Tuesday, March 17, 2009

ஆவிகள் இருப்பது உண்மை

நான் காதல் கடிதம் கொடுக்க ஆரம்பித்த காலம் அதாவது நான் மூனாவது படிக்கும் போது எங்க குடுபத்திலே பாதியிலே மேலே போனவங்க எல்லோரையும் வரவழைச்சி அவங்க கருத்துக்களை கேட்பது வழக்கம்.இதை எல்லாம் செய்வது எங்க தத்தா,பாட்டி தான் அவங்க இன்னைக்கு எங்க ௬ட இல்லை, இருந்தாலும் அவங்களை ஞாபகப்படுத்த இந்த ஒரு கொசு வத்தி தான் இருக்கு

சாதரணமாவே கிராமத்து ஆளுங்களுக்கு கல்யாண பத்திரிக்கையும் கொடுத்து குறைஞ்ச பட்சம் ஒரு நாப்பது தடவையாவது ௬ப்பிடலைனா அவங்க கல்யாணத்துக்கு வர மாட்டாங்க
, அப்ப கிராமத்து பேய்களை ௬ப்பிடுறது எப்படி இருக்கும். அவங்களுக்குன்னு பெரிய நடை முறை இருக்கு, அவங்களுக்கு தேவையான பொருட்கள் பொறி கடலை, பத்தி, தேங்காய்,வாழை பழம், சுருட்டு, சாராயம்,இளவயசுல அதாவது முப்பதுக்கு கீழே இறந்தவங்களுக்கு சுருட்டு,சாராயம்,தேங்காய். முப்பதுக்கு மேலே பொறி கடலை, வாழப்பழம் ஏன்னா அவங்களுக்கு பல் இருக்காதாம், இது எந்த சூத்திரம் ன்னு தெரியலை

சரி ஆவிக்கு தேவையானதை வாங்கியாச்சி எப்படி ஆவியை ௬ப்பிடுவது,

பாட்டியோட சித்தப்பா மகள், அவங்க பேரு "பேய்" பாட்டி அவங்க தான் இதிலே நிபுணர்,ஆவிகள் ௬ட பேசுற அன்னைக்கு மட்டும் அவங்க எலிசபெத் ராணி மாதிரி,அவங்களுக்கு அன்னைக்கு கறி சோறு கிடைக்கும், அடுத்த நாள்ல இருந்து கேப்பை களி தான் சோறு. ஆவி பிடிக்கிற அன்னைக்கு பேய் பாட்டி இரவு 8 மணிக்கு வந்துவிடும், வெள்ளி கிழமை தான் ஆவிக்கி ஏத்த நாள், வாரம் முழுவதும் அவங்களும் கடினமா வேலை செய்வாங்களோ என்னவோ அவங்களை வெள்ளி கிழமை தான் ௬ப்பிட முடியும்


பேய் பாட்டி வந்து படையலை எல்லாம் வட்டமா வச்சி ஒரு ஓரத்திலே துண்டை போட்டு உக்காருவாங்க. பேய் ௬ட பேச குடும்பமே உக்காந்து யாரு கிட்ட என்ன பேசனும் எல்லாம் விவாதம் நடக்கும்


பேய் பாட்டி இருந்து கொண்டு எதோ வாய்க்குள்ளே முணங்கு வாங்க, தலையை எல்லா திசையிலும் ஆட்டுவாங்க, திடீர்னு ஆட்டம் நிக்கும், சாராயத்தை எடுத்து ஒரு பெக் போடுவாங்க, அவங்க சுருட்டு எடுப்பாங்க, அதுதான் அறிகுறி எதோ ஒரு பேய் சிக்கி விட்டதுன்னு,உடனே வீட்டிலே எல்லோரும் உசார் ஆகிடுவாங்க, சிக்கின ஆவி யாருன்னு பார்க்க.அப்புறமா அகப்பட்ட ஆவி விவரத்தை சொல்லும், அது தங்கி இருக்கிற இடம் எல்லாம் கேட்டு, இடத்தை மாத்த பரிகாரம் இருந்தா கேட்டு கிட்டு அதை செய்ய முயற்சி எடுப்பாங்க

முதல்ல வார வங்கதான் கொஞ்சம் தாமதிச்சு வருவாரு, அதற்க்கு அப்புறம் எல்லோரும் அடிச்சி பிடிச்சி ஓடி வருவாங்க, சில சமயம் ரெண்டு பேரு சேர்ந்தே வருவாங்க, அவங்க ஆவிக் காதல்கள், இப்படி ஒரு ரெண்டு மணி நேரம் நடக்கும் அதுக்குள்ளேயும், சாராயமும், படையல் சாப்பாடுகளும் காலியாகிடும்.சில சமயம் வந்த ஆவிகள் என்னை பார்த்து பயந்து " யார் இந்த குட்டி பிசாசு" ன்னு கேள்வி கேட்க்கும்


