Tuesday, February 15, 2011

துரைமார்கள் பெயர்களும், தன் மானத்தமிழனும்

அதாகப்பட்டதாவது போன வரம் தீன்/டீன் ஒரு இடுகையைப் போட்டு, அயல் நாடுகளிலே வாழும் தமிழர்கள் தங்கள் பெயரை வெள்ளைக்கார துரைமார்கள் உச்சரிக்க முடியாம, ராப்பகலா தூக்கம் இல்லாம கஷ்டப்பட்டு, துக்கம் தொண்டைய அடைச்சதாலே, போராட்டம்,கலவரம் மற்றும் உண்ணாவிரதம் எதுவுமே இல்லாம தானாகவே முன் வந்து அவர்களின் கவலையைப் போக்க தங்களோட பெயர்களை அவங்க வாயிலே நுழையுற மாதிரி குப்புசாமி-குப்ஸ், சந்தியா-சாண்டி, ஜெயராமன்-ஜே இப்படி சுருக்கி துரைமார்கள் வாயிலே நெல்லை இருட்டுக்கடை அல்வா போல நுழையும் படியா மாத்தி வச்சிக்குறாங்க(?), ஆனா இந்தமாதிரி தன்மானத்தமிழர்கள் மட்டுமே பெயரை மாற்றி கொள்கிறார்களா என்றால் கண்டிப்பாக இல்லை.

மனவாடும், வடக்கூர்காரங்களும் தங்கள் பெயர்களை இதே காரணத்துக்காக மாற்றி வைத்து கொள்கிறார்கள்,கிரிக்கெட் தவிர  இந்த விசயத்திலும்  இந்தியர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்பதிலே எனக்கு ஐயம் இருப்பதாக தெரியவில்லை .என் ௬ட வேலை பார்த்த அனப்பத்துல்லா என்ற மனவாடு அனப்ஸ் பேரை மாத்தி வச்சிகிட்டாரு, நான் அனபத்துல்லான்னு சொன்னாலே அவருக்கு கொலைவெறி கோபம்
வரும். யோவ் துரை மார்களுத்தான் உன் பேரை சொல்லமுடியாது, எனக்குமா முடியாது? ன்னு சொன்னவரிடம், பெயர் மரியாதை தெரியாத பக்கியா இருக்கியேன்னு தத்துவமா பேசிட்டு போனாரு,ஒரு நாள்  அவருக்கிட்ட சிக்காகோ போறேன்னு சொன்னேன், அவரு
அதுக்கு சிக்காகோ இல்ல சிகாகோனு சொன்னாரு, இவருக்கு துரைமாரே தேவலாம் போலன்னு நினைத்துகொண்டு பயணத்தை ரத்து பண்ணிட்டு தண்ணியப் போட்டு அவருக்கு நல்லா தண்ணி காட்டினேன், மனுஷன் அதுக்கு அப்புறமா, நான் என்ன சொன்னாலும் மறுத்தே பேச மாட்டாரு.

நம்ம பெயர்களைத்தான் துரைமார்களாலே உச்சரிக்க முடியாம ரெம்ப கஷ்டப் படுறாங்க, ஆனா யாரவது ஒருத்தர் துரைமார்கள் பேரை சரியா உச்சரிக்க முடியலைன்னு புகாரோ இல்ல அனுபவ குறிப்போ எழுதி இருக்கிற மாதிரி தெரியலை,படி அளக்கிற பகவான் கோவிச்சிக்குவாருன்னு வெளியே சொல்லாம இருக்கமா இல்ல, அயல் நாடு வந்து ஆணி பிடிங்கிட்டு இங்கிலிபிசு தெரியலைன்னு அடுத்தவங்க தப்பா நினைப்பாங்கன்னு தன்மானத்தை காக்க, வெள்ளையம்மா, வெள்ளையப்பன் பெயர்களை எல்லாம் கரைத்து குடித்தது போல நடிக்க வேண்டிய இருக்கு(?).

