Showing posts with label விவாதம். Show all posts
Showing posts with label விவாதம். Show all posts

Friday, October 17, 2008

தணிக்கை குழுவும்.தயாரிப்பாளரும்

தணிக்கை குழு : படம் நல்லா வந்திருக்கு, ஆனா ஒரு மூன்னு இடத்தை தவிர
தயாரிப்பாளர் : கோடி கோடிய கொட்டி படம் எடுக்கிற எங்களுக்கு தெரியாமா உங்களுக்கு தெரிஞ்ச அந்த மூன்னு இடம் எதுங்க?


தணிக்கை குழு : ஒரு இடத்துல கதாநாயகி கொசுவை அடிக்க மாதிரி இருக்கே, அது விலங்குகள் வன்முறை சட்டப்படி குற்றம்

தயாரிப்பாளர் : கொசுவை அடிக்காம கோவில் கட்டியா கும்பிடனும்

தணிக்கை குழு : அந்த கொசுவுக்கு மருத்துவ சான்றிதழ் வாங்கினீங்களா?

தயாரிப்பாளர் : ஐயா அந்த கொசு கடிச்சு, மலேரியா, சிக்கன் குனியா வந்து மண்டைய போடுற மனுசங்களுக்கு தான் இறப்பு சான்றிதழ் வாங்கணும்

தணிக்கை குழு : ச்சுச்சு.. குறுக்க பேசசக்கூடாது. எல்லாம் விதி, நாங்க விதி படிதான் நடப்போம்

தயாரிப்பாளர் : எல்லாம் எங்க தலை விதி, சரி அடுத்த குற்றம் என்னனு சொல்லுங்க

தணிக்கை குழு : கதா நாயகன் ஒரு காட்சியிலே தொடை தெரிய வேட்டிய மடிச்சு கெட்டிகொண்டு வாராரு அது ஆபாசமா இருக்கு

தயாரிப்பாளர் : நீங்க சொல்லுறதுதான் ரெம்ப ஆபாசமா இருக்கு, சண்டை காட்சியிலே வேட்டியை மடிச்சு கட்டாம எப்படி முடியும்?
கதாநாயகி நீச்சல் உடையிலே கன்னா பின்னா ன்னு வாறதை எல்லாம் கலாசார குத்து விளக்கா?

தணிக்கை குழு : ரெம்ப பேசுனீங்க.. படமே வெளியிலே வராத படி பண்ணிடுவேன்

தயாரிப்பாளர் : நீங்க செஞ்சாலும் ஆச்சரிய படுறதுக்கு இல்ல, நான் இனிமேல் வாய் திறக்கலை, நீங்க மேல சொல்லுங்க சாமீ

தணிக்கை குழு :அடுத்ததா கதாநாயகனும் கதா நாயகியும் முத்தம் கொடுக்கிற காட்சி ரெம்ப அவமானமா இருக்கு.அவன் கொடுக்கிற வேகத்தை பார்த்தால் கதாநாயகி குடல் அள்ளி வெளியே போட்டுருவான் போல இருக்கு

தயாரிப்பாளர் : வாயில நல்லா வந்துட்டு வடக்காம போகுது.. அவன் காதலிக்கு அவன் முத்தம் கொடுக்கான், நீங்க ஏன் வயத்து எரிச்சல் படுறீங்க?

தணிக்கை குழு : எல்லா விதி படிதான் நடக்கு,எப்படி எப்படி எல்லாம் முத்தம் கொடுக்கலாமுன்னு விதி முறைகள் இருக்கு.

