Friday, October 3, 2008

மாமியார் மருமகள் கொடுமைகள்

அந்த சம்பவம் நடந்து இன்னையோட ஒரு வருஷம் ஆச்சு, நாள் போனதே தெரியலை . நாம வெட்டியா இருந்தாலும் நாள் காட்டி சும்மா இருக்குமா, குண்டு வெடிப்பு, பூகம்பம் எது நடந்தாலும் அதோட வேலை நிக்காது.அவர் போனதுக்கு அப்புறமா கை பிள்ளையை வச்சு கிட்டு நான் என்ன என்ன கொடுமைகளை அனுபவிக்கபோறேனோ நினச்சு பயப்பட்ட நான் எதிபார்த்ததற்கு மாற நல்ல படியா எல்லாம் நடக்குது.


உலகத்துல பெண்களுக்கு இழக்கப்படும் கொடுமைகளை பட்டியலிட்டா அந்த கொடுமையை பூமி தாங்காது.நான் அனுபவிச்ச கொடுமை எனக்கு மட்டுமல்ல, இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்திலே எல்லா மூலை முடுக்கு எல்லாம் நடப்பதுதான். அதனாலே இந்த கொடுமையை அனுபவிக்கிற, அனுபவிக்க போற யாரும் வருத்தப்பட வேண்டாம் மாதரசிகளே, இது ஒரு சர்வதேச பிரச்சனை. இந்த உலகத்துல தீக்கப்படாத ஒரு விசயங்களில் மாமியார் மருமகள் சண்டையும் ஒன்னு. உலகம் எப்படி வந்ததுனு தீர்வு கிடைத்தாலும் இந்த சண்டைக்கு தீர்வு கிடைப்பது சந்தேகம் தான்.

எனக்கு கல்யாணம் ஆனா புதுசில் என்னை தங்க தட்டில் வச்சு தாங்கு தாங்கின என்மாமியர், அப்புறமா என்னை அடுப்புல வச்சு எரிக்க ஆரமிச்சுட்டா.எனக்கு கல்யாணம் ஆனா புதுசில் சாப்டாம இருக்கேன், எல்லாரு முன்னாலையும் உக்கார மாட்டேனு கோவிச்சா என் மாமியார், அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு நான் என்ன செஞ்சாலும் கோவிக்க ஆரமித்தாள். வர வர மாமிய கழுதை போல் ஆனா மாறி, நானும் கழுதை தேய்ஞ்சு கட்ட எறும்பு போல் ஆனேன்.


மாமியார் உடைச்சா மண் சட்டி மருமகள் உடைச்சா பொன் சட்டி ஆனதுக்கு அப்புறமா என் நிலையில் இருக்க யாரா இருந்தாலும் நான் செஞ்சதுக்கு பாராட்டு விழா எடுப்பாங்க, அவங்க என்ன சொன்னாலும் செவிடன் காதிலே ஊதின சங்கு மாதிரி இருப்பேன், இது போதாதா வாய் சண்டைக்கு, சாப்பிட, சண்ட போட, சாப்பிட, சண்ட போட இப்படியே பொழுதை கழிச்சேன். ஒரு கட்டத்துல சண்டை போடுவதற்காகவே வீட்டுல சிக்கன் பிரியாணி செய்வேன்.இந்தகொடுமைய என் புருஷன் கிட்ட சொன்ன, கொடுமை கொடுமைனு கோயில்க்கு போன, அங்க ரெண்டு பேய் தலைய விரிச்சி ஆடுதாம். உங்க கொடுமை தாங்காம தானே அலுவலுக்கு சீக்ரமா ஓடுறேன். எனக்கு பரிஞ்சு பேச வேண்டிய என் மச்சான் இதை பத்தி பேசினா இடி விழுந்த இருளாண்டி மாதிரி எதுவுமே பேச மாட்டார்.அவரு என்ன செய்வாரு உலக்கைக்கு ஒரு பக்கம் அடி, மத்தளத்திற்கு ரெண்டு பக்கம் அடி.மாமனார் மருமகன் கொடுமை, மாமியார் மருமகன் கொடுமை ஏன் இல்லன்னு தெரியலை, அப்படி இருந்த என் நிலைமை புரியும் இவருக்கு


என் புருஷன் இருக்கப்பவே என்னை வெளுத்து வாங்குற என் மாமியார், அவரு இல்லாதப்ப என்ன செய்வளோன்னு ஒரு பயம் இருந்தது. எங்க அம்மா வீட்டுக்கு போகவும் முடியலை, அம்மா வீட்டுக்கு போகலாம்னா நாத்தனார் கொடுமை தாங்க முடியாது.கொடுமையிலும் கொடுமை என் கதையை இந்த மாறி நாறி போன எழுத்தாளர் எல்லாம் எழுதுறது வேற


என் தலை விதி கொடுமையை நினச்சு மாமியார் வீட்டுலே இருந்தா, என் மாமியார், அவரு போனதில் இருந்து இன்னை வரைக்கும் வம்பு சண்டைக்கோ, வாய் சண்டைக்கோ இழுத்தது கிடையாது.அவங்க என்னை மகள் மாதிரியே நடத்துறாங்க என் மகன் அவள் மாறி பத்துகிராங்க, நான் ரெம்ப கொடுத்து வச்சவ.இப்ப எல்லாம் எங்க தலைமையில்தான் எங்க தெரு தண்ணி சண்டை எல்லாம் நடக்குது.


