Monday, June 28, 2010

கரடி மலையில் நீச்சல்


அந்த காலத்திலேயே நான் சின்ன பையனா இருக்கும் போது பள்ளி௬டம் விட்டா எங்களோட பொழுது போக்கே நீச்சல் தான், ஊரிலே இருக்கிற எல்லா கிணறு, குளம்,குட்டைகளிலே குளிப்பது தான் வேலை,நீச்ச போட்டியிலே கலந்து கொண்டு பரிசு வாங்கும் அளவுக்கு திறமை இல்லைனாலும், எந்த தண்ணியானாலும் நீந்தி கடந்து விடுவேன்.

கடல் நீச்சல், குளத்து நீச்சல் மற்றும் கிணத்து நீச்சல் அடிச்சி பழகிய எனக்கு பல வருடங்களாக நீச்சல் அடிக்க வாய்ப்பே கிடைக்கலை, நீச்சல் அப்படின்னு 
ஒண்ணு இருக்கிறதையே மறந்து போயிட்டேன்.இவ்வளவு நாளும் குளிரிலே கஷ்டப்பட்டாலும், வெயில்  அடிக்கும் போதாவது எங்கையாவது நீந்தி குளிக்க 
இடம் கிடைக்குமா என்ற ஒரு ஏக்கம்.அதைவிட பெரிய வருத்தம், தண்ணியிலே(குடி தண்ணீர் மட்டுமே) மிதக்கவும் முடியலைன்னு.  

என்னோட நீச்சல் திறமைகளை விவரிக்கும் போதே, எனக்கு நீச்சல் சொல்லி கொடுக்க வேண்டும் என்று கத்துக்குட்டி தம்பி ஒருவர் என்னிடம் சொல்லி வைத்து இருந்தார். கல்லூரியிலே பல சக நண்பர்களுக்கு நீச்சல் சொல்லி 
கொடுத்த அனுவத்திலே நானும் சரி என்று சொன்னேன்.

இப்படி கஷ்டமான காலத்திலேயே சில நண்பர்கள் சேர்ந்து கரடி மலை என்ற பியர் மௌண்டன்(bear mountain) போகலாம்  என்று முடிவு எடுத்தோம்.அங்கே கரடி எல்லாம் இருக்குமா என்று விசாரித்தப்ப "நாங்க எல்லாம் கறுப்பு கரடி ௬டத்தான் போறோமுன்னு சொல்லிட்டாங்க, அதற்கு பின் கரடியைப்  பத்தியே பேசலை. 

காடு, மலைகளை எல்லாம் கடந்து கரடி மலைக்கு போகலை, நல்ல தார் சாலையிலே சென்றோம். நாங்கள் போனவுடனே கொண்டு போன கட்டு சோறுகளையெல்லாம் எடுத்து வைத்தேன், மக்கள் வெள்ளம் நீச்சல் குளத்திலே இருந்து வந்தும், போய் கொண்டும் இருந்தார்கள். 

என் ௬ட வந்த கத்துக்குட்டி இப்பவோ போகணும் என்று அடம் பிடிக்க நான் அவரை சமாதானப்  படுத்தி விட்டு கொண்டு சென்ற கட்டு சோற்றை எல்லாம் முடித்து விட்டு நீச்சல் குளத்தை நோக்கி நடந்தோம். நீச்சல் குளம் அருகிலே சென்றோம், நீச்சல் குளமே வெறுமையாய் இருந்தது. 

அருகில் இருந்த கத்து குட்டி 

"அண்ணா, நீங்க குளிக்க வருகிறதை யாரோ தெரிஞ்சி கிட்டு, இங்கே இருந்த வெள்ளையம்மா, வெள்ளைப்பன் கிட்ட எல்லாம் சொல்லிட்டாங்களோ?" 

"உனக்கு நீச்சல் சொல்லிகொடுக்கிறேன்னு சொன்ன எனக்கு இன்னும் 
வேணும்" ன்னு சொல்லி கிட்டே நீச்சல் குளத்தை நோக்கி நடந்தோம்.

அங்கே  நின்று கொண்டு இருந்த வெள்ளைப்பன், 

"அல்லோ.. இங்கே குளிக்க முடியாது" (பால அண்ணன் கிட்ட இங்கிலிபிசு கத்து கிட்டு இருப்பாரு போல தெரியுது)

"ஏன்"

"ஏன்னா, இங்கே மின்சாரம் இல்லை"

"அண்ணே, எங்க ஊரு குளத்து தண்ணியை எல்லாம் நீங்க பார்த்தது கிடையாது, அதிலே எல்லாம் நான் குளித்து இருக்கேன், இதெல்லாம் 
என்னைய ஒண்ணும் செய்யாது"

"அப்ப, நீ உங்க ஊரிலே போய் குளிச்சிக்கோ" ன்னு சொல்லி என்னை திரும்பி 
போக சொல்லி விட்டார்.

நானும் சோகத்திலே  வந்து அருகிலே இருந்த ஏரிப் பக்கம் உட்கார்ந்து, இவ்வளவு தண்ணி இருந்தும் குளிக்க முடியலையே என்கிற வருத்தத்தோட, வாடி வதங்கிப் போன முகத்தோட இருந்தேன். அப்ப கத்துக்குட்டி தம்பி 

"அண்ணே ரெம்ப வெயில நினையாதீங்க கறுத்துப் போவீங்கன்னு, உடம்பிலே கொஞ்சம் நஞ்சம் இருக்கிற கறுப்பு காணப் போககுடாதுன்னு நல்லா எண்ணமா? இல்லை என் கறுப்பு நிறம் மேல பொறமையான்னு தெரியாம 
யோசித்துகிட்டே ஏரிகரையிலே நடந்தோம்.

அருகிலே ௬டைப் பந்து விளையாடி கொண்டு இருந்த கறுப்பு அண்ணாச்சி பையன் சுமார் பதினைந்து வயது இருக்கும், பந்தை தவற விட, அது வேகமா உருண்டு ஏரிக்கரை தடுப்பு பலகை தாண்டி ஏரி உள்ளே விழுந்து விட்டது. வேகமா வந்த அவனும் பந்தின் பின்னால் ஏரியிலே விழுந்து விட்டான்.   

