Friday, October 1, 2010

எந்திரன் திரை விமர்சனம்

எந்திரப் புலி வருது... எந்திரப் புலி வருது .. என்று பல வருடங்களாக மக்களை எதிர் பார்த்த எந்திரன் வந்து விட்டது முத நாளே துண்டை போட்டு இடம் பிடிச்சி பார்த்துவிட்டேன், விமர்சனம் எப்படி ஆரம்பிக்க, என்ன எழுதன்னே தெரியலை, முன்னபின்ன எதாவது எழுதினாத்தானே எழுதவரும்(இது வரைக்கும் எழுதியதையும் சேத்துதான்).ஐயா சாமிகளா ரஜினி படம் பார்க்கப் போகிறோம் என்ற உணர்வோடு திரை அரங்கம் செல்ல வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். ரஜினி என்ற மூன்று எழுத்தை விட ஷங்கர் என்ற நாலு எழுத்தின் ஆதிக்கமே அதிகம் படத்திலே.

ரஜினி நடிப்பிலே பல பரிமாணங்களை காட்டி இருந்தாலும், அவருடைய வழக்கமான குத்து வசனங்கள் இல்லவே இல்லை, ரஜினி பெயர் போடும் போது கொடுக்கும் பிரமாண்டம் அவரின் அறிமுக காட்சியிலே இல்லை. கதையிலே கருத்துமட்டுமே சொல்லவேண்டும் என்று கருத்தாய் இருந்திருப்பார்கள் போல தெரியுது, இலக்கியவாதிகள் மாதிரி முஞ்சை உர்னு வச்சிக்கிட்டு விழுந்து விழுந்து சிரிச்சேன்னு பின்னூட்டம் போடுற மாதிரி. பிரமாண்டம் என்ற மாயாசாலச்சிலே எந்திரன் சில இடங்களிலே தொய்வு அடையத்தான் செய்கிறது. முத தடவை பார்த்தாதாலே இப்படி நினைக்க தோணுது, மறுபடி ஒருதடவை பார்த்தா என்ன தோணும்னு பாத்திட்டு சொல்லுறேன்.

வழக்கமான தமிழ் படங்களை போல் இல்லாம, நாயகி ஐஸ்வர்யா பச்சன் கடைசி வரைக்கும் வருகிறார்கள், அவர்களின் நடனம், உடை, முகபாவனை அனைத்தும் அருமை, ரஜினிக்கு கொடுத்த வேடங்களை கட்சிதமாக செய்து முடித்து இருக்கிறார், முதல் பாதிலே சிட்டி கதாபாத்திரம் கலக்கல், படத்தின் இசையப் பத்தி முழம் போட்டு விளக்குற அளவுக்கு அறிவு இருந்தா இன்னைக்கு நான் பெரிய இசை அமைப்பாளர்(அதிர்ச்சி அடையாதீங்க) ஆகி செவ்வாய் கிரகத்திலே கொடுக்கப் படும் மிகப் பெரிய விருதாகிய கொஸ்கர் விருது வாங்கி இருப்பேன்.கருணாஸ், சந்தானம் நகைச்சுவை காட்சிகளை விட, சிட்டியின் நகைச்சுவை காட்சிகள் நல்லா இருக்கு.

முதல் பாதி விட்டவுடன் ஏறப்பட்ட மன நிறைவு இரண்டாம் பாதியிலே இல்லை, ரஜினியையே வில்லன் வேடத்துக்கு பயன் படித்தி இருந்தாலும், அவர் அதை சிறப்பாக செய்து இருந்தாலும், ரஜினி அடுத்தவர்களுடன் மோதி வெற்றி பெறுவதற்கும்,ரஜினி , ரஜினியோட சண்டை போட்டு வெற்றி பெறுவதற்கும் வித்தியாசம் இருக்கு. கடைசியிலே ரஜினி வெற்றி பெற்றாலும் அந்த மன நிறைவு பார்த்த எனக்கும், என்னோட வந்த நண்பருக்கும் இல்லை.சில இடங்களிலே நீளமான சண்டைகள் தேவை இல்லை என்ற நிலை வரலாம்.

படத்தின் ஒருவரி கதை ஒரு எந்திரம் உருவாக்கி, அதற்கு மனிதனைப் போல உணர்வுகளை கொண்டு வந்தால், என்ன ஆகும் என்பதே, இந்த ஒருவரி கதைக்கு திரைக்கதை எழுந்துங்கள் என்று ஒரு தொடர் பதிவு விட்டால் என்ன நடக்குமுன்னு தெரியலை, ஆனா படத்திலே ரோபோ நடக்குது, பாடுது,ஆடுது.

