Thursday, April 2, 2009

எனக்கு வேலை போய்டுச்சு

அலுவலகத்திலே காலையிலே ரெம்ப சுறு சுறுப்பா கடினமா வேலை பார்க்கிற மாதிரி நடித்து கொண்டு ரம்யா ஓசியிலே ஊட்டி போனதை ஏ.சி அறையிலே இருந்து போட்ட பதிவை படித்து கொண்டு இருந்தேன்.


டமேஜர் என்னை அழைத்தார், நான் பதிவை படித்து முடிக்காத நிலையில் அவரிடன் "ஒரு முக்கியமான வேலை ஐந்து நிமிஷம் கொடுக்க முடியுமா?""சரி முடிச்சிட்டு என் அறைக்கு வாங்க"

பதிவை படிச்சுபுட்டு கும்மி அடிக்க முடியலைன்னு வருத்ததிலே
டமேஜர் அறைக்கு சென்றேன், உள்ளே போனா அவரோடு பெரிய தலைகள் ரெண்டும், நுனி நாக்கு ஆங்கிலகாரியும் இருந்தாங்க, கதவை திறந்த நான்


"மன்னிச்சுடுங்க, நான் அப்புறம் வருகிறேன்"

"இல்லை.. உங்களுக்காத்தான் எல்லோரும் காத்து கிட்டு இருக்கோம்."௬ட்டமா தேடுற அளவுக்கு நான் ஏதும் நல்லது செய்யலையே ன்னு நினைத்து நாற்காலியிலே உட்கார்ந்தேன். நுனி நாக்கு ஆங்கில அம்மணி "நாங்க உங்க கிட்ட நம்ம கம்பெனி விதி 3000 , அதன் உள்பிரிவு 1001 படி பேச போறோம்"


"கம்பெனி யிலே இவ்வளவு விதி இருக்குன்னு தெரியாம போச்சே, எல்லாம் என் தலை விதி"


"நாங்க ஏன் இதை சொல்லுறோமுனா நாங்க விதி படிதான் நடப்போம்"


"போன மாசம் நிரந்தர வேலை பார்த்த நூறு பேரை சொல்லாம கொள்ளாம தூக்கி வீசுனீங்க, அந்த எந்த விதின்னு சொல்ல முடியுமா?"அந்த கேள்விக்கு எப்படி பதில் சொல்லன்னு தெரியாம, சில பதிவை படிச்சிட்டு புரியாம இல்லாத தலை முடியை பிச்சுகிற மாதிரி அமைதியா இருந்தாங்க, உடனே

"நான் கொஞ்சம் ஓட்டை வாய், அதனாலே இப்படி ஒரு கேள்வியை கேட்டேன்,நீங்க ௬டி வந்த விசயத்தை சொல்லுங்க"

௬டி
இருந்த பெருசுல ஒன்னு"உங்க மேல புகார் வந்து இருக்கு, அதை பத்தி விசாரிக்கணும்"


அலுவலகத்திலே வேலை பார்க்காம பதிவை படிச்சு மொக்கை போடுறது இவங்களுக்கு தெரிஞ்சு போச்சு போல இன்னைக்கு சங்குதான்னு நினைச்சுகிட்டு, தெரியாத மாதிரி

போன மாதம் தானே "புகார் இல்லா ஆணி பிடிங்கி" ன்னு ஒரு விருது கொடுத்தீங்க, இப்ப புகார்னு சொல்லுறீங்க,
என் மேல வந்த புகார் என்ன?"

"அதை எப்படி சொல்லுறதுன்னு தெரியலை"

"நேர் முக உரையாடலுக்கு அழைச்சி தந்தி அடிச்சா சொல்ல முடியும், சும்மா சொல்லுங்க"

"உங்க மேல இண்டிசென்ட் ப்ரோபோசல் புகார் வந்து இருக்கு"" என்னால டீசெண்டா ப்ரோபோசல் எழுதவே தெரியாது, நீங்க என்னவோ சொல்லுறீங்க? ஆமா இண்டிசென்ட் ப்ரோபோசல் னா என்ன?"
"இன்னொருத்தர் துண்டு போட்ட இடத்திலே,அவங்களுக்கு தெரியாம நீங்க துண்டை போடுறது"


ஒ.. நீங்க அப்படி வாறீங்களா, நான் யாருக்கும் தெரியாம துண்டு போட்டேன்னு சொன்னது யாரு

"கம்பெனி விதி 20090 கீழ் 2 இன் படி அதை சொல்ல முடியாது"

"இ. பி.கோ விதியை கொடுமையா இருக்கு, எத வச்சி சொல்லுறீங்க"

