Tuesday, October 21, 2008

தமிழ் ஈழம் - மத்திய அரசுக்கு கேள்வி

பாகிஸ்தானில் இருந்து கிழக்கு பாகிஸ்தானை பிரித்து வங்கதேசம் என்ற தனி நாடு உருவாக காரணமாக இருந்த மத்திய அரசே?தனி நாடு அந்தஸ்து வேண்டி போரடி கொண்டிருக்கும் திபெத் மக்களின் தலைவர் தாலாய்லாமாவிற்கு அடைகலம் கொடுத்து, அந்த போராளிகளை எல்லாம் தீவிர வாதிகள் என்று அங்கிகாரம் செய்ய பட்ட சீனா அரசை எதிர்த்து ஐ.நா சபையில் திபெத் தனி நாடாக அங்கிகரிக்க மண்டியிட்டு கெஞ்சுவதையே தொழிலாக கொண்டிருக்கும் மத்திய அரசே?

எங்கேயா இருக்கிற தீவில் குஜராத் இனத்தலைவனுக்கு ராணுவ ஆட்சியால் பிரச்சனை மரணவோலம் எழுப்பிய மத்திய அரசே?


தமிழ் ஈழ பிரச்சனையில் அது அவர்களின் உள்நாட்டு பிரச்சனை, அதில் தலை இட உரிமை இல்லை என்றால், மேற் கூறிய பிரச்சனைகள் எல்லாம் இந்திய உள்நாட்டு பிரச்சனைகளா?அடுத்தவர்களுக்கு ஓடி ஓடி போய் உதவி செய்யும் உங்கள் அண்டை நாட்டு பாசம் தமிழ் ஈழ பிரச்சனையில் எங்கே போய் விட்டது?


இலங்கை ஒன்னும் செவ்வாய் கிரகத்தில் இல்லை.
அடுத்த இனத்திற்காக நீங்கள் எடுத்துக்கொள்ளும் அக்கரை களில் ஒரு விழுக்காடு வைத்தாலும் என்றோ என் சகோதர்கள் சுதந்திர காற்றை சுவாசித்து இருப்பார்கள் .
தமிழ் இனத்தை வேரோடு அழிப்பேன் என்று மார்தட்டி கொக்கரித்தது கொண்டிருக்கும் சிங்கள இனத்தீவிரவதகளுக்கு என்ன பதில் சொல்ல போகிறீர்கள்?இந்திரா காந்தியை கொலை செய்த சீக்கிய இனத்தை நாட்டை விட்டு ஒதுக்கி வைத்து விட்டீர்களா?


அந்த இனத்தை சேர்ந்த ஒருவரை பிரதம மந்திரியக்கியால்லவா அழகு பார்க்கிறோம் .


அனைத்து விஷயங்களிலும் முன்னுக்கு பின் முரண்பாடுகளோடு இருக்கும் நீங்கள் தமிழர்களின் விசயத்தில் உங்கள் தார்மீக கொள்கைகளை முன் வைப்பது துளி அளவிலும் நியாயம் இல்லை
சீக்கியரை மன்னித்து மனிதமானத்தோடு பழகும் நீங்கள், தமிழ் ஈழ விசயத்தில் கையை கட்டிக்கொண்டு வேடிக்கை பார்ப்பதில் என்ன நியாயம் இருக்கிறது?


நாட்டில் பஞ்சம்,பசி,பட்டினி, வேலை இல்லா திண்டாட்டாம் அறவே இல்லாமல் பாலும் தேனும் ஓடுவதாக நினைத்துக்கொண்டு தெற்கு ஆசிய பிரதியத்தில் ஒரு எகாதித்திய சக்தியாக விளங்க இலங்கைக்கு ஆய்தம் வழங்குகிறோம் என்று சொல்ல்வதிலே வெட்கமாக இல்லை


நீங்கள் செய்வதை எல்லாம் கண் மூடிதனமாக ஆதரிக்கும் தமிழ் இன காங்கிரஸ் தலைவர்களே, நீங்கள் விடுதலை புலிகளை வெறுக்கவில்லை, தமிழ் ஈழ இன மக்களையே வெறுக்கிறீர்கள், சிங்களன் தீவிரவாதி என்று அனைத்து தமிழ் இனத்தையல்லவா கொன்று குவிக்கிறான். நீங்கள் எல்லாம் குலத்தை அழிக்கும் கோடரி காம்புகள்எட்டும் தூரத்தில் இருந்தாலும் எங்கள் கைகளை கட்டிவிட்ட இந்திய தாயே தமிழ் இனம் காக்க வழிகொடு இல்லையேல் விடை கொடு எங்களுக்கு நாங்கள் தருகிறோம் என் இன மக்களுக்கு அமைதி காற்றை.


தமிழ் நாடு இந்திய தாயின் கீழ் இல்லாமல் இருந்திருந்தால் எப்போதோ தமிழ் ஈழம் கண்டிருப்போம்.


Monday, October 20, 2008

வட அமெரிக்கா வலை பதிவர்கள் சந்திப்பு - இரண்டாம் கட்டம்

அனைவருக்கும் வணக்கம்,


வலை பதிவு சந்திப்பின் முன்னோட்டத்திற்கு உள்ளிருந்தும், வெளியிலிருந்தும் பேராதரவும் அன்பும் தெரிவித்த அனைத்து உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. இதுவே கிட்டத்தட்ட வெற்றி அடைந்த மனநிறைவு. "அஞ்சா நெஞ்சன்" பழமைபேசி யின் கருத்துக்களை வழி மொழிந்து கூகிள் குழு ஒன்றை உருவாக்கி விட்டேன், எனக்கு தெரிந்த வரையில் கருத்து தெரிவித்த நண்பர்களை குடிஇருப்பு பகுதிகளின் விபரமும் குழுவின் விலாசமும் கிழே கொடுக்கப்பட்டுள்ளன. நான் சேகரித்த மினஞ்சல்களுக்கு அழைப்பிதல் அனுப்பப்பட்டுள்ளது, விருப்பமுள்ள மற்றவர்கள் குழுவின் விலாசம் சென்று தங்களை இணைத்து கொள்ளல்லாம். அங்கு நமது கருத்துக்களை பரிமாறி வலைப்பதிவு சந்திபிற்க்கான தேதியை முடிவு செய்யலாம். அந்த முடிவை நண்பர் "புரட்சி புலி" குடுகுடுப்பையார் முரசு கொட்டி அறிவிப்பார்.
கூகிள் குழுவின் விலாசம்NJ/NY/VA/MA/CT/NC
ச்சின்னப் பையன்
இனியா
வெட்டிப்பயல்
மயிலாடுதுறை சிவா...
மோகன் கந்தசாமி
நசரேயன்
பழமைபேசி
குடுகுடுப்பைCA
Madhusudhanan Ramanujam
Dr. சாரதி

கயல்விழி


UnKnown AREA
ILA
panaiyeri
Friday, October 17, 2008

வட அமெரிக்கா வலை பதிவர்கள் சந்திப்பு

வாழ்த்து தெரிவிக்கணும் யாரவது வந்தா மன்னிக்கணும்.