இப்படித்தான் ஒரு நாள் ஒரு ஆவி கஞ்சா குடிச்சாத்தான் பேய் பாட்டியை விட்டு போவேன்னு அடம் பிடிச்சது, ஆவியோட கொஞ்சி ௬த்தாடி பாத்தாங்க ஒன்னும் தேரலை, ஆவி, பேய் பாட்டியை துணைக்கு ௬ட்டிட்டு போவேன்னு சொன்னதாலே, வேற வழி இல்லாம கஞ்சா வாங்க போனே எங்க கருப்பு மாமா ஒரு வருஷம் கழிச்சு தான் வந்தாரு, வாங்கின கஞ்சா நல்லா இருக்கானு ருசி பாத்தவரை காவல் துறை கவ்வி கிட்டு போயிடுச்சி
. அன்றைக்கு கொஞ்சம் விஸ்கி கொடுத்து பேய் பாட்டியை காப்பாத்திடோம்.காதலில் தோல்வி அடைஞ்ச ஆவிகளுக்கு கஞ்சா தான் மருந்தாம்


பாட்டி உயிரோடு இருக்கிற வரைக்கும், இந்த சம்பவங்கள் அடிகடி நடக்கும், பேய் பாட்டி காலமான உடனே ஆவிகள் எல்லாம் காலாவதி ஆகிடுச்சி, அது வரைக்கும் ஆவிகளை கேட்டு வேலைகளை செய்த எங்க குடும்பம், இன்னும் அவங்க அவங்க வேலையை செய்து கிட்டு தான் இருக்காங்க.
ஆவிகளோட பேச்சி கேட்டு நடக்கும் போது கேப்பை களி சாப்பிட்ட எல்லோரும் இப்ப ஆவி இல்லாம ஆவியிலே இட்லியும், புட்டும் செஞ்சு சாப்பிடுறாங்க

இதெல்லாம் மூட நம்பிக்கையா இல்லை மூடு விழா நம்பிக்கையான்னு இன்னும் புரிபடலை.செத்தாதான் ஆவியாவோமுனு இல்லாமா, பார்க்கிற கண்களுக்கு ஒரு மனுஷன் எப்படி தெரிவானோ,அதை பொருந்து தான் அவன் மனுசனா இருக்கதும் ஆவியா இருக்கதும்.

கல்யாணத்துக்கு பொண்ணு பார்க்கும் போது நான் ரெம்ப சிகப்பா இருக்கேன்னு அரை இஞ்சிக்கு வெள்ளை அடிச்சு ஏமாத்தி கல்யாணம் முடிச்சிட்டேன். இந்த உண்மை விரைவில் தெரிய வர என் மாமனார் நான் அவங்க வீட்டுக்கு போகும் போது எல்லாம்

"
எங்க மாப்பிள்ளை குரல் மட்டும் கேட்குது ஆளையே காணும்னு"

சொல்லுவாரு.நான் இருப்பதே அவருக்கு தெரிவதில்லை, ராத்திரியிலே இருட்டிலே எழுந்தாலே ரெண்டு நாள் தங்கமணி பேய் பிடித்தவள் மாதிரி ஆகி விட்டாள். இப்படி உயிரோடு இருக்கிற நானே பேயா இருக்கும் போது ஆவி இல்லன்னு சொல்ல முடியுமா?

நம்ம சாதி சனத்தை அழிப்பதற்காகவே கொலை வெறியோடு சுத்தி கொண்டு இருக்கும் சிங்கள பேய்கள் எல்லாம் உயிரோட தான் இருக்கு. பச்சக் குழந்தைகளை கொன்று குவித்த கொலை/காம வெறிப்பிடித்த பேய் நொய்டா சிங்கமும் இன்னும் இருக்கு. பதவிப்பேய், பணப்பேய் பிடித்து அலையும் மனுசங்களும் உண்டு,செத்தாத்தான் ஆவின்னு எந்த சட்டமும் சொல்லலை, உயிரோடு இருந்தா மனுசனுன்னு எந்த சட்டத்திலேயும் சொல்லலை


55 கருத்துக்கள்:

ரவி said...

ஹி ஹி

நாங்களும் ஆவி பிடிச்சிருக்கோம்ல...

சார் விக்ஸை சுடத்தண்ணியில போட்டு இல்லை...

மெய்யாலுமே விக்ரவாண்டி ரவிச்சந்திரன் டைப் ஆவி.