படத்துக்கு வில்லன் என்ற கதாபாத்திரம் யாரு கண்டு பிடிக்கிறது கொஞ்சம் மல்ல ரெம்பவே கஷ்டம், முதல் பாதியிலே கொஞ்சம் சுருசுருப்பா வாரவரு, ரெண்டாவது பாதிலே பொசுக்குன்னு போயிடுறாரு, மூன்று வித காதாப்பாத்திரங்களிலே நடித்து இருக்கும் ரஜினியையும், அதற்கு இருக்கும் ஒரே நாயகியை மட்டுமே சுத்தி ஓடுது, திரை அரங்கத்திலும் ஓடும்... மொத்தத்திலே இது ஒரு ஷங்கர் படம் என்ற திருப்தி இருக்கு, அம்புட்டுதான் விமர்சனம், நீங்களும் திரையிலே பார்த்துவிட்டு கடையிலே ஏத்துங்க


21 கருத்துக்கள்:

Unknown said...

நீங்கள் சொன்னது 100 சதவீதம் சரி. இது ரஜினி படம் அல்ல. ஷங்கர் படம். எனக்கும் அதே எண்ணம் தான்

--

sakthi said...

ஆமா என் உடன் பிறப்பும் காலையில போய் முதல் ஷோ பார்த்திட்டு இதே கருத்தை தான் சொன்னான்

பவள சங்கரி said...

திரைப் படம் அதிகமாக பார்க்கும் வழக்கம் இல்லாத நான் இந்தப் படம் பார்க்கலாமா என்று யோசித்தேன், ஆனால் இப்போது போக வேண்டுமா என்று யோசிக்கிறேன்........ நன்றிங்க.

ஹேமா said...

நசர்...படவிமர்சனம் சொன்னா படம் பார்க்கணுமா பார்க்கவேணாமான்னும் சொல்லணும் !

பழமைபேசி said...

அண்ணே, நுழைவுச் சீட்டோட நகல்???

Riyas said...

நல்லா சொல்லியிருக்கிங்க..

vasu balaji said...

இது படம் பார்க்க முன்னயே எழுதின விமரிசனமாட்ட இருக்கு:)

கயல் said...

இரஜினியையும் மீறி சங்கர் ஜெயிச்சிட்டாருன்னா சொல்றீங்க?

நசரேயன் said...

//
திரைப் படம் அதிகமாக பார்க்கும் வழக்கம் இல்லாத நான் இந்தப் படம் பார்க்கலாமா என்று யோசித்தேன், ஆனால் இப்போது போக வேண்டுமா என்று யோசிக்கிறேன்........ நன்றிங்க
//

கண்டிப்பா பாருங்க

//நசர்...படவிமர்சனம் சொன்னா படம் பார்க்கணுமா பார்க்கவேணாமான்னும் சொல்லணும் !//

படம் பார்க்கலாம் ஹேமா .. படம் பார்த்திட்டு விமசனம் எழுதனும் சரியா .. அடுத்த கவுஜைக்கு பதிலா விமர்சனம் தான் வரணும்

//
இரஜினியையும் மீறி சங்கர் ஜெயிச்சிட்டாருன்னா சொல்றீங்க//

ஆமா கருத்து கயல்

நசரேயன் said...

நன்றி பால பாரதி , ரியாஸ்

பின் விமர்சனம் தான் பால அண்ணே

மணி அண்ணே சீட்டு நகலை அரங்கத்திலே ஆட்டையப் போட்டுட்டாங்க

TechShankar said...

Thanks 4 sharing Your Review - உங்கள் விமர்சனத்திற்கு நன்றி

by
TSடாப் 60 ரோபோட் எந்திரன் ஸ்டில் படங்கள்

Anonymous said...

ரொம்ப நல்ல இருக்கு

velji said...

/நீங்களும் திரையிலே பார்த்துவிட்டு கடையிலே ஏத்துங்க/

-இது நல்லாயிருக்கு!

goma said...

படம் பார்த்து விட்டு நானும் என் பங்குக்கு ஏத்துகிறேன்...

R.Gopi said...

எந்திரன் படம் அட்டகாசம்....

நன்றி............

Unknown said...

மிக அருமையான பதிவு

http://denimmohan.blogspot.com/

Anonymous said...

ENDHIRAN ENDHIRUKKUMAA? KASHTAMTHAAN. WHILE COMING OUT OF THEATRE, ORU CHINNA PAYAN AVANGA APPA KITTA SOLRAAN - APPAA INDHA ROBO SCENA ELLAM EARKANAVAE "chutti Tv" la PAARTHIRUKKAEN.

MOTHATHIL "ENDHIRAN" ORU "KAYALANKADAI"

'பரிவை' சே.குமார் said...

Nachhhh.... vimarsanam....

mrknaughty said...

நல்லா இருக்கு
thanks
mrknaughty
click here to enjoy the life

வருண் said...

என்ன உங்களுக்கு ரஜினிகளுக்குள்ளேயே மிஸண்டர்ஸ்டாண்டிங், சண்டை வருவது தாங்கமுடியலை போல இருக்கு!

இன்னும் கொஞ்சம் படத்தை உயர்த்தி எழுதியிருக்கலாம் னு தோனுது!

nellai அண்ணாச்சி said...

அன்பு தீபாவளி வாழ்த்துகள்