தயாரிப்பாளர் : என்னவோ நியூட்டன் முன்றாம் விதி மாதிரி பேசுறீங்க

தணிக்கை குழு : காட்சிகளை மாத்த முடியுமா முடியாதா? முடியலனா நாங்க வெட்ட வேண்டியது வரும்

தயாரிப்பாளர் : என்னவோ கடை திறப்பு விழாவுக்கு ரிப்பன் வெட்டுற மாதிரி சொல்லுறீங்க, வடக்க போய் பாருங்க, ஆடை இல்லாம படம் எடுத்து இந்திய கலாசாரத்தை குப்பையிலே போடுறாங்க, உங்க விதி அங்க தூங்குதா? அதை எல்லாம் ஓகோ.. ஆகா.. புகழ்ந்து தள்ளுவீங்க. நம்ம ஊருக்கு வந்தா கண்ணகி அவங்க ஊருக்கு போன கோவலனா?

தணிக்கை குழு : ஹலோ ..

தயாரிப்பாளர் : இருவே பேசிகிட்டு இருக்கமுல்ல, தினமும் ஒரு லட்சம் மாடு,ஆடு, கோழி எல்லாம் வெட்டுராங்க காணாக் குறைக்கு மனுஷனையும் வெட்டுறாங்க. அவங்க எல்லாம் எந்த மருத்துவரிடம் சான்று வாங்குதாங்க,
பேசவந்துடீங்க.. மருத்துவ சான்று மண்ணாங்கட்டி சான்றுன்னு.
கொசுவை அடுச்சுட்டானு குய்யோ முய்யோனு கத்துற நீங்க, மாட்டை அடிக்கிற மாதிரி சண்டை காட்சியிலே மனுசங்களை புரட்டி எடுக்குறான் அதுஎல்லாம் உங்க கண்ணுக்கு தெரியலையா?

தணிக்கை குழு : உங்க வாயோட சேத்து முழு படத்தையும் வெட்டுறதா முடிவு பண்ணிட்டோம்


தயாரிப்பாளர் : ஐயா மானத்தை காக்க நிக்கும் மகராசன்களா , நான் இன்னும் முடிக்கலை, வேட்டியை கணுக்கால் வரை தான் மடிச்சு கட்டனுமுணா அவன் சேலை தான் உடுத்தனும்.கதாநாயகி கூட மழையில நினைஞ்சு அடி பாடுறான், அவ தொப்புள்ள மைதானத்துல விளையாடுற மாதிரி பம்பரம்,கோலி குண்டு விளைஆடுராங்க. தொப்புள்ள விளையாடலாம் வாயில விளையாடக் கூடதா?
தணிக்கை குழு : உங்க படத்தை எல்லாத்தையும் வெட்டப்போறோம், நீங்க வீட்டுக்கு போகலாம்.

தயாரிப்பாளர் : அப்படியே படம் வெளியில வந்தா, படம் எடுத்து நொந்து போன தயாரிப்பாளர்ல இருந்து விளக்கு பிடிகிறவர் வரைக்கும் வழக்கு போடுறாங்க.இதுக்கு அனுமதி கொடுத்த உங்க மேல யாரும் வழக்கு போடுகிறார்களா?

தணிக்கை குழு : நாங்க வெட்டனுமுனு முடிவு பண்ணியாச்சு . நீங்க போகலாம்.

தயாரிப்பாளர் : நீங்க வெட்டுறதுக்கு முன்னாடி, நான் வெட்ட வேண்டியதை வெட்டியாச்சு. கைபேசியில வார அழைப்புக்கு முதல்ல பதில் சொல்லுங்க, நான் சொல்ல வந்து புரியும் .

தணிக்கை குழு : (பேசி முடிந்ததும்...) இதெல்லாம் நீங்க ஏன் முதல்லே சொல்ல வில்லை, நாம இவ்வளவு நேரம் பேச வேண்டிய அவசியமே இருக்காது, உங்க படத்துக்கு "U" சான்றிதழ் கொடுத்து விடுகிறேன்.
(சான்றிதல் வாங்கி விடை பெரும் முன் )

தயாரிப்பாளர் : கைபேசியில பேசுனது உங்க வீட்டு சின்ன வீட்டு தங்கமணி இல்லை, நான் ஏற்பாடு பண்ணின பின்னணி நடிகை. எந்த மாட்டுக்கு எங்க புடிச்சா வலிக்கும்னு எனக்கும் தெரியும்.இனிமேல நான் இங்க வர முடியாது இப்பவே அரை ஆண்டி ஆகிட்டேன், படம் வந்த உடனே ஓட்டை ஆண்டி ஆகிடுவேன்.