ஒரு கல்லை எரியலாமுன்னு கனவுல தோனுச்சு.

பல இடங்களில் தமிழ் வலை பதிவர்கள் சந்திப்பு வெற்றிகரமாக நடந்து கொண்டு இருக்கிறது.

வட அமெரிக்காவிலயும் நிறைய வலை பதிவர்கள் இருப்பாங்கனு நம்புகிறேன்.

குறைந்த பட்சம் நியூயார்க், நியூஜெர்சி பகுதிகளில் இருப்பவர்கள் சந்தித்தால்/சந்திப்பதற்கு வாய்ப்பு இருந்தால்?

என்னை மாதிரியே யாரவது கனவு கண்டால் உங்கள் கருத்துகளை சொல்லலாம்

வெட்டிபய வேலை வெட்டி இல்லாம கிருக்குரானு நினச்சாலும் உங்கள் கருத்துகளை சொல்லலாம்

முடிஞ்சா முயற்சி செய்யலாம்.

இல்லாட்டி வழக்கம் போல என் பொழப்பை பாத்துகிட்டு போறேன்


தணிக்கை குழுவும்.தயாரிப்பாளரும்

தணிக்கை குழு : படம் நல்லா வந்திருக்கு, ஆனா ஒரு மூன்னு இடத்தை தவிர
தயாரிப்பாளர் : கோடி கோடிய கொட்டி படம் எடுக்கிற எங்களுக்கு தெரியாமா உங்களுக்கு தெரிஞ்ச அந்த மூன்னு இடம் எதுங்க?


தணிக்கை குழு : ஒரு இடத்துல கதாநாயகி கொசுவை அடிக்க மாதிரி இருக்கே, அது விலங்குகள் வன்முறை சட்டப்படி குற்றம்

தயாரிப்பாளர் : கொசுவை அடிக்காம கோவில் கட்டியா கும்பிடனும்

தணிக்கை குழு : அந்த கொசுவுக்கு மருத்துவ சான்றிதழ் வாங்கினீங்களா?

தயாரிப்பாளர் : ஐயா அந்த கொசு கடிச்சு, மலேரியா, சிக்கன் குனியா வந்து மண்டைய போடுற மனுசங்களுக்கு தான் இறப்பு சான்றிதழ் வாங்கணும்

தணிக்கை குழு : ச்சுச்சு.. குறுக்க பேசசக்கூடாது. எல்லாம் விதி, நாங்க விதி படிதான் நடப்போம்

தயாரிப்பாளர் : எல்லாம் எங்க தலை விதி, சரி அடுத்த குற்றம் என்னனு சொல்லுங்க

தணிக்கை குழு : கதா நாயகன் ஒரு காட்சியிலே தொடை தெரிய வேட்டிய மடிச்சு கெட்டிகொண்டு வாராரு அது ஆபாசமா இருக்கு

தயாரிப்பாளர் : நீங்க சொல்லுறதுதான் ரெம்ப ஆபாசமா இருக்கு, சண்டை காட்சியிலே வேட்டியை மடிச்சு கட்டாம எப்படி முடியும்?
கதாநாயகி நீச்சல் உடையிலே கன்னா பின்னா ன்னு வாறதை எல்லாம் கலாசார குத்து விளக்கா?

தணிக்கை குழு : ரெம்ப பேசுனீங்க.. படமே வெளியிலே வராத படி பண்ணிடுவேன்

தயாரிப்பாளர் : நீங்க செஞ்சாலும் ஆச்சரிய படுறதுக்கு இல்ல, நான் இனிமேல் வாய் திறக்கலை, நீங்க மேல சொல்லுங்க சாமீ

தணிக்கை குழு :அடுத்ததா கதாநாயகனும் கதா நாயகியும் முத்தம் கொடுக்கிற காட்சி ரெம்ப அவமானமா இருக்கு.அவன் கொடுக்கிற வேகத்தை பார்த்தால் கதாநாயகி குடல் அள்ளி வெளியே போட்டுருவான் போல இருக்கு

தயாரிப்பாளர் : வாயில நல்லா வந்துட்டு வடக்காம போகுது.. அவன் காதலிக்கு அவன் முத்தம் கொடுக்கான், நீங்க ஏன் வயத்து எரிச்சல் படுறீங்க?

தணிக்கை குழு : எல்லா விதி படிதான் நடக்கு,எப்படி எப்படி எல்லாம் முத்தம் கொடுக்கலாமுன்னு விதி முறைகள் இருக்கு.

தயாரிப்பாளர் : என்னவோ நியூட்டன் முன்றாம் விதி மாதிரி பேசுறீங்க

தணிக்கை குழு : காட்சிகளை மாத்த முடியுமா முடியாதா? முடியலனா நாங்க வெட்ட வேண்டியது வரும்

தயாரிப்பாளர் : என்னவோ கடை திறப்பு விழாவுக்கு ரிப்பன் வெட்டுற மாதிரி சொல்லுறீங்க, வடக்க போய் பாருங்க, ஆடை இல்லாம படம் எடுத்து இந்திய கலாசாரத்தை குப்பையிலே போடுறாங்க, உங்க விதி அங்க தூங்குதா? அதை எல்லாம் ஓகோ.. ஆகா.. புகழ்ந்து தள்ளுவீங்க. நம்ம ஊருக்கு வந்தா கண்ணகி அவங்க ஊருக்கு போன கோவலனா?

தணிக்கை குழு : ஹலோ ..

தயாரிப்பாளர் : இருவே பேசிகிட்டு இருக்கமுல்ல, தினமும் ஒரு லட்சம் மாடு,ஆடு, கோழி எல்லாம் வெட்டுராங்க காணாக் குறைக்கு மனுஷனையும் வெட்டுறாங்க. அவங்க எல்லாம் எந்த மருத்துவரிடம் சான்று வாங்குதாங்க,
பேசவந்துடீங்க.. மருத்துவ சான்று மண்ணாங்கட்டி சான்றுன்னு.
கொசுவை அடுச்சுட்டானு குய்யோ முய்யோனு கத்துற நீங்க, மாட்டை அடிக்கிற மாதிரி சண்டை காட்சியிலே மனுசங்களை புரட்டி எடுக்குறான் அதுஎல்லாம் உங்க கண்ணுக்கு தெரியலையா?

தணிக்கை குழு : உங்க வாயோட சேத்து முழு படத்தையும் வெட்டுறதா முடிவு பண்ணிட்டோம்


தயாரிப்பாளர் : ஐயா மானத்தை காக்க நிக்கும் மகராசன்களா , நான் இன்னும் முடிக்கலை, வேட்டியை கணுக்கால் வரை தான் மடிச்சு கட்டனுமுணா அவன் சேலை தான் உடுத்தனும்.கதாநாயகி கூட மழையில நினைஞ்சு அடி பாடுறான், அவ தொப்புள்ள மைதானத்துல விளையாடுற மாதிரி பம்பரம்,கோலி குண்டு விளைஆடுராங்க. தொப்புள்ள விளையாடலாம் வாயில விளையாடக் கூடதா?
தணிக்கை குழு : உங்க படத்தை எல்லாத்தையும் வெட்டப்போறோம், நீங்க வீட்டுக்கு போகலாம்.

