Sunday, January 9, 2011

கிரிக்கெட்டும் சமுதாய சீர்கேடும்

பொறுப்பு அறிவித்தல் ஒன்று : தலைப்பிலே தான் காரம் அதிகமா இருக்கு, இடுகையிலே காரம் குறைவாத்தான் போட்டு இருக்கேன், படிச்சி முடிச்ச உடனே உப்பு சப்பு இல்லைன்னு தோணலாம்.

பொறுப்பு அறிவித்தல் ரெண்டு : நீங்க கொலைவெறி கிரிக்கெட் ரசிகரா இந்த இடுகைய தவிப்பது நலம்.

பொறுப்பு அறிவித்தல் மூன்று: இந்தியாவின் இறையாண்மை மற்றும்  பொறைஆண்மை அதுக்கு சட்னி சாம்பார் எல்லாம் கிரிக்கெட் விளையாட்டிலே தான் இருக்கிறது என்று
நினைப்பவர்களாக இருந்தாலும், இந்த இடுகையை தவிப்பது நலம்.

பொறுப்பை பொறுப்பா அறிவிப்போர் சங்கத்திலே உறுப்பினரா இருப்பதினாலே, இவ்வளவு  பொறுப்பா பொறுப்பை அறிவித்திருக்கிறேன்.சமுக சீர்திருத்த கருத்துக்களை தெரிவித்து முற்ப்போக்கு, பிற்ப்போக்கு எழுத்தாளர் வரிசைப் பட்டியலிலே முதல் வரிசைக்கு வர முயற்சி எடுக்கலை என்பதை தாழ்மையோடு தெரிவித்துக்கொண்டு இடுகைக்கு கடந்து செல்லலாம்.

அதகப்பட்டதாவது பல வருசங்களுக்கு முன்னாலே ஊரிலே ரப்பர் பந்தையும், களி மட்டையை எடுத்துக்கொண்டு ஊருக்கு ஒதுக்கு புறமா பீடி குடிக்க ஒதுங்கும் போது தான்  கிரிக்கெட் எனக்கு பரிச்சயமானது.களி மட்டையிலே இருந்து கிரிக்கெட் மட்டை வாங்க போய் மட்டையாகிட்டு வந்த நாள்முதலிலே இருந்து இன்றைய வரைக்கும் கிரிக்கெட் ரத்தத்திலே கலந்து விட்டது.இந்த அளவுக்கு கிரிக்கெட் பைத்தியம் ஆகிபோவேன்னு நினைக்கவே இல்லை.

ஆரம்பத்திலே நான் ஆடுற ஆட்டத்திலே கவனம் இருந்தாலும், தொலைகாட்சிகளின் அறிமுகத்துக்கு பின்னால் அடுத்தவங்க ஆடுற ஆட்டத்திலே கவனம் செலுத்த ஆரம்பித்தேன், கொஞ்ச நாளிலே கிரிக்கெட் ஆட்டம் தொலைகாட்சியிலே பார்க்கவில்லை என்றால் சீக்கு வந்த கோழி மாதிரி மனசு சுருண்டு படுத்துக்குவேன்.சோறு தண்ணி இல்லாம பத்து நாள் வேணா பட்டினி கிடப்பேன், ஆனா கிரிக்கெட் பார்க்கமா ஒரு நிமிஷம் ௬ட இருக்க முடியாது.

கிரிக்கெட் ஆட்டம் பார்க்க ஆரம்பித்து விட்டால், உலகத்திலே உள்ள எல்லா மூட நம்பிக்கைகளையும் கடை பிடிப்பேன், அதாவது இந்தியாவுக்கு எதிரா ஆடும் அணிக்கு விக்கெட் விலலைனா ஒத்தை கண்ணிலே பார்க்கிறது, தொலைக்காட்சி பெட்டிக்கு  பின்னாடி முதுகை வச்சி பார்க்கிறது. முத ஓவர் கன்னி ஓவர்(கிரிக்கெட் கண்டுபிடிச்சவன்  ஆணாதிக்கவாதியோ?)  ஆகிட்டா எதிரணிக்கு விக்கெட்டே விழாது, டவுசரை போட்டுக்கிட்டு ஒத்தை காலிலே நின்னு பீடி குடிக்கிறது, இப்படி பல வேலைகளை ரெட்டையா செய்யாமா ஒத்தையா செய்வேன். இப்படி 999 விதமான மூட நம்பிக்கை பட்டியல்களை வைத்து இருந்தேன்.ஆட்டம் நடக்கும் போது ஊரிலே தீ மிதிப்பு நடந்தா, அங்கேயும் போய் பூக்குழி இறங்கி இருப்பேன். நல்லவேளை இதுநாள் வரைக்கும் அப்படி நடக்கலை.