"நீங்க ரெண்டு பெரும் அரசல், புரசலா பேசிக்கிறீங்க"

"ஐயா, ஆறு மாசத்துக்கு முன்னாடி, வேலை செய்யுற இடமா, இல்லை மெரீனா கடற்கறையானு சந்தேகமா இருந்தது, காசே வாங்காம இலவச திருமணம் பண்ணி வச்சீங்க, இப்ப என்னவோ பார்சல வந்த பிங்க் ஜட்டியை விற்கும் போது பிடிபட்ட ஆள் மாதிரி பேசுறீங்க,நீங்க எப்ப கலாச்சார காவல் சட்டத்தை கையிலே எடுத்தீங்க "

"இதோ பாருங்க உலகப் பொருளாதாரம் மந்தமா இருக்கு, நம்ம கம்பெனி யிலேயும் நிறைய பேருக்கு வேலை இல்லை,அதனாலே ஒவ்வொரு தொழிலாளியா ௬ப்பிட்டு நாங்க ரீவிவியு பண்ணுறோம்.

ஒ..உங்களுக்கு வேலை இல்லன்னா இப்படி ஒரு
வேலையை உருவாக்கி விடுறீங்க,எங்களை மட்டும் வேலையிலே இருந்து கடாசி விடுறீங்க

கம்பெனி லாபம் 50 சதவீதம் இருந்தது, இப்ப 49.9 சதவீதம் ஆகிப்போச்சி

அதுக்காக என் மேல இப்படி ஒரு வீண் பழி போடனுமா?

"இது வீண் பழியல்ல, எங்க கிட்ட ஆதாரம் இருக்கு, நீங்க எழுதின மெயில் எல்லாம் நாங்க பார்த்து இருக்கிறோம், இதோ பாருங்க மெயில் உங்க அனுமதி இல்லாம எடுத்தது, இதோ உங்க புது ஆளு போட்டோ"

போட்டோவை என்னிடம் காட்டினார்கள், அந்த போட்டோவை பார்த்த உடனே எனக்கு கொலை வெறி கோபம் வந்தது.

"அறிவாளிகள் நிறைந்த இடம்ன்னு பெருமை அடிச்சிகிட்டு, அறிவு ஒன்னை தவிர எல்லாம் இருக்கிற மாதிரி பேசினா எப்படி?, நீங்க காட்டின போடோவிலே இருக்கிறது என் புருஷன்"

"என்னது உங்க புருசனா?"

அவரு தான் என் புருஷன், இதோ கட்டின தாலி, நான் வளையல் செய்து போட்டு கிட்டேன், மனசுல வச்ச அடிகடி அவங்க அம்மா வீட்டுக்கு ஓடி போய்டுறாருனு குடுமி பிடியா கையிலே வச்சி இருக்கேன், இப்படி நகமும் சதையுமா இருக்கிற எங்களை அறுவை சிகிச்சை இல்லாம பிரிக்க நினைக்கிறது எப்படி நியாயம்

"நம்புற மாதிரி இல்லையே"

"அவரு கள்ளு புல்லா குடிச்சாலும், புல்லை புல்லா குடிச்சாலும் என் புருஷன் தான், இதோ எங்க திருமண சான்றிதல்.

"இவ்வளவு நேரமும் விதியை பத்தி பேசுனீங்க, இந்த விதியை கேளுங்க
என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கி, வீண் பழி சுமத்தின உங்களை எல்லாம் விதி 320 ன் கீழ் 2 ன் படி தண்டிக்க போறேன்"

"அப்படி ஒரு விதி நம்ம கம்பெனியிலே இல்லை"

"நான் சொல்லுறது இ.பி.கோ விதி"

"அம்மா தாயே எங்களை மன்னிச்சுடுங்க, நாங்க தப்பு பண்ணிட்டோம், அதற்க்கு பரிகாரமா உங்களுக்கு ரெண்டு வாரம் விடுமுறை தாரோம்"

"என் வீட்டுகாரக்கு?"

"நாங்களே உங்க வேலைக்கு கல்தா கொடுக்க முடியலையேன்னு கவலையா இருக்கோம்"

"என்னோட குடித்தனம் பண்ணுற என் புருஷன், நான் எங்க அம்மா வீட்டுக்கு போய்ட்ட குடியோட குடித்தனம் பண்ணுவாரு, எல்லாம் என் விதி"

பெருசு எதோ பேச வந்தவரை அமர்த்திய அம்மணி, ஒரு பெண் மனசு பெண்ணு க்கத்தான் தெரியும்,நீங்க உங்க புருசனோட ரெண்டு வாரம் விடுமுறையை கொண்டாலாம், இந்த கம்பெனி விதியல்ல மனி(சி)தாபிமான விதி.உங்களுக்கு சம்பளத்தோட வேலை போச்சி ரெண்டு வாரத்துக்கு


51 கருத்துக்கள்:

அத்திரி said...