அது பெரிய கதை.

பின்னால எழுதறேன்...

எம்.எம்.அப்துல்லா said...

மீ த ஃபர்ஷ்ட்டூ :)

எம்.எம்.அப்துல்லா said...

ஆஹா சைக்கிள் கேப்பில் ரவி அண்ணே முந்திட்டாரா :(

எம்.எம்.அப்துல்லா said...

"ஆவிகள் இருப்பது உண்மை"

//

ஆமாண்ணே காலையில் இட்லி சாப்பிடும் போது கூட உணர்ந்தேன்.
:)

குடுகுடுப்பை said...

பரிசுத்த ஆவியில் இட்லி வேகுமான்னு ஒரு காலத்தில எங்கூர்ல தி.க காரங்க சுவத்துல எழுதுவாங்க

முகவைத்தமிழன் said...

நல்ல சிந்திக்க துர்ண்டும் பதிவு. வாழத்துக்கள்.

ஆ.ஞானசேகரன் said...

நல்லாதன் ஆவி விடுரீங்க....

- இரவீ - said...

பயந்து பயந்து படிச்சு முடிக்கறப்ப ஒரு பஞ்ச் டயலொக்
//செத்தாத்தான் ஆவின்னு எந்த சட்டமும் சொல்லலை, உயிரோடு இருந்தா மனுசனுன்னு எந்த சட்டத்திலேயும் சொல்லலை//
சூப்பரு.

KarthigaVasudevan said...

ஆவில எத்தனையோ வகை இருக்கே?!
நீங்க சொல்றது எந்த வகை ?
நீராவியா?
இல்ல ஆ.வி -ஆனந்த விகடனா?
எந்த ஆவியா இருந்தாலும் சொந்த ஆவி போகாம பார்த்துகிடரதுல தான் இருக்கு திறமை!

மணிகண்டன் said...

***
" எங்க மாப்பிள்ளை குரல் மட்டும் கேட்குது ஆளையே காணும்னு"
***

இது கலக்கல்.

ஹேமா said...

//செத்தாத்தான் ஆவின்னு எந்த சட்டமும் சொல்லலை, உயிரோடு இருந்தா மனுசனுன்னு எந்த சட்டத்திலேயும் சொல்லலை//

சரியா சொன்னீங்க நசரேயன்.
உண்மையாவே பேய்கள் பிசாசுகள் இருந்தா,ஆயிரக்கணக்கில் எங்கள் உறவுகளை உயிரோடு புதைத்த இடம் செம்மணி.அங்கு இராணுவம் இப்போதும் இருக்கிறதுதானே.நான் ஒரு கவிதையில்கூட இதைக் கேட்டிருந்தேன்.

ஹேமா said...

//" எங்க மாப்பிள்ளை குரல் மட்டும் கேட்குது ஆளையே காணும்னு"//

நீஙக அவ்....ளோ இருட்டுக் கறுப்பா..!

ஆதவா said...

////////பதவிப்பேய், பணப்பேய் பிடித்து அலையும் மனுசங்களும் உண்டு,செத்தாத்தான் ஆவின்னு எந்த சட்டமும் சொல்லலை, உயிரோடு இருந்தா மனுசனுன்னு எந்த சட்டத்திலேயும் சொல்லலை//////

உண்மைதாங்க... பேயோட்டுபவர்கள் செய்யும் தந்திரத்தால அவங்களுக்கு பலவகையில துணைபோகவேண்டியிருக்கு!!!

நல்ல பதிவு!!

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-))))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:) நல்லா இருக்கு..

@டவுட்
என்னமா கமெண்டுது டவுட்!! :)

புல்லட் said...

ஆஹஹா ! அற்புதமான பதிவு! நகைச்சுவையா தொடங்கி கருத்து சொல்லி முடிச்சுட்டீங்க... அதிலும் அந்த சிங்களப்பேய் சமாச்சாரத்த இழுத்ததுக்காக ஹட்ஸ் ஓஃப்...

வாழ்த்துக்கள்...

ஸ்ரீதர்கண்ணன் said...

:)

ராஜ நடராஜன் said...

கடைசி பாரா நல்லாயிருக்கு.இருந்தாலும் நான் முதல்ல இருந்து வாரேன் மறுபடியும்.

ராஜ நடராஜன் said...

//நான் காதல் கடிதம் கொடுக்க ஆரம்பித்த காலம் அதாவது நான் மூனாவது படிக்கும் போது //

எனக்கெல்லாம் எட்டு, பத்து வயசாச்சு கம்மர்கட்டு மிட்டாய் கொடுப்பதற்கு.

ராஜ நடராஜன் said...

