Thursday, January 22, 2009

இது கள்ளக்காதல்?

அடிச்ச கடிகார அலாரத்தை அணைக்கனும்னு கை எடுத்த சாந்தி, கால்ல சுடுதண்ணி ஊத்தின மாறி எழுந்தாள். விடு விடுன்னு கிளம்ப ஆரம்பித்தாள்.


வருசக்கணக்கா குளிக்காம இருக்கிறவங்க எல்லாம் ஒரு நாளைக்கு நாலுதடவை குளிப்பாங்க.குடிக்கிறது கூழ் கொப்புளிக்கது பன்னீர் மாதிரி அவரு நடை, உடை எல்லாம் வருங்கால அமெரிக்க ஜனாதிபதி மாறி இருக்கும்.

பாண் பராக் போட்டு நாறிப் போன வாயில,ஆசிட் ஊத்தி கழுவுன மாறி ஒரு நாளைக்கு இருக்க நாலு தடவை பல்லு விளக்குவாங்க.


காதல் பேருல தியேடர்லையும், பீச்சிலும் இவங்க பண்ணுற அட்டுழியம் தாங்க முடியாது.நம்ம ஊரு பொது கழிப்பிடத்தை பாத்தே மூஞ்சு சுளிக்காதவங்க எல்லாம் இவங்களை பாத்து மூஞ்சு சுளிப்பாங்க


காதலும் ஒரு பாடம், அதற்கு படிப்பு, செயல்முறை விளக்கம்,தேர்வு எல்லாம் இருக்கு, இப்ப யாரும் படிக்கவோ, தேர்வு எழுதுவதோ இல்ல செயல்முறை விளகத்துக்கு முன்னுரிமை அளிக்கிறாங்க

இப்படி என்னை மாறி வாய்ப்பு கிடைக்காதவன் திட்டுற மாறி நடப்பாங்க. கலிகால காதல் கூத்துகளுக்கு ஒத்து ஊதுர, அசுர வேகத்துல கிளம்புற சாந்தி, அவள் தற்போதைய காதலன் எனபடுகிற சந்துருவை பார்க்க பீச்க்கு போகிறாள். அவங்க அங்க அடிக்கிற கூத்தை எழுத நான் ஒன்னும் மருதம், முல்லை ஆசிரியர் இல்ல.நீங்களே போய் உங்க கண்ணால பாத்து ரசிங்க

அவசரமா போற சாந்தியை காக்க வச்சு நான் உங்க கழுத்த அறுக்கறதுக் குள்ளே சாந்தி பஸ் நிறுத்தம் போயாச்சு. அவளுக்கு தெரியும் போல இவன் ஓட்டை வாயை திறந்தா மூட மாட்டான்னு

அஞ்சு நிமிசத்துக்கு ஒரு பஸ் வந்தாலும் அங்க நின்ன ௬ட்டம் குறைய ரெண்டு நாளாகும். கச்சா எண்ணெய் கொண்டு வந்த கப்பல் பெட்ரோல் இல்லாம நடு கடல்ல நின்னுடுதாம். நாடு போற போக்கிலே ஸ்டிரைக் பண்ணி பஸ் ஓடாம இருந்ததை விட பெட்ரோல் இல்லாம பஸ் ஓடாத நாள் அதிகமாகிடும்


அலுவலக வேலையோ, வேறு வேலையோ இருந்த இதை சாக்கு வச்சு மட்டம் போடலாம்,சாந்தியோட அவசரம் பாத்த இன்னைக்கு அவ போகலைனா அவள் காதலுக்கு மூடு விழா கொண்டாட வேண்டிய வருமோ என்னவோ .

மறுபடியும் இங்க வச்சி மொக்கை போடுறதுக்குள்ள சாந்தி மின்சார ரயில் நிலையம் போய்விட்டாள்.அவளை ஓடிபோய் பிடிக்கிறதுக்குள்ள முச்சு 300 மைல் வேகத்துல வாங்குது.

பஸ் நிறுத்துல பாத்ததுக்கு நேர் எதிர், அங்கே யாருமே இல்ல, வேக வேகமாய் ஓடிபோய் ரயில்ல ஏறினா, அங்க சாந்திய தவிர யாருமே இல்ல, ரயில் கிளம்புற மாதிரியும் இல்ல, ஆளுங்க ஏறுற மாறியும் இல்ல.

