Monday, September 28, 2009

மர்ம கடிதம்

இன்னைக்கு கூகிள் ஆண்டவரிடம் தேடி அங்கேயும் இங்கேயுமா சுட்டு, என் வேலையை காத்து கொள்ள பொழப்பை ஓடினாலும், எனக்கு ஞாபகம் தெரிஞ்ச நாளிலே மூணாம் வகுப்பு படிக்கும் போது நான் முதல் மாணவன் படிப்பிலும், இட வரிசையிலும்,ஆனா கொஞ்ச காலத்திலேயே கடைகோடி மாணவனுமாகவும், மாப்பிள்ளை பெஞ்சு என்று அன்போடு அழைக்கப்படும் கடைசி பெஞ்சுக்கும் தள்ளப்பட்டேன்.அதை கொசு வத்தி போட்டு விளக்கபோறேன்.அதனாலே கொஞ்சம் பொறுமையா இருங்க, தலை தெறிச்சு ஓடவேண்டாம்.


1984 வருஷம் அப்பத்தான் எங்க வகுப்புக்கு கமலா டீச்சர் வந்தாங்க.அந்த காலத்திலே எங்க ஊரிலே மிஸ் புளியங்குடி எல்லாம் நடத்தி இருந்தா குறைந்த பட்சம் ஒரு பத்து வருசமாவது அவங்களுக்கே பட்டம் கிடைத்து இருக்கும்., நான் ஆள் கருவாப்பய மாதிரி இருந்தாலும் படிப்பிலே கருந்சிறுத்தை மாதிரி, ரெம்ப நல்லா படிக்கிற மாணவன் என்பதாலே அவங்களுக்கு என்னை ரெம்ப பிடிக்கும், அவங்க வகுப்புக்கு பாடம் நடத்த வரும் போது என்னிடம் தான் புத்தகம் வாங்கி பாடம் எடுப்பாங்க.ஒருநாள் பாடம் எடுத்து முடிச்ச உடனே என்னிடம்

"
நீ நல்லா படம் வரையுற" அப்படின்னு சொன்னாங்க.

எனக்கு அவங்க என்ன சொல்லுறாங்கனு புரியலைனாலும் சும்மா தலை ஆட்டி வச்சேன். அடுத்த வாரத்திலே ஒருநாள் பாடம் நடித்தி முடித்து விட்டு என்னை தனியே ஆசிரியர் ஓய்வு எடுக்கும் அறைக்கு வரச்சொன்னார்கள். நானும் போனேன், ஒருவட்டம் போட்டு நிக்கச்சொன்னங்க நான் நின்ன உடனே ஒருகம்பை எடுத்து விட்டு வந்து அடி வெளுத்து எடுத்தாங்க.

இப்படி எதிர்பாராத அடி விழுந்தாலே "ஐயோ அம்மா..வலிக்குது" சொன்னாலும் என்னை விட வில்லை.அவங்களுக்கு கை வலிக்க ஆரம்பித்த உடனே நிறுத்தி

"நாளைக்கு வரும் போது உங்க அம்மா அப்பா ரெண்டு பேரையும் ௬ட்டிட்டு வா"

நானும் அழுது கிட்டே வீட்டுக்கு வந்து விசயத்தை சொன்னேன்.என் வீட்டிலே என்னை சமாதானப் படுத்தி நாளைக்கு பள்ளிக்கு வர சம்மத்தித்தார்கள்.

மறு நாள் காலை பள்ளி தலைமை ஆசிரியர் அலுவலகத்திலே என் தந்தையிடம்

உங்க பையன் இந்த வயசிலே காதல் கடிதம் எல்லாம் எழுதுறான், நல்லா படிக்கிற பையன் தான் அதுக்காக சும்மா விட முடியுமா?

"௬ட படிக்கிற புள்ளைக்கா?"

"இல்ல இந்த டீச்சர்க்கு
"

"எங்க காட்டுங்க?"

இதோ பாருங்க, அவன் வரைந்த ரோசா பூ வும், எழுதிய கடிதமும்

என்று தலைமை ஆசிரியர் என் அப்பாவிடன் சொன்னார், அவருக்கு வந்த கோபத்திலே அங்கே என்னை நாய் அடி அடி அடித்தார், அந்த அடியை பார்த்து தலைமை ஆசிரியர் என் மேல பரிதாப பட்டு, என் அப்பாவை சமாதானப் படுத்தி இனிமேல இப்படி செய்யாம பாத்து கொள்ளுங்க என்று அறிவுரை ௬றி அனுபிட்டாங்க.