தயாரிப்பாளர் : அப்படியே படம் வெளியில வந்தா, படம் எடுத்து நொந்து போன தயாரிப்பாளர்ல இருந்து விளக்கு பிடிகிறவர் வரைக்கும் வழக்கு போடுறாங்க.இதுக்கு அனுமதி கொடுத்த உங்க மேல யாரும் வழக்கு போடுகிறார்களா?

தணிக்கை குழு : நாங்க வெட்டனுமுனு முடிவு பண்ணியாச்சு . நீங்க போகலாம்.

தயாரிப்பாளர் : நீங்க வெட்டுறதுக்கு முன்னாடி, நான் வெட்ட வேண்டியதை வெட்டியாச்சு. கைபேசியில வார அழைப்புக்கு முதல்ல பதில் சொல்லுங்க, நான் சொல்ல வந்து புரியும் .

தணிக்கை குழு : (பேசி முடிந்ததும்...) இதெல்லாம் நீங்க ஏன் முதல்லே சொல்ல வில்லை, நாம இவ்வளவு நேரம் பேச வேண்டிய அவசியமே இருக்காது, உங்க படத்துக்கு "U" சான்றிதழ் கொடுத்து விடுகிறேன்.
(சான்றிதல் வாங்கி விடை பெரும் முன் )

தயாரிப்பாளர் : கைபேசியில பேசுனது உங்க வீட்டு சின்ன வீட்டு தங்கமணி இல்லை, நான் ஏற்பாடு பண்ணின பின்னணி நடிகை. எந்த மாட்டுக்கு எங்க புடிச்சா வலிக்கும்னு எனக்கும் தெரியும்.இனிமேல நான் இங்க வர முடியாது இப்பவே அரை ஆண்டி ஆகிட்டேன், படம் வந்த உடனே ஓட்டை ஆண்டி ஆகிடுவேன்.


Wednesday, October 15, 2008

காதல் பச்சோந்தி - இறுதி பகுதி

முதல் பாகம்

மாலினியை எதிர் பார்க்காதவனாய் " ஏய் நீ எப்ப வந்த?" பதில் சொல்லுமுன் களைப்பினால் அவளை கடந்து உள்ளே சென்றான்

கிரணை கண்ட மகிழ்சியில் சோக அலை கரையை கடந்து சந்தோஷ அலை தாண்டவமாடியது.காலையில் இருந்து நடந்தவற்றை விரிவாக ரகுராம் சொல்ல, அவனுக்கு மாலினி மீது கோபம் கத்தரி வெயில் போல ஏறியது.

"மாலினி என்ன இதெல்லாம் உளறல், நான் எதோ உன்னை காதலிப்பதாக போன மாதம் மின் அஞ்சல் அனுப்பியதாகவும்,அதற்க்கு நீ நேற்று சம்மதம் தெரிவிச்சு பதில் அனுப்பியதாகவும் உன்
பதில் தெரியாம விபரித்த முடிவு எடுத்து விட்டதாகவும் நீயே ஒரு கற்பனை பண்ணி, உன்னோட அதிக பிரசங்கி தனத்தால என் மானமே போச்சு .நம்மோட நட்பை பிரிக்கணும்னு யாரோ நான்
அனுப்புவது போல அனுப்பி இருக்கலாம், நான் உன்னை காதலித்தால் உன்னிடம் நேரிலே சொல்லி இருப்பேன். "

அவன் கேள்விகளை விட கேட்ட விதம் மாலினியை பதில் பேச விடாமல் மவுனப்படுதியது, அவளுகுள்ளகவே ஒரு குற்ற உணர்வு தீர விசாரிக்காமல் அவசரப்பட்டு விட்டதாக. நடந்த தவறுக்கு முழு பொறுப்பு ஏற்றும், இந்த சூழ்நிலையில் நடந்தவற்றை பேசி மீண்டும் அவமானப்பட விருப்பு இல்லாமல் வீட்டை விட்டு வெளியேறினாள்.


அன்றாட வாழ்வில் நடக்கும் விசயங்களை செய்தி தாள்களின் வழியாக படிக்கிறோம், தொலைக்காட்சி வழியாக பார்க்கிறோம், காதலுக்காக தற்கொலைகள் எவ்வளவு நடகின்றன, நிலைமை இப்படி இருக்கும் போது மாலினி செய்ததை முற்றிலும் தவறு என்று சொல்லமுடியாது.


இந்த நிலையிலே கிரணுடன் பேசாமல் இருப்பதே நல்லது என் கருதி எல்லோரும் படுக்கைக்கு தயார் ஆகினார்கள். கிரண் அவனுடைய அறைக்கு சென்றான். சென்றவன் தூக்கம் வாராமல் நினைவுகளை அசை போட ஆரமித்தான்.


மாலினியுடன் நட்புரிமை பாராட்டினாலும் கடந்த ஒரு வருடமாக அவளை ஒரு தலையாக காதலித்து வந்தான், நட்பு அதற்க்கு மிக பெரிய தடையாக இருந்தது. மாலியின் நினைவுகள் அவன் தூக்கத்தை கொள்ளை கொண்டு போனது. நட்பிற்கு மூடு விழா நடத்தி காதலுக்கு அஸ்திவாரமிட மின் அஞ்சல் தட்டினான்.

எப்படியும் பதில் கிடைக்கும் என்ற எதிபார்ப்பு இருந்தது. அனுப்பிய முதல் வாரத்தில் பதிலும் அழைப்பும் வராததால், தவறு செய்து விட்டதக்க நினைத்தான்.அடுத்த வாரத்தில் அவன் எதிர்ப்பார்ப்பு அவள் மீது எரிச்சலையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது.நெடுநாள் பழகிய விஷயம் அரவோடு நின்று விட்டதால் மனம் வெற்றிடம் ஆனது, இந்த நேரத்தில் தன் அலுவலகத்தில் தன்னுடன் வேலை பார்க்கும் உமா தன்னை ஒரு வருடமாக காதலிப்பதாக தன் காதலை சொன்னாள். அவன் மனதின் வெற்றிடத்தை அடைக்க அவளை ஏற்றுகொண்டான்.


புது காதல் ஆரமித்த ஐந்தாம் நாளில் மாலினியிடம் இருந்து பதில் மின் அஞ்சல் வந்தது.கடிதம் வரும் வரை காதல் வாகனம் தடை இல்லாமல் இருந்தது.கடிதம் வந்ததும் இருவரையும் ஒப்பிட்டு பார்த்து முடிவில் மாலினியே உயர்ந்தவள் என்று முடிவுக்கு வந்தவனாய், உமாவை இன்று சந்தித்து தனது வீட்டில் வேறு இடத்தில் பெண் பார்த்து ட்டதாகவும்,இனிமேல் நாம் பேசவோ பழகுவதோ நல்லதல்ல அவளை காலையில் இருந்து சமாதான படுத்தி விட்டு வருவதற்குள் இவ்வளவும் நடந்து விட்டது.