நாந்தான் மொதல்ல

Mahesh said...

நான் ரெண்டாவது .... :))))))))))

குடுகுடுப்பை said...

நான் இந்த லாட்டுக்கு வரலை.

அத்திரி said...

//அந்த கேள்விக்கு எப்படி பதில் சொல்லன்னு தெரியாம, சில பதிவை படிச்சிட்டு புரியாம தலையை இல்லாத தலை முடியை பிச்சுகிற //

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவன்
உலவு.காம்

சின்னப் பையன் said...

ஊருக்கு நிம்மதியா போயிட்டு வாப்பா... வந்து மறுபடி மொக்கையை ஆரம்பி..

ஏய்... நம்ம அண்ணன் ஊருக்கு போறாரு... ஊருக்கு போறாரு...

சந்தனமுல்லை said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

Unknown said...

ரம்யா பதிவு படிச்சி இப்படி டேமேஜ் ஆயிட்டியளா

Unknown said...

\\"நேர் முக உரையாடலுக்கு அழைச்சி தந்தி அடிச்சா சொல்ல முடியும், சும்மா சொல்லுங்க" \\

ஹா ஹா ஹா

சிரிப்பு வைத்தியரே நீர் வாழ்க

Unknown said...

எங்க மக ராஸா

நல்ல மக ராஸா

இராத்திரி வேலையில பதிவ படிச்சி சிரிச்சி சிரிச்சி

.......................

முடியலை --- இன்னும் சிரிச்சிடுவேன்

கார்த்திகைப் பாண்டியன் said...

சரியான நையாண்டி நண்பா.. கலக்குங்க..

ILA (a) இளா said...

எல்லாம் நல்ல படியா “நடக்கும்”. நல்லா விருந்து சாப்பிடுங்க.. முக்கியமா போவும்போது தேவையானது எல்லாம் எடுத்துட்டு போயிருங்க. வந்து சேரும்போது.. சாக்கிரதை..

T.V.ராதாகிருஷ்ணன் said...

//குடுகுடுப்பை said...
நான் இந்த லாட்டுக்கு வரலை.//

repeateyyyy

வில்லன் said...

எந்த ஊருல எந்த கம்பெனில ராசா இந்த கொடும நடந்திச்சு. எனக்கு யாருமே இப்படி சிக்க மட்டக்கான்களே

வில்லன் said...

எது யாருக்கு நடந்தது...... உங்க கனவு கன்னிக்கா!!!!!!!!!!!!!!!!!!!!!!!

யாரந்த கனவுகன்னி

வில்லன் said...

இன்னைல இருந்து மார்க்கெட் சூடு பிடிச்சிருச்சி...... இனிமேல் இந்த மாதிரி பதிவெல்லாம் போடதிங்க. ஒரே அமர்க்களம் தான் இனிமேல்.

Anonymous said...

கலக்குங்க..

Arasi Raj said...

ILA said...
எல்லாம் நல்ல படியா “நடக்கும்”. நல்லா விருந்து சாப்பிடுங்க.. முக்கியமா போவும்போது தேவையானது எல்லாம் எடுத்துட்டு போயிருங்க. வந்து சேரும்போது.. சாக்கிரதை..

April 2, 2009 12:48:00 PM EDT //////////


ஏன் ஏன்....ஏன் இப்டி பீதியை கிளப்புறீங்க

ஆதவா said...

நல்லா இருக்குங்க... உங்களோட பழைய டச் இல்லை! உங்க சொந்த கதை சோகக் கதைன்னு நினச்சு படிச்சு ஏமாந்தேன்!!!

RAMYA said...

அது சரி,

நீங்க லீவு போட்ட கதை சொல்லறதை
கூடவா இவ்வளவு அருமையா உங்களாலே சொல்ல முடியும்..... :))

முடியலை, முடியலை, அழுதுடுவேன் வேண்டாம்.

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

வேலை போய்டுச்சுன்னு பாத்தவுடனே
பதைபதைப்போட வந்து படிச்சா ??

என்ன நடக்குது இங்கே, ஹையோ ஹையோ.

எனக்கு சிரிப்பு சிரிப்பா வந்தது போங்க :))

Anonymous said...

ஹாஹாஹா

எம்.எம்.அப்துல்லா said...

avvvvvvvv

கிரி said...