//அப்ப கிராமத்து பேய்களை ௬ப்பிடுறது எப்படி இருக்கும். அவங்களுக்குன்னு பெரிய நடை முறை இருக்கு//

எங்கூர்ல குறிசொல்ல கோடங்கி.இல்லைன்னா தனியா காசு கொடுத்தா பேயோட்டி.நீங்க சொல்ற நடைமுறை,பொறிகடலை,தேங்காய்,வெத்திலை,பழம்,தட்சணையெல்லாம் வெச்சா என்னமோ முணுமுணுத்து 4 எலுமிச்சைய நாலு திசைல சொய்ன்னு விட்டெறிஞ்சு சொம்புல தண்ணிய நிறைச்சு வெள்ளைத்துணீல கட்டி தலைகீழா தொங்க விட்டுடுவாரு.தலைமுடிய கொஞ்சம் வெட்டி மரத்துல ஆணி அடுச்சுடுவாரு.பேயோட்டும் பரிகாரம் முடிந்தது.

ராஜ நடராஜன் said...

//வெள்ளி கிழமை தான் ஆவிக்கி ஏத்த நாள்//

இங்கேயும் ஒரு சிங்களப் பெண்ணுக்கு வெள்ளிக்கிழமை ஏக போணி.தொழிலே பில்லி சூன்யம்தான்.மாட்டுனா களியெல்லாம் இல்ல.நல்ல கறிச்சோறும் கம்பி எண்ணலும்.

ராஜ நடராஜன் said...

//அன்றைக்கு கொஞ்சம் விஸ்கி கொடுத்து பேய் பாட்டியை காப்பாத்திடோம்.//

எங்க ஊரு ஆவிக்கெல்லாம் விஸ்கி உவ்வே.பட்டைதான் சரிப்படும்.

ராஜ நடராஜன் said...

//கேப்பை களி சாப்பிட்ட எல்லோரும் இப்ப ஆவி இல்லாம ஆவியிலே இட்லியும், புட்டும் செஞ்சு சாப்பிடுறாங்க
//

இட்லி,புட்டு,கப்பை,சாயா

ராஜ நடராஜன் said...

//செத்தாத்தான் ஆவின்னு எந்த சட்டமும் சொல்லலை, உயிரோடு இருந்தா மனுசனுன்னு எந்த சட்டத்திலேயும் சொல்லலை//

பஞ்ச்.

பழமைபேசி said...

அசத்தல்....இஃகிஃகி!

ராஜ நடராஜன் said...

ஆவி இடது பக்கமா போகாம இன்னுமா வலது பக்கமா சுத்திகிட்டு இருக்குது?அதுசரி அண்ணன் கிட்ட சொல்லி வேதாளாத்த துணைக்கு கூப்பிடுங்க.

கார்த்திகைப் பாண்டியன் said...

பதிவ வெளயாட்டா ஆரம்பிச்சு.. நம்ம மனுஷங்களுக்கு ஊடால இருக்குற பேய்களைப் பத்தி சொல்லி.. கடைசியில பக்கத்துல நம்ம மக்களை கொன்னுக்கிட்டு இருக்குற வெறி பிடிச்ச பேய்களையும் சொல்லி.. ரொம்ப நல்லா இருக்கு நண்பா..

gayathri said...

சில சமயம் வந்த ஆவிகள் என்னை பார்த்து பயந்து " யார் இந்த குட்டி பிசாசு" ன்னு கேள்வி கேட்க்கும்

enaku itha padichathum seripu thanvanthuchi pa

RAMYA said...

//
நான் காதல் கடிதம் கொடுக்க ஆரம்பித்த காலம் அதாவது நான் மூனாவது படிக்கும் போது
//

என்னாது மூணாவது படிக்கும்போதா ???

சொக்கா நீ எங்கே இருக்கேப்பா ???

RAMYA said...

//
எங்க குடுபத்திலே பாதியிலே மேலே போனவங்க எல்லோரையும் வரவழைச்சி அவங்க கருத்துக்களை கேட்பது வழக்கம்.இதை எல்லாம் செய்வது எங்க தத்தா,பாட்டி தான் அவங்க இன்னைக்கு எங்க ௬ட இல்லை, இருந்தாலும் அவங்களை ஞாபகப்படுத்த இந்த ஒரு கொசு வத்தி தான் இருக்கு
//

ரொம்ப intresting ஆ இருக்கே !!
சரி மேலே படிச்சுட்டு வாரேன்!!

RAMYA said...