Thursday, October 9, 2008

சரக்கு தீர்ந்து போச்சு -பாகம் 3(வாரிசு அரசியல்)

தமிழகத்திலே இப்ப கொஞ்ச நாளா அரசியல் தலைவர்கள் தங்களுடைய வாரிசுகளை முன்னணி பத்தி அரசியல் நடத்துவதிலே ஆர்வம் அதிகம் காட்டுகிறார்கள்.

வாரிசு புயல் தமிழகம், இந்தியா, உலக அரசியலில் எல்லாம் புகுந்து ஆட்டி படைக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. வாத்தியார் புள்ளை வாத்தியார், மருத்துவர் புள்ளை மருத்துவர், சினிமா காரன் புள்ளை சினிமாகாரன் இதை எல்லாம் நாம ரெம்ப சந்தோசமாக ஏற்றுகொள்கிறோம். ஆனா அரசியல் வாதி புள்ளை அரசியல் வாதின்னு சொன்ன ஏற்க்க மனம் மறுக்கிறது.



அரசியல் வாதியும் ஒருமனிதனே அவர் ஒன்னும் நாட்டுக்கு நேந்து விடப்பட்ட கோவில் காளை இல்லை. அவருக்கு அவருக்கும் மனைவிகள் குழந்தை குட்டிகள் இருக்கிறது, அவர்களுக்கு ஒரு பொறுப்பான அப்பனாக இருக்க வேண்டியது அவர்களது கடமை.ராஜ்ஜியம் ஆளுகிரவர்க்கு மனைவி மக்களை ஒழுங்காக ஆட்சி செய்யலைனா பொது வாழ்கையிலே நுறு மதிப்பெண் சொந்த வாழ்கையிலே பூஜ்ஜியம் வாங்கி இருக்காருன்னு கருத்து கணிப்பு நடத்தி முடிவுகளை அறிவிச்சி அவங்க மனம் நொந்து போகிற மாதிரி செய்வோம்.



பெருந்தலைவர் காமராஜர், அறிஞர் அண்ணா, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் இவங்க எல்லாருக்கும் நேரடி வாரிசுகள் கிடையாது. அதனாலே தான் நாம்ம ஊருல அவர்களுடைய வாரிசுகளா தங்களை காட்டி கொள்வதற்கு மல் உத்தமே நடந்து கிட்டு இருக்கு. உண்மையிலே வாரிசு இருக்க தலைவர்களுக்கு வாரிசு உரிமை கொண்டாடினால் கையையும் காலையும் கட்டி நாடு கடல்ல போட்டு இலங்கை கடற்படை யை வச்சு போட்டு தள்ளிருவாங்க.



நேரு மண்டைய போட்ட உடனே இந்திராவாலதான் நாட்டை காப்பத்த முடியும்னு அவங்க கையிலே நாட்டை கொடுத்தாரு காமராஜர்.அப்புறமா அவங்க புள்ள ராஜிவ் காந்தி. இவங்க ரெண்டும் அல்ப ஆயிசுல மண்டைய போட்ட உடனே, குடும்ப அரசியல் ஒழிஞ்சதா நினனச்சு சந்தோசபட்ட நேரத்துல, பார்க் பீச்ன்னு பெண் நண்பி கூட சுத்திகிட்டு இருதந்தவரை நாற்காலியில உக்கார வச்சாச்சு. இப்படி நாட்டுக்காக ஒரு குடும்பமே வாழையை வாழையா வரிஞ்சு கட்டிக்கிட்டு வேலை செய்யுது. ராகுல் அகில இந்தியா காங்கிரஸ் பொது செயலாளரா நியமிச்சப்ப எந்தனை பேரு தந்தி அனுப்பி எதிர்ப்பு தெரிவிசோம்.தீபாவளி மாதிரி வெடி போட்டு கொண்டாடினோம்.தேசிய அரசியலில் வாரிசு களம் இறங்கினா குத்து பாட்டு போட்டு கொண்டாடுற நாம மாநில அரசியலிலே வாரிசு வந்தா குத்தி குத்தி பேசுறோம்.