விழுந்த உடனே பந்தை எடுப்பாருன்னு நானும் பார்த்தேன், அதுக்கு பதிலே அவரு கையை காலை உதைத்துகிட்டு தண்ணீரிலே உதை பந்து விளையாடினார், உடனே அருகிலே இருந்த கத்துக்குட்டி தம்பி

"அண்ணே, இவன் துள்ளுறதைப் பார்த்தா, நீச்சல் தெரியாத மாதிரியே இருக்கு, நானும் உள்ளே விழுந்தா அவனை மாதிரி தான் செய்வேன்"

"அப்படியான்னு" சொல்லிட்டு விழுந்த பையனிடம் "உனக்கு நீச்சல் தெரியுமா?" ன்னு கேட்டேன். 

அவன் எனக்கு பதில் சொல்லாம மறுபடியும் முங்கி எழுந்தான். ஆனா மேல வந்து காப்பாத்துங்க.. காப்பாத்துங்கன்னு கத்தினான். 

உடனே நான் போட்டு இருந்த குளிர் கண் கண்ணாடியை கழட்டி விட்டு தண்ணீரிலே குதித்தேன், இங்கே ஒரு விவரம் சொல்லணும், தண்ணியிலே விழுந்தவங்களை காப்பாத்தும் போது அவங்களுக்கு முன்னால குதிக்கக் ௬டாது, ஏன்னா அவங்க  உங்க கழுத்தை பிடித்து அமுக்கி விட்டால் ரெண்டு பேருக்கும் சங்குதான், நான் அவரின்  பக்க வாட்டிலே குதித்து பின்னால் இருந்து அவரோட சட்டையைப் பிடித்து கரை ஓரமாக கொண்டு வந்தேன்,  மேல இருந்த சில நபர்கள் அவனை கரையிலே தூக்கி விட்டார்கள், நானும் மேல வந்தேன். 
அதற்குள்ளே கொஞ்சம் ௬ட்டம் ௬டி விட்டார்கள், என்னோட வீட்டு எஜமானி யம்மாவும் வந்து, எல்லோரும் விவரம் விசாரித்து கொண்டு இருக்கும் போது 

"உங்க அலைபேசியை எங்கே?"  

அது ஒரு அலைபேசி ன்னு சொன்னாலும், செங்கல் மாதிரி இருக்கும், போனதிலே எனக்கு சந்தோசம், இருந்தாலும்  விடலை 

"நான் ஆசையா வாங்கி கொடுத்த செங்கல்" அடுத்த வினாடியே மறுபடியும் ஏரிக்குள்ளே குதித்து  முங்கு நீச்சல் அடித்து தேடி கண்டு பிடிச்சி எடுத்து 
விட்டுத்தான் கரைக்கு வந்தேன்.

காப்பாத்தின ஆள் போயிட்டாரு, ஆனா காப்பாத்தின அலைபேசி வேலை செய்யலை, எனக்கு ரெம்ப சந்தோசம் புது அலைபேசி கிடைக்கும்னு, ஆனா நடந்து என்ன 

வீட்டுக்கு வந்த முதல் வேலையா, அலைபேசியை மின்சார முடி உலர்த்திலே காய வைத்து மீண்டும் அடுப்பிலே சோத்து பானை மேல வச்சி, ரெண்டு நாள் கழிச்சி, என் பழைய செங்கல் எனக்கே வந்து விட்டது. நீச்சல் குளத்திலே குளிக்க முடியலைன்னே வருத்தம் இருந்தாலும், குளத்திலே குதித்து ஆளைக் 
கரைசேர்த்த மகிழ்ச்சி இன்னும் இருக்கு.இடுகையிலே கருத்து சொல்லாம முடிக்க ௬டாதாம், 
அதனாலே எல்லோரும் நீச்சல் படிங்க

குறிப்பு : சம்பவம் நடந்த இடம் கீழே உள்ளது
Wednesday, June 23, 2010

வட அமெரிக்க பதிவர் சந்திப்பு

சந்திப்பு அப்படின்னு ஒண்ணு நடத்தி பல வருஷம் ஆனதாலே சந்திக்கலை, வட அமெரிக்க வலைப் பதிவர்கள் எல்லாம்(?) Fetna விலே வந்து குமியப் போறதாகவும், சென்னையிலே இருந்து அண்ணன் அப்துல்லா அவர்கள் சிறப்பு விருந்தினரா கலந்து கொள்வதின் நிமித்தமாகவும் இந்த சந்திப்பை நடத்தலாம் என்று சங்கம் இல்லாவிட்டாலும் பொது குழு ௬டி முடிவு எடுத்த படியாலே சந்திப்பு நடை பெறுகிறது.

ஜூலை 3, வாட்டர்பெரி, கனெக்டிகெட்டிலே பதிவர் சந்திப்பு நடைபெறும் என்பதை தாழ்மையோட தெரிவித்து கொள்கிறேன். சந்திப்பு நிகழ்ச்சி நிரல் எல்லாம் தயார் செய்யலை. ௬ட்டம் ௬டுவதைப் பொறுத்து முடிவு செய்தது கொள்ளலாம்.

ஆட்டோ அனுப்ப விலாசம் தெரியாம இருந்தவங்களுக்கு எல்லாம் நற்செய்தி, நல்ல வாய்ப்பு வரும் போது தவற விடக்௬டாது, அதனாலே பதிவர்கள் மட்டுமில்லாமல், வாசகர்களும் கலந்து கொள்ளலாம், எனக்கு எல்லாம் வாசகர்கள் கிடையாது என்பது நல்லாவே தெரியும், ஆனா பதிவர் மனிஷ் அதாங்க பழமைபேசி, பதிவுலகிலே பல வருடங்கள் நின்று கொடி ஆட்டிக்கொண்டு இருக்கும் இளா,மேலும் அஞ்சா நெஞ்சன்  அண்ணன் ச்சின்ன பையன், பாஸ்டன் ஸ்ரீராம்மற்றும் பெருசு அவர்கள் எல்லாம் வருகை தர இருக்கிறார்கள் சிறப்பு விருந்தினரா குடுகுடுப்பையாரும்,முகிலனும் நேரத்திலே கலந்து கொள்ள வாய்ப்பு மிகக்குறைவாக இருப்பதால் சந்திப்பு வருகிற எல்லோருமே சிறப்பு விருத்தினர் தான். இந்த பதிவர் சந்திப்பு மாநாடு(?) பற்றி தொடர்பு
கொள்ள வேண்டியவர்கள்.