உலகத்திலே உள்ள அனைத்து கிரிக்கெட் அணி வீரர்களின் பெயரை மட்டுமல்லாம, அவங்களோட முத சம்சாரம், ரெண்டாவது சம்சாரம்,நடப்பிலே யாரை வச்சி இருக்கா போன்ற கிசு கிசு தகவல்களையும் சேகரித்து வைத்து இருந்தேன். இந்த அர்பணிப்பை படிப்பிலே காட்டி இருந்தால் இன்று நானும் ஒரு விஞ்ஞானியாகி இந்தியாவிலே சம்பளம் குறைவாக கிடைகிறது என்று நாசாவிலே சேர்ந்து தாய் நாட்டுக்கும், மண்ணுக்கும் பெருமை சேர்த்து இருப்பேன்.

கிரிக்கெட் ஆட்டங்களைப் பார்ப்பதோடு மட்டுமில்லாமால், ஆட்டம் முடிஞ்ச உடனே, அதைபத்தி சிலாகித்து போற வாரவங்களிடம் பேசிக்கொண்டு இருப்பேன், ஆக வாழ்கையிலே நான் என்னையப் பத்தி பேசினதை விட கிரிக்கெட் பத்திதான் நிறைய பேசி இருக்கேன். அந்த ஆட்டத்திலே அவர் அப்படி அடித்து இருக்கவேண்டும். இவருக்கு முன்னால் அவரை களத்திலே இறக்கி விட்டு இருக்க வேண்டும் என்று விமர்சனம் சொல்லுவேன். இந்தியாவிலே இருந்து கிரிக்கெட் விளையாட்டுக்கு கோச் வேலைக்கு ஆள் எடுத்தால் குறைந்த பட்சம் ஒரு 50 கோடி பேரு தயாரா இருப்பாங்க.

ஆட்டம் நடக்கும் போது மின்சாரம் தடைபட்டுவிட்டால், திட்டு மழையாய்ப் பொழியும், இருந்தாலும் அடுத்த வினாடியே பல தொல்லை பேசிகளை அழைத்து நடப்பு ஓட்டம் விவரம் சேகரிப்பேன்.ஆட்டத்திலே இந்தியா ஜெயித்தா வாய் பூராம் பல்லா இருக்கும், தோத்திட்டா பாகிஸ்தான் ௬ட சண்டை போட்டு தோத்த மாதிரி பல் போன கிழவன் போல சோகம் ஆகிடுவேன். கிரிக்கெட் ஆட்டத்திலே இந்தியா தோல்வி அடைந்து விட்டது என்றால், அதற்கு அப்புறமா எந்த நிலையிலே இருந்து முந்திய ஆட்டம் பார்த்தேனோ, அந்த நிலைக்கு மறுபடி போகவே மாட்டேன், வெற்றி அடைந்தால்  அதே நிலையிலே இருந்து பார்ப்பேன் அடுத்து இந்தியா தோல்வி அடையும் வரை.

இப்படி கொலைவெறியா கிரிக்கெட் பார்த்து, நான் ஒரு பொறுப்பான இந்திய பிரஜை என்று நிருபித்து கொண்டு இருந்த காலத்திலே தான், நடக்கிற போட்டியின் முடிவை முன் ௬ட்டியே ஒரு கமிட்டி முடிவு செய்து, அந்த கமிட்டி செயல்பாட்டின் படி ஆட்டத்தின் வெற்றி தோல்விகள் நிச்சக்கப்படுகிறது என்று செய்தி தாள்களிலே அடிப்பட்டது, பக்கத்திலே சமந்தப்பட்ட வீரர்கள் வடக்கூர்காரிகளிடம் பல்லை காட்டிக்கொண்டு இருக்கும் புகைப்படமும் பார்த்தேன், ஆக இவங்க நோகாம நொங்கு திங்கதுக்கு, நான் நொண்டி நொண்டி தொலைகாட்சி பார்த்தது எல்லாம் வீணாப் போச்சேன்னு நினைச்சேன்.

விளையாட்டை விட்டு வெளியே வந்து யோசித்துப் பார்த்தால், இவங்க விளையாட்டுக்குள் நுழையுறதே வடக்கூர் நடிகைகளுக்கு துண்டு போடத்தானா என்ற எண்ணம் வந்தது.மேலும் அதுவும் ஒரு விளையாட்டு, அதை விளையாட்டாத்தான் பார்க்கணும் என்ற என்னோட அறிவுக்கண் திறந்தது. இந்தியாவிலே கிரிக்கெட் மட்டுமா இருக்கிறது, இன்னும் அநேக விளையாட்டுக்கள் இருக்கிறது, அவைகளை  கிரிக்கெட் போதை மறைத்துவிட்டது, செய்தி தாள்களிலும் மற்ற விளையாட்டுக்கள் மாற்றான் தாய் பிள்ளைகள் போல சித்தரிக்கபடுகிறது.இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி என்பதே பலருக்கு ஞாபகம் இருப்பதில்லை.

இரத்தமும் சதையுமா இருந்த நானும் கிரிக்கெட்டும் கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பித்தோம், கிரிக்கெட் பத்தி பேசலைனா வாழ்கையே சூனியமா போய்டுமே என்று நினைத்த காலம் மெல்ல மாற ஆரம்பித்தது.கொஞ்சம் கொஞ்சமாக விட்டு வந்து, முழுவதும் விலகிவிட்டேன்,நான் பார்ப்பதை நிறுத்திவிட்டாலும், கிரிக்கெட் இன்னும்  அழிந்து விடவில்லை, பார்ப்பவர்களும் இன்னும் நின்று விடவில்லை.