பொறுமை தாங்க முடியாம வெளியிலே வந்து விசாரிச்சா, மின்சார துறை அமைச்சர் பிறந்த நாள் விழாவை மின்சார சிக்கனம் செய்ய இன்னைக்கு விடுமுறை விட்டாசாம்(சத்தியமா அமைசர் ஆற்காடு வீராசாமி இல்ல).


சாந்திக்கு நான் பேசுறதே மொக்கைய இருக்கும் போல, இதையும் கேட்காம நடையை கட்டிடாள். அவள் நடந்தே பீச்சுக்கு போறாள்.

பெண்களுக்கு மட்டுமே லிப்ட் கொடுக்கிற புண்ணியவான் சாந்திக்கு லிப்ட் கொடுத்தான், அவ இருக்க அவசரத்துக்கு செக்ஸ் டாக்டர் பிரகாஷ் லிப்ட் கொடுத்தாலும் போய் இருப்பாள்.


தண்ணி போதை மனிதன் வாழ்கையை தடுமாற வைக்கும். காதல் போதை மனிதன் வாழ்கையே தடம் மாற வைக்கும். இப்படி ஒரு உருப்படாத தத்துவமும் சொல்லி முடிக்கதுகுள்ள சாந்தி பீச்சுக்கு போய்ட்டாள்.


பீச்சில சந்துருவை கண்டுபிடிக்க ரெம்ப கஷ்ட படலை, அவனை பாத்ததுல சந்தோஷ படுறதா, கோப படுறதான்னு அவளுக்கு தெரியலை.ஏன்ன்னா அவனும் இன்னொரு பெண்ணும் சிரியோ சிரியோ ன்னு சிரித்து பேசிகிட்டு இருந்தார்கள்.


1000 வாட்ஸ் பல்ப் வேகத்துல கோபமா அவனை பார்த்து போன சந்தியை கைய பிடிச்சு ஒருத்தன் இழுத்தான்.

"மன்னிக்கணும் உங்க கைய பிடிச்சதுக்கு, நீங்க யாரை திட்டணும்னு போறிங்களோ அவங்க பக்கத்தில இருகிறது என்னோட காதலி இன்னைக்கு 9.30 வரைக்கும், நான் அரை மணி நேரம் தாமதமா வந்ததுனாலே அவள் இப்ப என் முன்னாள் காதலி ஆகிவிட்டாள்."

"இப்படி காதலுக்கு பச்ச துரோகம் பண்ணுறவங்களை பச்ச பச்சைய திட்டுறதை விட அவங்களுக்கு நல்ல பாடம் காட்டணும்"

"என்ன சொல்ல வாரீங்க!! மிஸ்டர்"

"பிரசாத் அதுதான் என் பேரு"


"பாதிக்க பட்ட நாம ரெண்டு பெரும் சேந்து நம்ம காயத்துக்கு மருந்து போடலாம்.நீங்க ரெம்ப அலைந்து திரிந்து களைப்பா இருக்கிற மாதிரி இருக்கு,உங்களுக்கு ஆட்சேபனை இல்லனா காபி சாப்பிட்டுகிட்டே பேசலாம் "

சாந்திக்கு அவன் சொல்லுவது தெளிவாக விளங்கினாலும் அவன் பின்னால் அவள் கால்கள் நடந்தது,அதன் பின் அவள் மனம்,புத்தி எல்லாம்.பெண் புத்தி பின் புத்தி என்பது போல.

நம்ம சந்துருகிட்ட அவசரமா போக வேண்டியது இருப்பதால் சாந்திக்கு பிரியா விடை கொடுத்து விட்டு வேகமாக செல்வோம்.

"என்ன சந்துரு உன் ஆளு வரும் பாக்கலாம்னு சொன்ன இன்னும் வரலை"

"நீயும் தான் உன் ஆளு வரும் அறிமுக படுத்துறேன்னு சொன்ன?"

"ஆமா சொன்னேன், சரி அண்ணா நேரமாச்சு அப்பா,அம்மா தேடுவாங்க வா சீக்கிரம் போகலாம்"

என்று கூறிய சந்துருவின் தங்கை மாலா எழுந்து நடக்க ஆரமித்தாள், சந்துருவும் அவளை பின் தொடர்ந்தான்.

