கேள்விகளுக்கு சில கேள்விகள்
முன் அறிவிப்பு:
என்னை சங்கிலித் தொடர் இடுகைக்கு அழைத்த கடையம் ஆனந்த்,ரம்யா, சந்தனமுல்லை, கோமா,Keith Kumarasamy ஆகியோருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்(வேற யாரு பேராவது விடுபட்டு இருக்கானு தெரியலை),பரிச்சையிலே முன்னாலே இருக்கிற நண்பனை பார்த்து எழுதியே தேர்ச்சி பெற்ற ஒரு மாண்புமிகு மாணவன் நான் , கேள்விகளுக்கு சொந்தமா பதில் எழுதுறதை விட கஷ்டமான விஷயம் வேற ஒன்னும் இல்லை,இதெயெல்லாம் படிச்சிட்டு இவனைபோய் ௬ப்பிட்டோமேனு வருத்தப் படக்௬டாது, அதற்காக இந்த முன் அறிவிப்பு
1.உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
எனக்கு வீட்டிலே வச்ச பேரு அதுதான், ஸ்கூல வாத்தியாருக்கு பேரு வாயிலே நுழையாததாலே, என் பேரை மாத்திட்டாரு.
2.கடைசியாக அழுதது எப்பொழுது?
கலயாணம் கட்டிக்கிட்டு தினமும் அழுகிறேன், குறிப்பா என்னத்தை சொல்ல
3. உங்கள் கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
பிடிக்கலைனு சொன்னா ஆடோவிலே ஆள் அனுப்பி ஆட்டோகிராப் வாங்குவீங்களா ?
4.பிடித்த மதிய உணவு என்ன?
என்ன கொடுத்தாலும் சாப்பிடுவேன்,ஓசி சோறு போட்டா சொல்லி அனுப்புங்க
5.நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா ?
ஒ.. தாரளமா ..காசா பணமா முடியாதுன்னு சொல்ல
6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
எனக்கு நீச்சல் தெரியும் அதனாலே கடல்ல, குளத்திலே தான் குளிப்பேன் , குற்றால அருவியிலேயும் குளிப்பேன். அதுக்காக வீட்டிலே குளிக்க மாட்டேன்னு நினைச்சுக்காதீங்க
7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?.
பார்க்கிற ஆளைப் பொறுத்தது
8.உங்க கிட்ட உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?.
தன்னம்பிக்கை(+)
தன்னம்பிக்கை (-)
9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விஷயம் எது?
வேலை வெட்டி இல்லாமல் பதிவு எழுவதற்கு திட்டுவதும், நல்லா இருந்தா பாராட்டுவதும்
10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?
யாருன்னு சொன்னா என்ன செய்வீங்க ?
11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
ரெண்டு பேன்ட்,சட்டை எடுத்து கொடுக்கப் போறீங்களா ?
12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
தினமும் வீட்டுல வசவு பாட்டு தான்
13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
கருப்பு .
14.பிடித்த மணம்?
சொந்த தோட்டத்து மல்லிகை
15.நீங்க அழைக்கப் போகும் நபர்கள் யார் யார் ? ஏன் உங்களுக்கு அவர்களை பிடித்து உள்ளது. அவர்களை அழைக்கக் காரணம் என்ன ?
குடுகுடுப்பை - அனுபவத்தை காசு கேட்காம அள்ளி கொடுக்கும் வள்ளல்
vidhoosh-கவிதை, கட்டுரை, கதை என பன்முகத்தன்மை கொண்டவர்
உருப்புடாதது_அணிமா - எவ்வளவு மொக்கை போட்டாலும் சலிக்காத ஆளு, நானும் அவரும் ஒரே நிறம்.
16.பிடித்த விளையாட்டு?
கில்லி, கோலிகுண்டு, பம்பரம்(தரையிலே விடுவது)
17.கண்ணாடி அணிபவரா?
இன்னும் அந்த அளவுக்கு வயசு ஆகலை
18.எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்?
படம் பார்த்ததுக்கு காசு கேட்காத எல்லா படங்களும் பிடிக்கும்.
19.கடைசியாகப் பார்த்த படம்?
பசங்க
20.பிடித்த பருவ காலம் எது?
பள்ளி பருவம்
21.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்
எனக்கு மாத்த உரிமை இல்லை
22.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பதில் ஒன்பது - திருப்பி படிங்க
23.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
கனடா,அமெரிக்கா
24 உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
இருக்குன்னு சொல்ல ஆசையாத்தான் இருக்கு, சொன்னா நம்ப மாட்டீங்க.
பதிவுகளில் கொலை வெறி கும்மி அடிப்பது தனித் திறமையா ?
25.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
அல்லி பால் இருக்கும் போது அரளிப் பால் குடிப்பது .
26 உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
நானே ஒரு சாத்தான், எனக்குள்ளே எப்படி சாத்தான் வரும்
27. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
முந்தல் - புளியங்குடி (உண்மைதான் நம்புங்க)
28.எப்படி இருக்கணும்னு ஆசை?
அப்படி வரைமுறை படிஎல்லாம் வாழ எனக்கு தெரியாது, எதையும் எதிர் பார்க்காம கிடைச்சதை வைச்சி சந்தோசமா வாழ முயற்சிப்பதுதான்
29.கணவர் இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?
இது எனக்கு இல்லை
30.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?
ஒரு ரெண்டு வருஷம் கழிச்சி ரெண்டு வரியிலே பதில் சொல்லட்டுமா ?
31..உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?
ஒவ்வொருவருக்கும் தனிதன்னையும், திறமையும் இருக்கு, அதை பட்டியலிட்டால் நாலு முழு பதிவு போட வேண்டிய வரும்
32.இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்?
புத்தகம் படிச்சி பல வருஷம் ஆகுது
பின் குறிப்பு : அடுத்த தடவை எல்லாம் கொஞ்சம் கேள்விகளை குறைங்க சாமிகளா