சிறப்பு விருந்தினர் 


pazamaipesi@gmail.காம்(com)வருகை பதிவேட்டை பதிவு செய்ய விரும்புபவர்கள், மற்றும் ஆசி வழங்குபவர்கள் பின்னூட்ட பெட்டியிலும் தொடர்பு கொள்ளலாம்.

கனெக்டிகெட்டிலே நடக்கும் பதிவர் சந்திப்பை எப்படி வட அமெரிக்கா என்று சொல்லலாம் என்று கேட்பவர்கள் எல்லாம் கண்டிப்பாக பதிவர் சந்திப்புக்கு வரவும்.


Tuesday, June 22, 2010

21 ம் நூற்றாண்டு கல்வெட்டு

"அம்மா என்ன எல்லாம் முட்டை முட்டையா இருக்கு "

"அது எல்லாம் உங்க அப்பா பரிச்சையிலே வாங்கின முட்டை இல்லை"

"நான் பதினைந்து முட்டையிலே பன்னிரண்டு எழுத்து எழுதி இருக்கேன்"

"உனக்கு பிடிச்ச எழுத்து எது?"

"அந்த மூணு முட்டை தான்"


Friday, June 18, 2010

பலி ஆடுகளும், சிலப்பதிகாரமும்

பொறுப்பு அறிவித்தல் : எச்சரிக்கை இலக்கிய இடுகை 

பலின்னு சொன்னா பழி தீர்க்க பலியானவர்களை சொல்லலாம், இயற்கை மரணம் இல்லாமல் பாதியிலே போனவர்களைஎல்லாம் பலி ஆனார்கள் என்று சொல்லலாம்.ஆனா நாம பார்க்க போறது பலி ஆடுகள் என்கிற பரிதாப பட்ட ஜீவன்களை பற்றி பேசுகிறது இந்த கருப்பு ஆடு.கருப்பு ஆடுன்னு ஏன் எல்லோரும் சொல்லுறோம், அது எங்கே இருந்து வந்தன்னு முழம் போட்டு விளக்க மணி அண்ணன் இருப்பதாலே, அவரு என்னன்னு விளக்கம் கொடுப்பாரு, நான் சொல்ல வந்த கதைக்கு திரும்ப வாரேன். 

ஏன் பலி பன்னிகள், பலி கழுதை, பலி குரங்கு, பலி சிங்கம், பலி புலி ன்னு சொல்லுறது இல்லை, கிராமங்களிலே கோவிலுக்கு பலி கொடுப்பதற்கு கடா வளர்ப்போம்.பலி போட்டு, ஆட்டு ரத்தம், கிட்னி, குடல் எல்லாத்தையும் பொரியல் பண்ணி சாப்பிடுவோம்.ஆமா மனுசனா இருக்கிற பலி ஆடுகள், தங்கள் வாழ்கையை தியாகம் செய்து அடுத்தவர் வாழ வழி செய்கிறார்கள்.

இந்த பலி ஆடுகள் எங்கே இருக்கிறது, அதைப்பற்றி இலக்கியத்திலே என்ன சொல்லுறாங்கன்னு பார்க்கலாம்.

கல்யாணம் ஆனா புதுசிலே 

மாசறு பொன்னே வலம்புரி முத்தே
காசறு விரையே கரும்பே தேனே

என்று கண்ணகியை புகழ்ந்த கோவலன், கொஞ்ச நாள் கழிச்சி வீட்டு சாப்பாடு பிடிக்காம, கடை பக்கம் போனவன் மாதவியை பார்த்து துண்டு போட்டு உட்கார்ந்து விடுகிறார்.

கோவலன் மாதவிக்கு உதட்டு சாயம், முகச்சாயம் ஆடை அணிகலன்கள் வாங்கின செலவு, பிசா, பர்கர் சாப்பிட்ட செலவிலே,வெள்ளை துண்டு போட்டுக்கிட்டு போன மனுஷன், கடைசியிலே மஞ்ச துண்டு போட வேண்டிய நிலை வந்தது.

இங்கே இன்னொரு உண்மையும் சொல்ல வேண்டிய இருக்கு, கோவலனுக்கும்,மாதவிக்கும் பிறந்தவள் மணிமேகலை ன்னு மணிமேகலையை எழுதிய சீத்தலை சாத்தனார் சொல்லுறாரு, கோவலன் மாதவியை திருமணம் செய்து இருந்தால், மாதவி கோவலனை வஞ்சித்து மஞ்ச துண்டு போட வைத்தாளா என்று தெரியலை.

இங்கே பலி ஆடாய் முதலிலே கண்ணகி இருப்பதாக தோன்றினாலும், உண்மையான பலி ஆடு கோவலனே, போன மச்சான் எப்படியும் திரும்பி வருவான்னு நம்பிக்கையோடு காத்து இருந்தாள் கண்ணகி.அவ நம்பிக்கை வீண் போகலை,அடிச்சாலும் பிடிச்சாலும் தங்கமணியே தெய்வமுன்னு திருப்பி வந்தார்,  கல்லானாலும் பொண்ணாட்டி, புல்லானும் புருசி என்கிற மாதிரி, அவரு திருந்தி வந்தாரான்னு இல்ல வேற வழி இல்லாம திரும்பி வந்தாரான்னு 
எனக்கு தெரியலை. இளங்கோவடிகள்ட தான் கேட்கணும்

திரும்பி வந்த கோவலனுக்கு நல்ல ஒரு ருசியான விருந்து கொடுத்து கண்ணகி அவனை எரித்து இருந்தால், இன்றைக்கு சென்னை கடற்கரையிலே இருக்கும் சிலையானது அகில உலகமெங்கும் பரவி நியூயார்க் சுதந்திர தேவி சிலையே இன்றைக்கு கண்ணகி தேவி சிலையாக மாறி இருக்கும்.நாமும் பாரதி கண்ட புதுமைப் பெண் என்று சொல்லி இருக்க மாட்டோம், இளங்கோ கண்ட புதுமைப் பெண் என்று சொல்லி இருப்போம்(?).