எங்க போறதுன்னு தெரியாமல் திருவிழாவில் காணாம போன புள்ள மாதிரி நின்ன எனக்கு மாலா பேசுவது லேசாக காதில் விழுந்தது

"என் வருங்கால அண்ணி பேரு சாந்தி, உன் வருங்கால மச்சான் பேரு பிரசாத்"

அண்ணனோட காதலிக்கும் தங்கையோட காதலனுக்கும் காதல்.

இது

நல்ல காதலா? ?

கள்ள காதலா? ?

இயக்குனர் பாலச்சந்தர் தான் இதுக்கு விடை சொல்லணும்


59 கருத்துக்கள்:

ஜோசப் பால்ராஜ் said...

செம வேகம் கதைல, எதிர்பாராத முடிவு. நல்லா இருக்கு.

ரொம்ப இயல்பா கதைய நகர்த்தியிருக்கீங்க, ஊடால ஒரு குத்து மி.வெ.து அமைச்சருக்கு வேற.

யூர்கன் க்ருகியர் said...

இந்த கதைய எந்த பத்திரிக்கைகாரங்களும் பிரசுரம் பண்ணமாட்டாங்கன்னு தெரிஞ்சி நீங்களே பிரசுரம் பண்ண மாதிரி தெரியுது.

குடுகுடுப்பை said...

நல்லா இருக்கு, என் பதிவுக்கு கதாசிரிய்ரா வந்துருங்க

நசரேயன் said...

/*செம வேகம் கதைல, எதிர்பாராத முடிவு. நல்லா இருக்கு. */

உங்கள் வருகைக்கும் உங்கள் கருத்துகளுக்கு என் மனமார்ந்த நன்றி ஜோசப் பால்ராஜ்

நசரேயன் said...

/*இந்த கதைய எந்த பத்திரிக்கைகாரங்களும் பிரசுரம் பண்ணமாட்டாங்கன்னு தெரிஞ்சி நீங்களே பிரசுரம் பண்ண மாதிரி தெரியுது.*/

முற்றிலும் மறுக்க முடியாத உண்மை
உங்கள் வருகைக்கு நன்றி

நசரேயன் said...

/*நல்லா இருக்கு, என் பதிவுக்கு கதாசிரிய்ரா வந்துருங்க */

உங்கள் கருத்துக்கு நன்றி குடுகுடுபையாரே

லீமன் பிரதர்ஸ் மாறி எங்க கம்பெனி திவால் ஆனா உடனே விண்ணப்பம் போடுறன், அது வரைக்கும் என்னை மறக்காம இருந்தால் நல்லது

Aero said...

pesama serial ku story elutha poda....ippa itha mari kalla kathal story-ku nalla varaverpu....

Nee serial-ku poita...whole industry un vittu munnadi thanda irukum....

innum pala kalla kadhal story elutha en valthukal...

oru request Adi ammavasi ku oru nalla kadhalai pathiyum sollunga..

நசரேயன் said...

/*
pesama serial ku story elutha poda....ippa itha mari kalla kathal story-ku nalla varaverpu....

Nee serial-ku poita...whole industry un vittu munnadi thanda irukum....

innum pala kalla kadhal story elutha en valthukal...

oru request Adi ammavasi ku oru nalla kadhalai pathiyum sollunga..

*/
:):)

Anonymous said...

Romba Nalla erukku. Ethu enna kathaya illa unmai sambavama :)

T.V.ராதாகிருஷ்ணன் said...

super

நசரேயன் said...

T.V.ராதாகிருஷ்ணன் ஐயா உங்கள் வருகைக்கு மிக்க நன்றி

Anonymous said...

இது என் கதை யாரு சொன்ன உங்களிடம். நான் முன்னாலேயே register பண்ணிஎருக்கேன். Register நம்பர் எங்கன்னு தெரியலே

நசரேயன் said...

/*Romba Nalla erukku. Ethu enna kathaya illa unmai sambavama :)
*/

1000 சதவிதம் கற்பனையே

நசரேயன் said...

/*
இது என் கதை யாரு சொன்ன உங்களிடம். நான் முன்னாலேயே register பண்ணிஎருக்கேன். Register நம்பர் எங்கன்னு தெரியலே


*/

வாங்க..வாங்க உங்களைதான் நான் தேடிகிட்டு இருக்கேன்

பழமைபேசி said...

அபாரம்...