"எம்மா நாளைக்கு போறதுக்கு எல்லாம் எடுத்து வச்சாச்சா?"

"எல்லாம் ஆச்சு அத்தை"

"நான் பக்கத்து வீட்டு பொன்னம்மா மருத்து கேட்டா கொடுத்திட்டு வரேன்" என்று மருமகளின் மறு பதிலை எதிர்பாக்காமல் நடைய கட்டினாள்.

"வா குருவத்தா கையில என்ன?"

"நீதான் காலிலே அடிபட்டுருசுன்னு மருந்து கேட்டியே கொண்டு வந்திருக்கேன். ஆமா என்ன ஆச்சு?"

"அந்த கொடுமையை ஏன் கேட்க, சரி என் கதைய விடு, எப்போதும் எண்ணைல விழுந்த கடுகு மாதிரி நீயும் உன் மருமகளும் இருப்பிய, இப்ப எல்லாம் கிணத்துல விழுந்த கல் மாதிரி இருக்க, உடம்புக்கு ஏதும் முடியலையா குருவத்தா?"

"எல்லாம் காலக்கொடுமை பொன்னம்மா, என் புள்ள இருந்த வரைக்கும், அவனை என்கிட்டே இருந்து பிரிசுருவாலோளுனு ஆத்திரத்திலே அவள் என்ன செஞ்சாலும் எனக்கு கோபம் கோபமா வரும், அவளை கரிச்சு கொட்டுவதுகாகவே எதாவது செய்வேன்.இப்ப அவனே கூட இல்ல அதனாலே சண்ட போட காரணமும் இல்ல"

"சாப்பாட்டுல உப்பு இல்லை, உன்பேரனுக்கு ஒழுங்கா சாப்பாடு கொடுக்கலை, வீட்டை கூட்டி பெருக்கலை இப்படி ஒரு காரணமுமா கிடைக்கலை. நீ என்கிட்டே மூன்னாடியே சொல்லி இருந்தா நான் எதாவது எடுத்து கொடுத்திருப்பேன்"

பாத்தீங்களா பொன்னம்மா அக்கா கொடுமையை, ஒரு குடுப்பம் நல்ல இருப்பது எவ்வோளவோ பேருக்கு கஷ்டமா இருக்கு.

"ஆமா உன் பையன் எப்ப சவுதியில இருந்து வரான்"


"அவன் நாளைக்கு கலையிலே சென்னைக்கு வாரன், நாங்க அதுதான் ஊருக்கு போறோம்"


"அப்படியா ரெம்ப சந்தோசம், அவன் வந்தா இனிமேல எல்லாம் நல்ல படியா நடக்கும்"

புரணி பேசுவதுனா பொம்பளைங்களுக்கு ரெம்ப பிடிக்குமுன்னு, நாலு நாளைக்கு சேறு தண்ணி இல்லாமா அடுத்தவங்களை பத்தி பேசுவாங்கன்னு எங்க ஊருல சொல்லுவாங்க, அது எவ்வளவு உண்மைனு இப்பதான் புரிஞ்சது. நுறு ஆண்களை சமைப்பதை விட இரு பெண்களை சமாளிப்பது ரெம்ப கஷ்டம் எங்க ஊரு பெரியவங்க சொல்லுவாங்க தாய்குலங்கள் யாரும் இதை படிச்சு கண்டனம் தெரிவிச்சாலும் நான் அவங்ககிட்ட எடுத்து சொல்லுவேன் இனிமேல் அப்படி சொல்லக் கூடாதுனு எனக்கு சொன்ன பெரியவங்கட்ட.

ஒரு வாரம் கழித்து..


"பொன்னம்மா போன வாரம் வரைக்கு ஒழுங்கா இருந்த மருமக வேதாளம் மறுபடி முருங்கை மரம் ஏறின கதையா ஆரமிச்சுட்டா."

"சும்மா விடாதே குருவாத்தா அவளா நீயான்னு பாத்திருவோம்."

ஆக கதை மறுபடியும் ஆரம்பத்திற்கே வந்து விட்டது.இந்த கொடுமையை எங்க போய் சொல்ல


7 கருத்துக்கள்:

குடுகுடுப்பை said...

அதான் என் கனவில் தென்பட்டது ல சொல்லிட்டிய நானும் படிச்சிட்டு பின்னிட்டேன்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

;-)))))))

நசரேயன் said...

/*
அதான் என் கனவில் தென்பட்டது ல சொல்லிட்டிய நானும் படிச்சிட்டு பின்னிட்டேன்.
*/
உங்களுக்கு தெரியுது அடுத்தவங்களுக்கு தெரியனுமுன்னு தான் :)

நசரேயன் said...

/*;-)))))))*/

வருகைக்கு நன்றி ஐயா

Anonymous said...

You can now get a huge readers' base for your interesting Tamil blogs. Get your blogs listed on Tamil Blogs Directory - http://www.valaipookkal.com and expand your reach. You can send email with your latest blog link to

valaipookkal@gmail.com to get your blog updated in the directory.

Let's show your thoughts to the whole world!

Anonymous said...

என்னம்மோ எதோன்னு படிச்சா ரொம்ப சப்ப மேட்டர். நல்லாவே இல்ல. மாமியார் மருமக சண்டைனா கொஞ்சம் அடிதடி இருக்கணும் சார். இல்லன்ன போர்.

Tamil Home Recipes said...

நல்லா இருந்துச்சு