நாளையில் இருந்து மாலினி தான் உலகம் என்று நினைத்து வந்தவன் அவளின் செய்கைகளினால் வெறுப்பின் எல்லைக்கே சென்றான் .அவள் மீது இருந்த காதல் அளவை விட வெறுப்பின் அளவு அதிகமானது . அப்போது அவன் நினைத்தது அவரப்பட்டு விட்டு உமாவிடம் பொய் சொல்லி விட்டோமே.மீண்டும் நாளை காலையில் அவளை சந்தித்து உண்மையை சொல்லவேண்டும்.


தற்போது இருவரையும் ஒப்பிடும் பொது உமாவே உயர்வாக தோன்றியது. விருப்பமானதில் சிறந்ததை தேர்ந்து எடுக்கும் விதி ஆடைகளுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் பொருந்தும் போல, யோசித்த படியே தூங்கிபோனான்.


மனிதன் மனது குரங்கு என்று இதை வைத்து சொன்னார்களோ என்னவோ. மேற்கண்ட காரணங்களினால் அவளிடம் கோபத்தில் வாய்க்கு வந்த பொய்யை சொல்லி இருப்பான் என்பது புரிந்தது.
கதவு தட்டும் சத்தம் கேட்டு கண்ணை திறக்க முடியாமல் இருந்தாலும், இடை விடாது தட்டும் ஓசையினால் கண் முழித்து கதவை திறந்தான்.

வெளியில் ரகுராம் அவர் பின்னால் காவல் துறை அதிகாரிகள்.


"அப்பா நான் தான் வீட்டுக்கு திரும்பிட்டேனு அவங்களுக்கு தகவல் கொடுக்கலையா?" கொட்டாவி விட்டு கொண்டே கேட்டான்.


காவல் துறை அதிகாரிகள் ஒருவர் "நாங்க உங்களை கைது செய்ய வந்து இருக்கிறோம்"


"கைது பண்ணுற அளவுக்கு நான்.." முடிக்கு முன்.


ஒரு பெண்ணோட தற்கொலைக்கு நீங்க காரணம், நீங்க அவள் காதலை ஏற்க மறுத்ததனால் அவள் தன்னை தானே மாய்த்துகொண்டாள்.

அப்பா என்ன சொல்லுறாங்க?

இங்கே என்ன நடக்குது ?

எனக்கே புரியலைடா?

ஐயா அந்த பொண்ணு பேரு என்னங்க?

ஏட்டையா செத்து போன பொண்ணு பேரு என்ன? உமாவோ மகேஸ்வரியோ, தம்பி நீ கிளம்பு, நீங்க காலையிலே காவல் நிலையத்தில் வங்க. கிரண்அழைத்து செல்லப்பட்டான்.


இவனை போன்ற பச்சோந்தி காதலர்களை நீதி தேவதை நிச்சயம் தண்டிப்பாள் என்ற நம்பிக்கையில் நாமும் விடை பெறுவோம்.


காதல் பச்சோந்தி

நீ உன் சம்மதத்தை அவன்கிட்ட சொல்லிடியா?

ரெண்டு நாளைக்கு முன்னாடி மின் அஞ்சல் அனுப்பிவிட்டேன் என்னோட சம்மதமும் தெரிவிச்சு, ஊருக்கு அவனை பார்க்க டெல்லி யில இருந்து வாரதாகவும் சொன்னேன்.

"இப்பதானே எனக்கு எல்லாம் புரியுது,கடந்த ஒரு மாசமா கிரண் ஒழுங்கா சாப்பிடுறது இல்ல, எப்போதும் அவன் ரூம்ல லைட் எரிஞ்சு கிட்டே இருக்கும்,நீ தான் காரணமா?"

அவருக்கு பதிலாக ஒரு வெட்கம் கலந்த புன்னகை.

"அங்கிள் கிரண் எங்கே? நான் டெல்லி யில இருந்து தொடர்பு கொண்டேன் இங்க வந்தும் ௬ட, அவன் கைபேசி எண் தொடர்பில் இல்லன்னு சொல்லுது ."


"காலையிலே அவசரமா கிளம்பி போனான், இப்ப வந்திடுவான், நீ அவன் ரூம் மேல இருக்கு, அங்க பொய் ஓய்வு எடு,நானும் உங்க அப்பாவும் வெளியில போய்ட்டு வாரோம்."

அவருக்கு தலை ஆட்டிவிட்டு மாலினி கிரண் அறைக்கு போகிறாள், அவனது கணினி முன் உட்கார்ந்து யாஹூ இணைய தளத்திருக்கு செல்கிறாள்.கிரனோட பெயரும், கடவுசொல்லும் அதிலே சேமித்து இருந்ததினாலே, அது அவனது இன்பாக்ஸ் தானாக சென்றது. தற்செயலாக அவன் இன்பாக்ஸ் நோட்டம் விட்ட மாலினி, அவள் கிரணுக்கு எழுதிய அனுப்பிய மின் அஞ்சல் இன்னும் வாசிக்க படவில்லை என்பதை காட்டியது.

கண்ணோட்ட பார்வையில் தட்டுப்பட்ட காகிதத்தை எடுத்து படித்தால் "இன்று கடைசி" .அவள் கைபேசியில் இருந்து கிரணை தொடர்பு கொண்டாள் "நீங்கள் தொடர்பு கொண்ட எண் தற்போது உபயோகத்தில் இல்லை".காடுதீயை போல பதட்டம் அவளை பற்றி கொண்டது, மாடியை விட்டு வேகமாக கிழே இறங்கி

"அங்கிள்!!! ... அங்கிள்!!!.." சற்று தயக்கத்துடன்


"நான் என்னோட சம்மதம் தெரிவிச்சு அனுபிய மின் அஞ்சல் இன்னும் கிரண் பார்க்கவில்லை, இந்த கடிதம் அவன் டேபிள் ல இருந்தது, எனக்கு எதோ தப்பு நடக்கபோறது மாதிரி தெரியுது. கிரண் எங்கே போயிருக்கிறான், போகும் போது ஏதாவது சொல்லிவிட்டு போனானா? "


"மாலினி தேவை இல்லாமல் நீ பதட்டபடுற, அமைதியா இரு, கிரண் இப்ப வந்திடுவான்."


"அப்பா நடக்கிறதை பார்த்தல் எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு, நீங்களும் மாமாவும் கிரண் கைபேசியில் அழையுங்கள் "

இருவருக்கும் மாலினிக்கு கிடைத்த பதில் தான் .ரகுராம் லேசான பதற்டத்துடன் யோசிக்க ஆரமித்தார்

அவரின் அமைதியை பாத்து மாலினி, யோசிக்க நேரம் இல்லை,உடனே காவல் துறைக்கு போகலாம்.

காவல் துறையா!!!

"எனக்கு உள்மனசு சொல்லுது எதோ தப்பு நடக்க போகுதுன்னு, அதனாலே பின் விளைவுகளை பத்தி யோசிக்காம காவல் துறைக்கு தகவல் கொடுங்க."