சிலப்பதிகாரத்தின் கதை ஆசிரியர் ஏன் அதை செய்யலைன்னு தெரியலை, ஒருவேளை அரியணைக்கு தகுதியாக இருந்தும் தம்பி சேரன் செங்குட்டுவனுக்காக துறவு வாழ்க்கை மேற்கொண்டு தியாகம் செய்த காரணமோ என்னன்னு தெரியலை.வாழ்க்கையை தியாகம் செய்த அவருடைய படைப்பின் பாத்திரத்தையும் தியாகி ஆக்கி இருக்கலாம்.எழுத்தாளரின் படைப்பிலே நிஜ வாழ்வின் தாக்கம் இருக்கும் என்பதை உறுதியா சொல்லலாமா? 

முதல் பாதியிலே குத்தாட்டம், களியாட்டம் எனச்செல்லும் கதையிலே, நாயகனின் பணமும் கரைந்து கழைத்து விடுகிறார்.பாட்டுக்கு அந்த காலத்திலேயே வெளி நாடு போயிருப்பாங்களோ?. இரண்டாம் பாதியிலே வயத்து பொழைப்புக்கு வழி இல்லாம, கண்ணகி காலிலே சரணம் அடைந்து(?) விட,புண்ணியவதி பெரிய மனசு பண்ணி கோவலனை மீண்டும் சேர்த்து கொள்கிறாள். (நடப்பு நடைமுறைக்கு சாத்தியப் படாத நிகழ்வு, முயற்சி செய்தது பார்க்க வேண்டாம், விளைவுகளுக்கு நிர்வாகம் பொறுப்பு அல்ல)

வந்தவனை வீட்டு செலவுக்கு பணம் ஏற்பாடு பண்ண மதுரைக்கு தன்னோட கால் சிலம்பை கொடுத்து சேட்டு கடையிலே அடகு வைத்து/வித்து பணம் வாங்கி வர அனுப்பிய கண்ணகியின் 
நகைகள் கட்டாயமாக கழட்டப் பட்டது.போனவர் ஒரேயடியாய்ப் போய் விட்டார்.கணவன் இறந்ததுக்கு காரணமானவர்களை பழி வாங்கும் நோக்கிலே மதுரையையே பலி வாங்கி விட்டாள். பழி வாங்கும் கதையின் கருக்கள் எல்லாம் இங்கே இருந்து வந்தவையா(?).
கணவன் அகால மரணத்திற்கு காரணமான மதுரை மண்ணையும், மன்னனையும் சுடு காட்டுக்கு அனுப்பி வைத்து விட்டாள்.

ஏன் கண்ணகி மதுரையை எரிக்க வேண்டும், நியாமாகப் பார்த்தல் கண்ணகி எரிக்க வேண்டியது மாதவியே, கோவலன் சாவுக்கு மூல காரணம் யார் என்று நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.சிலப்பதிகார கதையின் ஆசிரியர் சேர நாட்டை சேர்ந்தவர், ஆனால் கதைகளம் அமைக்கப் பட்டது சோழ, பாண்டிய நாட்டிலே, தன்னோட தம்பி சேரன் செங்குட்டுவன் பாண்டிய நாட்டை பிடிக்க முடியலையே என்ற ஆதங்கத்தை 
வைத்து கதையின் முடிவில் மதுரையை எரித்து இருக்கலாம்(?).

மாதவியும் தன்பால் சேர்ந்த ஒரு பெண் என்றால், மதுரை எரியும் போது அங்கும் அநேக பெண்கள் இருந்து இருக்க வேண்டும்.இதற்கு ஊள் வினை, மண் வினை, மச்சி வினை காரணமான்னு தெரியலை.ஆனால் கண்ணகியின் கோபத்துக்கு மதுரை மக்கள் பலி ஆடுகள் ஆகி இருக்கிறார்கள்.அதனாலேயே என்னவோ இன்னும் மதுரை பெரிய கிராமமாக இருக்கிறது(?).

இலக்கியங்களிலே மட்டுமல்ல நிஜ வாழ்கையிலே நிறைய பலி ஆடுகள் இருக்கிறது, பலி ஆடுகள் இல்லாவிட்டால் பணிக்கு இடம் இல்லை. இப்போதைக்கு ஆராய்சி இவ்வளவு தான், இனிமேல ஏதாவது யோசித்தா(?) சொல்லி அனுப்புறேன்.Wednesday, June 16, 2010

ராவணன்காத்து கொண்டு இருந்து கை கடிகாரத்தைப் பார்த்து பல்லை கடித்து கொண்டு இருந்த நேரம், எனக்கு பின்னால் இருந்து 

"மன்னிச்சிகோடா செல்லம், கொஞ்சம் தாமதமாகி விட்டது"

அவள் என்னை செல்லம் என்று சொல்லும் போது இன்னும் கொஞ்ச மாட்டாளா என்று ஆசை மனதிலே இருந்தாலும்

"எனக்கு கொஞ்சம் நெருடலா இருக்கு, நீங்க இப்படி சொல்லும் போது" ன்னு சொன்னேன் 

"மரியாதையா பேசினா எனக்கு பிடிக்காது,எத்தனை தடவை சொல்லி இருக்கேன், என்னை நீங்கன்னு சொல்லக் ௬டாதுன்னு" 

"உங்களை மாதிரி அழகானா பெண்ணோட வெளியே சுத்துறது காதல்னு யாரும் தப்பா 
நினைச்சிட்டா?"