//
சாதரணமாவே கிராமத்து ஆளுங்களுக்கு கல்யாண பத்திரிக்கையும் கொடுத்து குறைஞ்ச பட்சம் ஒரு நாப்பது தடவையாவது ௬ப்பிடலைனா அவங்க கல்யாணத்துக்கு வர மாட்டாங்க
//


சரியா சொல்லி இருக்கீங்க இப்பவும் அப்படிதான் நடக்குது.

எங்கே கிராமத்துலே இல்லை
நகரத்துலேயும் தான்!!

RAMYA said...

//
அப்ப கிராமத்து பேய்களை ௬ப்பிடுறது எப்படி இருக்கும். அவங்களுக்குன்னு பெரிய நடை முறை இருக்கு,
//

ஓ இது வேறேயா ???

RAMYA said...

//
அவங்களுக்கு தேவையான பொருட்கள் பொறி கடலை, பத்தி, தேங்காய்,வாழை பழம், சுருட்டு, சாராயம்,இளவயசுல அதாவது முப்பதுக்கு கீழே இறந்தவங்களுக்கு சுருட்டு,சாராயம்,தேங்காய். முப்பதுக்கு மேலே பொறி கடலை, வாழப்பழம் ஏன்னா அவங்களுக்கு பல் இருக்காதாம், இது எந்த சூத்திரம் ன்னு தெரியலை
//

நிஜம்மா இதெல்லாம் வைப்பாங்களா நசரேயன்??

வச்சாலும் அவங்க வந்து சாப்பிடுவாங்களா??

சிலர் கூறுகின்றார்கள் சாப்பிடுவாங்கன்னு.

RAMYA said...

//
சரி ஆவிக்கு தேவையானதை வாங்கியாச்சி எப்படி ஆவியை ௬ப்பிடுவது,
பாட்டியோட சித்தப்பா மகள், அவங்க பேரு "பேய்" பாட்டி அவங்க தான் இதிலே நிபுணர்,ஆவிகள் ௬ட பேசுற அன்னைக்கு மட்டும் அவங்க எலிசபெத் ராணி மாதிரி,
//

அது சரி ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரைன்னு சொல்லுவாங்க
அப்படித்தான் போல அந்த பேய் பாட்டியின் கதையும்.

நிறைய பேய் கூட பேசறாங்களே பேசவைக்கரவங்க நிறைய பணம் தரமாட்டாங்களா??

களி சாபிடுவங்களா?? பாவம் அந்த பேய் பாட்டி !!

RAMYA said...

//
பேய் பாட்டி வந்து படையலை எல்லாம் வட்டமா வச்சி ஒரு ஓரத்திலே துண்டை போட்டு உக்காருவாங்க. பேய் ௬ட பேச குடும்பமே உக்காந்து யாரு கிட்ட என்ன பேசனும் எல்லாம் விவாதம் நடக்கும்
//

நசரேயன் கும்மி பதிவுன்னு நினைச்சேன்
எனக்கு இப்போ நிசமாலுமே பயந்து வருது.

நிஜமாவே பேய் வருமா??

நிஜமாவே பேய் இருக்கா??

RAMYA said...

//
பேய் பாட்டி இருந்து கொண்டு எதோ வாய்க்குள்ளே முணங்கு வாங்க, தலையை எல்லா திசையிலும் ஆட்டுவாங்க, திடீர்னு ஆட்டம் நிக்கும், சாராயத்தை எடுத்து ஒரு பெக் போடுவாங்க, அவங்க சுருட்டு எடுப்பாங்க, அதுதான் அறிகுறி எதோ ஒரு பேய் சிக்கி விட்டதுன்னு,உடனே வீட்டிலே எல்லோரும் உசார் ஆகிடுவாங்க, சிக்கின ஆவி யாருன்னு பார்க்க
//

ஐயோ பயமா இருக்கே!!

நசரேயன் நீங்க நேருலே பாத்து இருக்கீங்களா???

RAMYA said...

//
முதல்ல வார வங்கதான் கொஞ்சம் தாமதிச்சு வருவாரு, அதற்க்கு அப்புறம் எல்லோரும் அடிச்சி பிடிச்சி ஓடி வருவாங்க, சில சமயம் ரெண்டு பேரு சேர்ந்தே வருவாங்க, அவங்க ஆவிக் காதல்கள், இப்படி ஒரு ரெண்டு மணி நேரம் நடக்கும் அதுக்குள்ளேயும், சாராயமும், படையல் சாப்பாடுகளும் காலியாகிடும்.சில சமயம் வந்த ஆவிகள் என்னை பார்த்து பயந்து " யார் இந்த குட்டி பிசாசு" ன்னு கேள்வி கேட்க்கும்
//

ரெண்டு பேய் வருமா, நீங்க அங்கே இருப்பீங்களா??

ஐயோ இது என்னா கொடுமையப்பா??