நானும் ஊரை விட்டு விமானம் ஏறும் முன்னே, அலுவலகத்திலே பல நூறு தடவை
சொல்லி அனுப்பினார்கள். நீ வேலைய ஒழுங்கா செய்யுறியோ இல்லையோ, ஆனா துரைமார்களுக்கு எந்த விதமான கண்ணிய குறைச்சல் வரும் படியா நடக்கக்௬டாது.
நானும் நல்லா கோயில் மாடு மாதிரி தலைய ஆட்டிட்டு வந்தேன், வந்த முதல் நாளே அறிமுகப் படலம் எல்லாம் முடிந்து, செய்ய வேண்டிய வேலையைப் பத்தி சொல்லி கிட்டு இருந்தாரு, ஒண்ணுமே புரியலைனாலும், புரிஞ்ச மாதிரியே நடிச்சேன். ரெம்ப அறிவாளியா இருக்கான்னு நினைச்சிகிட்டு, முடிஞ்ச உடனே எனக்கு மின் அஞ்சல் அனுப்புறேன்னு சொல்லிட்டு போனாரு, அவரு மின் அஞ்சல் அனுப்பியதிலே ஒண்ணுமே இல்லை, கேட்டு தெரிஞ்சிக்கலாமுன்னு அவரு அறைக்கு போயிட்டு ஜுஅன் (Juan), ஒரு சந்தேகம்னு கேட்டேன்.

"அவரு யாரு ஜுஅன்?"

"நீங்கதான்?"

"என் பேரு யுவன்.. என்னய்யா பேரை ௬ட சரியா சொல்ல தெரியலையே"

உங்க ஊரிலே ஜெ வை அமுக்கி வாசிக்கனுமுன்னே எனக்கு சொல்லி தரலைன்னு மனசிலே நினைச்சாலும், மன்னிச்சுருங்கன்னு முப்பது தடவை சொல்லிட்டேன். அவரு பேரை நூறு தடவை சொல்லி ஏத்தி வச்சிகிட்டேன்.கொஞ்ச நாள்ல வேலையிலே உலக திறமைய காட்டி (நம்புங்க) கொடி பிடிச்சிகிட்டு இருந்தேன்.எனது திட்ட அணியிலே இருந்தது எல்லாம் உடைஞ்சி போன ரஷ்யாவிலே இருந்து,என்னைய மாதிரி பஞ்சம் பிழைக்க வந்த பெருசுகள்.இவங்ககிட்ட வேலை பார்ப்பதிலே ரெம்ப வசதியான விஷயம், இவங்க பேசுற ஆங்கிலத்தை விட நான் நூறு மடங்கு நல்லாப் பேசுவேன்.அதனாலே நான் இவங்ககிட்ட எப்படி தப்பா பேசினாலும், சரியாப் புரிஞ்சுக்குவாங்க.

 ஒரு நாள் அணியிலே வேலை செய்த ஒருத்தர் பெயரை டோமொர்ட்ரின்னு சொல்லி ௬ப்பிட்டேன்,கேட்டவங்க எல்லாம் என்னைய எப்படியே பார்த்தாங்க, நானும் ரெம்ப அழகா பேரை உச்சரிக்கிறேன்னு நினைச்சி கொஞ்சம் சத்தமாவே ௬ப்பிட்டேன், நான் ௬ப்பிட்டவர்

"எங்க ஐயா எனக்கு ஆசையா வச்ச பேரை இப்படி கொலை பண்ணுறியே?"

வழக்கம் போல தப்பத்தான் சொல்லிட்டேன்னா, அவர்ட்டயும் ஒரு மன்னிப்பு கேட்டு வச்சேன்.அவரு டிமிட்ரியாம், அப்புறமா அதையும் ஏத்தி வச்சேன், ரஷ்ய துரைமார்கள் பெயரின் கடைசி பேரை எல்லாம் படிக்கவே மாட்டேன், அதுக்கு பதிலா நான் நாலு அடி ௬ட வாங்கிக்குவேன். சீனா சப்ப மூக்கன் பெயர்களும் அப்படித்தான், வாயிலே
நுழையாது.சி சான், சூன் சூன்னு பேரு இருக்கும்.