"காதலியா இருந்தாத்தான் கூட சுத்துவீங்களோ?"

பல கோணங்களிலே அழகியா இருந்தாலும், சில கோணங்களிலே கொஞ்சம் சப்பை பிகரு தான், ஆனா நேராக பார்த்தா தேவதை மாதிரி இருப்பா, நான் அவளை சந்தித்ததே அலுவலக உயர் தூக்கியிலே, ௬ட்டம் நிறைந்த உயர் தூக்கியிலே ஒரு நாள் கதவு அடைபடும் முன்னால் தனது வெள்ளரி கைகளை கொண்டு தடுக்க முயன்ற அவளின் கரங்களின் அழகுக்கு களங்கம் வந்து விடக்௬டாது என்பதற்காக மீண்டும் கதவை திறந்து விட்ட என்னைப் பார்த்து சொன்ன முதல் நன்றியே எங்கள் நட்பின் ஆரம்பம்.     

"சரி இனிமேல சொல்லலை"

"நாம எங்கே போறோம்?"

"என்னோட வீட்டிலே ஒரு சின்ன வேலை, முடிச்சிட்டு படத்துக்கு போறோம்"

"சரி"

சொல்லிவிட்டு தலையை ஆட்டினேன், அடுத்த அரை மணி நேரத்திலே அவளோட வீட்டின் முன்னே இருந்தோம், உள்ளே போக தயக்கமாக இருந்த என்னை கையைப் பிடித்து அழைத்து 
சென்றாள்.இவ்வளவு பெற வீட்டிலே அவளைத்தவிர யாருமே இல்லை என்பது எனக்கு ஆச்சரியாமா இருந்தது. எனக்கு குடிக்க பழரசம் கொடுத்து விட்டு உள்ளே சென்றாள்.

கால் மணி நேரம் கழித்து உடையை மாற்றி விட்டு வந்தாள், என்னைப் பார்த்து சிறிது ஆச்சரியப் பட்டதைப் போல 

"நீ இன்னும் ஜீஸ் குடிக்கலையா?"

"இல்லை, கையிலே எடுத்து குடிக்கும் முன்னே கீழே விழுந்து விட்டது" என்று சொல்லி முடிக்கும் முன் அழைப்பு மணியும், அலைபேசி மணியும் ஒரே நேரத்திலே அடித்தது.

அலைபேசியை எடுத்த உடனே "இன்னும் தயார் இல்லை கொஞ்ச நேரம் ஆகும்"

அவள் பேசி கொண்டு இருக்கும் போதே கதைவை திறந்து ஒருவர் உள்ளே வந்தார், எனக்கு அவரைப் பார்த்தும் என்ன சொல்லன்னு தெரியலை, ஒரு புன்னகையோட முடித்தேன்.அவள்  அலைபேசியை அனைத்து விட்டு என்னிடம் 

"இவரு என் வீட்டுக்கு எதிர் வீடு,என்ன வேண்டும் சாம்?" 

"இல்லை சும்மாதான் வந்தேன், படிக்க புத்தகம் ஏதும் இருக்குமான்னு"

"நான் அவசரமா வெளியே போயிட்டு இருக்கேன், நீ நாளைக்கு வா" என சொல்லி விட்டு, அவனை வாசல் வரை சென்று வழி அனுப்பிவிட்டு வந்தாள்.

"போகும் முன் இவரு தான் நீ சொன்ன அவரா?"

"ஹும்" என்று சொல்லி கிட்டு கதவை சாத்தினாள்

அவள் வருமுன் கீழே விழுந்த பாட்டிலை எடுத்து அதிலே ஜூஸ் ஊத்தி வைத்து கொண்டு இருந்தேன்,அதை பார்த்த என்னிடம் 

"சீக்கிரம் குடி போகலாம்"

"இது எனக்கு இல்லை உனக்குத்தான்" 

"எனக்கு வேண்டாம்"

"இதிலே என்ன கலந்து இருக்கு?"

"என்ன சொல்லுற!!!!"

"நீதான் சொல்லணும்?"

"நீ சொல்லுறதைப் பார்த்தா நான் எதோ உன்னை மயக்க இதிலே மயக்க மருந்து கலக்கி இருக்கிற மாதிரி சந்தேகப் படுற?"

"ஆமா, நீ என்னை மயக்கத்தான் வந்து இருக்க, நானும் உன்னை பல முறை கவனிச்சி இருக்கேன், உன்னோட நடவடிக்கைகள் எல்லாம் சரி இல்லை,அலுவலத்திலே உயர் தூக்கியிலே நுழைகிற நீ, திரும்பி எப்படி போறன்னு தெரியலை,இப்பக்௬ட தொலைபேசியிலே தயார் இல்லைன்னு யாரிடமோ என்னைப் பற்றிதானே பேசின?"

"ஹும்.. உடம்பிலே கொழுப்பு அதிகம் ஆகிடுச்சின்னு, படி வழியா இறங்குவேன்,வந்தும் 
உன்னைப் பார்த்து விட்டு தானே போறேன்,அலைபேசி அலுவலக வேலை விசயமா"

"அதையே தான் நானும் கேட்கிறேன், உன் ௬ட வேலை பார்க்கிற, என்னை விட அழகான பையங்க இருக்கும் போது என்னை மட்டும் ஏன் பார்க்கணும்,பேசணும்"

"நீ இருக்கிற மூளைக்கு அதிகமா யோசிக்கிற?"

"உன்னை மாதிரி மேனா மினிக்கிக்கு எல்லாம், உயர் தூக்கியிலே வேலை செய்யும் என்னைப் எப்படி பிடிக்குது?, உண்மையை சொல்லு, நீ கிட்னி திருடுற கும்பலா, இல்லை ஆள் கடத்தல் கும்பலா, உன் ௬ட்டாளி இப்ப வந்தவன் எங்கே நிற்கிறான்?"

என்று சொல்லி முடிக்கும் போது, அவள் வெளியே அனுப்பிய ஆள் மீண்டும் கதவை திறந்து உள்ளே வந்தான்.