என்னை அடிச்சதிலே கை வீங்கி ஒரு வாரம் விடுமுறை எடுத்தாங்க,அதற்கு அப்புறமா வந்த அவங்க என் பக்கம் ௬ட திரும்பி பார்க்கிறது இல்லை, என்னை அவங்களே கடைசி பெஞ்ச்க்கு மாத்தி விட்டார்கள். அதுவரைக்கும் எங்க தெரு வரைக்கும் இருந்த எனது புகழ் எங்க பள்ளி மட்டுமல்லாமல் எங்க ஊரில் அனைவரையும் சென்று அடைந்தது.

கொஞ்ச நாள் கழித்து டீச்சர்க்கு திருமணதிற்க்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார்கள், அவங்க வீட்டிலே என்ன பிரச்சனையோ அவங்க பூச்சி மருந்தை குடித்து விட்டார்கள், நல்லவேளையாக பிழைத்து கொண்டார்கள், அவங்க மட்டும் அன்றைக்கு மேலே போய் இருந்தா இவ்வளவு தூரம் நீங்க கஷ்ட படவேண்டிய அவசியம் இருந்து இருக்காது.அதற்கும் நானே காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டேன்.

டீச்சர்க்கு லவ் லெட்டர் கொடுத்தவன் பிஞ்சிலே பழுத்தவன் அப்படின்னு பல பட்டபெயர்களை கொடுத்து ஒரு பிஞ்சு மனசுலே நஞ்சை விதைத்து விட்டாங்க.அது வரைக்கும் படிப்பிலே முதல் இடம் வரணுமுன்னு நினச்ச என்னை முதல் துண்டு போடுறதை பத்தி யோசிக்க ஆரம்பித்தேன்.

எடுத்தேன் துண்டை மறந்தேன் படிப்பை, வீசினேன் வலையை, காலங்கள் கடந்தது வயசு மட்டும் நகர்ந்து கொண்டே போச்சி, நான் எடுத்த துண்டும் வலையும் நகரவே இல்லை. எனது வலையும் துண்டையும் பார்த்து தலை தெறிக்க ஓடியவர்களை எண்ணினால் இன்னைக்கு வீட்டிலே கஞ்சி கிடைக்காது.போட்ட துண்டை எடுக்க ஆள் இல்லை, போகிற இடம் எல்லாம் வசை பாட்டு, இப்படி ஒரு தீராத மன உளைச்சலுக்கு ஆள் ஆன நான் படிப்பிலே 40௦/100 எடுத்தவன் 10/100 எடுத்தேன்.

படிப்பிலே பல பட்டங்கள் கிடைக்கா விட்டாலும் ஒரு தலையா துண்டு போடுறதிலே பலஆயிரம் பட்டங்கள் கிடைத்தது. அன்றைக்கு வாழ்கையிலே பின்னாலே போனவன் இன்று வரை முன்னால வரவே முடியலை.டீச்சர்க்கு எனது புத்தகத்திலே வைத்து காதல் கடிதம் கொடுத்த மர்ம நபர் இன்றளவும் கிடைக்கவில்லை.


Wednesday, September 23, 2009

மழலைப் படி

பாப்பா எங்க போறா?

நான் ஸ்கூல்க்கு போறேன்.

ஏன் போற?

நான் பிக் கேர்ள் ஆகிட்டேன், அதனாலே ஸ்கூல்க்கு போறேன், அப்பா என் பிரண்ட்ஸ் எல்லாம் ஸ்கூல்க்கு வரலை.

அவங்க இன்னும் பிக் கேர்ள் ஆகவில்லை, அதனாலே வரலை

அவங்க எல்லாம் இன்னும் பேபியா ?

ஆமா நீயும் அம்மாவும் ஸ்கூல்க்கு வரணும் ?

நாங்கதானே உன்னை ஸ்கூல்க்கு ௬ட்டுபோறோம்

ஸ்கூல்ல என்னை விட்டுட்டு நீயும் அம்மாவும் வீட்டுக்கு போக ௬டாது, என் ௬டவே இருக்கணும்.

ஏன் இருக்கணும்?

எனக்கு அங்க யாரையும் தெரியாது, அதனாலே நான் பயந்துருவேன், நான் குட்டி பொண்ணு அதனாலே நீங்களும் இருக்கணும்.