ஆனா, கொஞ்சம் எழுத்துப் பிழைகளை சரி பண்ணுங்க...இன்னும் நல்லா இருக்கும்.

S.R.Rajasekaran said...

\\\வருசகனக்கா குளிக்காம இருக்கிறவங்க எல்லாம் ஒரு நாளைக்கு நாலுதடவை குளிப்பாங்க\\\


சொந்த அனுபவமோ

S.R.Rajasekaran said...

\\\வருசகனக்கா குளிக்காம இருக்கிறவங்க எல்லாம் ஒரு நாளைக்கு நாலுதடவை குளிப்பாங்க\\\


சொந்த அனுபவமோ

S.R.Rajasekaran said...

\\\காதல் பேருல தியடர்லையும், பீச்லும் இவங்க பண்ணுற அட்டுழியம் தாங்க முடியாது\\\


தெருவுலயும் இப்போ இந்த கூத்துதான்

S.R.Rajasekaran said...

\\\சாந்தி மின்சார ரயில் நிலையம் போய்விட்டாள்.அவளை ஓடிபோய் பிடிக்கிறதுக்குள்ள முச்சு 300 மைல் வேகத்துல வாங்குது\\\வெள்ளையம்மா அடுத்து சாந்தியுமா ???

S.R.Rajasekaran said...

\\\சாந்தி மின்சார ரயில் நிலையம் போய்விட்டாள்.அவளை ஓடிபோய் பிடிக்கிறதுக்குள்ள முச்சு 300 மைல் வேகத்துல வாங்குது\\\வெள்ளையம்மா அடுத்து சாந்தியுமா ???

S.R.Rajasekaran said...

இது சத்தியமா மீள்பதிவு

எம்.எம்.அப்துல்லா said...

//அவரு நடை, உடை எல்லாம் வருங்கால அமெரிக்க ஜனாதிபதி மாறி இருக்கும்.
//

கரெண்ட் டிரெண்டு :))))))

கபீஷ் said...

பழமைபேசி, உங்க முந்தின பதிவுக்கும் இதே பின்னூட்டத்தை போட்டார் :-):-)

ஹேமா said...

நசரேயன் வணக்கம்.உங்கள் பக்கம் வந்திருக்கிறேன்.வரலாம்தானே!சில பதிவுகள் பார்த்தேன்.பிடிச்சிருக்கு.
கொஞ்சம் சிரிக்கவும் செய்தது.

"இது கள்ளக் காதல்?"
சின்னக் கதையாக இருந்தாலும் திடீர் திருப்பம்.நல்லா இருக்கு.இதைத்தான் சொல்லி வைத்தார்களோ கண்ணால் காண்பதும் பொய்.காதால் கேட்பதும் பொய்.தீர விசாரிப்பதே மெய் என்று!

கபீஷ் said...

//உங்கள் பக்கம் வந்திருக்கிறேன்.வரலாம்தானே//

என்ன கேள்வி இது ஹேமா, சி.பு. தனமா, இது நம்ம இடம். நசரேயனை திட்ட கூட செய்யலாம். இதுக்கு நான், குகு,பழமைபேசி எல்லாரும் சேர்ந்து உங்களுக்கு தாராளமா அனுமதி தந்திருக்கோம்.

நசரேயன் said...

/*//உங்கள் பக்கம் வந்திருக்கிறேன்.வரலாம்தானே//

என்ன கேள்வி இது ஹேமா, சி.பு. தனமா, இது நம்ம இடம். நசரேயனை திட்ட கூட செய்யலாம். இதுக்கு நான், குகு,பழமைபேசி எல்லாரும் சேர்ந்து உங்களுக்கு தாராளமா அனுமதி தந்திருக்கோம்.*/

சரியா சொன்னீங்க கபீஷ்

ஹேமா said...

சரி கபீஷ் நீங்க,பழமைபேசி,அதுயார் குகு,எல்லாரும் இருக்கிற துணிவில இனி வரேன்.ஏன்னா நேத்து நசரேயன் என்னை திட்டினமாதிரி இருந்திச்சு.அதான்.திட்டினாரா இல்ல பாராட்டினாரா கேளுங்க ஒருக்கா.

வில்லன் said...

ஒரே கள்ள காதல் கதையா வருதே என்ன விஷயம். நெறையா கள்ளகாதல் பண்ணுவியளோ? ஏன்னா வாழ்கையே கதை கவிதையா வரும்ம்னு யாரோ சொல்ல கேள்விபட்டிருக்கேன்.