துரைமார்களுக்கு ஏகப்பட்ட சுருக்கப்பெயர்கள் இருக்கும், ராபர்ட்னு இருக்கிறதை பாப் மாத்தி வச்சுக்குவாங்க, இவங்க பெயரை மட்டுமில்லாம, தாத்தா, பாட்டி, வளர்ப்பு தாய், வளர்ப்பு தந்தை வைத்த சொல்லப்பெயரை எல்லாம் தெரிஞ்சிக்க வேண்டிய இருக்கு, காரணம் துரைமார்கள் எல்லாம் ஓடுற குதிரையா இருக்காங்க,நாமும் வளைந்து நெளிந்து அவங்க போக்குக்கு தண்ணி காட்ட வேண்டிய இருக்கு. இப்ப எல்லாம் ஒருத்தர் பெயரை பார்த்தாலே அவரு செல்லப்பெயர் என்னவா இருக்கும், அவரை நண்பர்கள் எப்படி ௬ப்பிடுவாங்க,முன்னாள் காதலி எப்படி ௬ப்பிட்டு இருப்பாங்க, இந்நாள் காதலி எப்படி ௬ப்பிடுவாங்க என்ற வரலாற்று புள்ளி விவரங்களும் கணனியே இல்லாம மண்டைக்குள்ளே எறிடுது.


32 கருத்துக்கள்:

பழமைபேசி said...

ஆமாமா

வருண் said...

***அதுக்கு பதிலா நான் நாலு அடி ௬ட வாங்கிக்குவேன்.***

அது ஏன் நாலு? ரொம்ப கம்மியா இருக்கே! :)

***சீனா சப்ப மூக்கன் பெயர்களும் அப்படித்தான், வாயிலே
நுழையாது.சி சான், சூன் சூன்னு பேரு இருக்கும்.***

நம்ம பேரெல்லாம் அவங்களுக்கு ஈஸியா நொழையுதாக்கும்?

ந்ல்லவேள சைனக்காரங்களுக்கு தமிழ் தெரியாது!

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

:))))) நல்லாவே சிரிக்க வைக்கிறீங்க!

Robin said...

//நான் இவங்ககிட்ட எப்படி தப்பா பேசினாலும், சரியாப் புரிஞ்சுக்குவாங்க.// :)

பொன் மாலை பொழுது said...

நல்ல நையாண்டியான ஒன்று.
:)))

Unknown said...

ஹி..ஹி..

சாந்தி மாரியப்பன் said...

உங்க பேரை எப்படி சுருக்கி வெச்சிருக்கீங்க :-))))))

ஓலை said...

தளபதி! மனசுவிட்டு சிரிச்சேன். தூள் கிளப்பிட்டீங்க.

துளசி கோபால் said...

அப்ப...துரைமாரு பேரை வச்சுருக்கும் 'அசல்'தமிழர்களை ( எதுக்கும் ப்ளூரலாவே இருக்கட்டும்! ) எப்படிக் கூப்புடணுமுன்னு சொல்லித் தரலாமுல்லே?

ராஜ நடராஜன் said...

நசரு!எங்க பேட்டைப் பக்கம் ஆளவே காணோம்:)

இப்படியாவது வாங்க!

ராஜ நடராஜன் said...

//ஆமாமா//

ம்ம்ம் குறுகி இப்ப ம் ல வந்து நிக்குது.
இதுவும் குறுகிடப்போவுது:)

ராஜ நடராஜன் said...