முதலில் மறுத்தாலும் ஒருவழியாக மாலினியின் யோசனையை ஏற்று காவல் துறைக்கு தகவல் அனுப்பப்பட்டு,அவர்களும் வந்து விசாரணை முடிக்கி விடப்பட்டது.காவல் துறை கைபேசி கம்பெனியை தொடர்பு கொண்ட பொது கடைசியாக அவன் தாம்பரம் ரயில்வே ஸ்டேஷன்னில் இருந்தது தெரிய வந்தது.


தாம்பரம் பகுதிகளில் எந்த சம்பவமும் நடக்க வில்லை மேலும் இன்று ஒரு புகாரும் வரவில்லை.

சென்னையில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் கிரணின் புகைப்படம் அனுப்பப்பட்டு விசாரணை முடுக்கி விடப்பட்டது.அவனை யாரும் கடத்தி இருக்கலாமோ என்று கோணத்திலும் அவன் வேலை பார்க்கும் அலுவலக நண்பர்கள், தெரிந்த நண்பர்கள் அனைவரிடமும் விசாரணை நடந்தது. யாரும் அவனை இன்று காலையில் இருந்து பார்க்க வில்லை என்பதையே சொன்னார்கள் .

கிரணுக்கு நடந்தது என்னவென்று தெரியாமல் வீட்டில் அனைவரும் கலக்கத்தில் எதோ விபரிதம் நடத்து விட்டதாகவே எண்ணினார்கள்.அக்கம் பக்கம் உள்ளவர்கள் துக்கம் விசாரித்துவிட்டு சென்ற வண்ணம் இருந்தனர்.இரவு 10 மணி ஆகியும் ஒரு தகவலும் இல்லை. வந்தவர்கள் அவரவர் வீடுகளுக்கு சென்று விட்டனர்.முதல் கட்ட விசாரணையை முடித்து கொண்டு காவல் துறையினரும் கிளம்பினர்


கடிகாரம் 11 மணி அடிக்கும் போது ரகுராம் வீட்டு கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது.யாரோ கதவை தட்டுகிற சத்தம் கேட்டு ரகுராம், கிரணை பற்றிய கேள்விகளுக்கு பதில் சொல்லி அலுத்துப்போனவர் மாலினியை கதவை திறக்க சொன்னார்.

தற்கொலை செய்து இறந்திருக்க கூடும் என அனைவரின் யூகம் பொய் ஆகும் படி கிரண் வாசலின் நின்று கொண்டிருந்தான்.
கதவை திறந்ததும் அவள் கண்ட காட்சியை நம்பவும் முடியவில்லை நம்பாமலும் இருக்க முடியவில்லை. யாரை தேடி அலைந்து திரிந்தார்களோ அவன் செத்து பிழைத்தவன் போல முன்னால் நின்று கொண்டிருந்தான்.

தொடரும் ..


Thursday, October 9, 2008

சரக்கு தீர்ந்து போச்சு -பாகம் 3(வாரிசு அரசியல்)

தமிழகத்திலே இப்ப கொஞ்ச நாளா அரசியல் தலைவர்கள் தங்களுடைய வாரிசுகளை முன்னணி பத்தி அரசியல் நடத்துவதிலே ஆர்வம் அதிகம் காட்டுகிறார்கள்.

வாரிசு புயல் தமிழகம், இந்தியா, உலக அரசியலில் எல்லாம் புகுந்து ஆட்டி படைக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. வாத்தியார் புள்ளை வாத்தியார், மருத்துவர் புள்ளை மருத்துவர், சினிமா காரன் புள்ளை சினிமாகாரன் இதை எல்லாம் நாம ரெம்ப சந்தோசமாக ஏற்றுகொள்கிறோம். ஆனா அரசியல் வாதி புள்ளை அரசியல் வாதின்னு சொன்ன ஏற்க்க மனம் மறுக்கிறது.அரசியல் வாதியும் ஒருமனிதனே அவர் ஒன்னும் நாட்டுக்கு நேந்து விடப்பட்ட கோவில் காளை இல்லை. அவருக்கு அவருக்கும் மனைவிகள் குழந்தை குட்டிகள் இருக்கிறது, அவர்களுக்கு ஒரு பொறுப்பான அப்பனாக இருக்க வேண்டியது அவர்களது கடமை.ராஜ்ஜியம் ஆளுகிரவர்க்கு மனைவி மக்களை ஒழுங்காக ஆட்சி செய்யலைனா பொது வாழ்கையிலே நுறு மதிப்பெண் சொந்த வாழ்கையிலே பூஜ்ஜியம் வாங்கி இருக்காருன்னு கருத்து கணிப்பு நடத்தி முடிவுகளை அறிவிச்சி அவங்க மனம் நொந்து போகிற மாதிரி செய்வோம்.பெருந்தலைவர் காமராஜர், அறிஞர் அண்ணா, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் இவங்க எல்லாருக்கும் நேரடி வாரிசுகள் கிடையாது. அதனாலே தான் நாம்ம ஊருல அவர்களுடைய வாரிசுகளா தங்களை காட்டி கொள்வதற்கு மல் உத்தமே நடந்து கிட்டு இருக்கு. உண்மையிலே வாரிசு இருக்க தலைவர்களுக்கு வாரிசு உரிமை கொண்டாடினால் கையையும் காலையும் கட்டி நாடு கடல்ல போட்டு இலங்கை கடற்படை யை வச்சு போட்டு தள்ளிருவாங்க.நேரு மண்டைய போட்ட உடனே இந்திராவாலதான் நாட்டை காப்பத்த முடியும்னு அவங்க கையிலே நாட்டை கொடுத்தாரு காமராஜர்.அப்புறமா அவங்க புள்ள ராஜிவ் காந்தி. இவங்க ரெண்டும் அல்ப ஆயிசுல மண்டைய போட்ட உடனே, குடும்ப அரசியல் ஒழிஞ்சதா நினனச்சு சந்தோசபட்ட நேரத்துல, பார்க் பீச்ன்னு பெண் நண்பி கூட சுத்திகிட்டு இருதந்தவரை நாற்காலியில உக்கார வச்சாச்சு. இப்படி நாட்டுக்காக ஒரு குடும்பமே வாழையை வாழையா வரிஞ்சு கட்டிக்கிட்டு வேலை செய்யுது. ராகுல் அகில இந்தியா காங்கிரஸ் பொது செயலாளரா நியமிச்சப்ப எந்தனை பேரு தந்தி அனுப்பி எதிர்ப்பு தெரிவிசோம்.தீபாவளி மாதிரி வெடி போட்டு கொண்டாடினோம்.தேசிய அரசியலில் வாரிசு களம் இறங்கினா குத்து பாட்டு போட்டு கொண்டாடுற நாம மாநில அரசியலிலே வாரிசு வந்தா குத்தி குத்தி பேசுறோம்.