பேய்லே காதலர்கள் பேய் வேறே இருக்காங்களா??

எனக்கு ஒரே அதிர்ச்சியா இருக்கு!!!

RAMYA said...

//
இப்படித்தான் ஒரு நாள் ஒரு ஆவி கஞ்சா குடிச்சாத்தான் பேய் பாட்டியை விட்டு போவேன்னு அடம் பிடிச்சது, ஆவியோட கொஞ்சி ௬த்தாடி பாத்தாங்க ஒன்னும் தேரலை
//

இது வேறேயா??? நல்லா இருக்கு ??

RAMYA said...

//
ஆவி, பேய் பாட்டியை துணைக்கு ௬ட்டிட்டு போவேன்னு சொன்னதாலே,
//

போகட்டும் விட்டுட வேண்டியதுதானே!!

RAMYA said...

//
வேற வழி இல்லாம கஞ்சா வாங்க போனே எங்க கருப்பு மாமா ஒரு வருஷம் கழிச்சு தான் வந்தாரு, வாங்கின கஞ்சா நல்லா இருக்கானு ருசி பாத்தவரை காவல் துறை கவ்வி கிட்டு போயிடுச்சி
//

ஹா ஹா ஒரே சரிப்பா வந்துச்சு
சிரிச்சு ஒன்னும் முடியலை போங்க!!

RAMYA said...

//
அன்றைக்கு கொஞ்சம் விஸ்கி கொடுத்து பேய் பாட்டியை காப்பாத்திடோம்.காதலில் தோல்வி அடைஞ்ச ஆவிகளுக்கு கஞ்சா தான் மருந்தாம்
//

அதெல்லாம் சும்மா நான் இப்போ நம்பமாட்டேன்.

இருந்தாலும் பயந்து வருதே!!

RAMYA said...

//
பாட்டி உயிரோடு இருக்கிற வரைக்கும், இந்த சம்பவங்கள் அடிகடி நடக்கும், பேய் பாட்டி காலமான உடனே ஆவிகள் எல்லாம் காலாவதி ஆகிடுச்சி, அது வரைக்கும் ஆவிகளை கேட்டு வேலைகளை செய்த எங்க குடும்பம், இன்னும் அவங்க அவங்க வேலையை செய்து கிட்டு தான் இருக்காங்க. ஆவிகளோட பேச்சி கேட்டு நடக்கும் போது கேப்பை களி சாப்பிட்ட எல்லோரும் இப்ப ஆவி இல்லாம ஆவியிலே இட்லியும், புட்டும் செஞ்சு சாப்பிடுறாங்க
//

ஐயோ பாவம் எல்லாரும், கேப்பை களி உடம்புக்கு ரொம்ப நல்லது தெரியுமா???

RAMYA said...

//
இதெல்லாம் மூட நம்பிக்கையா இல்லை மூடு விழா நம்பிக்கையான்னு இன்னும் புரிபடலை.செத்தாதான் ஆவியாவோமுனு இல்லாமா, பார்க்கிற கண்களுக்கு ஒரு மனுஷன் எப்படி தெரிவானோ,அதை பொருந்து தான் அவன் மனுசனா இருக்கதும் ஆவியா இருக்கதும்.
//

சூப்பர் பஞ்ச், இது நசரேயன் டச்
பின்னிட்டீங்க போங்க !!!

RAMYA said...

//
கல்யாணத்துக்கு பொண்ணு பார்க்கும் போது நான் ரெம்ப சிகப்பா இருக்கேன்னு அரை இஞ்சிக்கு வெள்ளை அடிச்சு ஏமாத்தி கல்யாணம் முடிச்சிட்டேன். இந்த உண்மை விரைவில் தெரிய வர என் மாமனார் நான் அவங்க வீட்டுக்கு போகும் போது எல்லாம்
//

ஹா ஹா ஏமாத்தி கல்யாணம் பண்ணிகிட்டீங்களா??

ஹையோ ஹையோ பாவம் தங்கமணி!!

RAMYA said...

//
" எங்க மாப்பிள்ளை குரல் மட்டும் கேட்குது ஆளையே காணும்னு"
//

இது சூப்பர் எதுக்கும் இருக்கட்டும்ன்னு சிரிச்சு வச்சுடறது தானே!!!

RAMYA said...