பள்ளி வகுப்பு அறையில்:

வணக்கம் என் பொண்ணு ஸ்கூல்க்கு வந்து இருக்கா, இது அவளோட சேர்க்கை கடிதம்.


ஒ.. அப்படியா.. நல்ல விஷயம், ஹலோ ஸ்வீட்டி எப்படி இருக்க?

ஏன் என்னைப் பார்த்து பின்னாலே போற?

அப்ப்பா எனக்கு பயமா இருக்கு

நானும் அம்மாவும் இங்கேதான் இருக்கோம் நீ பயப்பட ௬டாது,இவங்க உன் வகுப்பு ஆசிரியை, நீ இவங்களை பார்த்து வணக்கம் சொல்லு.


நீங்க இந்த பாரங்களை எல்லாம் பூர்த்தி செய்ங்க, நான் இதோ வருகிறேன்.


அம்மா அந்த குண்டு பையன் ஏன் அழுறான்?


அவங்க அம்மா, அப்பா அவனை ஸ்கூல்ல விட்டு விட்டு வீட்டுக்கு போய்ட்டாங்க, அதான் அவன் அழுகிறான்.


அவங்க அம்மா, அப்பா பேடு, என் அம்மா, அப்பா குட்.

ஹலோ இங்கே வாங்க, நீங்க நிரப்பிய பாரம்................, இதோ பிடிங்க.

ஆமா, என்கிட்டே எதுக்கு மறுபடியும் நான் நிரப்பிய பாரம் கொடுத்தாங்க.

அவங்க கொடுக்கிறதுக்கு முன்னாடி ஒண்ணு சொன்னா, அது என்னனு புரிஞ்சுதா?

புரிஞ்சா ஏன் வழக்கம் போல யா.. யா ன்னு சொல்லுறேன்

நீங்க நிரப்பினது எல்லாமே தப்பா இருக்காம், அதான் திருப்பி கொடுத்துட்டாங்க,அவங்க பார்க்கிற பார்வையிலே நீங்க எல்லாம் அமெரிக்காவுக்கு கள்ளத்தோணி ஏறி வந்து இருப்பிகன்னு நினைச்சி இருப்பாங்க.குடுங்க நான் திருத்தி தாரேன், தமிழும் ஒழுங்கா எழுத தெரியலை, இங்கிலீஷ்சும் ஒழுங்கா எழுத தெரியலை.

ஐந்து நிமிடம் கழித்து:

கேட்ட எல்லா கேள்விகளுக்கும் சரியா பதிலே சொல்லி இருக்கேன், இதை கொண்டு அவங்க கிட்ட கொடுங்க.

நான் ஒரு தடவை சரி பார்க்கட்டுமா?
சரி பார்த்து உங்க ஆங்கில மானத்தை மறுபடியும் இழக்க வேண்டாம், கொண்டு போய் கொடுங்க.

மேடம் நீங்க சொன்ன தவறுகளை எல்லாம் திருத்தி விட்டேன்.

ஒ.. அப்படியா ரெம்ப சந்தோசம், நீங்க கொஞ்சம் இருங்க நான் சரி பண்ணிட்டு சொல்லுறேன்.

இரண்டு நிமிடம் கழித்து:

எல்லாம் சரியா இருக்கு

இன்னும் வேற ஏதும் பாரம் நிரப்பனுமா?

இல்லை.. அவ்வளவு தான், நீங்க கிளம்பலாம்.. என்ன யோசிக்கிறீங்க..

என் பொண்ணு எங்களை விட்டு தனியா இருந்ததே கிடையாது, அதான் எப்படி தனியா இருப்பான்னு யோசிக்கிறேன்.

உங்களே மாதிரி தான் எல்லாம் பெற்றோரும்,இதோ பாருங்க அவங்க குழந்தைகளும் அழுறாங்க, கொஞ்சம் நேரம் அழுவாங்க, அப்புறம் எல்லாம் சரியாகி விடும்.

நாங்க இப்ப என்ன பண்ணனு தெரியலை, எப்படியும் போகும் முன்னே அழ ஆரம்பித்து விடுவாள்.

முதல்ல ஒருத்தர் போங்கோ, அப்புறமா கொஞ்ச நேரம் கழித்து இன்னொருத்தர் போங்கோ.