//எனது திட்ட அணியிலே இருந்தது எல்லாம் உடைஞ்சி போன ரஷ்யாவிலே இருந்து,என்னைய மாதிரி பஞ்சம் பிழைக்க வந்த பெருசுகள்.இவங்ககிட்ட வேலை பார்ப்பதிலே ரெம்ப வசதியான விஷயம், இவங்க பேசுற ஆங்கிலத்தை விட நான் நூறு மடங்கு நல்லாப் பேசுவேன்.அதனாலே நான் இவங்ககிட்ட எப்படி தப்பா பேசினாலும், சரியாப் புரிஞ்சுக்குவாங்க.//

ம்ம்ம்:)

ILA (a) இளா said...

துரைமார்ங்க சரி.. எங்கே இருக்கான் இப்போ ‘தன்மானம்’ உள்ள தமிழன்?

vasu balaji said...

ம்கும். இங்க மட்டும் கோவிந்தசாமிய கோஞ்சாமி, பிரபாகர பிரவு, ராமசாமியை ராம்ஸாமேன்னு கூப்டலையா? :))

அமுதா கிருஷ்ணா said...

பாவம் அந்த ரஷ்ய துரைமார்களும், வெள்ளையர்களும்.உங்கக்கிட்ட மாட்டிக்கிட்டு..

T.V.ராதாகிருஷ்ணன் said...

:)))

Chitra said...

இது என்ன கலாட்டா?

R. Gopi said...

எனக்கு இது ஒரு பெரிய விஷயமாகப் படவில்லை.

எனக்கு Steven = Steve
Wilson=Wil
Leandro = Leo
Theologis=Theo
Fredrik=Fred
Margaret=Maggie
Griselda=GeeGee
Lawrence=Larry

இன்னும் நீளும் லிஸ்ட் இது. நானே வைத்துக் கூப்பிடும் செல்லப் பெயர்கள் இவை. அவர்களும் தவறாக எடுத்துக் கொண்டது கிடையாது.

இனியா said...

Good one nasar...

Unknown said...

:-))

பா.ராஜாராம் said...

:-))

முன்னாடி ராஜா-ன்னு ஒருத்தர் சிரிச்சிருக்கார் பாருங்க நசர். நாந்தேன் அதுவும். சுருக்கி சிரிச்சு பார்த்தேன். ரெண்டு சிரிப்பும் ஒரே மாதிரி தெரிஞ்சா அது என் குறை இல்லை. (பேர் மட்டும்தான் சுருங்கும் போல)

--நீதி அரசன் நாட் நாட் 7. :-)

ஜோதிஜி said...

வர வர உங்க எழுத்தை படிக்க படிக்க உங்களை லவ் பண்ணலாமேன்னு தோனுது. இது என்ன வியாதிங்க.

ராஜ நடராஜன் said...

நசரு!மறுபடியும் ஒருமுறை வந்து சிரிச்சிட்டுப் போறேன்:))))

குடுகுடுப்பை said...

ஜோதிஜி
வர வர உங்க எழுத்தை படிக்க படிக்க உங்களை லவ் பண்ணலாமேன்னு தோனுது. இது என்ன வியாதிங்க.
//
நசரேயன் கவனத்திற்கு
ஜோதிஜி முண்டாசு கட்டிய ஆண், துண்டு அனுப்பினால் தலையில் கட்டிக்கொள்வார்.அவசரத்தில் துண்டு அனுப்புமுன் இந்தப்பின்னூட்டத்தை படித்துவிடவும்

ஹேமா said...

நசர்...உங்க பேரை இதைவிட சுருக்கிக் கூப்பிடல்லாமான்னு யோசிக்கிறேன் !

sriram said...

நல்லவரு நசரு..
வில்லியம்ஸ் பில் ஆகுறதும், நிக்கோலஸ் நிக் ஆகுறதும் கூட பொறுத்துக்கலாம், நிகில் நிக் ஆகுறதும் அதை விட பத்மா Paddy ஆகுறதும் ரொம்பக் கொடுமைங்க..