16 கருத்துக்கள்:

பழமைபேசி said...

எப்படி இந்த ஞானோதயம்?! அது சரி, நமக்குத் துண்டு போடத் துப்பு இல்லைன்னா, துண்டு போடுறது நின்னா போய்டும்?!

ராமலக்ஷ்மி said...

கல்லூரி வயதில் சுவாரஸ்யம் தந்த விளையாட்டு. விட்டு விலகி வருடம் பல ஆயிற்று:)! நல்ல பகிர்வு.

SUREஷ் (பழனியிலிருந்து) said...

//கிரிக்கெட் ஆட்டம் பார்க்க ஆரம்பித்து விட்டால், உலகத்திலே உள்ள எல்லா மூட நம்பிக்கைகளையும் கடை பிடிப்பேன்,//

:))

அமைதிச்சாரல் said...

//அதுவும் ஒரு விளையாட்டு, அதை விளையாட்டாத்தான் பார்க்கணும் என்ற என்னோட அறிவுக்கண் திறந்தது. இந்தியாவிலே கிரிக்கெட் மட்டுமா இருக்கிறது, இன்னும் அநேக விளையாட்டுக்கள் இருக்கிறது//

இது இன்னும் நிறையப்பேருக்கு புரியறதில்லை..

சே.குமார் said...

//கிரிக்கெட் ஆட்டம் பார்க்க ஆரம்பித்து விட்டால், உலகத்திலே உள்ள எல்லா மூட நம்பிக்கைகளையும் கடை பிடிப்பேன்,//

எல்லா இடத்திலும் இதே கதைதான். சரி நல்ல பதிவு. இதுக்கு எதுக்கு இம்புட்டு காரமா தலைப்பு?

அமுதா கிருஷ்ணா said...

ஃபிக்ஸ் செய்து விளையாடுகிறார்கள் என்ற செய்தி அறிந்ததில் இருந்து நான் இந்த விளையாட்டை கண்டுக்கிறதே இல்லை. அதை வெறி பிடுத்து பார்ப்பவர்களை பார்த்தால் பாவம் என தோன்றும்.

Chitra said...

இரத்தமும் சதையுமா இருந்த நானும் கிரிக்கெட்டும் கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பித்தோம், கிரிக்கெட் பத்தி பேசலைனா வாழ்கையே சூனியமா போய்டுமே என்று நினைத்த காலம் மெல்ல மாற ஆரம்பித்தது.கொஞ்சம் கொஞ்சமாக விட்டு வந்து, முழுவதும் விலகிவிட்டேன்,நான் பார்ப்பதை நிறுத்திவிட்டாலும், கிரிக்கெட் இன்னும் அழிந்து விடவில்லை, பார்ப்பவர்களும் இன்னும் நின்று விடவில்லை.


......தத்துவம் # 10234

ஆ.ஞானசேகரன் said...

ம்ம்ம் நல்ல அலசல்

கிறுக்கன் said...

same pinch...
But I could not come out of it I still love the game.I watch any cricket game doesn't matter who plays...even street cricket I used to watch eagerly...

வானம்பாடிகள் said...

ஏந்தளபதி. இத வச்சி நீங்க வளவளத்தாள வளைச்சி போடப்பார்த்தது அடுத்த இன்னிங்ஸா வருமா?

ஹேமா said...

நசர்...ஞானோதயமா !

ஜோதிஜி said...

அண்ணே ஸ்கோர் என்ன?

காலையிலேயிருந்து ஒரே பரபரன்னு இருக்கு? யாருக்கிட்டே போய் கேட்கிறதுன்னு தெரியல?

அய்யோ நேற்று ராத்திரி தூங்கமா முழுசா பார்த்தேன். சச்சின் சச்சின் தான்.

இப்டியெல்லாம் பேசியிருக்கீகளா?

வருண் said...

கிரிக்கெட்? ரஜினி பாணியில் "நோ காமெண்ட்ஸ்", தள! :)

கே.ஆர்.பி.செந்தில் said...

கிரிகெட்டுல எத்தனை கோல் போடனுன்னு கூட தெரியாத அப்பாவி நான் ....

சி. கருணாகரசு said...

உங்களுக்கு எனதினிய பொங்கல் வாழ்த்துக்கள்.

அப்பாவி தங்கமணி said...

//பொறுப்பை பொறுப்பா அறிவிப்போர் சங்கத்திலே உறுப்பினரா இருப்பதினாலே, இவ்வளவு பொறுப்பா பொறுப்பை அறிவித்திருக்கிறேன்//
ஸ்ஸ்ஸ்ப்பா.... இப்பவே கண்ண கட்டுதே...

//இன்று நானும் ஒரு விஞ்ஞானியாகி//
ஓ... விஞ்ஞானி இல்லையா நீங்க... உங்க எழுத்தை பாத்து அப்படின்னு இல்ல நினைச்சுட்டேன்... (ஒகே கிரிகட் மட்டய எடுக்கறதுக்கு முன்னாடி மீ எஸ்கேப்... )