"என்னாச்சி பூரணி"

"பூட்டின கதவை எப்படி இவன் திறந்து வந்தான்?"

"நீங்க ரெண்டு பேரும் பேசுற சத்தம் கேட்டு வந்தேன்"

"சத்தம் கேட்டு வந்தியா.. இல்லை சத்தம் இல்லாம முடிக்க வந்தியா?"

"சாம், இவனுக்கு என்னவோ ஆகிப் போச்சி.. நீ போன உடனே சந்தேகப் பட ஆரம்பித்தவன், இன்னும் முடிக்கலை"

"ஆமா, உனக்கு இன்னும் என் கதையை முடிக்கலையேன்னு கவலை" 

"போதுமட சாமி உன் சகவாசம், நீ இனிமேல என் முகத்திலே முழிக்காதே, உன்னை மாதிரி நாயை எல்லாம் ௬ட்டிட்டு வந்து நடு வீட்டிலே உட்கார வைத்த என்னை என் செருப்பை கழட்டியே அடிக்கணும்"  

"நீயும், இந்த சாம்பராணி சாமும் செருப்பை வைச்சி மாறி மாறி அடிங்க, நான் போறேன்" என்று சொல்லி விட்டு அவள் வீட்டை விட்டு வெளியேறினேன்.

எங்க போகன்னே தெரியலை, ஆனா போகும் போது மனசிலே சொன்னது யாருடைய காதிலே விழுந்து இருக்க வாய்ப்பு இல்லை. 

"என்னை மன்னிச்சிடு பூரணி, உன்னை மாதிரி அழகும், வசதியும் உள்ள பெண், என்னை மாதிரி ௬லிகளிடம் காதல் என்ற மாயையிலே விழுந்து, உன்னோட வாழ்க்கை பாழாக விரும்பலை, உன்னை காயப் படுத்தாம கழட்டி விட என் அறிவுக்கு எதுவுமே எட்டலை, இன்றைக்கு உன் மனசு புண்பட்டு இருந்தாலும், உன் எதிர் காலம் நல்லா இருக்கும்,உனக்கு காதல் தகுதி இல்லாம வரலாம், ஆனா அதை ஏத்துக்கிற அளவுக்கு நான் இன்னும் தகுதி பெறலை"Tuesday, June 15, 2010

அமெரிக்க கருப்பு அண்ணாச்சியின் அலும்புஆறு மணிக்கு அலுவலத்திலே இருந்து கிளம்புறதே பெரிய விஷயம், பல வருஷம் கழிச்சி எங்க டமேஜெர் ஐந்து மணிக்கு கிளம்பி விட, நான் அவரு போன அரை மணி நேரத்திலே பெட்டியைக் கட்டிக்கிட்டு கிளம்பினேன்.

இப்படி சீக்கிரமா அலுவலகத்திலே இருந்து கிளம்பியதாலே பல மில்லியன் டாலர்கள் இழப்பு வருமேன்னு யோசித்துகிட்டே பாதாள ரயில் நிலையம் நோக்கி போய் கொண்டு இருந்தேன், ரயில் நிலையத்துக்கு பக்கத்திலே செல்லும் போது யாரோ தண்ணி குடிக்கிற மாதிரி சத்தம் கேட்டது, சத்தம் வந்த திசையைப் பார்த்தேன், அங்கே கருப்பு அண்ணாச்சி சுவத்திலே தலையை மண்டிகிட்டு இருந்தார், அந்த சுவத்திலே யாரு தண்ணி குழாய் வைத்ததுன்னு,ஒரு ஆர்வத்திலே பக்கத்திலே போய் எட்டிப் பார்த்தேன், அண்ணாச்சிக்கு பின்னாடி கருப்பம்மா இருந்தாங்க, இவங்க முத்தம் கொடுக்கிற சத்தம் தான், எனக்கு எதோ குழியிலே தண்ணி மண்டுற சத்தம் மாதிரி கேட்டு இருக்கு.

என்னையை ரெண்டு பேரும் திரும்பி பார்த்தாங்க, எனக்கு ரெம்ப அவமானமாப் போச்சி, அவங்க என்னை ஒரு நொடி மட்டும் பார்த்து விட்டு, மறுபடியும் அவங்களோட வேலையைப் பார்க்க ஆரம்பித்தார்கள், இந்த மாதிரி ஓசி படம் எல்லாம் வெயில் காலத்திலேயே நடக்கிறது சாதாரணம் என்பது எனக்கு தெரிய வந்தது,நானும் நடக்கிறதை பார்க்காதது மாதிரி கிளம்பி வீட்டுக்கு போயிட்டேன்.

 அடுத்த நாள் மீண்டும் அலுவலகம் வந்து வேலை எல்லாம் முடித்து விட்டு கிளம்பி போனேன் ரயில் நிலையத்துக்கு, என்ன சத்தம் கேட்டாலும் திரும்பி பார்க்க௬டாது அப்படி ஒரு முடிவு எடுத்து கிட்டு குதிரைக்கு கடிவாளம் போட்ட மாதிரி அக்கம் பக்கம் பார்க்காம போனேன், நிலையம் பக்கம் போனேன் யாருமே இல்லை,பயணச் சீட்டு வாங்கிட்டு ரயிலைப் பிடிக்க உள்ளே போனா அங்க நிக்குறாங்க நான் நேத்து பார்த்த காதல் ஜோடிகள்.    

இன்றைக்கும் நேத்து பார்த்த அதே காட்சிதான்,ரயில் நிலைய நடை மேடையிலே வெளியே நின்று கொண்டு கருப்பம்மா வாயிலே மோதிரத்தை தொலைத்து விட்டு தேடுற மாதிரி தேடிகிட்டு இருந்தனர், நான் ரயில் பெட்டிக்குள்ளே போயிட்டேன், கொஞ்ச நேரத்திலே அவங்களும் நான் இருந்த ரயில் பெட்டிக்கு வந்தார்கள். 