என்னை 10 வருஷமா ஸ்ரீன்னு தான் கூப்பிடறாங்க தில்லியிலிருந்து பாஸ்டன் வரை(ஷார்ட்டா கூப்பிடறாங்களாமாம்)
வீட்டம்மாவுக்கும் பேரு ஸ்ரீ யில ஆரம்பிக்குதா, அவங்களையும் அவங்க ஆபிஸ்ல ஸ்ரீன்னு தான் கூப்பிடுவாங்க, பலபேரு எங்களைக் கேப்பானுங்க - அதெப்படி இருபாலாருக்கும் ஒரே பேருன்னு - அப்போ என்னோட பதில் - க்ரிஸ்டோஃபர், க்ரிஸ்டினா எப்படியோ அப்படித்தான் எங்க பேரும் என்று சொல்வேன்.

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Pranavam Ravikumar said...

Nice :-))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:))

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//உங்க ஊரிலே ஜெ வை அமுக்கி வாசிக்கனுமுன்னே எனக்கு சொல்லி தரலைன்னு மனசிலே நினைச்சாலும்//
"J" silent னு இப்படி தான் சொல்லனுமா... ச்சே சூப்பர்ங்க.... நீங்க ஏன் என்னை போன்ற ஞானசூனியங்களுக்காக "முப்பது நாளில் மூநூறு தமிழ் வார்த்தை"னு ஒரு புக் எழுதக்கூடாது...:)

//இவங்க பேசுற ஆங்கிலத்தை விட நான் நூறு மடங்கு நல்லாப் பேசுவேன்//
ஹி ஹி ஹி... சீக்ரட் சீக்ரட்டாதான் இருக்கணும்...:)

// டோமொர்ட்ரி//
சூப்பர்...:)

//ரஷ்ய துரைமார்கள் பெயரின் கடைசி பேரை எல்லாம் படிக்கவே மாட்டேன், அதுக்கு பதிலா நான் நாலு அடி ௬ட வாங்கிக்குவேன்//
நூத்துல ஒரு வார்த்தை... ஸ்ஸ்ஸ்பப்பா...

dondu(#11168674346665545885) said...

//நம்ம பெயர்களைத்தான் துரைமார்களாலே உச்சரிக்க முடியாம ரெம்ப கஷ்டப் படுறாங்க, ஆனா யாரவது ஒருத்தர் துரைமார்கள் பேரை சரியா உச்சரிக்க முடியலைன்னு புகாரோ இல்ல அனுபவ குறிப்போ எழுதி இருக்கிற மாதிரி தெரியலை,...//
உங்களுக்கு ஆறுதலாக ஒரு தகவல். சென்னை சிடி செண்டருக்கு அருகில் உள்ள ஒரு பாலத்துக்கு ஹாமில்டன் பிரிட்ஜ் என்ற பெயர் வைக்க, உள்ளூர்காரர்கள் வாயில் அது அம்பட்டன் வாராவதியாக உருவெடுத்தது. பிறகு அது barber's bridge --> BB என்றெல்லாம் மொழி பெயர்க்கப்பட்டு உருமாறியது.

இப்போ அதுக்கு பெயர் அம்பேத்கர் பாலம் என வைத்துள்ளனர். இது எப்படி இருக்கு?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Unknown said...

ஹி ஹி ஹி...

tamilan said...

அன்புடையீர்,
தங்கள் பதிவிற்கு தொடர்பில்லாத மறுமொழி என்று தயவு செய்து இதை நீக்கிவிடாதீர்கள்.

யாவரும் அவசியம் பார்க்க வேண்டிய விடியோக்கள் அடங்கியது. சுட்டியை சொடுக்கி படிக்கவும்.

===>இந்துக்களே! விழிமின்! எழுமின்! 7. காம சூத்திரம். தேவதாசி. நிர்வாண சாமியார்கள். பிணந்திண்ணி சாமியார்கள். புனித கங்கையில் காலைக்கூட நனைக்க மனம் வரவில்லை. <===

.