அவங்க எல்லாம் நாட்டுக்கு என்ன நல்லது செய்தாங்கனு நம்ம ஊரு காங்கிரஸ் காரர்களிடம் கேட்டால் பதில் சொல்லி முடிக்க குறைஞ்சது ரெண்டு வருஷம் ஆகும். ஏன்னா அவ்வளவு கோஸ்டிகள் இருக்கு தமிழ் நட்டு காங்கிரஸ்ல.



மன்னர் ஆட்சி இல்லை மக்கள் ஆட்சி யாரு வேண்டுமானாலும் மந்திரியாகலாம், மந்திர வாதியாகலாம், முதல் மந்திரி ஆகலாம்.அரசியல் தலைவர்களின் வாரிசுகளும் அடிப்படை குடிமகன்களில் ஒருவர், நமக்கு இருக்கிற எல்லா உரிமையும் அவர்களுக்கும் இருக்கிறது. வாரிசுகளை களம் இறக்கும் போது எதிர்ப்பை தெரிவிக்க வேண்டிய நாம அவங்க படத்தை காருல ஒட்டி கட்ட பஞ்சாயத்து பண்ண கிளம்பி விடுகிறோம்.தொண்டர்களாகிய நாம் வாரிசுகளை ஏற்று கொள்ளும் போது, அவர்களின் கட்சி ஆட்சிக்கு வரும்போது தமிழக மக்களும் அவர்களின் தலைமையை ஏற்று கொள்ளத்தான் வேண்டும். அவர்கள் நன்றாக ஆட்சி புரிந்தால் புலிக்கு பிறந்தது பூனையாகுமா? அப்படின்னு பெருமை அடிகத்தான் செய்வோம்.


அரசியல் என்பது பொதுநலம் என்றாலும் அதிலே பங்கேற்கும் நாம எல்லாரும் ஏதாவது ஒரு வழியிலே சுய நலக்காரர்களே.ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் கவலை இல்லை என்பவர்களுக்கு எந்த பிரச்னையும் இருக்காது.

வாரிசு ஆண்டாலும் அரசியல் வாரிசு ஆண்டாலும் மின்வெட்டு,கைவெட்டு,கால்வேட்டுனு இல்லாம நாட்டுக்கு நல்லது நடந்தா சரிதான்


Thursday, October 2, 2008

சரக்கு தீர்ந்து போச்சு

டாஸ்மாக் கடையிலே சரக்கு தீர்ந்து போகலை சாமிகளா, இந்தியாவிலே இருக்க(இருந்தா) ஜீவ நதியிலே கூட தண்ணி தீர்ந்து போகலாம், நம்ம காவேரி அம்மா கூட தண்ணி வத்தி மண்ணோடு மண்ணாகலாம், தமிழகத்தின் ஜீவ நதியாகிய டாஸ்மாக்குல தண்ணி பஞ்சம் வராது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.


அப்புறமா எதுக்குடா வெண்ணை தலைப்பு "சரக்கு தீந்து போச்சு" ன்னு இருக்குனு நீ கேட்டாலும் கேட்காட்டாலும் சொல்லவேண்டியது என் கடமை. எழுதி எழுதி சரக்கு தீந்து போச்சுங்க. யோசிச்சப்ப சமிப காலமா மருத்துவர் ஐயா மது ஒழிப்பு போராட்டனு பொழுது விடிஞ்சு பொழுது போன அறிக்கை விடுறாரு.