பேசாமலே வாயை இவ்வளவு அருமையைப் பயன் படுத்த முடியுமான்னு ஆச்சரியம் எனக்கு, நானும் இப்படி ஒரு வாழ்க்கை முறைப் பாடத்தை இலவசமா சொல்லி கொடுக்கிற அண்ணாச்சிகிட்ட இருந்து கத்துக்கலாமுன்னு, அப்படி என்னதான் செய்யுறாங்கன்னு பட்டிகாட்டுகாரன் மிட்டாய் கடையப் பார்த்து மாதிரி பார்த்து கொண்டு இருந்தேன்.

கொஞ்ச நேரத்திலே நான் பார்க்கிறதைப் பார்த்து விட்ட அண்ணாச்சி ஆள் காட்டி விரலை மடக்கி அலவங் காட்டினார்,நல்லவேளை அவரு நடு விரலை காட்டலை. மறுபடியும் ரெம்ப 
அவமானப் போச்சி, வீட்டுக்கு போனா சோறு  தண்ணி இறங்கலை.அவமானத்தோட மறுநாளும் அலுவலகம் வந்தேன், மீண்டும் மாலையிலே புறப்பட்டேன்.

ரயில் நிலையம் பக்கம் போனேன், நான் பார்க்கிற வரை அண்ணாச்சி சும்மாதான் இருந்தாரு, நான் அவரைப் பார்க்கிறேன்னு தெரிஞ்சதும், மறுபடியும் கருப்பம்மா வாயிலே மோதிரத்தை  போட்டு தேடுறது போல மண்ட ஆரம்பித்தாரு, நான் ஒரே ஓட்டமா ஓடியே போயிட்டேன், இந்த பிரச்சனையிலே இருந்து எப்படி வெளிவரன்னு யோசித்தேன், ஒரு வழியும் தெரியலை. ஓசியிலே படம் பார்க்க நினைத்த எனக்கு இவ்வளவு பெரிய தண்டனையா ன்னு அடுத்த நாளும் அலுவலகம் சென்றேன்.

 ரயிலை விட்டு இறங்கி வெளியே வந்தேன், நிலைய வாசலிலே வெள்ளையம்மா ஒரு பலகையிலே "எனக்கு வேலை போய் விட்டது, வேலை வேண்டும் என எழுதி, தனது விவரங்களையும், முன்னனுபவங்கள் அடங்கிய கோப்பை போகிற வருகிறவர்களுக்கும் கொடுத்து கொண்டு இருந்தார், எனக்கும் ஒரு கோப்பு கொடுத்தாள், வாங்கும் போது அவள் முகத்தைப் பார்த்தேன், கருப்பு நிறக் கண்ணாடி அணிந்து இருந்தாள். 

வேலை இல்லா வெள்ளையம்மா எனக்கு கண்ணாடி வழியா எனக்கு புது வழியை கொடுத்தாள், அன்றைக்கே கடைக்கு போய் கண்ணாடி வாங்கி விட்டேன், மாலையிலே வீட்டுக்கு போகும் போது புதுசா வாங்கின கண்ணாடியை போட்டுக்கொண்டு போனேன், கடந்த ஒரு வாரமா பயந்து பயந்து வேகமா போன நான், மெதுவா எல்லோரையும் பார்த்து கொண்டு போனேன், கருப்பு அண்ணாச்சியும் இருந்தாரு, அவரு என்னைப் பார்ப்பது எனக்கு தெரிந்தது, நான் அவரைப் பார்த்தது அவருக்கு தெரியலை.


ஜூனியர் குடுகுடுப்பை

கு.ஜ.மு.க கழக கண்மணிகளுக்கு நற்செய்தி, 

 டெக்ஜாஸ் கண்ட சோழன், கு.ஜ.மு.க தலைவர் குடுகுடுப்பையார் வீட்டுக்கு புது வரவு, நேற்று இரவு அதாவது  ஜூன், 14 இரவு 8 மணிக்கு புதிதாகப் பிறந்த  ஜூனியர் குடுகுடுப்பை,
வருங்கால அமெரிக்க ஜனாதிபதியை  வாழ்த்தி வர வேற்கிறோம். வாழ்வின் எல்லா வளமும் பெற்று நெடு நாள் வாழ ஜூனியர் குடுகுடுப்பையாருக்கு வாழ்த்துக்கள். 


Wednesday, June 2, 2010

அவளின்றி ஒரு நாள்
மாலை ஆறு மணி எப்ப ஆகுமுன்னு எதிர் பார்த்து பல்லை கடித்து காத்து கொண்டு இருந்தேன், என்னைக்கும் இல்லாம இன்றைய பொழுது ரெம்ப மெதுவாவே போச்சி, ஒரு வழியா மணி ஆறு ஆனதும், அலைபேசியை எடுத்து நண்பனை தொடர்பு கொண்டேன் இணைப்பு கிடைத்தும்

"மச்சான், எங்கடா வரணும்?"

"நியூயார்க் பங்கு வர்த்தக நிறுவன கட்டிடம் வந்து, அதிலே இருந்து மூனாவது கட்டு"

"சரி மச்சான், நான் கிளம்பிட்டேன்"

பொதுவா அலுவலகம் முடிந்து வீட்டுக்கு ரெம்ப மெதுவாவே போவேன், ஆனா அன்றைக்கு வேகமா நடத்து போனேன், ரெம்ப நாளைக்கு அப்புறம் பால்ய நண்பனை சந்திக்கிறோம் என்பதை விட சாதிக்க போறதை நினைத்து மகிழ்ச்சி

நண்பன் சொன்ன இடத்திக்கு சென்றேன், ரெண்டு பேரும் பாச மழையிலே கொஞ்ச நேரம் நனைந்து விட்டு, அருகிலே இருந்த ஒரு கடைக்கு சென்றோம், உள்ளே சென்றதும் கருப்பு நிற உடையிலே வெள்ளையம்மா குறுக்கும் நெடுக்கும் போய்கிட்டு இருந்தாங்க. ஒரு சந்தேகத்திலே 

"மச்சான், ஆடை குறைப்பு கொஞ்ச அதிகமா இருக்கு, நாம ஏதும் ஜென்டில்மேன் கடைக்கு வரலியே!!!"