//ஆதவா said...
நல்லா இருக்குங்க... உங்களோட பழைய டச் இல்லை! உங்க சொந்த கதை சோகக் கதைன்னு நினச்சு படிச்சு ஏமாந்தேன்!!!//

ஆமாம் :-)

தாரணி பிரியா said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ஏங்க இப்படி நான் தலைப்பை பார்த்துட்டு என்னமோ நினைச்சு படிக்க கடைசியில ஒண்ணும் முடியலை

இராகவன் நைஜிரியா said...

மீ த 25த்...

(இத முதல்ல பதிவு செஞ்சுக்கிறேன்..)

இராகவன் நைஜிரியா said...

என்னாங்க இது தலைப்பை பார்த்து பயந்து போயிட்டேங்க..

ஆளவந்தான் said...

//
இராகவன் நைஜிரியா said...

என்னாங்க இது தலைப்பை பார்த்து பயந்து போயிட்டேங்க..
//
ரிப்பீட்டேய் :)

Suresh said...

ஹ ஹா நிங்களும் ரம்யா பதிவு படிச்சி இப்படி டேமேஜ் ஆயிட்டியளா ... நானும் தான்

//அலுவலகத்திலே வேலை பார்க்காம பதிவை படிச்சு மொக்கை போடுறது இவங்களுக்கு தெரிஞ்சு போச்சு போல இன்னைக்கு சங்குதான்னு//

ஹ ஹ எல்லருக்கும் ஒரு நாளு இருக்கு போல

பெருசு said...

//௬டி இருந்த பெருசுல ஒன்னு //
//பெருசு எதோ பேச வந்தவரை //

எம் பேரைச்சொல்லி கும்மி அடிக்கறது கம்பெனி விதி 18324 செகஷன் 2ஆ, உட்பிரிவு 3க,வெளிப்பிரிவு 31.2ம,
அறுபத்திமூனு பின்னூட்டம் வாங்கணும்.

இல்லாட்டி ஆணிக்கு பதிலா குண்டூசி புடுங்கணும்.

Anonymous said...

அக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

புதியவன் said...

//"அப்படி ஒரு விதி நம்ம கம்பெனியிலே இல்லை"

"நான் சொல்லுறது இ.பி.கோ விதி"//

ஹா...ஹா...ஹா...என்ன இதெல்லாம்...?

ஷண்முகப்ரியன் said...

A twist in the tale is good.

Unknown said...

:))

புல்லட் said...

ஹிஹிஹி! செம காமெடி! :)

குடந்தை அன்புமணி said...

உலகம் இருக்கிற இருப்பில இப்படி ஒரு தலைப்பைப் போட்டுட்டு... முடியல...
ஹா ஹா ஹா

அ.மு.செய்யது said...

நான் என்னமோ ஏதோனு நினைச்சி ஆழ்ந்த அனுதாபங்கள்னு சொல்லலாம்னு வந்தேன்.

வால்பையன் said...

ஏகப்பட்ட விதிகளாக இருக்கு
பின்னூட்டம் போட எதாவது விதி இருக்கா?

தமிழன்-கறுப்பி... said...

நல்லாருங்க அண்ணே...!

நிஜமா நல்லவன் said...

:))

தமிழ் மதுரம் said...

சீரியஸ்ஸான விசயத்தை நகைச்சுவை கலந்து போட்டுத் தாக்கியிருக்கிறீர்கள்...


தொடருங்கோ...

பதிவு சிரிப்பின் சிதறல்...

மேவி... said...

nalla irukuthu naina

Unknown said...

அய்யய்யோ........ அய்யய்யோ........அய்யய்யோ........!!!! எங்க கம்பெனியில இந்த மாதிரி எந்த கொடுமையும் நடக்கமாட்டேன்குதே........!!!!!!!!!


ஆஆஆஆஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்........!!!!!!

Anonymous said...

தல ஊருக்கு வரும் போது ஓரு போன் பண்ணுங்க.

சிங்கம் ஒன்று புறப்பட்டதே....அமெரிக்காவில் இருந்து சிங்கம் ஒன்று...! போதும் நிறுத்துன்னு நீங்க சொல்றது கேட்குது. வந்துட்டேன் சும்மா போக முடியாது. 50 போட்டுட்டு போறேன்

Anonymous said...

1

Anonymous said...

2

Anonymous said...

3

Anonymous said...

4

Anonymous said...

5

Anonymous said...

6

Anonymous said...

நான் தான் 50 வரட்டா.

gayathri said...

மீண்டும் மிஸ்டர் நாசாரேயா..நாசாரேயா

வடக்கூர் காரியா இருப்பா போல என் பேரை கொலை பண்ணினாள்,

iyyo pa naan unga name itha veda mosama solluven theruma