ஐயா சொல்லுறது எல்லாம் நல்லாத்தான் இருக்கு, ஆனா அவரு சொல்லுறதை எல்லாம் தண்ணியை போட்டாதான் கை தட்டனுமுனு தோனுது.

அதாகபட்டதாவது குடி மகனா பாத்து குடியை நிருத்தா விட்டால் குடியை ஒழிக்க முடியாதுங்க, திருடனா பாத்து திருந்தாட்டா திருட்டை ஒழிக்க முடியாதது மாதிரி.

ஐயா தமிழ் நாட்டுல மட்டும் மதுவை ஒழித்தால் என்னை மாதிரி குடி மகன்களை தடுக்க முடியாது, குடிகனுமுனு முடிவு எடுத்தா வட தமிழ் நாடு மக்கள் திருப்பதியிலும், மேற்கு தமிழ் நாடு மக்கள் பெங்களுரிலும், தென் மேற்கு தமிழ் நாடு பாலக்காட்டிலும், தென் தமிழ் நாடு மக்கள் திருவனந்தபுரத்திலும் போய் குடிப்பாங்க.

கிழக்கு தமிழ் நாட்டு வழி இல்லன்னு யாரும் நினைக்க கூ டாது, அவங்க கள்ள தோணி ஏறி இலங்கை வட கிழக்கு மாகாணம் போய் குடிப்பாங்க.ஆக ஒரு குடி மகன் குடிக்கணுமுன்னு முடிவெடுத்தா எப்படியும் குடிப்பன் ஐயா.


இப்படி உண்ணாம தின்னாம சேத்து வச்ச பணத்தை பக்கத்து நாடுகளுக்கு மன்னிக்கவும் பக்கத்து மாநிலங்களுக்கு போறதுக்கு எப்படி கலைஞர் ஐயா சம்மதிபாரு.வாயை கட்டி வயதை கட்டி சம்பாதித்த பணத்தை கண்ட ஊரு பயக கொண்டு போக விடமுடியுமா?


அதையும் மீறி அவரு டாஸ்மாக்கை மூடினால் நம்ம ஒரு குசேல போலீஸ் எல்லாம் குபேரன் ஆகிடுவாங்க. ஐயா நீங்க குஜராத்துல மது விலக்கு இருக்குன்னு சொல்லுறீங்க, அது பூரண மதுவிலக்கு அல்ல அங்க பட்டை சாராய விற்பனை பட்டையை கிளப்புதுங்க சாமி.

மின்சார தட்டுப்பாடு,உர தட்டுபாடு, மளிகை சமான் தட்டு பாடு இப்படி தட்டு பாடு தறிகெட்டு ஓடிகிட்டு இருக்க நம்ம தமிழ் மண்ணுல இது ஒன்னாவது தட்டுபாடு இல்லாம கிடக்குன்னு நீங்க அவரு வீட்டுக்கு பொய் வாழ்த்தனும்.

நாங்க குடிச்சாலும் குடிக்காட்டியும் குடி கெட்டுபோகும், உங்களால குடி கேட்டலும் எங்களால குடி கெடகூடாது, ஏன்னா நாங்க யாரு குடியையும் கெடுகிறது இல்ல.

நீங்க குடி குடின்னு பேசுரதாலே குடிக்காதவன் கூட குடியை பத்தி யோசிக்க ஆரமிகிறான், குடியை விட்டு விட்டு ஒரு நல்ல குடிமகனை எப்படி உருவாக்கலாமுன்னு நம்ம கலாம் பாணியிலே யோசித்தால் ஒரு வேலை பலன் தரலாம்


Sunday, September 14, 2008

தீவிரவாத தாய்

மவனே,

தொடர்ச்சியா பெங்களுரு, அகமதாபாத் இப்ப டெல்லில குண்டு வச்சு, அத நான் தான் பண்ணினேன் சொல்லி பெருமையா பீத்திகிட்டு அலையும் நதாரிக்களா .