குட்டியம்மா, அம்மா போய் பாப்பா ஸ்ராலர் எடுத்திட்டு வாரேன்

ஏன் ஸ்ராலர் எடுக்கணும்?
வெளியே வெயில் அடிக்குது, அதனாலே உள்ளே எடுத்திட்டு வாரேன். அப்பா இங்கதான் இருப்பாங்க.

சரி, அப்ப நீ போயிட்டு வா..

அப்பா நீ வா நாம ரெண்டு பேரும் கலர் பண்ணலாம்.

சரி வா..

ஐந்து நிமிடம் கழித்து:

அம்மா எங்கேடா இன்னும் காணும், அப்பா போய் பாத்திட்டு வாரேன்.

இல்ல வேண்டாம்.. எனக்கு பயமா இருக்கும், அம்மா வருவா, நீ உக்காரு.

உங்க டீச்சர் எதோ உனக்காக எடுத்து வச்சி இருக்காங்க, வா பார்க்கலாம்.

ஹாய்.. உனக்கு டோரா பிடிக்குமா?

பதில் சொல்லு.. பிடிக்குமுன்னு..

நீங்க போங்கோ நான் பிடிச்சிகிறேன், வேற வழி இல்லை..

சரி.. பாப்பா அப்பா அம்மாவை ௬ப்பிட்டு உடனே வாரேன், நீ டீச்சர் கிட்ட இரு..

வேண்டாம்.. அப்பா போகாதீங்க.. போகாதீங்க...

ஐந்து நிமிடம் கழித்து :

ஹலோ மிஸ்டர்..பின் வாசல் கதவிலே நின்னு என்ன பண்ணுறீங்க?

என் பொண்ணு இன்னும் அழுகையை நிறுத்தலை..

அவங்க தன்னாலே சரியாகி விடுவாங்க, நீங்க கவலை படமா போங்கோ, இப்ப அழுரான்னு கஷ்டப்பட்டா,அவளோட எதிர்கால வாழ்க்கை கஷ்டமாகிடும்.இது வரைக்கும் உங்க தயவிலே இருந்த உங்க உங்க பொண்ணு, வாழ்கையிலே எடுத்து வைக்கும் முதல் படி, இது சந்தோஷ படவேண்டிய விஷயம்.இன்னையிலே இருந்து உங்க பொண்ணு ஒரு புது வுலகத்திலே காலடி எடுத்து வைக்கிறாள்.இது எதிர் காலத்திற்கான ஏணிப் படி. மனித வாழ்க்கை சுழற்சி முறையிலே முக்கிய கட்டம்.உங்களோட மன நிலையிலே தான் எல்லா பெற்றோரும் இருப்பாங்க, நீங்க உங்க மகளை பற்றி கவலை படவேண்டாம்.இன்னும் ஒரு வாரத்திலே சரியாகி விடும், மாற்றத்திற்கு ஏற்ற படி மனம் மாற கொஞ்ச நாள் ஆகும்.நீங்க சீக்கிரம் போங்கோ, இங்கே யாரையும் நிற்க அனுமதிப்பதில்லை.

என்னங்க அவங்க சொன்னது எதாவது புரிஞ்சுதா?

ம்.... நல்லா புரிஞ்சது

ரெண்டு வார்த்தைக்கு மேல இங்கிலீஷ் பேசினாலே அர்த்தம் கண்டு பிடிக்க நாலு மணி நேரம் யோசிப்பீங்க.

அவங்க என்ன சொன்னாங்கன்னு சொல்லுங்க..

அதெல்லாம் முடியாது

அதானே பார்த்தேன், நீங்க ஓணான் மாதிரியும், கோயில் மாடு மாதிரி தலை ஆட்டின வேகத்தை பார்த்தா, எங்கே புரிஞ்சி போச்சோன்னு நினைச்சேன்.இன்னைக்கும் என் கணக்கு தப்பலை