அவங்க எல்லாம் நாட்டுக்கு என்ன நல்லது செய்தாங்கனு நம்ம ஊரு காங்கிரஸ் காரர்களிடம் கேட்டால் பதில் சொல்லி முடிக்க குறைஞ்சது ரெண்டு வருஷம் ஆகும். ஏன்னா அவ்வளவு கோஸ்டிகள் இருக்கு தமிழ் நட்டு காங்கிரஸ்ல.மன்னர் ஆட்சி இல்லை மக்கள் ஆட்சி யாரு வேண்டுமானாலும் மந்திரியாகலாம், மந்திர வாதியாகலாம், முதல் மந்திரி ஆகலாம்.அரசியல் தலைவர்களின் வாரிசுகளும் அடிப்படை குடிமகன்களில் ஒருவர், நமக்கு இருக்கிற எல்லா உரிமையும் அவர்களுக்கும் இருக்கிறது. வாரிசுகளை களம் இறக்கும் போது எதிர்ப்பை தெரிவிக்க வேண்டிய நாம அவங்க படத்தை காருல ஒட்டி கட்ட பஞ்சாயத்து பண்ண கிளம்பி விடுகிறோம்.தொண்டர்களாகிய நாம் வாரிசுகளை ஏற்று கொள்ளும் போது, அவர்களின் கட்சி ஆட்சிக்கு வரும்போது தமிழக மக்களும் அவர்களின் தலைமையை ஏற்று கொள்ளத்தான் வேண்டும். அவர்கள் நன்றாக ஆட்சி புரிந்தால் புலிக்கு பிறந்தது பூனையாகுமா? அப்படின்னு பெருமை அடிகத்தான் செய்வோம்.


அரசியல் என்பது பொதுநலம் என்றாலும் அதிலே பங்கேற்கும் நாம எல்லாரும் ஏதாவது ஒரு வழியிலே சுய நலக்காரர்களே.ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் கவலை இல்லை என்பவர்களுக்கு எந்த பிரச்னையும் இருக்காது.

வாரிசு ஆண்டாலும் அரசியல் வாரிசு ஆண்டாலும் மின்வெட்டு,கைவெட்டு,கால்வேட்டுனு இல்லாம நாட்டுக்கு நல்லது நடந்தா சரிதான்


Tuesday, October 7, 2008

சரக்கு தீர்ந்து போச்சு - பாகம் 2

கதைகள் தான் தொடர் பாகங்கள் வரணுமுன்னு எந்த விதியும் இல்லை, இந்த விதியும் அதற்குள் அடங்கும்.

சரக்கு தீர்ந்து போச்சு பாகம் ஒன்னுல பெரியய்யா மருத்துவரை பத்தி பேச வேண்டிய சூழ்நிலை இப்ப நான் பேசபோறது சின்னையா மருத்துவரை பத்தி என்னடா எழுத ஏதும் இல்லாததால ஊருக்கு இளிச்ச வாயன் பிள்ளையார் கோவில் ஆண்டி மாதிரி பெருசையும் சிருசையும் பதியே எழுதுறானே யாரும் வருத்தபடாதீங்க.சரக்கு தீர தீர எல்லாரும் வரிசையா வருவாங்க.

பேச வேண்டிய விஷயம் என்னன்னா சின்னையா ஓரின சேர்கையாளர்கள் திருமணத்திற்கு அனுமதி கொடுக்கணுமுன்னு கொடி கட்டி செங்கோட்டையில நிக்காரு. சின்னயாவுக்கு பல இடங்களில் இருந்து எதிர்ப்பு வருது, நல்ல வேலையா தந்தி அடிக்க சொல்லி எதிர்ப்பை சொல்லலை. ஆனா அவரு சொல்லுறது தப்பு இல்லை.அவரு சொல்லுறது ஒன்னும் உலகத்துல நடக்காதது இல்ல, நாம ஊருலயே இதை விட கேவலமான கூத்து நடக்குது. எப்படின்னு கெட்ட கிழ போங்கோ இல்லனா மேல போகலாம் .

மழை பெய்யலைனு கழுதைக்கும் நாய்க்கும் கல்யாணம், காக்கைக்கும் குருவிக்கும் கல்யாணம், கழுதைக்கும் மனுசனுக்கும் கல்யாணம்னு கலப்பு திருமணம் பண்ணுறோம், ஐயா சதியை காக்க பிறந்த சிங்கங்கள குறிச்சுகொங்க இதுதான் உண்மையான கலப்பு திருமணம்.

ஐயா அணியில இருக்கிற காடு வெட்டி, மர வெட்டி,மண் வெட்டி எல்லாம் கையை வச்சு கிட்டு சும்மா இருந்தாலே மழை தன்னாலே வரும்.

பெண்களுக்கு செவ்வா தோஷம், நாக்குல தோஷம், மூக்குல தோஷம் இப்படி பல தோசத்தை சொல்லி தென்னை மரத்தை வச்சி தாலி கட்டுறது, வாழை மரத்தை வச்சு தாலி கட்டுறது. இப்படி பல சீர்திருத்த சேவை செய்றோம்.

கீழ் தட்டு மக்களுக்கு மட்டும்மா இப்படி, முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் கூட வாழைமரம் தான் முத்த புருஷன், பச்சன் ரெண்டாவது புருசன்னு பேச்சு.தேசிய ஒருமை பாட்டுக்கு இதை விட ஒரு நல்ல உதாரணம் இருக்க முடியாது.

நம்ம ஊரு சாமியார்கள் யாகம்னு பேரை சொல்லி நாலு ஐந்து கன்னி பெண்களை பூமிக்கு அடியில ஒரு மாசம் வரை பூஜை எல்லாம் பண்ணுவாங்க, தனியா போன அருள் கெடைக்காது, குட்டிங்களோட போன தான் பிச்சுகிட்டு கொடுகிரமாதிரி.

இந்த விஷயம் எல்லாம் செய்தி தாள்ல கொட்ட எழுத்துல வருது, நாமளும் ரசிச்சு படிக்கோம். இதைஎல்லாம் அங்கிகரிக்க நாம ஓரின சேர்க்கையும் அங்கிகரிச்சு ஆகணும். சின்னையாவும் அதை தான் சொல்லுறாரு. விழ்ப்புணர்வு இல்லமா எய்ட்ஸ் நோய் ஓரின சேர்க்கையால இலவசமாக வருதுன்னு சொல்லுறாரு, அது எப்படின்னு எனக்கு தெரியலை நான் மருத்துவம் படிகலை. ஒரு வேலை அடுத்த முறை சரக்கு தீர்ந்தால் அவரு பதில் சொல்லுவாரோ என்னவோ

மாட்டுக்கும் மனுசனுக்கும் கல்யாணம்னா மழை வரும், மன்சனுக்கும் மனுசனுக்கும் கல்யாணம்னா வர்ர மழை பகிஸ்தானுக்கா ஓடிப்போகும். இதை எல்லாம் பேசுரதாலே அனுமதி கெடைச்ச நாந்தான் முதல்ல போய் கல்யாணத்துக்கு மனு கொடுப்பேன்னு யாரும் நினைச்சு புடதீங்க.

மூட நம்பிக்கையை மூலதனமா வச்சு நாம் அடிக்கும் கும்மி களை தடுக்க சட்டம் இல்லாத போது, இதை எப்படி சட்டத்தால தடுக்க முடியும்.