"இல்லடா இது குடிமகன் கடைதான்"

"மச்சான் நீ ஏன்டா வீட்டுக்கு வரலை?"

"டேய் நீ வாங்கி கொடுத்து குடிச்ச என்னய, என்னவோ நான் தான் வாங்கி கொடுத்தது மாதிரி என்னையை வீட்டை விட்டு அடிச்சி விரட்டு விட்டுட்டா
உன் பொண்டாட்டி, அது கூட பரவா இல்லைடா, கள்ளு பேரு கூட தெரியாத என் வீட்டுக்காரருக்கு கண்டதை வாங்கி கொடுத்து கெடுக்குறீங்கன்னு பேசின வசனம் தான் என்னால தாங்க முடியலை, கல்லூரி வரும்போது பக்தி பழமா வந்த என்னை பாலான பழமா மாத்தினதே நீ தான் அவளுக்கு தெரியலையே"

"அவ என்னையும் தான் அடிச்சி விரட்டிடா?"


"குடும்பமே ஒரு மார்கமாத்தான் இருக்கீங்க"

"என்ன மச்சான் சொல்லுற?"

"கல்லூரியிலே படிக்கும் போதும் நீ புதுசா பீடி அடிக்க சொல்லி கொடுத்த பசங்க கிட்டேயே உங்க அம்மா வந்து, ஐயா என் புள்ளையைய கண்ட கண்ட பசங்க கூட சேர விடாதீங்க, கெட்டுப் போய்டுவான்னு சொன்னங்க, நீ ஒரு கேடுகட்ட பயன்னு தெரியாம, அதே வசனம் இப்ப உன் மனைவி கிட்ட இருந்து"

"எல்லாம் காலக் கொடுமை, விடு மச்சான்"

"கருப்பா உனக்கு ரெம்ப தைரியம் தான், இன்னைக்கு என்ன நடக்கப் போகுதோ?டேய் நீ என்னைய பார்க்க போறதா ஒண்ணும் சொல்லலையே "

"மச்சான், அவ கூடப் படிச்ச தோழியோட பையனுக்கு பிறந்த நாள், அதனாலே அவங்க வீட்டுக்கு போய்ட்டா?,போற அவசரத்திலே முக்கியமான விஷயத்தை மறந்துவிட்டாள்"

"நீ என்ன சொல்லிட்டு வந்த?"

"அலுவலத்திலே மிகப் பெரிய ரீலீஸ் இருக்கு, அதுக்கு ஆணி வேர் நான் தான், ஆணி பிடுங்க நான் இல்லைனா, அஸ்திவாரமே ஆட்டம் கண்டுடுமுன்னு பொய்யை சொல்லி வந்துட்டேன் மச்சான்"

பேசிகிட்டே மேசையை தேடித் பிடித்து அமர்ந்தோம், கொஞ்ச நேரத்திலே வெள்ளையம்மா வந்து 

"நீங்க என்ன சாப்பிடுறீங்க?"

நண்பன் தான் ஏதோ எனக்கு தெரியாத பெயர்களை எல்லாம் சொல்லி கொண்டு வரச்சொன்னான்.சொந்த கதைகளை பேச ஆரம்பித்தோம், இப்போது எனது அலைபேசி அழைத்தது, மறு முனை எண்ணைப் பார்த்து விட்டு நண்பனிடம் காட்டினேன்.

"டேய் எடுக்காதே மாப்பள, நீ உலக பிஸி ன்னு நினைசிக்குவாங்க" 

"உனக்கு தெரியாது மச்சான், முத தடவையும், ரெண்டாவது தடவையும் எடுக்கலைனா, என்னோட டேமஜெருக்கு அழைப்பு போகும், அப்படியே உண்மையும் தெரிஞ்சி போச்சின்னா வீட்டில குடிக்க கஞ்சி கிடைக்காது"

"நீ ஒரு தொடை நடுக்குபய டா"

"இப்ப அஞ்சி வருசாமா அப்படித்தான்"

"அது என்னடா கணக்கு அஞ்சி வருஷம்?"

நண்பனுக்கு பதில் சொல்லும் முன்னே மீண்டும் அழைப்பு மணி, உடனே எடுத்து விட்டு 

"என்ன விஷயம், பிறந்த நாள் விழா எல்லாம் எப்படி இருக்கு?"

"ஆமா அங்கே என்ன சந்தக்கடை சத்தம்"

"எங்க மேனேஜர் டகிலாவும், நெப்போலியனும், என்கிட்டே ரீலீஸ் பத்தி பேசிகிட்டு இருக்காங்க"

"அப்படியா முடிச்சிட்டு சீக்கிரம் வீட்டுக்கு வாங்க, நான் இப்ப வீட்டிலே தான் இருக்கேன், போற அவசரத்திலே கல்யாண நாளை மறந்துவிட்டேன், ஞாபகம் வந்ததும் உடனே திரும்பி வந்துட்டேன்" 

அலைபேசியை வைத்த உடனே வெள்ளையம்மா வந்து தட்டிலே இருந்து பானங்களை எங்கள் மேசையிலே வைத்துக் கொண்டு இருந்தாள்.

"மச்சான் நான் அவசரமா வீட்டுக்கு போகணும், என் பொண்டாட்டி வீட்டுக்கு வந்து விட்டா?"

"டேய் இந்த பீரை யார் குடிக்க?"

"நீயே குடிச்சிக்கோ"

"என்னடா அவசரம், ஒரு பாட்டில் குடிச்சிட்டு போ"

"எங்க கல்யாண நாள் ஞாபகம் வந்து பிறந்த நாள் விழாவுக்கு போயிட்டு உடனே வீட்டுக்கு வந்துட்டா?"

"உனக்கெல்லாம் இது கல்யாண நாள் இல்லை கருப்பு தினம் டா"

உண்மையா இருக்குமோ என்ற யோசனையிலே பாட்டிலே இருந்து வழிந்த பீரை பார்த்து கொண்டு வீட்டுக்கு கிளம்பினேன்.