Wednesday, September 16, 2009

மணமகன் தேவை

கணணி துறையிலே கை நிறைய சம்பளத்தை வாங்குது பத்தாமல் குட்டி சாக்கை எடுத்து கொண்டு வரும் பெண்ணுக்கு மாப்பிள்ளை தேவை படுகிறது.குறைந்த பட்சம் ஐ.ஐ.டி, ஆர்.இ.சி அல்லது அண்ணா பல்கலை கழகத்திலே படித்த மணமகன் தேவை படுகிறது, உடல் தகுதியிலே ஆறு முத்த எட்டு பாக் அப்ஸ் வைத்திருக்கு வேண்டும்.நல்ல நகைச்சுவை உணர்வு வேண்டும், சிந்தனையிலே சிரிப்பு இருக்க வேண்டும்.அது கீழ்பாக்கம் சிரிப்பாக இருக்க ௬டாது. என்னை நன்றாக புரிந்து நடக்க வேண்டும், என் குடுபத்திலே உள்ளே எல்லோரையும் மரியாதையிலே மனதிலே மட்டுமல்லாமல் செயலிலும் காட்டவேண்டும்.குடி, புகைப்பது பற்றி கவலை இல்லை, குடித்து விட்டு தெருவிலே விழாமல் வீட்டு திண்ணையிலே விழுந்தால் நல்லது.கல்யாணதிற்கு முந்திய வாழ்க்கை பாத்திரம் ரெம்ப அடி வாங்கி இருந்தாலும், திருமணத்திருக்கு அப்புறம் நெழிசல் எடுத்து சரி செய்யப் படும், என்னை தவிர வேற யாரும் கண்ணால மட்டுமல்ல மனசாலேயும் பார்க்க ௬டாது.என்னைய பேரிளவரசி மாதிரி தாங்கனும், என் குடும்பத்து ஆளுங்களுக்கு கூஜா தூக்கி சேவை செய்யணும். சண்டைனு வந்தா அடிக்கிற முதல் அடியும், கடை அடியும் என்னோடத்தாதன் இருக்கணும்.நான் இல்லாத நேரங்களில் பல வீட்டு வேலைகளை பார்த்து கொண்டு ஓய்வு இல்லாமல் இருந்தாலும், நான் வந்த உடனே என்னை கவனமான அக்கறையோட எதிர்கொள்ளணும். நான் என்ன சொல்லுவேன்னு கேட்க கொலை ஆர்வத்திலே இருக்கணும். நான் எதுவுமே சொல்லனைனாலும் ஊமை பாசையிலே யாவது என்கிட்டே பேசணும்.


என் கோபத்திற்கான காரணம் தெரிய முயற்சிக்கணும்.இந்த மாதிரி சமயத்திலே முகம் பார்த்து அகம் சொல்லுவது ஒரு நல்ல ரங்கமணிக்கு அழகு.நான் கோபப் பட்டால் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது, கோபக்கனல் பார்வை வீசும் போது வாய்க்கு குரங்கு பூட்டு போடணும், என்னோட அதிவேக கோபம் பார்த்தல் மயங்கி விழணும் இல்ல மந்திரிச்சி விட்ட கோழி மாதிரி ஆகிடனும்.


நகைகடை, துணிகடை இப்படி கடைகள் எல்லா கடைகளுக்கும் வாரம் தவறாமல் அழைத்து செல்லவதே பொழுதுபோக்காக மாறவேண்டும். வாங்கிய பெருட்களை சேதாரம் செய் கூலி இல்லாமல் வீடு வரை பத்திரமாக கொண்டு சேர்ப்பதிலே கண்ணிய புருசனாக இருக்க வேண்டும்.இவை தவிர முகத்திற்கு, கை கால் நகங்களுக்கு மை அடிக்கும் இடங்களுக்கு அழைத்து செல்வது சிறப்பு பொழுது போக்காக அமைய வேண்டும்.இன்ப சுற்றுல செல்வது ரெம்ப பிடிக்கும், மலை வாழ் இடங்கள் அதிகம் பிடித்தவை, அதற்காக கொல்லி மலை, கொடை மலை எல்லாம் போக ௬டாது, கடல் கடந்த மலைகளாகிய இமயமலை, ஆல்ப்ஸ் மலை ஆகிய இடங்களுக்கு ௬ட்டி செல்லவேணும்.


நான் எங்கே போகிறேன், எப்ப வருவேன் என்ற கேள்வியே இருக்க ௬டாது, அதே மாதிரி நீங்க வெளியே போக வேண்டுமானால் எங்க குடும்ப மென்பொருளிலே அனுமதி பெற வேண்டி விண்ணப்பம் செய்ய வேண்டும், அதை முதலில் எங்க வீட்டிலே உள்ள அனைவரும் சரி பார்த்து காரணங்கள் நியாயமானவைகளா என்று நியாய தராசிலே நிறுத்தி அலசி ஆராய்ந்து முடிவு எடுத்து இறுதியிலே எனக்கு பரிந்துரை செய்வார்கள், அவர்கள் அனுமதித்த எந்த முடிவையும் மறு ஆய்வு செய்ய எனக்கு முழு அதிகாரம் உண்டு, ஏன்னா நான் தான் சிஸ்டம் அட்மின்.