என்னமோ சப்ப மூககன் சீனா காரன்கிட்ட சண்ட போட்டு ஜெய்ச மாறி பல்லை காட்டிகிட்டு மார் தட்டி நிக்கும் கோழை பெயளுவளா

இப்படி அடுத்தவன் குடி யை கெடுக்க கங்கணம் கட்டிக்கிட்டு நீ தெரு நாய் மாறி நாக்க தொங்க போட்டுக்கிட்டு அலையுவனு தெரிஞ்சு இருந்தால் உன்னைய கள்ளி பால் ஊத்தி காலி பண்ணியிருப்பேனே

முதுகு காட்டி ஓடும் ஓடுகாலி உனக்கு பால் கொடுத்த என் மார்பை மட்டுமல்ல என் தலையையும் அல்லவா வெட்டி இருப்பேன்

கொஞ்ச நாளா சாமியை காப்பாத்த போறோம்னு சொல்லிக்கிட்டு அடுத்தவன் வாயில மண் அள்ளி போட்டீங்க, இப்ப பொழுது போகலைனா பெட்டியை கெட்டிகிட்டு குண்டு வைக்க கிளம்பிடுரீங்க.

அறிவு கேட்ட மவனே, என்னைக்கு நீ கடவுளை காப்பத்த கிளம்பிநியோ அன்னைக்கே சாமி செத்து போச்சுடா, அவரு இந்த உலகத்தை படைச்சவரா இருந்த அவர காப்பாத்த அவருக்கு தெரியாதா.

அவரை காப்பத்த நீ படுற பாட்டுக்கு நீ அவர கும்புட கூடாது, அவரு தான் உன்னை சாமியா கும்பிடனும். அவருக்கு சக்தி இருந்தா ஜனங்க முன்னால வந்து சொல்லி இருப்பார் நான் தான் கடவுள்னு

இல்லாத ஒன்னுக்கு சண்ட போட்டு இருகவன் குடியை கெடுகிறதா நினச்சு கிட்டு உன் குடியவே கெடுத்துகிட்டு அலையுற கிறுக்கு பெயலே

மூளை இருந்தா இதெல்லாம் உனக்கு நான் சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது, அதனால்தான் உனக்கு குதிரை மாறி லாடம் காட்டி கடிவாளம் போட்டு சுலபமா பழக்கி டுராங்க

இந்திய தாயே நீ மதசார்பு இல்லாதவள் னு சொல்லிக்கிட்டு மதத்துக்கு பின்னாடி போற பெரியாத்தா, நீ மனித நேயத்தை வளக்க முயற்சி எடுக்கணும் தாயி,இப்படியே போச்சுனா உன்னைய குழி தோண்டி புதைக்க மாட்டாங்க குண்டு வைச்சே புதைசுருவாங்க

இதை மாத்த ஊருக்குள்ள நாங்க தான் பெரிய பருப்புன்னு சொல்லிக்கிட்டு திரியுற அரசியல் வாதிகளுக்கு மட்டுமல்ல, அந்த பெரிய பருப்புகளை தேர்ந்து எடுக்கு சிறு பருப்பாகிய நமக்கும் இருக்கு

ஊருக்குள்ள இருக்க குப்பை யை கொட்ட குப்ப தொட்டி வச்சா அதுல குண்டு வச்சு, இருக்க மனுசனை எல்லாம் குப்பை ஆக்கிகிட்டு இருக்கிற இவனுக மனசே ஒரு குப்ப தொட்டி ஆத்தா

நான் சொல்லுறதை சொல்லிட்டேன், நீ சீக்கிரம் கேட்கலைனா உன்னை உலக வரை படத்துல இருந்து எடுதிடுவானுக இந்த எடுப்பட்ட பெயலுக