராஜாராம் said...

இந்த 'ராஜா' போட்ட கமென்டை எப்படி அழிக்கிறது நசரு?

பிள'க்க வச்சுப்புட்டீகளேப்பூ...:-)

ஹேமா said...

நசர்...அவரே மனநல வைத்தியர்தானே.அவர் சொல்லி என்னத்தை கேக்கப்போறாங்க நோயாளிகள்.பாவம் விட்டிருக்கலாம்.எத்தனை அநியாயம் செய்துகிட்டு இருக்காங்க அரசியல்ல !

Gopi Ramamoorthy said...

:-)

சந்தான சங்கர் said...

உங்கள் கற்பனை
நகைச்சுவை கலந்த
மொக்கையாய்
இருந்தாலும்,

ரசிக்க வைத்திருப்பது
ரசனை...

அறிமுக நண்பன்


சந்தான சங்கர்.

வானம்பாடிகள் said...

பா.ரா. சூப்பர்ப்:))

RAMYA said...

//
"அப்ப எனக்கு எத்தனை வயசுன்னு தெரியலை, இப்ப எனக்கு எத்தனை வயசுன்னு தெரியலை, ஆனா ஏழு கழுதை வயசாகி இருக்கும்னு நினைக்கிறேன்,
//

ம்ம்ம்.. இன்னமும் இது கூட தெரியலையாக்கும். ஒரு கழுதையோட வயசு சுமாராக எட்டு இருக்குமா? எல்லாம் ஒரு யூகம்தான், அப்போ உங்களுக்கு 7 x 8 = 56இக்கி இக்க்கி....

RAMYA said...

//
"உன்னோட நிலையிலே இருக்கிறவங்க, ஐஞ்சு வயசிலே அம்பது வயசு ஆள் மாதிரி இன்னொரு ஆள் உள்ளே இருந்து உள்குத்து வேலை செய்வாரு"
//

ஐயோ! அப்போ அது நீங்க இல்லையா:-)

RAMYA said...

//
"ஏன் நீ அவன்கிட்ட கடன் வாங்கி கஞ்சா குடிக்கப் போறியா, அறிவு அதிகமா இருக்கிறவங்க எல்லாம் கஞ்சா குடிப்பாங்கன்னா,மருத்துவப் படிப்புக்கு தான் அதிக மதிப்பெண்ணும் அறிவும் தேவைப்படுது(?), அப்ப நீங்க எல்லாம் கஞ்சா குடிக்கிறவங்களா?"
//

நல்ல கேள்வி... நேர்மையான உங்களோட இந்த சந்தேகம் எங்களுக்கு ரொம்ப புடிச்சிருக்கு...

RAMYA said...

//
"உங்களுக்கு எப்பவாது உங்களுக்குள்ளே, வேற யாரும் இருக்கிற மாதிரி உணர்ந்து இருக்கீங்களா?"
//

எப்பாவாவது என்ன? எப்பவுமே அப்படிதான் தோணுது!!

RAMYA said...

//
"உங்களுக்கு எப்பவாது உங்களுக்குள்ளே, வேற யாரும் இருக்கிற மாதிரி உணர்ந்து இருக்கீங்களா?"
//

எப்பாவாவது என்ன? எப்பவுமே அப்படிதான் தோணுது!!

RAMYA said...

//
"அப்ப உங்க கிட்ட எதோ ஒரு சக்தி இருக்கு"
//

இந்த நேர்மைக்கு ஒரு சபாஷ்!!!

RAMYA said...

//
"வி காட் ஹிம், ஹி இஸ் ஹியர்.. ஆபீசர்ஸ் யு மைட் வான்ட் டு செக் திஸ்"
//

ம்ம்ம்... அப்புறம் என்னாச்சு???

RAMYA said...

//பிள மனிதனின் வரவு//

ஐயோ பயந்து வருது :-(

RAMYA said...

//
"யோவ் .. கோடி .. கோடியா அடிக்கிறவங்களைஎல்லாம் விட்டுட்டு என்னையமாதிரி அஞ்சுக்கும், பத்துக்கும் சிங்கு அடிக்கிறவங்களை நொங்குறீங்களே ஏன்?"
//

அது அப்படித்தான் நொங்குவோம்...:-_

RAMYA said...