மீதி பின்னுட்டம் அப்புறமா போடுறேன். இப்போதைக்கு பிஸி. ரொம்ப வேல செய்ய சொல்லுராணுவ

வில்லன் said...

//ஹேமா said...

சரி கபீஷ் நீங்க,பழமைபேசி,அதுயார் குகு,எல்லாரும் இருக்கிற துணிவில இனி வரேன்.ஏன்னா நேத்து நசரேயன் என்னை திட்டினமாதிரி இருந்திச்சு.அதான்.திட்டினாரா இல்ல பாராட்டினாரா கேளுங்க ஒருக்கா.//

குகுன்னா குடும்பத்துல கொழப்பம் பன்னுரவர்னு அர்த்தம். செல்லமா குகுன்னு சொல்லுவோம். என்ன குடுகுடுப்பையரே சரிதான?????????????

நசரேயன் said...

/*ஹேமா said...
சரி கபீஷ் நீங்க,பழமைபேசி,அதுயார் குகு,எல்லாரும் இருக்கிற துணிவில இனி வரேன்.ஏன்னா நேத்து நசரேயன் என்னை திட்டினமாதிரி இருந்திச்சு.அதான்.திட்டினாரா இல்ல பாராட்டினாரா கேளுங்க ஒருக்கா.
*/
சத்தியம்மா இல்லைங்கே, இதுலே எதோ வெளிநாட்டு சதி இருக்கு, விசாரிக்க எப்.பி.ஐ/ஸ்காட்லாந்து போலீஸ் வேண்டும்

வில்லன் said...

S.R.ராஜசேகரன் said...
\\\சாந்தி மின்சார ரயில் நிலையம் போய்விட்டாள்.அவளை ஓடிபோய் பிடிக்கிறதுக்குள்ள முச்சு 300 மைல் வேகத்துல வாங்குது\\\

வெள்ளையம்மா அடுத்து சாந்தியுமா ???//

சாந்தி எதோ கேள்விப்பட்ட மாதிரி இருக்கே? எங்க!!!!! ஆங் புடிச்சுட்டேன். தலைவா இது நீங்க லீமன் பிரதர்ஸ்ல வேலபாக்கும்போது ஒரு "நண்பி" அந்த டைம் ஸ்கொயர் ஏரியாவுல எதோ பாருல!!!!!!!!!! சரிதானா???????????

வேண்டாம்ப்பா எனக்கேன் வீண் வம்பு.

சரி சரி வாழ்க்கை கதையா வருது வாழ்த்துக்கள். சாந்திய ரொம்ப கேட்டதா சொலுங்க.

வில்லன் said...
This comment has been removed by the author.
வில்லன் said...

// கபீஷ் said...
பழமைபேசி, உங்க முந்தின பதிவுக்கும் இதே பின்னூட்டத்தை போட்டார் :-):-)//

பழமைபேசி பழமைவாதி. புதுசா எதுவும் தெரியாது. பழைய புராணத்த தூசி தட்டி போட்டுருவாரு. ஆனா உங்களைபோல ஆளுங்க பசக்குன்னு அமுகிர்றிங்க என்ன பண்ண.

யோவ் பழமைபேசி கொஞ்சம் புதுசா ஏதாவது யோசிங்கையா

ஹேமா said...

கபீஷ்,நசரேயன் என்னைத் திட்டலயாம்.சத்தியம் பண்ணிட்டார்.பொலீஸ் எல்லாம் வேணாம் நசரேயன்.விட்டிடுங்க அவங்களை.

கபீஷ் said...

//ஏன்னா நேத்து நசரேயன் என்னை திட்டினமாதிரி இருந்திச்சு.அதான்.திட்டினாரா இல்ல பாராட்டினாரா கேளுங்க ஒருக்கா//


சிரிக்க வைக்காதீங்க ஹேமா, நசரேயன் ஒரு புள்ளபூச்சி(ஆக்கப்பட்டவர்) அவராவது திட்டறதாவது? அதுவும் உங்களை, உட்டுருவோமா நாங்க?

கபீஷ் said...

ஹேமா, நீங்க சொன்னதுனால, தப்பு செய்யாட்டியும், அவரை மன்னிச்சிட்டேன்.:-):-)

பழமைபேசி said...