Friday, October 3, 2008

மாமியார் மருமகள் கொடுமைகள்

அந்த சம்பவம் நடந்து இன்னையோட ஒரு வருஷம் ஆச்சு, நாள் போனதே தெரியலை . நாம வெட்டியா இருந்தாலும் நாள் காட்டி சும்மா இருக்குமா, குண்டு வெடிப்பு, பூகம்பம் எது நடந்தாலும் அதோட வேலை நிக்காது.அவர் போனதுக்கு அப்புறமா கை பிள்ளையை வச்சு கிட்டு நான் என்ன என்ன கொடுமைகளை அனுபவிக்கபோறேனோ நினச்சு பயப்பட்ட நான் எதிபார்த்ததற்கு மாற நல்ல படியா எல்லாம் நடக்குது.


உலகத்துல பெண்களுக்கு இழக்கப்படும் கொடுமைகளை பட்டியலிட்டா அந்த கொடுமையை பூமி தாங்காது.நான் அனுபவிச்ச கொடுமை எனக்கு மட்டுமல்ல, இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்திலே எல்லா மூலை முடுக்கு எல்லாம் நடப்பதுதான். அதனாலே இந்த கொடுமையை அனுபவிக்கிற, அனுபவிக்க போற யாரும் வருத்தப்பட வேண்டாம் மாதரசிகளே, இது ஒரு சர்வதேச பிரச்சனை. இந்த உலகத்துல தீக்கப்படாத ஒரு விசயங்களில் மாமியார் மருமகள் சண்டையும் ஒன்னு. உலகம் எப்படி வந்ததுனு தீர்வு கிடைத்தாலும் இந்த சண்டைக்கு தீர்வு கிடைப்பது சந்தேகம் தான்.

எனக்கு கல்யாணம் ஆனா புதுசில் என்னை தங்க தட்டில் வச்சு தாங்கு தாங்கின என்மாமியர், அப்புறமா என்னை அடுப்புல வச்சு எரிக்க ஆரமிச்சுட்டா.எனக்கு கல்யாணம் ஆனா புதுசில் சாப்டாம இருக்கேன், எல்லாரு முன்னாலையும் உக்கார மாட்டேனு கோவிச்சா என் மாமியார், அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு நான் என்ன செஞ்சாலும் கோவிக்க ஆரமித்தாள். வர வர மாமிய கழுதை போல் ஆனா மாறி, நானும் கழுதை தேய்ஞ்சு கட்ட எறும்பு போல் ஆனேன்.


மாமியார் உடைச்சா மண் சட்டி மருமகள் உடைச்சா பொன் சட்டி ஆனதுக்கு அப்புறமா என் நிலையில் இருக்க யாரா இருந்தாலும் நான் செஞ்சதுக்கு பாராட்டு விழா எடுப்பாங்க, அவங்க என்ன சொன்னாலும் செவிடன் காதிலே ஊதின சங்கு மாதிரி இருப்பேன், இது போதாதா வாய் சண்டைக்கு, சாப்பிட, சண்ட போட, சாப்பிட, சண்ட போட இப்படியே பொழுதை கழிச்சேன். ஒரு கட்டத்துல சண்டை போடுவதற்காகவே வீட்டுல சிக்கன் பிரியாணி செய்வேன்.இந்தகொடுமைய என் புருஷன் கிட்ட சொன்ன, கொடுமை கொடுமைனு கோயில்க்கு போன, அங்க ரெண்டு பேய் தலைய விரிச்சி ஆடுதாம். உங்க கொடுமை தாங்காம தானே அலுவலுக்கு சீக்ரமா ஓடுறேன். எனக்கு பரிஞ்சு பேச வேண்டிய என் மச்சான் இதை பத்தி பேசினா இடி விழுந்த இருளாண்டி மாதிரி எதுவுமே பேச மாட்டார்.அவரு என்ன செய்வாரு உலக்கைக்கு ஒரு பக்கம் அடி, மத்தளத்திற்கு ரெண்டு பக்கம் அடி.மாமனார் மருமகன் கொடுமை, மாமியார் மருமகன் கொடுமை ஏன் இல்லன்னு தெரியலை, அப்படி இருந்த என் நிலைமை புரியும் இவருக்கு


என் புருஷன் இருக்கப்பவே என்னை வெளுத்து வாங்குற என் மாமியார், அவரு இல்லாதப்ப என்ன செய்வளோன்னு ஒரு பயம் இருந்தது. எங்க அம்மா வீட்டுக்கு போகவும் முடியலை, அம்மா வீட்டுக்கு போகலாம்னா நாத்தனார் கொடுமை தாங்க முடியாது.கொடுமையிலும் கொடுமை என் கதையை இந்த மாறி நாறி போன எழுத்தாளர் எல்லாம் எழுதுறது வேற


என் தலை விதி கொடுமையை நினச்சு மாமியார் வீட்டுலே இருந்தா, என் மாமியார், அவரு போனதில் இருந்து இன்னை வரைக்கும் வம்பு சண்டைக்கோ, வாய் சண்டைக்கோ இழுத்தது கிடையாது.அவங்க என்னை மகள் மாதிரியே நடத்துறாங்க என் மகன் அவள் மாறி பத்துகிராங்க, நான் ரெம்ப கொடுத்து வச்சவ.இப்ப எல்லாம் எங்க தலைமையில்தான் எங்க தெரு தண்ணி சண்டை எல்லாம் நடக்குது.


"எம்மா நாளைக்கு போறதுக்கு எல்லாம் எடுத்து வச்சாச்சா?"

"எல்லாம் ஆச்சு அத்தை"

"நான் பக்கத்து வீட்டு பொன்னம்மா மருத்து கேட்டா கொடுத்திட்டு வரேன்" என்று மருமகளின் மறு பதிலை எதிர்பாக்காமல் நடைய கட்டினாள்.

"வா குருவத்தா கையில என்ன?"

"நீதான் காலிலே அடிபட்டுருசுன்னு மருந்து கேட்டியே கொண்டு வந்திருக்கேன். ஆமா என்ன ஆச்சு?"

"அந்த கொடுமையை ஏன் கேட்க, சரி என் கதைய விடு, எப்போதும் எண்ணைல விழுந்த கடுகு மாதிரி நீயும் உன் மருமகளும் இருப்பிய, இப்ப எல்லாம் கிணத்துல விழுந்த கல் மாதிரி இருக்க, உடம்புக்கு ஏதும் முடியலையா குருவத்தா?"

"எல்லாம் காலக்கொடுமை பொன்னம்மா, என் புள்ள இருந்த வரைக்கும், அவனை என்கிட்டே இருந்து பிரிசுருவாலோளுனு ஆத்திரத்திலே அவள் என்ன செஞ்சாலும் எனக்கு கோபம் கோபமா வரும், அவளை கரிச்சு கொட்டுவதுகாகவே எதாவது செய்வேன்.இப்ப அவனே கூட இல்ல அதனாலே சண்ட போட காரணமும் இல்ல"

"சாப்பாட்டுல உப்பு இல்லை, உன்பேரனுக்கு ஒழுங்கா சாப்பாடு கொடுக்கலை, வீட்டை கூட்டி பெருக்கலை இப்படி ஒரு காரணமுமா கிடைக்கலை. நீ என்கிட்டே மூன்னாடியே சொல்லி இருந்தா நான் எதாவது எடுத்து கொடுத்திருப்பேன்"

பாத்தீங்களா பொன்னம்மா அக்கா கொடுமையை, ஒரு குடுப்பம் நல்ல இருப்பது எவ்வோளவோ பேருக்கு கஷ்டமா இருக்கு.