//
சொல்லுவாரு.நான் இருப்பதே அவருக்கு தெரிவதில்லை, ராத்திரியிலே இருட்டிலே எழுந்தாலே ரெண்டு நாள் தங்கமணி பேய் பிடித்தவள் மாதிரி ஆகி விட்டாள். இப்படி உயிரோடு இருக்கிற நானே பேயா இருக்கும் போது ஆவி இல்லன்னு சொல்ல முடியுமா?
//

இங்கே பாருங்க உங்க பதிவு ஆரம்பத்திலே ஒரே பயந்துதான் நான் படிச்சேன்

வர வர உங்க அலும்பு தாங்களை ஒரே சரிப்பா வருது

இப்போ கொஞ்சம் சிந்தக்கவும் செய்யறேன்

சரி ஒரே ஒரு சின்னதா கேள்வி சரியா பதில் சொல்லணும்

பேய் இருக்கா இல்லை இல்லையா??

எனக்கு இப்போ தெரிஞ்சாகனும் சொல்லுங்க!!

யாரா இருந்தாலும் சொல்லுங்க !!

RAMYA said...

//
நம்ம சாதி சனத்தை அழிப்பதற்காகவே கொலை வெறியோடு சுத்தி கொண்டு இருக்கும் சிங்கள பேய்கள் எல்லாம் உயிரோட தான் இருக்கு. பச்சக் குழந்தைகளை கொன்று குவித்த கொலை/காம வெறிப்பிடித்த பேய் நொய்டா சிங்கமும் இன்னும் இருக்கு. பதவிப்பேய், பணப்பேய் பிடித்து அலையும் மனுசங்களும் உண்டு,செத்தாத்தான் ஆவின்னு எந்த சட்டமும் சொல்லலை, உயிரோடு இருந்தா மனுசனுன்னு எந்த சட்டத்திலேயும் சொல்லலை
//

ஆரம்பம் கொஞ்சம் பயந்து பிறகு கொஞ்சமா நிமிர்ந்தமர்ந்து
பிறகு இருக்கையின் நுனிக்கு வந்து,

சிரிக்க வேண்டிய இடத்துலே சிரிச்சு.

கடைசிய்லே ச்சே அருமையான உணர்ச்சிகளின் பிரதிபலிப்பு
நல்லா கொந்தளிப்புடன் கூடிய உணர்ச்சி வேகத்தினை
கொட்டிவிட்டீர்கள் அருமை அருமை நண்பா!!

பயந்து, கலங்கி, சிரித்து, இப்போ சிந்தித்துக் கொண்டிருக்கின்றேன்

நல்லா அருமையான பதிவு இதற்குமேல் என் நண்பரை என்ன பாராட்டுவதுன்னே தெரியலை.

பெருமையுடன் என் பின்னூட்டத்தை முடிக்கின்றேன்.

நன்றி நண்பா, வளர்க உங்களின் விழிப்புணர்வு மிக்க பதிவுகள் பல!!

Anonymous said...

Hi A very Good article....

Thanks and i like your Profile pic also.........

-Sumi-

"Eelam"

வில்லன் said...

//அவங்களுக்குன்னு பெரிய நடை முறை இருக்கு, அவங்களுக்கு தேவையான பொருட்கள் பொறி கடலை, பத்தி, தேங்காய்,வாழை பழம், சுருட்டு, சாராயம்,இளவயசுல அதாவது முப்பதுக்கு கீழே இறந்தவங்களுக்கு சுருட்டு,சாராயம்,தேங்காய். முப்பதுக்கு மேலே பொறி கடலை, வாழப்பழம் ஏன்னா அவங்களுக்கு பல் இருக்காதாம், இது எந்த சூத்திரம் ன்னு தெரியலை//


அப்ப உங்க வீட்டுல எப்ப வந்தாலும் சுருட்டு எலவசமா கெடைக்குமா. ஆமா இப்ப அந்த தொழில யாரு பாக்கா!!!!!!!!!! நல்ல வருமானம் ஆசேயா!!!!!!!!!!!!! அந்த தொழில உட்டுட்டு ஏன் விப்ரோல போட்டி தட்ட வந்திரு நீறு.

வில்லன் said...

//முப்பதுக்கு மேலே பொறி கடலை, வாழப்பழம் ஏன்னா அவங்களுக்கு பல் இருக்காதாம், இது எந்த சூத்திரம் ன்னு தெரியலை//

ஏன்னா உங்க பாட்டிக்கு பல்லு கெடையாது. பேய் எங்கயும் சாபிடாது... எல்லாம் கப்சா.

வில்லன் said...

//வெள்ளி கிழமை தான் ஆவிக்கி ஏத்த நாள், வாரம் முழுவதும் அவங்களும் கடினமா வேலை செய்வாங்களோ என்னவோ அவங்களை வெள்ளி கிழமை தான் ௬ப்பிட முடியும்//

சாராயம் குடிச்சா தல கின்னுன்னு இருக்கும்ல. வேல பாக்க முடியாதுல்லா.... ஆவிகளும் நம்மள போல தான. வாரத்துல அஞ்சு நாள் தான் வேல பாக்கும். யாருக்கும் சனி ஞாயீறு பேய் புடிக்காது.