//வில்லன் said...

யோவ் பழமைபேசி கொஞ்சம் புதுசா ஏதாவது யோசிங்கையா
//

தளபதிக்கு மின்னஞ்சல்ல வெச்சிருக்கு பெரிய ஆப்பு! இஃகிஃகி!!

அத்திரி said...

முடிவு சத்தியமா இப்படி இருக்கும்னு எதிர்பாக்கலை...

நிகழ்கால காதலில் இப்படியும் ந---டக்---க-------லாம்

அத்திரி said...

வெள்ளையம்மா, கருத்தமா.சாந்தி எல்லாரையும் புளியங்குடிக்கு கூட்டிட்டு வாங்க

Anonymous said...

எ.கொ.ச.

Anonymous said...

தளபதி, உங்களுக்கு பதிவுலக பாலசந்தர்னு பட்டம் குடுக்கலாமானு யோசிக்கறேன்.

RAMASUBRAMANIA SHARMA said...

Story is good...why this type of heading...!!! Is it to make peoples to read...o.k. Your story telling style is fine, and the twist is superb...kepp doing this good job...

RAMASUBRAMANIA SHARMA said...

>>>>>>>

Anonymous said...

அத்திரி ...
வெள்ளையம்மா, கருத்தமா,சாந்தி எல்லாரையும் புளியங்குடிக்கு கூட்டிட்டு வாங்க
//

இது வேறhய்யா? கேட்டராய்யா கேள்விய?
என்ன அத்திரி ஊருக்கு கிளம்பியாச்சோ... நில்லுய்யா... நானும் வாரேன்.

தமிழன்-கறுப்பி... said...

நல்லாருங்க அண்ணன்...

தமிழன்-கறுப்பி... said...

:)

Anonymous said...

1

Anonymous said...

2

Anonymous said...

3

Anonymous said...

அய் 50-வது நானு.

Anonymous said...

50-வது மறுமொழியிட வாய்ப்பளித்த அன்பு உள்ளங்களுக்கு நன்றி...நன்றி...நன்றி.

S.R.Rajasekaran said...

\\\50-வது மறுமொழியிட வாய்ப்பளித்த அன்பு உள்ளங்களுக்கு நன்றி...நன்றி...நன்றி.\\\


அண்ணாச்சி ஆனந்து இங்க என்ன கட்சி கூட்டமா நடக்குது
நல்லவேளை மலர்மாலைய மானிக்கமாலையா அணிவிக்கிரோம்ன்னு சொல்லாம போய்ட்டிங்க

வில்லன் said...

தண்ணி போதை மனிதன் வாழ்கையை தடுமாற வைக்கும். காதல் போதை மனிதன் வாழ்கையே தடம் மாற வைக்கும்.

நல்ல தத்துவம். ஆனா காதலே பண்ணாதவங்க (உதாரணம் நசரயனோட கனடா அனுபவம். நீங்க என்ன காதலா பண்ணிங்க. தடம்மாறி பின்ன அடிவாங்கி என்ன ஒரு சின்ன புள்ளதனம். நெனச்சாலே வெக்ககேடு) தடம் மாருராங்களே அவங்கள என்ன பண்ண!!!!!!!!!!!!!!!!!!!!!.

வில்லன் said...

// கடையம் ஆனந்த் said...
அய் 50-வது நானு.//

என்ன நக்கலா!!!!!!!!!!!!!!!! நசரேயன் மாதிரி ஒண்ணுமே மெசேஜ் போடாம சத்தம் அடிக்க. சரியான மொக்கையா. நீங்க என்ன நசரேயன் ஊரா

வில்லன் said...
This comment has been removed by the author.
வில்லன் said...

//அத்திரி said...
வெள்ளையம்மா, கருத்தமா.சாந்தி எல்லாரையும் புளியங்குடிக்கு கூட்டிட்டு வாங்க//

எதுக்கு ஊருல இட்லி கடை போடவா. தலைவருக்கு நல்ல அனுபவம். வேணும்னா தேவயானி மாமியார்ட்ட கேடுகுங்க .

Aero said...

nalla katha; kathai pala iruku..atha eluthurathu.....

priyamudanprabu said...

நல்லாயிருக்கு
கடைசியில் எதிர் பார்க்காத திருப்பம்

மங்களூர் சிவா said...

நல்லா இருந்தது கதை.