மேற்கூறிய அனைத்து காரங்களும் அனைத்தும் மேலோட்டமானவைகள் விரிவான காரங்களுக்கு எனது சொந்த இணைய தளத்திலே உள்ள 500௦ பக்ககங்கள் கொண்ட புத்தகத்தை தரவிறக்கம் செய்யவும்.


முக்கிய அறிவிப்பு : அமெரிக்க பச்சை அட்டை வைத்ரிப்பவர்களுக்கு சிறப்பு சலுகை உண்டு, அவர்களுக்கு முன்னுரிமை, முக்காடு உரிமை உட்பட பல உரிமைகள் உண்டு.


பொறுப்பு அறிவித்தல் : விதிகள் மாறுதலுக்கு உட்பட்டது.


ஐந்து வருடங்களுக்கு பின் :

அம்மா தாயே பிள்ளையை பெத்த மகராசிகளே ஒரு பையன் கொடுங்க தாயே, உங்க காலுக்கு செருப்பாவும், என்னை கட்டிக்க போறவருக்கு ஒரு பக்தையா இருப்பேன். படிப்பு,அழகு, அறிவு எதுவுமே வேண்டாம் ஆண் பிள்ளையா இருந்தா போதும்.சீக்கிராம ஏதாவது பாத்து செய்யுங்க, ஒரு பிஞ்சை பிச்சு ஆக்கிடாதீங்க.முக்கிய குறிப்பு, பொறுப்பு எல்லாம் அறிவிக்கல சம்மதம் சொல்லுங்க சரணம் அடைஞ்சுடுறேன்.


Monday, September 14, 2009

தங்கமணி குறிப்புகள்

குறிப்பு ஒன்று:

அட உங்களைத்தான், என்னத்த இப்படிப் புரட்டி பார்க்குறீங்க, இது என்ன காதல் கடிதமா?,இது குறிப்பு கடிதம். எழுதினது நான் தான் சந்தேகப்பட்டு என்னை தொந்தரவு செய்தால் விளைவு என்ன வாகும் என்பதை முக்கிய குறிப்பிலே கூறியுள்ளேன்.சரி விசயத்துக்கு வாரேன், முதல்ல பிரிட்ஜ்யை திறந்து மேல் தட்டிலே இருக்கிற பாத்திரத்திலே காப்பி என்று பெயர் எழுதப்பட்ட கோப்பை எடுத்து மைக்ரோவேவ் ஓவனில் வைக்கவும், மறக்காமல் சர்க்கரை, பால், காப்பி பொடி, தண்ணி உங்களுக்கு ஏத்த விதத்திலே கலக்கவும்.கலக்கும் போது உங்கள் மனசிலே காப்பி கலவையிலே ஏதும் குறை இருந்தால், மறக்காமல் பிரிட்ஜ் கதவிலே இருக்கும் எனது புகைப் படத்தை பார்க்கவும், நீங்க கலக்கும் போது குறைவாக தெரியும் அன்பு இப்போது காப்பியோடு கலந்து விடும்.இனிமேல இந்த குறிப்பு அவ்வளவு தான், அடுத்த குறிப்பு அடுப்பிலே கவிழ்த்து இருக்கும் வேற்று பாத்திரத்திலே இருக்கிறது, மறக்காமல் முக்கிய குறிப்பை படிக்கவும்.குறிப்பு இரண்டு:


இரண்டாம் குறிப்பை படிக்கும் முன் முதல் குறிப்பிலே இருக்கும் விசத்தை முடிக்கவும், காப்பியை கையிலே எடுத்து கொண்டு இதை படிக்கவும் மீதம் இருக்கும் காப்பியை அதே காப்பி என்று எழுதப்பட்டு இருக்கும் பாத்திரத்தில் வைத்து பிரிட்ஜ்ல் வைக்கவும்.வைத்து விட்டு பிரிட்ஜ்ல் இருக்கும் முட்டை பெட்டியை எடுத்து அதிலே இரண்டு முட்டைகளை எடுத்து அடுப்பிலே உள்ள பாத்திரத்திலே உடைத்து ஊத்தவும். மீண்டும் பிரிட்ஜ்யை திறந்து பிரட் பையை எடுக்கவும்.இதற்கும் காப்பியை குடித்து முடித்து விட்டால் கழுவி வைக்கவும். பிரட் பையிலே பிரட் இல்லை என்றால் துண்டு பிரட்கள் எங்கேயோ வைத்த ஞாபகம் மறக்காமல் தேடி எடுக்கவும்.இதோடு இந்த குறிப்பு முடிகிறது, அடுத்த குறிப்பு அலமாரியிலே இருக்கிறது.