//
அடுத்த நாள் செய்தி தாள்களிலே "பிரபல மனநல மருத்துவர் ஒரு போளி வியாபாரி" என்ற தலைப்பிலே சுவாரஸ்ய தகவல்களுடன் ....
//

எங்கே எங்கே எங்கே போளி :)

போளி எனக்கு இல்லையா???

ஜோதிஜி said...

பக்கவாட்டில் பழைய இடுகைகள் தெரியும் அளவிற்கு உருவாக்கவும்.

இது என் கட்டளை.

நசரேயன் said...

//பக்கவாட்டில் பழைய இடுகைகள் தெரியும் அளவிற்கு உருவாக்கவும்.

இது என் கட்டளை.//

அண்ணே இடது பக்கம் கிழே வச்சிருந்தேன் .. இப்ப எடுத்து மேல வச்சிட்டேன் ..

பழமைபேசி said...

சிறையில போளி அல்லாம் போடுறாவுளா? வாங்க அப்ப சிறைக்கே போகுலாம்...

பழமைபேசி said...

தமிழ்மணத்துக்கு என்னய்யா வசியம் வெச்சீரு... இரட்டையாக் காண்பிக்குது உமக்கு மட்டும்?

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

எப்பிடிங்க நசரு இப்பிடியெல்லாம் :))))))))

பிள மனித தாக்கம் :)))

அதுவும் கடைசியில சஸ்பென்ஸ் வேற :)))))

நல்லா டைமிங்கா அடிக்கிறீங்க..

இராஜராஜேஸ்வரி said...

interesting.

தேனம்மை லெக்ஷ்மணன் said...

"யோவ் .. கோடி .. கோடியா அடிக்கிறவங்களைஎல்லாம் விட்டுட்டு என்னையமாதிரி அஞ்சுக்கும், பத்துக்கும் சிங்கு அடிக்கிறவங்களை நொங்குறீங்களே ஏன்?"


// சரிதான்..

அப்பாவி தங்கமணி said...

//அஞ்சு வயசிலே அஞ்சுவைப் பார்த்தேன்//
ஆறு வயசுல ஆருவை பாக்கலையா..:)


//அதுக்கு அப்புறம் அவளை பார்க்கவே முடியலை//
ஏன்னா அதுக்கப்புறம் அஞ்சுவுக்கு விவரம் புரிஞ்சு அலெர்ட் ஆய்ட்டா...:)


//பேய் எல்லாம் உன்னையப்பார்த்து பத்து மீட்டர் விலகியே நிக்குன்னு//
பேயே பயப்படுமா...ஒகே... எல்லாரும் எஸ்கேப்...:))

Gopi Ramamoorthy said...

தொடர்ப்பதிவிட அழைத்துள்ளேன்

http://ramamoorthygopi.blogspot.com/2011/03/blog-post_06.html

Part Time Jobs said...

No 1 Free Indian Classified Site உங்களது பதிவுகள் அனைத்தும் படிக்க சுவராஷ்யமாய் இருக்கின்றன... என் பக்கம் பார்க்க Free Classified New Website . Just Post Your Post Get Free Traffic ....http://www.classiindia.com ... நீங்களும் படித்திட்டு சொல்லுங்கள் www.classiindia.com ... உங்கள் பதிவுகளுக்காக காத்திருக்கிறேன் ... :)
நன்றி

Anonymous said...

எதார்த்தத்தை அப்பட்டமாக எடுத்துரைக்கும் உங்கள் இடுகைகள் நீண்ட காலமாக பதிவிடப்பட வில்லையே! தொடருங்கள்.

Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...

:-))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//"இப்ப உங்க உள்ள இருக்கிறது யாரு?"

"ம்ம்.. அமெரிக்க ஜனாதிபதி முனியம்மா"///


...ஹா ஹா ஹா... ரசிச்சு எழுதி இருக்கீங்க..! :-))

பனிமலர் said...

பாவம் சங்கர் படம் அதிகமா பார்த்து கொட்டு போயிட்டீங்க போல இருக்கு. இப்படியே போன பிறகு இந்தியன் தாத்தா வந்து குத்துகிறா மாதிரி அடுத்த இடுக்கை எழுதுவீங்க போல.....வாழ்த்துக்கள்.

ராஜ நடராஜன் said...

சூடா வடை கிடைக்குமா

மாலதி said...

எதார்த்தத்தை அப்பட்டமாக எடுத்துரைக்கும் உங்கள் இடுகைகள் நீண்ட காலமாக பதிவிடப்பட வில்லையே! தொடருங்கள்.