"ஆமா உன் பையன் எப்ப சவுதியில இருந்து வரான்"


"அவன் நாளைக்கு கலையிலே சென்னைக்கு வாரன், நாங்க அதுதான் ஊருக்கு போறோம்"


"அப்படியா ரெம்ப சந்தோசம், அவன் வந்தா இனிமேல எல்லாம் நல்ல படியா நடக்கும்"

புரணி பேசுவதுனா பொம்பளைங்களுக்கு ரெம்ப பிடிக்குமுன்னு, நாலு நாளைக்கு சேறு தண்ணி இல்லாமா அடுத்தவங்களை பத்தி பேசுவாங்கன்னு எங்க ஊருல சொல்லுவாங்க, அது எவ்வளவு உண்மைனு இப்பதான் புரிஞ்சது. நுறு ஆண்களை சமைப்பதை விட இரு பெண்களை சமாளிப்பது ரெம்ப கஷ்டம் எங்க ஊரு பெரியவங்க சொல்லுவாங்க தாய்குலங்கள் யாரும் இதை படிச்சு கண்டனம் தெரிவிச்சாலும் நான் அவங்ககிட்ட எடுத்து சொல்லுவேன் இனிமேல் அப்படி சொல்லக் கூடாதுனு எனக்கு சொன்ன பெரியவங்கட்ட.

ஒரு வாரம் கழித்து..


"பொன்னம்மா போன வாரம் வரைக்கு ஒழுங்கா இருந்த மருமக வேதாளம் மறுபடி முருங்கை மரம் ஏறின கதையா ஆரமிச்சுட்டா."

"சும்மா விடாதே குருவாத்தா அவளா நீயான்னு பாத்திருவோம்."

ஆக கதை மறுபடியும் ஆரம்பத்திற்கே வந்து விட்டது.இந்த கொடுமையை எங்க போய் சொல்ல


Thursday, October 2, 2008

சரக்கு தீர்ந்து போச்சு

டாஸ்மாக் கடையிலே சரக்கு தீர்ந்து போகலை சாமிகளா, இந்தியாவிலே இருக்க(இருந்தா) ஜீவ நதியிலே கூட தண்ணி தீர்ந்து போகலாம், நம்ம காவேரி அம்மா கூட தண்ணி வத்தி மண்ணோடு மண்ணாகலாம், தமிழகத்தின் ஜீவ நதியாகிய டாஸ்மாக்குல தண்ணி பஞ்சம் வராது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.


அப்புறமா எதுக்குடா வெண்ணை தலைப்பு "சரக்கு தீந்து போச்சு" ன்னு இருக்குனு நீ கேட்டாலும் கேட்காட்டாலும் சொல்லவேண்டியது என் கடமை. எழுதி எழுதி சரக்கு தீந்து போச்சுங்க. யோசிச்சப்ப சமிப காலமா மருத்துவர் ஐயா மது ஒழிப்பு போராட்டனு பொழுது விடிஞ்சு பொழுது போன அறிக்கை விடுறாரு.

ஐயா சொல்லுறது எல்லாம் நல்லாத்தான் இருக்கு, ஆனா அவரு சொல்லுறதை எல்லாம் தண்ணியை போட்டாதான் கை தட்டனுமுனு தோனுது.

அதாகபட்டதாவது குடி மகனா பாத்து குடியை நிருத்தா விட்டால் குடியை ஒழிக்க முடியாதுங்க, திருடனா பாத்து திருந்தாட்டா திருட்டை ஒழிக்க முடியாதது மாதிரி.

ஐயா தமிழ் நாட்டுல மட்டும் மதுவை ஒழித்தால் என்னை மாதிரி குடி மகன்களை தடுக்க முடியாது, குடிகனுமுனு முடிவு எடுத்தா வட தமிழ் நாடு மக்கள் திருப்பதியிலும், மேற்கு தமிழ் நாடு மக்கள் பெங்களுரிலும், தென் மேற்கு தமிழ் நாடு பாலக்காட்டிலும், தென் தமிழ் நாடு மக்கள் திருவனந்தபுரத்திலும் போய் குடிப்பாங்க.

கிழக்கு தமிழ் நாட்டு வழி இல்லன்னு யாரும் நினைக்க கூ டாது, அவங்க கள்ள தோணி ஏறி இலங்கை வட கிழக்கு மாகாணம் போய் குடிப்பாங்க.ஆக ஒரு குடி மகன் குடிக்கணுமுன்னு முடிவெடுத்தா எப்படியும் குடிப்பன் ஐயா.


இப்படி உண்ணாம தின்னாம சேத்து வச்ச பணத்தை பக்கத்து நாடுகளுக்கு மன்னிக்கவும் பக்கத்து மாநிலங்களுக்கு போறதுக்கு எப்படி கலைஞர் ஐயா சம்மதிபாரு.வாயை கட்டி வயதை கட்டி சம்பாதித்த பணத்தை கண்ட ஊரு பயக கொண்டு போக விடமுடியுமா?


அதையும் மீறி அவரு டாஸ்மாக்கை மூடினால் நம்ம ஒரு குசேல போலீஸ் எல்லாம் குபேரன் ஆகிடுவாங்க. ஐயா நீங்க குஜராத்துல மது விலக்கு இருக்குன்னு சொல்லுறீங்க, அது பூரண மதுவிலக்கு அல்ல அங்க பட்டை சாராய விற்பனை பட்டையை கிளப்புதுங்க சாமி.

மின்சார தட்டுப்பாடு,உர தட்டுபாடு, மளிகை சமான் தட்டு பாடு இப்படி தட்டு பாடு தறிகெட்டு ஓடிகிட்டு இருக்க நம்ம தமிழ் மண்ணுல இது ஒன்னாவது தட்டுபாடு இல்லாம கிடக்குன்னு நீங்க அவரு வீட்டுக்கு பொய் வாழ்த்தனும்.

நாங்க குடிச்சாலும் குடிக்காட்டியும் குடி கெட்டுபோகும், உங்களால குடி கேட்டலும் எங்களால குடி கெடகூடாது, ஏன்னா நாங்க யாரு குடியையும் கெடுகிறது இல்ல.

நீங்க குடி குடின்னு பேசுரதாலே குடிக்காதவன் கூட குடியை பத்தி யோசிக்க ஆரமிகிறான், குடியை விட்டு விட்டு ஒரு நல்ல குடிமகனை எப்படி உருவாக்கலாமுன்னு நம்ம கலாம் பாணியிலே யோசித்தால் ஒரு வேலை பலன் தரலாம்