குறிப்பு மூன்று:

இதற்குள் ரோட்டியையோ, ரொட்டி துண்டையோ கண்டு பிடித்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன். இப்போது முட்டையுடன் ரொட்டி துண்டுகளை போட்டு கலக்கவும், நீங்கள் கலக்கும் முன் அடுப்பு பத்த வைக்க வழக்கம் போல மறந்து இருப்பீர்கள் என நம்புகிறேன்.தீயை பத்த வைத்து விட்டு கலவையை நன்கு கலக்கவும். முடிந்தால் உபரியாக உப்பு, புளி, மிளகாய் இவற்றை சேர்த்து கொள்ளவும். ஒரு ஐந்து நிமிடம் கொதிக்க விட்டு பின் பிரிட்ஜ்ல் உள்ள லஞ்ச் பாக்ஸ் என்று பெயர் எழுதப்பட்ட பாத்திரத்திலே அனைத்தையும் போடவும், இப்போது அன்பு குறைவாய் இருந்தால் என புகைபடத்தை பார்க்கவும். முட்டை கலவையை சிந்தாமல் சிதறாமல் அள்ளி லஞ்ச் பாக்ஸ்சிலே போடவும், மீதம் இருந்தால் என்ன நடக்கும் என்பதை முக்கிய குறிப்பிலே எழுதியுள்ளேன்.இனி முக்கிய குறிப்புக்கு செல்லலாம். அது உங்க பேன்ட்,சட்டை, மடிகணனி பை, பணப்பை ஆகிய இடங்கள் மட்டுமில்லாமல் கிழே கிடக்கும் அனைத்து துண்டு தாள்களிலும் உள்ளது, எதாவது ஒன்றை எடுக்கவும்.

முக்கிய குறிப்பு:

கடிகார மணி காலை 12 மணிக்கு அடிக்கு மாறு வைத்துள்ளேன், அந்த நேரத்தை மாற்றி மதியம் நான்கு மணிக்கு அடிக்கு மாறு வைக்கவும். முக்கிய குறிப்பு தவறினால் இன்று கண்டிப்பாக என் சமையல் என்பதை யாராலும் தடுக்க முடியாது.அலுவலகம் செல்லும் போது ஏதும் குறையாக தென்பட்டால் என் புகைப் படத்தை பார்க்கவேண்டாம், கடைமை செய்ய கிளம்பும் போது காதல் குறுக்கே நிறைக்க ௬டாது என்ற நல்ல எண்ணத்திலே உங்க பணப்பையிலே இருக்கும் எங்க அப்பா படத்தை பார்த்து விட்டு செல்லவும்.


Friday, September 11, 2009

ஒருங்கிணைந்த தகவல் மையம்

வணக்கம் சுடு நாய் கடை எண் ஏழு, நீங்க எப்படி இருக்கீங்க?

வயறு காயுது, சாப்பிட எதாவது கிடைக்குமா ?

உங்க பலநோக்கு எண் கொடுங்க ஐயா

1234567890

வணக்கம் இருளாண்டி, நீங்க சுடுகாட்டு சந்திலே இருந்து ௬ப்பிடுறீங்க, உங்க வீட்டு தொலைபேசி எண் 34567890, கைபேசி 123455678 நீங்க எந்த எண்ணில் இருந்து ௬ப்பிடுறீங்க?

எப்படி உங்களுக்கு எண் தொலைபேசி எண்கள் எல்லாம் தெரியுது?

நாங்க ஒருகிணைந்த தகவல் மையத்தோடு தொடர்பு வச்சி இருக்கோம்

என்னோட சாப்பாட்டு பட்டியலை கொடுக்கலாமா?
எனக்கு ஒரு கோழி பிரியாணி கொடு

உங்களுக்கு பிரியாணி சரிவராது

எப்படி ?