நமக்கும் வெள்ளி கிழமை தான் ஏத்த நாள். வாரத்துநாளுல தண்ணிய (மருந்த) போட்டா ஒரே தலைவலி. என்ன பண்ண.

வில்லன் said...

//பேய் பாட்டி இருந்து கொண்டு எதோ வாய்க்குள்ளே முணங்கு வாங்க, தலையை எல்லா திசையிலும் ஆட்டுவாங்க, திடீர்னு ஆட்டம் நிக்கும், சாராயத்தை எடுத்து ஒரு பெக் போடுவாங்க, அவங்க சுருட்டு எடுப்பாங்க, அதுதான் அறிகுறி எதோ ஒரு பேய் சிக்கி விட்டதுன்னு,உடனே வீட்டிலே எல்லோரும் உசார் ஆகிடுவாங்க, சிக்கின ஆவி யாருன்னு பார்க்க.அப்புறமா அகப்பட்ட ஆவி விவரத்தை சொல்லும், அது தங்கி இருக்கிற இடம் எல்லாம் கேட்டு, இடத்தை மாத்த பரிகாரம் இருந்தா கேட்டு கிட்டு அதை செய்ய முயற்சி எடுப்பாங்க//

யோவ் நான் சொன்னேன்ல......ஆவிங்க நம்மள போலத்தான்னு.... கேட்டிரா!!!!!!!!!!!! நம்மளும் கூட ஒரு பெக் போட்டா ஆவி மாதிரியே பேசுவோம். அதுவும் ஒரு புல்லு உள்ள போநா கேக்க வேணுமா. ரொம்ப ஈஸியா இருக்கே. இப்ப அந்த பேய் பட்டி இருக்கா... நான் கொஞ்சம் ட்ரைனிங் எடுக்கலாம்னு பாக்கேன். நல்ல வருமானம் தண்ணி சுருட்டோட..... வேற என்னய்யா வேணும்.

வில்லன் said...

இதுல இருந்து கத்துகிட்டது என்னதுன்னா!!!!!!!!!!!!!!! ஆவியும் கணிபானியல் நிபுணரும் ஒன்னுதான்.

அதேமாதிரி ஆவிய ஓடுறவரும் (உங்க ஆவி பாட்டி) ப்ராஜெக்ட் மேனேஜர்உம் ஒன்னுதான்.

வில்லன் said...

//நம்ம சாதி சனத்தை அழிப்பதற்காகவே கொலை வெறியோடு சுத்தி கொண்டு இருக்கும் சிங்கள பேய்கள் எல்லாம் உயிரோட தான் இருக்கு. பச்சக் குழந்தைகளை கொன்று குவித்த கொலை/காம வெறிப்பிடித்த பேய் நொய்டா சிங்கமும் இன்னும் இருக்கு. பதவிப்பேய், பணப்பேய் பிடித்து அலையும் மனுசங்களும் உண்டு,செத்தாத்தான் ஆவின்னு எந்த சட்டமும் சொல்லலை, உயிரோடு இருந்தா மனுசனுன்னு எந்த சட்டத்திலேயும் சொல்லலை//

சிங்கள பேய்கள் கூப்பிட ராணுவம் மாதிரி சண்ட போடுவாங்களா?
நொய்டா சிங்கம் பேய் கூப்பிட பொண்ணுங்க குடுபாங்கள......

என்னையா நீரும் உம்ம கதையும்.

வில்லன் said...

//நம்ம சாதி சனத்தை அழிப்பதற்காகவே கொலை வெறியோடு சுத்தி கொண்டு இருக்கும் சிங்கள பேய்கள் எல்லாம் உயிரோட தான் இருக்கு. பச்சக் குழந்தைகளை கொன்று குவித்த கொலை/காம வெறிப்பிடித்த பேய் நொய்டா சிங்கமும் இன்னும் இருக்கு. பதவிப்பேய், பணப்பேய் பிடித்து அலையும் மனுசங்களும் உண்டு,செத்தாத்தான் ஆவின்னு எந்த சட்டமும் சொல்லலை, உயிரோடு இருந்தா மனுசனுன்னு எந்த சட்டத்திலேயும் சொல்லலை//

சிங்கள பேய்கள் கூப்பிட ராணுவம் மாதிரி சண்ட போடுவாங்களா?
நொய்டா சிங்கம் பேய் கூப்பிட பொண்ணுங்க குடுபாங்கள......

என்னையா நீரும் உம்ம கதையும்.