உங்களோட மருத்துவ குறிப்பு படி, உங்களுக்கு கொழுப்பு அதிகமா இருக்கு, அதனாலே கொழுப்பு குறைஞ்சதா சாப்பிடுங்க

எப்படி உங்களுக்கு தெரியும் ?

நீங்க போன வாரம் ஓசியிலே நூலகத்திலே எடுத்த புத்தகம் "வெட்டியா கொழுப்பை குறைப்பது எப்படி", அதை வச்சித்தான் சொல்லுறேன்

சரி சாமி, ஒரு ஆட்டுக்கால் பாயா கொடு.

அது உங்க உடம்புக்கு போதும், பாயா விலை 200

நான் வங்கி கடன் அட்டையிலே பணம் கொடுக்கலாமா?

அதற்கு நீங்க ஒரு பாது காப்பு கேள்விக்கு பதில் சொல்லணும்

"கேளுங்க"

நீங்க தெய்வம், எனக்கு ஒன்னுக்கு நாக்கு தள்ளுது, நீங்க 159 பேரை காதலிச்சி இருக்கீங்க,உங்க 159 வது காதலி பெயர் என்ன?

என்னது இந்த கணக்கு உங்களுக்கு எப்படி தெரியும்

ஒருகிணைந்த தகவல் மையம்

ஒரு மார்க்கமாத்தான் இருக்கு, அவ பேரு கல்யாணி

உங்க காதலியையே கல்யாணம் பண்ணி இருக்கீங்க, ரெம்ப சந்தோசம்

அந்த கல்யாணி வேற, இந்த கல்யாணி வேற

அப்ப ரெட்டை சதம் அடிச்சிட்டீங்களா?

ரெம்ப முக்கியம் இப்ப ?

மன்னிக்கணும் வாடிகையாளரிடம் ஜாலியா பேசலைனா என் ஜோலி போய்டும்.
உங்க கடன் வரலாறு சரியில்லை,அதனாலே நீங்க பணம் தான் கொடுக்கணும்.

சரி நான் பணம் எடுத்து வைக்கிறேன் நீங்க வரும் முன்னே

ஐயா அது முடியாது, இப்பத்தான் உங்க வங்கியிலே இருந்து பணம் கல்பனா என்கிற வங்க இருந்து 2000 ரூபாய் எடுத்துட்டு போறாங்க,அவங்க உங்க குடும்ப பட்டியல்லே வரலை

ஒருகிணைந்த மையம் உயிரை எடுக்குது

ஐயா உங்க வங்கியிலே இப்ப இருப்பது 20 பது ரூபாய், அதிலே பாயா வராது, ஒமியம் தான் வரும்

ஒமியமுனா என்ன?

மாட்டு கழிவு சூப்

புரியுது,பாயா எடுத்துட்டு வா, நான் எப்படியாவது பணம் எடுத்து வைக்கிறேன்.எவ்வளவு நேரம் ஆகும்

45 நிமிஷம், உங்களுக்கு ரெம்ப அவசரமுன்னா, நீங்க உங்க "படை வண்டி" யை எடுத்திட்டு வாங்க

என்னது?

வண்டி எண் "ஏறக்-௧௨௩"

வேற எதாவது வேணுமா?

அனுப்பும் போது, ஓசி சோடவைவும் கொடுத்துவிடுங்க

கொடுக்கலாம், ஆனா உங்க மருத்துவ குறிப்பு படி, உங்களுக்கு சர்க்கரை நோய், அதனாலே கொடுக்க முடியாது

யோவ்.. எளவு எடுத்தவனே கேட்டதை கொடுன்னா, தர்க்கம் பண்ணி, தாலியை அறுக்க, மவனே நேரிலே வந்தேன் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது.

தெரியும், உங்க பல்லை கடிச்சிகிட்டு என் சட்டையை பிடிப்பீங்க, உங்க கையை மடிச்சி என் பல்லை உடைப்பீங்க, இந்த சம்பவம் முன்னவே நடந்து இருக்கு, உங்களுக்கு நீதி மன்றத்திலே ஆறு மாசம் தண்டனை கிடைத்து இருக்கு, சம்பவம் நடந்த இடம், இப்ப நீங்க நிற்கிற இடம் தான்.

அட போங்கடா நீங்களும் உங்க அமைப்பும், நான் இங்கே இருக்கிற குழியிலே படுத்துகிறேன்.

பொறுப்பு அறிவித்தல் : சொந்த சரக்கு அல்ல, இரவல் சரக்கு